Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 13

பிடித்தம் 13

 

அலுவலகத்திற்கு வந்த புகழ்வேந்தன் சதீஷை அழைத்து, “கல்யாண ஏற்பாட்டை ரொம்ப சிறப்பா செய்யணும்.. எல்லாமே பெஸ்ட்டா இருக்கணும்..”

 



Advertisement

“சூர் பாஸ்.. நான் பார்த்துக்கிறேன்”

 

“எல்லாத்தையும் நீயே நேரிடையா செய்ற”

Advertisement

 

Advertisement

“எஸ் பாஸ்”

 

“பாட்டு போடுறதில் இருந்து சாப்பாட்டு மெனு வரை நான் சொல்றது தான் போடணும்”

Advertisement

 

“கண்டிப்பா பாஸ்”

 

“அந்தாளு தர பணத்தை ஏதாவது அநாதை ஆசிரமத்திற்கு அனுப்பிடு.. கல்யாண செலவு முழுவதும் நம்மோடதா தான் இருக்கணும்”

 

“ஓகே பாஸ்”

 

“முக்கியமான விஷயம்.. வரவேற்பில் மனோஜ் வெட்ஸ் னு எந்த பனரோ பூ அலங்காரமோ இருக்கக் கூடாது.. கல்யாணத்தன்னைக்கு ஏதாவது காரணத்தை சொல்லி கம்பன்ஷேஷன் அமௌன்ட் கொடுத்திடு”

 

“ஓகே பாஸ்”

 

“கல்யாணத்திற்கு வரவங்களுக்கு கொடுக்க எங்க பெயர் போட்ட தாம்பூல பை ரெடி பண்ணு.. பெரிய பையாவே இருக்கட்டும்.. அதோட சேர்த்து மரக்கன்னு கொடுக்க ஏற்பாடு பண்ணு.. கல்யாணத்திற்கு அடுத்த வாரம் ரிசெப்ஷன் வச்சிக்கலாம்.. ரிசெப்ஷன் இன்விடேஷன் டிசைன் பார்த்து சொல்றேன்.. நாளைக்கு பிரிண்டிங் கொடுத்திடலாம்.. ரிசெப்ஷனுக்கு இன்வைட் பண்ற வேலையை கல்யாணதிற்கு அடுத்த நாளில் இருந்து ஆரம்பிக்கலாம்.. ரிசெப்ஷன் அன்னைக்கும் மரக்கன்னு கொடுக்கணும்..  அப்பறம் பெஸ்ட் பியுடிஷியன் யாரு னு விசாரிச்சு புக் பண்ணு..”

 

சதீஷ் சிறு அதிர்ச்சியுடன் பார்க்க, புகழ்வேந்தன், “எல்லாமே நம்மோட ஏற்பாடாவும் செலவாவும் தான் இருக்கணும்” என்றான்.

 

“ஓகே பாஸ்.. எல்லாமே சூப்பரா பண்ணிடலாம்” என்றவன், “பாஸ்” என்று அழைத்து தயங்கி நிறுத்த, புகழ்வேந்தன் ‘என்ன?’ என்பது போல் பார்த்தான்.

 

சதீஷ், “முகூர்த்த புடவை!” என்று இழுத்து நிறுத்த,

 

புகழ்வேந்தானோ அலட்டிக்காம, “பியுடிஷியன் நம்ம ஆள் தானே! பார்த்துக்கலாம் விடு” என்றான்.

 

சதீஷ் பிரம்மிப்புடன் ‘சரி’ என்று தலையை ஆட்டினான்.

 

புகழ்வேந்தன் அடுத்து அலுவலக வேலைகளைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

 

—————————————————————————————————————————————————

 

ஆடை தொழிலகத்தில் இருந்து கிளம்பிய பிரசாத்தின் கையில் அவனது வண்டி சாலையில் சீறிப் பாய்ந்தது. அவனது கோபத்தின் அளவிற்கு ஏற்ப வண்டியின் வேகம் கூடியது.

அவனது மனமோ “ச ஜஸ்ட் மிஸ் ஆகி இருக்குது.. மனோக்கு முன்னாடி நான் என் காதலை சொல்லி இருந்தா என் காதலை என் மித்து ஏற்று இருப்பா.. ச இப்படி மிஸ் பண்ணிட்டேனே!” என்று அரற்றியது. இயலாமை தந்த கோபத்தில் ஊர்தி இயக்காழியில் (STEERING WHEEL) பல முறை ஓங்கி குத்தினான்.

 

ஆள் அரவமற்ற இடத்தில் வண்டியை நிறுத்தியவன் கோபம் சற்று மட்டு பட்டதும் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான். ‘இனி மித்து கிட்ட பேச முடியாது.. என் காதலை சொன்னாலும் இப்போ இருக்கிற மனநிலையில் கண்டிப்பா ஏற்க மாட்டா.. ஏதாவது செய்து அத்தையை தான் குழப்பி விடனும்’ என்று யோசித்தவன் ஒரு முடிவிற்கு வந்தான். அடுத்து, சில நிமிடங்கள் யாருடனோ கைபேசியில் பேசினான். பிறகு வண்டியை திருப்பி அலுவலகத்திற்கு சென்றான்.

 

—————————————————————————————————————————————————

 

மனோஜ் கிளம்பி சென்றதும் மித்ராணி ஒருவாறு மனதை வேலையில் திசை திருப்பி வேலையை தொடங்கிய போது அவளது கைபேசி சிணுங்கியது. அழைத்தது அவளது அன்னை.

 

அழைப்பை எடுத்தவள், “சொல்லு மா” என்றாள்.

 

“இன்னைக்கு சாயுங்காலம் மாமா வீட்டிற்கு வர சொன்னா…………”

 

“என்ன நினைச்சிட்டு இருக்கார் உன் அண்ணன்?” என்று இவள் எகிற,

 

கமலா, “மித்ரா இப்படி பேசாத னு சொல்லிட்டே இருக்கிறேன்.. கேட்கிறியா? அதுவும் இனி உனக்கு அவர் தாய்மாமா மட்டுமில்லை”

 

“அதுக்காக!!! அவர் நினைச்சா கூப்பிடுவார்.. உடனே நாம அங்கே ஓடணுமா? ஏன் அவர் நம்ம வீட்டிற்கு வந்து பேச மாட்டாரா? கல்யாண விஷயம் முறையா அவர் தானே நம்ம வீட்டிற்கு வந்து பேசணும்?”

 

“அது.. எல்லோரையும் கூட்டிட்டு வரணும்.. நாம ரெண்டு பேர் தானே!” என்று கமலா அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசி சமாளிக்க பார்க்க,

 

மித்ராணி அன்னை மீது எழுந்த கோபத்தை அடக்கியபடி, “வெளியில் பொண்ணு எடுத்து இருந்தால் எல்லோரையும் கூட்டிட்டு தானே போவர்.. நாம எதில் குறைந்து போய்ட்டோம்?” என்று வினவினாள்.

 

கமலா பதில் சொல்வதறியாது, “மித்து விடேன்..” என்று சிறு திணறலுடன் கூற,

 

அவள் இப்பொழுது கோபக் குரலில், “எல்லாம் உன்னால் தான் மா.. அவரை அதிகமா நம்புறது, அவர் சொல்றதுக்கு எல்லாம் வளைந்து போறது னு நீ பண்றது மட்டும் இல்லாம இப்போ என்னையும் அப்படி மாத்த பார்க்கிற..”

 

“அது இல்லை டா…………..”

 

“சரி கூப்பிட்டது தான் கூப்பிட்டார் அதை எனக்கு போன் பண்ணி கூபிட்டாரா? என்னால் வர முடியாது னு சொல்லிடு.. உன்னிடம் தானே சொன்னார் ஸோ நீயே உன் நொண்ணனிடம் சொல்லிடு” என்றாள் குறையாத கோபத்துடன்.

 

“ச்ச் ஏன்டி இப்படி படுத்துற?”

 

“நான் படுத்துறேனா? நியாமானதைச் சொன்னேன்.. எங்க நான் சொன்னது தப்பு னு சொல்லு பார்ப்போம்!”

 

“சரிடி இந்த ஒரு தடவை வா.. இனி நான் சொல்றேன்”

 

“யாரு நீ?” என்று அவள் நக்கலுடன் வினவ,

 

“ஏன்டி எல்லாம் கூடி வர நேரத்தில் இப்படி பண்ற?” என்று அவர் சிறு கவலையுடனும் ஆதங்கத்துடனும் கூற,

 

மித்ராணி, “சரி சரி.. இந்த ஒரு முறை மட்டும் வரேன்.. அதுவும் உனக்காகத் தான்” என்று அன்னைக்காக இறங்கி வந்தாள்.

 

கமலா ‘அப்பாடி’ என்று பெருமூச்சை விட்டு முடிக்கவில்லை, அவள், “எதுக்கு வர சொன்னார்?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.

 

“அது.. நான் கேட்கலையே!”

 

“அம்மா!” என்று மித்ராணி பல்லை கடிக்க,

 

கமலா, “அங்கே போனா தெரிந்திட போகுது.. இதுக்கு ஏன்டி டென்ஷன் ஆகுற?” என்றார் சமாளிக்கும் விதத்தில்.

 

“இதான் லாஸ்ட்.. இன்னொரு தடவை இப்படி பண்ணார்! நீ சொல்லலைனாலும் நானே அவரிடம் பேசிக்கிறேன்” என்றாள் கறார் குரலில்.

 

“சரிடி.. இன்னைக்கு வா” என்றவர், “மனோ கிட்ட பேசிட்டியா?” என்று கேட்டார்.

 

“உன் கிட்ட என்ன சொன்னேன்?”

 

“மித்து இது உன் வாழ்க்கை.. தேவை இல்லாத கோபத்தை விட்டுட்டு சந்தோஷமா இருக்கிற வழியை பார்”

 

“என் கோபம் தேவை இல்லாததா?”

 

“நடந்தது நடந்து போச்சு.. நீ கோபப் படுறதால் நடந்தது மாறிட போகுதா? அதுவும் நடந்ததை நீ சரி செய்த பின் எதுக்கு இவ்ளோ கோபம் உனக்கு?”

 

“நடந்ததை மாத்த முடியாது தான் ஆனா இனி இப்படி நடக்காம பார்த்துக்க முடியும் தானே! அதுக்கு இந்த கோபம் தேவை தான்.. உன் அண்ணன் மகனுக்கு காவடி தூக்காம போய் உருப்படியான வேலை எதையும் பார்.. என்னையும் வேலை செய்ய விடு.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

 

இரண்டு குவளை தண்ணீரை பருகிய கமலா ‘இப்பவே கண்ணக் கட்டுதே! இந்த கல்யாணம் முடியிறதுக்குள் இவ என்ன பாடு படுத்தப் போறாளோ!’ என்று நினைத்தபடி இருக்கையில் சற்று தளர்வுடன் அமர்ந்தார்.

 

 

மாலையில் மீண்டும் மகளை கைபேசியில் அழைத்த கமலா அவள் அழைப்பை எடுத்ததும், “மித்து என்ன பண்ணிட்டு இருக்க? மாமா வீட்டுக்கு போகணும் னு சொன்னேனே!”

 

வேலையில் மும்மரமாக இருந்தவள், “நியாபகம் இருக்குது மா.. வேலை இருக்குது.. நான் கிளம்ப இன்னும் ஹாஃப் அன் ஹவர் ஆகும் மா”

 

கமலா கோபத்துடன் சற்று குரலை உயர்த்தி, “என்னடி சொல்ற? மணி இப்பவே……………”

 

“அம்மா! இது முக்கியமான வேலை.. இன்னைக்கே முடிச்சாகணும்.. உன் அண்ணனுக்கும் தெரியும்” என்றவள், “ஏன் உன் அண்ணன் மருமகளுக்காக கொஞ்ச நேரம் காத்திருக்க மாட்டாரா?” என்று கோபம் கலந்த நக்கலுடன் வினவினாள்.

 

“ஏன்டி இப்படி பண்ற?”

 

“எப்படி பண்றேன்?”

 

“மித்ரா!”

 

“இப்போ நீ தான் மா டைம் வேஸ்ட் பண்ற.. போனை வை.. நான் சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்பி வரேன்” என்றவள் அவர் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தும் இருந்தாள்.

 

பெருமூச்சை வெளியிட்ட கமலா, ‘இவளோட அடாவடிக்கு பொறுமையான மனோ தான் சரி.. பிரசாத்தா இருந்தால் ரெண்டும் முட்டிக்க தான் செய்யும்.. நல்லவேளை!’ என்று மனதினுள் நினைத்தார்.

 

மகளை விட பெரிய அடாவடியுடன் தான் மகளின் வாழ்க்கை அமையப் போகுது என்பதை பாவம் அவர் அறியவில்லை.

 

சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் வேலையை முடித்து கிளம்பிய மித்ராணி வீட்டிற்கு சென்றதும் பசிக்கிறது என்று கூறி சிற்றுண்டியை நிதானமாக உண்டுவிட்டே அன்னையை அழைத்துக் கொண்டு கிருபாகரன் வீட்டிற்கு சென்றாள். அன்னையின் முறைப்பை அவள் கண்டுக் கொள்ளவே இல்லை.

 

இவளது வண்டி(கார்) கிருபாகரனின் வீட்டின் உள்ளே நுழைந்த அதே நேரத்தில் தான் பிரசாத்தின் வண்டியும் உள்ளே நுழைந்தது.

 

பிரசாத்திற்கு ஒரு முக்கியமான வாடிக்கையாளருடன் சந்திப்பு இருந்ததால் அவன் தாமதமாக வந்தான். இந்த சந்திப்பை பற்றி அறிந்திருந்த கிருபாகரன் வேண்டுமென்றே பிரசாத் வருவதற்கு முன்பு கல்யாண விஷயத்தை பற்றி பேசிவிட எண்ணி தான் அந்த சந்திப்பு நேரத்தை கணக்கிட்டு தங்கையிடம் நேரத்தை கூறி இருந்தார். ஆனால் மித்ராணி அவளையும் அறியாமல் அதை முறியடித்து இருந்தாள்.

 

மித்ராணி வீட்டினுள் செல்லும் போது பிரசாத்தை பார்த்து சிரிக்க, அவனோ ஒரு வெற்று பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றான். ‘இவனுக்கு என்னாச்சு?’ என்ற யோசனையுடன் மித்ராணி உள்ளே சென்றாள்.

 

பிரசாத் உள்ளே சென்றதும் மல்லிகா, “ஏன் டா லேட்?” என்று வினவ,

 

பிரசாத் ‘என்ன புதுசா கேட்கிறாங்க?’ என்று மனதினுள் நினைத்தபடி, “ஏன் என்னாச்சு?” என்றான்.

 

மல்லிகா, “அப்பா மனோ மித்து கல்யாண விஷயமா பேசணும் னு சீக்கிரம் வரச் சொன்னாரே!”

 

“ஓ”

 

“என்னடா?”

 

“எத்தனை மணிக்கு வர சொன்னார்?”

 

“ஆறு மணிக்கு.. ஏன் உனக்கு தெரியாதா?”

 

“உன் வீட்டுகாரர் என்னிடம் எதுவும் சொல்லலை.. சொல்லப் போனால் நான் வரதுக்கு முன்னாடி பேசி முடிக்கத் தான் பிளான் பண்ணி இருக்கார்” என்றவன் மென்னகையுடன், “ஆனா ஆண்டவன் என் பக்கம் இருக்கான் மா.. அதான் மித்து லேட்டா வந்து இருக்கா” என்றான்.

 

மல்லிகா ஏதோ சொல்ல வர, அப்பொழுது அங்கே மித்ராணியும் கமலாவும் வரவும் அவர், “வாங்க அண்ணி.. வா டா..” என்றவர், “ஜூஸ் குடிக்கிறீங்களா?” என்று உபசரித்தார்.

 

கமலா, “எனக்கு வேண்டாம் அண்ணி” என்றார்.

 

மல்லிகா மித்ராணியை பார்க்க, அவளோ மென்னகையுடன், “நான் வீட்டில் சாப்டுட்டு தான் வரேன்.. உங்க ஆத்துக்காரருக்கு வேணா கொடுங்க.. ஏன்னா.. நான் வர லேட் ஆனதில் அவர் தான் இப்போ சூடா இருப்பார்”

 

“அப்படியெல்லாம் இல்லை டா” என்று மல்லிகா சமாளிக்கப் பார்க்க,

 

மித்ராணி புன்னகையுடன், “சரி வாங்க உள்ளே போய் பார்த்திடுவோம்” என்றவள் பிரசாத்தை பார்த்து, “எனக்கு XXX ஆர்டர் டிசைன்ஸ் முடிக்கிற வேலை இருந்துது.. நீ ஏன் லேட்?”

 

“கிளைன்ட் மீட்”

 

“திடீர் மீட்டிங்கா?”

 

“இல்லை.. ஏன் கேட்கிற?”

 

“மாமா வர சொன்ன டைம் உனக்கு கிளாஷ் ஆகுதே அதான் கேட்டேன்”

 

“உங்க கல்யாண விஷயம் பேசுறப்ப நான் அவசியம் இல்லை னு நினைத்து இருப்பார்” என்று அலட்சிய பாவத்துடன் தோள் குலுக்கியபடி அவன் கூற,

 

மித்ராணி, “அது எப்படி அவசியம் இல்லாம போகும்?” என்று வினவினாள்.

 

பிரசாத் பதில் சொல்வதற்கு முன் மல்லிகா அவசரமாக, “உள்ளே போலாமே மித்து.. மாமாவும் மனோவும் நமக்காக தான் வெயிட் பண்றாங்க” என்றார்.

 

மித்ராணி சிறு தோள் குலுக்களுடன் உள்ளே செல்ல, பிரசாத் சிறு இகழ்ச்சி புன்னகையுடன் அன்னையை பார்த்துவிட்டு உள்ளே சென்றான். மகனின் அந்த பாவம் வலியை தர, இதில் தன்னால் எதுவும் செய்ய முடியாதே என்ற வருத்தத்துடன் மல்லிகா உள்ளே சென்றார்.

 

அனைவரும் அலுவலக அறையினுள் வந்ததும் கிருபாகரன், “வர 24, புதன் கிழமை ஆறு டு ஏழரை முகூர்த்ததில் மனோ மித்ரா கல்யாணம்.. RL கல்யாண மண்டபத்தை புக் பண்ணியிருக்கிறேன்” என்றார்.

 

இதை கேட்டு அனைவருக்குமே சற்று அதிர்ச்சி தான். மனோஜ் மட்டுமே மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருந்தான். மல்லிகா பிரசாத்தின் முகத்தை பார்த்தபடி சிறு கலவரம் கலந்த கவலையுடன் இருக்க, ஒருவாரம் தானே இருக்கிறது என்று சிறு பதற்றத்துடன் கமலா இருக்க, பிரசாத்தும் மித்ராணியும் கோபத்துடன் இருந்தனர்.

 

கமலா, “இன்னும் ஒரு வாரம் தானே ணா இருக்குது! அதுக்குள்ளே எப்படி?”

 

கிருபாகரன், “நான் பார்த்துக்கிறேன்.. கவலைப்படாத” என்று கூற,

 

மித்ராணி, “எதுக்கு இவ்ளோ அவசரமா கல்யாணத்தை முடிவு பண்ணீங்க?”

 

‘இப்பலாம் நான் எது சொன்னாலும் போர்க் கொடியை தூக்குறா’ என்ற எரிச்சலுடனும் சிறு கோபத்துடனும், “ஏன் அதனால் என்ன?”

 

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”

 

“எதுக்கு?”

 

“எதுக்குனா! எனக்கு இப்படி அவசர அவசரமா கல்யாணம் செய்றதில் உடன்பாடு இல்லை.. குறைந்தது ரெண்டு இல்லை மூணு மாசம் கழிச்சுத் தான் கல்யாணம் பண்றதா இருந்தேன்”

 

“ஏன் இப்போ கல்யாணம் பண்றதில் உனக்கு என்ன பிரச்சனை?”

 

மித்ராணி எரிச்சலுடன், “ச்ச்.. எனக்கு டைம் வேணும்..”

 

“அதான் எதுக்கு னு கேட்கிறேன்”

 

“நான் மெண்டலி பிரிப்பர் ஆகணும்”

 

“காதலிச்சவனை தானே கல்யாணம் செய்துக்க போற? அதுவும் புது ஆளுங்க இல்லாம இங்கே தான் வரப் போற! அதில் என்ன நீ மெண்டலி பிரிப்பர் ஆகணும்?”

 

‘உங்க மகன் மேல் எனக்கு நம்பிக்கை வரலை’ என்று சொல்ல முடியாமல் மனோஜை முறைத்தாள்.

 

கிருபாகரன், “அவனை எதுக்கு முறைக்கிற? நான் முடிவு பண்ணிட்டேன்…………..”

 

மித்ராணி கோபத்துடன் வெடித்தாள், “எல்லாமே உங்க முடிவு தானா? இது எங்க கல்யாணம்.. எங்களிடம் கேட்கணும் னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா? எல்லா விஷயத்திலும் நீங்களே முடிவு எடுக்கிறீங்க.. அதில் சம்பந்தப்பட்டவங்களுக்கு விருப்பம் இருக்குதா இல்லையா! அதெல்லாம் உங்களுக்கு கவலையே இல்லை.. நீங்க ஒன்னு நினைச்சா நடக்கணும்!”

 

கமலா, “மித்ரா என்ன பேச்சு இது?” என்று கண்டிக்க,

 

பிரசாத், “நீங்க சும்மா இருங்க அத்தை.. மித்து சரியா தான் கேட்கிறா” என்றவன் மித்ராணியை பார்த்து, “நல்ல கேளு மித்து.. இத்தனை நாள் நான் தனியா போராடிட்டு இருந்தேன்..” என்றான்.

 

பின் தந்தையை பார்த்து, “மித்து சொல்றது சரி தானே! எதுக்கு இவ்ளோ அவசர அவசரமா கல்யாணம் பண்ணனும்? நம்ம குடும்பத்தில் முதல் கல்யாணம்.. நிதானமா சிறப்பா செய்யலாமே?” என்றான்.

 

கிருபாகரன் பிரசாத்தை முறைக்க அவனோ கண்ணில் சிரிப்புடன் சவால் விட்டான்.

 

கிருபாகரன் மித்ராணியை பார்த்து, “கல்யாண மாப்பிள்ளை உன் விருப்பம் போல தானே முடிவாகி இருக்குது?”

 

“முடிவாக வச்சிருக்கிறேன்” என்றவள் மனோஜை கடுமையாக முறைத்தாள்.

 

கிருபாகரன், “அந்த விஷயத்தில் நான் விட்டு கொடுத்தேன் தானே! இப்போ நான் சொல்றதை நீ கேளு” என்றவர், “நான் கல்யாண பத்திரிக்கை அடிக்க கொடுத்துட்டேன்.. இதில் மாற்றம் இல்லை” என்றார்.

 

சட்டென்று எழுந்து நின்ற மித்ராணி, “என்னது கல்யாண பத்திரிக்கை அடிக்க கொடுத்துட்டீங்களா? எங்களிடம் அபிப்பிராயம் கேட்க கூட இல்லை” என்றவள், “பேசாம நீங்களே கல்யாணத்தையும் பண்ணிக்கோங்களேன்” என்றாள் கடுப்புடனும் கோபத்துடனும்.

 

கமலா, “மித்ரா” என்று கோபத்துடன் குரலை உயர்த்த,

 

மித்ராணி எரிச்சலுடன் “ப்ச்” என்றபடி இருக்கையில் அமர்ந்தாள். மனோஜ் வலியுடன் மித்ராணியை பார்த்துக் கொண்டிருக்க, பிரசாத் மகிழ்ச்சியுடன் மித்ராணியை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

கமலா, “ஏதோ டென்ஷனின் பேசுறா.. தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா..” என்றவர், “நீங்க சொன்ன தேதியில் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்று உறுதியான குரலில் கூறினார்.

 

சில நொடிகள் மௌனத்தில் கழிய கிருபாகரன் மித்ராணி அருகே வந்து, “நான் உனக்கு நல்லது தான் பண்றேன்” என்றவரின் பார்வை ஒரு நொடி பிரசாத்திடம் சென்று மீண்டது.

 

கிருபாகரன், “சொந்தகாரங்க பிஸ்னஸ் சர்க்கிளில் நான் கொடுக்கிற கல்யாண பத்திரிக்கை தான் அடிக்க கொடுத்து இருக்கிறேன்.. உங்க பிரெண்ட்ஸ்க்கு கொடுக்கிறதுக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணிக்கோங்க” என்றவர் பின் பொதுவாக பார்த்து, “நாளைக்கு நாள் நல்லா இருக்குது.. முகூர்த்த சேலையும் மத்த ட்ரெஸ் எல்லாம் நாளைக்கே எடுத்திரலாம்.. பத்து மணிக்கு கிளம்பணும்” என்று விட்டு அவர் வெளியேறப் போக,

 

மித்ராணி இறுகிய குரலில், “கல்யாணம் முடிந்ததும் கார்மென்ட்டை நான் சார்ஜ் எடுத்துக்கிறேன்” என்றதும் கிருபாகரன் நின்று திரும்பி பார்த்தார்.

 

கமலா ஏதோ சொல்ல வர அவளது பார்வையில் அமைதியானார்.

 

கிருபாகரன், “அதை கல்யாணத்துக்கு அப்பறம் பார்க்கலாம்” என்று கூறி நடக்க ஆரம்பிக்க,

 

மித்ராணி, “பார்த்துக்கலாம் இல்லை.. நான் சார்ஜ் எடுக்கிறேன்” என்று உறுதியான குரலில் கூறினாள்.

 

மனோஜ் ஏதோ கூற வர, மித்ராணி, “வாய் திறந்த கொன்னுடுவேன்” என்று மிரட்டியதில் வாயை இறுக மூடிக் கொண்டான்.  

 

கிருபாகரன் பொத்தம் பொதுவாக தலையை ஆட்டிவிட்டு வெளியேறினார். கமலாவும் மல்லிகாவும் கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

மனோஜ் மித்ராணியின் மறுப்பு தந்த வலியும், ஒரு வாரத்தில் தன் மனம் கவர்ந்தவள் தன் மனைவி என்ற எண்ணம் தந்த மகிழ்ச்சியும், ஆடை தொழிலகத்தை பற்றி மித்ராணி பேசியதால் ஏற்பட்ட கலவரமும் என்று கலவையான உணர்ச்சிகளின் பிடியில் இருந்தான்.

 

பிரசாத்தோ ‘ச.. மிஸ் ஆகிடுச்சே!’ என்று ‘வடை போச்சே!’ என்ற உணர்வுடனும் காலையில் எடுத்த முடிவை நாளைக்கே செயல் படுத்த வேண்டும் என்ற உறுதியுடனும் இருந்தான்.

 

“மா.. கிளம்பலாம்” என்றபடி எழுந்த மித்ராணி மல்லிகாவை பார்த்து, “நாங்க கிளம்புறோம் அத்தை” என்றுவிட்டு அன்னையுடன் கிளம்பிச் சென்றாள்.

 

 இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!