Skip to content
Post Views: 1,261
“நீ குளிக்கிறதுக்கு நான் எதுக்கு போகணும் ஒன்னாவே சேர்ந்து குளிக்கலாம், கிளம்பலாம்” என்றவன் அவளை அள்ளிக்கொண்டு குளியல் அறைக்குள் சென்றான்..
அக்னி சொன்ன அனைத்துக்கும் மாயா மறுப்பு தெரிவிக்க..
Advertisement
அவள் மறுத்த அனைத்தையும் பிடிவாதக்காரன் அவனுக்கு வேண்டியதை அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டே விட்டான் அவளை..
இருவரும் குளித்து முடித்து சில ஜல, பொல ஜங் வேலை எல்லாம் முடித்து வெளியே வர..
Advertisement
Advertisement
அந்த அதிக எடை கூடிய கனமான லெஹங்காவை பார்த்து மாயா எப்படி அணிவது என்பது போல மளைத்து போய் நிற்க..
அவளுக்கு உடையை அணிய உதவி செய்தவன் நகைகளை அவளுக்கு அணிய உதவி செய்துவிட்டு,, அவளை சற்று தல்லி நின்று அழகு பார்த்தவன்..
Advertisement
” பியூட்டிஃபுல் மாயா,, ஹேர் ஸ்டைல் மேக் கப், மட்டும் போடச் சொல்லு போதும்” என்றவன்.
” அப்புறம் உன் கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று அவளை அணைத்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு..
” நம்ம அன்பின் வெளிப்பாடுதான் இது, புரிஞ்சிதா உனக்கு” என்றான்..
மாயா”ம்ம்ம்” என்று தலை ஆட்ட..
அவளை தன்மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்..
” நம்ம வாழ்க்கையில் எது நடந்தாலும், நீ எனக்கு,, நான் உனக்கு,, அதை நீ எப்போதுமே மறக்கக்கூடாது மாயா” என்றான்..
அக்னி சொல்வதை ‘ஏன் எதுக்கு’ என்பது போல் மாயா பார்க்க..
” சப்போஸ் உனக்கும், எனக்கும் கல்யாணத்தில் வேற பிரச்சனை” என்று வார்த்தையை முழுங்கி கொண்டவன்,, ” எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமா இருக்கணும் புரிஞ்சுதா” என்றான் அக்னி..
அவளை மீண்டும் ஒரு முறை முத்தமிட்டு அவன் அறைக்கு சென்றான்..
அன்று நடந்ததை நினைத்து பார்த்தா மாயாவுக்கு அவன் சொல்லியதின் அர்த்தம் இப்போது புரிந்தது அவளுக்கு ..
இரண்டு நாட்கள் கழித்து அக்னியை ஃபோனில் அழைத்து இருந்தாள் மாயா..
அக்னி ஃபோனை எடுக்கவில்லை மறுபடியும் சிறிது நேரம் கழித்து அழைத்தாள் அப்போதும் அவன் போனை எடுக்கவில்லை..
ஒருவேளை மீட்டிங்கில் இருப்பாரோ சரி என்றுநினைத்தவள்.. மிஸ்சுடு காலை பார்த்து அழைப்பார் என்று நினைத்துக் கொண்டாள்..
மாயா அக்னிக்கு போனில் அழைத்து நான்கு நாட்கள் ஆனாது..
அக்னி மாயாவை போனில் அழைக்கவே இல்லை..
மாயாக்கும் கோபம் வந்தது ஏன் அவர் அழைக்கவில்லை அவரே அழைக்கட்டும் என்று இருக்க ஒரு வாரம் காத்திருந்தாள்,,
அவன் அழைக்கவே இல்லை,, உடனே பார்த்திபனுக்கு போனில் அழைத்தாள்.. பார்த்திபன் போனை எடுத்ததும்..
“எங்க உங்க முதலாளி போன் போட்டா கூட எடுக்கறது இல்ல” என்றாள் கோபமாக..
“பாவம் மாயா அக்னி ரொம்ப பிஸியா இருக்காரு”..
“ஏன் ஒரு அஞ்சு நிமிஷம் பேச கூட அவங்களுக்கு டைம் இல்லையா”?..
“மாயா புரிஞ்சுக்கோ ஏற்கனவே அக்னி சாருக்கு ரொம்ப வேலை.. இதுல உன்னோட கம்பெனியை சேர்ந்து பார்த்துக்கிறார். என்னால சென்னையில் இருக்கிற உன்னோட கம்பெனியை மட்டும் தான் பார்க்க முடியுது..
ஆனால் சார் அப்படி கிடையாது அவர்,அவர் கம்பெனியும் பாக்கணும் அவங்க அப்பா பிஸ்னஸ்சையும் பாக்கணும்,, உன்னோட பிஸ்னஸ்சை பார்க்கணும் பால் பண்ணையையும் பாக்கணும்,, ஒருத்தர் எவ்வளவு தான் வேலை பார்ப்பார்,, அவர் வேலையில கொஞ்சம் மிஸ் ஆனாலும் ஏதாவது பெரிய பிரச்சனை வந்திடும்.
அதனால சாரு பெங்களூருக்கும், சென்னைக்கும் பிளைட்டில் சுத்திக்கிட்டே இருக்காரு எனக்கே அவர பார்த்தா பாவமா இருக்கு..
மாயா இதில் நீயும் அவரை டிஸ்டர்ப் பண்ணாத,, முடிஞ்ச அளவுக்கு அவரை கொஞ்சம் ஃப்ரீயா விடு” என்றான் பார்த்திபன்…
“சாரி அண்ணா அவரை நான் புரிஞ்சுக்கல, கொஞ்சம் அவர் வேலையை பத்தி நான் யோசிச்சு இருக்கனும்,, ஆனாலும் ஒரு போன் பண்ணி இருக்கலாமே “…. என்றாள்..
“சரி மாயா நான் பார்த்து அவரை, உன்கிட்ட பேச சொல்றேன்” என்று போனை வைத்தான் பார்த்திபன்..
உலகநாதன் உடல் நலம் தேறி வந்தார். தந்தையை பார்த்துக் கொள்வது மாயாவுக்கு வேலையாகி போனது, திட உணவு உட்கொள்ள ஆரம்பித்தார்,, மகளின் வாடிய முகத்தை பார்த்தவர் “ஏன் இப்படி இருக்க மாயா” என்றார்..
“ஒன்னும் இல்ல டாடி,, நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றாலும்,,
அவளின் மசக்கை அவளை பாடாய்படுத்தியது, சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை எதை சாப்பிட்டாலும் பிடிக்கவில்லை, தலை சுத்து வாந்தி, மயக்கம் தூக்கம் இல்லாமல் சோர்ந்து,, அக்னியை அவளை தேட வைத்தது..
பார்வதி ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார்.. இன்று தான் உலகநாதன் முழித்து இருப்பதை பார்த்து..
” எப்படி இருக்கீங்க” என்று உலகநாதனை பார்வதி கேட்டார்.
” நல்லா இருக்கேன்மா” நீங்க எப்படி இருக்கீங்க” என்றார்..
“ம்ம்ம் நல்லா இருக்கேன்” என்றவர் இருவருக்கும் உணவு கொண்டு வந்திருந்தார்..
“மாயா வா உன்னிகிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர் அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்….
“என்ன ஆன்ட்டி” என்று மாயா கேட்க..,,
“உங்க அப்பா ரொம்ப சோர்ந்து தெரியுறாரு மாயா”.. என்றார் பார்வதி..
“ஆமா ஆன்ட்டி அப்பாக்கு நரம்பு பிரச்சனை இருக்கு,, ரத்த ஓட்டம் சரியா இல்லையாம், அதைவிட மூளைக்கு போற ரத்தம் வந்து கொஞ்சம் கம்மியா இருக்குன்னு சொல்றாங்க” என்றதும்..
பார்வதி மாயாவிடம் ஒரு யோசனை சொன்னார் “உங்க அப்பாவை கேரளா அழைத்துக் கொண்டு போகலாம் மாயா, அங்க ஒரு சித்தா மருத்துவ ஆசிரமம் இருக்கு, அங்க போய் அவருக்கு ட்டிரிட்மெண்ட் பார்த்தா சரியாகும்” என்று கூற..
‘சரி ஆன்ட்டி நாளைக்கே போகலாம் நான் டாக்டர்கிட்ட கேட்டு அதுக்கு உண்டான வேலையை பார்க்கிறேன்” என்று சொன்னாள்..
“பார்வதி உடம்பை பார்த்துக்கோ” என்று பேசி சென்று விட்டார்..
மாயா கேரளா போகும் முன் அக்னியை ஒரு முறை பார்த்து பேசிவிட்டு வரலாம் என்று அவன் ஆபீஸ்சுக்கு வர….
அங்கே அக்னி யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டு இருப்பதாகவும்.. கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும் என்று அக்னியின் ஆபீஸில் வேலை செய்யும் பெண் வந்து சொல்ல..
” சரி” என்று மாயா காத்திருந்தாள்..
அவள் நீண்ட நேரம் காத்திருந்தும் அவளுக்கு அக்னியை பார்த்து அனுமதி கிடைக்கவில்லை..
அப்படி என்ன முக்கியமான ஆளுகிட்ட பேசுறார் என்று கோபம் கொண்டு மாயா, அக்னி அறை நோக்கி கோபமாக செல்ல..
மாயாவை அங்கே வேலை செய்யும் பெண் “மேம் சார் யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு ” என்று கூற..
பளார் என்று அந்த பெண்ணை அரைந்தாள் மாயா..
” மேம் சாரி மேம்,, சார் ஏதோ கல்யாணம் விஷயமா பேசுறதா சொன்னார்,அதனால யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு, “..
என்று அந்த பெண் சொல்ல..
அவளை ஒரு விரல் நீட்டி வாயை மூடு என்று சொன்னவள்..
அதிரடியாக அக்னியின் அறைக்குள் நுழைந்தாள் மாயா.
அங்கே அக்னி ஒரு பெண்ணை கட்டி அணைத்து கைக்குலுக்கி தோள் அணைத்து வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்க..
பார்த்த மாயாவுக்கு சர்வாங்கமும் அடங்க, கோபமாக உள்ளே வந்தாள்..
அக்னி தன் அனுமதி இன்றி தன் அறைக்குள் நுழைந்த மாயாவை பார்த்தும் முறைக்க..
“ஒரு போன் போட்டா எடுக்கறது இல்ல இங்க வந்தா ஒரு பொண்ணை கட்டிப்பிடித்து ஹக் பண்ணிட்டு நிக்க மட்டும் நேரம் இருக்கிறதோ” என்று புலம்பிய படியே வந்தாள்…
லால் அக்னியின் எதிரில் அமர்ந்திருக்க..
” இவன் எதுக்கு இங்கே வந்தான்” என்றாள் மாயா அவரைப் பார்த்து..
“மாயா மரியாதையா பேசு அவர் என் கெஸ்ட் நீ வெளியே போ நான் அப்புறம் போன் பேசுறேன், உன்கிட்ட” என்றான்.
“வெளிய போக முடியாது நான் உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி பேசணும்” என்றாள்..
“மாயா கிளம்பு” என்றாள்..
முடியாது என்பது போல் அவள் நிற்க..
லால் முன்னாடி அவளிடம் கோபப்பட்டு பேசக் விருப்பம் இல்லாதவன்,, ” போ” என்பது போல் ஜாடை காட்ட..
முடியாது என்று தலையாட்டி இருந்தாள்..
லால் சேரில் இருந்து எழுந்தவர் “பாய் மாப்பிள்ளை” என்றவர் அவனிடம் மெல்ல சிரித்து, விடைபெற..
அவரை வழி அனுப்பி வைத்தான் அக்னி..
அவர்கள் சென்றதும் மாயா ஆத்திரம் தாங்காமல் “மாப்பிள்ளையா யாரு, யாருக்கு மாப்பிள்ளை” என்று அக்னியின் சட்டையை பிடித்திருந்தாள்…
error: Content is protected !!