Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 6 2

“அதனால் தன் குடும்பத்திற்கு ஆபத்து வருமோ என பயந்து இந்த விவாகரத்துக் கேட்கிறான். மற்றபடி அவன் தவறாக வேறு எதையும் செய்யவில்லை,

உன்னை யாரும் தனியே விடபோவதுக் கிடையாது. அகில், ராஜேஷ்,  நான் அவ்வப்போது மகி கூட உன்னை வந்து பார்த்துக் கொள்வான். நீ பயம் கொள்ள தேவையில்லை….

மேலும் அவன் சம்பாதித்த அனைத்து சொத்துகளும் உன்னிடம் தான் கொடுக்கிறான், உன்னை அவன் விளக்கவில்லை, சற்று தூரமாக இரு என்கிறான். அவ்வளவு தான்….

இத்தனை நாளில் அவனை உனக்கு புரியாதா. அவன் உன்னை விட்டு எங்கும் போக போவதில்லையே” என பொறுமையாக அனைவருக்கும் விளக்கினான்.



Advertisement

துர்கா, வினோ முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை அமைதியாக கண்களால் தன் கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள், அதில் ஒரு வெறுமை மட்டும் இருந்தது.

துர்காவிற்கு ஓய்ந்து போனது. என்ன சொல்கிறார் இவர், தன்னை ஒரு பிசினஸ்க்காக தொலைக்க நினைக்கிறானா ஈஷ்வர்….

அந்த எண்ணமே அவளை பேச வைத்தது “இப்போது இந்த இந்த தொழில், பிறகு 5 வருடம் கழித்து இன்னும் ஒரு தொழில் அப்போது, மனைவியை கொன்றால் தான், தொழில் நிலைக்கும் என்றால் அதற்கும் துணிவார் தானே இவர்” என தனது அமைதியான குரலில் திடமாக கேட்க.

Advertisement

முதல் முறையாக அனைவரும் அதிர்ந்தனர். இப்படியெல்லாம் பேச தெரியுமா இவளிற்கு என பார்த்திருக்க, மகி இப்போது தான் சற்று அசைந்தான்.

Advertisement

கூறாக வார்த்தைகளை செலுத்தினான் “என்ன….. துர்கா சீண்டி பார்க்கிறியா, இப்படி எல்லாம் சொன்னா, நான் உன்னை அப்படியே விட்டு விடுவேன்னு நினைச்சியா.” என அலட்சியமாக அழ்ந்தக் குரலில் சொன்னான் ஏதோ எதிரியிடம் பேசும் குரல் அது.

“சரி பாவா, உங்களுக்கு எங்களை விட அந்த பிஸினெஸ்சே பெரிதாக இருக்கட்டும். அதே தான் எனக்கும். இ….இது எல்லாவற்றையும் விட நீங்க எனக்கு பெரிசு.

அ…. அதனால எனக்… எனக்கு ஒரு காரணம் சொல்லுங்க. என் கிட்ட என்ன பிடிக்கலைன்னு சொல்லுங்க. இல்ல, ஏன் என்னை பிடிக்கலைன்னு சொல்லுங்க.  நான் நீங்க சொல்றத கேட்கிறேன்.” என்றாள் துர்கா அவளின் பல நாள் கேள்வி வெளியே வந்து விட்டது அவளையும் அறியாமல்.

Advertisement

மௌனமாகவே எவ்வளவு நாள் தான் இருப்பது என இந்த நான்கு பேர் நடுவில் கேட்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், மனது அலைபாய்ந்ததில் கேட்டேவிட்டாள்.

அனைவரும் இருப்பதால் சற்று தயங்கி தயங்கியே வார்த்தை வந்தது. நிலம் பார்த்தே பேசி முடித்தாள்.

மகி, இப்போது கண்கள் இடுங்க அவளை பார்த்து, ‘கேட்டாய் அல்லவா…. வாங்கிக்கொள் என் பதிலை’ என தயக்கமே இல்லாமல்…. காதல் வேண்டாம் அதைவிட இறக்கமே இல்லாமல் “நான் எப்போ, எனக்கு உன்னை பிடிக்கும்னு சொன்னேன்.” என்றான் அடிக் குரலில்.

தன் காதுகள் சரியாகத்தான் கேட்கிறதா… இப்போது இவள் அயர்ந்து போனாள். ‘ஹா…. கல்யாணம் முடிந்து இரண்டு குழந்தை பிறந்த பிறகு…. கண்ணில் எவ்வளவு அலட்சியத்துடன்…. இப்படி ஒரு பதில் தருகிறான்’.

தான் அமர்ந்திருந்த நாற்காலியில் சற்றே பின்புறம் சாய்ந்து அமர்ந்தாள். என்ன கேட்பது இவனிடம்.. என்ன வாழ்க்கை வாழ்ந்தேன் நான் இவனுடன், நீண்ட 7 வருட காலமாக…. நான் இவனை பாதிக்கவே இல்லை, என்னை உணர்த்தவே இல்லை. நான் அவனின் வாழ்வில் எல்லா உறவுகளையும் போல, நான் அவனில் பாதி அல்ல…

அவ்வளவு தான்…. அப்படி தான், அப்படியே தான் அல்லவா….

இவர்கள் இருவரும் பேசிய உடன்…. மற்ற அனைவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர்.. இவர்களை கவனியாதவர்கள் போல்.

மகி, இப்போது அதே அமைதியான குரலில் “போ, போய் தூங்கு நாளை காலை…. அட்வகேட் வருவாங்க…. கையெழுத்து மட்டும் போடு, மற்றது நான் பார்த்துக்கிறேன்.” என்றான் ஆறுதலாக.

கண்மூடி அம்ர்ந்திருந்தவளுக்கு ‘வெட்ட போகும் ஆட்டின் மேல் கசாப்பு கடைக்காரனுக்கு வரும் கரிசனமாகவேத் தோன்றியது இது’ கண்களை மூடிக் கொண்டே சொன்னாள் “மாட்டேன்….. “ என்று அமைதியாக ஒற்றை சொல்லாக அவனின் குணம் தெரியாமல். சொன்னாள்.

இது வரை இப்படி அவன் துர்காவிடம் நின்று பேசியதே இல்லை. அவ்வளவு பொறுமையாக பேசினான் “நீ நிறையா, நாடகம் பார்த்து இப்படி ஆகிட்ட, இது பெரிய சிக்கல் துர்கா, நான் சொல்றத செய்….. இது கொஞ்ச நாள்ல சரியாகிடும்…. அப்புறம் பழைய படி எல்லாம் சரியாகிடும்” என்றான் அமைதியாக….

“இப்போவே எல்லாம் சரியாதான் இருக்கு. நான் தர மாட்டேன்.” என இத்தனை நாள் இல்லாத செயலாக அவனை நிமிர்ந்து நோக்கி பேச.

நிலை இழந்தான் மகி “டேய் சொல்லுங்கடா அவ கிட்ட. இது விளையாட்டில்ல. நாளைக்கு கையெழுத்து போட்டே ஆகணும்… சொல்லுங்கடா… அவகிட்ட.“ என இவன் உறுமிக் கொண்டே மாடி ஏற போக.

அவன் முடித்த உடன் “மாட்டேன்… யார் சொன்னாலும் மாட்டேன். சொல்லுங்…” என முடிக்க கூட இல்லை

கிடு கிடுவென வந்த மகி, அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்தான். அவன் விட்ட அறையில், தான் அமர்ந்திருந்த சேரோடு சேர்ந்து விழுந்தாள் துர்கா.

அனைவரும் பதறியடித்து போய் மகியை பிடிக்க, துர்காவை நித்யா தூக்க. அவளால் எழ முடியவில்லை, விழுந்த வேகத்தில் இடுப்பில் அப்படி ஒரு அடி…. தாங்க முடியவில்லை துர்காவால், துடித்து போய்விட்டால்.

கீர்த்திவாசன் தான், வந்து தன் அக்காவை கைகளில் ஒரு குழந்தையை போல் தூக்கி ஒரு ஷோபாவில அமர வைக்க. அமர்ந்தவள்…. காலை நன்றாக உதறினாள். கீர்த்தி தன் அக்காவின் காலிற்கு நெட்டி எடுத்து, அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு ஐந்து நிமிடம் கழித்து சரியாகி எழுந்து நின்றாள். பின் அமர்ந்தாள். பார்த்திருந்த அவளின் தம்பி ”அக்கா போதும் வந்துடுக்கா…. நாம பார்த்துக்கலாம்க்கா…” என்றான் கெஞ்சலாக, கூறிக் கொண்டே அவளின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான் கீர்த்திவாசன்.

கண்களால் பார்க்க முடியவில்லை தன் அக்காவை, ஏற்கனவே கையை கிழித்துக் கொண்டாள், இப்போது அவள் கணவனே அடிக்கவும், ஒரு தம்பியாக இதையெல்லாம் பார்க்க முடியவில்லை அவனால்.

பார்த்த எல்லோருக்கும் அதுவே சரியென பட்டது. இப்போது துர்கா ”டேய்…. இது புரியாது உனக்கு, இப்போ நான் அவரை விட்டு வந்த அத விட கேவலம் எதுவும் இல்லை…. “

மகியை ஒரு தரம் பார்த்து “இப்பவும் அவர்க்கு உள்ளுக்குள் சந்தோஷம் தான், ‘என்ன பண்ணாலும் நம்மை விட்டு போக மாட்டேன்’ என்கிறாளே என…

வேண்ணும்னா பாரு, வேறு யோசனை ஏதாவது வரும் அவர்க்கு. இந்த வியாபாரம் தொழில் இதுக்கு எல்லாம் நான் அவரை பிரிந்து சென்றாள், நான் யாருடா, நான் யாரு அவருக்கு.

அப்படி எல்லாம் குடும்பத்தைப் பிரிந்து, என்ன தொழில் செய்து, என்ன செய்ய போறார். உனக்கு இது புரியாது டா.

இன்னும் எங்க சின்ன பையன, அவரோடு ஒரு வண்டில, கூட கூட்டிட்டு போனதில்லை… அவன் என்கூட வரும் போதே முன்னாடி நின்னுகிட்டு கைய விரிச்சு வருவான்….

அவற்கு அவரின் அப்பா இருந்து, எல்லாம் பார்த்து பார்த்து செய்தார், ஆனால் இவர் ஏதோ ஒரு பிஸினெஸ்காக எங்களை தூக்கி எறிகிறார்.” என கூறி கண்ணில் வழிந்த நீரை சுண்டினாள் தன் விரலால், திரும்பவும் தன் தம்பியை பார்த்து

“உன் கல்யாணத்தப்ப நான் அவர் கூட வந்து நிற்க வேண்டாமா, இத்தனை நாள் எல்லாம் சொந்தகாரங்க கல்யாணத்திற்கு நான்தான் சென்றிருந்தேன்… அப்போவெல்லாம் இவர் வந்ததே இல்லை. அப்படியே வந்தாலும் தனியாக தான் வருவார்.

இது தான் முதல் கல்யாணம் நானும் அவரும் சேர்ந்து எல்லாம் செய்ய போகிறோம். நாத்தனார் முடிச்சு வேற போடணுமே.

அப்புறம் ராஜேஷ் தம்பி கல்யாணம் வேற இருக்கு எல்லாம் நாங்க தான் பார்த்தது செய்யணும். அவர் அப்பா இடத்திலிருந்து. இப்போ போய், தனியா நின்னா நல்லாவா இருக்கும்….” என்றாள் ஆசையாக, கட கடவென அவளின் ஏக்கங்கள், கனவுகள் எல்லாம் சொல்லியே முடித்தாள்..

மகிக்கு இப்போது… ‘இங்கு இவள் நிலையே தடுமாற்றம்…. இதில் அடுத்தவர் பற்றி யோசனை வேறு, என்று தான் தோன்றியது.

ஆனால், இந்த நினைவும் கூடவே வந்தது….. ‘என் அப்பா எனக்கு செய்ததை கூட, நான் என் பிள்ளைக்கு செய்யவில்லை’ எனவும்  தோன்றியது.

மகியின் தலை தானே தாழ்ந்தது அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. தன் வலது கை பெரு விரலால் மற்றொரு கையின் சுட்டு விரலை தீண்டி, பின் அந்த கையின் பெரு விரலால் வலது கையின் சுட்டு விரலை தீண்டுவது என மாறி செய்வது இது ஒரு மைன்ட் கேம் போல்…. மகியின் யோசனையின் போது, இந்த செயல் வெளிப்படும் அவனிடம்..

இப்படி ஒரு நிலையில் அவனை பார்த்ததும் துர்காவிற்கு திருப்தியே அவனை பார்த்தபடியே இருக்க. வினோ தான் “மகி ஒரு பத்து நாள் சென்று பேசலாம், முதலில் அவளிற்கு புரிய வை, துர்காவ ப்ரீயா விடு, இல்ல அவ சொன்ன மாறி வேறு ஏதாவது யோசிக்கலாம்” என்றான்.

மகி அதே யோசனையுடன் எழுந்து சென்றான், யாரையும் பார்க்கவில்லை.

ஒரு முடிவை ஒத்தி வைப்பதே…. அவர்களின், முதல் தோல்வி. இதுவே இப்போது துர்காவின் முதல் வெற்றியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!