Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 15

கீதம்  💜 15

” ஹேய் மச்சி!, என்னடா ஆச்சி, “என்று இவன் ஹலோ சொல்லும் முன்பே மறுபுறம் கீரிச்சிட்டது தர்ஷியின் குரல்.

அலைபேசியை காதிலிருந்து எடுத்து தன்  காதை குடைந்து கொண்ட ஆரவ் ” ஏன்டா !, இப்படி கத்துற காது ஸ்பீக்கர் அவுட் ஆகிடும் போல..” என்றான் கடுப்புடன்.

” டேய்!, உனக்கு இப்படி ஆச்சுன்னு சொன்னதும் பதறி போய் கால் பண்ணா ஏன்டா கடுப்படிக்கிற ” என்றாள் படபடப்புடன்.



Advertisement

” அதுக்குள்ள உனக்கு நியூஸ் வந்துருச்சா, அம்மா சொன்னாங்களா ? “

” பெஸ்ட் பிரண்டுன்னு என்கூடவே சுத்திட்டு  இருந்துட்டு,  இப்போ எதுவும் எனக்கு சொல்றதே இல்லை. நைட் ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு போனை வச்சிருவா. என்னடா ஆச்சி உனக்கு.,”

” சாரிமா,  இங்கே கொஞ்சம் பிசியா இருக்கேன்டா. வேற ஒன்னும் இல்லை., ” என்றான் தணிவாய்.

Advertisement

” உன் டைட் ஒர்க் பத்தி எல்லாம் நானும் கேள்விப்பட்டேன்., அந்த பொண்ணு சொன்னானு தேவையில்லாத பிரச்சனை எல்லாம் ஏன் இழுத்து வைக்கிற.? ” என்றவள் மேலும் தொடர்ந்து ” யாருடா அந்த லூசு, ஒன்னும் சொல்லாம கூட்டி போய் உனக்கு கத்திக்குத்து வாங்க வச்சவ.. ?”

Advertisement

” லிசன், அவங்கள பத்தி  உனக்கு ஒன்னும் தெரியாம, நீ தான் லூசு மாறி பேசுற .. ?” என்றான் உடனே

” எனக்கும் எல்லாம்  தெரியும். அவள் சொன்னது உண்மையா பொய்யான்னு கூட தெரிஞ்சுக்காம நீ ஏன் போனே ? ” என்றாள் கோபத்துடன்.

” ஏய்!, அவங்க ஒன்னும் பொய் சொல்லல. இன்பாக்ட் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போய் தான் பேசுனோம்.” என நடந்த அத்தனையும் அவளிடம் சுருக்கமாக பகிர்ந்து கொண்டான்.

Advertisement

” இப்போ சொல்லு நாங்க பண்ணது தப்பா ?” என கோபமாக அவளிடம் கேட்டவனிடம்.

” சாரி, நீங்க நல்லதுக்கு தான் ஹெல்ப் பண்ணா போனீங்க, நான் தான் தெரியாம அவங்கள  திட்டிட்டேன்.,” என்றாள் வருத்தத்துடன். பின் சிறிது நேரம் அவளிடம் பேசி விட்டு அவனின் மாமாவிற்கு அழைப்பு  விடுத்தான்.

விஜய் தனக்கு அடுத்தடுத்து வந்த இரு அழைப்புகளையும் கான்பிரன்ஸ் காலில் கனெக்ட் செய்து ” ஹலோ,  சொல்லுங்க” என்றவுடன் ” ஹலோ அங்கிள்,” ஹலோ சார்” இருவரும் ஒரே நேரத்தில் பேசி, பின்பு குரலை உணர்ந்து அமைதியாகினர். இவரோடு பேச கூடாதுன்னு நினச்சேன், சே.., என  மனம் நொந்து கொள்ள, ” இப்போ தான் கரெக்டா வேலை பார்க்குறீங்க என் தெய்வமே! ” என மறுமனமோ குதூகலித்தது.

” என்னப்பா. ரெண்டு பெரும் சைலன்ட் ஆக்கிட்டிங்க ” என விஜய் கேட்டபிறகே  ” இல்லை சார், அவரு பேசுவார்னு நான் அமைதியா இருந்தேன்., அவனை பத்தி எதுவும் தெரிஞ்சதா ” என நேரடியாய் அவள் விசயத்திற்கு வர.

” நானும் அத கேட்க தான் கால் பண்ணேன் அங்கிள்.” என்றான் ஆரவ்.

” ம்ம்ம்!, நான் அவனை பத்தி விசாரிச்சா வரைக்கும் வேலை வெட்டினு எதுவும் பார்த்த மாதிரி தெரியலன்னு தான் சொல்ராங்க. பரம்பரை சொத்து எதுவும் இல்லாதவனுக்கு இப்போ சொத்து பத்துனு எக்கச்சக்கமா இருக்கு. ரெண்டு வருசமா பணப்புழக்கம் அதிகமா இருக்குனு நியூஸ் கிடைச்சது. அப்போபோ பொண்ணுகளை வேலைக்கு மட்டும் சேர்த்து விடுவானாம்.” என்றவர் தொடர்ந்து

” அவன் வாயை திறந்து எதுவும் சொல்ல மாட்டேன்குறான். நான் எதுவும் தப்பு பண்ணல, வேணும்னா அந்த பொண்ணுங்கட்ட வேணா கேட்டு பாருங்க. நான் ரொம்ப நல்லவன்னு அரைச்ச மாவையே அரைக்குறான்”  என்றார் சலிப்புடன்.

” அந்த பொண்ணுங்க என்ன அங்கிள் சொன்னாங்க ?” என்றான் ஆரவ்.

” நாங்களும் அவங்க கிட்ட பேசி பார்த்தோம். நல்லவிதமா தான் சொல்ராங்க. ஆனால் ஏதோ தப்பு பண்ணுறான்னு அவன் கண்ணை பார்த்தால் தெரியுது.  சிக்கிக்காம இருக்க நிறைய தில்லாலங்கடி வேலை எல்லாம் பார்த்துருக்கான்னு எனக்கு தோணுது. சின்ன க்ளூ   கிடைச்சா போதும். தட்டி தூக்கிருவேன் என்றவரிடம்.

” சார், நான் ஒரு விஷயம் சொல்றேன். அது உங்களுக்கு யூஸ் ஆகும்னு நினைக்கிறன். என்றவள் பூவிழி பற்றிய விஷயத்தை சுருக்கமாக கூறி முடித்தாள்.

” அன்னிக்கு இத தான் தனியா போய் பேசுனீங்களா, என்கிட்டே ஏன் சொல்லல.” என்றான் ஆரவ் வேகமாய்.

“அப்போ எனக்கு பொண்ணுங்க  பிரச்சனை போல தான் தோணுச்சு. உங்கட்ட இதை பத்தி எப்படி  பேச முடியும் ” என வெடுக்கென கேட்க.

” மேடம், அன்னைக்கு இத பத்தி சொல்லியிருந்தா இவ்ளோ  பிரச்சனை நடந்திருக்காது. இது வேற மாதிரி போகுது.,” என்றான் யோசனையையாய்

” எஸ்., அன்னைக்கு காத்தாயி பாட்டிகிட்ட பேசுனப்ப நல்லா ஹெல்த்தியா  இருக்குற பொண்ணுங்கள தான் கூட்டிகிட்டு போறான்னு சொன்னாங்க. சீக்காலி பொண்ணுன்னு நிறைய பேரை கூட்டிட்டு போக மாட்டேன்னு சொன்னான்னு  திட்டுனாங்க. நான்  வேற மாதிரி நினைச்சுட்டேன் இப்போ..,  ” என்றவன் அமைதி காத்து, யோசித்து  கொண்டிருக்கும் போது விஜய் வேறு சந்தேகங்களை நந்துவிடம் கேட்டு கொண்டு இருந்தார்.

சில நிமிட இடைவெளியில் ” அவன் என்ன பண்ணுறான்னு கெஸ் பண்ணிட்டேன் ” என்றவன் தான் கணித்ததை கூற கூற நெஞ்சம் பதறியது.

” சரி ஆரவ். மொத அந்த பொண்ணுகிட்ட இதை பத்தி பேசி பார்ப்போம். எந்த ஹாஸ்பிடல்னு விசாரிச்சா உண்மை என்னனு கண்டுபிடிச்சிரலாம்” என்றவர் நந்துவை அந்த பெண்ணிடம் பேச சொன்னார்.

உடனே அவளுக்கு அழைப்பு விடுத்து பேசியவள் அவளிடம் நயமாக பேசி மருத்துவமனை, சென்ற தேதி அனைத்தையும் கேட்டும், அதை ரெகார்ட் செய்தும் இருவருக்கும் அனுப்பினாள்.

” அங்கிள், நான் கெஸ் பண்ணது கரெக்ட். அவன் பொண்ணுங்கட்ட இருந்து கருமுட்டையை தான் கலெக்ட் பண்ணி இல்லீகல் பிசினஸ் பண்ரான்.” கோபத்துடன் ஆரவ் சொல்ல.

” அந்த நாயை தூக்கி உள்ளே வச்சும் எனக்கே தண்ணி காட்டி அலைய வைச்சிட்டான். அவனை.., ” என்று பல்லை கடித்தவர் ” நான் உடனே போய் இத எல்லாம் விசாரிக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் இதுல இன்வால்வ் ஆனா மாதிரியே காட்டிக்காதீங்க. தள்ளியே நில்லுங்க. யாருகிட்டயும் இதை பத்தி எதுவும் சொல்லிடாதீங்க. அவனுங்க சுதாரிச்சு தலைமறைவா ஓடிருவாங்க. ” அவர்களை எச்சரிக்கை செய்து போனை கட் செய்தார்.

***

ஒரு வார அலைப்புறுதலுக்கு பின் அனைத்து உண்மைகளும் வெளிவந்தன. பிரபல ………… கருத்தரிப்பு மையத்தில் IVF முறையில் அதிக சிகிச்சைகளை மேற்கொள்ள வளர்ச்சியடைந்த தரமான கருமுட்டைகள் அதிகளவில் தேவை பட்டன என்றும், அதற்காக சிறு வயது பெண்களின் வீரியமிக்க கருமுட்டையை திருடி, போலியான ஆதார்கார்டு மூலம் விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர். மேலும்  அந்த பரிசோதனை மையத்திற்கு சீல் வைத்தும், உரிமையாளர் மற்றும் அதற்கு உதவி புரிந்த அனைவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் மூலம் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து டிவியில் பிலாஸ் நியூஸ் ஓடி கொண்டு இருந்தது.

இரவு சமையல் செய்து கொண்டு இருந்த சுகந்தி கைவேலையை விட்டுவிட்டு வந்து வேகமாய் அதை பார்த்து கொண்டு இருந்தார்.

” என்னடி, இது இப்படி எல்லாம் கூட பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எந்த ஊர்ல இப்படி பண்ணங்களாம் ?” என மகளிடம் கேட்க.

” போன வாரம் எவன்கிட்ட போய் வம்பு பண்ணிட்டு வந்தன்னு திட்டுனியே, அதே ஊர் தான் , அதே ஆளு தான் என்றால் சிரித்து கொண்டே.

” என்னடி சொல்ற, இதுக்கு தான் அவன் வந்து நம்ம தம்பி கையை குத்துனான்னா, ” என்றார் பதட்டத்துடன்.

” பின்னே, அவன் வளர்ச்சியை நாங்க தடுத்து நிறுத்திட்டோம்ல, அந்த கடுப்பு துரைக்கு. கத்தி  எடுத்து வந்து குத்துனாரு. இப்போ மாட்டிகிட்டு கம்பி எண்ணுராரு.”

” நிஜமா தான் சொல்றியா, நடந்ததை சொல்லுடி, எனக்கு படபடன்னு வருது.” என்றார் பதட்டமாய்.

” அம்மா., நான் அன்னிக்கு சொன்னப்ப நீ நம்பள, என்னை தான் திட்டுன., இப்போ மட்டும் வந்து கேக்குற .. உடனே சொல்லணுமாக்கும். போம்மா.,,” என்றாள் பிகு செய்து கொண்டு.

” சொல்லி தொலைடி., கடுப்படிக்காம ,” என்றார் கோபத்துடன்.

” மூர்த்தினு ஒரு ஆளை  பத்தி சொன்னேன்ல. அவன் ரொம்ப நல்லவன் மாதிரி நடிச்சு சின்ன பொண்ணுங்கள பெரிய வசதி படிச்சவங்க வீட்டுல குழந்தையை பார்த்துக்க, எடுபிடி வேலை செய்யனு கூட்டி போவானாம். அங்க நல்ல சாப்பாடு, தூக்கம்னு இருக்கிற பொண்ணுங்கல மூணு மாசத்துக்கு ஒரு தடவை கூட்டி போய் மெடிக்கல் செக் அப் செஞ்சு பார்ப்பங்களாம்..,”

” இதுல என்ன தப்பு இருக்காம்., அந்த பிள்ளைகளுக்கு நல்லது தானே பண்ணி இருக்கான்.” என்றார் சுகந்தி.

” இரும்மா., முழுசா கேளு. அவன் பண்ண டெஸ்ட் ரிப்போர்ட் வச்சி நல்ல வளர்ச்சியா  இருக்கிற கருமுட்டையை யாரு தர முடியும்னு தெரிஞ்சிக்கிட்டு,  அந்த பொண்ணுங்களுக்கே தெரியாம அதை மயக்க மருந்து கொடுத்து  திருடி வித்துருக்கான்.  வருசத்துக்கு ரெண்டு தடவை மட்டும் இப்படி பண்ணதால அவங்களுக்கு எதுவும் சந்தேகம் வரல.”

” அவன் சொன்னதை நம்பி  இவங்க எப்படி போனாங்கலாம்?” தோண்டி துருவி கேட்க.

” லட்ச ரூபா கொடுத்து வேலைக்கு கூட்டி வந்து, வசதியா வச்சி இருக்கானேனு யாரும் கேள்வி எதுவும் கேட்கல. சில பொண்ணுங்க வீட்டுல கூட சொல்லாம இருக்காங்க. அது இதை விட கொடுமை. ” தலையில் தட்டி கொண்டு சலிப்பாய் சொல்ல.

“கேக்கும் போதே அவனை அடிச்சு நொறுக்கணும்னு இருக்கு. நாதாரி பையன். மேலும் ……..சில கெட்ட வார்த்தைகளையும் திட்டி தீர்த்தவர்,  ” ஆமா அவன் மட்டுமா இதை பண்ணான் ” என்று சந்தேகமாய் கேட்க.

” அதெல்லாம் பத்து பேர்க்கும் மேல  சேர்ந்து பண்ணி இருக்காங்க. எல்லாரையும் நொறுக்கி எடுத்துட்டாரு கமிஷனர் சார். ” என்றாள் மிகுந்த மகிழ்ச்சியுடன்.

” அவரு கையில் கிடைச்சா விட்டுடுவாரா, துவைச்சு காய போட்டுருவாரே அந்த மனுஷன்.” என்றவர் தாடையில் கையை வைத்து கொண்டு மேலும் பேச்சை தொடர

” ம்ம்ம்!,  வெளிக்காயம் தெரியாம நொங்கி நொங்கு எடுத்துட்டாரு “

” சே.. ஹாஸ்பிடல இப்படி எல்லாமா நடந்துக்கறாங்க. கொள்ளையில போக..,”  அவனை அத்தனை திட்டியும் மனம் ஆறவில்லை அவருக்கு.

” அவனுக்கு காசு மேல ஆசை. ஈஸியா கிடைக்க என்ன வழின்னு பார்த்து ஆட்டைய போடுறாங்க. “

” நம்ம சாரு என்ன சொன்னாரு ? அவருக்கு இது எல்லாம் சுத்தமா பிடிக்காதே.”

” அவரும்  இதை சொன்ன நாள்ல இருந்து டென்ஷன்ல திட்டிட்டு இருக்கிறார். இனி கூலா சந்தோசமா இருப்பாரு.”

” அப்போ அந்த பொண்ணுகள என்ன பண்ணாங்கலாம்? ” கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளை ஒருவழியாக்கினார்.

” அவங்க யார் வீட்டுலயும் இதை பத்தி சொல்லாம சின்ன பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப கூடாதுன்னு எச்சரிக்கை செஞ்சு அனுப்பிட்டாரு.”

” பெத்தவங்க சும்மாவா இருப்பாங்க?  எப்படி தான் இதை எல்லாம் தாங்க போறாங்களோ ? ” அன்னையாய் மனம் உருகி பேச .

” எனக்கும் அத நினச்சா தான் கஷ்டமா இருக்குமா., இனி தானே அவங்களுக்கும் விஷயம் தெரியும். விளக்கமா சொல்லி புரிய வைக்கணும். அதான் பெரிய வேலை. ” நீண்ட பெரு மூச்சினை விட்டு தலையில் கை வைத்து ஆழ்ந்த மூச்சினை வெளியிட்டாள்.

” இதை எல்லாம் மனசுல போட்டு தான் ஓரு வாரமா தூங்காம உருண்டு கிட்டு இருக்கிறயா நீ? அவளின் அருகே வந்து கன்னம் வருடி,  ” என் தங்கம் ! ” என கையால் அவளை கொஞ்சி முத்தம் கொடுத்து , “இனிமே எதுனாலும் அம்மாட்ட ஓரு வார்த்தை சொல்லிரு. மனசுக்குள்ள வச்சி மருகாத சரியா? ”  என்றவரிடம் என்ன உரைப்பது என புரியாமல் ” ம்ம்ம்! ” என தலையை மட்டும் ஆட்டினாள். அவளின் மனதுயரம் எப்போதும் தீராதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!