ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 22
பிடித்தம் 22
தன்னை பெண் பார்க்க வந்தவர்களைப் பார்த்து அதிர்ச்சியுடன் எழுந்து நின்ற மாலினி அடுத்த நொடி தந்தையை கட்டிக் கொண்டு லேசான ஆனந்த கண்ணீருடன், “லவ் யூ பா” என்றாள்.
அருணாச்சலம் புன்னகையுடன், “மாப்பிள்ளை கிட்ட சொல்ல வேண்டியதை என் கிட்ட சொல்ற” என்று கிண்டலாகக் கூற,
Advertisement
“அவர் கிட்ட தனியா சொல்லிக்கிறேன்” என்றாள்.
Advertisement
புஷ்பா மகிழ்ச்சியுடன் அருணாச்சலத்தை பார்த்து, “என் கிட்ட கூட சொல்லலையே!” என்று கூற,
Advertisement
“சும்மா சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும் னு தான்” என்ற அருணாச்சலம் மகளைப் பார்த்து, “அப்பாவோட பர்த்டே கிப்ட் எப்படி டா?”
Advertisement
மீண்டும் இறுக்கமாக அணைத்து, “சூப்பர் பா..” என்றவள், “ஆனா எப்படி?” என்று வினவ, மாப்பிள்ளை வீட்டார் இவர்களை நெருங்கவும் அருணாச்சலம், “வீட்டுக்கு போய் சொல்றேன் டா..” என்றார்.
மாப்பிள்ளை யாரென்று நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்து இருக்குமே! ஆம் மாலினியை பெண் பார்க்க வந்திருப்பது வெற்றிவேலின் குடும்பம் தான். மாப்பிள்ளையான வெற்றிவேலும் அவனது உடன் பிறப்பான யாழினியும் தான் அதிர்ச்சியுடன் நின்றது. அவர்கள் ஏன் அதிர்ச்சி அடைந்தார்கள் என்று பிறகு பார்ப்போம், இப்போது பெரியவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம் வாங்க……….
வெற்றிவேல் குடும்பம் வந்ததும் அருணாச்சலம் புன்னகையுடன் கைகூப்பி வணங்கியபடி, “வாங்க வாங்க” என்று வரவேற்க, புஷ்பாவும் அவ்வாறே வரவேற்றார்.
வெற்றிவேலின் பெற்றோரும் புன்னகையுடன் கைகூப்பி வணக்கம் கூற, யாழினி புன்னகையுடன் மாலினியின் கையை பற்றியபடி, “ஹாய் அண்ணி” என்றாள் மகிழ்ச்சியுடன்.
யாழினியிடம் சிரித்தபடி, “ஹாய்” என்ற மாலினியின் பார்வை எதிர்பார்ப்புடன் வெற்றிவேலைத் தான் நோக்கியது.
ஆனால் வெற்றிவேலோ இறுக்கத்துடன் மாலினியை பார்க்காமல் நின்றுக் கொண்டிருந்தான்.
வெற்றிவேலின் தந்தை, “சுத்தி வளைச்சு பேசாம நேரா விஷயத்துக்கே வரேன்.. நாளானைக்கும் முகூர்த்த நாள் தான்.. அன்னைக்கே ஜோசியரை பார்த்து இவங்க கல்யாணத்திற்கு நாள் குறிச்சிரலாமா?”
ஒரு நொடி புஷ்பாவின் முகத்தை பார்த்த அருணாச்சலம் அடுத்து மாலினியை பார்த்தார். மாலினியின் பார்வை வெற்றிவேலிடமே இருக்கவும் அவர் வெற்றிவேலின் தந்தையை மகிழ்ச்சியுடன் பார்த்து தலையை ஆட்டியபடி, “அன்னைக்கே கல்யாணத்திற்கு நாள் குறிச்சிரலாம்” என்றார்.
வெற்றிவேல் ஏதோ கூற வர, அவனது அன்னை கண்டிப்பான குரலில், “பொண்ணை முடிவு செய்ததோடு உன் வேலை முடிந்தது” என்றவர் அருணாச்சலத்தை பார்த்து, “நீங்களே சொல்லுங்க அண்ணா.. நானும் நாலு வருஷமா இவன் கல்யாணத்தை பத்தி பேசுறேன் கொஞ்சமாவது பிடி கொடுத்து பேசினானா? அட்லீஸ்ட் மாலினி மேல் இருக்கும் விருப்பத்தையாவது சொல்லி இருக்கலாம் தானே! கேட்டா நூற்றில் ஒரு பங்காக ஒருவேளை அவள் என்னை விரும்பலை னா அவ பெயர் வெளி வரதை நான் விரும்பலை, என் காதல் என்னோடவே இருந்திருக்கும் னு சொல்றான்” என்று கூற,
அதை கேட்டு மாலினியின் பெற்றோருக்கு வெற்றிவேலை இன்னும் பிடித்தது.
வெற்றிவேலின் தந்தை, “சரி விடு.. அதான் இப்போ எல்லாம் சரியாகிடுச்சே” என்றவர் அருணாச்சலத்தை பார்த்து, “அடுத்த மாசம் இருவத்தி ஏழாம் தேதி எங்க ரெண்டாவது பொண்ணு யாழினிக்கு கல்யாணம்.. வீட்டுக்கு முறையா வந்து பத்திரிக்கை வைக்கிறோம்.. கண்டிப்பா வாங்க.. இவங்க கல்யாணத்தை ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வச்சிக்கலாமா?”
மாலினி தந்தையின் கையை பிடிக்க, வெற்றிவேலின் அன்னை அவளை பார்த்து, “என்ன சொல்லணுமோ நீயே சொல்லு.. நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்” என்றார்.
ஒரு நொடி தந்தையின் முகத்தை பார்த்த மாலினி அவரது சம்மதம் கிடைத்த பின் வெற்றிவேலின் அன்னையை பார்த்து சிறு தயக்கத்துடனே, “இவரை பார்க்குறதுக்கு முன்னாடி அப்பா கிட்ட குறைந்தது ஒரு வருஷம் வேலை பார்த்த பிறகு தான் கல்யாணம் னு சொல்லி இருந்தேன்.. இப்போ அட்லீஸ்ட் ஆறு மாசம் வேலைக்கு போன பிறகு கல்யாணத்தை வச்சிக்கலாமா?” என்று கேட்டவள் வெற்றிவேலின் முகத்தையும் பார்த்தாள் ஆனால் அவன் தான் சிரித்த முகமாக நின்றாலும் இவள் பக்கம் திரும்பவே இல்லையே!
[the_ad id=”6605″]
மாலதி கணவரை பார்க்க, அவர் சம்மதமாக தலையை ஆட்டவும் மாலதி, “சரி மா.. உன் விருப்பம் போலவே செய்யலாம்” என்றார் புன்னகையுடன்.
மாலினி புன்னகையுடன், “தன்க் யூ அத்தை” என்றாள்.
மாலதி, “இன்னைக்கு கல்யாணத்தை உறுதி பண்றது மாதிரி யாழினி மாலினி தலையில் பூ வைக்கட்டும்” என்றபடி யாழினி கையில் மல்லிப்பூவைக் கொடுத்தார்.
யாழினி மாலினியின் தலையில் அந்த மல்லிப்பூவை வைக்க, சுந்தர்ராஜன் மெல்லிய குரலில் வெற்றிவேலுக்கு மட்டும் கேட்கும் குரலில், “என்னாச்சு டா? மாலினி உன்னையே பார்க்கிறா.. நீ ஏன் இப்படி இருக்கிற? இது உன்னோட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி.. எதையாவது யோசிச்சு மகிழ்ச்சியான தருணத்தை மிஸ் பண்ணிடாத” என்றார்.
“நான் பார்த்துக்கிறேன் பா” என்றவன் அருணாச்சலத்தை பார்த்து, “மாமா நான் மாலினியை வெளியே கூட்டிட்டு போகலாமா?”
“பார்த்து போயிட்டு வாங்க” என்றவர் சுந்தர்ராஜனை பார்த்து, “நாம அப்படியே பக்கத்தில் டின்னர் முடிச்சிட்டு கிளம்பலாமா?”
“சரி” என்றவர் மகனைப் பார்த்து, “நாங்க கொஞ்ச நேரம் கோவிலில் உட்கார்ந்துட்டு ரெஸ்டாரன்ட் போறோம்.. நீங்க ரெண்டு பேரும் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க”
“சரி பா” என்றவன் மற்றவர்களிடம் தலையசைப்புடன் விடை பெற்று மாலினியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
மாலினியும் அனைவரிடமும் தலை அசைத்து விடைபெற, புஷ்பா மெல்லிய குரலில், “பார்த்து.. பத்திரமா போயிட்டு வாங்க” என்று கூறி வழி அனுப்பினார்.
அவர்கள் கிளம்பியதும் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பேச ஆரம்பித்தார்கள்.
———————————————————————————————————————————————-
புகழ்வேந்தனின் கூற்றை கேட்டு மித்ராணி ஸ்தம்பித்து நின்றது சில நொடிகள் மட்டுமே.
புகழ்வேந்தனின் ஆழ்ந்த குரலும், காதலை சொல்லாமல் சொன்ன அவனது வார்த்தைகளும் மித்ராணியின் மனதை தீண்டியது. மனோஜ் காதலை சொன்ன போது சலனமின்றி இருந்த மனம் எப்படி இன்று தான் முதல் முறை பார்த்தவனின் கூற்றில் அதுவும் தன்னை கட்டாயக் கல்யாணம் செய்தவன் என்ற எண்ணம் எழவும் கோபத்துடன் அவனை முறைத்தவள், “இந்த கல்யாணத்தை நீ மதிக்கிறதா இருந்தா னு சொன்னேனே தவிர நான் இதை மதிப்பதா சொல்லலை.. அண்ட் நீ என்னை நினைச்சிட்டு இருக்கணும் னு எனக்கு எந்த நினைப்பும் இல்லை.. அண்ட் எனக்கும் உன் மேல் அப்படி ஒரு எண்ணம்……………..”
“வாராது னு சொல்லப் போறியா? நாம என்ன கடவுளா! எதிர்காலத்தை இப்பவே சொல்றதுக்கு!”
“என் மனதை பற்றி எனக்கு தெரியும்”
“அதை அப்பறம் பார்க்கலாம்.. நான் உன்னையே நினைக்கணும் னு நீ நினைக்காமல் இருக்கலாம் ஆனா என் மனம் என்றும் உன்னை தான் நினைக்கும்.. உன்னை மட்டும் தான் நினைக்கும்”
மீண்டும் மயில் இறகால் வருடியது போன்ற இதம் கண்ட மனதை கோபம் என்ற உணர்வில் இழுத்துப் பிடித்தவள், “உன் நினைப்பைப் பற்றி எனக்கு கவலை இல்லை” என்றுவிட்டு வெளியேற திரும்ப,
அவன், “இந்த கல்யாணத்தை மதிக்காம தான் இங்க இருக்கிறியா?”
சட்டென்று திரும்பி நக்கலாக சிரித்தவள், “இந்த மஞ்சள் கயிறு மஜிக் அது இது னு என் மனம் மாறிடும் னு பேராசைப்படாத..”
“மஞ்சள் கயிறு மஜிக்கை நம்பலை ஆனா என் நேசம் உன்னை மாற்றும்”
மேலும் நக்கலாக சிரித்தவள், “ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகுது”
“என் உடம்பு தானே!” என்றவன், “என் நலனில் அவ்வளவு அக்கறையா?” என்று புருவம் உயர்த்தி வினவ,
“எனக்கு ஏன் உன் மேல் அக்கறை இருக்க போகுது!” என்று அலட்சிய குரலில் ஆரம்பித்தவள் பிறகு, “நான் ஏன் இங்கே இருக்கிறேன் னு கேட்டியே! என்னை கட்டாயக் கல்யாணம் செய்த உன்னை இப்படியே சும்மா விடுறதா?” என்று கோபக் குரலில் முடித்தாள்.
அவனோ சுவாரசிய குரலில், “ஹ்ஹும்” என்றான் மீண்டும் புருவம் உயர்த்தி.
அவள் அதிகரித்த கோபத்துடன், “ஏன் டா இவளை கல்யாணம் பண்ணோம் னு உன்னை நினைக்க வைப்பேன் டா” என்று சவாலிட,
“ஆல் தி பெஸ்ட்” என்று அவன் மென்னகையுடன் கூற அவள் கோபத்துடன் வெளியேறினாள்.
அவள் சென்றதும் உப்பின் கரிப்பை போக்க அறையினுள் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை வேகமாக அவன் பருக,
“என்ன! உப்பு கரிக்குதா! உப்பிட்டவரை உள்ளளவும் நினை –ங்கிற பழமொழியை விட உப்பைத் திண்ணவன் தண்ணி குடிப்பான் தான் உனக்கு பொருந்தும்” என்று அவள் கூற,
அவளை நிதானமாக நெருங்கியபடி, “உப்பு கரிப்பை தண்ணி குடிச்சுத் தான் சரி பண்ணும் னு இல்லை” என்று கூறி நிறுத்தியவனின் பார்வை அவளது இதழலில் பதியவும்,
அருகில் இருந்த மேஜையில் பழங்களுடன் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்தவள், “கிட்ட வந்த உன் கையை அருத்திருவேன்” என்று கோபத்துடன் மிரட்டினாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் வெகு சுலபமாக அவள் கையில் இருந்த கத்தியை பிடுக்கி வீசிவிட்டு அவளின் கையை இறுக்கமாக பிடித்து அவளை சுழட்டிப் பிடித்து நிறுத்தினான். அவள் பின்னால் நின்றவன் அவளை அணைக்கவில்லை ஆனால் அவளது வலது கை மணிக்கட்டு அவனது இடது கையில் அகப்பட்டு இருக்க, அவள் அவனது கைகளுக்குள் நிற்க, இருவரின் உடலுக்கும் நூழிலை இடைவெளி மட்டுமே இருந்தது.
அவன் அணைத்திருந்தால் கூட கோபத்தை மட்டுமே உணர்ந்திருப்பாள் ஆனால் இப்படி இவ்வளவு நெருக்கத்தில் அணைக்காமல் அணைத்தாற்போல் நின்றது அவளை என்னவோ செய்ய, முதல் முறையாக பெண்மையை தீண்டிய உணர்வைப் பெற்றவள் அதிர்ந்தாள். ‘எப்படி இப்படி?’ என்ற குழப்பமும், சவால் விட்ட சிறிது நேரத்திலேயே எங்கே தன் மனம் அவனிடம் சாயத் தொடங்கி விடுமோ என்ற பயம் தந்த கோபமும் அவளை ஆட்க்கொள்ள கடுமையான வார்த்தைகளை உச்சரித்தாள்.
அவள் கோபத்துடன், “என் விருப்பம் இல்லாமல் நீ என்னை தொட்டால் நீ என்னை ரேப் பண்ணதுக்கு சமம்” என்று கூற,
தீ சுட்டாற்போல் அவளை விட்டு விலகி நின்றவன் அடக்கப்பட்ட கோபத்துடன், “என்னை பொறுத்தவரை மெத்தையில் வீரத்தை காட்டி பெண்ணை ஜெயிப்பவன் கோழையை விடக் கேவலமானவன் அற்பமானவன்”
“ஓ!” என்று ஏளனமாக உரைத்தவள், “அப்போ எந்த எண்ணத்தில் இப்போ கட்டி பிடிச்சிட்டு நின்ன?”
“நான் உன்னை கட்டி பிடிச்சிட்டு நின்னேனா?” என்று அழுத்தத்துடன் வினவ,
அவள், “கிட்டதிட்ட அப்படி தானே நின்ன! அந்த எண்ணம் இல்லாமல் எப்படி இப்படி நிற்ப?”
நிதானமாக அவளை ஏறிட்டவன் அமைதியான குரலில், “இப்போ எதுக்கு ஓவர் ரியாக்ட் பண்ணிட்டு இருக்க?”
“என்னது! நான் ஓவர் ரியாக்ட் பண்றேனா?”
“ஆமா”
அவள் வேக வேகமாக மூச்சை வெளியிட்டபடி முறைப்புடன் நிற்க,
அவன், “ஒன்னு உன் பயத்தை மறைக்க இப்படி ரியாக்ட் பண்ற இல்லை என் மனதில் இல்லாத எண்ணத்தை இப்படி பேசி பேசியே விதைக்கப் பார்க்கிற”
அவள் கடும் கோபத்துடன் மேஜை மீது இருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை அவன் முகத்தில் வேகமாக ஊற்றினாள்.
முகத்தை கையால் துடைத்த புகழ்வேந்தன், “இப்போ கோபம் போயிருச்சா?”
[the_ad id=”6605″]
“வெளியே போ” என்று கோபத்தை அடக்கிய குரலில் அவன் முகம் பார்க்காமல் அவள் கூற,
“என்ன!”
கோப விழிகளுடன் அவனை நோக்கியவள், “என்ன என்ன? இனி இது என் ரூமும் தானே.. எனக்கு இப்போ தனியா இருக்கணும்.. வெளியே போ”
அவன் அவளை சீண்டும் எண்ணத்துடன், “முடியாது னு சொன்னா?”
அவன் முதுகில் இரு கரங்களையும் வைத்து தள்ளியபடி அவனை அறையை விட்டு வெளியே நிறுத்தினாள். அவன் நினைத்து இருந்தால் அவளால் அவனை ஒரு அடி கூட நகர்த்தி இருக்க முடியாது. ஆனால் அவன் அமைதியாக அவளது இழுப்பிற்குச் சென்றான்.
அவள் கதவை மூட, அவள் மூடும் முன் அவன், “என்னை சொல்லிட்டு கடைசி நீ என்னை தொட்டு என்னை ரேப் பண்ணிட்டியே!” என்றான் மனதினுள் உல்லாசமான நகைப்புடன்.
பட்டென்று கதவை சிறிது திறந்தவள், “என்னவோ என் தொடுகை உனக்கு விருப்பம் இல்லாதது போல் ஸீன் போடாம இடத்தை காலி பண்ணு” என்றுவிட்டு கதவை மூடினாள்.
அறையை விட்டு வெளியே தள்ளப்பட்ட புகழ்வேந்தன் முகத்தில் கோபம் சிறிதும் இல்லை. அவனது தொடுகையை அவள் விமர்சித்த போது முதலில் கோபம் கொண்டான் தான் ஆனால் சற்று யோசித்தபோது அவள் தன்னை விலக்கி வைக்கவே இப்படி பேசுகிறாள் என்று புரிந்துக் கொண்டான். அத்துடன் இந்த கோபத்திலும் கூட அவள் ‘நீ என்னை தொடுவது’ என்று கூறாமல் ‘என் விருப்பம் இல்லாமல் தொடுவது’ என்று கூறியதை நினைத்து அவன் மனம் மகிழ்ச்சியே அடைந்தது. அதன் விளைவே கோபத்தை விடுத்து அவளைச் சீண்டினான்.
மித்ராணி கதவை சாற்றியதும் முதல் மாடியில் இருந்த கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் மித்ராணியை பற்றித் தான் யோசித்தான்.
கண்களை மூடியபடி அமர்ந்தவனின் மனக் கண்ணில் சற்று முன் நிகழ்ந்தது படமாக ஓடியது. சில நொடிகள் மட்டுமே நிகழ்ந்த அந்த நெருக்கத்திலேயே அவனது உணர்வுகளை தட்டி எழுப்பி ஆண் மகனாக உணர செய்திருந்தாள் அவனது இதயராணி. இப்பொழுது கூட அவள் தன் கைகளுக்குள் நிற்பது போல் ஒரு பிரம்மை தோன்ற பட்டென்று கண்களைத் திறந்தான்.
தலையை இருபுறம் ஆட்டி பெருமூச்சொன்றை வெளியிட்டவன் மனதினுள், ‘அவள் மனம் மாறும் வரை அவளை நெருங்கக் கூடாது’ என்று நினைத்துக் கொண்டான்.
பிறகு காலையில் இருந்து நடந்தவற்றை நினைத்துப் பார்த்தவன் மனதினுள், ‘ராணி மனோஜை விரும்பினாளா?’ என்ற சந்தேகம் எழுந்தது.
‘மனோஜ் என்னை கல்யாணம் செய்துக்க சொன்ன போது அவ கண்ணில் தவிப்போ வருத்தமோ இருந்தது போல் தெரியலையே கோபம் தானே இருந்தது! அது கூட மற்றவர்களிடம் இருந்து அவளது உணர்வுகளை மறைத்து இருக்கலாம்..’ என்று யோசித்தவன், ‘என்ன ஒரு நிமிர்வு! உன் நிமிர்வு இன்னும் இன்னும் என்னை உன் மீது பித்து பிடிக்க வைக்குது.. கொஞ்சம் கூட கலங்காம எப்படி என்னை எதிர்த்து நின்ன!’ என்று மனதினுள் அவளுடன் பேசியவனின் உதடுகள் காதலுடன் சத்தமின்றி, ‘லவ் யூ டி அல்லிராணி’ என்று முணுமுணுத்தது.
சில நொடிகள் கனவில் மிதந்தவன் பின் தலையை உலுக்கிக் கொண்டு, ‘ட்ராக் மாறாத வேந்தா.. முதலில் ராணியின் மனநிலை பற்றி யோசித்து முடி’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், ‘முதல் முறையா என் சிந்தனை இப்படி கலையுது.. ஹ்ம்ம்.. உன்னை நினைத்தாலே என் சிந்தனையும் இதயமும் தடம் மாறுது’ என்று சொல்லிக் கொண்டவன் மீண்டும் மித்ராணியின் மனநிலை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
‘அவளோட உணர்வுகளை மறைத்ததாகவே இருந்தாலும் என்னோட நெருக்கம் அவளுக்கு வெறுப்பைத் தானே தந்திருக்கணும்! இரண்டு நொடிகள் என்னை போல் அவளும் அமைதியா நின்னது போல் தானே இருந்தது! அது எப்படி சாத்தியம்? மனோஜை விரும்பி இருந்தால் இது இன்றே சாத்தியப் படாதே! நிஜமாவே மனோஜை விரும்பினாளா? பிரசாத் பேசியதை வைத்து சதீஷ் சொன்னான்.. ஒருவேளை பிரசாத் தப்பாக புரிந்திருந்தால்? இல்லையே பிரசாத்துடன் பேசிய கல்யாணத்தை தடுத்து மனோஜுடன் மாத்தியது இவ தானே! காலையில் கூட என்னிடமே சொன்னாளே!’ என்று குழம்பியவன்,
சில நொடிகள் யோசித்த பின், ‘காலையில் என்னிடம் சொன்னது கூட என்னை டேமேஜ் பண்ண சொன்னதா இருக்க வாய்ப்பு இருக்குது ஆனா’ என்று மறுபடியும் யோசித்தவன்,
‘மனோஜ் கூட எங்கேயும் வெளியே போனதா தெரியலை.. என்ன தான் அவளோட உணர்வுகளை மறைத்து என்னை பழி வாங்க இங்கே வந்ததா இருந்தாலும் சட்டுன்னு இங்கே பொருந்த முடியாதே! என்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவள் முகத்தில் வெறுப்பு தானே தெரியனும்!’ என்று மேலும் குழம்பியவன், ‘ஹ்ம்ம்.. இப்போ எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.. கொஞ்ச நாள் போனா தானா தெரியும்’ என்ற முடிவிற்கு வந்தவன் எழுந்து அவனது அலுவலக அறைக்கு சென்றான்.
எப்பொழுதும் போல் இன்று காலையில் இருந்து மறைகாணியில்(CCTV) பதிவானதை பார்வையிட்டவன் கண்கள் ஒரு இடத்தில் கூர்மையானது. பிரசாத் மித்ராணியுடன் பேசியதை அசட்டையாக பார்த்துக் கொண்டிருந்தவன் ஏதோ உள்ளுணர்வு தூண்ட பதிவை சில நொடிகள் பின்னால் நகர்த்தி பிரசாத்தின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்தான். மீண்டும் மீண்டும் அதைப் பார்த்தவன் ‘நீ மனோஜை விரும்பலை எனக்குத் தெரியும்’ என்று பிரசாத் கூறியதை ஓரளவிற்கு யூகித்தவன் வேகமாக கீழே இறங்கி சென்றவன், கணவரின் புகைப்படம் முன் நின்றிருந்த கலைவாணியின் கையை பற்றி, “அம்மா ஒரு நிமிஷம்” என்றபடி கிட்டதிட்ட அவரை இழுத்துக் கொண்டு அவரது அறைக்குச் சென்றான்.
கலைவாணி, “என்ன புகழ்? மித்ரா எங்க?”
அவரை இருக்கையில் அமர செய்தவன் தான் மண்டியிட்டு அமர்ந்தபடி அவரது கைகை பற்றியபடி, “அம்மா பிரசாத் ராணி கிட்ட என்ன பேசினான்?” என்று வினவியவனின் குரலில் அவனையும் மீறி சிறு பரபரப்பு தெரிந்தது.
கலைவாணி அவனை ஆராய்ந்தபடி, “என்னாச்சு டா? மித்ரா கூட ஏதும் சண்டை போட்டியா? முதல்ல சேரில் உட்காரு”
“ப்ச்.. அதெல்லாம் இல்லை மா.. நான் கேட்டதுக்கு பதிலைச் சொல்லுங்க”
மகனை தவிக்க விடாமல் இருவரும் பேசியதை சுருக்கமாக கூற அவன் கண்கள் ஒளிர எழுந்து நின்றான்.
கலைவாணி, “அவனிடம் உனக்கு சப்போர்ட்டா பேசிட்டு அவன் போனதும் என் கிட்ட இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டதா சொல்லலை னு சொல்றா” என்று அவர் கூறியதை சிறிதும் கவனிக்காதவன் புன்னகையுடன் அவரது கன்னத்தில் முத்தமிட்டு, “தன்க் யூ மா” என்றுவிட்டு மாடிக்கு விரைந்தான்.
கலைவாணி, ‘இவனுக்கு என்னாச்சு? ஒருவேளை அந்த உப்பு காப்பியை புல்லா குடிச்சிட்டானோ! அதில் ஏதும் ஆகிருச்சோ!’ என்று யோசித்தவர், “ஆண்டவா இதுங்க ரெண்டும் ஒன்னு சேருறதுக்குள் நான் ஒரு வழி ஆகிடுவேன் போலவே!” என்று வாய்விட்டே புலம்பினார்.
புகழ்வேந்தன் வெளியே ஆராய்ச்சி செய்த அதே நேரத்தில் அறையினுள் இருந்த மித்ராணி சுய ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள். கதவை மூடிவிட்டு சோபாவில் பொத்தென்று அமர்ந்த மித்ராணி, ‘இவனிடம் மட்டும் ஏன் இப்படி சட்டுன்னு ரியாக்ட் பண்றேன்? அவன் சொன்னது போல் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டோமோ? ப்ச்.. ஏன் இப்படி? என்னோட நிதானம் எங்கே போச்சு?’ என்று யோசித்தவள், ‘இல்லை.. காலேஜ் டேஸ்ஸில் பஸ்ஸில் சீனியர் ஒருத்தன் இப்படி கிட்ட வந்தப்ப அடிச்சேனே! இவன் மேல் கோபப்பட்டு அடிக்காம பேச மட்டும் தானே செய்தேன்! அப்படி பேசியது சரி தான்.. அப்போ தான் தள்ளி இருப்பான்.. நாமும் ப்ரீயா ஒரே ரூமில் அவனோட காலம் தள்ள முடியும்’ என்று கூறிக் கொண்டாள்.
அடுத்து, ‘காலம் தள்றது னா! இப்படி தான் என் லைஃப் போகுமா? இல்லை காலப் போக்கில் என் மனம் அவனை ஏத்துக்குமா?’ என்ற கேள்வி எழ,
‘நோ! அப்போ இப்படி கட்டாயக் கல்யாணம் பண்ணா.. எல்லாம் சரியாகிடும் னா அப்போ பெண்ணோட மனசு இங்கே முக்கியமே இல்லையா? அவன் என்னை விரும்பினா என்னை கல்யாணம் பண்ணிக்குவானா? என் மனசை பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சானா? ஒருவேளை மனோஜை நான் விரும்பி இருந்தால் என் நிலைமை? சட்டு சட்டு னு மாத்திக்க மனசு என்ன சட்டையா?’ என்று கூறிக் கொண்டவள், ‘ஆனா அவனுடைய இந்த குரல்! அவனோட நேசத்தை சொல்லும் போது அது என்னை என்னவோ செய்யுதே! மனோஜ் சொன்னப்ப கூட இப்படி பீல் பண்ணலையே! இவன் கண்ணு கூட காதலுடன் என்னை நோக்கியது போல் தெரியலை ஆனா இவன் குரல்! நிச்சயம் இவன் குரல் என்னை ஏதோ டிஸ்டர்ப் பண்ணுது! எப்படி இது சாத்தியம்? அதுவும் இன்னைக்கு தான் இவனை முதல் முறை பார்க்கிறேன்.. அதுவும் என் விருப்பம் இல்லாம என்னை கல்யாணம் செய்தவனின் நேசம் என்னை அசைப்பதா? ஓ நோ!’ என்று தலையில் கைவைத்தபடி அமர்ந்தாள்.
சில நிமிடங்களில் நிமிர்ந்தவள், ‘நோ மித்து.. இவனை சும்மா விடாத.. உன் விருப்பம் இல்லாமல் உன்னை கல்யாணம் செய்திருக்கிறான்.. இவனை நிம்மதியா இருக்க விடாத’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள் அடுத்து என்னென்ன செய்வது என்று யோசித்த பிறகு சற்று இலகுவானாள்.
அறையை விட்டு அவள் வெளியே வந்த போது புகழ்வேந்தன் மாடி முகப்பில் மென்னகையுடன் நின்றபடி ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
அவன் அருகே சென்றவள், “அந்த மங்குனி அமைச்சரை என்னோட லேப்டாப் எடுத்துட்டு வரச் சொல்லு” என்றாள்.
கவனமாக தனது உள்ளத்து மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு நிதானமாக அவள் பக்கம் திரும்பியவன் அவளை சிறு யோசனையுடன் பார்க்க,
அவள், “என்ன முழிக்கிற? நீ ராஜா னா மக்குனி அமைச்சர் யாரு?”
அவன் மென்னகையுடன், “சதீஷை சொல்றியா?”
“உனக்கு சிரிக்காம பேசவே தெரியாதா?” என்று சிறு எரிச்சலுடன் வினவ,
அவன், “நீ என் வாழ்க்கையினுள் நுழைந்து, நான் பல வருஷமா மறந்திருந்த சிரிப்பை மீட்டு தந்திருக்க” என்று அமைதியான குரலில் கூறினான்.
அவனது பதிலை கேட்டு அவளுக்கு ஒருமாதிரி ஆனது இருப்பினும் அதை காட்டிக்கொள்ளாமல், “நீ என் வாழ்க்கையில் நுழைந்ததும் நான் சிரிப்பை மறந்துட்டேன்” என்றாள்.
“மறக்கடிச்ச எனக்கு மீட்கவும் தெரியும்” என்று கூறி கண்சிமிட்ட,
அவள் அவனது கண்ணை ஆள்காட்டி விரலால் நன்றாக குத்த,
அவன் கைகுட்டையால் எறிந்த கண்ணை ஒற்றியபடி, “உன்னிடமிருந்து கண்ணை காப்பாத்த இனி கண்ணாடி போடணும் போலவே” என்றான் இலகுவான குரலில்.
[the_ad id=”6605″]
வெள்ளை கைகுட்டையில் லேசாக ரத்தக்கறை தெரியவும் அவள், “கண்ணை மூடு” என்றாள்.
அவன் மீண்டும் கண்ணடிக்க, அவள் முறைத்தாள்.
அவன் அறியாதவன் போல், “நீ தானே கண்ணை மூட சொன்ன! அதான் மூடி திறந்தேன்” என்றான்.
“போடா” என்றுவிட்டு அவள் நகரப் போக,
அவன், “எதுக்கு கண்ணை மூடச் சொன்ன?” என்று பேச்சை வளர்க்க விரும்பி வினவினான்.
அவள் அவனை அமைதியாக பார்க்கவும் அவன் கண்களை மூடினான். அவள் வேகமாக குத்தியதில் அவனது வலது கண் இமையின் மீது அவளது நகம் லேசாக கீறி இருந்தது.
அவனது கண்ணை ஆராய்ந்தவள், “சாரி.. நகம் கீறிடுச்சு.. கண்ணை கழுவி டெட்டால் வச்சு தொடச்சிட்டு தேங்காய் எண்ணெய் போடு” என்றாள்.
அவன், “லேசா தானே! விடு.. இதுக்கு எதுக்கு சாரியெல்லாம் கேட்கிற?” என்று கூற,
அவள், “நீ செய்ததுக்கு சாரி கேட்கணும் னு உனக்கு தோணவே இல்லையா?”
அவளை ஆழ்ந்து நோக்கியபடி, “சாரி கேட்டா எல்லாம் சரியாகிடுமா?” என்று வினவியவன், “நான் பண்ணது சின்ன விஷயம் இல்லையே சாரி கேட்டு சரி பண்றதுக்கு” என்றும் சேர்த்துக் கூறினான்.
“ஸோ நீ பண்ணது தப்பு னு உனக்கே தெரியுது.. எதுக்கு…………..”
“உன்னை பொறுத்தவரை நான் பண்ணது தப்பு தான்………………”
“அது என்ன என்னை பொறுத்தவரை?”
“அது அப்படி தான்”
“பதில் சொல்லு”
“நான் செய்தது தப்பு தான்.. ஆனா..” என்று நிறுத்தியவன் ஆழ்ந்த குரலில், “நிச்சயம் உன் வாழ்வை மகிழ்ச்சிகரமாக்கி அதை சீர் செய்வேன்”
அவள் உதட்டை சுளிக்க, “அடிக்கடி இப்படி பண்ணாத” என்றவனது பார்வை அவளது உதட்டில் பதியவும், அவள் அவனை முறைத்துவிட்டு செல்லப் பார்க்க,
அவன் மெல்லிய குரலில், “உசுரே போகுதே உசுரே போகுதே! உதட்டை நீ கொஞ்சம் சுளிக்கையிலே” என்று பாட, அவள் அதிர்ச்சியுடன் அசையாமல் நின்றுவிட்டாள்.
அவன் மென்னகையுடன், “என்னோட பாட்டு அவ்ளோ பயங்கரமாவா இருக்குது?” என்றான்.
சில நொடிகளில் தன்னை மீட்டவள் இறுகிய குரலில், “இனி இந்த பாட்டை பாடாத” என்றுவிட்டு நகர,
அவன் வேகமாக அவள் முன் வந்து நின்று வழியை மறைத்தான்.
அவள் இறுகிய குரலில், “வழியை விடு”
“ஏன் அப்படி சொன்ன?”
“..”
“இந்த பாட்டு ஸ்பெஷல் ஆ?” என்று அவன் உணர்ச்சிகளை துடைத்த குரலில் வினவ, அவளும் அவனை உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் நோக்கினாள்.
லேசாக பெருமூச்சை வெளியிட்டவன், “மனோஜ் இதை உன்னிடம் பாடி இருக்கிறானா?”
“..”
அவளது அமைதி ‘ஆம்’ என்று உறுதி செய்ய, முகத்தை மென்மையாக மாற்றியவன் மெல்லிய குரலில், “இனி இந்த பாட்டை கேட்டால் என் நினைவு மட்டும் வர மாதிரி செய்யவா?” என்று கேட்டபடி அவளை நெருங்க, அவள் தன்னையும் அறியாமல் பின்னால் நகர்ந்து சுவற்றில் முட்டியபடி நின்றாள்.
அவளது இருபுறமும் சுற்றில் கையை வைத்து அவளை சிறை செய்தவன் அவள் சுதாரித்து விலகும் முன் அவளது காதின் அருகே குனிந்து தனது உதட்டை அவளது காதை உரசுவது போல் கொண்டு சென்று ஆனால் உரசாமல்,
“இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ.. மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணிக் குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி” என்று கிசுகிசுப்பான குரலில் பாட அவள் உறைந்து போய் நின்றிருந்தாள்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
