Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 14

பகுதி 14

சம்யுக்தா வேலையை முடித்து அனுப்பியதையே வீடு வந்துதான் பார்த்தான் ரியான். 



Advertisement

இப்போது புதிதாய் ஆரம்பித்த ப்ராஜெக்ட்டின் ஆரம்ப கட்ட பணிகள் பற்றிய கலந்தாய்வு முடித்து அவன் முகுந்தோடு வீடு வந்து சேரவே நேரமாகியிருக்க.. 

வந்ததும்.. குழந்தை சாப்பிட எதுவாய் அவசரமாய் சமையலை முடித்து அவனை சாப்பிட வைத்த பிறகே.. அவன் அதை கவனிக்கும் படி இருக்க அது வந்த நேரத்தை கண்டவனுக்கு ஒரே யோசனை.

Advertisement

Advertisement

“இந்த பொண்ணு ஆஃபிஸ்ல இருந்து வொர்க் முடுச்சு‌ எனக்கு சென்ட் பண்ணாங்களா..? இல்ல.. வீட்டுக்கு போய் முடுச்சாங்களா..?” என்ற சிந்தனையோடே அதை சரி பார்த்தவனுக்கு திருப்தியே.

“பரவாயில்லையே.. ஒரே நாள்ல நம்ம எதிர்பார்க்கறதை தனியா செய்ய முடியுதே இந்த பொண்ணால.. வெரி பிரிலியன்ட் கேர்ள் தான்..” என மெச்சிக்கொண்டவன்.. எப்போதும் போல தனது அடுத்த நாளைக்கான வேலையை செய்து முடித்தான்.

Advertisement

முகுந்தும் பகலில் சரியாக உறங்காததால் இன்று சீக்கிரமே உறங்க துவங்கியிருக்க.. ரியானும் நேற்று போல அல்லாமல் விரைவாக உறங்க வந்திருந்தான் தன் நடைமுறைகளை வழக்கம் போல முடித்து. 

***

மறுநாள் காலை தன் முன் வந்து நின்ற சம்யுக்தாவை கண்டவன், 

“என்ன ஆச்சு மிஸ். சம்யுக்தா.. எனி ஹெல்த் இஸ்யூ..?” என்றான் யோசனையாக.

மனதிலிருந்த அழுத்தம்.. இரவில் அழுதது.. எல்லாம் சேர, காலை கண்விழிக்கும் போதே முகமெல்லாம் சிவந்து போயிருந்தது அவளுக்கு. 

இனியாள், “வேலைக்கு லீவ் எடுத்துட்டு, இன்னைக்கு ரெஸ்ட் எடு..” என எவ்வளவோ தடுத்தும் பிடிவாதமாய் வந்திருந்தாள் வேலைக்கு.

ஏனெனில் மேடமின் தீர்மானம் அவ்வளவு உறுதியாய் இருந்ததே…!

அவளின் அந்த முகம் கண்டு தான் ரியானும் கேட்க, “நத்திங் சார்.. நீங்க.. நான் செண்ட் பண்ண மெயில் செக் பண்ணிட்டீங்களா..? எனி சேன்ஜஸ்..?” எனக்கேட்க,

“பர்பெக்ட்டா இருந்தது மிஸ். சம்யுக்தா. 

பட்.. உங்கள பார்த்தா நீங்க நார்மலா இருக்கற மாதிரி தெரியலையே.. எனி இஸ்யூ.. ப்ளீஸ்.. மறைக்காம சொல்லுங்க..” என்றான் அக்கறை கலந்த மென் குரலில்.

சம்யுக்தாவை முதல் முறை கண்டது முதல்.. அவளின் தன் மகன் மீதான அக்கறை, அவனுக்கு அவள் மீது ஒரு வித பாச உணர்வை விதைத்திருந்ததே..! 

அதிலும் நேற்று தன்னை நாடும் அளவு.. அவளையும் மகன் நம்பி போகிறான்.. எனும் போது அந்த உணர்வு இன்னும் மேலோங்கி தான் இருந்தது.

அதனால் தான் அவனின் குரலில் அத்தனை கனிவும், அக்கறையும்..

அவனின் அந்த விதமான பேச்சு, மீண்டும் அவளை நேற்றைய நாளுக்கு இழுத்துச் செல்ல அவளின் தொண்டைக்குழி ஏறி இறங்க கண்கள் லேசாக கலங்க தொடங்கியது.

அவளின் முக மாற்றத்தை கவனித்துக்கொண்டிருந்த ரியான், “மிஸ். சம்யுக்தா என்னம்மா.. என்ன ஆச்சு..?” என்றான் பதற்றமாக அவளருகே வந்து.

“அது முகுந்த்.. முகுந்த்..” என்றவளுக்கு அடுத்து என்ன சொல்ல.. என திக்க.. அவளின் கண்களோ கண்ணீரை பொழிந்தது.

“ஓ.. மை காட்.. நேத்து நடந்ததை நினைச்சு இன்னுமா அழுதுட்டு இருக்கே நீ..! 

அவன் அதை அப்பவே மறந்துட்டு ஜாலியா இருக்கான். நீ என்னன்னா..” என சிறு புன்னகையுடன் கனிவாகச் சொல்ல,

அழுகை நின்றாலும் முகம் இன்னும் வாடி தான் இருந்தது அவளுக்கு.

“இங்கே பாரும்மா.. அவன் அந்த கஷ்டத்தை எல்லாம் கடந்து ரொம்ப தூரம் வந்துட்டான். 

இனி அவனுக்கு அப்படி ஆக விடாம இருக்க தானே இத்தனையும் செஞ்சிருக்கேன். 

சோ, அதை நினைச்சு வருத்தப்படாதே சரியா..?

நான் கூட இப்படி ஃபீல் பண்ணல.. நீ என்னடான்னா..” என சிரிப்போடு அவளின் தலையை தன் உள்ளங்கை கொண்டு பிடித்து ஆட்டி சொல்ல,

“அக்கா சொன்னா..” என்றாள் சம்யுக்தா இதழ் சுழித்து.

“வாட்..?” என்றான் புரியாமல்.

“அது.. நேத்து வீட்டுக்கு போய் அழுதேனா அப்போ அக்காவும் இதையே தான் சொன்னா. 

அவனை பெத்தவரு கூட இப்படி இருக்க மாட்டாருன்னு..” என இனியாள் சொன்னதை சொல்ல,

“பரவாயில்லையே.. உன்னோட அக்கா ப்ராக்டிக்கலா யோசிக்கறாங்களே.. குட்..” என்றான் மெச்சுதலாய்.

“ம்ம்.. அக்கா எப்பவுமே எதையும் அடுத்தவங்க பக்கமிருந்து யோசிப்பாங்க. 

அதனால தான் அப்படி.. ஆனா, என்னால அந்த விசயத்தை..” என சொல்லும் போதே மீண்டும் முகம் வாட,

“ஏய்.. முகுந்த் விட நீ தான் குழந்தை மாதிரி பிகேவ் பண்ணற..” என்றவன்,

“அவனைப் பாரு.. நீ பேசறத கேட்டு எப்படி‌ உட்கார்ந்து இருக்கான்னு..” என ரியான்‌ சொன்ன பிறகே, 

அந்த அறையில் அந்த குட்டி இளவரசனும் இருப்பதை கண்டாள் சம்யுக்தா.

அந்த அறையிலிருந்த ஷோஃபா ஒன்றில் சாய்ந்து அமர்ந்து சம்யுக்தா வந்தது முதல் இப்போது வரை நடந்ததை பார்த்து கொண்டிருந்தான் குழந்தை.

அவனை கண்ட நொடி அதுவரை இருந்த சுணக்கம் தாண்டி கண்கள் பிரகாசிக்க, “முகுந்த்..” என்று அழைத்தபடி அவனருகே வேகமாய் சென்றாள்.

அவனும் அவளை கண்டு சிரிப்போடு கை தூக்க.. அவனை அள்ளி தன் மடியில் வைத்தவள், அவன் அமர்ந்திருந்த அந்த சோஃபாவில் அமர்ந்தாள்.

“ஆர்‌ யூ ஓகே நவ்..?” என்று முகுந்தின் முகத்தை பார்த்து அவள் கேட்க,

அவன் அவளின் முகத்தை உற்று நோக்கி, “ஒய் ஆர்‌ யூ க்ரையிங்..?” என அவளை விசாரித்தான்.

“அது.. அது வந்து கண்ணுல தூசி..” என்றாள் சமாளிப்பாக.

“ஓ.. பட் ஐ நோ.. யூ ஆர் லைய்யிங்.. ஐ தாட் யூ ஆர் லைக் ஏ பேபி..” என்றான் பிள்ளை குறும்பாக.

“பேபி..? நானா..! உன்னை..” என சம்யுக்தா அவனை விளையாட்டாய் முறைக்க,

“எஸ். ப்பா.. நீ சொல்லு.. இதூ பேபி டானே..?” என்றான் தந்தையை துணைக்கு அழைத்து.

“ஆமாடா கண்ணா, பேபி தான்..” என்றான் அவனும் சிரிப்போடு.

“பாடு. ப்பா.. சொல்லி.. நீ பேபி டா..” என்றான் குஷியாக.

“சார்‌.. என்ன நீங்க இப்படி உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணறீங்க. 

என்னை பார்த்தா பேபி மாதிரியா இருக்கு..?” என்றாள் ரோசமாக.

“உன்னை பார்த்தா பேபியா ஃபீல் ஆகாது தான்.. ஆனா, உன் கூட பழகி பார்த்தா.. என் பையனே பெட்டர் ன்னு தோணுதே.. வாட் டு டூ..” என தனது இரு தோளையும் குலுக்கி கிண்டலாக சொல்ல,

“சார்..” என்றாள் உதட்டை பிதுக்கி இழுவையாக.

அதில் வாய்விட்டு சிரித்த ரியானோடு முறைக்க முயன்ற சம்யுக்தாவும் இணைந்து கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!