Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 27 (நிறைவுப் பகுதி)

அபி. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.”

இனி பேசறதுக்கு என்ன இருக்கு?”

அவனிடம் பேசினாலும் கை வேலை செய்து கொண்டிருந்தது.

எப்படி சொன்னால் என்னோட காதலை ஏத்துக்குவே அபி?”



Advertisement

ஒரு கட்டாயத்துல உருவாறதுக்குப் பேரு காதல் இல்லை.”

உன்னைக் கட்டாயத்தினால்தான் நான் காதலிக்கிறேன்னு யார் சொன்னா?” கோபமாய் கேட்டான்.

யாரும் சொல்லத் தேவையில்லை. எனக்கேப் புரியுது. தாலி கட்டிவிட்ட கடமைக்காகத்தான் நீங்க என்னை காதலிக்கிறதா சொல்றீங்க?”

Advertisement

இப்ப நீ டாக்டர்னு தெரிஞ்ச பிறகு உன்கிட்ட காதலைச் சொல்றேன்னு நினைக்கறியா அபி?”

Advertisement

அவள் மௌனமாக இருந்தாள்.

உன்கிட்ட நான் முதல்லயே காதலைச் சொல்லியிருந்தால், நீ டாக்டர்ங்கிற உண்மையை என்கிட்ட சொல்லியிருப்பே அப்படித்தானே அபி.”

அவளிடம் பேச்சில்லை.

Advertisement

அப்ப உன் காதலில்தான் சுயநலம் இருக்கிறது.” என்றான் அழுத்தமாய்.

அவளிடம் எந்த சலனமுமில்லை.

ப்ளீஸ் அபி. நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. புரிஞ்சுக்க.”

நான் உங்க வாழ்க்கையில் வருகிறதுக்கு முன்னாடி எப்படி இருந்தீங்க?”

எப்ப வந்ததைப் பத்தி சொல்ற?”

எப்ப வந்தேன்னு உங்களுக்குத் தெரியாதா?”

உனக்குத்தான் தெரியாது அபி. என் வாழ்க்கையில் நீ எப்ப வந்தேன்னு உனக்குத்தான் தெரியாது.” என்றான் உறுதியாய்.

ப்ச். சும்மா கதைவிட வேண்டாம்.”

கதை இல்லை அபி. நிஜம். அப்ப நான் காலேஜ் பைனல் இயர் படிச்சிட்டிருந்தேன். என் பிரண்டோட அப்பாவை உங்க ஸ்கூல்ல சீப் கெஸ்டா கூப்பிட்டிருந்தாங்க. போட்டோ எடுக்கனும்னு என்னைக் கூப்பிட்டான் அவன். அப்பதான் அபி உன்னைப் பார்த்தேன்.” என்றவன் நினைவுகள் பின்னோக்கிப் போனது.

சிறிது நேரம் அதிலேயே ஆழ்ந்து விட்டான் போல.

அப்ப உன்னோட பரதம் தான் முதல் நிகழ்ச்சியா இருந்தது. உன்னைப் பார்த்த உடனே எனக்குப் பிடிச்சிடுச்சு. உன்னை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்.”

நீ அப்ப பார்க்கிறதுக்கு பெரிய பொண்ணா இருந்தே. ப்ளஸ் டூ படிக்கிற பெண்ணாயிருப்பேன்னு நினைச்சேன். ஆனால் பிறகு பரிசு வழங்கும்போது நீ யூனிபார்ம்ல வந்தே. அப்பத்தான் நீ எட்டாம் வகுப்பு மாணவின்னு எனக்குத் தெரிஞ்சது. எனக்குள் ஏமாற்றம்.”

பிறகு என் மனசைத் தேற்றிக்கொண்டேன். நீ குழந்தைன்னு எனக்கு அறிவு சொன்னாலும், மனசு கேட்கலை. மனசுக்கும், அறிவுக்கும் இடையில் போராடினேன். கடைசியில் மனசுதான் ஜெயித்தது.”

என்னால் உன்னை மறக்க முடியலை. அப்பதான் ஒரு நாள் ஹோட்டலில் உன்னைப் பார்த்தேன்.” என்றவன் முகம் மாறியது.

உன்னை அந்த உடையில், அருகில் இருக்கிறவர் என்ன செய்கிறார் என்று கூடத் தெரியாமல் நீ இருந்த விதம் கண்டு எனக்கு அருவருத்துவிட்டது. ச்சே இவளைப் போயா என் மனசு விரும்பனும்னு என்னையே திட்டிக்கொண்டேன்.”

அப்புறம் கொஞ்ச நாள் ஒரு மாதிரி திரிஞ்சேன். அப்புறம் எனக்குள்ள ஒரு தெளிவு. அவள் சின்னப் பொண்ணு. அவ கூட அவளைப் பெத்தவங்களும்தானே இருந்தாங்க. தப்புன்னு தெரியாமல் செய்திருக்கலாம்னு உனக்காக என் மனம் பரிந்து பேசியது. மனம் கேட்காமல் உன்னோட புகைப்படங்களை எடுத்துக்கிட்டு உன் ஸ்கூலுக்குப் போனேன். அங்கே….”

சிறிது நேரம் நிறுத்தியவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

அங்கேதான் எனக்கு ஒரு இடி விழுந்துச்சு. ஒரு வாத்தியார் இது மாதிரி பொண்ணுங்கதான் உங்க கண்ணில் படுங்களா தம்பி? என்றார் கேலியாய். எனக்குப் புரியவில்லை.”

அது வயசு என்ன? அது பண்ணி வச்சிருக்கிற வேலையைப் பார்த்தீங்களா தம்பி? ஏற்கனவே கல்யாணம் ஆனவனோட ஓடீப்போச்சு. பணத்துக்காக இவளுங்க எல்லாம் என்ன வேணாலும் செய்வாளுங்க. என்றார்.”

அப்படியும் நான் நம்பவில்லை. உன் முகவரியைக் கண்டு பிடித்து அங்கே போனேன். அங்கே யாரிடமோ உன் பெற்றோர் அந்த வாத்தியார் சொன்ன கதையை சொல்லிக்கொண்டிருந்தனர்.”

அப்ப என்னோட நிலைமை எப்படி இருந்திருக்கும் சொல்லு. முதல் காதல். மொட்டிலேயே கருகியதை என்னால் தாங்கிக்க முடியலை. அதன் பிறகு பெண்கள் மீது அத்தனை நம்பிக்கை உண்டாகவில்லை. அதனால்தான் சரண்யாவையும் உடனே ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை. அவள் குணத்தை விசாரித்துப் பார்த்த பிறகு அந்தத் திருமணம் நடக்கக்கூடாது என்று தடுத்துவிட்டேன்.”

உன்னை மறக்க முடியலை. உன்னை மறக்க வேண்டும் என்று நினைக்க நினைக்க நீ ஆழ்மனசுக்குள் புகுந்துவிட்டாய்.

உன்னை மறக்க வேண்டும் என்ற நினைவில்தான் அதிக வேலைகளை எடுத்துப் போட்டுச் செய்தேன். வெறித்தனமாக உழைத்தேன். துணிக்கடைக்கு பேர் வைக்கும் போது என்னை அறியாமலே அபிஸ் டெக்ஸ்னு பேர் வச்சிட்டேன். அம்மா கேட்ட பிறகு ஏதோ சொல்லி சமாளிச்சேன்.”

அவன் பேசப் பேச அவள் சிலை போல் அமர்ந்திருந்தாள்.

இப்போது உன்னைக் கண்ட உடன்தான் நான் இன்னும் உன்னை நேசித்துக்கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. அதற்கும் உன் மீது கோபப்பட்டேன். எந்த ஆண் உன்னிடம் நெருங்கிப் பழகினாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ என்னை ஏமாற்றவில்லை. நான்தான் உன்னை நினைத்து ஏமாந்து போனேன். சரி புரியாத வயதில் ஏதோ தப்பு செய்துவிட்டாய் என்று உன்னை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு உன்னை நேசிக்கிறேன்.”

ஆனால் உன்னுடன் பழகப் பழக நான் நினைத்த மாதிரி நீ இல்லைன்னு தோணுச்சு. அதுவும் நம் வீட்டிற்கு வந்த பிறகு நீ பொறுப்பா நடந்துக்கிட்டது கண்டு உன்னை விட்டுவிட முடியாதுன்னு எனக்குத் தோணுச்சு. எதையாவது காரணம் சொல்லி உன்னைக் கல்யாணம் பண்ணனும்னே ஒரு வருட ஒப்பந்தம் போட்டேன். ஒரு வருடத்திற்குள் என்னை உனக்குப் புரிய வச்சிடலாம்னு நினைச்சேன்.”

ஆனால் நீ ஒரு புரியாத புதிரா இருந்தே அபி. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னே நான் போராடிக்கிட்டிருக்கேன். இப்ப நீ டாக்டர்னு தெரிய வருது. என்கிட்ட உன்னைப் பத்திப் பகிர்ந்து கொள்ற அளவுக்கு என்னை நெருக்கமா நினைக்கலதானே? ஆனால் உன்னை என் உயிரா நினைக்கிறேன் அபி. அன்னிக்கு ரத்தம் வழிய என் மேல் சரிந்தாயே. அப்போதே நீயில்லாமல் நான் இல்லைன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு.”

நான் சொல்றதை நம்பலைன்னா இதை எல்லாம் பாரு.” என்றவன் பீரோவில் இருந்து அந்த ஆல்பத்தை எடுத்துக்கொடுத்தான். அதில் பரதநாட்டிய உடையில்  அவள். பல்வேறு நடன அசைவுகளை வெளிக்காட்டியவாறு பல புகைப்படங்கள்.”

அபி. இப்பவாவது நான் சொல்றதை எல்லாம் நம்பறியா?”

அவள் முகத்தை இப்போதுதான் பார்த்தான்.

கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள்.

அபி. என்னாச்சு?” அவள் தோளைத் தொட்டதுதான் தாமதம், அவன் மார்பில் சாய்ந்து கதறியழ ஆரம்பித்துவிட்டாள்.

சரண்யாவை ஏத்துக்கிட்டேன்ற நன்றிக்கடனுக்காகத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியா அபி? அப்படின்னா சொல்லு. நாம பிரிஞ்சுடுவோம். எனக்கு உன்னோட காதல்தான் வேணும். உன்னோட நன்றிக்கடன் வேண்டாம்.” என்றான் உறுதியாக.

அவள் அவன் பேசும் எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவள் அழுகை அதிகமானது.

இந்த நிலைமையில் அழாதே அபி. நம்ம குழந்தை உன் வயிற்றில் இருக்கிதை மறந்துடாதே.” என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள். பிறகு எதுவும் கூறாமல் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அண்ணா. இங்கே எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க. அண்ணிக்கு கிளம்ப நேரமாகலாம். நீயாச்சும் முதல்ல வாண்ணா.” என்று மனோரஞ்சன் அழைத்தான்.

அபி. மனோ கூப்பிடறான். நான் போறேன்.” என்றவன் மனமில்லாமல் வெளியில் கிளம்பினான்.

அவள் மீண்டும் அழுவதைக் காணும் சக்தி அவனுக்கில்லை.

சிறிது நேரத்திலேயே அபர்ணா வந்துவிட்டாள். அவள் முகம் அத்தனை மலர்ச்சியாய் இருந்தது.

அவனிடம் வந்த அபர்ணா, அவன் கைப்பற்றி தேவேந்திரன் தம்பதியிடம் சென்றாள்.

எங்க மூனு பேரையும் ஆசிர்வாதம் பண்ணுங்க.” என்று அவள் கூற, தேவேந்திரன் மகிழ்ந்து போனார்.

எத்தனை மாசம் என்று கேட்க அவள் சரண்யாவுக்கு முந்தியே கர்ப்பமானதை சொல்ல வேண்டி வந்தது.

ஏம்மா அப்பவே சொல்லலை.”

இல்ல மாமா. சரண்யா எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காதவள். அன்றைய தினம் நீங்கள் எல்லோருமே அவளைக் கொண்டாடினீங்க. அது அவளுக்கான நாளா இருக்கட்டும்னு பேசாமல் இருந்துட்டேன். அதுக்குப் பிறகு உங்களுக்கு உடம்பு முடியாமல் போயிடுச்சு.”

ராம்பிரசாத் தம்பதியினர் காலிலும் விழுந்து வணங்கினர்.

சரண்யா அவளருகில் வந்தவள் அவளது அன்பை நினைத்துக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள்.

ப்ச். சரண்யா. இப்ப அழுத என்னை மனோ வச்சு செய்வான்.” என்று கிண்டல் செய்தாள் அபர்ணா.

தேவேந்திரன் மதன்ராஜை அழைத்துப் பரிசினை வழங்கினார்.

அப்பா. என்ன இது? எங்க கல்யாண நாளுக்கு என் மச்சானுக்குப் பரிசைத் தர்றீங்க?” என்றான் மனோரஞ்சன்.

இந்தக் குட்டிப்பையன்தான் முதலில் என்னைத் தாத்தாவாக்கினான். அவன் ஓடி விளையாண்ட ராசி இந்த வீட்டுக்கு இரண்டு வாரிசுகள் வரப்போகின்றன. அதனால் அவனுக்குத்தான் பரிசு. அம்மாடி அபர்ணா. நீ அன்னிக்கு கேட்டியே ஏன் ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிக்கலைன்னு. இப்ப அந்த கவலை உனக்கு வேண்டாம்மா. அதுக்கு இனி மது தான் முதலாளி.” என்றதும் சரண்யாவும், அபர்ணாவும் அவரது அன்பில் நெகிழ்ந்து போனார்கள்.

அவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

அப்பு அப்பு. உங்களை எல்லாம் பார்த்தால் எனக்கும் காதலிக்கனும்னு தோணுது. அண்ணாவுக்குப் பார்த்த மாதிரியே எனக்கும் ஒரு பொண்ணைப் பார்த்துடு அப்பு.” என்றான் நவீன் பிரசாத்.

ஐயோ நவீன் இன்னும் நீ சின்னப் பையன்தான். உனக்கு அதுக்குள் கல்யாணமா? நீ எனக்கு தம்பிப்பா?” என்றாள் உள்ளடக்கிய புன்னகையோடு.

யார் சொன்னா? நான் வேணா உன்னை இனி தங்கைன்னு சொல்றேன்.”

டேய் மானத்தை வாங்காதடா.” என்று அவன் காதைக் கடித்தான் கிருஷ்ணா.

எல்லோரும் கலகலப்புடன் விருந்துண்டனர்.

விருந்துண்ட களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றனர்.

அருண்பிரசாத் மட்டும் சித்தரஞ்சனின் அருகில் வந்தான்.

என்னாச்சு மாப்பிள்ளை என் தங்கச்சியை சைட் அடிச்சிக்கிட்டே இருக்கீங்க? அதுதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சே?”

என்ன மச்சான் நல்லபடியா முடிஞ்சுடுச்சு? என் காதலைச் சொன்னால் அவள் கேவி கேவி அழறாள்.” என்றான் புரியாமல்.

அவள் மனதில் உள்ள ரணத்தை உங்களால்தான் போக்க முடியும். அவ லேப்டாப்பை பார்த்தீங்களா?”

இல்லை மச்சான். எதுவா இருந்தாலும் அவளே சொல்லட்டும். அவள் அனுமதி இல்லாமல் நான் அதைப் பார்க்க மாட்டேன்.”

அப்ப அதைக் கொடுங்க.” வாங்கியவன்,

அப்பு. உன் லேப்டாப். அங்கிருந்து எடுத்துட்டு வந்துட்டேன்.” என்று அவளிடம் கொடுத்தான்.

போங்க மாப்பிள்ளை. என் தங்கச்சி இனி உங்களைப் பிரிய மாட்டா. தைரியமா போங்க. பிரியற ஐடியா இருந்துச்சுன்னா அவ குழந்தையைப் பத்தி வெளியில் சொல்லியிருக்கமாட்டா.” என்று தைரியம் சொல்லி அனுப்பினான்.

அண்ணா. எனக்கு நீ செய்ய வேண்டிய கடமை ஒன்னுருக்கு.” என்ற பீடிகையோடு வந்தான் மனோரஞ்சன்.

என்ன?”

உன்னோட காதலைக் கண்டுபிடிச்சு அதை அப்பாக்கிட்ட சொன்னது நான்தான்.”

நீ கண்டு பிடிச்சியா? எப்படி?”

மூஞ்சைப் பார்த்தா தெரியாதா?” என்று கண்சிமிட்டியவன் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டான்.

அங்கே அபர்ணா அவனிடம் பேசுவதற்குத் தயாராக இருந்தாள்.

தேங்க்ஸ் அபி.” என்றான் அவள் கைகளைப் பற்றிக் கொண்டே.

நீ ஏன் அப்படி அழுதே?”

என் மனதில் கண்ணன் இருக்கும்போது நீங்கள் என்கிட்ட காதலை சொல்லலாமா ரஞ்சன் சார்.”

கேட்டவளை அதிர்ந்து பார்த்தான்.

நான் முதன் முதலில் கண்ணனை எப்பப் பார்த்தேன்? அவன் என் மனதில் எத்தனை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறான்? என்று உங்களுக்குத் தெரியுமா?”

அவள் பேசப்பேச அவன் திகைத்துப் போனான்.

நான் அவனை ஒரு ஹோட்டலில்தான் பார்த்தேன். அப்ப அவன் என்னைப் பார்த்த பார்வை இருக்கே? அப்பா. இப்ப நினைச்சாலும் என்னை ஊடுருவிப் பார்க்கிற மாதிரி இருக்கு.” என்றாள் சிலிர்த்தவளாய்.

கொஞ்சம் புரிகிற மாதிரி இருந்தது.

என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா சித்து?” என்றவள் கூற ஆரம்பித்தாள்.

அதைக் கேட்க கேட்க அவள் பெற்றோர் மீது ஆத்திரம் வந்தது.

என் சித்தி இல்லன்னா நான் இன்னிக்கு உயிரோட இல்லை.” என்றவளை அணைத்துக்கொண்டவனின் உடல் நடுங்கியது.

அந்த பதிமூனு வயதில் என்ன தெரியும் சித்து? என்னைப் பெத்தவங்க. அவங்க எனக்கு நல்லது செய்யறாங்களா? இல்லையான்னு பக்குவமா புரிஞ்சுக்கற வயசா என்ன? இரண்டுங்கெட்டான் வயசு. அப்ப அவனோட பார்வை எனக்குப் புரியலை.”

ஆனால் திடீர் திடீர்னு அவன் பார்வை எனக்குள் ஏதோ மாற்றத்தை உண்டாக்கியது. அவனுக்கு ஏன் என்னைப் பிடிக்கலை. அந்தக் கருப்பன் என்ன அத்தனை அழகான்னு எனக்குள் கோபம்.”

அதன் பிறகு என்னிடம் ஏதோ தவறு இருப்பதாக தோணுச்சு. அதன் பிறகுதான் சித்தியைப் பத்தி விசாரிச்சேன். அவங்களும் என்னை அந்த நரகத்தில் இருந்து காப்பாத்தினாங்க. அப்படிப்பட்டவங்க பிள்ளைகளை நான் எப்படி விட முடியும்? அதனால்தான் ஏதாவது செய்யனும்னு இங்கே வந்தேன்.”

நான் சென்னையில் இல்லத்தில் இருந்தாலும் அந்தக் கருப்பனின் பார்வை என்னை நிம்மதியாக விடவில்லை. அவனுடைய அந்தப் பார்வை தான் என்னை மானத்துடன் வாழ வைத்திருக்கிறது என்று புரிந்தது. அப்போது டிவியில் ஒரு பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. கண்ணா கருமை நிறக் கண்ணா…. அந்தப் பாட்டைக் கேட்டதும் பெயர் தெரியாத அந்தக் கருப்பனுக்கு நானே கண்ணன்னு பெயர் வைத்தேன்.”

“அவனை வாழ்க்கையில் திரும்ப சந்திப்பேன்னு நான் நினைச்சுப் பார்த்ததில்லை. ஆனால் அவன் என் மன ஆழத்தில் பதிந்துவிட்டான். ராஜிம்மா என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னபோது என்னால் வேறு ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாதுன்னு தோணுச்சு.”

“ஆனால் அருண் அண்ணா என் கல்யாணத்துக்குப் பிறகுதான் அவருடைய கல்யாணம்னு சொன்ன உடனே நான் அங்கிருந்து கிளம்ப எண்ணினேன். அப்பதான் மனோவோட ஆக்சிடெண்ட் பத்தித் தெரிஞ்சுச்சு. என்ன செய்யன்னு யோசிக்கலை. ஆனால் இங்கே வரனும்னு மனசு என்னை விரட்டியது.”

“வந்தால் அந்தக் கருப்பன் இல்லை இல்லை கண்ணனோட தம்பிதான் மனோரஞ்சன்னு தெரியுது. எனக்கு அப்ப எப்படியிருந்துச்சு தெரியுமா?”

“என் அபி.” என்று அவளை அணைத்துக்கொண்டான்.

“உங்களுக்கு என்னைப் பிடிக்காது. இதுதான் என் மனதில் பதிஞ்சிருந்துச்சு. ஆனால் எனக்கு நீங்கள்தான் உயிர். உங்க குடும்பத்தில் ஒரு பிரச்சினைன்னா என்னால் எப்படி பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? உங்களை நான் பிரிச்சுப் பார்க்கலை. என் குடும்பமா நினைச்சேன்.”

“மனோவைப் பார்த்துக்கிறதுக்கும், வீட்டில் சமைக்கிறதுக்கும் நீங்க சம்பளம் கொடுத்ததை என்னால் ஏத்துக்க முடியலை. அதனால்தான் அதை நான் எடுத்துக்கலை.”

“சாரிடா  அபி. நீ பணத்துக்கு ஆசைப்படறியான்னு பார்க்கத்தான் நான் அப்படி செஞ்சேன்.”

“உங்க மேல தப்பில்லை. என்னைப் பெத்தவங்களே என்னைப் பத்தி தப்பா பேசினால் உங்களுக்கு என் மீது சந்தேகம்தான் வரும். நீங்க ஒப்பந்தத் திருமணம் என்றதும் நான் சம்மதித்தற்குக் காரணம் நன்றிக்கடன் கிடையாது. என்னதான் நன்றிக்கடன் பட்டவளா இருந்தாலும், அந்த இடத்தில் நீங்க இல்லாம வேற யாரா இருந்தாலும் நான் கல்யாணத்துக்கு சம்மதித்திருக்க மாட்டேன்.”

“ம். எனக்குப் புரியுது.”

“நீங்க கல்யாணத்தைப் பத்திப் பேசின உடனே உங்களைத் தவிர என்னால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. உங்களை நினைத்துக்கொண்டு வாழ்ந்துவிடத்தானே நான் எண்ணினேன். அதற்கு உங்க கூட வாழ்ந்த இந்த ஒரு வருட வாழ்க்கையாவது இருக்கிறதேன்னுதான் சம்மதிச்சேன்.”

“என் மனசில உங்களுக்கு என்னைப் பிடிக்காதுன்னுதான் பதிஞ்சிருக்கு. அப்புறம் எப்படி நான் உங்க காதலை உணர்றது. அதுதான் கடமைக்கு என்னோட வாழறீங்கன்னு நினைச்சேன். அப்படி ஒரு வாழ்க்கையை நான் உங்களோடு வாழ விரும்பலை. அதனால்தான் கிளம்பனும்னு நினைச்சேன்.”

“ம். இப்ப என்ன முடிவெடுத்திருக்கேடா?”

“ம். இந்தக் கருப்பனை விட்டுப் போனால் என் உயிர் போயிடும்னு நினைக்கிறேன்.” என்றாள்.

“அப்படிப் பேசாதே அபி. ஒரு முறை உன்னை அந்த நிலைமையில் பார்த்ததுக்கே என் குலையே நடுங்கிப் போச்சு. அதுவும் இப்ப நம்ம குழந்தையை சுமந்துக்கிட்டு இந்த மாதிரி எல்லாம் பேசாதே.”

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்.”

“நீதான் உனக்கு என்னை அடிமைப்படுத்தி வச்சிட்டியேடி. உன்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டுத் தூங்கினால் தானே எனக்குத் தூக்கம் வந்துச்சு. மாத விலக்காகும்போது நீ தனியா படுத்துப்பியா? அந்த நாள்கணக்கைப் பார்த்தேன்.” என்றான் விசமமாய்.

“உங்களை.” என்றவள் அவனை அடித்தாள்.

அவளை இறுக்க அணைத்துக்கொண்டான்.

“அபி. இப்படி இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் ஆழமா விரும்பினதால்தான் எங்கேயோ இருந்த நம்ம இரண்டு பேரையும் ஆண்டவன் இணைத்து வச்சிட்டார்.”

“ஆமா.”

“இதே அன்போட நாம வாழ்நாள் முழுமைக்கும் இருக்கனும் அபி.”

“அப்படியே ஆகட்டும்.” என்று ஆசிர்வதிப்பவள் போன்று சொன்னவள் கலகலவென்று சிரித்தாள்.

மனைவியின் சிரிப்பை ஆனந்தமாய் நோக்கினான் சித்தரஞ்சன்.

இனி அவர்கள் வாழ்க்கையில் காதல் இனிதே தொடரும்.

நன்றி.

நிறைவு பெற்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!