Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

உன் விழிகளின் மொழி என்னவோ 16

      ஜெய் ஸ்ரீ  ராம் . 

EPI -16

 

 மதுவும், டாலி பேபியும்  கிட்சன் மேடையில் அமர்ந்து கொண்டு  “எனக்கு பொடி தோசை, எனக்கு முட்டை தோசை “என்று காவேரியிடம் ஆர்டர் போட்டு கொண்டிருந்தனர். 



Advertisement

காவேரி சிரிப்போடு அவர்களுக்கு தலை ஆட்டி அவர்கள் கேட்டதை செய்து கொடுத்து கொண்டிருந்தார். வெளியில் சக்தியோ வன்டியில் அமர்ந்து கொண்டு  “ஸ்ரீ இன்னைக்கு சீக்கிரம் போகணும்னு நைட் சொன்னேன் இல்லை வா……” என்று அழைத்து கொண்டிருந்தான். 

அதை அவள்  காதில் கூட வாங்காமல் “அத்தை நல்லா நெய் போட்டு முறுகலா ஒரு தோசை” என்று உண்பதில் கவனமாய் இருக்க, பொறுத்து பார்த்தவன் இவள் இப்போதைக்கு வரமாட்டா என்றுணர்ந்து…… 

வீட்டுக்கு பின் இருக்கும் தோட்டத்தில் நின்றிருந்த சித்தப்பா பழனியுடன் பேச ஆரம்பித்து விட்டான். இதை எல்லாம் கவனித்திருந்த, பரிமளா “என்ன பொண்ணோ  இவ, அடுத்த வீட்ல எல்லாம் புருஷன், மாமியார்லாம் உக்காந்துட்டு மருமகள் கிட்ட வேலை வாங்கு வாங்க, இங்க எல்லாம் அப்டியே தலை கிழ நடக்குது, “

Advertisement

“இவனாவது அவளை மிரட்டி வழிக்கு கொண்டு வருவான்னு பாத்தா, அமெரிக்கா போய்ட்டு வந்ததுல இருந்து இவளுக்கு  பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டிட்டு இருக்கான், “

Advertisement

“என் பொறந்த வீட்டுக்கு என்னதான்  ஆச்சோ!!!” என்று நொந்து கொண்டு சமையலறை சென்று பார்க்க,  தன் இரு கால்களையும் ஆட்டிகொண்டு வாயில் தோசை வைத்து கொண்டே காவேரியோடு ஏதோ வம்பிழுத்து அவளும் சிரித்து அவரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தாள். 

“யேய் !!!!மது அங்க,  சக்தி டைம் ஆச்சுன்னு கத்திட்டு இருக்கான், இங்க என்னடி அரட்டை கெளம்பு….” என்று தலையில் நங்கென்று கொட்டினார். 

“அய்யோ!! அதுக்கு எதுக்கு அண்ணி புள்ளைய கொட்டுனிங்க,  பாவம் கண்ணு ரெண்டும் எப்படி கலங்கிருக்கு பாருங்க, “என்று காவேரி தன் முந்தானையில் அவளின் விழி நீரை துடைக்க, 

Advertisement

 

[the_ad id=”6605″]

 

 

“எல்லாம் இப்டி இடம் கொடுக்கிறதால தான், இவளுக்கு இந்த வீட்டோட மருமகள்ன்றதே!! மறந்து போச்சி போல, எல்லாம் என்ன சொல்லணும் இவளை என் அண்ணன் பையனுக்கு  கட்டி வச்சேன், இல்ல இதுவும் வேணும் இன்னும் வேணும்.”  

சாப்பிட்ட தட்டை நங்கென்று சிங்கில்  போட்டவள், காலேஜ் பேகை எடுத்து கொண்டு வெளியில் வர, “யேய்!!! நீ சாப்பிட்ட  தட்டை யாருடி கழுவிவைய்ப்பாங்க, பொட்டப்புள்ளைக்கு சாப்ட தட்ட கழுவனும்னு தெரியாது,”திட்டிக்கொண்டே  பரிமளா அவள் பின்னோடு வர இவர்களின் பின்னே காவேரி, டாலி வந்து கொண்டிருந்தனர். 

பரிமளாவின் கோபமான முகத்தையும் மதுவின் அழுகையான விழிகளையும் கண்டவர்கள். ஏதோ பிரச்சனை என்று கங்கா, பழனி, திருப்பதி எலோரும் இவர்களிடம் வர, 

சக்தி இவர்களுக்கு முன் மதுவை  நெருங்கி, ” என்னட, அழுதியா” என்றவன். அவள் கையிலுருந்து பேக்கை வாங்கி வண்டியில் வைத்து விட்டு, “அத்தை….. ஸ்ரீ ய என்ன சொன்னிங்க, ” மனைவியை அழகுவைத்து விட்டதின் கோபம் அவன் குரலில்லே தெரிந்தது . 

“ம்ம்ம்ம்,   சாப்ட தட்டை கழுவி வச்சிட்டு போனு சொன்னேன் அது ஒரு  குத்தமா, ரொம்ப தாண்டா பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ற என்று முடிக்க, 

“ஏன்!! கழுவி வைக்கல, ” என்று விழிகளால் சக்தி மனைவியை அதட்ட,  

டாலி” மாமா!!! பாட்டி அத்தைய தலைல கொட்டிடாங்க,  அதான் அத்தை கோவமா ப்ப்லேட் வாஷ் பண்ணாம வந்துட்டாங்க “என்று கூற, 

அனைவரும் பரிமளாவை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, “ம்ம்ம்ம் வீட்டுக்கு மருமகளா ஒழுங்கா இருக்காளா,   இங்க சக்தி கூப்டுட்டு இருக்கான். அவ சாவகாசமா உட்கார்ந்துட்டு இருந்தா அதான் அடிச்சேன். 

இதுவரை அமைதி காத்த மது, ” மாமா,  உங்க தங்கச்சி அண்ணன் வீட்டுக்கு வந்தோமா போனோமான்னு இருக்க சொல்லுங்க,  தேவையில்லாமல் வீட்டு மருமகளை சீண்டுனாங்க அவ்ளோதான் சொல்லிவைங்க, “

“அப்படி எல்லாம் சொல்ல மாட்டாரு என்னடி பண்ணுவ “என்று இரண்டு அண்ணன்களின் நடுவில் நின்று  பரிமளா கெத்தாக கேக்க, 

“ம்ம்ம்ம், ” என்று யோசனை செய்வது போல் தாடையை ஒரு  விரலால் தடியவள், “என்னோட ரெண்டு அத்தையையும் கூட்டிட்டு தனி குடுத்தனம் போயிடுவேன், அப்புறம் நீயும் உன் அண்ணன்களும்,  அவங்க பசங்ககூட உக்காந்துட்டு எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனு பாடிட்டு இருக்க வேண்டியதுதான். “

மது முடித்ததும் காவேரி அதை வழிமொழிவது போல் மதுவின் கையை பிடித்து கொள்ள,இப்போது  பழனி கெத்தாக அண்ணனை பார்க்க, 

கங்கா” தோட்டது வீட்டுக்கு போனா உன்னால டைம்கு காலேஜ் போகமுடியாது,  அதனால உங்க சின்ன மாமாவ இந்த வீட்டுக்கு அனுப்பிடலாம்டா, நம்ம அங்க இருந்துக்கலாம் என்று அவர்களின் வீட்டை காட்ட, 

அண்ணன், தம்பி இருவர் முகமும் தொங்கிவிட   யோசனையுடன் இருவரும் பரிமளாவை பார்த்தனர்,” இங்க பாரு பரிமளா உன் பொறந்த வீடு வேணும்னா, எங்க வீட்டு மருமகளை அடஜஸ் பண்ணி தான் ஆகணும் என்று விட , 

“அடி பாவி, ஆயுசுக்கும் பொறந்த வீடு வேணும்னு தான் உன்ன இந்த வீட்டுல குடுத்தேன். மகாலக்ஷ்மியா இருந்த எங்க அண்ணிங்க மனச களைச்சு,அண்ணன் ரெண்டு பேரையும் விட்டே  என்ன இந்த வீட்டு பக்கம் தலை வைச்சு படுக்க விடாம பண்ணிடுவ போல,”      

“நீ பொறக்கும் போது எனக்கு மாமியார்னு தான் நெனச்சேன்,  ஆனா, நீ சகுனினு இப்போ தாண்டி தெரியுது” என்று ஆற்றாமையோடு பேச, 

 

“இப்போ தெரியுதா பரிமளா…….. வீட்டு மருமகளா நான் மாறினா உனக்கு தான்  சீட்டு காலியாகும், அதனால சும்மா என்ன பகைச்சிகாம ஈவ்னிங் எனக்கு காரட் அல்வா செஞ்சு வை, வரட்டா”என்று தலை அசைத்து சக்தியுடன் கிளம்பி விட்டாள். 

“அவ ஏதோ சின்ன புள்ள பேசிட்டு போறா தப்பா எடுத்துகாதிங்க அண்ணி என்று  கங்கா, காவேரி இருவரும் பரிமளாவிடம் கூற, 

“வாழ்கையோட எந்த கஷ்டமும் தெரியாம அவ இஷ்டத்துக்கு இருக்கா, நீங்களும் ஆமாம் சாமி போடறீங்க, ,கல்யாணம் ஆகி முணு வருஷம் முடிஞ்சும் இப்டியே இருக்காளே,பெத்தவ எனக்கு தான்   பயமா இருக்கு அண்ணி “என்று கண் கலங்கி விட்டார். 

“இப்போ என்ன ஒரு குழந்தை பொறந்தா அவளுக்கு தானா பொறுப்பு வந்துட போகுது, அது வரைக்கும் ஜாலியா இருந்துட்டு போறா விடு, என்று அவரை தேற்றினர்  அண்ணன் மார்கள், 

பரிமளா “ஏன்னி!!!!  அவ சொன்னா நிஜமா தனி குடுத்தனம் போய்டுவீங்களா,” அதான “என்று கணவன்மார்கள் இருவரும் மனைவிமார்களை முறைக்க, 

அக்கா, தங்கை இருவரும் வேகமாய் அவ்விடத்தை  விட்டு நகர்ந்து விட்டனர். 

இங்கு சக்தியோ “ஏண்டி,  அத்தை கிட்ட சும்மா வம்பு பண்ணிட்டே இருக்க, பாவம் அவங்க மனசு கஷ்டப்படும் இல்லையா, 

 

“ஹெலோ,  ரொம்ப சப்போர்ட் பண்ணாதீங்க,  அப்புறம் நிஜமா தனி குடுத்தனம் போயிடுவேன், அது தான் சும்மா நொய்நொய்னு திட்டி திட்டே இருக்கு, அது இம்சை தாங்கமா தான் இங்க படிக்க வந்தேன், மூணுமாசதுக்கு ஒரு முறை வந்து உயிரவாங்குது, அடுத்த ஜென்மத்துல அத்தைங்க யாருக்காவது பொண்ணா பொறக்கணும் ஆண்டவா”, 

“அப்போ எனக்காக நீ இங்க படிக்கலையா, ” என்று சக்தி விழிகளால் கேக்க அவன் விழிகளின் மொழி எப்போ இவளுக்கு புரிந்து இருக்கிறது. இப்போது புறிவதற்கு, 

 

“என்ன மாமா, “

 

“இல்ல ஸ்ரீ,   அத்தை உன்ன கண்டிக்கிறத விட அம்மாவும், சித்தியும் தமிழை கண்டிப்பாங்க, பொதுவா எல்லா அம்மாக்கும் மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கும், 

“போன  இடத்தில் பொண்ணு எந்த கெட்ட பேரும் வாங்காம, சண்டை போடறவங்க கிட்டயும் பொறுத்து,குடும்பத்த அனுசரிச்சு,    பொறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் நல்ல பேரு வாங்கி தரணும்னு “

“அந்த பயத்தோட வெளிப்பாடு தான் இது, இதெல்லாம் நாளைக்கு நீ அம்மா ஆகும் போது தானா புரியும், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேனு யாரும் சும்மா சொல்லலை, இனிமேல் அத்தை மனச கஷ்டபடுத்துற மாதிரி நடந்துக்க கூடாது. புரியுதா !!”என்று கண்டிப்புடன் கேக்க, 

“ம்ம்ம் சரி மாமா”, 

 

 

[the_ad id=”6605″]

 

  மதுவை இறக்கி விட்டு கல்லூரியில் நுழைந்தவன் பைக் பார்க்  செய்த பின் பைக்கின் மேலே அமர்ந்து , லைப்ரரியன் (சுரேஷ் )வருகைகாக காத்திருந்தான், என்ன தான் வெளியில் சாதாரணமாக காட்டி கொண்டாலும் உள்ளே எரிமலை குமரிக்கொண்டு இருந்தது. 

அப்போது இவனருகில் ஒரு பைக்  பார்க் செய்யும் ஓசை கேட்டு அவனின் யோசனை  தடைபட நிமிர்ந்து பார்த்தால் சக ஆசிரியர் பிரவீன்.மதுவோடு அதிகமாக வம்பு வைத்துக் கொள்ளாதீர்கள் என்று இவனுக்கு எச்சரிக்கை செய்தவர்.

 அவரைப் பார்த்து சினேகமாய் சக்தி புன்னகைக்க, சக்தியை பார்த்தும் பார்க்காததுபோல் சென்றதோடு மருந்திற்கும் புன்னகை சிந்தவில்லை. 

எப்போதும் அவராக  வந்து தான் சக்தியோடு உறவாடுவார். சக்தி இந்த கல்லூரிக்கு புதிது என்பதால். சக்தி கேட்காமலே  சில உதவிகளும், அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட மனிதர் இன்று பேசாமல் செல்வது,  ஏன்? என்று தெரியவில்லை.

 நினைவடுக்குகளில் அலசி பார்க்க சில நாட்களாகவே !அவர் தன்னோடு பேசுவதில்லை. குறிப்பாய் சொல்லப்போனால் நியூ இயர்க்கு  பிறகு, 

 ஆனால் இப்போது அவரை பின் தொடர்ந்து பேசும் மனநிலையில் சக்தி இல்லாததால் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான், சுமார் ஒரு மணிநேரம் காத்திருப்பு பின்னும் லைப்ரரியன் வந்து சேரவில்லை

 மேனேஜ்மென்ட்டில் விசாரிக்க இன்று காலை அவர் விடுப்பு எடுத்திருப்பதாகவும் மதியம் கல்லூரிக்கு வருவதாகவும் கூறினார்கள்.

 சக்திக்கு அறிந்தவரை அந்த லைப்ரரியன் பற்றி முன்னுக்கு பின் முரணான தகவல்கலே  வந்து சேர்ந்தது . அவன் நியமித்த மாணவர்கள் கூறியது என்னவென்றால். 

ஏழை மாணவிகளுடன் சாதாரணமாக பழகி அவர்களுக்கு உதவி புரிவது போல் நடித்து இவர்களின் வலையில் விழ வைப்பது, இந்த சுரேஷ் தவிர இன்னும் இருவர் அவன்  உடன் இருக்கிறார்கள். 

சுரேஷ் வெறும் அம்பு மட்டுமே, அதிக பணம் கூட கையில் கிடையாது, மற்ற இருவர் தான் இவனை இயக்குபவர்கள், அவர்கள்  யார் என்றும் தெரியவில்லை. ஆனால் இதே கல்லூரியில் தான் அவர்கள் இருப்பார்கள் என்பது சக்தியின் எண்ணம். 

ஓரு வழியாக நேற்று ஐஸ்கிரீம் பார்லரில் சந்தித்த பெண்ணின் அனைத்து விபரங்களையும் சேகரித்து அவள் வகுப்பிற்கு சென்று பார்க்க அவள் இன்று விடுப்பு எடுத்திருந்தாள். 

 

[the_ad id=”6605″]

 

 மனதிற்குள் ஏதோ சந்தேகம் தோன்றவும்,  இன்றைய நாள் விடுப்பு எடுத்திருபவரின் பெயர் பட்டியலை பார்க்க,  அதில் காவ்யாவின் பெயரும் இருந்தது. ஆனால் அவளின் மேல் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை. 

பிரியா, சாந்தியை தான் பிடிக்காதே தவிற,  காவ்யாவை ரொம்ப பிடிக்கும், தன் தாயை போன்றே குணம் கொண்டிருப்பத்தாளோ என்னவோ!!! தனக்கு தங்கை பிறந்து இருந்தாள். இப்படி தான் இருந்திருப்பாள் என்று அடிக்கடி தோன்றும். 

ஆரம்ப நாட்களில் இவளை காண அவர்களின் இல்லத்திற்கு அடிக்கடி  செல்வதுண்டு, பின் நாட்களில் பிரியா காதல் காதல் என்று துறத்த ஆரம்பிக்க அங்கு செல்வதை  அறவே தவிர்த்து விட்டான். 

இப்போது காவ்யா சக்தியை பார்த்தால் சின்ன பயம் கலந்த சிரிப்போடு கடந்து சென்று விடுவாள். “வாய் கிழிய பேசும் என் பொண்டாட்டிகே !காலேஜ்ல என்ன நடக்குதுனு ஒன்னும் தெரியல, பாவம் சின்னவ  அவளுக்கு என்ன தெரிய போகுது” என்று விட்டு விட்டான். 

 

சுரேஷ்  மதிய வேளையில் ஆடி அசைந்து  கல்லூரி நுழையும் போதே சக்தி பார்த்து விட்டான், “வாடா வா உனக்கு தான் வெயிட் பண்றேன்” என நினைத்தவன், 

மாலை கல்லூரி முடிந்து மாணவர் கூட்டம் குறையும் வரை காத்திருந்தவன், மதுவையும் இன்று கல்லூரி பேருந்தில் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்து விட்டான். 

சுரேஷ், லைப்ரரி  பூட்டி விட்டு, யாரோடோ மொபைலில் சாட்டிங் செய்து கொண்டே! எதிரில் வந்த சக்தியை கவனியாமல் கடந்து செல்ல, அவன் கால்களை இடறி  விட்டு கீழே விழவைத்து விட்டான். 

சக்தி எதோ தெரியாமல் மோதி விட்டான். என நினைத்தவன் “யேய் பாத்து போமாட்டாயா, எருமை மாதிரி மோதுற, நான் யார் தெரியுமா பாத்து நடந்துகோ” என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய, 

நீட்டிய விரலின் கைகளை பிடித்த சக்தி, “யார்டா  நீ, பெரிய தாதா வா, கை நீட்டி பேசற அப்டியே கையை ஒடச்சிருவேன்” என்று கையை பின்னால் திருப்பி முறுக்க 

“யேய் விடுடா,  வலிக்குது “என்று சக்தியிடம் இருந்து திமிற,  “என்னடா, 

 உன்ன தான் ஹீரோனு சொல்லிட்டு இந்த காலேஜ் பொண்ணுங்க எல்லாம் உன் பின்னாடி சுத்தறதா கேள்வி பட்டேன். இப்டி சும்மா  பிடிச்சதுக்கே! கத்தி ஊர கூட்ற “என்று மேலும் அவனை அடிக்க 

“சார்,  சார், ப்ளீஸ் சார் விட்ருங்க சார்.” என்று சக்தியிடம் சரண்டர் ஆக, “

“டேய்!!! நீ பண்ற வேலை வெளியில் தெரிஞ்சா பொண்ண பெத்தவங்களுக்கும் இப்படி தான வலிக்கும். அவனை கீழே தள்ளி உதைக்க, 

“அய்யோ!!! சார் நான் சும்மா வெளில கூட்டிட்டு போறதோட சரி சார்.  அதுக்கு மேல எதும் கிடையாது, அடிவாங்கிய வலியில் அவன் முனங்க, 

 “டேய் !இந்த அடி அதுக்குனு நினைச்சியா, இது என் பொண்டாட்டிய கேவலமா ஒரு லுக் விட்டாயே!!!! அதுக்கு டா, சாம்பிள் மட்டும் தான் இது கண்ணா, இப்போ நீ சமத்தா  ஹாஸ்பிடல் போய்ட்டு வா, உனக்கு அப்புறம் இருக்கு” என்று மேலும் அவனை துவைத்து எடுக்க, 

“உங்க வைப் யாருன்னே எனக்கு தெரியாது சார், ப்ளீஸ் சார் “என்று சக்தியின் காலை பிடிக்க, அப்போதும் சக்திக்கு கோபம் குறைய வில்லை. சரமாரியாக விளாசி தள்ளி விட்டான். 

“டேய் !!!!உனக்கே இப்படின்னா உன் பார்ட்னருங்க  நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருடா, “

சுரேஷ் உணர்வின்றி மயங்கியே விழுந்து விட்டான், சக்தியின் அடி மட்டும் நின்ற பாடில்லை, “போதும் சார் விட்ருங்க, செத்துட போறான்” என்று பிரவீன் குரல் அருகில் கேக்க, 

“சாவட்டும் சார் இவனுங்கல்லாம் இருந்து என்ன பண்ண போறாங்க, என்றவன். தன் மொபைல் எடுத்து ஆம்புலன்ஸ்க்கு சொல்லி, வரும் வரை உடன் இருந்து ஏற்றி விட்டு, அவர்கள் வீட்டிற்கும் தகவல் சொன்னான். 

அருகில் இருந்த பிரவின் தான் நாயகன் கமல் ரேஞ்சுக்கு சக்தியை “சார் நீங்க நல்லவரா கெட்டவரா “என்று பார்த்து கொண்டிருந்தார். 

மொழி தொடரும்………….. 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!