Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 10.1

முதுகு தண்டின் மேலிருந்து, முதுகு தண்டு முடியும் இடம் வரை நீண்டு போடப்பட்டிருந்த தையலில் தழும்பு கோரமாய் தெரிய, 

அந்த குழந்தை எப்படியான வலியை அனுபவித்திருக்கும்.. என நினைத்தவளுக்கு கண்களில் அருவியாய் ஆர்ப்பரித்து பெருகியது கண்ணீர்.



Advertisement

‘குழந்தைக்கு வலித்திடுமோ..!’ என்று எண்ணி மெல்ல விரலால் முதுகில் வருடி விட்டவளுக்கு தொண்டைக்குள் ஏதோ அழுத்துவது போல ஆனது.

மலர் ஆயில்மெண்ட்டை ஓப்பன் செய்து.. சம்யுக்தாவின் விரலில் வைக்க, மயிலிறகில் வருடுவது போல.. இதமாய் அவனுக்கு அதை போட்டு விட தொடங்கினாள் முதுகு புறம் முழுவதும்.

Advertisement

Advertisement

அதோடு மெல்ல அவனை ஆசுவாச படுத்தும் விதமாய் மெல்லிய குரலில் அவள் ஏதேதோ பேச, மருந்து கொடுத்த இதத்தோடு அந்த பேச்சும் சேர குழந்தை விசும்பலை நிறுத்தியிருந்தான்.

அழுகை குறைந்ததும்.. மூச்சு விடுவதும் சீராக குழந்தை இயல்புக்கு திரும்ப ஆரம்பித்திருந்தான்.

Advertisement

அவளின் செயலையெல்லாம்.. கையாலாகாத தனத்துடன் வேடிக்கை பார்த்திருந்த ரியானை நெருங்கிய சந்தீப், 

“மலர் எதுவுமே செய்யாம.. முகுந்த் இப்படி ரியாக்ட் பண்ணறான்னா.. 

இன்னைக்கு மலர் மட்டுமில்ல, நேத்து நான் அவன்கிட்ட பேபி சிட்டர் பத்தி பேசும் போதும்.. அவன் பயந்த மாதிரி இருந்துச்சு.. 

அதுக்கு நிச்சயமா எதோ பலமான ரிஷன் இருக்கணும்.. இல்லையா..?” என்றான்.

அதற்கு ரியான், “ம்ம்.. நாங்க அங்கிருந்து வந்திட முடிவெடுக்க முக்கிய காரணமே அதான்..” என்றான் பெரும் வலியை நெஞ்சில் சுமந்தவனாய்.

“அப்படி‌ என்னடா ஆச்சு..?” என்றான், கலங்கி போயிருந்த தனது தம்பியின் கரத்தை பற்றிக்கொண்டு.

அந்த பற்றிதல், ‘நாங்க இருக்கோம் உனக்கு..’ என்ற எண்ணத்தை ரியானுக்கு எப்போதும் போல இப்போதும் கொடுக்க மெல்லிய குரலில் அங்கு நடந்ததை சொல்லத்துவங்கினான்.

“முகுந்தோட நான் இங்கிருந்து போனதும்.. இங்கே டாக்டர் சஜஸ்ட் பண்ண மாதிரியே.. ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சு.. கொஞ்ச நாள்ல சர்ஜரி பண்ணி.. அந்த ஹாஸ்பிடலில் கிட்டத்தட்ட சிக்ஸ் மன்த் அப்ஜர்வேஷன்ல இருந்தான்.

நா வேலைய ரிசைன் பண்ணா.. அவனோட ட்ரீட்மெண்ட் க்கு தேவையானதை செய்யற என் கம்பெனி அதை கேன்சல் பண்ணிடுவாங்க. 

என்னோட‌ சேவீங்ஸ் கொஞ்சம் இருக்குன்னாலும் முகுந்த் புல்லா க்யூர் ஆக.. எவ்வளவு தேவைப்படுமுன்னு உறுதியா சொல்ல முடியாது ன்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் நா அந்த ஹாஸ்பிடல்ல ட்ரிட்மெண்ட்டை கண்ட்ன்யூ பண்ணறது முடியாத காரியமாவும் ஆகிடுமுன்னு.. வொர்க் ஃப்ரம் ஹோம் மாதிரி மாத்திட்டு செஞ்சுட்டு இருந்தேன்.

எப்பவாவது ஒரு சில நாள் கம்பெனிக்கு போகனும். 

அவன் அப்ஜர்வேஷன்ல ஹாஸ்பிட்டல்ல இருந்த வரை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனா‌ குழந்தைய வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததற்கு பின்னாடி தான் சிக்கலே ஆரம்பிச்சது.

அந்த ஒரு சில நாள் அவனை பார்த்துக்க என்ன செய்யன்னு யோசிச்சு.. நா வேலைய ரிசைன் பண்ணறேன்னு சொல்லிட்டேன்.

அப்புறம் அவங்க பேசி.. ஓகே, இப்போதைக்கு நீங்க வீட்டுல இருந்தே வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமா டீமை லீட் பண்ணுங்கன்னு பர்மிஷன் கொடுத்தாங்க..” என சொன்னவன், 

அந்த நாளுக்கே சென்றது போல ஒரு‌ பெருமூச்சை இழுத்துவிட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“எல்லாமே ஸ்மூத்தா தான் போயிட்டு இருந்துச்சு.. நாங்க செஞ்ச ப்ராஜெக்ட் லான்ச் பண்ண ஒரு வாரம் இருக்க அப்போ தான் சில ஃபைல்ஸ் கரப்ட் ஆகியிருக்கறதே கண்டு பிடிக்க முடுஞ்சது.

அதை சரி பண்ண நான் ஆஃபீஸ் போயே ஆகனுமுங்கற கட்டாயம். 

அப்போ முகுந்துக்கு ஒரு வயசு தாண்டியிருந்துச்சு.. அவனால நகரவோ அவனாக எழுந்து உட்காரவோ முடியாதுங்கற நிலைமை. பேச்சும் ரொம்ப குறைவு தான். 

அவனுக்கு சரியான நேரத்துக்கு ஃபுட்டும் மெடிசனும் கொடுத்தே ஆகனும். 

அவ்வளவு நாளும் அவனுக்கு எல்லாமே நானே பார்த்து பார்த்து செஞ்சிட்டு.. அவனை யாரையோ நம்பி விடவும் மனசில்ல. 

அதே நேரம் என்னை நம்பி கொடுத்த பொறுப்பை சரியா செய்யனுமேங்கற கடமை உணர்வு வேற என்னை படுத்த ஆரம்பிச்சது.

வேற வழியில்லாம அங்கிருந்த ஏஜென்சி மூலமா.. ஒரு நானிய அப்பாயிண்ட் பண்ணினேன்.

கொஞ்சம் வயசானவங்களா இருந்தா.. பொறுமையா கொழந்தைய ஹேண்டில் பண்ணுவாங்கன்னு நம்புனது என்னோட முதல் சறுக்கல்.

அவங்க காலைல வர்றதுக்குள்ள முகுந்துக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சு வச்சிட்டு, குழந்தையையும் குளிக்க வச்சு சாப்பிட வச்சிட்டு தான் அவங்ககிட்ட ஒப்படைச்சிட்டு போவேன். 

எனக்கு குக் பண்ணும் போது அவங்களுக்கும் சேர்த்தே குக் பண்ணியும் வச்சிடுவேன். 

நா அவங்க மேல அக்கறையா இருந்தா.. பதிலுக்கு அவங்க என் குழந்தைய அக்கறையா பார்த்துப்பாங்கன்னு நம்பினது எவ்வளவு மடத்தனமுன்னு கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிஞ்சது.

நான் வர்ற வரை அவனுக்கு வேணுங்கறத பார்த்தா மட்டும் போதும். 

வேற எதுவும் செய்ய வேண்டாம்.. ன்னு அவங்களுக்காக எல்லாமே செஞ்சேன்.

அவங்களும் ரொம்ப பாசமா அவனை பார்த்துக்கற மாதிரி தான் இருந்துச்சு. 

அந்த பிரச்சினை முடுஞ்சதும் கம்பெனி எப்பவும் போல வொர்க் பண்ணலாமேன்னு என்னை ஃபோர்ஸ் பண்ண.. அந்த லேடி மேல இருந்த நம்பிக்கையில பையனை அவங்ககிட்ட விட்டுட்டு ரெகுலரா ஆஃபீஸ் போக ஆரம்பிச்சேன்.

காலைல போனா.. நைட் நான் வரும் வரை அவங்க மட்டும் தான் வீட்டுல. 

இடையில அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வந்துட்டு போக முடியாது.

ஒரு மாசம் எந்த சிக்கலும் இல்லாம இருக்க நானும் என்னோட வேலைல மூழ்கிட்டேன். 

நைட் நான் வர்ற நேரம் மோஸ்ட்லி அவன் தூங்கிடறதால.. எனக்கும் ஆரம்பத்துல கண்டுபிடிக்க முடியல.

அப்புறம் நாள் போக போக தான் முகுந்த் ரொம்ப டல்லா ஏதோ மாதிரி இருக்கற மாதிரி எனக்கு ஃபீல் ஆச்சு. 

கேட்டாலும் பதில் சொல்ல தெரியல அந்த குழந்தைக்கு. என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு அமைதியா இருந்துட்டான். 

அந்த லேடிகிட்ட கேட்டதுக்கு, ‘அவன் உங்கள தான் மிஸ் பண்ணறான்.. அதான் டல்லா இருக்கான்..’ ன்னு சொன்னாங்க. 

நானும் அதை அப்படியே நம்பிட்டேன். 

ஏன்னா, பிறந்தது முதல்.. என் கையிலயே இருந்த பிள்ளைய விட்டுட்டு வெளியே வேலைக்கு போயிடற எனக்கும் அந்த ஃபீல் இருந்துச்சே.. சோ, அவங்க மேல சந்தேகம் வரல.

முடுஞ்ச வரை அவன் கூட இருக்க முடியுமான்னு ட்ரை பண்ணினேன். 

பட், நோ யூஸ். சில முக்கியமான ப்ராஜெக்ட்ல மாட்டிக்கிட்ட நான் எவ்வளவு முயற்சி பண்ணினாலும்.. அவன் தூங்கும் போது தான் அவன்கிட்ட இருக்க முடுஞ்சது.

இப்படியே போயிட்டு இருக்கும்போது தான் ஒருநாள்.. என்னோட கம்பெனி ஒரு ப்ராஜெக்ட் விசயமா க்ளைண்டோட மீட்டிங் அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க.

அது சம்மந்தமான பென்டிரைவ் வீட்டுல மறந்து வச்சிட்டு ஆஃபீஸ் போயிட்டேன். 

அது அந்த கடவுள் சித்தம் ன்னு அப்புறம் தான் புருஞ்சது.

மதியம் தான் அந்த மீட்டிங் ஏற்பாடு ஆகியிருந்துச்சு. அந்த ப்ளேஸூம் நான் ஸ்டே பண்ணியிருக்கற இடத்துக்கு பக்கமா இருந்ததால காலைல வேலைய பார்த்துட்டு, 

மதியம் நெருங்க வீட்டுக்கு போய் அதை எடுத்துட்டு.. நேரா மீட்டிங் ஸ்பார்ட் வந்திருறேன்னு சொல்லி என்கூட வர இருந்தவங்கள அனுப்பிட்டு, நா வீட்டுக்கு வந்து பார்த்தா..” என்றவன் வலியை விழுங்க முயன்று.. எச்சில் விழுங்கி,

“என்னோட குழந்தை.. நடு ஹால்ல.. கண்கள் பசி மயக்கத்துல சொருகி கிடக்க.. பாத்ரூம் போய் அந்த அசிங்கத்துல கிடக்கிறான்.   

பசிக்குதுன்னு வாய் திறந்து சொல்லக்கூட முடியாத குழந்தைடா அவன்.. அவனைப்போய்..” என்றவனின் விழிகள்.. மகனையே பரிவோடு பார்த்திருக்க, 

இதுவரை இருந்த பரிவு நீங்கிய கோபக்குரலில்,

“அவன் அந்த நிலைமையில இருக்கறத கூட பார்க்காம.. அந்த லேடி கூலா ஹால்ல டீவிய போட்டு பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கு. 

எப்படியும் நான் நைட் வரை வரப்போவது இல்லைங்கற நம்பிக்கை கொடுத்த திமிர்ல.. செய்ய வந்த வேலையை சரியா செய்யாம.. கேர்லஸ்ஸா இருந்திருக்காங்க.

டெய்லியும் நா வர்றத கணக்கு பண்ணி.. அவன ரெடி பண்ணி பெட்ரூம்ல விட்டிருக்காங்கன்னு அவங்கள மிரட்டி கேட்கவும் ஒத்துக்கிட்டாங்க.

அவங்க சரியா ஃபுட் கொடுக்காம.. மருந்து எடுக்காம இருந்துல தான் குழந்தை அவ்வளவு டல்லா இருந்திருக்கான். 

நல்லவேளை காலைல நான் சாப்பிட வச்சிட்டு தான் கிளம்பறதால.. கொஞ்சமாச்சும் அவனால சமாளிக்க முடுஞ்சிருக்கு.

அந்த மருந்து சரியா கொடுக்கலன்னா.. அவனால பெயின் தாங்க முடியாது. 

அதோட ஃபுட்டும் கரெக்ட்டா கொடுத்து தான் மருந்து கொடுக்கனும்.. இல்லைன்னா வயிறு புண்ணாகிட வாய்ப்பு இருக்கறதாகவும்.. டாக்டர் சொன்னது எல்லாமே.. அவங்க கிட்ட அவ்வளவு தூரம் படுச்சு படுச்சு சொல்லியும்.. அவங்களோட அலட்சியத்தால, என் மகன் பட்ட வேதனை..” என்றவனின் வார்த்தையை கேட்டிருந்த மற்றவர்களுக்கு, 

அந்த பெண்மணியின் வயதிற்காக கூட கொண்டு மரியாதை கொடுக்க தோன்றாது, “ச்சீ.. இவ எல்லாம் பொண்ணா..? அவள கண்டம் துண்டமாக வெட்டி போட்டாலும் தப்பில்லை..” என்ற எண்ணமே எழுந்தது.

“அன்னைக்கு அவன அந்த கோலத்துல பார்த்துட்டு, அந்த லேடிய திட்டி அனுப்பினாலும்.. போன் மேல போன்.. கிளைண்ட் பார்க்கற போகலைன்னு.

வேற வழியில்லாம, அவனை சுத்தம் பண்ணி.. அவனுக்காக நான் ஏற்கனவே செஞ்சு வச்சிருந்ததை பேக் பண்ணிட்டு அவனோட தான் அந்த இடத்துக்கு போனேன்.

பென்ட்ரைவ்ல இருந்த டிட்டெய்ல்ஸ் வச்சு.. கூட வந்தவங்கள மேனேஜ் பண்ண சொல்லிட்டு.. நான் முகுந்தை பார்த்துக்கிட்டேன்.

வீட்டு பக்கம், கூட வந்தவங்க ஹெல்ப் ன்னு இருந்ததால அன்னைக்கு சமாளிச்சேன். 

ஆனா அதை தொடற முடியாதேன்னு இருந்தப்ப தான், என் கொலிக் ஒரு பொண்ணைப்பத்தி சொல்லி, 

ரொம்ப கஷ்டப்படுறாங்க.. நீ அவங்களை குழந்தைய பார்த்துக்க ஏற்பாடு செய். 

அவங்களோட பணத்தேவைக்காகவாவது நீ சொல்லறத கண்டிப்பா செய்வாங்கன்னு சொல்ல, 

நானும் அவங்கள நேர்ல பார்த்து, முன்னெச்சரிக்கையா சிசிடிவி எல்லா இடத்துலையும் செட் பண்ணி, அதை நான் எப்பவும் மானிட்டர் பண்ணுவேன்னு சொல்லி தான் வேலைக்கு சேர்த்தேன். 

சம்பளம் ரெண்டு மடங்கா வேணுமின்னாலும் வாங்கிக்கோ.. எனக்கு, என் பையனை நல்லவிதமா பார்த்துக்கறது தான் முக்கியமுன்னு அவங்க கிட்ட சொல்லிட்டேன்.

அப்பவும் நான் இரண்டாவது முறையா சரக்கிட்டேன்னு அப்புறம் தான் தெரிஞ்சது..” என்றவனின் வருத்தம் அங்கிருந்தவர்களுக்கு புரிந்தாலும்,

‘தவற விட்டதை சரி செய்துவிட்டானே.. அப்புறம் எப்படி மீண்டும் தவறு நடந்திருக்கும்..?’ என்ற எண்ணம் தோன்ற,

“அதான் எல்லா.. ஏற்பாடும் பண்ணிட்டு தானே போனே..! அப்புறமும் எப்படிடா..?” என்ற சந்தீப்பின் கேள்விக்கு.. 

ரியான் சொன்ன பதிலில், அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருந்தனர் அங்கிருந்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!