Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 32(ஆ)

பிடித்தம் 32(ஆ)

வெற்றிவேல் கூர்மையான பார்வையுடன், “இந்த நேரம் எப்போதும் வீட்டுக்கு வருவீங்களா?”

 

“சில நேரம் லன்ச்சுக்கு வீட்டுக்கு வருவேன்.. இப்போ என் மனைவி மனசு சரியில்லாமல் இருப்பதால் வந்தேன்”



Advertisement

 

“அப்போ உங்களுக்கு மனசு நல்லா தான் இருக்குது! வருத்தமா இல்லையா?”

 

Advertisement

“என்ன கேள்வி இது?” என்று கோபமாக வினவ, வெற்றிவேல் தனது துளைக்கும் பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை.

Advertisement

 

கிருபாகரன் தானாக குரலை சற்று தனித்து, “நான் மட்டும் எப்படி நிம்மதியுடன் இருப்பேன்?”

 

Advertisement

“நான் வருத்தமா இல்லையா னு கேட்டேன்”

 

“அதான் சொன்………..”

 

அதே துளைக்கும் பார்வையுடன் வெற்றிவேல் இடை புகுந்தான்.

“ரெண்டுக்கும் வித்யாசம் இருக்குது மிஸ்டர் கிருபாகரன்.. உண்மையிலேயே உங்க மகன் காணாமல் போயிருந்து, உங்களுக்கு அவர் எங்கே னு தெரியாமல் இருந்தால் வருத்தமாக கவலையாக இருக்கும்.. ஒருவேளை இதெல்லாம் நீங்க பழி தீர்ப்பதற்கான நாடகமா இருந்தால் நீங்க  பதற்றத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பீங்க”

 

“ACP!!!” என்று கோபத்துடன் கத்த,

 

அவரது கோபத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் ‘என்ன’ என்பது போல் வெற்றிவேல் பார்த்தான்..

 

அதில் மேலும் கோபமடைந்த கிருபாகரன், “என் பவர் தெரியாம பேசுற”

 

“எனக்கு தேவை இல்லாதை பற்றி நான் தெரிந்துக் கொள்வது இல்லை”

 

கிருபாகரன் முறைப்புடன், “உங்க குற்றசாட்டில் நியாயமே இல்லை”

 

“நீங்க எல்லாமே நியாயத்துடன் செய்றீங்களா? நடந்துக்கிறீங்களா?”

 

“ACP!!!”

 

“நான் என்ன பதவியில் இருக்கிறேன் னு மறந்துறாம இருக்க அடிக்கடி அதை சொல்றீங்களா?”

 

கிருபாகரன் பல்லை கடித்தபடி கோபத்துடன், “அவனை பழி வாங்க எனக்கு வேறு வழியா இல்லை?”

 

“ஸோ மிஸ்டர் புகழ்வேந்தனை பழி வாங்குற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது!”

 

“அது..” என்று சிறிது திணறிய கிருபாகரன் பின் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, “ஆமா.. அவனால் எனக்கு நிறைய லாஸ்.. என் சாம்ராஜ்யத்தையே உடைச்சிட்டான்.. அதனால் அவனுக்கு பதிலடி கொடுக்கணும் னு வெறி இருக்குது தான் ஆனா அதுக்காக என் மகனை வைத்து விளையாடும் அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை..”

 

“மிஸ்டர் புகழ்வேந்தன்……………..”

 

“அவனுக்கு என்ன மரியாதை?”

 

“உங்களைக் கூட தான் மரியாதையுடன் கூப்பிடுறேன்” 

 

“ஆரம்பத்தில் இருந்தே நீங்க என்னை சந்தேகமாவே பார்க்கிறீங்க.. போயும் போய் அவனைப் பழி வாங்க என் மகனையா நான் யூஸ் பண்ணுவேன்?”

 

“உங்கள் செயல்கள் அப்படி இருக்குது..”

 

“அப்படி என்ன நான் செய்தேன்?”

 

“எடுத்ததும் தேவை இல்லாமல் மீடியா பீப்பிளை இழுத்து இருக்கிறீங்க”

 

“அவன் அவனோட செல்வாக்கை யூஸ் பண்ணி தப்பிக்கக் கூடாது னு அப்படி பண்ணேன்.. அதில் தப்பில்லையே!”

 

“நீங்க அவரை அரெஸ்ட் பண்றதிலேயே குறியா இருப்பது போல் இருக்குது.. ஆதாராமல் இல்லாமல் அவரை னு இல்லை யாரையுமே அரெஸ்ட் பண்ண முடியாது”

 

“சதேகத்தின் பெயரில் அரெஸ்ட் பண்ணலாமே?”

 

“அதுவும் எடுத்த உடன் பண்ண முடியாது.. அண்ட் எங்கள் பார்வை எல்லோரையும் சந்தேகத்துடன் தான் பார்க்கும்.. ஏன் மனோஜின் மீது கூட சந்தேகம் இருக்கிறது.. கல்யாணம் நின்ற கோபத்தில் அவர் வேண்டுமென்றே தலைமறைவா இருக்கலாமே! நீங்க மிஸ்டர் புகழ்வேந்தன் மீது தான் சந்தேகப்படுவீங்க னு தெரியாமலா இருப்பார்?”

 

“நீங்க பார்க்கிற கண்ணோட்டமே சரியில்லை.. தேவை இல்லாம எங்க மீதே சந்தேகப்பட்டு நேரத்தை வீணடிக்கிறீங்க..  நீங்க கண்டுபிடிக்கலைனாலும் என் ஆட்கள் என் மகனை கண்டு பிடிச்சிருவாங்க”

 

“அப்பறம் எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க?”

 

“கடத்தியவன் தண்டனை அனுபவிக்க வேண்டாமா? அதுக்கு தான்”

 

“மனோஜ் கல்யாணம் எதனால் நின்றது?”

 

“புகழ்வேந்தனும் மித்ராணியும் விரும்பி இருக்காங்க.. அது தெரியாம மனோஜுக்கும் அவளுக்கும் கல்யாணம் முடிவு பண்ணிட்டேன்”

 

“மித்ராணி அவங்க காதலை வீட்டில் சொல்லலையா?“

 

“அவங்க காதலை பற்றி எனக்குத் தெரியாது”

 

“அப்போ வீட்டில் வேற யாருக்காவது தெரியுமா?”

 

“தெரிந்திருக்கலாம்.. எனக்குத் தெரியாது”

 

“அதை பற்றி நீங்க விசாரிக்கலையா?”

 

“கல்யாணமே நடந்த பின் எதுக்கு விசாரிக்கணும் னு விசாரிக்கலை”

 

“கல்யாணத்தை ஏன் அவசரமா ஒரு வாரத்தில் வச்சீங்க”

 

“மனோஜ் மித்ராணி கல்யாண பேச்சை என் தங்கை தான் ஆரம்பித்தாள்.. அப்பறம் ஜாதகம் பார்த்ததில் மனோஜுக்கு ஏதோ ஆபத்து இருப்பதால் உடனே கல்யாணம் செய்யணும் னு ஜோசியர் சொன்னார்.. அதான் முதல் முகூர்த்தத்தில் வச்சோம்”

 

“எந்த ஜோசியரை நீங்க பார்க்கிறீங்க?”

 

“XXXயில் இருக்கிற நடராஜன் ஜோசியர்” என்றவர் எரிச்சலும் கோபமுமாக, “என் மகனை கண்டுபிடிக்க சொன்னா இங்கே வந்து ஏன் சார் தேவை இல்லாததை கேட்டுட்டு இருக்கிறீங்க? போங்க சார்.. போய் என் மகனை கண்டு பிடிக்கிற வேலையைப் பாருங்க”

 

“உங்க மனைவியிடம் பேசணும்”

 

“அவளே மனசு உடைந்து போய் இருக்கா.. என்னை டார்ச்சர் பண்ணது போதாதா? இதையெல்லாம் அவ தாங்க மாட்டா.. ப்ளீஸ் சார்” என்று கையை வெளிப்புறமாக நீட்ட,

 

வெற்றிவேல், “நாளைக்கு வந்து பேசுறேன்.. அவங்களிடம் சொல்லி வைங்க..” என்றுவிட்டு கிளம்பினான்.

 

வெற்றிவேல் சென்றதும் அங்கே வந்த மல்லிகா, “பிரசாத்தை கடத்தியது போல மனோஜை நீங்க தான் கடத்தி இருக்கிறீங்களா? உண்மையை சொல்லுங்க.. நான் கொஞ்சம் நிம்மதியாவது இருப்பேன்” என்று முடிக்கும் போது அவரது குரல் உடைந்தது.

 

“என்ன பேசுற மல்லி? பிரசாத்தை கடத்தியது கல்யாணம் நல்லபடியா நடக்க.. இப்போ ஏன் மனோவை நான் கடத்தப் போறேன்? நானே அவனை காணமல் தேடிட்டு தான் இருக்கிறேன்”

 

“உண்மையை சொல்லுங்க ப்ளீஸ்” என்று அவர் கண்ணீருடன் கெஞ்ச,

 

கிருபாகரன், “சத்தியமா நான் மனோவை கடத்தலை”

 

“மித்ரா ஏன் புகழை விரும்பினா னு சொன்னீங்க?”

 

கிருபாகரன் எரிச்சலுடன், “பின்ன புகழ் என்னை மிரட்டினான் னு சொன்னா எதுக்கு மிரட்டினான்? என்ன சொல்லி மிரட்டினான்? னு கேள்வி வரும்.. தேவை இல்லாத தலை வலி அது.. இந்த ACP ஏற்கனவே ரொம்ப குடையுறான்.. அதுக்கு தான் மாரீஷ்வரன் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்தேன்.. அவன்னா கல்யாணத்தை பத்தி துருவ மாட்டான்.. மனோவை கண்டு பிடிச்சு அந்த புகழை உள்ள தள்ளுவான்னு பார்த்தேன்.. எல்லாத்தையும் சொதப்பிட்டான்” என்று கோபத்துடன் முடித்தார்.

 

“மித்ராவும் புகழும் உண்மையை சொல்லிட்டா?”

 

“அந்த புகழ் நிச்சயம் சொல்ல மாட்டான்.. இது அவனோட கௌரவ பிரச்சனை.. மண்டபத்திலேயே காதலித்து கல்யாணம் பண்ணதா தானே சொன்னான்.. ஆனா மித்ராவை முழுமையா நம்ப முடியாதுனாலும் புகழ் அவளையும் காதல் கல்யாணம் னு சொல்ல வைப்பான்னு தான் நினைக்கிறேன்”

 

“என்னவோ.. என் மகனை மட்டும் கண்டு பிடிச்சு கொடுத்திருங்க..” என்ற மல்லிகா தன் அறைக்குச் சென்றார்.

 

மல்லிகா சென்றதும் கிருபாகரன், ‘அவன் சொன்னா இவ கேட்பாளா?’ என்று மனதினுள் யோசித்தார். பின், “அதெல்லாம் அவன் சொன்னா கேட்பா.. ரெண்டு மூணு நாள் முன்னாடி ரெண்டு பெரும் ஒன்னா சிரிச்சு பேசிட்டு காரில் போனாங்களே!” என்று தனக்குத் தானே எரிச்சலுடன் கூறிக் கொண்டார்.

 

——————————————————————————————————————————————-

 

மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த புகழ்வேந்தன் உணவை முடித்துவிட்டு முதல் மாடியில் இருந்த அறை ஒன்றில் குடும்பத்தினரோடு பேசிக் கொண்டிருந்தான்.

 

புகழ்வேந்தன், “போலீஸ் விசாரிக்க வருவாங்க…”

 

“எங்களையுமா விசாரிப்பாங்க?” என்று கலைவாணியும் கமலாவும் சிறு பதற்றத்துடன் வினவ,

 

மித்ராணி, “எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க? நாம எதுவும் தப்பு பண்ணலை ஸோ ரிலாக்ஸ்டா இருங்க” என்றாள்.

 

புகழ்வேந்தன், “ஒருவேளை விசாரிக்கலாம்.. அதுக்காக சொல்றேன்.. எல்லோருமே நினைவில் வச்சுக்கோங்க.. எங்க கல்யாணத்தை பத்தி பேச்சு வந்தால் நாங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணதா தான் சொல்லணும்.. எக்காரணம் கொண்டும் ராணி மனோஜை கல்யாணம் பண்ண சம்மதித்த விஷயத்தை சொல்லக் கூடாது”

 

கலைவாணியும் கமலாவும், “சரி” என்று கூற,

 

மித்ராணி, “எதுக்கு அப்படி சொல்ற?”

 

“நம்ம பெர்சனல் விஷயம் தேவை இல்லாம அலசப்படுரதை நான் விரும்பலை”

 

“ஹ்ம்ம்.. ஆனா அவரோ பிரசாத்தோ சொல்லிட்டா?”

 

“அவன் கண்டிப்பா சொல்ல மாட்டான்.. இந்த விஷயத்தில் அவனோட நிலைமை திருடனுக்கு தேள் கொட்டிய கதை தான்.. ஆனா பிரசாத் சொல்ல வாய்ப்பு இருக்குது.. அப்படியே அவன்க சொன்னாலும் என்னை மாட்டி விட பொய் சொல்றாங்க னு சொல்லி சமாளிச்சுக்கலாம்” என்றவன், “இன்னொரு விஷயம் நியாபகப் படுத்துறேன்.. மண்டபத்தில் வச்சு நான் சொன்னது.. எங்க காதலுக்கு ராணி வீட்டில் ஒத்துக்கலை.. கிருபாகரன் சொத்துக்காக ஏத்துக்கவிடலை னு சொன்னேன்” என்றதும் பெண்கள் சரி என்பது போல் தலையை ஆட்டினர்.

 

புகழ்வேந்தன் மித்ராணியை பார்த்து, “உன் பிரெண்ட் நிவேதாவுக்கு நம்ம விஷயம் எந்த அளவுக்கு தெரியும்?’

 

“மனோவை நான் விரும்பலைனும் அவன் காதலுக்கு நான் ஓகே சொல்லி கல்யாணத்தை நடத்த பேசியது வரை தெரியும்”

 

“ஸோ அவங்களை ஒன்னே ஒன்னை மட்டும் ஸ்டராங் ஆ சொல்லச் சொல்லு.. நீ என்னை தான் விரும்புற னு………..”

 

மித்ராணி முறைப்புடன், “அதானே உண்மை!”

 

“அதைத் தான் சொல்லச் சொல்றேன்.. வெற்றிவேல் நமக்கு ACP மட்டும் தான் ஆனா அவங்களுக்கு அண்ணா.. ஸோ அவங்க பொய் சொன்னா ஈஸியா அவர் கண்டு பிடிச்சிடுவார்.. நம்ம கல்யாணத்தில் நடந்த கொளருபிடி எதுவும் சொல்ல வேணாம் னு சொல்லு.. வாய் தவறி சொன்னா பார்த்துக்கலாம்”

 

“சரி”

 

அடுத்து அன்னையிடம், “பழசை பத்தி சொல்ற மாதிரி சூழ்நிலை வந்தா தயங்காம சொல்லுங்க.. நம்மளை பத்தி விசாரிச்சா போலீஸ் எப்படியும் பழையதை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாங்க.. ஸோ எங்க கல்யாண விஷயத்தை தவிர வேறு எதிலும் நாம பொய் சொல்லத் தேவை இல்லை..”

 

கலைவாணி, “சரி பா”

 

“தம்பி நிஜமாவே மனோவை காணுமா?” என்று வினவிய கமலாவின் குரலில் சிறு கவலை இருந்தது.

 

அவரின் பாசத்தை புரிந்துக் கொண்ட புகழ்வேந்தன் கோபமாக பேச வந்த மித்ராணியை பார்வையால் தடுத்து கமலாவின் கையை பற்றி, “உங்க அண்ணா விளையாடுறாரா இல்லை நிஜமாவே மனோஜை காணுமா னு தெரியலை அத்தை.. கவலைப் படாதீங்க.. ஒருவேளை நிஜமாவே காணும்னாலும் கண்டு பிடிச்சிடலாம்” என்று தைரியம் கூறினான்.

 

“சரி தம்பி”

 

“சரி பார்த்துக்கோங்க.. நாங்க கிளம்புறோம்” என்று கூறி மித்ராணியுடன் கிளம்பினான்.

 

மித்ராணியை அவளது ஆடை தொழிலகத்தில் விட்டுவிட்டு தனது அலுவலகத்திற்குச் சென்றான்.

 

———————————————————————————————————————————————

 

வெற்றிவேல் கிருபாகரன் வீட்டில் இருந்து வெளியேறவும் அர்ஜுன் அவனை அழைத்தான்.

 

அழைப்பை எடுத்த வெற்றிவேல், “சொல்லு அர்ஜுன்”

 

“மனோஜ் கார் ட்ரேஸ் பண்ணிட்டு இருக்கிறேன் சார்.. அவர் போன் கடைசியா XXX ஏரியா டவரை காட்டுது.. ஆனா அவர் கார் அங்கே இல்லை.. போன் காள் ஹிஸ்டரி கலெக்ட் பண்ணிட்டேன்.. மனோஜுடன் கடைசியா பேசியது மிஸ்டர் புகழ்வேந்தன் மனைவி மித்ராணி”

 

“சரி மிஸ்டர் புகழ்வேந்தனை விசாரிச்சுட்டு நான் அவங்களை விசாரிக்கிறேன்.. கார் விஷயம் லேட் ஆகுதுனா மிஸ்டர் புகழ்வேந்தன் வீட்டுக்கு போய் அவரோட கல்யாணத்தை பத்தி அவர் அம்மா கிட்ட விசாரி” என்றவன் அவர்கள் கல்யாணத்தைப் பற்றி கிருபாகரன் கூறியதை கூறினான்.

 

“ஓகே சார்.. நான் மிஸ்டர் புகழ்வேந்தன் வீட்டுக்கு போய் விசாரிச்சுட்டு அப்டேட் பண்றேன்”

 

“ஓகே” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் புகழ்வேந்தன் அலுவலகத்திற்குச் சென்றான்.

 

 

 

புகழ்வேந்தன் அலுவலக அறை:

கதவை தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்ற வெற்றிவேல் கையை நீட்டியபடி, “குட் அப்டர்நூன்” என்றான்.

 

எழுந்து கை குலுக்கியபடி புகழ்வேந்தனும், “குட் அப்டர்நூன்.. உட்காருங்க” என்றபடி அமர்ந்தான். வெற்றிவேலும் அமர்ந்தான்.

 

புகழ்வேந்தனின் மனநிலையை அறியவே வெற்றிவேல் கைகுலுக்கினான். புகழ்வேந்தனின் திடமான கைகுலுக்கலையும் நேர்கொண்ட பார்வையையும் குறித்துக் கொண்டான்.

 

வெற்றிவேல், “நான் வந்திருக்கிற காரணம் தெரியும் னு நினைக்கிறேன்”

 

“தெரியும்”

 

“சொல்லுங்க”

 

“என்ன சொல்லணும்?”

 

வெற்றிவேல் கூர்மையான பார்வையுடன், “எதுக்கு வந்தேன் னு தெரியும் சொல்லிட்டு என்ன சொல்ல னு கேட்கிறீங்க?”

 

புகழ்வேந்தனும் தீர்க்கமான பார்வையுடன், “நீங்க வந்திருக்கிற காரணம் தெரியும்.. கேள்வி கேட்காமல் சொல்ல சொன்னால் நான் என்ன சொல்ல?”

 

“ஆல்ரைட்.. மனோஜ் காணாமல் போனதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கும் னு மிஸ்டர் கிருபாகரன் சந்தேகப்பட்டு உங்க மேல் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கார்”

 

“அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை னு நான் தெளிவா சொல்லிட்டேன்” என்றவன், “நான் எதுக்காக மனோஜை கடத்தணும்? அதில் எனக்கு என்ன லாபம் இருக்கப் போகுது?”

 

“பிஸ்னெஸ்ஸில் மிஸ்டர் கிருபாகரனுக்கு டென்ஷன் கொடுப்பது போல் பெர்சனல் விஷயத்தில் ப்ரஷர் கொடுக்க இப்படி பண்ணலாமே?”

 

“இந்த மாதிரி சீப் ஐடியா எனக்கு வராது.. மிஸ்டர் கிருபாகரனுக்கு வேணா வரும்”

 

“அப்போ உங்களுக்குள் பிஸ்னெஸ் போட்டி மட்டும் தான் இருக்குது னு சொல்றீங்களா?”

 

“அப்படி சொல்லலையே”

 

“தென்?”

 

“எங்களுக்குள் குடும்ப பகை இருக்கிறது.. அது………….”

 

“ஸோ அந்த பகையை தீர்த்துக்கத் தான் மனோஜை கல்யாணம் செய்துக்க இருந்த மித்ராணியை நீங்க கல்யாணம் செஞ்சீங்களா?”

 

புகழ்வேந்தன் மென்னகையுடன், “என் கல்யாணம் 100 பெர்சென்ட் என் காதலுக்காக நடந்தது”

 

“உங்க காதலுக்காக மட்டுமா?”

 

“புரியலை?”

 

“எங்க காதலுக்காக னு சொல்லாம என் காதல் னு சொன்னீங்க அதான் கேட்டேன்”

 

புகழ்வேந்தன் விரிந்த புன்னகையுடன், “கல்யாணம் கூட தான் என் கல்யாணம் னு சொன்னேன்.. அதில் என் ராணியும் ஐ மீன் என் மித்ராணியும் சேர்த்து தானே!”

 

“ஸோ உங்க கல்யாணம் காதல் கல்யாணம்.. மித்ராணி உங்களை காதலிக்கிறாங்க னு சொல்றீங்க”

 

“ஆமா”

 

“வீட்டில் சொல்லியே கல்யாணம் செய்து இருக்கலாமே?”

 

“என்னோட அம்மா சம்மதம் சொல்லிட்டாங்க பட் மித்ராணி வீட்டில் ஏத்துக்கலை.. மிஸ்டர் கிருபாகரன் என் மனைவியோட சொத்துக்காக எதிர்த்தார்.. ராணி அம்மாவுக்கு அண்ணன் மகனை கல்யாணம் செய்து வைக்க தான் விருப்பம்.. ஸோ அவங்களும் முதலில் ஒத்துக்கலை.. ஆனா கல்யாணத்தன்னைக்கு அவங்க அண்ணனோட சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டியதும் எங்க காதலுக்கு அரை மனதுடன் ஒத்துக்கிட்டவங்க இப்போ முழு மனதுடன் ஒத்துக்கிட்டாங்க”

 

“இவ்ளோ பவர்புல்லான நீங்க ஏன் கடைசி நிமிஷத்தில் கல்யாணம் செஞ்சீங்க?”

 

“ஒரே கல்லில் ரெண்டு மங்கா னு கேள்விப்பட்டு இருக்கிறீங்களா? அதான் காரணம்.. முதலில் ராணி அம்மாவை சமாதானம் செய்ய தான் நினைத்தேன்.. பட் அவங்க கல்யாணத்தை அவசரமா ஒரு வாரத்தில் வைக்கவும் வேறு பிளான் பண்ணேன்.. கிருபாகரனுடன் என்ன குடும்ப பகை னு கேட்டீங்களே! அவன் என் சித்தப்பா காதலித்து கல்யாணம் செய்ய இருந்த பெண்ணை கல்யாணத்தன்னைக்கு கடத்தி கட்டாய கல்யாணம் செய்ததோடு என் சித்தப்பாவை கேவலமா பேசி அவரை மண்டபத்திலேயே தூக்கில் தொங்க வைத்தான்.. அதை பார்த்த அந்த நொடியில் என் அப்பா பேச்சு இழந்து கை கால் வெளங்காமல் படுக்கையில் விழுந்தார்.. சித்தப்பா இறந்த விஷயம் கேட்டு என் பாட்டி இறந்தாங்க.. அடுத்து கொஞ்ச நாளில் என் தாத்தா, அடுத்து கொஞ்ச வருஷத்தில் என் அப்பா னு நாலு உயிர்களை காவு வாகிட்டான் அவன்.. ஆண் துணை இல்லாத பெண் அனுபவிக்கும் அணைத்து துன்பங்களையும் அனுபவித்து என் அம்மா என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க..” என்று கண்கள் சிவக்க சொல்லி முடித்தவன் தண்ணீர் அருந்தி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்பான குரலில், “இப்போ புரியுமே நான் ஏன் கடைசி நிமிஷத்தில் கல்யாணம் செய்தேன் னு”

 

“நீங்க சொல்றதை உண்மை னு நான் எப்படி நம்புறது?”

 

தோள்களை குலுக்கிய புகழ்வேந்தன், “என்னோட பூர்வீக ஊர் XXX.. மதுரை பக்கம் இருக்கும் சின்ன கிராமம்.. அங்கே போய் விசாரித்தால் தெரிய போகுது.. ஒருவேளை நான் யாரையும் ஏற்பாடு செய்திருந்தால் னு நீங்க சந்தேகப் படலாம்.. ஊரே பொய் சொல்லாதே! அதுக்கு மேல் நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்”

 

“நீங்க அதிகம் பேச மாட்டீங்க னு கேள்விப் பட்டேன்.. ஆனா என் கேள்வி ஒவ்வொன்றுக்கும் பெரிய விளக்கமா தரீங்க.. பொதுவா தப்பு செய்றவங்க தான் அதிகமா பேசுவாங்க அவங்க தப்பை மறைக்க”

 

“அதிகம் பேச மாட்டேன் னு இல்லை.. தேவை இல்லாமல் பேச மாட்டேன்.. அண்ட் எதையும் தெளிவா பேசுறது என் பழக்கம்.. அதிகமா என்னை கேள்வி கேட்கும் படி வச்சுக்க மாட்டேன்”

 

“செய்றதை கேள்வி கேட்கும் படி வச்சிக்காம பக்காவா செய்வீங்க” என்று பொடி வைத்து பேச,

 

அதை புரிந்துக் கொண்ட புகழ்வேந்தன் அழுத்தமான குரலில், “செய்றதை சரியா செய்வேன் னு சொல்றேன்” என்றான்.

 

“ஓகே மிஸ்டர் புகழ்வேந்தன்.. தேங்க்ஸ் பார் யுவர் கோ-ஆபரேஷன்.. மீண்டும் சந்திக்கலாம்”

 

புகழ்வேந்தன் தலையசைக்க, வெற்றிவேல் கிளம்பினான்.

 

வெற்றிவேல் அடுத்து சென்றது மித்ராணியின் ஆடை தொழிலகத்திற்கு……….      

 

                 விசாரணை தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!