Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 25

 பிடித்தம் 25

 

உணவகத்திற்கு வந்ததும் மாலினி தந்தையை கைபேசியில் அழைத்தாள்.

 



Advertisement

அருணாச்சலம், “சொல்லு மா.. ரெஸ்டாரன்ட் வந்துட்டீங்களா?”

 

“நான் மட்டும் தான் பா வந்திருக்கிறேன்.. அவர் அரை மணி நேரத்தில் வருவார்.. சின்ன வேலை வந்திருச்சு”

Advertisement

 

Advertisement

“ஓ!” என்று சற்று சுருதி இறங்கி கூறியவர் தன்னை தானே தேற்றிக் கொண்டு, “சரி டா.. நீ என்ட்ரன்ஸ்ஸில் இரு.. நான் ரெண்டு நிமிஷத்தில் வரேன்” என்றார்.

 

“சரி பா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

Advertisement

 

அவள் வெற்றிவேலிற்கு உணவகம் வந்துவிட்டதாக குறுந்தகவல் அனுப்ப அவன் உடனே அவளை அழைத்தான்.

 

அவள் அழைப்பை எடுத்ததும் அவன், “எல்லோரும் இருக்கிற இடத்துக்கு போயிட்டியா? நான் இப்போ கிளம்பிட்டேன்.. பத்து நிமிஷத்தில் வந்திருவேன்”

 

“என்ட்ரன்ஸ்ஸில் அப்பாவுக்காக வெயிட் பண்றேன்.. இதுக்கு நாம சேர்ந்தே வந்திருக்கலாம்”

 

“அங்கே சூழ்நிலை எப்படி இருக்கும் னு எனக்குத் தெரியாது.. நீ என்னோட பலம் தான் ஆனா சூழ்நிலை உன்னை என் பலவினமா மாத்திரக் கூடாது, அதான் உன்னை அனுப்பினேன்.. நீ கராத்தே கத்துக்கோ.. நானும் சில ட்ரேனிங்(Training) தரேன்.. அப்பறம் நீ என்னோட பலமா மட்டும் தான் இருப்ப”

 

“என்னது! கராத்தே கிளாஸ் போக நீங்க வேற ட்ரேனிங் தருவீங்களா?”

 

“கண்டிப்பா”

 

“எல்லா போலீஸ்ஸும் இப்படியா பண்றாங்க?”

 

“யார் எப்படி இருந்தா நமக்கென்ன? நான் இப்படி தான்.. ஏன்! நான் சொல்லித் தந்தா கத்துக்க மாட்டியா?”

 

“கத்துப்பேன்” என்று சற்று சுருதி இறங்கியே சொன்னவள், “சரி கிளம்பி வாங்க” என்றாள்.

 

“மாமா வந்துட்டாங்களா?”

 

பார்வையை சுழற்றியவள், “வந்துட்டு இருக்காங்க” என்றாள்.

 

“மாமா வந்து நீ உள்ளே போனதுக்கு அப்பறம் போனை வை”

 

“அப்பா வந்துட்டாங்க.. நீங்க கிளம்பி வாங்க” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

 

மாலினி அருணாச்சலத்துடன் உள்ளே சென்றதும் மாலதி, “வெற்றி எங்க மா?” என்று வினவினார்.

 

மாலினி தந்தையை பார்க்க அவர், “நான் ரெஸ்ட்ரூமில் இருந்தப்ப தான் நீ போன் பண்ண.. அப்படியே வந்துட்டேன்” என்றார்.

 

மாலினி மாலதியை பார்த்து, “அவங்களுக்கு சின்ன அவசர வேலை வந்திருச்சு.. இப்போ…………..”

 

“உன்னை தனியா அனுப்பினானா?” என்று அவர் சிறு கோபத்துடன் வினவ,

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவள் அவசரமாக, “இல்லை.. முக்கியமான வேலை.. அதான்.. ஆட்டோ ஏத்திவிட்டு இங்கே வந்ததும் போன் பண்ண சொன்னாங்க.. இப்போ பேசினேன்.. கிளம்பிட்டாங்க.. பத்து நிமிஷத்தில் வந்திருவாங்க”

 

மாலதி கோபத்துடன் கணவரை பார்க்க சுந்தர்ராஜன் அவரை பார்வையிலேயே சமாதானம் செய்ய முயற்சிக்க, மாலதியோ கடைசி முயற்சியாக மாலினியை பார்த்து, “முக்கியமான நேரத்தில் கூட இப்படி செய்தால் எப்படி! நீயாவது சொல்லி அவனை இந்த போலீஸ் வேலையை மாத்தச் சொல்லேன்” என்று முடித்தபோது அவர் குரலில் சிறு கெஞ்சலும் ஆதங்கமும் எதிர்பார்ப்பும் கலந்து இருந்தது.

 

மாலதியின் பேச்சை கேட்டு மாலினி அதிர்ச்சியுடனும் சிறு கலவரத்துடனும் தந்தையை பார்த்தாள். அவளது நினைப்பு, ‘கடவுளே! இப்போ தான் அப்பா சமாதானம் ஆகி இறங்கி வந்திருக்காங்க.. திரும்ப முதலில் இருந்தா!’ என்று இருந்தது.

—————————————————————————————————————————————————–

தந்தையை பற்றிய சிந்தனையில் இருந்த மித்ராணியின் மோன நிலையை கலைப்பது போல் அறையில் இருந்த இண்டர்காம் அலறியது.

 

எடுக்கலாமா வேண்டாமா என்று முதலில் யோசித்தவள் பிறகு எழுந்து சென்று அதை எடுத்தாள்.

 

“புகழ் சாப்பிட வாங்க” என்ற கலைவாணியின் குரல் கேட்கவும்,

 

“எனக்கு பசிக்கலை” என்றாள்.

 

புகழ்வேந்தன் தான் அழைப்பை எடுப்பான் என்று நினைத்தவர் மித்ராணியின் குரலில் ஒரு நொடி அதிர்ந்து பிறகு, “வெறும் வயித்தோட படுக்கக் கூடாது மா.. ரெண்டு இட்லியாவது சாப்பி…………..”

 

“ப்ளீஸ் எனக்கு வேண்டாம்” என்றவள், “உங்க மகன் இங்கே இல்லை” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

 

மீண்டும் அவளை அழைக்கலாமா என்று யோசித்தவர், ‘புகழையே கூட்டிட்டு வரச் சொல்லுவோம்’ என்ற முடிவிற்கு வந்தார்.

 

தந்தையின் நினைவில் உழன்றவளின் மனம் கலைவாணி பேசிய பிறகு மீண்டும் புகழ்வேந்தனிடம் தாவியது.

 

புகழ்வேந்தன் அலுவலக அறையில் இருப்பானோ என்ற யோசனையுடன் கலைவாணி இண்டர்காமில் அழைக்க, அவரது எண்ணத்தை பொய்க்காமல் அவன் அழைப்பை எடுத்து பேசினான்.

 

அவன் அழைப்பை எடுத்ததும் அவர், “புகழ் மித்ராவை கூட்டிட்டு சாப்பிட வா” என்றார்.

 

அன்னை அறைக்கு அழைத்துவிட்டு தான் இங்கே அழைத்து இருப்பார் என்பதை சரியாக கணித்தவன், “என்ன! உங்க மருமக பசிக்கலைன்னு சொல்லிட்டாளா?”

 

“அவ அப்படி தான் சொல்லுவா.. அவளையும் கூட்டிட்டு சாப்பிட வா”

 

“அம்மா” என்று அவன் சிறிது தயங்க,

 

அவர், “வாக்குவாதத்தில் அவ உன்னை வெளிய போகவோ, என் கண் முன்னால் வராதே என்றோ சொல்லிட்டாளா?”

 

“அம்மா!” என்று சிறு அதிர்வுடன் அழைக்க,

 

அவர், “அவ அப்படி சொன்னா நீ அவளை அப்படியே விட்டிருவியா?”

 

“இல்லை மா.. ஆனா.. இப்போ…” என்று அவன் இழுத்து நிறுத்த,

 

“அவ உனக்கு யாரு டா?”

 

“ஏன் உங்களுக்கு தெரியாதா?”

 

“எனக்கு தெரியிறது இருக்கட்டும்.. நீ சொல்லு”

 

“அவ என்னோட இதயராணி” என்று மென்மையான குரலில் கூற,

 

“அப்போ அவ உன்னோட இதயராணி னு நீ முழுசா உணர்ந்துட்ட!!”

 

“சதீஷ் இருந்தப்ப நாங்க பேசியதை பார்த்துமா உங்களுக்கு புரியலை?”

 

“உன் மனசு புரிந்ததால் தானே இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன்.. வெறும் பழி வெறியில் மட்டும் நீ கல்யாணம் செய்றதா இருந்தா நான் இதை நடக்க விட்டிருக்கவே மாட்டேனே! என்னால் தடுத்து இருக்க முடியாது னு நினைக்கிறியா?”

 

“அம்மா!”

 

“இப்பவும் நீ செய்ததை சரி னு நான் சொல்லலை.. ஆனா.. மித்ரா யாரையும் விரும்பலை என்பதாலும் நீ அவளை விரும்பியதாலும் தான் உன் செயலில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் தடுக்கலை.. என் மேல் ஆணையிட்டு சொல்லி இருந்தால் அதை மீறி நீ மித்ராவை கல்யாணம் செய்து இருப்பியா?”

 

“மாட்டேன் தான் ஆனா வேற யாரையும் கல்யாணம் செய்திருக்க மாட்டேன்”

 

“அதனால் தான் சுயநலமா அமைதியா இருந்துட்டேன்.. சீக்கிரம் உன் மனதை நீ உணர்ந்திருவ னு எனக்குத் தெரியும் ஆனா அதை முழுவதுமாக உணர்ந்து தெளியாமல் உன் மனதை வெளியே காட்டாம இருப்பியோ னு கொஞ்சம் கவலைப் பட்டேன்.. வெளிப்படையா உன் காதலை உணர்த்தும் அளவிற்கு இப்பவே உன் மனதை நீ உணர்ந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்..”

 

“தேங்க்ஸ் மா”

 

“அம்மாக்கு போய் தேங்க்ஸ் சொல்லுவியா?”

 

“நான் சொல்லுவேன்”

 

“சரி சரி.. போய் உன் இதயராணியை சமாதானம் செய்து சாப்பிட கூட்டிட்டு வா”

 

“சமாதானம் செய்றதா!!!”

 

“ஏன் செய்தால் என்ன குறைஞ்சிடப் போற?” என்று சிறு கோபத்துடன் வினவியவர், “கணவன் மனைவிக்குள் ஈகோ வரக்கூடாது” என்று சேர்த்துக் கூறினார்.

 

“அம்மா உங்க பையன் அப்படி நினைப்பேனா? நான் சொன்னது.. அவ அப்படியெல்லாம் உடனே சமாதானம் ஆகுற ஆள் இல்லைனு……..”

 

“பின்ன நீ செய்ததுக்கு கொஞ்சுவாங்களா? அவ உன்னை அடித்ததில் தப்பே இல்லை”

 

வாய்விட்டு சிரித்தவன், “ஆனா அவ அடிச்சதுக்கு நான் கொஞ்சத் தான் செய்தேன்”

 

“டேய்!!”

 

“என்ன?”

 

“அம்மா கிட்ட பேசுற பேச்சா?”

 

“பார் டா! இவங்க ‘கொஞ்சுவாங்களா’ னு சொன்னா தப்பில்லையாம் நான் ‘கொஞ்சினேன்’ னு சொன்னா தப்பாம்!!”

 

“டேய் நான் சொன்ன அர்த்தமும் நீ சொன்ன அர்த்தமும் ஒன்னா?”

 

“எனக்கு தெரிந்து கொஞ்சுறது என்ற வார்த்தைக்கு ஒரே அர்த்தம் தான்”

 

“டேய்!!!” என்று கெஞ்சாத குறையாக அவர் அலறவும் தான், “சரி சரி.. பொழச்சு போங்க” என்று விட்டான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

‘என் நேரம் டா!’ என்று மனதினுள் நினைத்தவர் பின் தீவிரமான குரலில், “மித்ரா கோபப்பட்டு வார்த்தையை விட்டாலும் நீ நாவை அடக்கி பொருத்துப் போ.. உன் அன்பால் மட்டுமே அவளது மனதில் நீ குடியேற முடியும்.. உனக்கு பொறுமை வேணும்.. அதுவும் இன்னைக்கு கண்டிப்பா வேணும்.. என்ன தான் மித்ரா தைரியமான பொண்ணா இருந்தாலும், புது  இடம், முற்றிலும் புதிய மனிதர்கள் னு தனிமையா உணர்வா.. அவளே போ னு சொன்னாலும் இப்படி ஒதுங்கி போகாத.. பத்து பதினைந்து நிமிஷத்தில் திரும்ப போய் பாரு.. அவளை தனியா பீல் பண்ண விடாத” என்று அறிவுரை கூற,

 

“சரி மா.. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

 

அவர் மென்னகையுடன், “சரி.. சீக்கிரம் சாப்பிட வாங்க” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

 

புகழ்வேந்தன் அறைக்கதவை தட்ட மித்ராணி வேண்டுமென்றே பதில் அளிக்கவில்லை. அவன் மீண்டும் தட்டியபடி, “ராணி” என்று அழைத்தான்.

 

‘இவன் முதலில் இருந்தே என்னை ராணி னு தான் கூப்பிடுறானா!!’ என்று யோசித்தவள், ‘ஹ்ம்ம்.. மித்ரா னு கூப்பிட்டது போல் தெரியலை..’ என்ற யோசனையை தடை செய்வது போல் புகழ்வேந்தன் மெல்ல கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

அவள் சிறு கோபத்துடன், “உன்னை உள்ளே வரச் சொல்லி நான் சொல்லவே இல்லை?” என்றாள்.

 

அவளது முகத்தை கூர்ந்து கவனித்தவன் மனதினுள் சிறு நிம்மதி பிறந்தது. எங்கே அவள் தந்தையின் நினைவில் தவிப்பிலோ வருத்ததிலோ இருப்பாளோ என்ற கவலையில் இருந்தவனுக்கு அவளது கோபம் நிம்மதியையே தந்தது.

 

அவன், “நீ பாத்ரூமில் இருக்கிறியோ னு நினைச்சு உள்ளே வந்தேன்.. இப்போ என்ன கோபம் உனக்கு?”

 

அவள் அவனை முறைக்க, அவன், “என்ன?”

 

“இந்த கல்யாணம் எதற்காக நடந்தது?”

 

“அதை தான் சொன்னேனே!”

 

“ஸோ நீ பழி வாங்க தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்க!”

 

அவன் அமைதியாக பார்க்கவும் அவள், “இப்படி பார்த்தா? வாயை திறந்து பதில் சொல்லு”

 

“என்ன சொல்லணும்?”

 

“உண்மையைச் சொல்லு”

 

அவன் தோள் குலுக்க, அவள் கோபத்துடன் அவனை சற்று நெருங்கியபடி, “இன்னொரு முறை இப்படி தோளை குலுக்கின வர கோபத்துக்கு என்ன செய்வேனே தெரியாது”

 

“உனக்கே தெரியாததை பற்றி ஏன் பேசுற?”

 

“பதிலைச் சொல்லு”

 

“நான் சொல்றதை நீ நம்பாத போது………..”

 

“நீ முதல்ல சொல்லு”

 

அவள் கண்களை பார்த்தவன் ஆழ்ந்த குரலில், “நீ எனக்கு அறிமுகம் ஆனதுக்கு வேணா என்னோட பழிவெறி காரணமா இருக்கலாம் ஆனா நம்ம கல்யாணத்துக்கு அது காரணம் இல்லை”

 

“பொய்”

 

“இதுக்கு தான் நான் சொல்ல மாட்டேன் னு சொன்னேன்”

 

[the_ad id=”6605″]

 

 

 

“உன் பழி வெறிக்கு என்னை ஏன் பலியாக்கின?”

 

“ராணி நான் தான் சொல்றேனே.. நான்……………”

 

“நீ சொல்றதை எப்படி நம்புறது?”

 

“உன்னிடம் உண்மையா மட்டும் தான் இருப்பேன் னு………..”

 

“அதையும் நீ தானே சொன்ன!”

 

“வேற யாரு சொல்லுவா?”

 

“உன்னை எனக்கு எத்தனை நாளா தெரியும்?”

 

“மணி இப்போ ஒன்பது.. ஸோ பதினாலு மணி நேரம் அதாவது எண்ணூற்றி நாப்பது நிமிடங்கள்” என்றவன் ஆழ்ந்த பார்வையுடனும் ஆழ்ந்த குரலிலும், “இதில் ஒரு நிமிஷம் கூட என் காதலை நீ உணரலை னு சொல்றியா?”

 

ஒரு நொடி பேச்சற்று நின்றவள் பின் கோபத்துடன், “என் கேள்வி உன் காதலைப் பற்றி இல்லை.. இந்த கல்யாணம் நடக்க காரணம் என்னனு பேசிட்டு இருக்கோம்.. நீயே தான் சொன்ன.. உன் காதலை நீயே தாலி கட்டிய பிறகு தான் உணர ஆரம்பிச்ச னு…………”

 

“ஆமா.. இப்பவும் அதைத் தான் சொல்றேன்.. என் மனதை நானே தாலி கட்டிய நொடியில் இருந்து தான் உணர ஆரம்பித்தேன் ஆனா நீ என்னுள் நுழைந்திருக்கவில்லை என்றால் இந்த கல்யாணம் நிச்சயம் நடந்து இருக்காது……………….”

 

“நீ சொல்றது உனக்கே முரண்னா தெரியலையா?”

 

“இப்போ உன் கோபமோ பிரச்சனையோ நான் உன்னை கல்யாணம் பண்ணது இல்லை.. நான் உன் மேல் கொண்ட காதலுக்காக உன்னை கல்யாணம் செய்யாம என்னோட பழி வெறிக்காக உன்னை கல்யாணம் செய்துக் கொண்டேன் னு நினைக்கிற.. அதனால் தான் இந்த கோபம்.. ஸோ உன் மனம் அதற்காக தான் தவிக்குது.. ஸோ என் காதல் உன் மனதை தீண்டியதோடு உன் மனதை அசைத்து நான் உன் மனதினுள் நுழைந்தும்விட்டேன்.. சரியா?”

 

அவள் பெரும் அதிர்ச்சியுடன் பேச்சற்று நின்றாள்.

‘அதானே! இப்போ என் கோபம் எதனால்? பழி வெறிக்காக இல்லாமல் காதலுக்காக இந்த கல்யாணம் என்றால் என் மனம் சமாதானம் ஆகிடும் என்றால்! அப்போ என் மனம் இவனை ஏற்கத் தொடங்கி விட்டதா?’ என்ற கேள்வி பூதகரமாக எழ பெரும் அதிர்ச்சியுடன் நின்றுவிட்டாள்.

 

அவள் முகத்திற்கு முன் சொடக்கிட்டவன், “என்ன?” என்றான்.

 

தனது மனதின் அதிர்வை மறைக்க முயற்சித்தபடி அவள் வரவழைத்த கோபத்துடன், “நீ பேச்சை மாத்துற” என்றாள்.

 

அவனோ நிதானமான குரலில், “என்ன தேவைக்கு?”

 

“தப்பிக்க”

 

“எதில் இருந்து தப்பிக்க?” என்று வினவியவன், “வாழ்க்கை முழுவதும் உன் அன்பின் சிறையில் இருக்க தான் நான் விருப்பப் படுறேன்” என்றான் காதலுடன்.

 

அவனது பார்வையும் குரலும் தன்னை வசியம் செய்வது போல் உணர்ந்தவள் தலையை சிறிது உலுக்கியபடி பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

அவன், “ராணி” என்று அழைக்க, அந்த குரல் அவளை வசியம் செய்தது நிஜம். அவள் அவளையும் அறியாமல் அவனைப் பார்த்தாள்.

 

அவன், “பழி வாங்குவது மட்டும் தான் என் நோக்கம் என்றால்.. கல்யாணத்தை நிறுத்தி வேற ஒருத்தனுக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன்……………”

 

அவளது முறைப்பில் மென்னகையுடன், “என் மன நிலை எப்படி இருந்து இருக்கும் னு சொல்றேன்.. அண்ட் இப்போ நான் சொல்லாமல் என்னோட பழிவெறி பற்றி உனக்கு தெரிந்து இருக்காதே! பின்னாடி கிருபாகரனோ அவனோட பசங்களோ உன்னிடம் சொன்னாலும், உன் சொத்துக்காகவும் உன் மனதை கலைக்கவும் அப்படி சொல்றான்க னு உன்னை சமாளிக்க என்னால் முடியாதா?”

 

சில நொடிகள் மௌனத்தில் கழிய, அவன், “சாப்பிட போகலாம் வா” என்றான்.

 

“எனக்கு பசிக்கலை” என்று கூற,

 

அவன், “ராணி! ஒவ்வொரு வேளையும்……………..” என்று கண்டிப்புடன் பேச,

 

அவள், “நிஜமாவே பசிக்கலை.. ஸ்னாக்ஸ்-ங்கிற பெயரில் நீ கொடுத்ததே டின்னர் மாதிரி தான் இருந்தது”

 

“ஸ்லிம்-ஆ இருக்க டயட்டில் இருக்கிறியா?” என்று வினவியவனின் பார்வை அவளது உடலில் பதிய,

 

அவள் முறைப்புடன், “நீ அதிகமா திங்கிறதால் நான் கம்மியா சாப்பிடுறதா உனக்கு தெரியுது”

 

“நான் சாப்பிட்டதை எப்போ பார்த்த?”

 

“ஸ்னாக்ஸ் என் கூட தானே சாப்பிட்ட”

 

“அப்போ நீ குனிஞ்ச தலை நிமிராம தானே சாப்பிட்ட” என்று கிண்டலாக கூற,

 

அவள் முறைப்புடன், “நீ கொண்டு வந்தப்ப பார்த்தேன் தானே! இப்போ நீ போய் சாப்டுட்டு எனக்கு பால் மட்டும் எடுத்துட்டு வா” என்றாள்.

 

அவன் எதையோ நினைத்து சிரிக்க, அவள், “என்ன?”

 

“சொன்னா அடிக்கக் கூடாது”

 

“ஆமா நீ ரொம்ப பயந்தவன்!”

 

“பொண்டாட்டிக்கு பயப்படாதவன் இருப்பானா?” என்றவனின் பார்வை சிறு மையலுடன் அவளை நோக்க,

 

அவள் அதை பொருட்படுத்தாமல், “என்ன னு சொல்லு” என்றாள்.

 

அவன் குறும்பு பார்வையுடனும் மென்னகையுடனும், “பஸ்ட் நைட்க்கு பொண்ணு தான் பால் எடுத்துட்டு ரூமுக்கு வருவா.. ஆனா” என்று நிறுத்தி அவன் கண்சிமிட்ட, அவள் அவனை அடிக்க பொருள் தேட, அவன் நகைப்புடன், “வேந்தா எஸ்கேப்” என்று கத்தியபடி வெளியேறினான்.

 

அவளது முகத்திலும் சிறு புன்னகை அரும்பியது.  

 

                        இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!