Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 10

பகுதி 10

சில நிமிடம் கடந்து…



Advertisement

முகுந்த் மெத்தையில்.. சம்யுக்தாவின் மடியில் அமர்ந்து அவளின் கழுத்தை கட்டிக்கொண்டு விசும்பியவாரு இருக்க, 

அவனை தேற்ற முடியாத நிலை எண்ணி கண் கலங்க நின்றிருந்தான் ரியான்.

Advertisement

Advertisement

அவனின் அந்த தோற்றம் சம்யுக்தாவுக்கும் கஷ்டமாக இருக்க கண்களாலேயே அவனிடம் மன்னிப்பை கேட்டு கொண்டிருந்தாள்.

அவளின் செய்கையெல்லாம் எங்கே அவனுக்கு புரிந்தது..? 

Advertisement

அவனின் எண்ணமெல்லாம் தன் மகனிடமே நிலைத்திருந்ததே..!

அவனை நெருங்கி அவனின் தோளை தொட்ட சந்தீப், “சாரிடா, நிஜமா குழந்தைக்கு இப்படி ஆகுமுன்னு எங்களுக்கு தெரியாது டா. 

அப்படி தெரிஞ்சிருந்தா அவன் கிட்ட கூட மலர் போயிருக்க மாட்டா..” என்றான் வேதனையான குரலில். 

“நீங்க என்ன பண்ணுவீங்க..? எல்லாம் அவன் தலையெழுத்து.. பாசம் காட்டறவங்க யாரு.. அதே பாசத்தை காட்டி.. அவனை அழிக்க பார்க்கறவங்க யாருன்னு புருஞ்சுக்க கூடிய வயசு இன்னும் வரலையே..!” என்றான் விரக்தியாக.

அவனின் பேச்சில் குழம்பிய சந்தீப், “என்னடா சொல்றே..? அழிக்க பார்க்கறதா..!” என்றான் அதிர்ந்து.

“ம்ம்..” என தலையை மேலும் கீழும் ஆட்டியவன் இயலாமையோடு அங்கிருந்த சேரில் தொப்பென விழுந்தான்.

“டேய் ரியான்..” என பதறி அவனை தாங்க போன சந்தீப்பை கட்டிக்கொண்ட ரியானின் அழுகை.. அங்கிருந்த அத்தனை பேரையும் உலுக்கியது.

அழுகையோடே.. 

“நாங்க என்னடா பாவம் பண்ணினோம். எங்களுக்கு ஏன் இத்தன பிரச்சினைய அந்த கடவுள் கொடுக்கனும்..?” என்று கதறலாய் சொன்னவனை தேற்றத்தான் யாராலும் முடியவில்லை.

மலருக்காவது ரியான் வாழ்க்கையில் நடந்தது ஓரளவுக்காவது தெரியும்.. 

சம்யுக்தாவிற்கோ சப்டைட்டில் இல்லாத வேற்று மொழியில் படம் பார்க்கும் நிலை தான்.

இதில் ரியானுக்கு நன்றாகவே தமிழ் தெரியும்‌.. என்பதும் அவளுக்கு தெரிந்து விட்டிருக்க, அவளுக்கோ என்ன செய்வது.. என்றே புரியாத நிலை.

மலருக்கு சில நிமிடத்திற்கு முன் நடந்தது மனக்கண்ணில் அப்படியே திரும்ப ஓடத்துவங்கியது. 

ரியான் கீழே சென்றதும் முகுந்தை பார்த்தபடி அவனின் சிகிச்சை பற்றி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர் சந்தீப்பும், மலர்விழியும்.

நேரம் கடக்க, “என்னங்க சின்னத்தான காணோம். குழந்தையும் அசந்து தூங்கிட்டே இருக்கான். 

லன்ச் டைம் நெருங்குதே.. உங்க அப்பாக்கு சாப்பாடு எடுத்து வைக்கனும்..” என்றிட,

“அந்த பொண்ணுக்கு எல்லாத்தையும் விளக்காம சொல்லி கொடுத்துட்டு தானே அவன் வரனும். அவன் வந்ததும் சொல்லிட்டு நீ கிளம்பு. 

முகுந்துக்கு ஜெட்லாக்கோட அவன் சாப்பிடற மருந்தும் அசந்து தூங்க வைக்குது போல.

முகுந்தை இன்னொரு நாள் நம்ம பசங்களையும் கூட்டிட்டு வந்து பார்த்துக்கலாம்..” என்று சந்தீப் சொல்லும் போதே,

அவனின் போன் ஒலிக்க, அதில் அவனின் தந்தை எண் ஒளிந்தது.

அதை கண்டதும் அவரின் அழைப்பின் நோக்கம் உணர்ந்து.. கட் செய்ய, மீண்டும் மீண்டும் அவர் அழைக்க ஆரம்பித்தார்.

ஓயாமல் ஒலித்த தொலைப்பேசி சத்தத்தில் முகுந்த் லேசாக அசையத்துவங்க,

“என்னங்க.. நீங்க பண்ணறதால பாருங்க குழந்தை டிஸ்டர்ப் ஆகறான். 

ஒண்ணு அதை அட்டன் பண்ணி பேசுங்க.. இல்ல சைலண்ட்ல போடுங்க..” என‌ச் சொல்ல மீண்டும் அடிக்க துவங்கியது போன்.

“ப்ம்ச்..” என உச்சு கொட்டியவன், 

“இவரு விட மாட்டாரு. நா வெளியே போய் பேசிட்டு சீக்கிரம் நீ வந்திடுவேன்னு சொல்லிட்டு வர்றேன். 

நீ முகுந்தை பார்த்துக்கோ..” என‌ சொல்லிவிட்டு வெளியே வந்தவன், 

நேற்று.. ரியானும் முகுந்தும் நின்றிருந்த ஜன்னல் அருகே சென்று அவனின் தந்தையின் அழைப்பை ஏற்றான்.

அதற்காகவே காத்திருந்தது போல அவர்‌ வசைமாறி பொழிய இடையில் சந்தீப் பேச முயன்றது எல்லாம் விரலுக்கு இறைத்த நீரானது.

சந்தீப் வெளியே செல்லும் நேரம், மீண்டும்‌ ஒலித்த அலைப்பேசி ஓசையில்.. லேசாக உறக்கம் கலைந்த முகுந்த் புரண்டு மெல்ல கண்விழித்தான்.

அவனின் அசைவில் அவனருகே விரைந்து வந்த மலர், அவன் விழி திறக்கவும் புன்னகையோடு, “முகுந்த்..” என்றவாரே கையை நீட்ட,

அடுத்த நொடி அலறி துடிக்க ஆரம்பித்திருந்தான் பிள்ளை. 

‘ஏன்.. எதற்கு..’ என்று புரியாத குழப்பத்தோடு, 

“முகுந்த், நா உன் பெரியம்மாடா.. இங்கே பாருங்கள்.. வாங்க என்கிட்ட..” என்று சொல்லி, அவனை தூக்க போக 

அவனின் அலறலும், துள்ளலும் அதிகமாக துவங்கியது.

அவனின் அழுகை அதிகரிக்க.. அதிகரிக்க.. அவனின் உடலோ அதீத வலியில் அவனை துடிக்க செய்தது.

(அவன் அசைவில் ரியானிடமிருந்த பேபி மானிட்டர் அலாட் செய்ய, அப்போது தான் ரியான் போனில் சிசிடிவியை கண்டு சுதாரித்து ஓடி வந்தது..)

வலி கூடக்கூட.. அவனுக்கு மூச்செடுக்கவே சிரமமாக இருக்க,

சரியாக அந்த நேரம் தான் ரியான் பதட்டத்தோடு பாய்ந்து அந்த அறைக்குள் ஓடி வந்திருந்தான். 

அவனையும், அவனின் பின்னாலேயே ஓடி வந்த சம்யுக்தாவையும் கண்ட சந்தீப்புக்கு, ஏதோ பிரச்சினை.. என்பது புரிந்து விட அவசரமாக போனை கட் செய்தவன், அவர்களுக்கு பின்னாலேயே அறைக்குள் வந்திருந்தான்.

முதலில் ஓடி வந்த ரியான் குழந்தையின் நிலை கண்டு கால்களில் கனத்த கல்லை கட்டியது போல தடுமாறி கண்கலங்கி நிற்க, 

முகுந்தின் அழுகை குரல் கேட்டதும், வேகமாக அறையில் ரியானை தாண்டி முன்னோக்கி வந்த சம்யுக்தா.. ரியானின் நிலை பற்றி எல்லாம் சிந்திக்காது, “முகுந்த்…” என்ற அழைப்போடு அவனை நெருங்கியிருந்தாள்.

அவளின் குரலில் நேற்று தனக்கு சாதகமாக தந்தையிடம் பேசி சண்டையிட்டவர்.. என அடையாளம் கண்டு கொண்டவன் அழுகையோடு அவளிடம் தாவியிருந்தான் பிள்ளை‌.

அவள் அவனை நெருங்க போகும் போது தான் ரியானும் உணர்வு பெற்று குழந்தையிடம் சென்றிருக்க, சம்யுக்தாவிடம் சென்றிருந்த பிள்ளையை தானே வாங்கி கொள்ள நினைத்து, “கண்ணா.. அப்பாகிட்ட வாங்க..” என்றிருந்தான் தமிழில்.

அதில் சம்யுக்தா அதிர்ந்து ரியானை பார்க்க, அந்த பார்வையை எல்லாம் அவன் கண்டு கொள்ளாமல்.. தன் மகனிடமே கவனத்தை பதித்திருந்தான்.

தந்தையின் குரல் கேட்டும் அவனின் புறம் திரும்பாமல் சம்யுக்தாவை மேலும் இறுக்கமாக கட்டிக்கொண்டவனை கண்டு உயிர் வரை வலித்தது ரியானுக்கு. 

அதில் கண்கலங்கி நின்றவனை பார்க்க சம்யுக்தாவிற்கே பாவமாக இருக்க, 

“முகுந்த்.. இங்கே பாருங்க.. உன் அப்பா..” என அவனை வலுக்கட்டாயமாக பிரித்து திருப்பி ரியானின் புறம் காட்ட,

“ஐ ஹேட் மை ப்பா..” என்றான்‌ குழந்தை அழுகை குரலிலேயே தலையை மேலும் அவளுள் புதைத்த படி.

அதில் சப்த நாடியும் ஒடுங்க மேலும் கலங்கி நின்றான் அந்த தந்தை.

‘அவன் தான் தன் உலகம்.. தனது உயிர்‌..’ என எண்ணி வாழ்பவனுக்கு அந்த வார்த்தை எப்படிப்பட்ட வலியை கொடுத்திருக்கும்.. என்பது சந்தீப் மலர்விழிக்கு நன்றாகவே புரிந்தது.

அதனாலேயே ரியானிடம் நெருங்கி.. சந்தீப் மன்னிப்பை மலரின் சார்பாக யாசித்திருந்தான்.

மலர் அவனிடம் அவன் வெளியேறிய பின் நடந்ததை சொல்லிவிட்டிருந்தாளே.. இந்த இடைப்பட்ட நிமிடத்தில்.. அதனால எழுந்த குற்ற உணர்வு அவர்களுக்குள்.

ரியான் சந்தீப்பை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தவன் தன்னை சுதாரித்துக்கொண்டு, அவனிடமிருந்து விலகி தான் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு பேகை எடுத்தவன்.. அதிலிருந்த ஆயில் மெண்ட்‌ ஒன்றை எடுத்து மலரிடம் நீட்டி,

“இதை முகுந்த் முதுகுல தேய்ச்சு விடச்சொல்லுங்க..” என்றான்,

தன் மகன் தன்னை நெருங்க விடாமல் தள்ளி நிறுத்திவிட்டானே.. என்ற ஆற்றாமையோடு.

“ஏன்‌..?” என எதுவும் கேட்காமல், சம்யுக்தா கை நீட்ட.. மலர் கொடுத்ததை வாங்கி, குழந்தையை வாகாக தனது தோளில் சாய்த்துக்கொண்டவள் அவன் போட்டிருந்த சட்டையே மேலேற்ற, சம்யுக்தாவின் உடல் ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!