Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 29 1

என் ஜீவன் உன்னை  சேருமா

  அத்தியாயம்  – 29



Advertisement

Advertisement

Advertisement

  உலகநாதன் ரதியை  அழைத்துக் கொண்டு எப்படி வீட்டிற்கு  வந்து  சேர்ந்தார்  என்றே அவருக்கே தெரியவில்லை,, அவ்வளவு  வேகமாக வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்…

Advertisement

 ரதியே அவள் அறையில் படுக்க சொல்லிவிட்டு மாயா அறைக்கு வந்தார்.

மாயா  நன்றாக தூங்கிக் கொண்டிருக்க..

மகளின் பக்கத்தில் ஒரு சேரை எடுத்து  போட்டு, அவளை பார்த்த படியே அமர்ந்து கொண்டார்..

 பார்த்திபன் சொல்லியதை கேட்ட உலகநாதனுக்கு இன்னும் உடல் நடுங்கிக்  கொண்டிருந்தது..

 இதை என்னாலயே  தாங்க முடியலையே,, மாயாவுக்கு  ஏன் இந்த நிலமை, என்று நினைத்தவருக்கு  மனதில்  சொல்ல  முடியாத பாரம் ஏறி இருந்தது…

 அவருக்குத் தெரிந்த  எல்லாம் கடவுள்களையும்  வேண்டிக் கொண்டார்.. தன் மகளுக்கும், தன் பேரப்பிள்ளைகளுக்கும் எதுவும் ஆகக்கூடாது இறைவா,,..

 அவர்கள் இந்த பூமிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல்,  முழு ஆரோக்கியத்தோடு வந்து சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்தபடியே கண் மூடி அமர்ந்திருக்க..

 மாயா எழும் சத்தம் கேட்டு..  மகளைப்  பார்க்க ..

இந்த நேரத்தில் தன் அறையில்  அமர்ந்திருக்கும் தந்தையை  பார்த்தபடியே  எழுந்து அமர்ந்த  மாயா…

“என்னப்பா ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கீங்க,   என்னாச்சு  தூங்கலையா?”  என்று கேட்க…

 “தூக்கம் வரலடா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றதும்.

 “இருங்கப்பா வரேன்” என்றவள். ஓய்வு அறைக்கு சென்று வந்தவள். தண்ணீர் குடித்து விட்டு.. உலகநாதன் அருகில் அமர்ந்து “சொல்லுங்கப்பா” என்று கூற.

” என்னாச்சுடா  உனக்கு பார்த்திபன் என்னவோ சொல்றான்”..

 ஐயோ தந்தைக்கு தெரிந்து விட்டதே, இவரை எப்படி சமாளிக்க.. இந்த பார்த்திபன் அண்ணாவை என்று மனதில் பார்த்திபனைத்  திட்டியவள்.

 “அது ஒன்னும் பிரச்சனை இல்லப்பா பாத்துக்கலாம்” என்று மாயா கூற..

 “கண்ணம்மா சொல்லுடா,  அப்பாகிட்ட எதுவும் மறைக்காத சொல்லு “என்றதும்..

 அவளுக்கு கூட  மனம் பாரமாகத்தான்  இருந்தது,, ஒன்று தந்தையிடம் சொல்ல  வேண்டும்,, இல்லை தன்னவனிடம்  சொல்ல வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க,,  அக்னியிடம் அவளால் சொல்ல முடியவில்லை..

தந்தையை  அடிக்க வந்தவனிடம் எப்படி சொல்ல,   அவனை  வெறுத்து  இருந்தவளுக்கு இதை

 யாரிடம்  சொல்வது என்று அவள் முழித்துக் கொண்டிருந்தாள்..

 “மாயாம்மா  என்ன யோசனை சொல்லுடா” என்றதும்…

 தந்தையிடம் சொல்ல ஆரம்பித்தாள்…

” எனக்கு” என்று   சொல்லும் போதே அழுகை  வந்தது..

 “டேய் அழாதடா” என்றவர் மகளை  தோள் அணைத்துக் கொண்டார்..

 “டாடி” என்றவளுக்கு அழுகை வர..

 “அழக்கூடாது அழாமல் சொல்லணும், அப்பா இருக்கேன் உனக்கு  பக்கம் பலமாக எதுவுண்னாலும் பார்த்துக்கலாம்” என்று உலகநாதன் மகளுக்கு தைரியம் சொல்ல..

 “எனக்கு பயமா இருக்கு டாடி” என்று  மீண்டும் அழுதவளை..

 “அப்பா இருக்கேன் டா சொல்லுடா பயப்படக்கூடாது, அழாம சொல்லு” என்றதும்..

 கண்களை  துடைத்தவள்.. “எனக்கு” என்றவளுக்கு சொல்ல முடியாமல் குரல் கமர..

 தந்தை  முகத்தை பார்த்தவளின் தலை கோதியவர்,,  தன் தோளில் சாய்த்து கொண்டு முதுகை தட்டி கொடுக்க.

” என் வயித்துல மூணு பாப்பா இருக்கு டாடி. டாக்டர் ட்ரிபிள் பேபிஸ்ன்னு சொன்னாங்க” என்றதும்..

அதிர்ச்சியாக வில்லை உலகநாதனுக்கு , ஏற்கனவே பார்த்திபன் சொல்லி இருந்தானே,  என்றவர் அமைதியாகவே இருக்க..

” எனக்கு ரொம்ப சந்தோஷம் டாடி ரெட்ட குழந்தையின்னாவே நான் சந்தோஷப்படுவேன், இதில் ட்ரிபிள் பேபிஸ்னா  சொல்லவா வேண்டும்,, ரொம்ப சந்தோஷமா இருந்தேன்” என்றவளுக்கு  டாக்டர் டிரிபிள் பேபிஸ்சுன்னு சொன்னா நாளில் அவள் அனுபவித்து சந்தோஷத்தில் தந்தையிடம் மகிழ்ச்சியாக  சொன்னாள்…

பின்பு டாக்டர் உங்களால மூனு பேபிஸ்ச சுமக்க முடியாது ஒரு பேபியா வெளியா  எடுத்து விடலாம் என்று சொன்னதையும் சொல்ல…

 மகள் சொன்னவுடன் அதிர்ச்சியான உலகநாதன் என்ன சொல்ற டா என்றதும்..

 “ஆமா டாடி மூணு குழந்தை பெத்துகிற அளவுக்கு என் பாடி கண்டிஷன் இல்லையாம்,ரொம்ப கஷ்டமுன்னு சொன்னாங்க அது மட்டும் இல்ல மூனு குழந்தைகள் நல்லா பிறக்குறதுக்கு  சான்ஸ் இல்ல அப்படின்னு சொன்னாங்க”..

 “ஏன்டா குழந்தைகள் வளர்ச்சி சரியில்லையா  உனக்கு ஏதாவது பிரச்சனையா”?..

 “எனக்கும்  குழந்தைகள் வளர்ச்சிக்கும் எந்த பிரச்சினையும் இதுவரைக்கும் இல்ல டாடி ஆனா என்னால மூணு குழந்தை பெத்துக்க முடியாதுன்னு  டாக்டர் சொல்றாங்க”..

 “ஏண்டா” என்று  உலகநாதன் கேட்க ..

 “என் பாடி கண்டிஷன், வயசு இது எல்லாத்தையும் பார்த்து ஒரு பேபி இல்ல ரெண்டு பேபி கஷ்டப்பட்டு பெத்துக்கலாம் மூணு பேபிஸ் எல்லாம் ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டாங்க”..

 “இதுக்கு என்ன பண்றது”..

 “டாக்டர் என்ன சொல்றாங்கன்னா அஞ்சு மாசத்துக்குள்ள,  இல்ல ஆறு மாசத்துல குழந்தை  வயித்துல  நல்ல வளர்ந்த உடனே ஸ்கேன் பண்ணி,, மூணு குழந்தைகளையும்  பார்ப்பாங்களாம் அதில் எந்த குழந்தை வளர்ச்சி இல்லாம,, வெயிட் கம்மியா இருக்குதோ அந்த குழந்தையை வெளியே எடுத்து விடலாமுன்னு சொல்றாங்க, டாடி” என்று மாயா அழ..

 “என்னடா சொல்லுற?”..

 தேம்பிக் கொண்டே  “நல்ல வளர்ச்சி இல்லாத குழந்தையை என் வயித்துல அடிப்பகுதியில் இருந்து மிஷின் மூலமா அந்த குழந்தையை வெளியே எடுத்து விடுவாங்களாம்” என்று கூறி அழ..

 “என்னடா சொல்லுற”. என்றார் பதறி..

“ஆமாம் டாடி, வளர்ச்சியில்லாத குழந்தையை வெளியில்  எடுத்துருவாங்களாம், என்னால முடியாது எனக்கு என் மூணு குழந்தைகளும்  வேணும்” என்று மாயா தேம்பி அழ..

 “ஒன்னும் ஆகாது ஒன்னுமே ஆகாது,,அப்பா  டாக்டர் கிட்ட பேசுறேன்.. அப்பா இருக்கேன்ல”  என்று கூற..

“எனக்கு  என் மூன்று குழந்தைகளும் வேண்டும் என்னால் ஒரு குழந்தை விட்டுக் கொடுக்கவே  முடியவே முடியாது டாடி”  என்று மாயா கூறி விட..

 “சரிடா நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாம், அப்பா டாக்டர் கிட்ட பேசுறேன் இப்ப தூங்கு அப்பா இருக்கேன். கவலைப்பட கூடாது” என்று அவர் மகளுக்கு தைரியம்  சொல்லிவிட்டு   அவர் அறைக்கு வந்து படுத்துக்கொள்ள…

 அவரால் அவர் அறையில் சிறிது நேரம் கூட படுத்துக் கொள்ள முடியவில்லை..

 நான் மாயாவையும் என்  பேரப்பிள்ளைகளையும்  நல்ல படியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்து நினைத்து தூக்கம் வராமல்  இருந்தவர்..

ரதி அறைக்கு வந்தார்.. ரதி நன்றாக  கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க அவளின் பக்கத்தில் சென்றவர்.

 அவளை பின்னிருந்து அணைத்த படியே படுத்துக்கொண்டார்.

அந்த தொடுதலில்  கண்முளித்த ரதி..

உலகநாதனை  திரும்பிப் பார்த்தாள்..

 கண் கலங்கி சிவந்திருந்த அவர் விழிகளை பக்கத்தில் பார்த்தவளுக்கு  ஏதோ அவர் வருத்தமாக இருப்பது போல் தோன்ற..

 என்னவென்று பார்த்தவளில் விழிகளை பார்த்தவர்,,  “நான் இங்கேயே  படுத்துக்கட்டுமா” என்று அனுமதி கேட்க.

“உம்ம்” என்று  தலையாட்ட..

 ரதியின் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்த உலகநாதன் அவளை நன்றாக அணைத்துக்கொண்டு  தூங்க..

 ரதிக்கு   தான்  தூங்கா இரவானது..

 மாயா தந்தையிடம் அனைத்தையும்  சொல்லிவிட்டாதாள்.. நிம்மதியாக  காலையில் வெகுநேரம் தூங்கி எழுந்தாள்..

 சரியாக காலை எட்டு மணிக்கு அக்னி  உலகநாதன் வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அழுத்தினான்..

 உலகநாதன் வீடு திறந்தே  இருக்க அவனுக்கு மாயா என்ன சொல்வாளோ என்று நினைத்தவன் காலிங் பெல்லை  அடித்து விட்டு வெளியே நின்று இருக்க..

 யாரு காலிங் பெல்லை அடிக்கிறா?

 என்று அனைவரும் வெளியில் வந்து பார்க்க அக்னி சிரித்தபடியே நின்றிருந்தான்..

 அவன் முகத்தில் அத்தனை சந்தோஷம் பொலிவு  எதையோ சாதித்த மாதிரி மகிழ்ச்சியோடு அவன் நின்றிருக்க.

 உலகநாதன் தான் வெளியே வந்தவர் அக்னியை பார்த்து “ஏன் வெளியே நிக்குற அக்னி உள்ளே வா’ என்று அவனை அழைக்க..

 அக்னி உள்ளே வந்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!