Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 11

பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே

 

வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னலே

 



Advertisement

நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே

 

நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே

Advertisement

 

Advertisement

இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே

 

அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்

Advertisement

 

வீடு என்றால் மோட்சம் என்பார் வீடு கண்டோம் நேசத்திலே

 

தேவா…. வேலுச்சாமி குடும்பத்தின் பரம்பரை பகையாளி… பல தலைமுறைக்கு முன் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபம் இன்று பகையாய் மாறி நிற்கிறது…. 

 

ஆனால் காரணம் இரு தரப்பினருக்கும் இன்று நினைவில் இல்லை… அதனாலேயே வேலுச்சாமி தேவாவுடன் அதிகம் வம்பு வைத்து கொள்ள மாட்டார்… சிறு பிள்ளை தனமாக இருக்கும் என்பது அவரின் எண்ணம்…. 

 

அங்கு சோலை கட்டில் வைத்து…. அன்பை முடித்து தன் இத்தனை நாள் பகையை முடித்து கொள்வது தான் அவரின் திட்டம்… இதற்காக தானே நேரே சென்று அன்பின் முன் நின்றார் தேவா… 

 

“சும்மா இருந்தாலே நல்லா அடிப்பான்.   இதுல அடி அடின்னு அவன் முன்னாடி போய் நின்னா சும்மாவா விடுவான் ” இரண்டு வருகிமடங்களுக்கு முன் இங்கு  இருந்து செல்லும் முன் இருந்த அந்த ஆக்ரோஷமான, சீறி பாயும் அன்பை சவால் விட்டு வெளியே வர வழைத்தார் தேவா…. 

 

[the_ad id=”6605″]

 

 

 

ஆம்…..இப்பொது கோவம் கூட வருமா…. சத்தமாக கூட பேசுவானா என்று இருக்கும் அன்பிற்கு கோவம் நாள் முழுதும் மூக்கின் மேல் இருக்கும்… அதுவும் இந்த தேவா வேலுச்சாமியை பழிவாங்குகிறேன் என்று பெயரில் செய்யும் காமெடிகள்…

 

 “என்னடா” என்பது போல் இருந்தாலும்… தனியாக தேவா வீட்டிற்கு போய்…. அவரின் ஆட்களை தூக்கி போட்டு அல்லையில் மிதித்து விட்டு… தேவாவை எச்சரித்து விட்டும் வருவான்…. 

 

இது அனைத்தும் கூட…. வேலுச்சாமியை சபையினர் முன் எதிர்த்து பேசியதற்காக தான்….. 

 

அதனாலேயே அவனின் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வர….. டெல்லியில் தனக்கு தெரிந்த நண்பனின் உதவியுடன் அன்பிற்கு வேலை ஒன்றை பார்த்து வைத்து… அங்கு சிறிது காலம் இருந்து வரட்டும் என்று பிள்ளையை பிரிய மனம் இல்லாமல் அனுப்பி வைத்தார்… 

 

இதை எதையும் தெரியாத இனியவள் அங்கு மயங்கி கிடக்க… அன்பை பற்றி யோசித்து கவலை படுவதை விட…..இனியவளை பற்றியே அதிகம் கவலை கொண்டனர்… 

 

தேவா தன் ஆட்களை ஒன்று சேர்க்க எடுத்து கொண்ட நேரத்தை கூட அன்பு அவர்களை அடிக்க எடுக்கவில்லை… 

 

அங்கு நடப்பவை புரிவதற்குள் அன்பு அனைவரையும் அடித்து முடித்து… தேவாவிடம் வந்தவன்…. 

 

“நீ எல்லாம் திருந்தவே மாட்டியா… போனா போகுதுனு உன்ன உயிரோட விட்டா… இன்னும் அடங்களாயா நீயு….இதுக்கு அப்றம் உயிரோடு இருக்கனும் என்ற எண்ணம் இருந்தால் உன் முகத்தை நான் மறுபடியும் பார்க்க கூடாது”… பஞ்ச் டயலாக் வேறு…. 

 

வீடு வந்தவன்… தன் தந்தையும் மாமனும் நலம் என்பதில் சந்தோச பட்டான்… 

 

தந்தையிடம் நடந்தவற்றை கூறி… இனி பிரச்னை எதுவும் பிரச்னை வராது என கூறி பேசி கொண்டு இருக்கும் போதே….. இடை மரித்த சகுந்தலா 

 

“என்ன அன்பு… உன்ன மாதிரி உன்னோட மனைவியும் தைரியசாலியா இருப்பானு பாத்தேன்…. ரொம்பவே கோழையா இருக்காளே…. இவள எப்படி உனக்கு பிடிச்சி… ஒரு வருஷம் குடும்பம் வேற நடத்துணியோ” சலிப்பது போல் குத்தியும் காண்பித்தார் 

 

இனியவள் அங்கு இல்லாமல் போனது அப்போது தான் உணர்ந்தான் அன்பு… 

 

“இனியா எங்கமா… ஆளே காணோம்”

 

“ரூம்ல இருக்கா தம்பி…கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க சொல்லி இருக்கேன்” என்றார் செல்லம்மாள்….. 

 

“என்னமா ஆச்சு… மறுபடியும் உடம்பு சரி இல்லையா….. வேறு எதுவும் தொந்தரவா” பதடயத்துடன் கேட்டவன்… அவர் பதிலுக்கும் காத்திருக்காமல் தன் அறை சென்றான்… 

 

தலையணையில் முகம் சாய்த்து கண் மூடி அமர்ந்து இருந்த இனியவளை கண்டவன்… அவள் அருகில் சென்று… அவள் தலை மேல் கை வைத்து… இனியா என்று அழைத்தது தான் தாமதம்…. 

 

அன்பை கட்டி கொண்டு அழ ஆரம்பித்தவள்… தன்னால் முடிந்த வரை அழுது…. அவன் நெஞ்சிலே துவண்டும் போனாள்….. 

 

அவள் அழும் வரை காரணம் புரியாமல் போனாலும்… அமைதியாய் அவளை தேற்றினான் அன்பு… 

 

[the_ad id=”6605″]

 

 

 

துவண்டு போனவளிடம் அப்டி கேட்பது என்று முழுத்தவனுக்கு பதிலாய் செல்லம்மாவும், ஜானகியும் அங்கு வந்து நின்றனர்…. 

 

“உன்ன தேவா ஆளுங்க மடக்கிடாகனு கேள்வி பட்டதும்…. பாவம் இனியா தான் ரொம்பவே பயந்துடா… வாசலையே தான் பாத்துட்டுகிட்டு இருந்தா…. தெருவில் கேட்கும் ஒவொவொரு வண்டியின் சத்தத்திற்கு வாசல் வரை ஓடி பார்த்து ஏமார்ந்து போய் வீட்டுக்குள் வருவதும்… இதையே தான் பண்ணிக்கிட்டு இருந்தா… கடைசியா தேவா கிட்ட நீ மாட்டிக்கிட்டனு தெரிஞ்சதும் பயத்துல மயங்கிடா பாவம்”இனியவளின் தவிப்பை அவள் பட்ட கஷ்டத்தை கூறி முடித்தார் ஜானகி…. 

 

அனைத்தயும் கேட்டு கொண்டு இருந்த அன்பிற்கு சிறு யோசனை பார்வையாய் இனியவளை பார்க்க… 

 

அவள் அப்போதுதான் தான் அன்பை கட்டிக்கொண்டு இருப்பதை உணர்ந்து… அவனிடம் இருந்து நகர்ந்து தள்ளி அமர்ந்தாள்… 

 

அவள் அழுததை பார்த்து இப்பொது வைஷு அன்பின் கழுத்தை கட்டி கொண்டு காரணமே இல்லாமல் அழ ஆரம்பித்தாள்…. 

 

அவளை சமாதானம் செய்ய அந்த அறையின் பால்கனிக்கு அழைத்து சென்றான் அன்பு…. 

 

ஜானகி எதோ பேசிவிட்டு வெளியே சென்று விட….. அன்பிடம் இப்போதும் ஒதுங்கியே இருக்கும் செல்லமைவை கண்டவள்… எதோ நினைத்து கொண்டு அவரை அழைக்க…. 

 

“அத்தை…. எங்க மேல கோவமா இருந்தீங்க…. இப்போ தான் என்னையும் வைஷுவையும் மணிச்சிடீங்க இல்லை… அவரையும் மன்னிச்சிட கூடாத…. அவர் கிட்ட மட்டும் எதுக்கு ஒதுக்கம் காட்டுறீங்க”

 

இவள் பேச ஆரம்பிக்கும் போதே அறைக்குள் வந்த அன்பு… தனக்காக சிறிபரிசு செய்யும் இனியவளை பார்க்க எதோ புதிதாய் இருந்தது அன்பிற்கு…. அவளையே வாஞ்சையுடன் பார்த்து கொண்டு இருக்க….. 

 

“உன் புருஷனுக்கு நீ சிபாரிசா” என்று அவர் பேசும் போதே அவர் பக்கத்தில் வந்த அன்பு 

 

அன்பின் கைகளில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு இருந்த வைஷுவும்…. பீஸ்(ப்ளீஸ்) பாட்டி என்று கெஞ்ச…. அந்த அழகில் யாருக்கு தான் மயங்க தோணாது… 

 

“போட படவா… பொண்டாட்டியும், பொண்ணையும் வெச்சி அம்மாவ ஏமாத்துறியா? “

 

“இவ்ளோ அழகான மருமகளும் சுட்டியான பேத்தியும் குடுத்துட…. உன் கிட்ட போய் கோச்சிக்கிட்டு எங்க போக முடியும்”

 

வா என்று அணைத்து கொண்டார் செல்லம்மாள்… அன்பை….. 

 

இதில் மனம் நிறைந்தது மட்டும் இல்லாமல்… இனியவளின் மேல் எதோ சொல்ல முடியாத பரிவும் வந்தது….. 

 

“ஓஹோ… நான் இல்லாமல் குடும்பம் ஒன்னு கூடுதோ….. இந்த நியாயத்தை கேட்க யாருமே இல்லையா… வைஷு குட்டி நீயும் சிந்துவை இப்டி விட்டுட்டியே” பாவமாக 

முகத்தை வைத்து கொண்டு உள்ளே வந்தான் இலக்கியன் 

 

அவனை பார்த்ததும்… ஹாய் சித்து  என்று தாவி கொண்டது வைஷு…. 

 

பின் இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்த இலக்கியன்… செல்லம்மாவையும், வைஷுவையும் கூட்டி கொண்டு கீழே சென்று விட்டான்… 

 

இனியவளிடம் திரும்பிய அன்பு… “ரொம்பவே நன்றி இனியா…. என்னதான் நடிப்பா இருந்தாலும்…. அதை மிக பொருத்தமாக பண்ணி இருக்கீங்க… “

 

உங்களை நான் ரொம்பவே கஷ்டப்படுத்துறேன்னு நினைக்குறேன்… தேவை இல்லாம… என்மேல் உங்களுக்கு இல்லாத உணர்வை இருப்பது போல் காண்பித்து கொண்டு… அதற்காக கவலை படுவதை போல்…எனக்காக தவிப்பது போல் நடிப்பது கஷ்டம் தான்…. கூடிய விரைவில் வீட்டில் இருப்பவர்களிடம் அனைத்தையும் கூறி விட முயற்சி செய்கிறேன் என்றான் அன்பு…. 

 

அவன் கூற வருவதை ஆசையாய் கேட்க ஆரம்பித்த இனியவள்… அவன் கூற்றின் பொருள் புரிய வர… அவளே அவளை கேள்வி கேட்கும் வண்ணம் ஆனது நிலைமை…. 

 

அடுத்த இரண்டு நாட்கள் குடும்பமே குதூகலமுடனும், சந்தோஷத்தில் திளைத்து இருக்க… 

 

அந்த மகிழ்ச்சியிலும் அன்பின் பார்வை இனியவளை தான் பின் தொடர்ந்து… அதை அவள் அறிந்தும்… அவனிடம் முகம் குடுக்க மனம் இல்லாமல் அவனிடம் ஒதுக்கவும் செய்தாள்… 

 

அன்று இரவு…மாடியில் தனியாய் நின்று நிலவை பார்த்து கொண்டு நின்று கொண்டு இருந்தான் அன்பு… அவனிடம் வந்த இலக்கியன்… 

 

“என்ன அண்ணா… பொண்டாட்டி முகம் நிலவுல தெரியுதானு தேடுறியா” அவனை வம்பிழுக்க… அன்போ இல்லை என்பதை போல் தலை அசைக்க 

 

[the_ad id=”6605″]

 

 

 

“இல்லாமலா அண்ணியை முழுங்குறது போல் பார்த்துகிட்டு இருந்த…. அவுங்க போற இடம் எல்லாம் போய் அவுங்கள சுத்தி சுத்தி வந்த”

 

“அப்டி எல்லாம் ஒன்னும் இல்லையே…நான் சும்மா தான்… நன்றி சொல்ல… அதாவது… அது வந்து… ஏன் நான் என் பொண்டாட்டிய பார்க்க கூடாத” தெளிவாக மாட்டிக்கொண்டன் அன்பு 

 

“அப்டி போடு… இத… இத தான் உன் வாயில இருந்து எதிர் பார்த்தேன்…. எப்டி எப்டி… அவுங்க யாரோவா… அறிமுகம் இல்லாதவங்களா… அதுவும் அவுங்கள இந்த வீட்டை விட்டு அனுப்ப போறியா… எப்டி எப்டி எல்லாம் பூசுத்துன என் காதுல” அண்ணனை மடக்கிய சந்தோஷத்தில் இலக்கியன் குதிக்க 

 

தான் கூறிய வார்த்தையின் பொருள் அப்போது தான் புரிந்தது அன்பிற்கு…. 

 

உடனே அதை மறுப்பாக… தெரியாமல் கூறி விட்டதாக கூற… அதை துளியும் ஏற்க மறுத்தான் இலக்கியன்… 

 

“புரிஞ்சிக்கோ இலக்கியா…. என்னால இனியவை அப்டி பார்க்க முடியாது… ஏன்னா என் மனசுல ஏற்கனவே இன்னொரு பெண் இருக்கா…. அவளால காயங்கள் அதிகமா இருக்கு என் மனசுல… அப்டி இருக்கும் போது இனியவை அப்டி நினைப்பது… எனக்கு மட்டும் இல்லை… அவளுக்கும் காயத்தை தான் தரும்” பரிதாபமாக பேசியவனை வியந்து பார்த்து கொண்டு இருந்தான் இலக்கியன்….. 

 

உன்னோட அந்த கம்பீரம் எங்கடா போச்சு… இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இங்க இருந்து போன அன்பு எங்க… இப்டி அலுத்து போய்.. வாழ்க்கையில பிடிப்பு இல்லாம… 

 

உன் மனசு என்ன சொல்லுதுன்னு கூட புரிஞ்சிக்க முடியாத அளவுக்கா மீரா உன்னில் தாக்கத்தை உண்டாக்கி இருக்கா… 

 

நீ பயந்து, தயங்கி நின்னு நான் இது வரைக்கும் பார்த்தது இல்லைடா… மீரா விஷயத்தில் மட்டும் ஏன் இப்டி”

 

யார் அவள்… அவள் எப்டி உன்னோட கம்பீரத்தையும், துணிச்சலையும் இப்டி அழிச்சா… நீ எப்டி அழிக்க விட்ட….இடை விடாது தாக்கினான் இலக்கியன்….. 

 

                  மாயம் தொடரும்….. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!