ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 29
பிடித்தம் 29
மாலினியை கைபேசியில் அழைத்த வெற்றிவேல் அவள் அழைப்பை எடுத்ததும் உற்சாகக் குரலில், “ஹாய் பொண்டாட்டி!” என்றான்.
அவளும் உற்சாகக் குரலில், “ஹாய் புருஷா” என்று கூற,
Advertisement
அவன் புன்னகையுடன், “பார் டா!” என்றான்.
Advertisement
“சொல்லுங்க”
Advertisement
“லவ் யூ மானு”
Advertisement
“இதையா கேட்டேன்?” என்று அவள் சிணுங்கலாகக் கூற,
அவன், “ஏன் கேட்க மாட்டியா?”
“லைஃப் லாங் நீங்க சொல்லிட்டே தான் இருக்க போறீங்க.. நானும் சந்தோஷமா கேட்டுட்டே தான் இருக்கப் போறேன்”
“நீ சொல்றதை கேட்க நான் காத்துட்டு இருக்கிறேன்”
“இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு சொல்றேன்”
“அது என்ன கணக்கு?”
“ஏன் உங்களுக்கு தெரியாதா?”
“நம்ம முதல் இரவில் முதல் முத்தத்தோடு சொல்றேன் னு சொல்ற”
“..”
“உடனே அமைதியாகிடுவியே!”
“நீங்க இப்படி பேசினா நான் வேற என்ன செய்ய?”
“கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய ட்ரைனிங் தரணும் போலவே!”
“அதை அப்போ பார்க்கலாம்”
“சரி.. இன்னைக்கு சாயுங்காலம் கராத்தே கிளாஸ் மறந்துடாதே”
“நான் மறந்தாலும் நீங்க விட்டிடுவீங்களா?”
“மானு இதில் விளையாடாதே” என்று அவன் கறார் குரலில் கூற,
அவள், “சரி சரி..”
“உனக்காகத் தான் சொல்றேன்.. இன்றைய சமுதாயத்தில் பெண்ணிற்கு தற்காப்பு கலை தெரிந்திருப்பது அவசியம்.. அதுவும் என் மனைவிக்கு ரொம்ப அவசியம்”
“நான் தான் சரி னு சொல்லிட்டேனே! விளக்கம் தேவையா?”
“மானு……….”
“சுப்.. உங்க கிட்ட விளையாட்டா பேசினாலும் எனக்கு அதன் அவசியம் புரியுது தான்.. என்ன!” என்று அவள் மிரட்டலாக முடிக்க,
அவன் மென்னகையுடன், “சரீங்க மேடம்” என்றான்.
“அது” என்றவள், “ரெண்டு மாசம் கழிச்சு நம்ம கல்யாணம் னு அத்தை சொன்னாங்களா?”
“அது ஊருக்கு தான்.. மனதளவில் நமக்கு தான் கல்யாணம் ஆகிருச்சே! அம்மணி கூட புருஷா னு சொன்னீங்களே!”
“ஹ்ம்ம்” என்று அவள் சிறு வெக்கத்துடன் கூற,
அவன், “தப்பு பண்ணிட்டேன் வீடியோ காள் பண்ணி இருந்திருக்கணும்”
“எங்க இருக்கிறீங்க?”
“ஸ்டேஷனில் தான்”
“யாரும் பார்க்க மாட்டாங்களா?”
“உன் ஆத்துக்காரர் ACP மா”
“அப்படியா! எனக்கு தெரியாதே!”
“தனி ரூமில் இருக்கிறேன்.. இப்போ கொஞ்சம் ப்ரீ அதான் போன் பண்ணேன்.. வீடியோ காள் பண்ணவா?”
“நோ.. நான் நீங்க என் கிட்ட பேசுறப்ப உங்க முகபாவத்தை யாரும் பார்க்க மாட்டாங்களா னு தான் கேட்டேன்”
“நோ வந்த வேகத்தை பார்த்தா ஏதோ விஷயம் இருக்கும் போலவே!”
“அதெல்லாம் இல்லையே!”
“அப்போ கண்டிப்பா ஏதோ விஷயம் இருக்குது”
“ஒரு விஷயமும் இல்லை.. நீங்க போன் பண்ண விஷயத்தை சொல்லுங்க”
“விஷயம் இருந்தா தான் போன் பண்ணனுமா என்ன?”
“இல்லை தான்.. வேலை நேரத்தில் விஷயம் இல்லாம போன் பண்ண மாட்டீங்களே!”
“இனி பண்ணுவேன் னு தான் தோணுது”
“அப்போ குற்றங்கள் கூட வாய்ப்பு இருக்குது னு சொல்லுங்க”
“அப்படியா நினைக்கிற?” என்று அவன் குரல் சற்று விறைப்புடன் வரவும்,
“அப்பா! ஒரு வார்த்தை வேலையை பத்தி சொல்லிடக் கூடாதே! உடனே சீரியஸ் மோட்க்கு போய்ட வேண்டியது”
“நான் இப்படி தான்” என்று விறைப்புடனே கூறினான்.
“ஹ்ம்ம்.. இந்த விறைப்பும் பிடித்து தான் இருக்குது”
அவன் உதட்டோர மென்னகையுடன், “வேற என்னென்ன பிடித்து இருக்குது?”
“இதுவும் நேரில் கல்யாணத்துக்கு அப்பறம் தான் சொல்லுவேன்”
“அப்போ ஒவ்வொரு பிடித்ததிற்கும் ஒவ்வொரு கிஸ்.. டீல் ஓகே வா?
“நீங்க வீரமான ஆளு னு நினைத்தேன்.. ஆனா நீங்க ஒரு வீரபாகு னு இப்போ தான் தெரியுது”
“அது யாரு வீரபாகு?”
“நம்ம பெல்பாட்டம் முதலாளி வீரபாகுவை உங்களுக்குத் தெரியாதா? அவர் டீலிங்க்கு பேர் போனவர்”
“அடிப் பாவி நீ கிரி படத்தில் வர வடிவேலு கேரக்டரை சொல்றியா?”
“பல்ப் எரிஞ்சுடுச்சா!” என்று அவள் நகைப்புடன் கூற,
அவன் போலியான கோபக் குரலில், “எதை எதோட லிங்க் பண்ற?”
“நீங்க டீல் னு சொன்னதும் இதான் எனக்கு நியாபகம் வந்துச்சு.. நாங்கலாம் இப்படித் தான் பட்டப்பெயர் வைப்போம்.. கல்யாணத்துக்கு அப்பறம் இதுக்கு நான் ட்ரைனிங் தரேன் உங்களுக்கு” என்றபோது கதவை தட்டும் ஓசை கேட்க, அவன், “நான் திரும்ப கூப்பிடுறேன் மானு” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
மீண்டும் ஐந்து நிமிடத்தில் அழைத்தவன், “சாரி டா………”
“நான் உங்க கிட்ட சாரி கேட்கலையே!”
“ஓகே.. இனி கேட்கலை”
“அடுத்து வேலை வரதுக்குள் போன் பண்ண விஷயத்தை சொல்லுங்க”
அவளது புரிதலில் மனம் நெகிழ, “இப்பவே போலீஸ்காரன் பொண்டாட்டியா மாறிட்ட மானுமா” என்றான்.
“அது எப்பவோ மாறியாச்சு ACP.. இப்போ விஷயத்திற்கு வாங்க.. இல்லை இப்படி ஜவ்வா இழுக்கிறதுக்கு ஒரு பட்டப்பெயர் வைப்பேன்”
“இப்போ நேரமில்லை.. இதை அப்பறம் டீல் பண்றேன்” என்றதும் அவள் வாய்விட்டு சிரிக்க,
“வேணாம்.. சிக்கின!!!” என்று அவன் மிரட்ட, அவளோ அதற்கும் சிரித்தாள்.
“சரி அதை விடு.. சீக்கிரம் கல்யாணம் வச்சிருக்கிறதில் உனக்கு எதுவும் வருத்தம் இருக்குதா?”
[the_ad id=”6605″]
“நமக்காக தானே சீக்கிரம் பண்றாங்க.. நம்ம ரெண்டு பேர் நட்சத்திர பொருத்தத்துக்கு இந்த நேரத்தில் கல்யாணம் செய்தா தான் நல்லது னு சொன்னாங்க”
“உனக்கு வருத்தமா னு கேட்டேன்”
“உண்மைய சொல்லணும் னா சந்தோஷமாவும் இருக்குது வருத்தமாவும் இருக்குது.. சீக்கிரம் உங்க கூடவே இருக்க போறேன் னு சந்தோஷமா இருக்கிற அதே நேரத்தில் அருணாவைவும் அம்மாவையும் பிரியிறதை நினைத்தால் வருத்தமா இருக்குது”
“ஹ்ம்ம்.. என்னைக்கு கல்யாணம் பண்ணாலும் இதானே நடக்கும்”
“ஹ்ம்ம்”
அவளது மனநிலையை மாற்றும் எண்ணத்துடன், “இப்பவே மாமனுக்கு இருவத்தியெட்டு வயசு முடிய போகுது” என்று அவன் கொஞ்சலாக கூற,
“உங்களை யாரு சீக்கிரம் பிறக்கச் சொன்னா?”
“உங்க அத்தை கிட்ட கேட்டு சொல்றேன்.. ஏன் என்னை சீக்கிரம் பெத்துக்கிட்டாங்க னு”
“உங்களை!!!”
“என்னை???”
“ஹ்ம்ம்.. போய் வேலையை பாருங்க.. நான் வைக்கிறேன்” என்றபடி அவள் அழைப்பை துண்டிக்கப் போக,
அவன், “ஹே மானு” என்று அழைத்தான்.
“ஹ்ம்ம்”
“பீல் பண்ணாத டா.. நம்ம வீட்டில் இருந்து நினைச்ச நேரம் இருவதே நிமிஷத்தில் நீ அங்கே போய்டலாம்.. நீ ஆபிஸ்ஸில் இருந்து டெய்லி அங்க போயிட்டுக் கூட நம்ம வீட்டுக்கு வரலாம்..”
“ஹ்ம்ம்..”
“எப்போ வேலையில் ஜாயின் பண்ணனும் னு எதுவும் மெயில் வந்துதா?”
“இந்த வீக்கில் வந்திரும்.. என் பிரெண்ட்ஸ் ரெண்டு பேருக்கு இன்னைக்கு மெயில் வந்திருக்குது.. ஒன் வீக்கில் ஜாயின் பண்ணச் சொல்லி இருக்கிறாங்க” என்றவள், “கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போகவா வேண்டாமா?”
“உன் விருப்பம் தான்”
“அது..” என்று அவள் தயங்க, அவன், “சொல்லு டா”
“அது.. வந்து..” என்று மெல்லிய குரலில் சிறு நாணத்துடன் இழுத்தவள், “கன்சீவ் ஆகுற வரை போறேன்.. அப்பறம் வேணாமே”
அவளது நாணத்தை ரசித்தவன், “உன் இஷ்டம் தான் டா.. சரி இதை பத்தி நாம நைட் பேசலாம்.. இப்போ நான் வைக்கட்டா”
“ஓகே.. பை”
“மானு மா”
“ஹ்ம்ம்”
“இப்போ நீ நைட்டியில் தானே இருக்கிற? அதானே வீடியோ காள் வேணாம் னு அலறுன?” என்று மென்னகையுடன் வினவ,
அவள் வெக்கத்துடன் சிணுங்கலாக, “ஹே!”
“என்ன?”
“நான் வைக்கிறேன்.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள் வெக்கப் புன்னகையை உதிர்த்தபடி கைபேசியை நெற்றியில் தட்டிக் கொண்டாள்.
சில நொடிகள் தன்னவளின் நினைவில் லயித்து இருந்தவனை வேலைகள் இழுத்துக்கொள்ள, நடுவில் கிடைத்த இடைவேளையில் நிவேதாவை அழைத்து அவளது வீட்டிற்கு வருவதாகக் கூறினான்.
——————————————————————————————————————————————-
நிவேதா அழைப்பை துண்டித்ததும் சதீஷின் கைபேசி மீண்டும் அலறியது. புது எண்னாக இருக்கவும் யோசனையுடன் அழைப்பை எடுத்தான்.
சதீஷ், “ஹலோ”
“நான் மித்ராணி பேசுறேன்..”
‘ஆத்தி இன்னும் முதல் ரௌண்டையே நான் முடிக்கலையே! அடுத்து என்ன! இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லையே!’ என்று மனதினுள் அலறிய சதீஷ், “சொல்லுங்க மேம்” என்றான்.
மித்ராணி, “மிஸ்டர் கிருபாகரனுக்கு எதிரா வேந்தன் என்னென்ன செய்திருக்கான் னு தெரிந்துக்கத் தான் உன்னை கூப்பிட்டேன்”
‘ரைட்டு சைத்தான் சைக்கிள்ல வந்திருச்சு’ என்று நகைசுவை நடிகர் வடிவேல் போல் அவன் மனதினுள் கூறிக்கொள்ள,
புகழ்வேந்தன் அப்பொழுது வெளியே வரவும் சதீஷ் அழைப்பை துண்டித்து புகழ்வேந்தனைப் பார்த்தான்.
சதீஷ் முகத்தில் தெரிந்த பதற்றத்தில் புகழ்வேந்தன், “என்னாச்சு சதீஷ்? போனில் யாரு?”
புகழ்வேந்தனிடம் பொய் சொல்லி பழக்கமில்லாத சதீஷ் முழிக்க, புகழ்வேந்தன் கையை நீட்டினான்.
சதீஷ் கைபேசியில் பெருவிரலை பதிவு செய்து கைபேசியை இயக்கிவிட்டு அவனிடம் கொடுக்க, புகழ்வேந்தன் அழைப்பு பதிவை பார்க்கும் முன் மித்ராணியிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது.
புகழ்வேந்தன், “கிருபாகரனுக்கு எதிரா என்ன செய்தேன் னு கேட்டாளா?”
கண்கள் தெரிந்துவிடுவது போல் சதீஷ் அதிர்ச்சியுடன் பார்க்க, புகழ்வேந்தன், “தேவையானதை மட்டும் சொல்லு” என்றபடி கைபேசியை கொடுத்தான்.
‘மேடமை பொறுத்தவரை தேவையான ஆணி, தேவையில்லாத ஆணி எது னு எனக்கு எப்படித் தெரியும்! கல்யாணம் ஆனதில் இருந்து பாஸ் முகம் கலையா இருக்குது ஆனா நம்ம நிலைமை தான் கவலைக்கிடமா இருக்குது’ என்று மனதினுள் புலம்பியபடி அழைப்பை எடுத்தான்.
மித்ராணி கோபக் குரலில், “எவ்வளவு இருந்தா கட் பண்ணுவ! நேரில் வந்தேன் அல்லகைக்கு கை இல்லாம பண்ணிடுவேன்”
ஒரு நொடி ‘யாரோட கை?’ என்று யோசித்தவன், ‘நாம தான் அந்த அல்லகையா!’ என்று அலறியபடி, “மேம்.. போன் கீழ விழுந்து காள் அதுவாவே கட் ஆகிருச்சு” என்றான்.
“நம்புற மாதிரி இல்லையே!”
“நீங்க சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் கீழ போட்டுட்டேன்”
“அவ்ளோ தொடை நடுங்கியா நீ? சரி.. இப்போ காள் அட்டென்ட் பண்ண ஏன் இவ்ளோ நேரம்?”
‘பாஸ் எப்படி தான் சமாளிக்கிறாரோ!’ என்று நொந்தபடி, “பக்கத்தில் ஆள் இருந்தாங்க”
“இது ஏதோ நம்புற மாதிரி இருக்குது” என்ற குரலே ‘நான் உன்னை நம்பவில்லை’ என்றது.
பின் அவள், “உன்னை ரெண்டு அடியோட விட்டது எதுக்கு னு நினைத்த? இதுக்குத் தான்.. உன் பாஸ் எங்கெங்கோ யார் யாரையோ ஸ்பை வைக்கிறானே! இந்த மித்ராணி அவனுக்கும் மேல்.. இனி இதான் உன் முக்கிய வேலை.. ஹ்ம்ம்.. ஒழுங்கா விஷயத்தை சொல்லு..”
புகழ்வேந்தனின் தலை அசைப்பை பெற்றுக் கொண்டு, “ஸ்டீல் இண்டஸ்ட்ரியில் ஸ்ட்ரைக் அண்ட் லோட் எடுத்துட்டு போன கன்டேனர்ஸ் அக்சிடென்ட் ஆகி மெட்டிரியல் டேமேஜ்.. ஸ்பின்னிங் மில் கொடோனில் பையர் அக்சிடென்ட்.. கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி கிளைன்ட்ஸ் இப்போ நம்ம கிளையன்ட்ஸ்.. சாப்ட்வேர் கம்பனியில் வைரஸ் அட்டக்.. அவ்ளோ தான் மேம்”
“தீம் பார்க்.. ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி.. செராமிக்ஸ்.. ஹோட்டல்.. ரெசாட்.. ஜுவெல்லரி எல்லாம் ஏன் விட்டு வச்சிருக்கீங்க?”
அவளது குரலில் இருந்து அவள் எந்த அர்த்தத்தில் வினவுகிறாள் என்பது புரியாமல், “மேம்!!” என்றவன் மனதினுள் ‘ஹ்ம்ம்.. ஜாடிக்கு ஏத்த மூடி தான்’ என்று நினைத்துக் கொண்டான்.
“ஓகே.. நான் கார்மென்ட் சார்ஜ் எடுத்துட்டேன் னு சொல்லிடு.. அண்ட் நஷ்ட ஈடா ஊட்டி டீ எஸ்டேட் அண்ட் டீ பாக்டரி வாங்கிக்க போறேன்னும் சொல்லிடு”
“யார் கிட்ட சொல்லணும் மேம்?”
“உன்னை போய் எப்படி ரைட் ஹண்டா வச்சிருக்கான்? நீ எப்போதுமே மங்குனி அமைச்சர் தான்.. இனி அப்பப்போ அப்டேட் பண்ணுற வேலையாவது உருப்படியா செய்” என்று பொரிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
‘இவங்க கிட்ட மட்டும் எப்போதுமே பல்ப் வாங்குறேனே! பாஸ் கிட்ட சொல்றதுக்கு என்னை இன்டர்மிடியேட்டா யூஸ் பண்ணுவாங்க னு நான் கனவா கண்டேன்!’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவன் புகழ்வேந்தனிடம் மித்ராணி கூறியதை சொன்னான்.
அவனோ இவன் கூறிய விஷயத்தை பற்றி கேட்காமல், “உன்னை என்ன சொல்லி திட்டினா?” என்றான் உதட்டோர புன்னகையுடன்.
“ஒன்னா ரெண்டா! எக்கச்சக்கமா வாங்கினேன்.. அதை விடுங்க பாஸ்” என்றவன், “எப்படி பாஸ் மேம் இன்னைக்கே கார்மென்ட்டை சார்ஜ் எடுப்பாங்க னு நினைச்சீங்க?”
[the_ad id=”6605″]
“கிருபாகரனை ஓய்க்கிற வேலையில் நான் இறங்கி இருப்பேன் னு அவ எப்படி கெஸ் பண்ணாளோ அப்படி தான்”
“எப்படி பாஸ் நீங்க சமாளிக்கிறீங்க?”
புகழ்வேந்தன் புன்னகைக்க, சதீஷ், “அஞ்சு நிமிஷ போன் காளே என்னால முடில.. நீங்க கிரேட் பாஸ்”
“வேந்தனோட ராணி வேற எப்படி இருப்பா?” என்றவன், “நான் ரவுண்டுஸ் போயிட்டு வரேன்.. நான் சொன்னதை ரெடி பண்ணி வை” என்றுவிட்டு சென்றான்.
புகழ்வேந்தன் சொன்ன வேலைகளை செய்துக் கொண்டிருந்த சதீஷிற்கு அரை மணி நேரம் கழித்தே நிவேதா கூறியது நியாபகம் வரவும் என்ன செய்வது என்று யோசித்தவன் ‘சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரன் காலில் விழுவது மேல்’ என்ற முடிவிற்கு வந்து வெற்றிவேலை கைபேசியில் அழைத்தான்.
அழைப்பை எடுத்த வெற்றிவேல், “சொல்லுங்க சதீஷ்” என்று இயல்பான குரலில் பேசவும் தான் சதீஷிற்கு மூச்சு சற்று சீரானது.
“கன்க்ராட்ஸ் மச்சான்.. உங்களுக்கு கல்யாணம் முடிவாகி இருக்குது னு வேதி சொன்னா”
“தேங்க்ஸ்” என்றவன், “வாழ்த்து சொல்லத் தான் போன் பண்ணீங்களா?” என்று வினவ,
‘இன்னைக்கு உனக்கு ஒரே விசாரணை கமிஷன்னா தான் இருக்குது’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன், “இல்லை மச்சான்.. அது……………”
“ஏதும் பிரச்சனையா? தயங்காம சொல்லுங்க”
“பிரச்சனைலாம் இல்லை.. சின்ன ரெக்வெஸ்ட்..”
“என்ன?”
“இன்னைக்கு நீங்க வீட்டுக்கு வரதா வேதி சொன்னா.. என்னால் ஏழு மணிக்கு வர முடியாது.. எட்டு மணிக்குள் வரப் பார்க்கிறேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.. முக்கியமான வேலை அதான் சீக்கிரம் கிளம்ப முடியலை” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.
வெற்றிவேலோ, “அதனால் என்ன! நீங்க மெதுவா வாங்க.. என்னோட கல்யாண விஷயத்தை நேரில் சொல்லிட்டு நிவி கிட்ட என் பியான்சி போட்டோ காட்ட நினைத்தேன்.. நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க.. நான் வெயிட் பண்றேன்” என்று இலகுவாக கூற,
சதீஷ் மனதினுள், ‘இதுக்கா இப்படி பயந்தோம்!’ என்று நினைத்தபடி, “தேங்க்ஸ் மச்சான்” என்றான்.
“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்! சரி வீட்டில் பார்க்கலாம்”
“ஹ்ம்ம்” என்றதும் அழைப்பைத் துண்டித்த வெற்றிவேல் மனதினுள், ‘சதீஷ் வரதுக்குள் வேலையை முடிக்கணும் னு தான் ஏழு மணியை சூஸ் பண்ணேன்.. இந்த நிவி அவரை வர சொல்லி இருப்பா போல! நல்லவேளை அவருக்கு முக்கியமான வேலை இருக்குது’ என்று நினைத்துக் கொண்டான்.
——————————————————————————————————————————————
கிருபாகரன் தனது செயலாளரிடம் கோபத்துடன் இரைந்துக் கொண்டிருக்க, செயலாளர் கையை பிசைந்து கொண்டு பயத்துடன் நின்றுக் கொண்டிருந்தார். புகழ்வேந்தனின் வேலைகளின் பிரதிபலிப்பே கிருபாகரனின் இந்த கொந்தளிப்பு.
காட்டுகத்தலாக கத்திய கிருபாகரன் இறுதியாக, “நாளைக்குள் எல்லாத்தையும் சரி பண்ணியிருக்கிற” என்ற கட்டளையுடன் வெளியேறினார்.
கோபத்துடன் வீட்டிற்கு சென்ற கிருபாகரன் தன்னை வரவேற்ற மல்லிகாவிடம், “எங்க உன் பிள்ளைங்க? ஒருத்தன் எங்கேனே தெரியலை? இன்னொருத்தன் அறைக்குள் அடைஞ்சு கிடக்கிறானா? அங்கே அவன் ஒரே நாளில் கோடிக் கணக்கில் இழப்பை ஏற்படுத்தி என் சாம்ராஜ்யத்தையே அசைச்சிட்டு இருக்கிறான்.. இப்போ அவனோட சேர்ந்துட்டு அவளும் ஆட்டம் காட்டுறா.. காட்டுறேன்.. ரெண்டு பேருக்கும் நான் யாரு னு காட்டுறேன்” என்று கூடத்தில் வைத்து கத்தினார்.
மல்லிகா ஆச்சரியத்துடனும் சிறு அதிர்ச்சியுடனும் பார்த்தார். எவ்வளவு கோபமாக இருந்தாலும் கிருபாகரன் வீட்டு ஆட்களிடம் தனது கோபத்தை அறையினுள் மட்டுமே வெளிபடுத்துவார். இப்படி கூடத்தில் வேலையாட்கள் முன் அவர் நிதானம் இழப்பது இதுவே முதல் முறை.
இவரது கத்தலில் மனோஜ் வெளியே வர, கிருபாகரன் அவனைப் பார்த்து, “இப்போ என்னத்துக்கு பொட்டக் கோழி மாதிரி அறைக்குள் அடைகாத்துட்டு இருக்க? எனக்கு மகனா பொறந்துட்டு இப்படி இருக்கிறியே! ஒன்னு காதலித்தவளை எப்பாடு பட்டாவது அடைந்து இருக்கணும் இல்லை அவ கண் முன் வாழ்ந்து காட்டனும்.. ஒழுங்கா நாளையில் இருந்து ஆபீஸ் வர” என்று உத்தரவிட்டு தன் அறைக்குச் சென்றார். தனக்காகத் தான் மகன் காதலை தியாகம் செய்தான் என்ற நினைப்பு சிறிதும் இல்லாமல் மனசாட்சியின்றி கத்திவிட்டு சென்றார்.
வேதனையுடனும் வலியுடனும் முகம் சுருங்க நின்ற மனோஜை மல்லிகா அணுகும் முன் அவன் தன் அறையினுள் புகுந்திருந்தான். மல்லிகா கலங்கிய மனதுடன் பிரசாத் எண்னிற்கு நூறாவது முறையாக அழைக்க அவனோ அழைப்பை எடுக்கவில்லை.
——————————————————————————————————————————————–
வெற்றிவேல் நிவேதா வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்த போது அவனை கைபேசியில் மாலதி அழைத்தார்.
அழைப்பை எடுத்தவன், “நிவி வீட்டுக்கு தான் மா கிளம்பிட்டு இருக்கிறேன்”
“பார்த்து பேசு டா.. அந்த அம்மா ஒரு மாதிரி”
“அம்மா நீங்க கலங்குற அளவுக்கெல்லாம் அவங்க வொர்த்தே இல்லை.. நான் நேரிடையா எதுவும் பேசப் போறதே இல்லை..”
“மாப்பிள்ளை வேற தப்பா நினைச்சுக்கக் கூடாது”
“சதீஷ் வரதுக்கு முன்னாடியே நான் வேலையை முடிச்சிடுவேன்.. பிளான் பண்ணி தான் அவர் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி போறேன்” என்றவன் சிறு கோபத்துடன், “என் மேல் நம்பிக்கை இல்லையா மா?”
“உன்னைப் பத்தி தெரியும் டா.. இருந்தாலும்………….”
“மக பாசம் பதறுதாக்கும்.. நான் பார்த்துக்கிறேன் மா”
“சரி டா” என்றதும் அழைப்பைத் துண்டித்து கிளம்பினான்.
சொன்னது போல் சரியாக ஏழு மணிக்கு நிவேதா வீட்டிற்கு சென்றான். நிவேதா மகிழ்ச்சியுடன் வரவேற்க, புன்னகையுடன் உள்ளே நுழைந்தவன் வாங்கி வந்த இனிப்பு, காரம் மற்றும் பழங்கள் அடங்கிய பையை தங்கை கையில் கொடுத்தான்.
“மாமா” என்று ஆசையுடன் ஓடி வந்த தங்கை மகளை, “ஹே செல்லக் குட்டி எப்படி இருக்கிறீங்க?” என்று கேட்டபடி தூக்கி போட்டு பிடித்து விளையாட்டு காட்டியபடி கொஞ்ச, அந்த மழலை கிளுக்கி சிரித்தது.
குழந்தையை கீழே இறக்கியவன் அவளுக்காக வாங்கிய பரிசை கொடுத்தான்.
“வாப்பா.. இந்த வீட்டு முகவரியெல்லாம் நியாபகம் இருக்குதா?” என்று சதீஷின் அம்மா நக்கலாக கேட்க, நிவேதா பதற்றத்துடன் அண்ணன் முகம் பார்த்தாள்.
அவனோ மென்னகையுடன், “நானாவது நியாபகம் வச்சு வந்துட்டேன்.. நிவேதாவுக்கு எங்க வீடு எங்க இருக்குதுனே சுத்தமா மறந்து போச்சே”
“உன் அம்மா தானே மறக்க வச்சது”
“பெரியவங்க நீங்க அப்படியே விட்டுடறதா? அம்மா திட்டுறதெல்லாம் திட்டே இல்லை.. நீ தான் அம்மா கோபத்தை போக்கணும் னு சொல்லி அனுப்பி இருக்க வேணாமா?”
“நான் சொல்றதை அப்படியே உன் தங்கச்சி கேட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பா!” என்று அவர் நொடித்துக்கொள்ள,
கலங்கிய விழிகளுடன் நின்ற தங்கையை பார்த்தபடி, “இனி எல்லாம் சரியாகிடும்” என்றான்.
சதீஷின் அன்னை, “சரியானா சர்(சரி) தான்” என்றார்.
அதற்குள், “மாமா பாப்பி(பார்பி) பொம்ம சூப்ப(சூப்பர்)” என்று குதித்தபடி கூறிய குழந்தை அடுத்து நிவேதாவை பார்த்து, “அம்மா நா கிச்சா காட்டி வாதேன்(வாரேன்)” என்றபடி ஓடியது.
குழந்தை பின்னாடியே சென்ற வெற்றிவேல் சற்று தள்ளி நின்றபடி குழந்தை மாடி வீட்டினுள் சென்ற பிறகே உள்ளே வந்தான்.
நிவேதா, “கிருஷ்ணா மேடமோட புது பிரெண்ட்.. நாலு நாள் முன்னாடி தான் மாடிக்கு வந்திருக்காங்க”
“மாடிக்கு தான் போறானாலும் எப்போதும் போய் பார்த்துட்டே வா.. நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்”
“சரி ணா” என்றவள், “நீ உட்காரு.. நான் போய் காபி கொண்டு வரேன்.. அவர் வர நேரம் தான்” என்றாள்.
“நான் மாப்பிள்ளை கிட்ட பேசினேன்.. வேலையை முடிச்சிட்டு வாங்க னு சொல்லிட்டேன்.. நீ போனை போட்டு அவரை டென்ஷன் பண்ணாத” என்று கடைசி வாக்கியத்தை மட்டும் மெதுவாக கூறியவன் கூடத்திற்கு சென்று சதீஷ் அன்னை எதிரே அமர்ந்தான்.
சதீஷின் அன்னை, “அப்பறம் கல்யாணம் முடிவாகி இருக்காமே! உறுதி பண்றதுக்கு எங்களை……………………….”
வெற்றிவேலின் கைபேசிக்கு அழைப்பு வர, சதீஷின் அன்னை பேச்சை குறுக்கிட்டு, “ஒரு நிமிஷம் அத்தை” என்றபடி அழைப்பை எடுத்தான்.
உண்மையில் அழைப்பை துண்டித்து, கைபேசியை ‘சைலென்ட் மோடில்’ போட்டுவிட்டு கைபேசியை காதில் வைத்து பேசத் தொடங்கினான்.
“சொல்லு சந்தோஷ்” என்ற வெற்றிவேல் அடுத்த அரை நிமிடத்திற்கு இடைவெளி விட்டு மூன்று முறை ‘ஹ்ம்ம்’ என்று மட்டும் கூறினான்.
பின் சட்டென்று இருக்கையில் இருந்து வேகமாக எழுந்தவன் ஆவேசமாக பேசத் தொடங்கினான்.
“அந்த பொம்பளையை லாக்கப்பில் போட்டு வனிதாவை விட்டு லாடம் கட்டச் சொல்லு.. மாமியார்னா ரெண்டு கொம்பா முளைச்சு இருக்குது? வீட்டுக்கு வர பொண்ண மகளா பாக்காட்டியும் சக மனிஷியா பார்க்க வேணாம்? அடிச்சு துன்புருத்துனா தான் கொடுமைன்னு இல்லை.. சும்மா தொட்டதுக்கெல்லாம் தேளா கொட்டி அந்த பொண்ணோட மனசை வதைக்கிறதும் கொடுமைப் படுத்துறது தான்.. அந்த பொண்ண படுத்துறது பாத்தாதுன்னு அந்த பொண்ணோட அண்ணன் கல்யாணத்தில் வேற மூக்கை நுழைத்து பிரச்சனை பண்ண பாக்குது.. வன்கொடுமை.. வரதட்ஷனை கொடுமை னு அந்த பொம்பளை மேல கேசை போட்டு உடனே உள்ள தள்ளு”
ஒரு நொடி மௌனித்தவன், “அந்த பொண்ணு மாமியார் மேல கேஸ் போடாதா? பரவா இல்லை.. நான் பார்த்துக்கிறேன்.. நீ முதல்ல அந்த பொம்பளையை உள்ள தள்ளு.. என்னை பத்தி சரியா தெரியாம ஜம்பமா பேசிட்டு அலையுது.. ஒரு நாள் உள்ள தள்ளினா எல்லாம் சரியாகிடும்.. இப்போ நான் வெளியே இருக்கிறேன்.. வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஸ்டேஷன் வரேன்” என்றுவிட்டு கைபேசியை பேண்ட் பாக்கெட்டில் வைத்தான்.
பிறகு சதீஷின் அன்னையை பார்த்து, “நீங்க ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே அத்தை?” என்றான்.
அவரோ தனது நடுக்கத்தை மறைத்தபடி, “கல்யாணம் முடிவாகி இருக்குது னு நிவேதா சொன்னா.. அதான் ரொம்ப சந்தோசம் னு சொல்லிட்டு ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க சதீஷ் அப்பா செய்வார் னு சொல்லிட்டு இருந்தேன்”
வெற்றிவேல் மென்னகையுடன், “தேங்க்ஸ் அத்தை.. ஏதாவது தேவைனா கண்டிப்பா கேட்கிறேன்.. ஆமா மாமா எங்க காணும்?”
“அவர் பிரெண்ட் பொண்ணு கல்யாணத்துக்காக திருச்சி போயிருக்கார்.. நாளைக்கு வந்திருவார்”
“ஓ”
“போனில் ஏதோ பேசிட்டு இருந்..தியே?” என்று ஒருமையில் அழைக்கவா வேணாமா என்ற திணறலுடன் வினவினார்.
அவரது தடுமாற்றத்தை கண்டுக்கொள்ளாத வெற்றிவேல், “எல்லோரும் உங்களை மாதிரி நல்ல மாமியாரா இருந்தா எங்களுக்கு வேலையே இல்லையே! அதை விடுங்க அத்தை.. உங்க ஹெல்த் எப்படி இருக்குது? சுகர் கண்ட்ரோலில் தானே இருக்குது?”
“நிவேதா இருக்கிறவரை எனக்கென்ன? நான் நல்லா இருக்கிறேன்” என்றதை கேட்டபடி வந்த நிவேதா வெற்றிவேலிடம் காபியை கொடுத்தாள்.
சதீஷின் அன்னை நிவேதாவை பார்த்து, “அம்மாடி.. எனக்கு லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்குது.. நான் போய் கொஞ்ச நேரம் படுக்கிறேன்” என்றவர் வெற்றிவேலை பார்த்து, “சாப்டுட்டு தான் கிளம்பணும்” என்றுவிட்டு சென்றார்.
நிவேதா நம்பமுடியாமல் பார்க்க வெற்றிவேல் புன்னகையுடன் அவளது தலையை வருடியபடி, “இவ்ளோ தான் விஷயம்.. நாலு வருஷம் தேவை இல்லாம அவஸ்தைபட்டுட்டு இருந்து இருக்க”
“இல்லைணா.. நீ கோபப்பட்டு.. என்ன இருந்தாலும் அவரோட அம்மா.. அதான்” என்று இழுக்க,
அவன், “இப்பவும் நான் போனில் சொன்னதை செய்யும் அளவுக்கு அவங்க மேல எனக்கு கோபம் தான் ஆனா சதீஷ் ரொம்ப நல்லவர்.. உன் மேல் உயிரை வைத்திருக்கார்.. அவரோட அப்பாவும் நல்லவர்.. அதான் சின்னதா மறைமுக மிரட்டலோடு விட்டுட்டேன்.. சதீஷ் அப்பா ஊரில் இல்லை னு தெரிந்து தான் சதீஷ் வரதுக்கு முன்னாடி வந்தேன்.. இதை பற்றி சதீஷிடம் சொல்றதும் சொல்லாததும் உன்னோட விருப்பம்.. அம்மா விலகி இருக்கவும் தான் கொஞ்சம் அதிகமா பண்ணி இருப்பாங்க.. மத்தபடி அவங்களும் ரொம்ப கொடுமைக்காரங்களா தெரியலை.. இனி பிரச்சனை இருக்காது.. இருந்தா அண்ணா கிட்ட சொல்லு”
[the_ad id=”6605″]
நிவேதா உதட்டில் புன்னகையுடனும் கண்ணில் மெல்லிய கண்ணீருடனும் அண்ணன் தோளில் சாய்ந்துக்கொள்ள, அவன் தங்கையை அரவணைத்துக் கொண்டான்.
அப்பொழுது, “நானு நானு” என்று கத்தியபடி நிவேதாவின் குழந்தை வந்து வெற்றிவேலின் காலை கட்டிக்கொள்ள, தங்கையை அரவணைத்தபடி தங்கை மகளை தூக்கிக் கொண்டான்.
அதன் பிறகு அண்ணன் தங்கைக்கு நேரம் இனிமையாக நகர்ந்தது. தனது காதலை பற்றி சுருக்கமாக சொன்னவன் மாலினி பற்றி கூறி அவளது புகைப்படத்தை காட்டினான். நிவேதா மகிழ்ச்சியுடன் கேட்டபடி அவ்வபோது கிண்டலும் செய்தாள்.
பிறகு மாலினியை அழைத்தான். அழைப்பை எடுத்த மாலினி, “ACP இன்னைக்கு வீட்டுக்கு சீக்கிரம் வந்த மாதிரி இருக்குது!”
அவன் மென்னகையுடன், “நிவேதா வீட்டிற்கு வந்திருக்கிறேன்”
“அண்ணி எப்படி இருக்கிறாங்க? பாப்பா எப்படி இருக்கிறா?”
“எல்லோரும் நல்லா இருக்கிறாங்க.. இரு நிவி கிட்ட குடுக்கிறேன்”
“ஹ்ம்ம்” என்றதும் கைபேசியை நிவேதாவிடம் கொடுத்தான்.
நிவேதா மகிழ்ச்சியுடன், “ஹாய் அண்ணி.. எப்படி இருக்கிறீங்க? நான் மட்டும் தான் உங்களை பார்க்கலை”
“நான் நல்லா இருக்கிறேன்.. நாம கூட்டத்தோட கோவிந்தா போடாம தனியா மீட் பண்ணி நிறைய பேசலாம்.. உங்களை விட சின்ன பொண்ணு தான் ஸோ நீ னு ஒருமையிலேயே பேசுங்க அண்ணி.. நீங்க எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? பாப்பா எப்படி இருக்கிறா?”
“எல்லோரும் நல்லா இருக்கிறோம்.. உங்களை ஒருமையில் பேசினா அம்மா பிச்சிடுவாங்க”
“அத்தை கிட்ட நான் பேசிக்கிறேன்.. தயவு செய்து என்னை கிழவி ஆக்கிடாதீங்க”
“சரி சரி.. அம்மா முன்னாடி மட்டும் பன்மையில் பேசுறேன்”
“சரி”
“அப்பறம் சொல்லுங்க.. அண்ணாவை சுத்தல்ல விட்டீங்க போல!” என்றாள் புன்னகையுடன்.
“நீங்க சதீஷ் அண்ணாவை சுத்தலில் விட்டதை விடவா?”
“உங்க.. உனக்கு எப்படி தெரியும்?”
“அப்போ நிஜமாவே நல்ல சுத்தல்ல விட்டீங்களா! ஹா ஹா” என்று சிரித்தவள், “இதான் அண்ணி போட்டு வாங்குறது” என்றாள்.
“அண்ணனுக்கு ஏத்த ஆள் தான்” என்று அவர்களின் பேச்சு சதீஷ் வரும் வரை நீண்டது. வெற்றிவேல் தங்கை மகளுடன் விளையாடியபடி தங்கை தன்னவளிடம் மகிழ்ச்சியுடன் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தான்.
சதீஷ், “வாங்க மச்சான்” என்றபடி தான் உள்ளே நுழைந்தான்.
வெற்றிவேல் தனது கல்யாணத்தை பற்றிக் கூற, சதீஷ், “என்ன வேலை செய்யணும் னு சொல்லுங்க.. நாங்க செய்றோம்” என்று கூற,
வெற்றிவேல், “தேவைனா கண்டிப்பா சொல்றேன்” என்றான். அதன் பிறகு பேசியபடியே உணவை முடித்தனர். அப்பொழுது அவர்களுடன் உண்ட அன்னையின் அமைதியை கண்டுகொண்ட சதீஷ் மனைவியை பார்க்க அவள் பிறகு சொல்வதாக செய்கை செய்தாள்.
வெற்றிவேல் விடைபெற்றதும் சதீஷின் அன்னை அமைதியாக உறங்க சென்றுவிட, நிவேதா வேலைகளை முடித்துவிட்டு குழந்தையை தூங்கவைத்துவிட்டு சதீஷின் தோளில் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் சாய்ந்தாள்.
அவளது தோளில் கைபோட்டு அரவணைத்த சதீஷ், “என்ன டா?” என்றான்.
அவள் வெற்றிவேல் கைபேசியில் பேசியதையும் அவனது அன்னையின் மாற்றத்தையும் பற்றி கூறினாள்.
அவன், “இதை நீ ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம்.. சரி விடு.. இனி எல்லாம் சரியாகிடும்” என்றபடி அவளது உச்சியில் முத்தம் கொடுக்க,
“லவ் யூ சது” என்றவள் அவனது கன்னத்தில் இதழ் பதித்து அவனை கட்டிக் கொண்டு நெஞ்சில் முகம் புதைத்தாள்.
மென்னகையுடன், “லவ்வை சொல்லும் போது கன்னதிலேயா முத்தம் கொடுப்பாங்க?” என்றபடி அவளது இதழில் கவி பாடியவன் அவளுடன் வேறு உலகத்திற்குள் நுழைந்தான்.
அழகான காதலுடன் நிகழ்ந்த நிறைவான கூடலில் முடிந்த அன்றைய நாள் அவர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது.
——————————————————————————————————————————————
சற்று தாமதமாக வீட்டிற்கு வந்த புகழ்வேந்தனை மித்ராணி கண்டுக்கொள்ள வில்லை. இரவு உணவை முடித்து அறைக்கு செல்லும் வரை அவனும் அமைதியாகத் தான் இருந்தான்.
அறையில் அவள் சோபாவில் அமர்ந்து தொலைகாட்சியை இயக்க, அதில்,
“இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது
தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது..
இதழில் கதை எழுதும் நேரமிது………..” என்று ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்பட பாடல் ஒலிக்க, புகழ்வேந்தன் அவளை பார்த்தபடி பாடலுடன் சேர்ந்து பாடினான்.
அவள் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு அவனை கண்டுகொள்ளாமல் எழுந்து செல்லப் பார்க்க, அவளது கையை பற்றி நிறுத்தியவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் முகத்தை நோக்கி, “என்னை மன்னிக்க மாட்டியா ராணி? வேற ஏதாவது தண்டனை வேணா கொடு.. இப்படி பேசாமல் இருக்காத” என்று தவிப்புடன் கெஞ்சும் குரலில் கூறினான்.
இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் மண்டியிட்டது முதல் அதிர்ச்சி என்றால் இப்படி யாசிப்பது போல் மன்னிப்பை கேட்டது அடுத்த அதிர்ச்சி.
அவனது இந்த நிலை அவள் மனதை பிசைய அவசரமாக அவனை எழுப்பினாள்.
எழுந்து நின்றவனை அவள் முறைக்க,
அவன், “என்னோட காதல் எவ்வளவு உண்மையோ அதே அளவு உனக்காக நான் வருந்தியதும் உண்மை.. வெளியே பிடிவாதமா இருந்து நம்ம கல்யாணத்தை நடத்தினாலும் உள்ளுக்குள் ஒவ்வொரு நிமிஷமும் உனக்காக நான் வருந்தினேன்.. உனக்கு நியாம் செய்யலை னு எனக்கு தெரியும் ஆனா எனக்கு வேறு வழி இல்லை.. உன்னை பொறுத்தவரை நான் செய்தது தவறு னு தெரிந்தாலும் என்னால் அதை செய்யாமல் இருக்க முடியவில்லை.. என் காதல் தான் என்னை இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்து செயல் படுத்தவும் வைத்தது னு நானே மெதுவா தான் உணர்ந்தேன்.. ஒருவேளை என் மனதை முன்னாடியே நான் உணர்ந்து இருந்திருந்தாலும் என் காதலையும் என் நிலைமையையும் உன்னிடம் விளக்க எனக்கு நேரம் இல்லையே!”
“எனக்கு கொஞ்சம் டைம் கொடு” என்றவள் முறைப்புடன், “இனி எப்பவும் இப்படி மன்னிப்பு கேட்காதே” என்றாள்.
அவன் விரிந்த புன்னகையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “அப்போ இப்படி கேட்கவா?” என்றான் கண்ணில் குறும்புடன்.
அவனது புஜத்தில் அடித்தவள், “இதான் இடத்தை கொடுத்தால் மடத்தை கேட்பது.. பிச்சிடுவேன்” என்று ஆள்காட்டி விரலை ஆட்டி எச்சரித்தாள்.
அவனோ வசீகர புன்னகையுடன், “தேங்க்ஸ் டா” என்றான். பிறகு, “சின்ன வயசில் ஏதாவது தப்பு பண்ணா இப்படி தான் அம்மா கிட்ட மன்னிப்பு கேட்பேன்” என்றான்.
அவள், “நீ தப்பே பண்ணது இல்லை னு அத்தை சொன்னாங்க!”
“தப்புனா விளையாடும் போது எதையாவது தெரியாமல் உடைப்பது.. அந்த மாதி……….” என்று சொல்லிக் கொண்டிருந்தவன், “ஏய் இப்போ நீ என்ன சொன்ன?” என்று இன்ப அதிர்ச்சியுடன் வினவ,
அவன் கேட்பதை புரிந்துக் கொண்டவள் அலட்டிக்கொள்ளாமல், “ஏன் அவங்க எனக்கு அத்தை தானே!” என்றாள்.
அவன் மென்னகையுடன், “ஆமா என்னோட அல்லிராணிக்கு மட்டும் தான் அவங்க அத்தை” என்றபடி அவளது நெற்றியில் லேசாக முட்டினான்.
அவனது மகிழ்ச்சியும் செயல்களும் மனதிற்கு இதமாக இருந்தாலும் அதை அவள் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவள் கோபம் கொள்ளாததில் இருந்தே அவளது மனநிலையை அவளின் வேந்தன் உணர்ந்துக் கொண்டான்.
அவளது கையை பற்றி சோபாவில் அமர்த்தி தானும் அவள் அருகில் அமர்ந்தவன், “உன்னிடம் கொஞ்சம் பேசணும்.. இப்போ பேசலாமா?”
“வேண்டாம்னு சொன்னா விட்டிடுவியா?”
“ராணி நிறைய முக்கியமான விஷயம் பேசணும்”
“கொஞ்சம் னு சொன்ன?” என்று அவள் புருவம் உயர்த்த,
அவளது பாவத்தில் மயங்க தொடங்கிய மனதை இழுத்து பிடித்தவன், “நீ என்னை மன்னித்து ஏத்துக் கொண்ட பிறகு தான் உன்னிடம் இதை சொல்லணும் னு நினைத்தேன்.. ஆனா இப்போ சொல்லத் தோணுது.. சொல்லவா?”
“நீ சொல்லப் போவது என் அம்மாவோட அண்ணன் செய்த கொடுமைகளை பற்றி னா அது தேவை இல்லை.. உன் வலிக்கான காரணத்தை காலையிலேயே அத்தை கிட்ட கேட்டு தெரிந்துக்கிட்டேன்”
“ஓ” என்று அவனது குரல் சுரத்தேயில்லாமல் வர,
அவள், “என்ன?”
உணர்ச்சியற்ற முகத்துடன் அவள் முகத்தை பார்த்தவன், “அதனால் தான் இந்த கரிசனமா?”
அவனது வருத்ததிற்கான காரணத்தை புரிந்துக் கொண்டவள், “அதனால் தான் இந்த கரிசனம் என்றால் உண்மை தெரிந்ததும் உன்னிடம் பேசி இருக்கணுமே!” என்றாள்.
அப்பொழுதும் அவன் முகம் தெளியாமல் இருக்க, அவள், “பிரதாபத்திலோ அனுதாபத்திலோ வந்த கரிசனம் இல்லை இது.. உண்மை தெரிறதுக்கு முன்னாடியே எனக்கு உன்னை பிடித்து தான் இருந்தது.. உன்னோட காதலும் அன்பும் அணுகுமுறையும் ஆளுமையும் என்னை அறியாமல் என்னுள் இந்த மாற்றத்தை விதைத்து இருக்கணும்.. இந்த பிடித்ததை காதலா மாற விடாம உன்னோட செயல் தடுக்குது.. உண்மை தெரிறதுக்கு முன்னாடியும் சரி இப்பவும் சரி நீ செய்ததை சட்டுன்னு என்னால் முழுமையா மன்னிக்க முடியலை.. எனக்கு கொஞ்சம் டைம் தேவை..”
அவளது கையை இறுக்கமாக பற்றியவன், “என் காதல் நம்ம காதலா கூடிய சீக்கிரம் மாறும்” என்றான்.
“சரி இன்னைக்கு செய்ததை பற்றிச் சொல்லு” என்று பேச்சை அவள் மாற்ற, அவனும் அதை பற்றியும் அடுத்து செய்யப் போவது பற்றியும் கூறினான்.
பிறகு, “ஊட்டி டீ எஸ்டேட் அண்ட் பாக்டிரியை அவசர அவசரமா மனோஜ் பெயரில் மாற்றி இருக்கிறான்” என்றான்.
“அதை பார்த்துக்கலாம்..” என்றவள், “உனக்கு எப்படி தெரியும்?”
“அவனை பாலோ பண்ண ஆள் வைத்திருக்கிறேன்.. அவன் வீட்டிலேயே ஆள் இருக்குது..” என்றவன் கிருபாகரன் வீட்டில் கத்தியதை கூறினான்.
“இன்னைக்கு அவரை பார்க்கும் போது செம கோபம் எனக்கு.. சொத்து விஷயத்தில் அம்மாவை ஏமாற்றியதிலேயே கோபத்தில் இருந்தேன்.. இன்னைக்கு அத்தை கிட்ட பேசிய பிறகு அவர் முகத்தை பார்க்கக் கூட பிடிக்கலை.. எல்லார் முன்னாடியும் மரியாதையா தான் பேசினேன் ஆனா கடைசியா நான் நிவேதா வக்கீல் அங்கிள் மட்டும் இருக்கும் போது ஐ லாஸ்ட் மை கண்ட்ரோல்.. ‘டா’ னே சொல்லிட்டேன்.. பேசிய பிறகு தான் ரியலைஸ் பண்ணேன் ஆனா அதை நினைத்து வருத்தும் ஒன்னுமில்லை..”
“அவனுக்கு மரியாதையெல்லாம் தேவை இல்லை.. விடு”
“சரி தூங்கலாம்” என்றாள்.
அவள் கன்னத்தில் முத்தமிட்டு புன்னகையுடன், “குட் நைட் ஸ்வீட் வேந்தன் ட்ரீம்ஸ்” என்றான்.
உள்ளுக்குள் இனித்தாலும் வெளியே அவனை முறைக்க, அவனோ மறு கன்னத்திலும் முத்தமிட்டு, “உன்னோட முறைப்பில் காரமே இல்லை அல்லிராணி” என்றான்.
“காரம் தானே! நாளைக்கு கஞ்சியில் அதிகமா போட்டு தரேன்”
“இன்னையில் இருந்து கஞ்சி குடிக்கிறதையே இந்த வேந்தன் விட்டுட்டான்”
“கஞ்சியில் மட்டும் தான் காரம் சேர்க்க முடியுமா?”
“நாளையில் இருந்து நான் டயட்.. இலைதழைகளை மட்டும் தான் சாப்பிட போறேன்” என்றதும் அவள் மென்னகையுடன், “குட் நைட்” என்றுவிட்டு படுத்தாள்.
அவனும் புன்னகையுடன் படுக்க, இருவரையும் நிம்மதியான உறக்கம் தழுவிக் கொண்டது.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
