Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 14.1

அந்த சிரிப்பு சில நொடிகள் நீடித்த பின்.. முகுந்தை பார்த்தவரே ரியானிடம், “இன்னைக்கு இங்கே இருக்கான்..‌?” என்றாள் கேள்வியாக.

“அதுவா.. அது எங்க லிட்டில் மாஸ்டருக்கு ஜெட் லாக் போயிடுச்சு. 



Advertisement

சோ, நார்மல் மோடுக்கு வந்திட்டார்..” என்றான் ரியானும் இலகுவான குரலில்.

“ஜெட் லாக்..” என யோசித்தவளை கண்ட ரியான்,

Advertisement

Advertisement

“நீ எங்கள பஸ்ட்டைம் பார்த்த அன்னைக்கு தான்.. நாங்க இண்டியா வந்து சேர்ந்தோம்.

சார்.. ஜெட்லாக்ல எழுந்திருக்காம அடம்பிடிக்க தான்.. நான், அவனை போர்ஸ் பண்ணி எழுப்பிட்டு இருந்தேன்.. ஃபுட்டும் மெடிசினும் கொடுக்க..” என்று சொன்ன பிறகே.. அன்று அவசரப்பட்டு விட்ட வார்த்தைகள் நினைவு வர,

Advertisement

“சாரி சார்.. அது தெரியாம அன்னைக்கு..” என்றாள் அசட்டு சிரிப்போடு.

“அன்னைக்கு எம்டி ங்கற மரியாதை இல்லாம.. என்ன என்ன பேச்சு பேசற நீ..? 

இடியட், ஆயப்பா.. மைதா மாவு.. ன்னு எனக்கு விதவிதமா பேர் வச்சதும் இல்லாம, டை அடிச்சிருக்கேன்னு சொல்றே..!” என போலியாய் அதட்ட,

“அச்சோ.. சாரி சார். 

நிஜமா நா உங்களுக்கு தமிழ் தெரியாது.. நீங்க எதோ பாரினர் மாதிரி வெள்ளையா இருக்க.. அப்படி பேசிட்டேன்..” என்றாள் குற்ற உணர்வோடு.

அது அவளின் முகத்தை மீண்டும் சோகமாய் காட்ட, “ஏய் பேபி.. நா சும்மா உன்கிட்ட கலாட்டா பண்ண தான் சொன்னேன். 

அதெல்லாம் அப்பவே மறந்தாச்சு..” என்றான் பாசமாக.

அவனின், ‘பேபி..’ என்ற அழைப்பில் திகைத்து விழித்த சம்யுக்தா, அடுத்து அவன் தன்னிடம் இப்படி கூட விளையாட்டாய் பேசுவானா..?! என்ற ஆச்சர்யமாக உணர்ந்தாள்.

“என்ன.. இப்படி ஷாக் ரியாக்ஷன் காட்டறே பேபி..?” என அவளின் அருகே வந்து அவனும் அமர்ந்த படி கேட்க,

“இல்ல.. நீங்க இந்த கம்பெனி எம்டி.. நா சாதாரண வொர்க்கர்.. நீங்க என்னை இப்படி கூப்பிடறது.. அதான் ஷாக்..” என்றாள் தயக்கமாய்.

“தொழில் முறை தாண்டி.. உனக்கும் எனக்கும் ஏதோ ஒரு பாசப்பிணைப்பு இருக்குன்னு என் உள்ளுணர்வு சொல்லுது. 

மேபி.. என் பையன் மேல எந்த ஆதாயமும் எதிர்பார்க்காம நீ காட்டற இந்த அக்கறை கூட அதுக்கு காரணமா இருக்கலாம். 

அந்த உணர்வு கொடுத்த தாக்கத்தால தான் நான் அப்படி கூப்பிட்டேன்.

உனக்கு அது ஆக்வேடா ஃபீல் ஆனா சொல்லு நான் கூப்பிடல. 

பட், என்னை பொறுத்தவரை நீ எனக்கு முகுந்த் மாதிரி இன்னொரு பேபி தான்..” என்றான் ஆசையாய் அவளின் தலை கோதி.

அதில் அவள் சிறுவயதில் உணர்ந்த அவளின் தந்தையின் ஸ்பரிசத்தை மீண்டும் உணர முடிந்தது. 

அது கொடுத்த ஆனந்தத்தோடு, “தேங்க்ஸ்..” என்றாள் கண் கலங்க இதழில் புன்னகையோடு.

“ஓகே.. இப்படியே பேசிட்டு இருந்தா வொர்க் யார் பார்ப்பா..? கெட் அப்..” என நொடியில் தனது பதிவிக்கான அதிகார தோரணையில் ரியான் சொல்ல,

மெல்லிய புன்னகையோடு முகுந்தின் தலையில் முத்தமிட்டு, அவனை மீண்டும் அங்கேயே அமர்த்திவிட்டு சம்யுக்தா எழ.. டேபிளை நோக்கி சென்றனர் இருவரும்.

முகுந்தும் சமத்தாய் தனது டேப்-ல் ரைம்ஸ் போட்டு.. அது மற்றவரை தொந்தரவு செய்யாதபடி வால்யூமை செட் செய்து அதில் மூழ்கி போனான்.

தனது இருக்கையில் வந்தமர்ந்த ரியான், “நேத்து நீ முடுச்சிருந்த கோடிங் பார்த்து செமையா இம்ப்ரஸ் ஆகிட்டேன். 

யூ ஆர் ரியல்லி ப்ரியண்ட்.

எப்படி.. அதை யாரோட ஹெல்ப்பும் இல்லாம முடுச்சே..?

நான் நைட் வீட்டுக்கு போய் தான் பார்த்தேன். 

நீயும் அதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் அனுப்பியிருந்தே..! 

இப்ப இருந்தே ஓவர் டைம் பார்க்க ஆரம்பிச்சாச்சு.. குட்..” என்றான் பாராட்டோடு சிறு புன்னகை சிந்தி.

“நீங்க எக்ஸ்ப்ளைன் பண்ணதே அதை எப்படி பண்ணனும் அப்படிங்கறதை தெளிவா புரிய வச்சதே..! 

சோ, அதை நல்லா பண்ணியிருக்கேன்னா.. அதுக்கு ஃபுல் கிரடிட்டும் உங்களுக்கு தான்..” என்றாள் தன்னடக்கத்தோடு.

“ம்ம்.. இதை பாராட்டா எடுத்துக்கவா..? இல்ல.. ஐஸ் ன்னு எடுத்துக்கவா..?” என ஒற்றை புருவத்தை உயர்த்தி ரியான் கேட்க,

“எப்படி எடுத்துக்கிட்டாலும் ஓகே தான்..” என்றாள் சம்யுக்தாவும் தனது தோளை குலுக்கி அலட்டாமல்.

அவளின் அந்த பாவனையில் சிரித்தவன், “க்யூட் பேபி..” என அவளுக்கு கேட்காதபடி முணுமுணுத்துவிட்டு,

“நேத்து வீட்டுக்கு போய் முடுச்சு அனுப்பினது ஓகே. 

ஆனா.. இனி இந்த மாதிரி செய்யறது உன்னோட டீம் டிஎல் தான் முடிவு செய்யனும். 

ஏன்னா, இன்னைக்கு நீ டீம்ல ஜாயின் ஆகிடுவீயே.. சரியா..?” என்று ரியான் சொல்ல,

“அது.. நேத்தே நான் இங்கே இருந்து தான் செஞ்சேன்..” என்றாள் அசால்ட்டாக.

“வாட்..! அவ்வளவு நேரம் இங்கே தான்.. தனியா இந்த ஃப்ளோர்ல இருந்தியா..?” என்றான் அதிர்ச்சியாய்.

“ம்ம்..” என அவள் தலையசைக்க,

“ரிசப்ஷனிஸ்ட்டுக்கு நீ இங்கே இருந்து அவ்வளவு நேரம் வொர்க் பண்ணறது தெரியுமா..?” என புருவம் சுருங்க அவளை கூர்ந்து பார்த்தபடி கேட்க,

“இல்லை..” என தலையசைத்தாள்.

அதில் கடுப்பாகி, “ஷிட்..” என வாய்க்குள் சொன்னவன், பல்லைக்கடித்தபடி,

“இங்கேயே இருந்து முடின்னு நான் சொல்லவே இல்லையே..? 

அதை ட்ரை பண்ணுன்னு மட்டும் தானே சொன்னேன். 

அதோட முகுந்த் இஸ்யூல அதை நான் ஃபோர்ஸ் பண்ணக்கூட இல்லையே..?” என்றான் கடுமையாக.

“அது..” என்றவள், சற்று தயங்கி நேற்று இருந்த மனநிலை.. அதனால எடுத்த தீர்மானம் பற்றி சொல்ல..

அவளின் முகுந்த் மீதான பாசம் அவனை பிரம்மிக்க தான் வைத்தது. 

ஆனால், அதே நேரம் இது என்ன முட்டாள்தனமான முடிவு.. என்று தோன்ற,

“இப்படி‌ ஒரு நாலு பேர் மட்டும் என் கம்பெனிக்கு கிடச்சா.. போதும்.. பேபி, நா வேலையே பார்க்காம பணம் பார்த்துட்டு இருக்கலாம்..” என நக்கலாய் சொன்னவன்,

“சீ பேபி.. உன்னை வேலை பார்க்க சொன்னேன் தான்.. உனக்கு அசைன் பண்ணறதை முடுச்சு கொடுக்க வேண்டியதும் முக்கியம் தான்.. ஆனா, அதை ப்ராப்பரா இன்பார்ம் பண்ணிட்டு தானே செய்யனும்..?

நேத்து, நானும்.. சந்தீப்பும் இந்த ஃப்ளோர் வரவே இல்லை. 

எங்களை தவிர வேற யாரும் இங்கே வரவும் மாட்டாங்க.

அப்படி இருக்கும் போது.. நீ இங்கே இருக்கறது தெரியாம.. இந்த ப்ளோர் லைட்ஸ் அண்ட் டோர்ஸ் எல்லாம் ஷட்டவுன் பண்ணியிருந்தா.. என்ன ஆகறது.. சொல்லு..?” என்றான் கண்டிப்புடன்.

அவன் சொன்ன பிறகே.. அதன் வீரியம் புரிந்த சம்யுக்தா, “சாரி.. இனி இப்படி தனியா இருக்கற மாதிரி இருந்தா இன்ஃபார்ம் பண்ணாம இருக்க மாட்டேன்..” என்றாள் தான் செய்த தவறை உணர்ந்தவளாக.

“குட், இனி எதையும் இப்படி‌ எடுத்தோம் கவிழ்த்தோமுன்னு செய்யாதே..” எனச்சொல்ல,

“ம்ம்..” என தலையசைத்தவளை கண்டு சிரித்தவன்,

“நல்லா ஆட்டற பேபி தலைய.. உங்க நேட்டிவ் தஞ்சாவூரா..?” என தீவிரமான குரலில் கேட்க,

“இல்லையே.. ஏன் கேட்கறீங்க..?” என்றாள் யோசனையோடே..

“அங்க தானே தலையாட்டி பொம்மை ஃபேமஸ் அதான்..” என்று நமுட்டு சிரிப்புடன் சொல்ல,

“யூ.. என்னோட பாஸ் ன்னு பார்த்தா.. என்னைய கலாய்க்கறதுலையே குறியா இருக்கீங்க..” என்று கோபமாய் பேச ஆரம்பித்தவள் சிணுங்களாய் முடித்தாள்.

“ஜோக்ஸ் அபார்ட்.. இனி இப்படியான ரிஸ்க் எடுக்காதே.. சரியா..?” என அறிவுறுத்தியவன்,

நேற்றைய தினம் கலந்தாய்வு செய்ததன் விளைவால் புது ப்ராஜெக்ட்டில் இவளின் பங்களிப்புக்கு எதை.. எப்படி செய்ய வேண்டும்.. என்பதை நேர்த்தியாய் தெளிவாய் விளக்கினான்.

அவளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்தவன் தனது போனில் இருந்து அந்த டீம் டீஏலை அழைத்து, “என்னோட கேபின் வாங்க..” என உத்தரவிட்டான்.

அவர் வந்ததும், “மிஸ்டர். சபேசன்.. இது மிஸ் சம்யுக்தா.. உங்க டீம்ல நியூவா ஜாயின் ஆக போறவங்க..” என அறிமுகம் செய்ய..

“ஹலோ சார்..” என சம்யுக்தா மரியாதை நிமிர்த்தமாக புன்னகையோடு கை நீட்டி சொன்னதும்,

அவளை அலட்சியமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்த சபேசன், 

அவளுக்கு பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ரியானிடம் திரும்பி, எதோ.. அந்த ப்ராஜெக்ட் சம்மந்தமாக பேச ஆரம்பித்தார்.

அதில் லேசான சுணக்கம் எழுந்த போதும்.. அவரின் பதவிக்கு மரியாதை தந்து அமைதியாய் நின்றாள் சம்யுக்தா.

சபேசனுடன் பேசிக்கொண்டு இருந்தாலும் அவனின் சம்யுக்தா மீதான அலட்சியத்தன்மையை பார்த்த படி தான் இருந்தான் ரியான்.

பேசி முடித்ததும்.. வெளியே செல்ல தயாரான சபேசனை, “மிஸ்டர் சபேசன்.. இது உங்களுக்கான பஸ்ட் வார்னிங்.. 

உங்களுக்கு கீழே வேலை பார்க்கறாங்க அப்படின்னா.. அவங்க உங்களுக்கு அடிமையும் இல்லை.. அவங்களுக்கு நீங்க அரசனும் இல்லை.. 

சோ, கிவ் ரெஸ்பெக்ட் டூ ஆல்..” என்றான் அழுத்தமான அதிகாரக்குரலில்.

அதில் சபேசனின் முகம் கருத்துப் போனது. 

இங்கே வந்த போதும் சரி, இதற்கு முன்பு வேலை பார்த்த இடத்திலும் சரி.. இப்படி யாரும் அவனிடம் நடந்து கொண்டது இல்லை. 

முதல் முறை.. அதுவும், புதிதாக வேலைக்கு வந்த பெண்ணிற்காக என்னை எச்சரிக்கை செய்வதா..? என்ற ஈகோ தலை தூக்கினாலும்.. 

அந்த கம்பெனியுடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மீறி வேலையை விட்டு செல்லவும் முடியாது.. 

அதே போல இங்கே கொடுக்கும் சம்பளத்திற்கு மீண்டும் இதே போல வேலை தேடிப்பிடித்து.. அதில் சேர்வது என்பது இப்போதைக்கு இயலாத ஒன்று.. என்பதால் வேறு வழியின்றி, “சாரி சார்.. ஐ வில் நெவர் டூ இட் எகெயின்..” என்றான் பணிவாகவே.

“ம்ம்.. தட்ஸ் குட்..” என அவனிடம் சொன்ன ரியான், 

“பேபி.. நீ அவர் கூட போய் ஜாயின் ஆகிக்கோ. 

ஈஃப் எனி டவுட் கால் பண்ணு.. சரியா..?” என்றான் பரிவாக.

“கண்டிப்பா..” என புன்னகையோடு சொன்னவள் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு முகுந்திடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் சபேசனுடன்.

ரியானின், “பேபி..” என்ற அழைப்பும், அவளுக்கு அவன் ஆதரவாக பேசிய விதமும், ஏற்கனவே புதிதாக சேர வந்த பெண்.. இத்தனை பெரிய ப்ராஜெக்ட்டில் சேர்வதா..?! என்ற பொறாமையில் இருந்தவர்களுக்கு பெரும் தீனியாகப்போவதை ரியான், சம்யுக்தா இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை.. 

அது தெரியும் போது…?!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!