Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எழவு வீடு

எ லவ் 3

3

பிரஷாந்திடம் இருந்து பாதி பேச்சில் எழுந்து சென்றுவிட்ட பவித்ரா, மீண்டும் தன் தந்தையிடம் முறையிட்டாள், முன்பை விட வலுவாய். ஆனால், அவளை விட அவரது பிடிவாதம் படுபயங்கரமாய் இருக்க, விட்டால் இரவோடு இரவாய் தாலி கட்ட வைத்துவிடுவார் போன்று இருந்தது அவர் பேச்சு. இனி பேசி பிரயோஜனமில்லை என்று உணர்ந்தவள் மௌனமாய் அறைக்குள் சென்று முடங்கினாள். ஒரு நாள் முழுதும் வெளியே வராமல் அறைக்குள்ளேயே தவம் செய்தவளை அவள் தந்தையும் சீண்டவில்லை.

மாறாக, பிரஷாந்தை அழைத்து, ‘இனி சில நாட்களுக்கு நீ எங்களுடனே வந்து இரு’ என்று உத்தரவாய் சொல்லிவிட்டார்.



Advertisement

‘அது சரியாகாது, சரியாகாது, ஒத்துவராது’ என்ற அவனது எந்த வாதமும் அவரிடம் எடுப்படாது போக, ‘மிட் நைட் சூட் மட்டும் முடிச்சுட்டு வந்துடுறேன்’ என்று அனுமதி வாங்கிவிட்டு அந்த நடன நிகழ்ச்சியில் சுரத்தே இன்றி அமர்ந்திருந்தான் பிரஷாந்த்.

***

மணி அதிகாலை மூன்று…!

Advertisement

“நன்மங்கலம்”
சென்னையை ஒட்டிய அடர்வனப்பகுதி.

Advertisement

சூரியன் அயர்ந்து உறங்கும் அந்நேரத்தில் அண்ணாந்து பார்த்தும் கூட சிறு நட்சத்திர ஒளிக்கூட புகமுடியாத அந்த அடர் வனத்தில் ஒற்றை ஆளாய் நின்றிருந்தான் வித்தகன்.

தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் செல்பேசி டவர் இன்றி தொடர்புகளை இணைக்க மறுத்தது. பைக்கில் மாட்டியிருந்த தன் உடைமை மூட்டையை தோளில் மாட்டிக்கொண்டவன், மொபைலை தூக்கி பிடித்தபடி கொஞ்சம்கொஞ்சமாய் கால்களை எட்டிப்போட்டான். சிறு கோடாவது தெரிந்தாலும் தேவலாம் என்ற மெல்லிய வேண்டுதல்.

அவனும் நண்பனும் இணைந்து தான் வருவதாய் இருந்தது. இறுதி நிமிடத்தில் திட்டம் மாறி இருவரும் தனித்தனியே செல்வது என்றும், காட்டின் ஆரம்பப்புள்ளியில் சந்தித்து பின் பயணத்தை இணைத்துக்கொள்வது என்று முடிவாக, முதல் ஆளாய் வந்து நின்றுவிட்டான் வித்தகன். விடிந்தும் விடியாத இந்த இரவு நேரத்தில் தான் காவலர் கெடுபிடி இன்றி தப்பித்து உள்ளே நுழைய முடியும் என்றதால் கிளம்பியிருந்தனர்.

Advertisement

இவன் வந்து பல மணித்துளிகள் கடந்தும் நண்பன் வராது போக, சுற்றியிருந்த அந்தகாரமும் ஏகாந்தமும் ஒருவித கலவையான ஒலியும் அவனுக்கு கிலியை கொடுக்கத்தான் செய்தது. ஆனாலும் திரும்பி போய்விடலாம் என்று தோன்றவில்லை. இந்த புது அனுபவத்தை முயன்று பார்க்கும் ஆர்வத்தை தான் தூண்டிவிட்டன.

மொபைலிலேயே கவனத்தை வைத்து சிறு சிறு அடிகளாய் எட்டு வைத்து காட்டுக்குள் முன்னேறிக்கொண்டிருந்தவன் ஸ்க்ரீனின் ஓரத்தில் லேசான கோடு முண்டி முண்டி எழுவதைக்கண்டதும் பரபரப்பாகி நின்ற இடத்தில் இருந்தே கையை மட்டும் அசைத்தான். ஆடி ஆடி அசைந்த கோடு ஒரு கோணத்தில் அழுத்தமாய் நின்றது. இப்போதைய நிலைக்கு ஒரு கோடு கிடைத்ததே கோடி புண்ணியம் என்று எண்ணி, நண்பனுக்கு அழைப்பை விடுத்தான்.

மிகவும் சிரமப்பட்டு ரிங் போனது. சில நொடிகளில் நண்பனின் குரலும் கேட்டது. கையை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்பீக்கரில் போட்டவன், கத்தி பேசினான்.

“எங்கடா இருக்க? நான் வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு!” சற்றே காட்டமாக சொன்னான் வித்தகன்.

“கிட்ட வந்துட்டேன் டா! வண்டி பஞ்சர்… ஆள் கிடைக்கல… அதான் வர முடியல.. உனக்கு இடம் தெரியும்ல.. நீ போ… நான் சரி பண்ணிட்டு சீக்கிரம் வரேன்!” இதை சொல்ல மட்டுமே உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்ததை போல பட்டென படுத்துவிட்டது அந்த ஒரு கோடு.

“டேய்… டேய்.. கேட்குதா? ஹலோ??” வித்தகனின் குரல் மட்டுமே அலறியது அவ்விடத்தில்.

மீண்டும் அங்கேயே வெவ்வேறு கோணத்தில் கைகளை அசைத்துப்பார்த்தான். எந்த முன்னேற்றமும் இல்லை. வெறுப்பில், “ச்சை!” என கத்தியவன், வந்தவழி போய்விட திரும்ப, அவன் நெஞ்சுக்கூடு திக்கென்று அதிர்ந்து போனது.

அவன் வந்த வழியே மறைந்து போய்விட்டது.

***

புறநகர் பகுதியில் அமைந்துள்ள அந்த தனியார் தொலைக்காட்சியின் அரங்குக்குள் இருந்து வெளியே வந்தான் பிரஷாந்த். ஏற்கனவே தயாராய் இருந்த ட்ராவல் பேகை தோளில் மாட்டியவன் பைக்கில் ஏறி அமர்ந்து ரிவர்ஸ் எடுக்க, “மாஸ்டர்…!” என கத்திக்கொண்டு ஓடிவந்தான் அவனது அசிஸ்டென்ட்.

“என்னடா?” என்று கேட்ட பிரஷாந்தின் குரலில் கொஞ்சமும் சுரத்தே இல்லை.

“ஏன் மாஸ்டர் ஃபியுஸ் போன மாறி பேசுறீங்க?”

“இதை கேட்கதான் அவ்ளோ வேகமாய் ஓடி வந்தியா?” என்றான் கடுப்பாய்.

“இல்ல மாஸ்டர்… அடுத்த பத்து நாளுக்கு நமக்கு ஷூட் இல்லையே! நான் எங்க ஊருக்கு போயிட்டு வரட்டுமான்னு கேட்க வந்தேன்!” என்றான் அவன்.

“குடுத்து வச்சவன்… போயிட்டு வா!” என்ற பிரஷாந்த், ‘இந்த முறை அம்மாக்கூட போய் இருக்கலாம்ன்னு நினைச்சேன்! எல்லாம் போச்சு!’ என மனசுக்குள் புலம்பிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.

அவனுக்கு அர்த்தராத்திரி எல்லாம் ஒரு விடயமே கிடையாது. பொதுவாகவே இரவில் கண்விழித்து உயிர்வாழும் ஆந்தைக்கூட்டத்து அத்தை மகனாய் இருந்தவன் தொலைக்காட்சி என்ற துறைக்குள் வந்தபிறகு ஆந்தைக்கூட்டத்து தலைவனாகவே மாறிப்போனான். பெரும்பாலும் இரவில் தான் நிகழ்ச்சி படப்பிடிப்புகள் எல்லாம் நடக்கும். பகலில் நல்ல உறக்கம், மாலையில் நடன பயிற்சி. இதான் அவனது அன்றாடம்.

தூக்கத்தின் சாயல் கொஞ்சமும் இன்றி வண்டியை அந்த ஆள் நடமாட்டம் குறைந்த புறவழி சாலையில் செலுத்திக்கொண்டிருந்தவன் கண்களில் எதிரே தூரத்தில் தென்பட்ட ஹெட் லைட் வெளிச்சத்தை அனிச்சையாய் கவனித்தது. வருவது ‘ஸ்கூட்டி’ என்றதும், இன்னும் கவனமாய் கவனித்தது. அதிலும் பெண் போன்ற ஒரு உருவம் தெரிந்ததும், ‘பார்ரா இந்நேரத்துல ஜம்முன்னு ஊர்வலம் போவுது!’ என்ற எண்ணத்தில் அவன் பார்வை நிலைக்க, அருகே நெருங்கி வர வரத்தான் அவன் கண்களுக்கு பவித்ரா போன்ற ஒரு உருவம் தெரிய ஆரம்பித்தது.

அதிர்ந்தவன் இன்னும் ஊன்றி கவனிப்பதற்குள் அவனை கடந்து அந்த ஸ்கூட்டி போயிருக்க, இவன் ப்ரேக்கிட்டு நின்றுவிட்டான்.

“பவியா? போறது அவளை மாறியே இருந்துச்சு!?” என்று எண்ணிக்கொண்டே அவன் திரும்பிப்பார்க்க, அந்த ஸ்கூட்டியில் இருந்த உருவமும் இவனை திரும்பிப்பார்த்துவிட்டு இன்னும் வேகமாய் ஓட ஆரம்பிக்க, எதையும் யோசிக்காமல் வண்டியை ரிவர்ஸ் எடுத்தவன் அவளை பின்தொடர ஆரம்பித்துவிட்டான்.

அவன் பின்தொடருவதை கண்டதுமே இன்னும் வேகமெடுத்தது அந்த வண்டி. பிரஷாந்துக்கு என்னவோ தவறென பட, இவனும் விடாது துரத்தினான். அருகே நெருங்கி செல்ல செல்ல, இவனது ஹெட் லைட் வெளிச்சத்தில் ஸ்கூட்டியின் எண்ணை கவனிக்க முற்ப்பட்டவன், அது பவியின் வண்டி எண் தான் என அறிந்ததும் அவன் கையில் வண்டி தடுமாறியது.

“இந்த நேரத்துல ஏன் வெளில வரணும்? வந்தாலும் என்னை பார்த்து ஏன் இப்படி ஓடனும்?” அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“பவி…..?” கத்தினான். திரும்பிப்பார்த்தவள், ஆக்சிலேட்டரை இன்னமும் முறுக்கினாள்.

முயன்று வண்டியின் பக்கவாட்டில் சென்றவன், “பவி… நிறுத்து பவி… ஜஸ்ட் ஸ்டாப்” என்று கத்த, அவள் அணிந்திருந்த ஹெல்மெட்டை தாண்டியும் அவள் காதுகளில் அலறியது அவன் வார்த்தைகள்.

“பவி…. நிறுத்து….!!!!”

பதட்டமாய் வண்டியின் வேகத்தை முடிந்தவரை கூட்டியவள் இதற்கு மேல் முடியாது என்று தோன்றிய கணம், குறுக்கே விட்டாள். சாலையை விட்டு மண் தரையில் இறங்கிய வண்டி வெகுவாக தடுமாறி சமாளித்து முன்னேற, அவளது இந்த வினோதமான நடவடிக்கையை புரிந்துக்கொள்ள முடியாதவனும் பின்தொடர்ந்தான்.

சற்று தூரத்தில் மரங்கள் ஆரம்பிக்க, மண்தரையில் புழுதி கிளம்பி கண்ணை கட்டியது அவனுக்கு. வண்டியை நிறுத்திவிட்டு வாய்க்குள் புகுந்துவிட்ட புழுதியின் விழைவால் இருமினான். கண்களில் நீர் வர தொண்டை வற்ற இருமியவன், ஒருவாராய் தன்னை தேற்றியபோது புழுதி அடங்கியிருந்தது.

வண்டியை ஸ்டேன்ட் போட்டுவிட்டு சுற்றிலும் பார்த்தான். என்ன இடம் என்றே தெரியவில்லை. மொபைலை எடுத்து பார்க்க அது பட்டினியில் செத்திருந்தது. அந்த அந்தகாரத்தை வெறித்தவன், “பவி….????” என்றான்.

அவன் குரலே பயங்கரமாய் மிரட்டியது. கண்ணுக்கெட்டிய தொலைவில் நடையை போட்டான். சற்று தூரத்திலேயே ஸ்கூட்டி தரையில் விழுந்து கிடந்தது.

“பவீஈஈஈஈஈஈ…..” இன்னும் அலறினான். சருகுகள் உரசும் சத்தம் அமைதியை கிழித்துக்கொண்டு அவன் செவிப்பறையை அடைய, குத்துமதிப்பாய் அந்த திசையில் கால்களை செலுத்தி அந்த வனப்பகுதிக்குள் பிரவேசித்தான் பிரஷாந்த்.

***

வந்த வழியே திரும்பி நடக்க எண்ணி திரும்பிய வித்தகனின் நெஞ்சுக்கூடு அதிர்ந்து போனது அங்கே அடர்ந்து நெருங்கி மண்டியிருந்த புதர்களை கண்டதும்.

இது வழியாக தானே அவன் நடந்து வந்தது. நடையை நிறுத்தி அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். அதற்குள் எப்படி இப்படி ஒரு மாற்றம்? அவன் மேற்கொண்டு முன்னேறி செல்லும் ஒற்றையடி பாதை மட்டுமே இருக்க, ஏனைய மூன்று திசைகளும் அவன் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாத வண்ணம் அடைந்து கிடந்தது.

போக வேண்டுமானால் இன்னமும் காட்டிற்குள் தான் நுழைய வேண்டும்… அதைத்தவிர வேறு வழி இல்லை அவனுக்கு. நெஞ்சு படபடவென அடிக்க ஆரம்பித்தது. அவன் கேள்விப்பட்ட கதைகள் எல்லாம் மூளைக்குள் அவன் அனுமதியின்றி ஊடுருவி செல்ல, கை கால்கள் கிட்டத்தட்ட வெலவெலத்தது.

தனியே வந்திருக்க கூடாதோ? என்று காலம் தவறி எண்ணம் உதித்தது.

கையில் இருந்த மொபைலை கெட்டியாய் பிடித்துக்கொண்டான். போதுமான அளவு மின்னூட்டம் இருப்பதை உறுதிசெய்துக்கொண்டு டார்ச் லைட்டை இயக்கினான். அந்த அடர்வனக்காட்டை வெளிச்சத்தில் பார்க்க ‘திக்’கென்று இருந்தது. தைரியத்தை திரட்டி வந்தவழியே திரும்பிப்போக எட்டு வைத்தான். புதர்களை கைக்கொண்டு நகர்த்த அவன் எத்தனித்த நேரம் அவன் பின்னே ‘சரசர’வென சருகுகளின் ஒலி.

உடல் விதிர்விதிர்க்க வேகமாய் திரும்பினான். அவன் கையில் இருந்த வெளிச்சமும் அவன் திரும்பிய திசைக்கு தன் ஒளிகற்றைகளை திருப்ப, ஏதோ ஒரு உருவம் வேகமாய் மறைவதை போல தோன்றியது.

“யாரு?” மெலிதாய் உதடுகள் நடுங்க வினவினான். பதிலின்றி நிசப்தமானது.

“யாரு…?” கேட்டுக்கொண்டே இரண்டடி முன்னேறினான்.

இம்முறையும் பதில் இல்லை என்றாலும் ஏதோ கரும்நிழல் போல அந்த இருட்டிலும் அவன் கண்களுக்கு புலப்பட, உற்று நோக்கலானான். அதை கவனிக்க ஆரம்பித்த கணத்தில் அவன் உடல் தளர்ந்தது. மனதை கவ்வியிருந்த பயம் முதற்கொண்டு ஏனைய உணர்வுகள் எல்லாம் வடிய, கால்கள் மட்டும் முன்னோக்கி நடக்க, இமைக்காமல் அந்த கரும்நிழலை வெறித்தபடி முன்னேறிப்போனவனின் தோள்களை திடீரென கவ்விய இரு கைகள்.

வித்தகனின் பார்வை தடுமாறியது. பார்வை அந்த நிழலை விட்டு விலகிய நொடியில் ஏதோ மாயவலை அறுந்ததை போல திடுக்கிட்ட மூச்சிறைக்க திரும்பினான் அவன். அங்கோ அவனுக்கும் மேலாய் மூச்சு வாங்க, “இங்கிருந்து எப்படி வெளில போறது? ஹெல்ப் பண்ணுங்களேன்… ப்ளீஸ்” என்றாள் ஒருத்தி.
***

அந்த வனப்பகுதிக்குள் பிரஷாந்த், பிரவேசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே அந்த காட்டின் இருள் அவன் கண்ணுக்கு பழக, தன்னைத்தாண்டி யாரேனும் இருக்கும் அறிகுறி தெரிகிறதா என உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

இடையில் ஏதேனும் விலங்குகளிடம் சிக்கிவிடுவோமா என்ற ஐயம் அதிகமாய் இருந்தாலும், பவியை இங்கிருந்து வெளியேற்ற வேண்டுமே என்ற ஆவல் அவனை மீறி அக்காட்டுக்குள் அவனை உள்ளிழுத்தது.

ஆரம்பத்தில் சாதாரணமாய் தெரிந்த காடு போக போக அவன் கண்களுக்குள் பூதாகரமாய் விரிந்து கலக்கம் கொடுக்க, ‘ஒருவேளை பவி இல்லையோ? எல்லாம் நம்ப மனபிராந்தியோ?’ என்ற எண்ணம் உண்டாக, ‘அந்த ஸ்கூட்டி கூடவா கற்பனையா இருக்கும்?’ என்ற ஐயத்தினூடே எழுந்த தெளிவையும் ஓரம்கட்டி ‘சுதர்சன் மாஸ்டர்க்கு கூப்பிட்டு கேட்டுடுவோம்! பவி வீட்டுல தான் இருப்பா!’ என்று தன்னை தானே சமன் செய்துக்கொண்டு அவன் அலைபேசியை எடுத்து இயக்க,

“இங்க டவரே கிடையாது!” திடுமென கேட்ட பெண்குரலில் சகலமும் தூக்கிவாரிப்போட உடல் அதிர்ந்து குலுங்க, திரும்பியவன் முன்னே, சோகமே உருவாய் நின்றிருந்தாள் பெண்ணொருத்தி.

***

“எனக்கு இங்கிருந்து எப்படி போகணும்ன்னு சீக்கிரம் வழி சொல்லுங்க ப்ளீஸ்” அதீத படபடப்புடன் வியர்த்து வழியும் முகத்துடன் கலைந்த, கலைத்த தோற்றத்தில் எதிரே நின்ற பெண்ணை கண்டதும், தனித்து நின்று அல்லாடியவனுக்கு கடவுள் கொடுத்த துணையாக தெரிந்தாள் அவள்.

அவனையறியாமல் ஒரு ஆசுவாசம் உள்ளுள். இருந்த பயம் கூட விலகிப்போனது.

“சார், ப்ளீஸ் ஹெல்ப் மீ டு கோ அவுட்…” மீண்டுமாய் அவள் கெஞ்ச, நிதானத்திற்கு வந்திருந்தவன், “மேடம்… ரிலாக்ஸ்! நான் ஒன்னும் இங்க டூரிஸ்ட் கைடு இல்ல… எப்படி இங்கிருந்து வெளில போறதுன்னு தெரியாம தான் நானும் முழிச்சுட்டு இருக்கேன்” என்று சொல்ல,

“ஓ…ஷிட்!” தலையில் அடித்துக்கொண்டு அப்படியே சரிந்து அமர்ந்துவிட்டாள் அவள்.

வித்தகன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவர்கள் நிற்கும் ஐந்தடி இடம் தாண்டி வேறு தடமே அவன் கண்களுக்கு புலப்படவில்லை. சுற்றி மரங்களும், புதர்களும், இருளும் தான்! ‘இவள் எவ்வழியில் வந்திருப்பாள்?’ என்ற ஐயம் எழ,

“ஹலோ… இங்க பாருங்க” அவளை எழுப்பியவன், “நீங்க எந்த வழில வந்தீங்க?” என்றான் சிறு பரபரப்புடன்.

இருளும், தனிமையும், பதட்டமும், பயமுமாய் தன்னையறியாமல் சிதறிய கண்ணீரை அடக்கிக்கொண்டு நிமிர்ந்தவள், அவன் கேள்வியை உணர்ந்து, தன் பின்னே கையை நீட்டி, “இந்த வ…” என சொல்ல திரும்பியவள், திக்பிரம்மையோடு பேச்சற்று நின்றாள்.
ஒரு கணம் தான்!

மறுகணம், வேகவேகமாய் அந்த புதர்களை நோக்கி சென்றவள், அங்கும் இங்குமாய் அலைப்பாய, அவளின் தவிப்பை இவன் உணர்ந்தான். இவனும் சில நிமிடங்கள் முன் இதே தவிப்பை அடைந்தவன் தானே!!!

“இங்க தானே… இதுல தானே? இப்படி தான் வந்தேன்! ஆனா இப்போ…” அவளால் ஒரு துளிக்கூட நடப்பதை நம்ப முடியவில்லை.

அவளை மேலும் தவிக்க விடாமல், “ஹலோ… ஹலோ… மேடம்… இங்க பாருங்களேன்!” அவன் கலைக்க, அவள் இன்னமும் நடப்பது விளங்காமல் குழம்பிக்கொண்டு நின்றாள்.

“என்னை பாருங்க ஒரு நிமிஷம்… மேடம்…” அதிக சத்தத்துடன் அவன் கைத்தட்ட, அந்த காட்டுக்குள் அவன் கைத்தட்டல் மட்டும் யானை பிளிறல் போல அகால ஓசையில் ஒலித்தது…!

***

“இங்க டவரே கிடைக்காது!” என்ற குரல் கேட்டு அதிர்ச்சியில் அத்தனை புலன்களும் ஒடுங்க அப்படியே அதிர்ந்து நின்றவனை மேலும் கலவரப்படுத்தியது திடீரென கேட்ட கைத்தட்டல் சப்தம்.
அவனுக்கெங்கே தெரியும், அது கைதட்டல் என…! ஏதோ வினோத விலங்கின் வரவேற்ப்பொலி என்று எண்ணி இன்னுமே கலவரமானான் பிரஷாந்த்.

அதே சப்தத்தில் தான் எதிரே சாவதானமாய் நின்ற பெண்ணவளும் திடுக்கிட்டுப்போக, ஒரு துணைக்காக அனிச்சையாய் அவன் அருகே வந்து நின்று விட்டாள். இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தனர். நன்கு பறந்து விரிந்த கானகம். அந்த ஓசைக்கு பிறகு வேறெந்த வினோத ஒலியும் கேட்காதிருக்க, மெல்ல நிதானத்திற்கு வந்தனர்.

பிரஷாந்த் மெதுவாய் திரும்பி அருகே நின்றவளை பார்த்தான். இவனை போலவே தோளில் பையுடன் நின்றிருந்தாள்.
குனிந்து பார்த்தான். இரண்டு காலும் அதில் இரண்டு இன்ச் ஹீல்சும் இருந்தது. ஒரு குருட்டுத்தனமான ஆசுவாசம்!

அதே நேரம் அவளுமே அவனை நோட்டம் விட்டாள். ஏதோ ‘பிக்னிக்’ வருபவன் போன்ற தோற்றத்தில் இருந்தான். பார்க்க நாகரிகமான தோற்றம்! சிறுது நேரம் முன்பு, ஏதோ பெயரை சொல்லி கூவிக்கொண்டு இருந்தது நியாபகம் வர, பேச்சை ஆரம்பிக்க இது போதுமாய் இருந்தது அவளுக்கு.

“யாரையாவது தேடி வந்துருக்கீங்களா?” என்றாள்.

“ஹான்? ஆங்! என் கேர்ள் ஃபிரன்ட்” என்றவன், “நீங்க என்ன பண்றீங்க இங்க?” என்றான்.

“நான் என் பாய் ஃபிரண்டை தேடி வந்தேங்க!” என்றாள் அலுப்பாய்.

இவன் லேசாக முறைத்தபடி, “என்ன கிண்டல் பண்றீங்களா?” என்று கேட்க, “அட, நிஜமாங்க! என் பாய் ஃபிரண்ட் இங்க தான் வந்துருக்காரு! அவரை தேடி தான் வந்தேன்….” என்று இழுத்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “எந்த பக்கம் போறதுன்னே தெரியாம நிக்குறேன்!” என்றாள் கடுப்பாய்.

“உள்ளே போய் பாப்போமா?” என்றான் தயக்கமாய். இவன் தயக்கம் கூட அவளுக்கு இல்லை போலும். உடனே ‘ம்ம்ம்!’ என்றுவிட்டாள். சருகுகளின் மேலே அவர்களின் காலடி தடங்கல் பதிய ஆரம்பித்தது.

***

அந்த காட்டுக்குள் முன்னேறிக்கொண்டிருந்தனர் வித்தகனும் அவன் உடம் வருபவளும்!

இருவருமே ஓரளவிற்கு நிதானத்திற்கு வந்திருந்தனர். மேற்கொண்டு நடப்பதை தாண்டி வேறு தடமும் இல்லை, வேறு வழியும் இல்லை என்று அறிந்து அதன் போக்கிலேயே போக ஆரம்பித்தனர். பொழுது புலரும் வரை காத்திருந்து, வெளிச்சம் அகப்பட்டதும் வழியை கண்டுப்பிடித்து வெளியேறிவிடலாம் என்ற எண்ணம் பெண்ணுக்கு.

அதே தான் வித்தகனும் நினைத்தான் எனினும், அவன் கேட்டறிந்த விடயங்கள் அத்தனை இலகுவாய் இங்கிருந்து வெளியேறிவிட முடியாது என்ற எண்ணத்தை அவனுள் விதைத்துக்கொண்டிருந்தது. அதை வெளியே சொல்லாமல் மௌனமாய் அவளுடன் நடந்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் கால்கள் துவழ, அப்படியே ஒரு மரத்தின் மீது சாய்ந்து நின்றாள் அவள்.

“என்னாச்சு?” என்றான்.

“இன்னும் எவ்ளோ நேரம் நடக்கிறது? என்னால முடியல!” என்றாள். அவன் உடலில் தெம்பே இலலதது போல தோன்றியது.

“காட்டுக்குள்ள முன்ன பின்ன தெரியாத ஒரு பையன் கூட நிக்குறீங்க! நான் எதாவது இப்போ மிஸ்பிஹேவ் பண்ணுனா எப்படி எஸ்கேப் ஆவீங்க?” என்றான்.

அவ்வளவுதான்! ஏதோ பத்து லிட்டர் பூஸ்ட் குடித்தவள் போல விழிவிரிய விறைத்து நின்றவள், வேகமாய் அவனைவிட்டு சில அடிகள் தள்ளி நின்றாள்.

அதைக்கண்டு உதடு மடக்கி சிரித்தவன், “குட்! இப்போ எனெர்ஜி இருக்கு போலவே… நடங்க!” என்று சொல்ல, இன்னமும் சந்தேகக்கண்ணோடு அவனை பார்த்துக்கொண்டு தான் நின்றாள் அவள்.

“மேடம்…?” என்றவன், “பேர் சொல்ல முடியுமா? மேடம் சொல்ல கஷ்டமா இருக்கு” என்றிட, சிறு யோசனையோடு, “பவித்ரா!” என்றாள்.

“குட்!” என்றவன், “நான் வித்தகன்! சினிமால பாட்டு எழுதுறேன்! உங்க மொபைல்ல ‘ப்ளுடூத்’ ஆன் பண்ணுங்க!” என்றான்.

“ஏன்? எதுக்கு?”

“இங்க டவர் இல்ல… அதான் ப்ளுடூத்! ம்ம்… ஆன் பண்ணுங்க” என்றான். இவள் ஆன் செய்ததும், அவனிடம் இருந்து இரு புகைப்படங்கள் இவள் மொபைலுக்கு பகிரப்பட்டது.

“என்னது இது?”

“என்னோட ஆதார் கார்ட் அண்ட் பேன் கார்ட்…. ஒரு சேஃப்டிக்கு வச்சுக்கோங்க” என்றவன், “உங்களை பூஸ்ட் பண்ண தான் அப்படி பேசினேன்! பயந்துட்டீங்க போல! பேசிட்டே நடந்தா கஷ்டமா இருக்காது! ட்ரை பண்ணலாமே!” என்றான்.

இவளுக்கும் அவன் மீது ஏற்ப்பட்ட பயம் மெல்ல தள்ளிப்போனது. ஆனாலும் எச்சரிக்கை உணர்வு ‘அலர்ட் மோட்’டில் தான் இருந்தது. குறைவாக என்றாலும் சொந்த தகவல்கள் பரிமாற்றங்கள் தாண்டி, இருவருக்கும் பேசிக்கொள்ள ஒருவரி வினா விடை போல கன்டென்ட் கிடைத்தது. இன்னும் சிறிது தூர நடைப்பயணம்…! முழுவதுமாய் சோர்ந்து போனாள்.

“இங்க எனக்கு தெரிஞ்சு ஒரு வீடு இருக்கு! மே பி நாம அதை நெருங்கிட்டோம்! உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா கொஞ்ச நேரம் அங்க ரிலேக்ஸ் பண்ணிட்டு விடிஞ்சதும் போய்டலாம்!” என்றான்.

வீடா!? அதுவும் இந்த அத்துவான காட்டுக்குள்ளா? சந்தேகமும் திகைப்புமாய் அவள் வினவ, “எனக்கே சூர்’ரா தெரியல… இங்கயே இருங்க… நான் போய் பார்த்துட்டு வரேன்” என்றான்.

தனியே இருப்பதா? அதுவும் இந்த காட்டுக்குள்ளா?! அவள் முகம் நொடியில் கலவரம் பூச, அதை உணர்ந்தவனாய், “யூ லுக் எக்ஸாஸ்டட்… அதான் சொல்றேன்” என்றான்.

“இல்ல… நானும் வரேன்” என்றாள். அவள் பயத்தை அதற்குமேல் வளர்க்காமல், “சரி வாங்க!” என்றுவிட்டான்.

நடக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவர்கள் கண்முன் விரிந்தது அந்த வீடு!!!
“எழவு வீடு…!!!”

அந்த கானகத்துக்குள் இருக்கும் வீடு என்ன பளபளக்கும் பங்களாவாகவா இருக்கப்போகிறது? எப்படியும் இந்த படங்களில் வருவதை போல தூசி படிந்து பூத் பங்களா போல இருக்கும் என்ற எண்ணம் தான் வித்தகனுக்கு. ஆனால் இப்படி ஒரு சிறு தூசி கூட படியாத பசுமையான தோட்டத்துடன் கூடிய அந்த கச்சிதமான நான்கு பி.எச்.கே வீட்டை கண்டதும் உண்மையில் விம்மிதம் தான் அடைந்தான்.

ஒருவேளை வேறேதும் வீடாய் இருக்குமோ? என்ற சம்சயம் கூட உண்டானது. ஆனால், பவித்ரா, சுற்றுசுவர் மீது விரல்கள் பதித்து, ‘எ லவ் ஹோம்’ என அதில் எழுதியிருந்ததை வாசித்தபோது அவன் தேடி வந்த வீடு இதுதான் என்று உறுதியானது அவனுக்கு. அந்த க்ஷனம் முதல் அவன் ஐம்புலன்கள் விழித்துக்கொள்ள, அந்த வினாடியில் இருந்து நடப்பதை எல்லாம் கவனமாய் படமாக்கிக்கொள்ள ஆரம்பித்தன அவன் சட்டை பொத்தானில் இருந்த தொழில்நுட்ப கண்கள்.

***
அந்த காட்டுக்குள் மாங்குமாங்கென நடந்துக்கொண்டிருந்தனர் பிரஷாந்தும் சம்யுக்தாவும்.

“நான் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குங்க!” என்றான் பிரஷாந்த்.

அதை கேட்டு மழுப்பலாய் சிரித்த சம்யுக்தா, “பார்க்காம எப்படி இருக்க முடியும்? நாங்க எல்லாம் பப்ளிக் ஃபிகர் ஆச்சே!” என்றாள்.

“பப்ளிக்கா பிகரா? புரியலையே!?” என்றான்.

“இன்ஸ்டா எல்லாம் பாக்க மாட்டீங்களா? அதுல நான் ரொம்ப பேமஸ்!” என்று பந்தாவாய் சொன்னாள் அவள்.

“அப்டியா? எனக்கு தெரியலையே…!” என்றவன் அவள் முகத்தை உற்று உற்று பார்க்க,

“முன்ன பார்த்து நட மேன்… அப்பறம் கால் தடுக்கி பரலோகம் போய்ட்டா, எனக்கு யார் கம்பெனி குடுப்பா?” என்றாள்.

இருவரும் மூச்சு வாங்க நடந்தனர். நடக்க ஆரம்பித்தே பல நிமிடங்கள் கடந்திருக்கும். ஆனாலும் அந்த இருட்டை தாண்டி எதுவும் அவர்களுக்கு புலப்படவில்லை என்றதும் அயர்ந்துப்போனது பிரஷாந்துக்கு.

“இன்னும் எவ்ளோ தூரம் போறது? யாரையுமே காணோம்? எதாவது புலி சிறுத்தைன்னு வந்துடுமோன்னு பயமா இருக்கு” என்றான் பிரஷாந்த்.

“பயப்படாம வாங்க… அதான் நான் இருக்கேன்ல?” என்றாள் அவள்.

“நீங்க இருந்தா புலி சிங்கம் எல்லாம் இந்த வழிய வராதுன்னு எதுவும் இருக்குங்களா?” என்றான் நக்கலாய்.

“அட, வந்தா கூட அதுக்கிட்ட என் பேரை சொல்லுங்க… ஒரு ‘சலாம்’ போட்டுட்டு ஓடியே போய்டும்!” என்று சொல்ல, “உங்க பேர் என்னங்க?” என்றான்.

“சம்யுக்தா… சம்யுக்தா ராணி!” என்றாள் பெருமையாய்.

“ஹப்பா! பேரை கேட்டா எனக்கே பயமா இருக்குங்க! இந்த புலி சிங்கம் எல்லாம் எம்மாத்திரம்?” என்றவன் குரலில் நக்கல் மட்டுமே வழிந்தது.

“கிண்டல் பண்றீங்கன்னு நல்லாவே தெரியுது! உங்க பேர் என்ன?”

“பிரஷாந்த்… பிரஷாந்த் தி கிங்!” என்றான் பில்டப்புடன்.

“ஓ! உங்க இன்ஸ்டா ஐடி’யா?” என்றுவிட்டு அவள் சிரிக்க, “நீங்க ராணியாகலாம்! நாங்க ராஜாவாக கூடாதோ?” என்றான் இவன்.

“அதோ அப்படி ஓரமா ஒரு மரத்தை புடிச்சுக்கிட்டு உட்காருங்க! நீங்க தான் இந்த காட்டுக்கே ராஜான்னு ஒரு அறிக்கை விட்டுடுறேன்!” கொஞ்சமும் சிரிக்காமல் சொன்னவளை போலியாய் முறைத்துப்பார்த்தான் அவன்.

“காட்டுக்குள்ள முன்ன பின்ன தெரியாத பையன் கூட வரீங்க! பயமே இல்லையா?”

“ம்ஹும்!”

“கராத்தே தெரியுமோ?”

“ச்ச ச்ச!” என்றவள், “பெப்பர் ஸ்ப்ரே வச்சுருக்கேன்” என்றாள்.

கிளுக்கி சிரித்தவனோ, “ப்பூ… இவ்ளோதானா?” என்றான்.

“ஆமா… ஒருவேளை ஸ்ப்ரே வேலை செய்யலன்னா என்ன பண்றதுன்னு…” என்றவள், இடுப்பில் இருந்து வெடுக்கென உருவி, “ஒரு கத்தியும் வச்சுருக்கேன்!” என்றிட, அவனது சிரிப்பு அந்த கத்தியின் பளபளப்பை கண்டு கப்பென அடைந்துக்கொண்டது.

“ஹஹா… பயப்படாதீங்க! ஒன்னும் பண்ண மாட்டேன்!” அவன் தோள் தட்டி பெரிய மகாராணி போல அவள் சொல்ல, ‘எல்லாம் என் நேரம்’ என்று எண்ணிக்கொண்டான்.

எப்படியும் நடந்து நடந்து நடுக்காட்டுக்கே வந்திருப்பார்கள்.

“நம்ம நடக்குற வேகத்தை பார்த்தா நேரா அந்தமான் நிக்கோபார்ல போய்தான் முட்டுவோம் போல” என்றவன், “பவீஈஈஈ….” என்றான் மேல்நோக்கி.

“யோவ்… கம்முன்னு இரு… தூங்கிட்டு இருக்குறதை எல்லாம் எழுப்பிடுவ போலவே” என்றவள் பதட்டத்தில் மரியாதையை கைவிட, “எங்க போறோம்ன்னே தெரியாம போறோம்! என் பவியை வேற காணோம்!” என்றான் தவிப்புடன்.

“கொஞ்ச தூரத்துல ஒரு வீடு இருக்கும்! அங்க போய் என் ஆளை பார்த்துட்டு அவர்கிட்ட உன் பவியை பத்தி கேட்டு பாக்கலாம்! மே பீ பார்த்துருக்கலாம் அவர்” என்றவளை, ‘லூசோ?!’ என்ற ரீதியில் தான் பார்த்தான் அவன்.

“எது? இந்த காட்டுக்குள்ள வீடுங்களா அம்மணி?” அவன் கிண்டலையும் நக்கலையும் குழைத்து கேட்க, “ஹைஈஈ… நீங்க கோயம்பத்தூரா?” என்றாள் அவள்.

அவனும், “எப்டிங் கண்டுப்புடிச்சீங்?” என்று கேட்க, “இவ்ளோ மரியாதையா பேசும்போதே தெரியலையா? நான் எல்லாம் ஒருத்தர் பேசுறதை வச்சே அவங்க எந்த ஊரு ஆளுங்கன்னு கரெக்ட்டா சொல்லிடுவேன்” என்றாள் பீத்திக்கொண்டு.

“ஆமாங்! மரியாதை எல்லாம் ஹோல்சேல்’ல கோயம்பத்தூர் ஆளுங்க தான் குத்தகைக்கு எடுத்துருக்கோமுங்! மத்த ஊர் ஆள் எல்லாம் வாயை தொறந்தாலே, ‘உன் ஆத்தா… உன் அம்மா’ன்னு தானே பேசுவானுங்க!” என்று பேச, அவன் எகத்தாளைத்தை கூட உணராது,

“அதான் ப்ரஷு!” என்று பின்பாட்டு பாடினாள் சம்யுக்தா.

“நீங்க செருப்ப நல்லா தொட்டுட்டு வாங்க அம்மணி! சீவேரிட போகுது!” என்றவனை நடப்பதை நிறுத்திவிட்டு பார்த்தவள், “செருப்பை தொடனுமா?” என்றாள் குழம்பிப்போய்.

வெளியிடமுடியாத நமட்டு சிரிப்பு அவனுள். கஷ்டப்பட்டு அடக்கியவன், “ஆமாங் அம்மணி… செருப்பை தொட்டுட்டு தானே வரணும்?” என்றான் ஒன்றுமரியாதவனை போல.

கீழே குனிந்து பார்த்தாள். இந்த செருப்பையா தொட வேண்டும்?! என அசூயை கொள்வதாய் இருந்தது அவள் பார்வை.

“இதை ஏன் தொட்டுட்டு வரணும்? அதென்ன ஃபார்மாலிட்டி?” இன்னமும் புரியாமல் அவள் கேட்க, வாய்விட்டே சிரித்தவன், “செருப்பை தொடனும்ன்னா, செருப்பை போட்டுக்கனும்ன்னு அர்த்தம்!” என்று விளக்க, “ங்கே!” என முழித்தாள் அவள்.

“பேச்சை வச்சே கண்டுப்பிடிப்பேன்னீங்க? இதுக்கூட தெரியாது போலயே!” என்றவனுக்கு இன்னமும் சிரிப்பு தான்!

“ஏன் உங்க ஊருல எதையும் நேரா சொல்ல மாட்டீங்களா? சு…..த்தி வளைச்சு தான் சொல்லுவீங்களா?” இடக்காய் முறைத்தவள், விறுவிறுவென முன்னே சென்றாள். இவனும் சிரித்துக்கொண்டே போக, சில அடிகளில் அவர்கள் கண்ணுக்கு பட்டது அந்த வீடு!

வீட்டை கண்டதும் சம்யுக்த்தா முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்! பிரஷாந்துக்கோ நம்ப முடியாத திகைப்பு!

உண்மையிலேயே வீடா!? அதுவும் இங்கா?

அதிர்ந்து அவன் தயங்கி நிற்க, அவள், “வா பிரஷு… என் ஆளுக்கிட்ட உன் ஆளு பத்தி கேட்டுப்பார்ப்போம்” என்று கிட்டத்தட்ட அவனை இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

வீட்டின் கதவுகள் அவள் கைப்பட்டதுமே தன்னால் திறந்துக்கொண்டது. வீட்டின் அத்தனை விளக்குகளும் ஒளிர்ந்துக்கொண்டிருக்க, நடுவீட்டில் நின்றிருந்தனர் வித்தகனும், பவித்ராவும்! திடீரென கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த இருவரை கண்டதும் மற்ற இருவர் முகத்திலும் உச்சகட்ட அதிர்ச்சி!!!

அதிலும் அந்த இரு ஆண்களும் தங்கள் இணையை அங்கே கண்டதில்…

“குருவம்மாஆஆஆ!!!!!”

“செல்லத்தாயிஈஈஈ!!!!!” எஃபெக்டில் நிற்க, அங்கே
“ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ” ரோஜா பட ருக்குமணி பாடல் பி.ஜி.எம் சத்தமில்லாமல் இடம்பெற்றத.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!