Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 26

    பிடித்தம் 26

மாலினி கலவரத்துடன் தந்தையைப் பார்க்க, அவரோ, “இல்லை சம்பந்தி நானும் முன்னாடி இப்படித் தான் நினைத்தேன்.. ஆனா இந்த வேலையில் தான் மாப்பிள்ளை உயிர்ப்புடன் இருப்பார்.. அவர் மாலினியை எந்தளவிற்கு நேசிக்கிறாரோ அதே அளவிற்கு அவரோட வேலையையும் நேசிக்கிறார்” என்றார்.

 

தந்தையின் பேச்சை கேட்டு மாலினிக்கு மயக்கம் வருவது போல் இருக்க அவள் அருகில் அமர்ந்திருந்த அன்னையின் கையை பற்ற பார்வையோ தந்தையிடம் தான் இருந்தது.



Advertisement

 

மாலதி, “என்னவோ (அண்)ணா என் மனம் இன்னமும் முழுமையா சமாதானம் ஆக மறுக்குது” என்றார்.

 

Advertisement

புஷ்பா மாலினியின் கையை பற்றி அழுத்தம் கொடுக்க, அன்னையை பார்த்தாள். அவர் மற்றவர்களை கவனிக்குமாறு பார்வையில் சுட்டிக் காட்டவும் மாலதியை பார்த்தவள், “அப்பா சொல்றது போல் அவங்க இந்த வேலையில் தான் உயிர்ப்புடன் இருப்பாங்க.. அப்பாவுக்கு அவங்க அறிமுகம் ஆனது கூட இந்த வேலையால் தான்.. முதல் நாளே இப்படி பேசுறேன் னு தப்பா நினைச்சுக்காதீங்க அத்தை.. உங்க பயத்தை போக்க தான் சொல்றேன்.. ஆபத்து என்பது எதில் தான் இல்லை? மலையில் இருந்து விழுந்து பொழைச்சவனும் இருக்கிறான் புல் தடுக்கி செத்தவனும் இருக்கிறான் னு சொல்றது இல்லையா? நமக்கு நடக்கணும் னு இருந்தா ரோட்டில் நாம ஓரமா நடந்து போகும் போது கூட எதிரில் வரும் வண்டியில் ப்ரேக் பிடிக்காமல் நமக்கு எது வேணா நடக்கலாம்.. அவங்க வேலையில் தான் ஆபத்து னு நினைக்க வேண்டாமே” என்று இறங்கிய குரலில் கெஞ்சலாக முடித்தாள்.

Advertisement

 

மாலதி மென்னகையுடன், “உன் வீட்டுக்காரர் வேலையை பற்றி இனி நான் எதுவும் சொல்லலை மா” என்று கூற,

 

Advertisement

யாழினி, “பார்த்தீங்களா பா! நாம எத்தனை நாள் சொல்லி இருப்போம்.. அண்ணா எவ்ளோ சமாதானம் சொல்லி இருப்பான்! அண்ணி சொன்னதும் சரி னு சொல்லிட்டாங்க!” என்று கூற,

 

மாலதி, “மாலினி மாதிரி சொல்ல உங்களுக்கெல்லாம் தெரியலை” என்று கூற,

 

யாழினி, “எப்படி அண்ணி இப்படி? முதல் பாலிலேயே விக்கெட் அவுட் பண்ணிட்டீங்க?”

 

அனைவர் முகத்திலும் மென்னகை அரும்ப, மாலினி சிறு சங்கோஜத்துடன் புன்னகைத்தாள்.

 

“சும்மா கிண்டல் பண்ணாத” என்று மகளை பார்த்து கூறிய மாலதி மாலினியை பார்த்து, “என்ன வேணும் னு ஆர்டர் சொல்லு மா” என்றார்.

 

மாலினி, “அவங்க வந்திடட்டுமே” என்று கூற,

 

அவர், “சூப் அண்ட் ஸ்டார்டர் அவனுக்கும் உனக்கும் சேர்த்து சொல்லு.. மெயின் டிஷ் அவனுக்கு அவன் வந்ததுக்கு அப்பறம் சொல்லிக்கலாம்” என்றார்.

 

அவள் அப்பொழுதும் தயங்கியபடி, “இல்லை.. அவங்களுக்கு என்ன பிடிக்கும் னு எனக்கு தெரியாது.. இல்லை நீங்களே சொல்லிடுறீங்களா?” என்று கூற, சிறு விஷயத்தில் கூட மகனிற்காக பார்க்கும் அவளது பதிலில் மாலதிக்கு அவளை இன்னும் பிடித்தது.

 

அவர் மென்னகையுடன், “உணவு விஷயத்தில் அவனுக்கு பிடிக்காது னு எதுவும் கிடையாது.. நீயே சொல்லு” என்றார்.

 

சரியாக அந்த நேரம் மேஜை பணியாளர் வரவும் அவள் இருவருக்கும் சூப் மற்றும் ஸ்டார்ட்டர் சொல்லி அனுப்பினாள்.

 

பணியாளர் செல்லவும் வெற்றிவேல் அங்கே வரவும் சரியாக இருந்தது.

 

“சாரி.. ஒரு முக்கியமான வேலை.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றபடி தங்கை அருகில் மாலினிக்கு எதிரே அமர்ந்தான்.

 

அருணாச்சலம், “லேட்-லாம் இல்லை.. மாலினி வந்தப்ப தான் நாங்களும் வந்தோம்” என்றார்.

 

மாலினி வெற்றிவேலிடம், “டோமேடோ சூப்பும் மஷ்ரூம் ஸ்டார்ட்டர் சொன்னேன்.. உங்களுக்கு ஓகே வா? இல்லை மாத்தனும் னா மாத்திடலாம்.. இப்போ தான் சொன்னேன்” என்றாள்.

 

அவன் புன்னகையுடன், “எனக்கு எதுனாலும் ஓகே” என்று கூற,

 

யாழினி, “அண்ணி நீங்க பச்சை மிளகாய் கொடுத்தா கூட அண்ணா இப்போ சாப்பிடுவான்” என்று கூற,

 

வெற்றிவேல், “ஏய் வாலு” என்று அவளது தலையில் லேசாக தட்டினான்.

 

மாலினி கண்ணால் ‘தரவா?’ என்று வெற்றிவேலிடம் வினவ அவனோ அவளது முகத்தை அமைதியாக பார்க்க, அவள் புருவம் உயர்த்தினாள்.

 

அப்பொழுது அவளது கைபேசியில் குறுந்தகவல் வந்ததிற்கான ஒலி வந்தது. ஆனால் அவளோ அதை கண்டுகொள்ளாமல் வெற்றிவேலையே பார்க்கவும் அவன் செய்கையில் கைபேசியை பார்க்க சொல்லி சொன்னான்.

 

மாலினி மனதினுள், ‘இவர் தான் மெசேஜ் அனுப்பி இருக்காரா? நம்மளை தானே பார்த்துட்டு இருந்தார்!’ என்ற யோசனையுடன் கைபேசியை ஆராய்ந்தாள்.

 

யாழினி வெற்றிவேலிற்கு மட்டும் கேட்கும் குரலில், “நான் வேணா அங்கே போயிட்டு அண்ணியை இங்கே அனுப்பவா?” என்று வினவ,

 

[the_ad id=”6605″]

 

 

அவனோ மாலினியின் முகத்தை பார்த்தபடி, “இதான் எனக்கு வசதி.. அப்போ தான் அவ முகத்தை பார்க்க முடியும்” என்றான்.

 

“ரைட்டு நீ நடத்து” என்றபடி கவனத்தை அன்னை பக்கம் திருப்பினாள்.

 

“தாராளமா தா.. ஆனா காரத்தை போக்க உன்னோட தேன் இதழ் வேண்டும்” என்று வெற்றிவேல் அனுப்பிய குருஞ்செய்தியை படித்த மாலினி தன்னுள் எழுந்த லஜ்ஜையை மறைக்க போராடியபடி வெற்றிவேலை முறைத்தாள்.

 

அவனோ யாரும் தங்களை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு உதட்டோர புன்னகையுடன் கண்ணடித்தான்.

 

அவனது செயலில் மாலினி தான் திணறிப் போனாள்.

 

‘ப்ளீஸ்’ என்று அவள் கண்களால் கெஞ்சவும் வெற்றிவேல் அதன் பிறகு அமைதியாக இருந்தாலும் பிறர் அறியாமல் தனது தட்டில் இருந்ததை அவளது தட்டில் வைப்பதும் அவளது தட்டில் இருந்ததை தான் உண்பதுமாக இருந்தான்.

 

உணவை முடித்துக் கொண்டு கிளம்பும் வேளையில் அருணாச்சலத்தின் கையை பற்றி, “தேங்க்ஸ் மாமா” என்றான்.

 

அவர் மென்னகையுடன், “எதுக்கு மாப்பிள்ளை தேங்க்ஸ்யெல்லாம் சொல்லிட்டு.. எனக்கு வேண்டியது நீங்களும் மாலினியும் சந்தோஷமா இருக்கணும்”  என்றார்.

 

அதன் பிறகு வீட்டிற்கு கிளம்பினர்.

 

வீட்டிற்கு வந்ததும் மாலினி தந்தையின் கையை பிடித்து தோளில் தொங்கியபடி, “எப்படி பா? சொல்லுங்க” என்றாள்.

 

புஷ்பா, “மாலினி இன்னும் நீ சின்ன பிள்ளை இல்லை.. இப்படி கொஞ்சாத” என்று சிறு கண்டிப்புடன் கூற,

 

மாலினியோ இன்னும் தந்தை மேல் சாய்ந்து, “எனக்கே பிள்ளை வந்தாலும் நான் இப்படி தான் கொஞ்சுவேன்” என்று கூறி அழகு காட்டினாள்.

 

புஷ்பா சிரித்துக் கொண்டிருந்த கணவரை முறைக்க, மாலினி, “நீங்க சொல்லுங்க பா” என்றாள்.

 

அருணாச்சலம் மகளுடன் சோபாவில் அமர்ந்தபடி கூற ஆரம்பித்தார். வெற்றிவேல் முதல் முறை தன்னை அலுவலகத்தில் வந்து பார்த்து பேசியதை பற்றிக் கூறியவர் பிறகு, “மாப்பிள்ளை முதல் முறை வந்து பேசிட்டு போனதில் இருந்தே என் மனம் மாறத் தொடங்கினாலும் ஏதோ ஒரு தயக்கம் இருக்கத் தான் செய்தது.. சரி நீ வந்து உன் மனதை திறந்தால் பார்த்துக் கொள்ளலாம் னு இருந்தேன்.. அப்பறம் ரெண்டு நாள் முன்னாடி திரும்ப வந்தார்.. வந்து உன் பிறந்த நாளுக்கு விஷ் பண்ண உன் நம்பர் வேணும் னு கேட்டார்.. அவர் நினைத்தால் உன் நம்பரை ஈஸியா கண்டுபிடிச்சு இருக்கலாம்.. இருந்தாலும் அதை அவர் செய்யலை.. கூடவே அதைக் காரணமா வச்சு என்னைப் பார்க்க வந்தவர் போறதுக்கு முன்னாடி, ‘மாலினி என்னுடன் இருந்தால் அவளுக்கு என் வேலையால் ஆபத்து னு தானே தயங்குறீங்க.. இதுக்கு முன்னாடி அவளுக்கு ஆபத்து வந்தப்ப அவளுக்கு நான் யாருனே தெரியாது.. அப்போ அவ உங்க மகளா தான் இருந்தா’ னு சொல்லிட்டு போய்ட்டார்.. அதுக்கு அப்பறம் இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் போய்டுச்சு.. நீயோ என் மனதை கஷ்டபடுத்தாம உன் மனதை எப்படி சொல்றது னு தயங்கின.. அதான் உன் பிறந்தநாள் பரிசா இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் னு சம்பந்தி கிட்ட பேசினேன்.. மாப்பிள்ளை அதிர்ச்சியானதை பார்த்த போது மாப்பிள்ளைக்கும் விஷயம் தெரியாது னு புரிஞ்சுது” என்று மென்னகையுடன் கூறி முடித்தார்.

 

தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டு அவரது கன்னத்தில் முத்தமிட்டவள், “லவ் யூ ஸோ மச் பா” என்றாள்.

 

புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டவர், “காலையில் பொண்ணு பார்க்க வரதைப் பத்தி சொன்னதும் உன் காதலை சொல்லுவ னு எதிர்பார்த்தேன்.. அப்பவும் நீ எனக்காக பார்த்து தயங்கின.. எனக்கும் மாப்பிள்ளைக்கும் நடுவில் நீ திண்டாடினத்தை பார்க்க முடியாம நான் ஆபீஸ் கிளம்பிட்டேன்.. இருந்தாலும் மாப்பிள்ளை ACP தான் னு தெரியாமல் வேறு ஒருத்தர் முன் எப்படி நிற்கிறது னு நீ தவிப்ப னு தான் சம்பந்திக்கு போன் பண்ணி வீட்டில் இல்லாமல் கோவிலில் பொண்ணு பார்க்கலாமா னு கேட்டேன்.. அவங்களும் சரி னு சொல்லிட்டாங்க”

 

அவள் சிறிது கலங்கிய கண்களுடன் நெகிழ்ச்சியுடன் தந்தையின் தோளில் சாய்ந்து, “தன்க் யூ அண்ட் லவ் யூ ஸோஓஓஒ மச் பா” என்றாள்.

 

அவளது கண்களை துடைத்தவர், “மாப்பிள்ளை உன் போனுக்காக வெயிட் பண்ணுவார்.. போய் பேசிட்டு சீக்கிரம் தூங்கு டா” என்று அவளை திசை திருப்பினார்.

 

சிறு வெக்க புன்னகையுடன் எழுந்து சென்றவள் பின் திரும்ப வந்து அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ டூ மாம்” என்று கூறிவிட்டு அறையினுள் ஓடினாள்.

 

அவளது மகிழ்ச்சியில் பெற்றவர்களும் மகிழ்ந்தனர். பிறகு கல்யாண ஏற்பாடுகளை பற்றி பேசத் தொடங்கினர்.

 

அறையினுள் சென்ற மாலினி மெத்தையில் படுத்தபடி வெற்றிவேலை கைபேசியில் அழைத்தாள்.

 

வெற்றிவேல் அழைப்பை எடுத்த வேகத்தில் அவள் சிறு ஆச்சரியத்துடன், “ரிங்கே போகலை.. அதுக்குள்ள எப்படி எடுத்தீங்க?”

 

[the_ad id=”6605″]

 

 

“கையில் தான் வச்சிட்டு இருந்தேன்.. உன் போனுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. அதான்.. சரி சொல்லு.. மாமா என்ன சொன்னாங்க?”

 

“பேசி பேசியே என்னை மயக்கிய மாதிரியே அப்பாவையும் கௌத்துட்டீங்க னு சொன்னாங்க”

 

“நான் தான் உன்னிடம் மயங்கி இருக்கிறேன்” என்று அவன் கிசுகிசுப்பான குரலில் கூற,

 

அவனுள் பட்டாம்பூச்சி பறக்க, அதை மறைத்தபடி வரவழைத்த இயல்பு குரலில், “கோவிலில் என்னை பார்த்ததும் நீங்க ஏன் ஷாக் ஆனீங்க?”

 

“பேச்சை மாத்துறியாக்கும்.. சரி அப்பறம் கவனிச்சிக்கிறேன்” என்றவன், “எனக்கு பொண்ணு பார்க்கிற விஷயமே தெரியாது.. மதியம் உன்னை பார்த்துட்டு போன பிறகு போன் பண்ணி கோவிலுக்கு போகணும் னு சீக்கிரம் வர சொன்னாங்க.. அம்மா எப்பவாது தான் இப்படி கூப்பிடுவாங்க.. அண்ட் உன் பிறந்த நாளுக்கு கோவிலுக்கு போகலாம் னு தோனுச்சு.. ஸோ கிளம்பி வந்தேன்.. உன்னை பார்க்கிறதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி தான் ‘இப்போ பொண்ணு பார்க்க தான் வந்திருக்கிறோம்’ னு சொன்னாங்க.. நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி யாழினி, ‘என்ன மா அண்ணா தான் மாலினியை விரும்புறதா சொன்னானே!’ னு கோபமா சொல்ல, அம்மா ‘அவள் இவனை விரும்பி இருந்தால் இந்நேரம் சம்மதம் சொல்லியிருப்பா.. இல்லை உன் அண்ணனுக்கு சாமர்த்தியம் பத்தலை.. இப்போ எனக்காக இந்த பொண்ணை பார்க்கிற’ னு சொன்னாங்க.. நான் கோபமா பேசுறதுக்கு முன்னாடி அப்பா சின்ன சிரிப்புடன் ‘பொண்ணை பார்த்துட்டு பேசு டா’ னு சொன்னதும் நான் சந்தேகமா திரும்பிப் பார்த்தா நீ அதிர்ச்சியுடன் என்னை பார்த்து எழுந்து நிற்கிற.. உன்னைப் பார்த்ததும் சந்தோசம் னா உன் அதிர்ச்சி கோபத்தை கொடுத்தது………………….” என்று பேசியவனின் குரலில் இப்பொழுது கூட கோபம் எட்டி பார்க்க,

 

“அதான் சமாதானம் ஆகிட்டீங்களே.. திரும்ப அதையே பிடிச்சு தொங்கக் கூடாது”

 

“அப்போ ஒரு முத்தம் தா”

 

“என்ன!” என்று சிறு படபடப்பு கலந்த அதிர்ச்சியுடன் வினவ,

 

அவன், “போனில் தானே கேட்டேன் நேரிலா கேட்டேன்?”

 

“அதெல்லாம் முடியாது”

 

“ஐ லவ் யூ தான் சொல்லலை.. சரி விடு” என்று சிறிது இறங்கிய அக்குரலில் அவன் கூற அவள் தவித்துப் போனாள்.

 

அவள், “வேணா.. நீங்க வேணா.. தாங்க” என்றாள் வெக்கம் கலந்த தவிப்புடன்.

 

அவளது மனநிலையை புரிந்தவன் அவள் தவிப்பது பொறுக்காமல், “சரி விடு.. நானே தரேன்.. இதை கணக்கில் வச்சிக்கிறேன்” என்றவன் கரகரத்த குரலில் காதலுடன், “மானுமா லவ் யூ ஸோ மச்” என்று கூறி அழுத்தமான பல முத்தங்களை தர, அவன் நேரில் கொடுத்தது போல் அவளது முகம் சிவந்து போனது.

 

அவன், “நல்லா இருந்ததா?” என்று கிசுகிசுப்பான குரலில் வினவ,

 

அவளோ மயக்கத்தில் இருப்பவள் போல், “ம்” என்றாள்.

 

அதன் பிறகு நேரம் போறதே தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தவர்களின் பேச்சு அதிகாலையில் தான் நின்றது.

 

————————————————————————————————————————————————-

 

இரவு உணவை முடித்துக் கொண்டு வெள்ளி குவளையில் பாலை எடுத்துக் கொண்டு துள்ளலுடன் தனது அறைக்கு செல்லும் மகனைப் பார்த்தபடி நின்றிருந்த கலைவாணியின் முகம் பெயருக்கு ஏற்றார் போல் புன்னகையை சூடியபடி கலையுடன் காணப்பட்டது.

 

ரத்னா கலைவாணியிடம், “ரொம்ப வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் நீங்க மனசாரா சிரிக்கிறதை பார்க்கிறேன் மா”

 

கலைவாணி புன்னகையுடன், “ரொம்ப வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் என் பையன் சந்தோஷமா இருக்கிறான்.. பழையபடி கேலியும் கிண்டலுமா என்னுடன் பேசுறான்”

 

“எல்லாம் பாப்பா வந்த நேரம்”

 

“மித்ரா வந்த நேரம் னு இல்லை.. சந்தோஷத்துக்கு காரணமே மித்ரா தான்.. இந்த வீட்டோட மகிழ்ச்சியை மீட்க வந்த தேவதை அவ” என்று அவர் உணர்ச்சிபூர்வமாக கூறினார்.

 

ரத்னா, “அம்மா” என்று சிறு தயக்கத்துடன் அழைக்க, கலைவாணி என்ன என்பது போல் பார்த்தார்.

 

ரத்னா தயக்கத்துடனே, “அது.. இன்னைக்கு.. நைட்டுக்கு.. நல்ல நேரம்..” என்று இழுத்து நிறுத்த,

 

கலைவாணி, “சாத்திரம் சம்பிரதாயம், நாள் நட்சத்திரம் னு ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செய்த கல்யாணத்தில் நான் என்னத்தை பெருசா கண்டேன்? விடுங்க அவங்களே பார்த்துப்பாங்க.. மன பொருத்தம் தான் முக்கியம் மத்தபடி எதுவுமே நாம எடுக்கிறதில் தான் இருக்குது.. எல்லா நாளும் நல்ல நாள் தான்.. எல்லா நேரமும் நல்ல நேரம் தான்.. அதனால் தான் மித்ரா சாயுங்காலம் தோட்டத்தில் இருந்தப்ப விளக்கு ஏத்த அவளை கூப்பிடலை.. முதல் முறை அவ விளக்கு ஏத்துரப்ப மனசார சந்தோஷமா ஏத்தணும்.. கூடிய சீக்கிரம் அந்த நாள் வரும் னு நம்புவோம்”

 

“கண்டிப்பா சீக்கிரமே பாப்பா மனசு மாறும் மா”

 

கலைவாணி மென்னகையுடன், “சரி.. சரி.. சாப்டுட்டு பாத்திரத்தை ஒழிச்சு போட்டுட்டு சீக்கிரம் போய் படுங்க..” என்றுவிட்டு தன் அறைக்குச் சென்றார்.

 

 

கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த புகழ்வேந்தன் வேண்டுமென்றே வெக்கப் படுவது போல் பவனை செய்ய,

 

“ஓ காட்! இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் நான் பார்க்கணுமோ!” என்ற மித்ராணி, “என் கண்ணு அவிஞ்சிற போகுது.. முதல்ல உன் எக்ஸ்பிரஷனை மாத்து”

 

[டேய் வேந்தா! சதீஷ் மட்டும் உன்னை இந்த கோலத்தில் பார்த்து இருந்தான் மயக்கம் போட்டே விழுந்து இருப்பான்]

 

முகத்தை இயல்பாக மாற்றிய புகழ்வேந்தன் பாலை அவளிடம் நீட்டினான்.

 

உதட்டை சுளித்து அவனுக்கு அழகு காட்டியபடி பாலை வாங்கி அருந்தினாள்.

 

அவள் பாலை அருந்தி முடித்ததும் குவளையை வாங்கி மேஜை மீது வைத்தவன், “உண்மையை சொல்லு.. நான் போனதுக்கு அப்பறம் இப்படி ஒரு ஸீனை நீ கற்பனை செய்து பார்க்கலை?”

 

“எப்படி?”

 

“நான் வெக்கபட்டுட்டே உள்ளே வரது மாதிரி”

 

“அது இவ்வளவு கொடுமையா இல்லை” 

 

“இவ்வளவு கொடுமையா இல்லை னா! அம்சமா இருந்ததா?”

 

அவள் முறைக்க அவன் சிரித்தான்.

 

அவள் சிறு எரிச்சலுடன், “என்னை எரிச்சலோ கோபப் படுத்துவதையே பொழப்பா வச்சிருக்கியா? இதுக்கு தான் என்னை கல்யாணம் பண்ணிணியா?”

 

அவன் மையலுடன் நோக்கியபடி, “திகட்ட திகட்ட காதல் மழை பொழிஞ்சு, நானும் அதில் நனைந்து, ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழத் தான் ஆசைப் படுறேன்.. நான் ரெடியா தான் இருக்கிறேன்.. நீ ரெடியா?”

 

அவனது குரலும் வார்த்தைகளும் இப்பொழுதும் அவளது மனதை அசைக்க, அதை காட்டிக் கொள்ளாமல், “எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்குது”

 

“எதுக்கு என்னுடன் வாழ ஆரம்பிக்கவா?” என்றான் குறும்பு பார்வையுடன்.

 

அவள் முறைப்புடன், “இங்கே இருக்கிறதுக்கு”

 

“இங்கே னா இந்த வீட்டில்லா இந்த ரூமில்லா?”

 

“அது நீ நடந்துக்கிறதை பொருத்து”

 

“ஓ” என்றவன், “என்னென்ன கண்டிஷன்ஸ்?”

 

[the_ad id=”6605″]

 

 

“நம்பர் ஒன் நீ என்னை குத்திக்காட்டி பேசக் கூடாது”

 

அவன் சிறு அதிர்ச்சியுடனும் யோசனையுடனும் பார்க்க, அவள், “அதாவது மனோஜுடன் கம்பேர் பண்ணி பேசக் கூடாது.. லைக்.. அவனா இருந்தா இப்படி பேசுவியா பண்ணுவியா? இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று கண்டிப்புடன் கூற,

 

அவன் அடக்கப்பட்ட கோபத்துடன், “அதிகமா சினிமா பார்ப்ப போல” என்று கூற,

 

அவன் நடுவில் பேசாதது போல் பாவித்து அவள், “நீயா தான் இந்த பெட்ரோமாஸ் லைட் தான் வேணும் னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. ஸோ அப்படி ஏதாவது பேசின உன்னை தொலைச்சிடுவேன்” என்றாள்.

 

“என்னைக்குமே பார்வையிலோ வார்த்தையிலோ என் மனைவியை நான் கேவலப்படுத்த மாட்டேன்” என்றவன், “உன் வாழ்வில் என்னை தவிர வேறு ஒரு ஆண் இருக்கிறான் என்றால் அது என் மகனா தான் இருப்பான்..” என்றும் சேர்த்துக் கூறினான்.

 

அவனது கூற்றை கேட்டு ஒரு நொடி மௌனித்தவள், “அடுத்து.. நீ என்னை தொட்டுப் பேசக் கூடாது” என்றாள் கடினமான குரலில்.

 

“அது முடியாது”

 

“ஏன் முடியாது?” என்று அவள் மனதின் படபடப்பை மறைத்து குரலை சிறிது உயர்த்தி வேகமாக வினவினாள்.

 

அவனோ நிதானமாக அவளை ஊடுருவி பார்த்தபடி, “உன் விருப்பம் இல்லாமல் மெத்தையில் உன்னை ஆள மாட்டேன் ஆனா” என்று நிறுத்தியவன் சட்டென்று அவளது கையை பிடித்து இழுத்து பின்பக்கமாக அணைத்தபடி, “இந்த மாதிரி சின்ன சின்ன அணைப்போ” என்று மீண்டும் நிறுத்தியவன் அவளது கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்து, “இப்படி சின்ன சின்ன முத்தம் இல்லாமலோ இருக்காது” என்றவன் அவளை விட்டு விலகி நின்றான்.

 

அவள் வேக வேகமாக கோப மூச்சுக்களை வெளியிட்டபடி அவனை பார்த்து, “யூ.. இடியட்.. ராஸ்கல்.. உனக்கு கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கா.. நான் என்னைத் தொடதே னு சொல்றேன்.. நீ.. நீ”

 

“நான் என்ன பண்ணேன்?”

 

“இது தான் உன் அகராதியில் காதலா? உனக்கு இது தான் வேணும் னா……………” மேலே என்ன சொல்லி இருப்பாளோ,

 

புகழ்வேந்தன் அழுத்தமான குரலில், “தப்பா பேசியதிற்கு கொடுத்த தண்டனை மறந்து போச்சா?”

 

“என்னமோ கட்டிலில் வீரம் காட்டுபவன் அற்பமானவன் அது இது னு சொன்ன! இப்போ நீ என்ன செய்ற?”

 

“என்ன செய்றேன்? இந்த நொடி உன்னுடன் மெத்தையில் புரண்டுட்டா இருக்கிறேன்?” என்றான் சிறு கோபத்துடன்.

 

“செய்து பார்! அடுத்த நொடி இங்கே ஒரு கொலை விழும்”

 

“உன் விருப்பம் இல்லாமல் அப்படி ஒன்று நடக்கப் போறதில்லை ஸோ கொலை நடக்கவும் வாய்ப்பில்லை” என்றவன், “நீ தப்பா பேசினா பதிலுக்கு தப்பா பேச எனக்கு பிடிக்காது.. நான் என் வழியில் உன் வாயை அடைக்கிறேன்” என்று சாதாரண குரலில் கூறி அவன் தோள்களை குலுக்க,

 

“இது.. இதை தான் சொல்றேன்.. ஆம்பளை திமிர்.. உன் பலத்தை……………”

 

“என்னோட ஆம்பளை திமிரை என் மனைவியான உன்னிடம் மட்டும் தான் காட்டுவேன்.. இதே வேற எவளாவது இப்படி பேசி இருந்தால் என் கை தான் பேசி இருக்கும்..” என்று கண்ணில் மட்டும் கோபத்தை காட்டி பேசியவன், “ஏன்! என்னோட ஆம்பளை திமிரை நீ அடக்கி ஆள வேண்டியது தானே!” என்றான்.

 

“என்ன தேவைக்கு?” என்று கோபத்துடன் வினவியவள், பின் கோபத்துடனும் நக்கலுடனும், “எப்படி எப்படி! என் கழுத்தில் தாலி ஏறுறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி வந்து நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி, எல்லோரையும் மிரட்டி என்னை கல்யாணம் செய்துப்பியாம்.. முதல் நாளே கணவன் என்ற உரிமை எடுப்பியாம்.. என்னை அணைத்து முத்தமிடுவியாம்.. என் விருப்பு வெறுப்புகளை விட்டுட்டு நானும் அதுக்கு உடன் படனுமா? இல்லை உன்னோட வார்த்தை ஜாலத்தில் மயங்கும் ஆள் னு நினைச்சியா என்னை?” என்று கண்ணில் சீற்றத்துடன் வினவ,

 

அவளது அந்த தோற்றம் அவனுக்கு அவ்வளவு பிடித்தது. அவனது மனமோ, ‘பெயரில் மட்டுமில்லை உருவத்திலும் எண்ணத்திலும் நீ ராணி தான்.. என் செல்ல அல்லிராணி’ என்று காதலுடன் கூறியது.

 

அவனது கண்ணில் தெரிந்த காதலில், எரிச்சலுடனும் கோபத்துடனும், “டேய்!” என்று கத்தியவள், “எனக்கு வர கோபத்துக்கு எதையாவது போட்டு உன் மண்டையை உடைக்கத் தோணுது” என்றாள்.

 

புகழ்வேந்தன் கண்ணில் காதலுடனும் இதழில் ரசனையுடன் கூடிய மென்னகையுடனும், “ஏன்டா இவளை கல்யாணம் பண்ணோம் னு நினைக்க வைப்பேன் னு சொன்னியே! அதுக்கு பதிலா ஏன்டி உன்னை பிடிக்குது!! னு வேணா சொல்றேன்..” என்றான்.

 

அவளோ, ‘நாம என்ன சொல்றோம் இவன் என்ன சொல்றான்?’ என்ற கோபத்துடனும், ‘இவன் என்ன லூசா?’ என்ற எரிச்சலுடனும் அவனை நோக்க,

 

அவனோ அதை கண்டுக் கொள்ளாமல் பேசினான், “எஸ்.. உன்னை பார்த்த நாளில் இருந்தே என்னுள் எழும் கேள்வி இது தான்..

நான்கு உயிர்களை காவு வாங்கி குடும்பத்தின் சிதைவுக்கு காரணமான கிருபாகரனின் தங்கை மகள் னு தெரிந்தும் என் பகையை மீறி ஏன் இந்த பிடித்தம்? என்னோட கண்களுக்கு எதிரியின் தங்கை மகளா தெரியாமல் என்னோட ராணியா மட்டும் எப்படி தெரியுற? அதுவும் நம்மோட முதல் சந்திப்பில் இருந்து உன்னை அதிகமா பிடிக்குது..

இந்த நொடி வரை என்னை நீ மதிக்கிறது இல்லை.. கோபத்தில் அடிக்கிற.. என்னை கேவலமா பேசி என் குணத்தையே பொம்பளை பொறுக்கியா சித்தரிக்கிற.. இதை எல்லாத்தையும் மீறி” என்று அரை நொடி தாமத்தித்தவன், “எனக்கு ஏன்டி உன்னை பிடிக்குது!!” என்ற கேள்வியில் நிறுத்திய போது இதுவரை அவனது குரலில் அவள் கண்டிராத காதல் வழிந்தது.

 

‘ஒரு கேள்வியை இப்படி ஒரு காதலுடன் வினவ முடியுமா?’ என்று அவள் பிரம்மித்தாள். அந்த கேள்வியில் வெளிப்பட்ட அவனது காதல் அவளை மொத்தமாக சுருட்டப் பார்க்க, அவள் அவனை கண் இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள்.

 

அவளை சற்று நெருங்கி ஒற்றை விரலால் அவளது முகவடிவை சுட்டிக் காட்டியபடி, “இந்த முகத்தில் இருக்கும் நிமிர்வு பிடித்து இருக்குது.. தப்பை தப்பு னு சுட்டிக் காட்டுற தைரியம் பிடிச்சு இருக்குது..” என்றவன் அவளது கண்களை சுட்டிக் காட்டி, “இந்த மான் விழிகளில் தெரியும் நேர் கொண்ட பார்வையும், தார்மீக கோபமும் பிடித்து இருக்குது.. இதில் என் மீதான காதல் தெரிந்தால் இன்னும் இன்னும் பிடிக்கும்” என்றான்.

 

சில நொடிகள் மௌனத்தில் கழிய இருவரின் விழிகள் மட்டும் பேசின. அவளது விழி வழியே அவளது மனதைப் படித்தான். காலையில் தாலி கட்டுவதற்கு முன்பான முதல் சந்திப்பில் அவளது கண்களில் தெரிந்த வெறுப்பு துளியும் இப்பொழுது இல்லை என்பதை உணர்ந்தவனின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

 

அவன் அவளது முகத்தில் மென்மையாக ஊத, அதில் சுயம் பெற்றவள், ‘ச.. இப்படி நின்னுடோமே! என்ன நினைத்து இருப்பான்?’ என்று தன் மீதே கோபம் கொண்டவள் அவனிடம், “நீ பேச்சை மாத்துற.. எப்போதுமே நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாம காதல் வசனம் பேசி பேச்சை திசை திருப்புற”

 

‘உனக்கு தான் என் மீது காதல் இல்லையே! அப்பறம் ஏன் திகைச்சு பேச்சின்றி நிற்கிற!’ என்ற கேள்வி மனதினுள் எழுந்தாலும் தன் மீதான அவளது ஊஞ்சலாடும் உணர்வை காயப்படுத்த விரும்பாமல், “சரி கேளு” என்றான்.

 

அவள் எரிச்சலுடன், “என்ன கேளு? அதான் கேட்டேனே! என்னோட விருப்பத்துக்கு உணர்வுகளுக்கு மதிப்பு இல்லையா? எல்லாம் உன் இஷ்டம் தானா? தாலி கட்டிட்டா எல்லாம் சரி ஆகிடும் னு எப்படி இந்த ஆம்பளைங்க யோசிக்கிறீங்க?”

 

“மத்தவங்களை பற்றி எனக்கு தெரியாது.. நான் அப்படி இல்லை.. யோசித்து பார்த்தால் உனக்கே புரியும்.. கல்யாணம் வேணா உன்னோட விருப்பம் இல்லாம நடந்து இருக்கலாம் ஆனா உன்னோட விருப்பத்துக்கும் உணர்வுகளுக்கும் நான் மதிப்பு கொடுக்கிறேன் தான்.. இரு நான் பேசி முடிச்சிக்கிறேன்..” என்று அழுத்தத்துடன் கூறியவன் தொடர்ந்தான், “உன்னோட விருப்பத்தையும் கோபத்தையும் மதிக்கிறதால் தான் நீ கல்யாண மண்டபத்தை விட்டு அவ்வளவு சுலபமா வெளியேறி ஷாப்பிங் பண்ணிட்டு மெதுவா வீட்டுக்கு வந்த.. உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதால் தான் முதலிரவு கொண்டாடாம உன்னுடன் பேசிட்டு இருக்கிறேன்”

 

அவள் தணியாத கோபத்துடன், “வாழ்க்கையின் முக்கியமான விஷயம் கல்யாணம்.. அதிலேயே நீ என் விருப்பத்தை மதிக்கலை.. அண்ட் என்னோட உணர்வுகளை மதிக்கிறதா இருந்தால் நீ ஏன் என்னை தொட்டு பேசி.. முத்தம் கொடுக்கிற?” என்று சிறு திணறலுடன் முடித்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

அவன் அவளை நெருங்க அவள் சுவற்றில் சாய்ந்து நின்றாள். அவளுக்கு இருபுறம் சுவற்றில் கைகளை வைத்து அவளை சிறை செய்தவன் அவளது கண்களை நோக்கியபடி, “என்னோட இந்த நெருக்கமும் தொடுகையும் முத்தமும் உனக்கு அருவெறுப்பாவோ வெறுப்பாவோ இருக்குது னு சொல்லு நான் உன் கிட்டயே வரலை” என்றான்.

 

அவள் பதில் சொல்ல வாய் திறக்க, அவன், “எனக்கு உண்மையான பதில் வேண்டும்” என்றான் அழுத்தமான குரலில் அவளது கண்களை ஆழ்ந்து நோக்கியபடி.

 

அவனது அந்த குரலை மீறி பொய் சொல்ல முடியாமல் அவள் முகத்தை திருப்ப, அவனது இதழ் ஓரம் மென்னகை அரும்பியது.

 

பின் அவளது இரு கன்னங்களையும் ஒற்றை கையால் பற்றி தன்னை நோக்க செய்தவன், “என் தாத்தாவும் அப்பாவும் அனுபவித்த அதே வலியை கிருபாகரனுக்கு கொடுக்க மனோஜின் கல்யாணத்தை நிறுத்த வேண்டியதா இருந்தது.. என் காதலுக்காக தான் உன்னை கல்யாணம் செய்தேன்.. என் காதல் மேல் எனக்கு நம்பிக்கை இருக்குது.. இந்த கல்யாணம் தோல்வியடைய விட மாட்டேன்..

உனக்கு உன் சம்மதம் இல்லாமல் உன்னை கல்யாணம் செய்த கோபம் தான் என் மீது இருக்குதே தவிர வெறுப்பு இல்லை.. ஸோ இப்படி சின்ன சின்ன தொடுகையிலும் அணைப்பிலும் முத்தத்திலும் என் காதலை நான் உணர்த்திட்டு தான் இருப்பேன்.. நிச்சயம் உன் விருப்பம் இல்லாமல் எல்லை மீற மாட்டேன்.. ஸோ நிம்மதியா தூங்கு.. குட் நைட் ஸ்வீட் வேந்தன் ட்ரீம்ஸ்” என்றவன் அவளது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு விலகி சென்று மெத்தையில் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.

 

சில நிமிடங்களில் உறங்கியும் போனான் ஆனால் இவள் தான் அவன் பேசியதின் தாக்கத்தில் இருந்து வெளியேற முடியாமல் உறக்கமின்றி தவித்தாள்.

 

நள்ளிரவில் புகழ்வேந்தன் விழித்தபோது கண்டது சோபாவில் அமர்ந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்த மித்ராணியைத் தான்.

 

அவன் எழுந்து சென்று அவள் முன் நின்றபடி சில நொடிகள் அவளை ரசித்தான் பின் அவளது தூக்கம் கலையாதவாறு பூப்போல் அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

 

அவளை மெத்தையில் படுக்க வைக்க போகையில் கண் விழித்தவள் அரை தூக்கத்தில், “நீ ஏன்டா நல்ல விதமா எனக்கு அறிமுகம் ஆகலை?” என்று வினவி அவனது பதிலை எதிர்பார்க்காமல் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

 

அவளை படுக்க வைத்தவன் புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, “லவ் யூ ஸோ மச் மை டியர் அல்லிராணி” என்றான்.

 

 

                        இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!