Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 12.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அவள் என்ன பேச என்று தடுமாற எந்த தடுமாற்றமும் இல்லாமல் “தேங்க்ஸ் தேனு”, என்றான் கதிர்.

 

“எதுக்கு அத்தான்?”

 



Advertisement

அவள் சொன்ன அத்தானில் திகைத்தாலும் “வீட்ல எல்லார் கிட்டயும் சகஜமாக  பேசினதுக்கு? காலைல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதான் வீட்ல இருந்து தோட்டத்துக்கு போனேன். அப்ப தான் உன்னோட நிலைமையும் புரிஞ்சது. உன்னை வேலைக்காரின்னு சொன்னதுக்கு என்னை முறைச்சவ நீ. அப்படி இருக்கும் போது அம்மா வேலை செய்ய சொன்ன உடனே உனக்கு  நான் சொன்னது தானே நினைவு வந்துருக்கும்?”, என்றான்.

 

கதிர் மன்னிப்பு கேட்டதையே நம்பாமல் பார்த்தவள், அவன் பேச்சில் திகைத்து போய் இருந்தாள். அவள் அமைதியைப் பார்த்தவன் “நாம நாளைக்கு ஊட்டி போறோம் தேனு. எல்லாம் எடுத்து வை. என்கூட வர பிடிக்கலைன்னாலும் சும்மா சுத்தி பாக்க போறோம்னு நினைச்சிக்கோ. ஒரு நண்பனா, ஒரு காவலுக்கு உன் கூட வரேன். தம்பிங்க ரெண்டு பேரும் ஏற்பாடு பண்ணிட்டாங்க”, என்றான்.

Advertisement

 

Advertisement

“அவன் கூட வாழ்ந்து பாரு, அவனைப் பத்தி புரியும்”,என்ற அன்னத்தின் வார்த்தைகள் அவள் மண்டைக்குள் ஓடியது.

 

“நான் தான் இவனை தப்பா நினைச்சிட்டேனா?”, என்று எண்ணிக் கொண்டே அவனுடன் இது வரை போட்ட சண்டையை எல்லாம் நினைத்துப் பார்த்தாள்.

Advertisement

 

“உன்னை அடக்கலைன்னா நான் ஆம்பிள்ளை இல்ல டி… உன்னை கட்டிக்கிட்டு உன்னை என் காலுல விழ வைப்பேன் டி…. எந்த ராஜ குமாரன் டி உன்னை தேடி வருவான்… இந்த ஜென்மத்துல உன் ராஜகுமாரன் நான் தான் டி…”, இதெல்லாம் அவன் சொன்ன வார்த்தைகள். ஆனால் இந்த வார்த்தையை எல்லாம் அவன் உச்சரிக்கும் போது அவன் முகத்தில் அழகான புன்னகை மட்டுமே இருக்கும். வன்மமோ கோபமோ இருக்காது.

 

“இந்த அத்தான் அத்தை பொண்ணு கிட்ட பேசுற மாதிரி சிரிச்சிட்டே தானே வம்பிழுத்துருக்காங்க. நான் தான் தப்பா நினைச்சிட்டேனோ? நேத்து கூட சிரிச்சிட்டே தானே சண்டை போட்டாங்க. நான் தான் தப்பா புரிஞ்சி கிட்டேனா? இப்படி புதுசா பேசுற அத்தான் புதுசா இருக்கானே”, என்று மனம் முழுவதும் யோசனையாக இருந்தது.

 

அவன் என்னவெல்லாமோ பேசி முடித்து விட்டான். அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே, தன்னிடம் பேச பிடிக்க வில்லை போல என்று எண்ணிக் கொண்டு அறையை விட்டே சென்றிருந்தான்.

 

தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவளுக்கு அப்போது தான் அவன் அறையில் இல்லாததே உரைத்தது. “இவன் எப்ப போனான்? என்ன சொன்னான்னு கூட தெரியலையே”, என்று எண்ணிக் கொண்டு சிறிது நேரம் படுத்திருந்தாள்.

 

சிறிது நேரத்திலே வேணி அவளை சாப்பிட அழைக்க நிறைவாக அனைவரும் சாப்பிட்டார்கள்.

 

ஆனால் தேன்மொழியின் கண்கள் மட்டும் அடிக்கடி கதிர் பக்கமே தாவியது. அதைப் பார்த்த அன்னம் “இப்ப இந்த பய முறுக்கிட்டு இருக்கானே? இப்ப இவனுக்கு வேப்பிலை அடிக்கணுமா?”, என்று எண்ணிக் கொண்டாள்.

 

அனைவரும் சாப்பிட்டு விட்டு அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சகுந்தலாவும் ராஜதுரையும் மகளை காண வந்தார்கள்.

 

இரவு முழுவதும் மகளைப் பற்றிய கவலை தான் சகுந்தலாவுக்கு. மகள் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்த பிறகு தான் சகுந்தலாவுக்கு நிம்மதியாக இருந்தது.

 

“வாங்க மாமா, வாங்க அத்தை. அம்மா, அத்தை மாமாவை சாப்பிட வை”,என்று கதிர் சொன்னதும் “இவ்வளவு அன்பான பையனை தான் நீ தப்பா நினைச்சிருக்க?”, என்ற அர்த்தமான பார்வையை தேன்மொழியிடம் செலுத்தினாள் சகுந்தலா.

 

அதை கண்டு தலை கவிழ்ந்து கொண்டாள் தேன்மொழி. “கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்குறோம் கதிர்”, என்று சகுந்தலா சொன்னதும் மற்ற விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

அப்போது தேன்மொழியை அழைத்தாள். அவள் போனை எடுக்கும் போது அவள் யாரிடம் பேசுகிறாள் என்பதையே கவனித்திருந்தான் தினேஷ். அவன் பார்ப்பதை செல்வாவும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

“என்ன கீதா, சாப்பிட்டீங்களா? நல்லா இருந்துச்சா?”

 

“நல்லா இருந்ததுக்கா? அப்புறம் அக்கா…”

 

“என்ன கீதா?”

 

“இல்லை அங்க இருந்து சாப்பாடு வந்ததுக்கு அப்பாவுக்கு ரொம்ப தர்மசங்கடம். நீ கல்யாணத்துக்கு முன்னாடி செஞ்சா ஒண்ணும் இல்லை. ஆனா இப்ப…?”

 

“எனக்கு புரியுது கீதா. சரி நாளைல இருந்து உனக்கு நம்ம அண்ணன் யாராவது சாப்பாடு கொண்டு வராங்க. அம்மா இங்க தான் இருக்காங்க. நான் சொல்லிறேன்”, என்று தேன்மொழி சொன்னதும் கீதாவும் சரி என்றாள்.

 

மதி அங்கே இல்லாத நேரத்தில் அனைத்தையும் சகுந்தலாவிடம் சொன்ன தேன்மொழி “அம்மா, நாளைக்கு நீ அண்ணன் கிட்ட சாப்பாடு கொடுத்து விடு”, என்றாள்.

 

சகுந்தலா சரி என்று சொன்னதும் மற்ற விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சோகமே உருவாக உள்ளே எழுந்து சென்றான் தினேஷ். அவனை பார்த்த தேன்மொழியும் செல்வாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

 

பின் சகுந்தலா மற்றும் ராஜதுரை கிளம்பி சென்ற பின்னர் கதிர் அறைக்கு தூங்க சென்று விட்டான்.

 

தேன்மொழி செல்வாவிடம் தினேஷைப் பற்றி சொல்ல போகும் போது “எனக்கு இன்னைக்கு மட்டும் டைம் கொடு தேனு. நான் நாளைக்கு உனக்கு என்ன விசயம்னு சொல்றேன்”,என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் செல்வா.

 

அப்போது உள்ளே எதையோ யோசித்த படி படுத்திருந்தான் தினேஷ். “ரைட்டு பய, எங்கயோ சிக்கிட்டான். ஒரு வேளை  அந்த பொண்ணு கீதாவா இருக்குமோ?”, என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தவன் தன்னுடைய நண்பன் நவீனை அழைத்தான்.

 

“என்ன மச்சான் சொல்லு?”, என்றான் நவீன்.

 

“டேய் விமல் அண்ணா இருக்காங்களா டா?”

 

“அண்ணன் கீழே இருக்கான். அவனை எதுக்கு டா கேக்குற? கதிர் அண்ணன் கல்யாண ஆல்பம் தான் போட்டுட்டு இருப்பான்னு நினைக்கிறேன்”

 

“சரி அவங்க கிட்ட போனை கொடு. என் அண்ணன் கல்யாண வீடியோ வேணும். அதுவும் கொஞ்ச கிளிப்பிங்க் மட்டும்”

 

“அது எதுக்கு டா? இன்னும் அவன் எடிட் பண்ண டைம் வேணுமே?”

 

“எடிட் எல்லாம் பண்ண வேண்டாம். நீ கல்யாண மேடைல பொண்ணு மாப்பிள்ளை உக்காந்த அப்புறம், தாலி கட்டி ஆசீர்வாதம் வாங்குற வரைக்கும் உள்ள வீடியோ மட்டும் எனக்கு அனுப்பி வைக்க சொல்றியா? இல்ல நானே சொல்லவா?”

 

“நானே சொல்றேன் டா, நானே அனுப்பி கூட வைக்கிறேன்”

 

“சரி டா, நான் அப்புறம் பேசுறேன்”

 

“சரி நாளைக்கு காலேஜ் வருவியா?”

 

“ஆமா நவீன், எத்தனை நாள் லீவ் போட? நாளைக்கு வந்துருவேன். சரி டா, நைட் கூப்பிடுறேன். நீ சீக்கிரம் அனுப்ப சொல்லு”, என்று சொல்லி விட்டு போனை வைத்தான் செல்வா.

 

தன்னுடைய அறைக்கு தேன்மொழி போகும் போது அங்கே தூங்கி கொண்டிருந்தான் கதிர்.

 

[the_ad id=”6605″]

 

 

அவன் தூக்கம் கலைந்து விடாமல் அவன் அருகே சென்று படுத்தவள் அவனை பற்றிய நினைவுகளுடனே படுத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளையும் அறியாமல் உறங்கியும் விட்டாள்.

 

ஆனால் அவள் தூங்கும் போது கண் விழித்த கதிர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறு வயதில் இருந்து அவன் ஆசைப் பட்டது அவளை மட்டுமே. இப்போது அவன் அருகே அவள் இருப்பது அவனுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.

 

திடீரென்று அவன் கை மீது கையை போட்டாள் தேன்மொழி. அவளுடைய கை அவனுடைய விரல் மீது இருந்தது. அந்த தொடுகையில் அவள் அவனுக்குள்ளே வந்தது போல் சந்தோஷப் பட்டான் கதிர்.

 

எங்கே கையை அசைத்தால் அவள் கையை எடுத்து விடுவாளோ  என்று எண்ணிக் கொண்டு அசையாமல் படுத்திருந்தான். அப்படியே அவனும் உறங்கி விட்டான்.

 

பின் அவன் மாலை கண் விழிக்கும் போது அவள் கண்ணாடியைப் பார்த்து தலை சீவிக் கொண்டிருந்தாள். சீப்பில் இருந்த முடியை எடுத்துக் கொண்டே திரும்பி பார்த்தவள் அவன் எழுந்ததைக் கண்டு “அத்தான் முழிச்சிட்டீங்களா? நீங்க முகம் கழுவுங்க. நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்”,என்று சொல்லி விட்டு சென்றாள்.

 

“வாடா போடா, அவன் இவன், எடுபட்ட பய, நாயி என்ன எல்லாம் மரியாதை இல்லாத வார்த்தை இருக்கோ அத்தனையும் அவனைப் பார்த்து சொல்லிய தேன்மொழி இப்போது வாங்க போங்க அத்தான் என்று சொல்வதைப் பார்த்து “இவளுக்கு என்ன ஆச்சு? எப்படி இப்படி மாறினா? நேத்து கூட சண்டை தானே போட்டா”, என்று எண்ணிக் கொண்டே முகம் கழுவி கீழே வந்தான்.

 

அப்போது அங்கே நவீன் அனுப்பிய கிளிப்பிங்கை கண்ணில் விளக்கெண்ணையை வைத்து பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.

 

“டேய், என்ன இவ்வளவு சீரியஸா பாத்துட்டு இருக்குற?”, என்று கேட்டான் கதிர்.

 

“உன் கல்யாண வீடியோ தான் அண்ணா”

 

“எனக்கும் காட்டு டா”

 

“முதல்ல உன் பொண்டாட்டியை கண்ணால ரசி, அப்புறம் போட்டோவை பாக்கலாம். போண்ணா”, என்று செல்வா சொன்னதும் அவன் தலையில் கொட்டிய கதிர் டி‌வியை போட்டு விட்டு அமர்ந்தான். அவன் கையில் புன்னகை முகமாக காபியை கொடுத்தாள் தேன்மொழி. அவளையே குழப்பமாக பார்த்துக் கொண்டே காபி குடிக்க ஆரம்பித்தான்.

 

“ஐ நான் கண்டு பிடிச்சிட்டேன்”, என்று துள்ளி குதித்தான் கதிர்.

 

அப்போது தான் தான் அனைவரும் அருகில் இருக்கிறார்கள் என்று நினைப்பு வந்து தலையை திருப்பி பார்த்தான். அனைவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

“என்னத்த டா கண்டு பிடிச்ச?”,என்று கேட்ட படியே அங்கே வந்தாள் வேணி.

 

“ஹி ஹி அது வந்து மா, என் ஃபிரண்ட் எனக்கு ஒரு கணக்கு கொடுத்திருந்தான். அதை தான் சொன்னேன்”,என்று சமாளித்தான் செல்வா.

 

அவன் பார்த்த வீடியோவில் தெள்ள தெளிவாக தினேஷின் மனம் புரிந்து போனது.

 

[the_ad id=”6605″]

 

கதிர் மற்றும் தேன்மொழியின் மொத்த குடும்பமே மணமேடையில் இருந்ததால் அந்த வீடியோவில் அனைவரும் தெரிந்தார்கள்.  கீதா மண்டபத்துக்கு வருவதற்க்கு முன்பு வரை சகஜமாக செல்வாவுடன் பேசிக் கொண்டிருந்த தினேஷ் அதன் பின் கீதாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் மேடையில் இருக்கும் போது அவன் பார்வை கீதாவையே தான் சுற்றி வந்தது.

 

அந்த வீடியோவைப் பார்த்து தினேஷ் மனம் நன்கு புரிந்தது செல்வாவுக்கு. ஆனால் இதை தேன்மொழியிடம் சொல்லக் கூடாது என்று முடிவெடுத்தான். ஒருவேளை தேன்மொழி பெரியவங்க யார் கிட்டயாவது சொல்லிட்டா தினேஷ் அண்ணன் காதல் பாவம். அவனே ஒன் சைடா பாக்குறான். அதுக்குள்ள எந்த பெரிய பிரச்சனையும் வர வேண்டாம்”, என்று எண்ணிக் கொண்டான்.

 

ஆனால் அவன் சொல்லாமலே இன்னும் சில நிமிடங்களில் தேன்மொழிக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. அதுவும் தினேஷ் வாயாலயே.

 

காதல் தீயை நீர் அணைக்குமா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!