Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 18

பகுதி 18

புதிதாக ஆரம்பிக்கும் ப்ராஜெக்ட் பற்றிய மீட்டிங், வேறு சில கம்பெனிகள் கொடுக்க போகும் ப்ராஜெக்ட் சம்மந்தமான கொட்டேஷன் பற்றிய டிஸ்கஷன்.. அதோடு முகுந்த்.. என ரியானுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதாமல் இருக்க, 



Advertisement

சம்யுக்தாவை பார்க்க என்ன.. போனில் கூட பேச முடியாத அளவு வேலை நெட்டித்தள்ளியது.

சம்யுக்தாவும் இப்போது வேறு டீமிற்கு மாற்றப்பட்டிருக்க, அவளாலும் இடையில் வந்து பார்க்க முடியாமல் போனது. 

Advertisement

Advertisement

அவளும் வேலை.. வீடு.. வெண்பா.. இரவானால் இனியாளின் மடியில் படுத்து அன்றைய கதையை ஒப்பிப்பது.. என காலம் கடத்தி கொண்டிருந்தாள்.

சமீபமாக ரியானை நேரில் சந்திக்காததால்.. அவனை பற்றிய பேச்சு குறைந்திருக்க இனியாளுக்கும் சம்யுக்தா சொல்லும் கதையை சுவாரசியமாக கேட்டிருந்தாள் முன்பை போலவே.

Advertisement

அது என்னவோ.. முதல் கோணல் முற்றும் கோணல் போல அவன் மேல் வந்த கோபம் காரணமே இல்லாமல் வளர்ந்து இருந்தது. 

அதனாலேயே சில நேரம் சம்யுக்தா, “எங்க பாஸ்..” என ஆரம்பித்தாலே.. எதையாவது சொல்லி அந்த பேச்சை தொடர விடாது தவிர்த்து விடுவாள் நாசுக்காக.

வேலை பிஸியால் முகுந்தையும் நேரில் பார்க்க முடியாமல் போக, 

ரியானிடம் கேட்டு பெற்ற முகுந்தின் டேப் எண்ணிற்கு அழைத்து அவ்வப்போது வீடியோ காலில் பேசிவிடுவாள் சம்யுக்தா.

வெங்கடேஷிடமும் சாப்பிட கேப்பிடேரியா வரும் போது சரியாக தகவலை பரிமாறிக்கொண்டு, இருவரும்‌‌ ஒரே நேரத்தில் வருவது போல கணக்கிட்டு வந்து தங்களின் நட்பு(?!) பயிறை வளர்த்துக்கொண்டிருந்தனர்.

நாட்கள் இப்போது அனைவருக்கும் வெகு சுமூகமாக கடந்து கொண்டிருக்க.. 

அதை குலைக்கவென அடுத்த அடுத்த நிகழ்வுகள் நடக்கத்தொடங்கியது.

*****

இப்பொழுது எல்லாம் பகலில் முகுந்த் உறங்குவது குறைந்திருக்க, இரவில் சீக்கிரமே உறங்க ஆரம்பித்துவிடுவதால், 

‘அவன் கம்பெனியில் அவசியமாய் இருந்தே ஆக வேண்டும்..’ என்ற நிலை இருந்தால் மட்டுமே ரியான் காலம் தாழ்த்துவான்.

இல்லாவிட்டால் பொறுப்பை சந்தீப்பிடம் விட்டுவிட்டு.. வீட்டிற்கு வந்து முகுந்தின்‌ தேவைகளை முடித்துவிட்டு வீட்டிலிருந்தே மற்ற வேலைகளை பார்க்க பழகி இருந்தான்.

அதனால் அந்த தாய் பிள்ளை சாப்பாடு கொடுக்கும் நேரத்திற்கு சரியாக ஆஜர் ஆக முடிந்தது அன்றைய நாள் வரை.

அன்று முக்கியமான மீட்டிங் ஒன்றில் மாட்டிக்கொண்ட ரியான் வேலை முடித்து வர, முகுந்தோ முகத்தை தூக்கி வைத்து உம்மென அமர்ந்திருந்தான்.

அவனின் அந்த கோலம் கண்டு சிரிப்பே எழுந்தது அந்த தந்தைக்கு. 

ஆனாலும் அவனை சீண்டி அழ வைக்க விரும்பாது, “கண்ணா.. என்ன பண்றீங்க..?” என்றபடி அவனை தூக்க,

“பேச்சாதே போ..ப்பா..” என்றான் குழந்தை கோபமாய்.

“அச்சோ.. என்‌ தங்கத்துக்கு என்ன கோபம் அப்பா மேல..?” என்றான் கொஞ்சிக்கொண்டு.

“ஸ்டார்ஸ் வந்து.. ஸ்கை டார்க் ஆகி டூ மச் டைம் ஆச்சுப்பா. அங்கே போயிடுப்பா..” என்றான் உதட்டை பிதுக்கி சோகமாக.

புரியாமல் ஒரு நொடி யோசித்தவனுக்கு நேரம் கடந்து சென்றால் அவர்களை பார்க்க முடியாது.. என்பதை தான் இப்படி சொல்கிறான் என்பது புரிய சட்டென அதிர்ந்து போனான்.

‘குழந்தை ஆசைப்பட்டான்.. என ஆரம்பித்த பழக்கம், இப்படி அவனை அதை செய்தே தீரவேண்டும்.. என்ற கட்டாயத்துக்குள் தள்ளிக்கொண்டு போவதை இனியும் அனுமதிக்கக்கூடாது..’ என உறுதி கொண்டான் ரியான்.

அதன் விளைவால் வேலை முடிந்திருந்த போதும், “கண்ணா.. அப்பாக்கு இன்னும் வேலை இருக்கே..! 

சோ, இன்னைக்கு நம்ம இங்கேயே சாப்பிட்டு அப்புறம் வீட்டுக்கு போலாம்..” என்றிட,

“நோ.. ப்பா.. வீடுக்கே போலா.. அங்கே பாக்கனூ..” என்றான் பிள்ளை பிடிவாதக்குரலில்.

“முகுந்த்.. என்ன பிடிவாதமிது. அப்பா சொல்றேனே வேலை இருக்குன்னு. 

இன்னைக்கு இங்கே தான் சாப்பிடறோம். ஈஸ் இட் க்ளியர்..” என்றான் கடுமையாகவே.

தன் கடுமையில் உதடு பிதுங்கி கண்கள் கலங்கி இருக்கும் மகனை பார்க்க கவலையாக இருந்தாலும்.. 

அவனை மாற்ற வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து சற்றும் இளகாமல் நின்றான் ரியான்.

தன் முகம் வாடினாலே தன்னை கொஞ்சி சமாதானம் செய்யும் தந்தை, இப்போது அழுதும் தன் தேவையை நிறைவேற்றாமல் இருக்க இன்னமும் அவனின் அழுகை கூடி தான் போனது.

“முகுந்த் இங்கே பாரு.. இதென்ன பழக்கம்..? 

யாரோ ஒருத்தங்க.. அவங்க யாரு என்னன்னே தெரியாத ஒருத்தங்களுக்காக.. அப்பா சொன்னா கேட்க மாட்டேன்னு அழுதா.. என்ன அர்த்தம்..?” என்றான், 

தன் மகனுக்கு எப்படி புரியவைப்பது என்ற ஆற்றாமையும், ‘அவனுக்கு புரியாது.. ஏழு கழுதை வயசான உனக்கு புரியாதா..? 

அவன் பிடிவாதத்தை ஆரம்பத்துலையே தடுத்திருக்கனும் ன்னு..’ என மனசாட்சி காரித்துப்பியதையும் எண்ணி.

தந்தை பேசிய எதுவும் எனக்கு தேவையில்லை.. எனும் விதமாக, குழந்தையோ ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்த அழுகையை கூட்டிக்கொண்டே போக ஒரு கட்டத்திற்கு மேல் ரியானால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை.

அழுகையை நிறுத்த அவனாலான எல்லா முயற்சிகளையும் செய்தும், பிடிவாதமாய் அவர்களையே கேட்டு அழுத பிள்ளை மேல்.. ஒரு கட்டத்தில் கோபம் தான் வந்தது ரியானுக்கு.

இயலாமை கொடுத்த கோபம் அது.. என்பது பெரியவான அவனுக்கு தெரியும். 

ஆனால் இதுவரை தந்தை தன்னிடம் காட்டாத கோப முகத்தை கண்ட பிள்ளை நிலை..?!!

முகம் ரத்தமென சிவந்திருக்க, “வில் யூ ஸ்டாப் க்ரையிங் முகுந்த்.. அதர்வெஸ் ஐ வில் பீட் யூ..” எனக்கத்தியவன், லேசாக அவன் தோளிலும் அடித்துவிட முகுந்த் உடல் ஒரு முறை துள்ளி அடங்கியது தந்தை கோபத்தில். 

அதில் எழுந்த அதிர்ச்சியில் அழுகை நின்றுவிட பரிதாபமாக ஓர் பார்வை தந்தையை பார்த்தவன், 

மெல்ல அவனிடமிருந்து இறங்கி அவனின் குட்டி சேரில் சென்று அமர்ந்தவன்.. அதன் முன் இருந்த டேபிளில் தலை சாய்த்து படுத்துக்கொள்ள தன்னையே அடித்துக்கொள்ளும் வெறி கிளம்பியது ரியானுக்கு.

எந்த பிள்ளையின் மனமும்.. உடலும் நோகக்கூடாது.. என பார்த்து பார்த்து எல்லாம் செய்தானோ.. இன்று யாரோ ஒருவருக்காக.. தன் மகனை கை நீட்டி விட்டதை அவனாலேயே தாங்க முடியாத போது.. பாவம் பிஞ்சு குழந்தைக்கு எப்படி இருக்குமென தோன்ற.. அவனாலேயே அவனை மன்னிக்க முடியாமல் போனது.

அவசரமாக.. முகுந்திடம் ஓடி அவன் முகம் இருக்கும் பக்கம் மண்டிட்டு அமர்ந்த ரியான், “கண்ணா.. சாரிப்பா.. அப்பா தெரியாம அடிச்சிட்டேன்.. தப்பு தான்..” என கண் கலங்க அவன் தலையில் கை வைக்க போக,

சட்டென மறுபக்கம் முகத்தை திருப்பி படுத்து அதை தடுத்தான் பிள்ளை.

‘மரண அடி..’ என்பது எப்படி இருக்கும் என்பதை கை நீட்டாமல்.. வார்த்தையால் சொல்லாமல்.. செயலில் காட்டியிருந்தான் பிள்ளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!