Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

uyir kaakkum uyir kolli

Uyir Kaakkum Uyir Kolli – 7

அந்த நச்சுக்கிருமி ஜெயராஜின் உடம்பில் வேகமாய் பரவ ஆரம்பித்து ஒவ்வொரு உறுப்பாய் செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது. மறுநாளே அவருடைய கண்கள் மங்க தொடங்கியிருந்தது காதுகளும் முற்றிலுமாய் செயலிழந்து இருந்தது.  படியாக அவருடைய உறுப்புகள் ஒவ்வொன்றாய் செயலிழந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்களாலும் அவருக்கு என்ன வியாதி என்பதனை கண்டறிய முடியவில்லை இதுவரையில் அவர்கள் இப்படி ஒரு நோயை பார்த்ததில்லை அதனால் அவர்களாலும் இதற்கான மருந்தை அவருக்குக் கொடுக்க முடியவில்லை இப்படியாக இரண்டே நாளில் ஜெயராஜ் மரணத்தை தழுவினார். அவர் இறந்த செய்தி அவருடைய கல்லூரியையும் அடைந்தது. 
உடனே இளம்பருதியும் ரகுவும் மருத்துவமனையை நோக்கி புறப்பட்டனர். “என்னடா ஆச்சு அவருக்கு முந்தாநேத்து கூட நல்லா தானடா இருந்தாரு…… இப்போ உடனே என்ன ஆச்சு” என்று அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே மருத்துவமனையை அடைந்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடம்….. “டாக்டர் நாங்க ஜெயராஜ் சாரோட ஸ்டூடண்ட்ஸ் அவருக்கு என்ன ஆச்சு?”  என்று அவர்கள் கேட்க அந்த மருத்துவர்…… “தட்ஸ் வாட் இவென் வி can’t டையக்நோஸ்….. திடீர்னு அவருடைய உறுப்புகள் ஒன்னொன்னா செயலிழக்க ஆரம்பிச்சுடுச்சு எங்களால ஒண்ணுமே பண்ண முடியல……  நாங்களும் எவ்வளவோ எஃபாட்ஸ் எடுத்து பார்த்தோம்…… நிறைய மெடிகேஷன் கொடுத்து பார்த்தோம் பட் அவருடைய டெத் ரொம்ப பாஸ்டா நடந்துருச்சு….. பட் வி  சஸ்பெக்ட் இட்ஸ் அ  வைரஸ்…..

“டாக்டர் நாங்க பயோடெக்னாலஜி ஸ்டுடென்ட்ஸ் அவருடைய பிளட் ஸாம்பிள்ஸ் எங்களுக்கு கிடைக்குமா?”



Advertisement

“ஜெனரலி நாங்க  இந்த மாதிரி பிளட் சாம்பிள் வெளியே யாரு கேட்டாலும் கொடுக்கிறதில்லை…….. என சிறிது இடைவெளி விட்டவர் “பட் நீங்க
ஸ்டுடென்ட்ஸ் அதனால உங்களுக்கு கொடுக்க சொல்றேன்….. நீங்கள் லப்க்கு போயி கலெக்ட் பண்ணிக்கோங்க”

அவருக்கு நன்றி உரைத்தபடி இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஆய்வுக்கூடத்தில் இருந்து இரத்த மாதிரியை வாங்கியவர்கள் நேரே சென்றது அவர்களுடைய கல்லூரி ஆய்வகத்திற்கு தான்.

ரகு “டேய் மறந்துட்டியா பிரிண்ஸிபல் சார் உன்ன லப் யூஸ் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காரு” என்றான்.

Advertisement

“இப்ப நான் யூஸ் பண்ண போறது இல்ல டா நீ தான் யூஸ் பண்ண போறே நான் சும்மா உன்கூட நிக்க போறேன் அவ்வளவுதான்”

Advertisement

” ஓ அப்படி……” என்றான் ரகு புரிந்தவனாய்.

[the_ad id=”6605″]

“இல்ல பருதி இனிமே நீ லப்பை யூஸ் பண்ணலாம்”…… என்றபடி அவர்களை நோக்கிவந்ததார் பேராசிரியர் ஸ்டீபன்.

Advertisement

ஆம் பரிதியின் ஆராய்ச்சி என்ன என்று கூட கேட்காமல் நிராகரித்த பேராசிரியர் தான்……..   அவர் ஆசிரியர் அவருக்கு ஒரு மாணவன் பாடம் எடுப்பதா? என்ற கோபம் தான் அவருக்கு. மற்றபடி அவர் மிகவும் நல்லவர்.

“என்ன மன்னிச்சிடு பரிதி நான் பண்ணது பெரிய தப்பு தான்….. என்னுடைய ஈகோவால தான் உன்னுடைய ப்ராஜெக்ட்ட நீ  இப்படி  பாதியிலேயே நிறுத்த வேண்டியதா போச்சு…… நான் என்னை மட்டுமே ரொம்ப உயர்வா நினைச்சுட்டேன்……  யார் வேணும்னா பொறாமைப் படலாம் ஆனால் ஒரு ஆசிரியர் மட்டும் தன்னுடைய மாணவனை பார்த்து பொறாமை படக்கூடாது ஆனா நான் அந்த பெரிய தப்பை பண்ணிட்டேன்……. என்னால தான் நீ சஸ்பெண்ட் ஆயிட்டன்னு நினைச்சா எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு பா….. நான் உனக்கு பர்மிஷன் கொடுக்கிறேன் லப் யூஸ் பண்றதுக்கு…… பிரின்ஸ்பல்  சார் கேட்டா என்னோட கைட் பர்மிஷனோட தான் லப் யூஸ் பண்றேன்னு சொல்லு”

“தேங்க்யூ சார் தேங்க்யூ சோ மச்” என்ற பரிதி தன் வேலையை துவங்கினான்.

“சார் உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்…… நீங்க கிளம்புங்க நாங்க பாத்துக்குறோம்” என்றான் ரகு

அவனுடைய பயம் இளம்பரிதிக்கு புரிந்துதான் இருந்தது….. ரகு இப்பொழுது யாரையும் நம்பக் கூடிய சூழ்நிலையில் இல்லை. ஜெயராஜின்னுடைய மரணம் வேறு அவனுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆயினும் இளம்பரிதி பேராசிரியர் ஸ்டீபன் மீது முழு நம்பிக்கை இருந்தது அவருடைய கண்களில் அவன் தனக்கான வருத்தத்தை கண்டான் அதனாலேயே அவரை முழுவதுமாய் நம்பினான்.

“இல்லப்பா இன்னைக்கு எனக்கு கிளாஸ் எதுவுமே இல்லை நான் உங்களுடனே இருக்கிறேன்…… உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லுங்க நான் செய்றேன்” என்றார் அவர்

“கண்டிப்பா சார் நீங்க இங்க வாங்க” என்று அவரை அழைத்து அந்தக் கணினி திரையை உயிர்ப்பித்தான். இளம்பரிதி
” சார் நான் ஜெயராஜ் சாருடைய பிளட் சாம்பிளை இருந்து எடுத்த வைரஸ் ஓட ஜெனிடிக் மெட்டீரியல் ஸ்டடி பண்ணிட்டேன் இப்போ என்னோட சூப்பர் வைரஸ்  SV2020 எப்படி இந்த வைரஸ்ச தாக்குதுனு நம்ம இந்த ஸ்கிரீன்ல பார்க்கலாம். “

என்றவன் கூறவும்…… அந்தத் திரையில் மனித உடம்பில் நச்சுக்கிருமி பரவியதும் இளம்பருதி கண்டுபிடித்த SV 2020 எனப்படும் இந்த கிருமி ஒவ்வொரு நச்சுக்கிருமியாய் சாப்பிட ஆரம்பிக்கிறது அப்படி சாப்பிடும்போது SV 2020 தன்னையே பெருக்கிக் கொள்கிறது………. இப்படியே அந்த நச்சுக் கிருமியை முழுவதுமாய் அழித்துவிடுகிறது அதன்பின்பு தன்னுடைய பெருக்கத்தையும் மெல்ல மெல்ல குறைத்து தானும் அழிந்து விடுகிறது.

இதனை கண்ட ஸ்டீபன் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்.

இப்பொழுது அவருக்கு அவருடைய தவறு பூதாகரமாய் தெரிந்தது.

“இந்த மாதிரி ஒரு ப்ராஜெக்ட்டயா நான் ரிஜக்ட் பண்ணேன்? ஐ பில் அஷேம்ட் ஆப் மைசெல்ப்….. என்ன மன்னிச்சிடு பா” என்றார் மனம் வருந்தி
“இட்ஸ் ஓகே சார் அத விடுங்க…..”  அவரை விட பெரிய தவறு செய்தவரை கூட அவன் தண்டிக்க நினைக்கவில்லையே
“இது எல்லா வைரஸையும் அழிச்சிடுமாப்பா”

“ஆமா சார் இப்போ வரைக்கும் மனிதனை தாக்கக்கூடிய எல்லா வைரஸயும்  அழிக்கிற மாதிரி தான் நான் இதோட ஜெனிடிக் மெட்டீரியல டிசைன் பண்ணி இருக்கேன்”

“இதுவும் ஒரு வைரஸ் தானப்பா இது மனுஷங்கள அஃபெக்ட் பண்ணாதா?

[the_ad id=”6605″]

“இல்ல சார் மனுஷன அஃபெக்ட் பண்ணாத எத்தனையோ வைரஸ் இந்த பூமியில இருக்கே சார் இதுவும் அதே மாதிரி தான் சார்……. ஒரு மனுஷனோட உடம்பில் இன்னொரு வைரஸ் இருக்கிற வரைக்கும் தான் இது உயிரோட இருக்கும் அதுக்கப்புறம் இது தன்னாலே செத்துப் போய்டும். சுருக்கமா சொல்லணும்னா நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளிவர அன்ட்டிபாடீஸ் மாதிரி.” என்றான் விளக்கமாய்.

பொதுவாக மனித உடம்பில்ஒரு கிருமி நுழைந்தால். அதனை மனிதனுடைய நோயெதிர்ப்பு மண்டலம்உடனே கண்டு கொள்ளும். 
மனிதனுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தில் முக்கிய பங்கு வகிப்பது வெள்ளை அணுக்களில் உள்ள லிம்போசைட் (Lymphocyte) என்பதாகும். இதில் இரு வகை உண்டு பி லிம்போசைட் ( B Lymphocyte or B cells)  டீ லிம்போசைட் ( T Lymphocyte or T cell).

பி லிம்போசைட் மனித உடம்பில் ஒரு முறை நுழையும் நச்சுக் கிருமியை……அதனுடைய வடிவம், மரபணு என எல்லாவற்றையும் ஆராய்ந்து தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும் பின்பு அதேபோல் ஒரு நச்சுக்கிருமி மனிதனை தாக்க வந்தால் அதனை உடனே கண்டறிந்து கொள்ளும். அப்படி அறிந்து கொண்ட கிருமியை கொல்வது டீ லிம்போசைட்டினுடைய வேலை.

நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மால் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும். ஆனால் இன்று நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களினாளும், உணவு முறைகளாலும் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் அதன் சக்தியை இழந்து வருகிறது. 
அதனாலேயே நாம் அதனுடைய வேலையை செய்ய மருந்துகளை நாட வேண்டியுள்ளது.

“கண்டிப்பா இந்த ப்ராஜெக்ட்டுக்கு நோபல் பிரைஸ் கிடைச்சாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை. …. இதுக்கு முன்னாடி க்யூர் பண்ண முடியாத எத்தனையோ டிசீஸ இதால க்யூர் பண்ண முடியும். ஐ அம் ரியலி பிரவுட் ஆஃ யூ” என்று அவனைப் பாராட்டினார்.

அவர் அவனை பாராட்டி விட்டு சென்றதும் ரகுவும் இளம்பருதியும் ஜெயராஜின்டைய மரணத்தில் இருந்த மர்மத்தை பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.

ரகு “சரி இந்தா இந்த வைரஸ் எங்கேயுமே இதுவரை கண்டுபிடிக்கப்படலனா அவருக்கு இது எப்படி வந்திருக்கும்”

“டேய் இது பரவும் வகை வைரஸ் இல்லடா…..

சில வைரஸ் ஒரு மனுஷன் ஒரு மனுஷன் கிட்ட பேசினா கூட அவனோட வாயிலிருந்து தெரிக்கும் எச்சி  மூலமா பரவும்…… சில வைரஸ் ரத்தத்தின் மூலமாக பரவும்…… சில வைரஸ் தெளிவா பிளான் பண்ணி இன்செக்ட் பண்றது மூலமாக மட்டுமே ஒருத்தருக்கு வரக்கூடியது…… இதுவும் அதுபோல ஒரு வைரஸ் தான்….

இத அவரோட உடம்புல யாரோ செலுத்தி இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா அது அவரோட உடம்பை உருக்கி இருக்கு….

“எனக்கு வரவேண்டியது தான் அவருக்கு வந்துருச்சோன்னு கூட எனக்கு சந்தேகமா இருக்கு டா”

“என்னடா பேசுற நீ …….. உன்ன  ஏன் கொல்லனும்” என்று ரகு பதற்றம் அடைய…..

“அவரை ஏண்டா கொல்லனும்….. அப்போ???? அதுவும் இப்படி ஒரு மெத்தட்ல????? கொலை பண்றதுக்கு எவ்வளவோ வழி இருக்கே?
இந்த  மாதிரி வைரஸ் தயாரிக்கிற வங்களுக்கு எல்லாம் என்னுடைய ரீசர்ச் பெரிய அடியா இருக்கும்….. அதை தடுக்க தான்  அவங்க இந்த மாதிரி ஏதோ பண்ணி இருக்காங்க”

“அப்போ இப்போ உன்னோட ரிசர்ச் வெளியே தெரிஞ்சா உயிருக்கு ஆபத்துன்னு சொல்றியா டா??

“கண்டிப்பா…… அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை”

[the_ad id=”6605″]

_______________________

மனித உடல் மிகவும் அற்புதமானது. அது தன்னை காத்துக்கொள்ள எத்தனையோ முயற்சிகள் எடுக்கிறது. ஆனால் அவை அனைத்தையும் மனிதனே தன்னுடைய அறியாமையால் தடுத்து விடுகிறான். சிறிதாய் உடம்பில் உஷ்ணம் ஏறினாலும் மருந்தினை தேடி ஓடுகிறான் எப்பொழுது மனித உடல் ஒரு அண்ணிய கிருமியை எதிர்த்துப் போராடுகிறதோ அப்பொழுது நம் உடலின் உஷ்ணம் ஏறும் ஆனால் அதனை நாம் புரிந்து கொள்ளாமல் அந்த உஷ்ணத்திற்கு பயம் கொள்கிறோம். 
எப்பொழுது மனிதன் தன்மீது நம்பிக்கை இழக்கிறானோ அப்பொழுதே அவன் இறைவனை நாடுவான் என்பதற்கு……. இப்பொழுது நம்மிடம் ஒரு அருமையான உதாரணம் உள்ளது.

எப்பொழுது ஒரு நோய்க்கு மருந்து இல்லையோ அப்பொழுதே அவன் தன் எதிர்ப்பு சக்தியை நம்ப துவங்குகிறான்……. அவனுடைய எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்  உணவுகளைத் தேடித்தேடி உண்கிறான்…… இவ்வளவு நாள் தன் உடம்பில் நோயெதிர்ப்பு மண்டலம் என்று ஒன்று இருக்கும் நினைவே இன்றி இருந்தவன் இன்று அதனை பேண துடிக்கிறான்.

மருத்துவர்களும் மருந்தினை நம்பாது ஆரோக்கியமான உணவுகளை இன்று நோயாளிகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இக்கொடிய நோய் பல உயிர்களை எடுத்தாலும் இன்று மனிதனுக்கு சில நற்கருத்துகள் போதித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!