கோபத்துடன் அறையிலிருந்து வெளியேறிய அஜய், முற்றத்திலிருந்த யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் வீட்டின் வாயிலில் நிற்கும் தன் காருக்கு வந்தவன், அதனை உயிர்ப்பித்து புயல் வேகத்தில் எங்கோ புறப்பட்டான், செல்லும் வழியில் யாருக்கோ போன் செய்து பேசியவன், சில நொடிகளிலேயே இணைப்பையும் துண்டித்துவிட்டு அதிவேகத்துடன் தன் வண்டியில் பறந்தான்,….
Advertisement
அடுத்த ஒரு மணி நேரத்தில் அஜய்யின் கார் ஸ்மிருதியின் வீட்டின் முன்பு வந்து நின்றது, காரை விட்டு இறங்கியவன் கையில் இருந்த பார்சலுடன் வேக நடையுடன் ஸ்மிருதியின் அறை நோக்கி சென்றான், இந்த முறை தயக்கம் எதுவும் இல்லாமல் அறையினுள் நுழைந்தவன், மெத்தையில் யோசனையுடன் அமர்ந்திருந்த ஸ்மிருதியின் அருகில் செல்ல, அஜய்யை கண்டதும் ஸ்மிருதி சற்று பயத்துடன் எழுந்து கொண்டாள்,…
அவளை கூர்மையாய் துளைத்தவனோ, தன் கையிலிருந்த பார்சலை மெத்தையில் வைத்துவிட்டு,.. “இதுல ஜூவல்ஸ் இருக்கு, இப்போ நீ போட்டுக்கிட்டு இருக்கல்ல அதை விட அதிகமாவே இதுல இருக்கு, சோ இனி உன்னோட வீட்டாளுங்க உன்கிட்ட ஜூவல்ஸ் போட சொன்னா இதை தான் இனிமே நீ போட்டுக்கனும்” அவளின் கண்களை பார்த்து, அழுத்தமாக கட்டளையிட்டவன், அதற்கு மேல் அங்கு நிற்காமல் வெளியே செல்ல எத்தனித்தவன், இரு நொடி நின்று தலையை மட்டும் திருப்பி,… “அதுல உனக்கான ஃபோனும் இருக்கு” என்று சொல்லிவிட்டு அடுத்த நொடியே வெளியேறினான்,….
Advertisement
Advertisement
ஸ்மிருதியோ சில நிமிடங்கள் அதே இடத்திலேயே நின்றவள், மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அந்த பார்சலில் இருந்த போனை மட்டும் கையில் எடுத்துக் கொண்டாள்,…
மொட்டை மாடியில் தான் நின்றிருந்தான் அஜய், அந்த இடம் மட்டுமே அவனுக்கு சிறு நிம்மதியை தரும் இடமாக இருந்தது, அந்த நேரம் அஜய்யை தேடி வந்த விஷ்ணு, “ஏன்டா, இந்த ஊருலயே பெஸ்ட் ஜுவெல்லரி ஷாப் எதுன்னு கேட்ட, யாருக்கு ஜூவெல் வாங்க போன” என்று கேட்க,.. “உன்னோட தங்கச்சிக்கு தான்” என்பதோடு முடித்து கொண்டான் அஜய், விஷ்ணு மேலும் குடையாமல் “சரி வா, சாப்பிடலாம், உனக்காக தான் வெயிட்டிங்” என்று சொல்ல, அஜயும் அவனுடன் நடந்தான்…
Advertisement
நடுத்தர வீடாக இருந்தாலும், இந்த காலத்திற்கு ஏற்றாற்போல், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், டீவி, டைனிங் டேபிள், என பல பொருட்களையும் விஷ்ணு தன்னுடைய உழைப்பிற்கு பிறகு வாங்கி போட்டிருந்தான், அஜய்யும் விஷ்ணுவும் உணவு மேஜையின் பக்கம் சென்ற நேரம், அவர்களுக்காக உணவு வகைகளும் காத்திருந்தது,…
“வாங்க மாப்பிள்ள, உட்காருங்க” என ஈஸ்வரன் கனிவோடு சொல்ல,… “நீங்களும் உட்காருங்க மாமா” என்றவாறு அமர்ந்தான் அஜய், “விஷ்ணு, பாட்டி எங்கடா, வழக்கம்போல சாப்பிட்டு தூங்க போயிட்டாங்களா” என அஜய் கேட்க,.. “ஆமா டா,” என்றவாறு மூடி வைத்திருந்த உணவுகளை எடுத்து ருசி பார்த்தான் விஷ்ணு,…
“கூச்ச படாம சாப்பிடுங்க மாப்பிள்ள, இது நம்ம வீடுங்குறது உங்களுக்கு எப்போதும் நியாபகம் இருக்கட்டும்” என்றவாறு அஜய்க்கு பரிமாறினார் சகுந்தலா,…
“ஹேமா, உன்னோட அண்ணாக்கு பிடிச்ச அந்த வெண்டைக்காய் பொரியலை சமையலறைக்குள்ளேயே வச்சிட்டு வந்துட்டேன், எடுத்துட்டு வரியாமா” என சகுந்தலா தன் மருமகளிடம் சொல்ல,.. “சரிங்க அத்த, நான் எடுத்துட்டு வரேன்” என்றவாறு, விஷ்ணுவிற்கு பரிமாறி முடித்த ஹேமா, சமையலறைக்குள் சென்றாள்….
“அது சரி, உன்னோட பொண்ணு எங்கடி, அவ புருஷனுக்கு அவ பரிமாற கூட வர மாட்டாளா” என அவர்களுடன் கூட்டு பரிமாறியபடி இருந்த சிந்தாமணி கேட்க,…”அது வந்து அக்கா, அவ வருவா இருங்க நான் கூட்டியாந்துடறேன்” என சகுந்தலா செல்ல போக,.. “பரவால்ல இருகட்டும் அத்த, ஸ்மிருதி வரும் போது வரட்டும், அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்கள்ல பரிமாறுறதுக்கு” என்று சொல்லிவிட்டு சாப்பிட துவங்கினான் அஜய்,….
“நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணுற வரைக்கும் அவ திருந்த மாட்டாடா,” மெதுவான குரலில் தன்னிடம் சொன்ன விஷ்ணுவிடம், பதில் ஏதும் பேசாமல் மௌனமாக இருந்துவிட்டான் அஜய்,…
ஒருவாராக அனைவரும் உணவருந்திவிட்டு எழுந்து கொள்ள, சகுந்தலா தன் மகளுக்கு அறைக்கே உணவு எடுத்து சென்றார், அதனை கண்டு கொண்ட சிந்தாமனி,.. “நீ இந்த மாதிரி பண்ணுற வரைக்கும் உன் பொண்ணு திருந்தவே மாட்டா” என்று கோபமாக கூறியவர், தலையில் அடித்து கொண்டு தானும் சாப்பிட அமர்ந்தார்,….
அஜய், தன் நண்பனுடன் அவனது அறையில் இருந்தான், உறங்கி கொண்டிருந்த அம்ரிஷை தடவி கொடுத்தவாறு, “ஏன்டா அம்ரிஷ் சாப்பிடல, ரொம்ப நேரமா தூங்குற மாதிரி இருக்கு” என்று கேட்க,.. “உன்னோட மருமகனை பத்தி உனக்கு தெரியாதா, சரியான கும்பகர்ணன், தூங்குனா எழுந்துக்கவே மாட்டான், மதியம் எப்போதும் தூங்குறவன், உன்னை பார்த்ததும் தூங்காம ஆறு மணிக்கு மேல விளையாட்டுலேயே தூங்கிட்டான், உன் தங்கச்சி அவளால முடிந்த வரைக்கு ட்ரை பண்ணி பார்த்துட்டா, ம்ஹும் எழுந்துக்கவே இல்ல, அதோட அவன் அப்பா மாதிரி இவனும் சாப்பாட்டு ராமனாச்சே, சோ தூக்கத்திலேயே ஹேமா ஊட்டி விட்டா, சாப்பிட்டு தூங்கிட்டான்” என்றான் விஷ்ணு,….
அதனை கேட்டு சிரித்த அஜய், தன் நண்பனை நோக்கி “அப்றம் நாங்க எப்போடா ஃபிளாட்க்கு போறது, நீ கூப்பிட்டனு தான் மறுக்க முடியாம வந்துட்டேன்” என அஜய் மெதுவாக சொல்ல,… “ஏன்டா மாமியார் வீட்டுல இருக்க உன் தன்மானம் தடுக்குதா” என்றான் விஷ்ணு கோபபார்வையோடு…
“ச்சே ச்சே… அப்படியெல்லாம் இல்ல டா, எனக்கு உங்களை விட்டா யாரு இருக்கா, எனக்கு இங்க இருக்கிறது சந்தோசம் தான், பட் ஆஃபிஸ் போகணும்லடா, நீ சொன்னதால தான் *** பிரேன்ச்ல புதுசா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிசினஸ் ஆரம்பிச்சேன்” என இழுத்து கொண்டிருந்த அஜய்யிடம்,.. “புரியுது டா, கன்ஸ்ட்ரக்சன் ஆரம்பிச்ச மூன்று வருசத்திலேயே நல்ல பெயர் பெற்றிருக்கு, இந்தியாவிலேயே ஏழாம் இடத்துக்கு வந்திருக்கு, அந்தளவுற்கு நீ உன் தன்னம்பிக்கையாலயும் திறமையாலயும் உயர்த்தி காட்டிருக்க, நீ போகலனா கண்டிப்பா சரியாக வராது, பட்” என்று புருவம் சுருக்கி யோசிக்க ஆரம்பித்த விஷ்ணுவிடம்… “என்னடா, வாழ்க்கையை விட வேலை முக்கியமான்னு யோசிக்கிறியா?” என நேரடியாக கேட்டவன், “நீ கேட்க வருவதுல எந்த தவறும் இல்லைடா, ஓகே டா, நான் உன் விருப்பபடி இங்கேயே இருக்கேன், பிரீத்தி(P.A) இருக்கா, அவ பார்த்துப்பா” என்றான் அஜய்…..
“இல்லடா,… அது சரி வராது, நான் ஏதோ டென்ஷன்ல உன்னை இங்க கூட்டிட்டு வந்துட்டேன், நீ நாளைக்கே கிளம்பு,” என்ற விஷ்ணு, அஜய்யின் கரத்தை பற்றிக்கொண்டு,… “எனக்காக தயவு செஞ்சி உன் வாழ்க்கையை பத்தியும் கொஞ்சம் யோசிடா, ப்ளீஸ் டா, நான் உனக்கு என் தங்கச்சி கூட கல்யாணம் செய்து வைத்தது ஸ்மிருதி சந்தோசத்துக்காக மட்டும் இல்ல, உன்னோட சந்தோசத்திற்க்காகவும் தான், உண்மையா என் தங்கச்சி வாழ்க்கையை விட உன்னோட ஃபியூச்சரும் எனக்கு முக்கியம், நீ தான்டா எப்படியாவது ஸ்மிருதியோட மனசை மாத்தனும், எல்லாரையும் போலவே நீங்க ரெண்டு பேரும் மனமொத்த தம்பதிகளா சேர்ந்து வாழ ஆரம்பிக்கணும்,” என விஷ்ணு வருத்தத்துடன் சொல்ல,… “எனக்கு புரியுது டா, நீ எதுக்கும் கவலை படாத, என்னால முடிஞ்ச வரைக்கும் நான் ட்ரை பண்ணுறேன்” என்றவாறு, விஷ்ணுவின் கரத்தினுடன், தன் கரத்தை இணைத்தவாறு, வாக்குறுதி தந்தான் அஜய்,….
இருவரும் வெகு நேரம் பேசி கொண்டதிலேயே நேரமும் கடந்திருந்தது, விஷ்ணுவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவன்,… “மாப்பிள்ள இந்தாங்க பால்” என ஈஸ்வரன் நீட்டவும்… “இல்ல மாமா, எனக்கு பால் குடிக்கிற பழக்கமில்லை, சின்ன வயசுல இருந்தே பாலை அறவே வெறுத்துட்டேன்” என்றான்,…
“என்ன மாப்பிள்ள, இப்படி சொல்லிடீங்க, பால்ல தான் ஏகப்பட்ட சத்து நிறைஞ்சி இருக்கு, சரி உங்களுக்கு பிடிக்கலனா விடுங்க” என்றவர்,… “நீங்க போய் படுத்துக்கோங்க மாப்பிள்ள” என்றவாறு அவ்விடம் விட்டு நகர்ந்தார்,..
பெண்களும் சமையலறையை சுத்தம் செய்து விட்ட நிலையில், தங்கள் அறைக்கு சென்று விட, அஜய்க்கு தான் மீண்டும் ஸ்மிருதியின் அறைக்கு செல்லவே தயக்கமாக இருந்தது, ஆனால் போய் தானே ஆக வேண்டும், இல்லையென்றால் மற்றவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே என்ற எண்ணத்திலேயே, தன் தயக்கம் அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு அவள் அறையினுள் நுழைந்த நேரம், ஸ்மிருதி இரவு உடைக்கு மாறி படுக்கையில் சாய்வாக அமர்ந்திருந்தவாறு தன் மொபைலை பார்த்து கொண்டிருந்தாள்,….
அஜய் வந்தது தெரிந்தும் அவனை கண்டுகொள்ளாமல் போனிலேயே தன் பார்வையை பதித்திருந்தாள், அவனோ தான் வாங்கி வந்த போன் அவள் கையில் இருப்பதை கண்டும் காணாததும் போல் அவள் அமர்ந்திருக்கும் இடது திசைக்கு வர,.. அவளோ.. “தயவு செய்து இங்க படுக்காத, உன்னோட ஃபிளாட்ல இருக்க மாதிரி இது ட்ரிபில் சைஸ் பெட் இல்ல, சோ எனக்கு டிஸ்டர்பண்ஸ் கொடுக்கணும்னு நினைக்காதே ப்ளீஸ்” என ஸ்மிருதி சொல்ல,…
அவனோ புருவம் சுருக்கி “வேற நான் எங்கே படுத்துகிறது” என்று அவளிடமே கேட்டான்,…
“என் ரூம்ல பெட் வேணும்னா சின்ன சைஸா இருக்கலாம், பட் ரூம் பெரிய சைஸ்தான், சோ நீ என் பெட்டை தவிர எங்க வேணும்னாலும் படுத்துக்கலாம், ஐ வோன்ட் சே எனிதிங்” என்றாள் இறுகிய முகத்துடனே…..
“என் மேல இந்தளவுக்கு அக்கறை காட்டுனதுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்” என்றவன், தலகாணியையும், பெட்சீட்டையும் எடுத்து கொண்டு தரையில் விரித்து படுத்து கொண்டான்,… அஜய்யை கண்டுகொள்ளாத ஸ்மிருதி, அவனுக்கு முதுகு காட்டியபடி திரும்பி படுத்து கொண்டாள்,…
நேரங்கள் கடக்க, அஜய் தான் ஒரு நிலையில் படுக்க முடியாமல், திரும்பி திரும்பி படுத்து கொண்டிருந்தான், சிறு வயதிலிருந்தே மெத்தையில் படுத்தே பழக்கபட்டவன், இன்று தரையில் தூங்குவதற்கு மிகவும் கடினமாக இருந்தது, உடலில் வலி எடுக்க அதற்கு மேலும் உறங்க முடியாமல் எழுந்து அமர்ந்து விட்டான், ஸ்மிருதியின் மீது அவன் பார்வை திரும்பியது, அவளோ ஆழந்த உறக்கத்தில் இருந்தாள்,……
என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தவன், எழுந்து மொட்டை மாடியை நோக்கி தான் நடந்தான்,…. நேரம் போவது தெரியாமல் வழக்கம் போல் வானத்தை பார்த்து கொண்டிருந்தான், போனில் மணி அதிகாலை நான்கு என்பதை காட்ட, தூக்கம் வேறு கண்களை சுழட்டவும் தான் மீண்டும் அறையை நோக்கி நடந்தான்,…
தரையில் விரித்திருந்த விரிப்பின் மீது படுத்து கொண்டவன், உடல் வலியையும் மீறி, கண்ணயர்ந்து உறங்கி போனான்,….