Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 34(அ)

பிடித்தம் 34

அடுத்த நாள் காலை காவல்துறை கமிஷ்னர் அறை:

 

கமிஷ்னர், “என்ன ஸ்டேடஸ்?”



Advertisement

 

வெற்றிவேல்,

“1. மனோஜோட டெட் பாடி புகழ்வேந்தன் கட்டிட்டு இருக்கும் 100 ஏக்கர்ஸ் டவுன்ஷிப் இடத்தில் இருக்கும் பாழடைஞ்ச கிணற்றில் கிடைத்தது சார்.. அந்த கிணறு கொஞ்சம் உள்ள தள்ளி ஆள் அரவமற்ற இடத்தில் தான் இருக்குது.. ரெண்டு பேர் தண்ணியடிக்க அங்கே ஒதுங்கினப்ப ஸ்மெல் வந்து பார்த்தப்ப டெட் பாடியை பார்த்து இன்பார்ம் பண்ணியிருக்காங்க..

Advertisement

 

Advertisement

  1. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் படி மனோஜ் இறந்து ரெண்டு நாட்கள் ஆகுது சார்.. பின் மண்டையில் அடிபட்டு இறந்திருக்கிறார்.. கொன்னுட்டு டெட் பாடியை கிணற்றில் போட்டு இருக்காங்க.. ஒருவேளை உயிருடன் இருக்கும் போது கிணற்றில் போட்டு இருந்தால் லங்க்ஸ்ஸில்(Lungs) தண்ணி கலெக்ட் ஆகி மூச்சு திணறி சாகவும் வாய்ப்பு இருக்குது பட் பின்னந்தலையில் அடிபட்டதால் தான் உயிர் போயிருக்குது.. ஸோ மனோஜ் இறந்த பிறகு டெட் பாடியைத் தான் கிணற்றில் கொண்டு வந்து போட்டு இருக்காங்க.. மிஸ்டர் புகழ்வேந்தனை மாட்டி விட பர்பஸ்ஸா இப்படி பண்ணி இருக்கலாம், இல்லை புகழ்வேந்தனுக்கும் கிருபாகரனுக்கும் ஆகாது என்பதை தெரிந்த கொலையாளி தான் தப்பிக்க இப்படி பண்ணி இருக்கலாம், இல்லை அவுட்டர் பிளேஸில் ஆள் அரவமற்று உள்ளே தள்ளி இருக்கும் கிணறு னு சாதாரணமா அந்த கிணற்றில் போட்டு இருக்கலாம், இல்லை மிஸ்டர் புகழ்வேந்தன் இடத்தில் இருந்தால் ‘அவரே செய்துட்டு அவர் இடத்திலேயே போட மாட்டார்’ னு நாம நினைப்போம் னு நினைத்து புகழ்வேந்தனே கொலையை செஞ்சுட்டு இப்படி பண்ணி இருக்கவும் வாய்ப்பு இருக்குது..

 

  1. மனோஜ் இறந்த நேரம் ஈவ்னிங் 6 மணியில் இருந்து 8 மணிக்குள் இருக்கும் னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

 

  1. மனோஜ் கார் டெட் பாடி இருந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் குறுக்கு சந்து ரோட்டில் நிறுத்தி வைக்கபட்டிருந்தது.. கிணறுக்கு பக்கத்தில் இருக்கும் கார் டயர் தடம் மனோஜ் காரின் டயர் தான்.. ஸோ டெட் பாடியை மனோஜோட காரில் தான் கொண்டு வந்திருக்காங்க.. ஒரு டோல் கேட் வழியா தான் புகழ்வேந்தன் டவுன்ஷிப் போகணும்.. மனோஜ் கார் டோல் கேட் தாண்டிய நேரம் 7.40, ஸோ 6.45ல் இருந்து  7.40க்குள் தான் மனோஜ் இறந்து இருக்கணும்.. டோல் கேட் சிசிடிவி புட்டேஜ் அண்ட் ட்ராபிக் சிக்னல் புட்டேஜ் பார்த்தோம், நோ யூஸ்.. மனோஜ் கார் கண்ணாடி எல்லா இடத்திலும் மூடி தான் இருந்தது.. டோல் கேட்டில் கண்ணாடியை திறந்திருந்தாலும் காரை ஓட்டிய ஆள் கேப்(Cap) போட்டிருந்ததால் முகம் தெரியலை..

டவுன்ஷிப் முன்பக்க வழியா கிணற்றுக்குப் போகலை ஏன்னா அங்கே செக்குரிட்டி இருக்கிறார்.. சிசிடிவி கேமரா இருக்குது அண்ட் வேலை செய்றவங்க தங்கி இருக்கிறாங்க.. அந்த நூறு ஏக்கரில் கிணறு இருக்கும் இடம் மரம் செடி கொடி னு நிறைய இருக்குது.. டவுன்ஷிப் ப்ராஜெக்ட்டில் அந்த இடம் இன்டுவீசுவல் வில்லாக்கு ஒதுக்கி இருக்காங்க.. முன் பக்கம் பிளாட்ஸ் அடுத்து ஸ்விம்மிங் பூல், டென்னிஸ் கோர்ட், கிளப் ஹௌஸ் கன்ஸ்ட்ரக்ஷன் போயிட்டு இருக்குது.. இதையெல்லாம் முடிச்சிட்டு பின்னாடி இருக்கும் இடத்தில் தான் வில்லா வேலையை ஆரம்பிக்கணும் னு இதை இப்போதைக்கு கிளியர் செய்யலை..

Advertisement

 

  1. மனோஜோட மொபைல் கடைசி ஆக்டிவா இருந்த டவர் கவர் பண்ணும் இடங்கள் டவுன்ஷிப் இருக்கும் இடத்திற்கு எதிர்புறத்தில் இருக்கிறது.. ஆனா புகழ்வேந்தன் மனைவி மித்ராணியோட கார்மென்ட் பக்கத்தில் இருக்குது.. மொபைல் கடைசியா அக்டிவா இருந்த நேரம் 7.10.. மனோஜ் மெயின் ஆபீஸ்ஸில் இருந்து கிளம்பிய இருவது நிமிஷத்தில் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது..”

 

கமிஷ்னர், “ஓகே.. வாட் நெக்ஸ்ட்?”

 

வெற்றிவேல், “சஸ்பெக்ட்ஸ் புகழ்வேந்தன், மித்ராணி, பிரசாத், தர்மராஜ், கல்யாண்.. மிஸ்டர் கிருபாகரனுக்கு மனோஜ் இறப்பதால் எந்த லாபமும் இல்லை.. அவரோட பிஸ்னெஸ் லாஸ் ஈடு செய்ய மனோஜ் மேல் இன்சுரன்ஸ் கூட இல்லை பட் ஸ்டில் ஹீ இஸ் அண்டர் அப்சர்வேஷன்.. இவங்க எல்லோரும் இல்லாம வேற யாராவது கூட இருக்கலாம்.. முதல்ல இவங்க எல்லோரையும் என்னோட இடத்தில் விசாரிக்கணும்.. மனோஜ் காரியம் இருப்பதால் கிருபாகரன் அண்ட் பிரசாத்தை மட்டும் அவங்க வீட்டில் விசாரிக்கணும்”

 

“ஓகே.. கோ அஹெட்.. பட் சீக்கிரமா குற்றவாளியை கண்டு பிடிக்கப் பாருங்க.. மீடியாவை இன்னைக்கு ஒரு நாள் தான் நிறுத்தி வைக்க முடியும்..”

 

“ஓகே சார்.. நாளைக்கு ஈவ்னிங் வரை மீடியாவை ஹோல்ட் பண்ணுங்க சார்.. அதற்குள் குற்றவாளியைக் கண்டு பிடிச்சிடுவேன்”

 

“ஓகே.. கேரி ஆன்”

 

“எஸ் சார்” என்று கூறி வணக்கம் வைத்து வெளியேறினான்.

 

வெற்றிவேல் வெளியே வந்ததும் அவனுக்காக காத்திருந்த சந்தோஷும் அர்ஜுனும் அவன் அருகே வந்தனர்.

 

வெற்றிவேல் நடந்தபடி, “நான் கேட்ட டிடேல்ஸ் என்னாச்சு?”

 

சந்தோஷ் ஒரு கோப்பியத்தை கொடுத்தபடி, “மித்ராணி சொன்னது போல் புகழ்வேந்தன் கல்யாணத்தை பக்காவா பிளான் பண்ணி இருக்கார்.. கேமரா மேன் புகழ்வேந்தன் ஆள்.. ஸோ எடிட்டட் வீடியோ தான் கிடைத்தது.. அது பைலில் இருக்குது சார்.. கல்யாணத்துக்கு வந்த சில பிஸ்னெஸ் பீபிளை தான் விசாரிக்க முடிந்தது.. அதில் இருந்து தெரிந்தது.. புகழ்வேந்தன் ஏதோ செய்து தான் மித்ராணியை கல்யாணம் செய்து இருக்கார்.. முதலில் கிருபாகரன்…………”

 

“இங்கே வேணாம்.. ரிப்போர்ட் பைலில் இருக்குது தானே?”

 

“எஸ் சார்..”

 

“ஓகே.. இதை நான் பார்த்துக்கிறேன்..” என்றவன் அர்ஜுனை பார்க்க,

 

அர்ஜுன் ஒரு பென்-ட்ரைவ் கொடுத்தபடி, “கிருபாகரன் ஆபீஸ் உள்ளே அண்ட் வெளியே இருக்கும் சிசிடிவி புட்டேஜ் இதில் இருக்குது சார்”

 

அதை வாங்கிய வெற்றிவேல், “ஓகே.. புகழ்வேந்தன் மித்ராணி தர்மராஜ் கல்யாண் நாலு பேரும் ஷார்ப் 10.3௦க்கு என்னோட ஆபீஸ்ஸில் விசாரணைக்கு இருக்கணும்.. ஏற்பாடு பண்ணுங்க.. ஒருத்தர் வரது இன்னொருத்தருக்குத் தெரியக் கூடாது.. புகழ்வேந்தனும் மித்ராணியும் சேர்ந்து வருவாங்க ஸோ அது ஓகே மத்தபடி..” என்று நிறுத்தி அவர்களை பார்க்க,

 

புரிந்தது என்பது போல் தலையை ஆட்டி, “ஓகே சார்” என்று கூறி சந்தோஷும் அர்ஜுனும் கிளம்ப, வெற்றிவேல் தன் அலுவலகம் நோக்கிச் சென்றான்.

 

 

 

நேரம்: காலை 10.30  இடம்: ACP வெற்றிவேல் அலுவலகம்

புகழ்வேந்தன் மித்ராணி தர்மராஜ் மற்றும் கல்யாண் தனி தனி விசாரணை அறைகளில் தனியாக அமர்ந்திருந்தனர். முதல் பத்து நிமிடங்களுக்கு அறையில் இருந்த நிழற்படக் கருவி வழியாக நால்வரின் செயல்களை கவனித்துக் கொண்டிருந்தான் வெற்றிவேல். கல்யாண் மட்டும் சிறு பதற்றத்துடன் காணப் பட மற்றவர்கள் இயல்பாக இருப்பது போல் தான் தெரிந்தது.

 

வெற்றிவேல் முதலில் புகழ்வேந்தன் இருந்த அறைக்கு சென்றான். முன்தினம் இலகுவாக சென்றது போல் அல்லாமல் விறைப்புடனே சென்று புகழ்வேந்தன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

 

புகழ்வேந்தன் தீர்க்கமான பார்வையுடன் வெற்றிவேலை எதிர் கொண்டான்.

 

வெற்றிவேல், “சொல்லுங்க புகழ்வேந்தன்”

 

“என்ன சொல்லணும்?” என்றவன் வெற்றிவேல் பேசும் முன், “சுத்தி வளைக்காம நேரிடையா கேள்வி கேட்டால் உங்க நேரமும் வீணாகாது என் நேரமும் வீணாகாது”

 

“மனோஜ் டெட் பாடி உங்க டவுன்ஷிப்பில் கிடைத்து இருக்கிறது.. விளக்கம் கொடுங்க”

 

“சிம்பிள்.. யாரோ மனோஜை கொன்னுட்டு என்னை மாட்டி விட இப்படி செய்திருக்காங்க.. இட்ஸ் அ கிளியர் ட்ராப் பார் மீ”

 

“இப்படி சொல்லி தப்பிச்சிக்கலாம் னு நினைத்து நீங்களே மனோஜை கொன்னு உங்க இடத்துலேயே போட்டு இருந்தா?”

 

உதட்டை சிறிது வளைத்த புகழ்வேந்தன், “எங்க குடும்பத்தை சிதைத்த அவனோட அப்பனையே நான் கொல்லலை! இவனை ஏன் கொல்லப் போறேன்?”

 

“கிருபாகரனை பழி வாங்க செய்திருக்கீங்க.. உயிர் போறதை விட நெருங்கிய உறவின் இழப்பு தரும் வலியை அவருக்கு கொடுக்க நீங்க தான் மனோஜை கொலை செய்திருக்கிறீங்க”

 

“மனோஜின் மறைவு அவனுக்கு வலியை தரும் னு நினைக்கிறீங்களா? நெவர்.. அவன் மனித ரூபத்தில் இருக்கும் சுயநல மிருகம்.. மிருகத்திற்கு கூட அதோட குடும்பத்தின் மீது பாசம் இருக்கும்.. இவன் அதிலும் விதி விலக்கு”

 

“பேச்சு கிருபாகரன் பத்தி இல்லை”

 

“மனோஜ் எப்போ இறந்தான்?”

 

“மனோஜை கொன்ன உங்களுக்கு தெரியாதா?”

 

“நான் கொன்றிருந்தால் தானே!”

 

“எதை வைத்து நீங்க இந்த கொலையை செய்யலை னு சொல்றீங்க?”

 

“அவன் இறந்த நேரத்தை முதல்ல சொல்லுங்க”

 

“அதிகாரம் தூள் பறக்குது! இது உங்க ஆபீஸ் இல்லை”

 

“இது உங்க இடம் னு எனக்கு நல்லாவே தெரியும் அண்ட் நான் அக்யுஸ்ட் இல்லை..”

 

“நீங்க அக்யுஸ்ட்டா இல்லையா னு நான் தான் சொல்லணும்”

 

“அக்கியுஸ்ட் இல்லை னு அப்பறம் சொல்லுங்க.. இப்போ மனோஜ் இறந்த நேரத்தை சொல்லுங்க”

 

“இரண்டு நாட்கள் முன் சாயுங்காலம் ஆறு மணியில் இருந்து எட்டு மணிக்குள் மனோஜ் இறந்து இருக்கிறார்”

 

“அந்தே நேரத்தில் நான்…………….”

 

“உங்க கார்மென்ட்டில் பயர் அக்சிடென்ட் னு நீங்க அங்கே இருந்தீங்க னு எனக்கும் தெரியும்.. மனோஜை நீங்களே உங்க கையால் கொன்றிருக்கணும் னு இல்லை, ஆள் ஏற்பாடு பண்ணி கொன்னிருக்கலாமே! நேத்து உங்க மனைவியை விசாரித்த போது உங்க கார்மென்ட்டில் நடந்த பயர் அக்சிடென்ட்டுக்கு மனோஜ் தான் காரணம் னு சொன்னாங்க.. அதன் விளைவா கூட இந்த கொலை இருக்கலாமே!”

 

வெற்றிவேலை நேர்கொண்ட பார்வையுடன் மிக அழுத்தமாக பார்த்த புகழ்வேந்தன், “கிருபாகரன் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க?”

 

வெற்றிவேல் அடக்கப்பட்ட கோபத்துடன், “புகழ்வேந்தன் மைன்ட் யுவர் வர்ட்ஸ்”

 

புகழ்வேந்தன் அசையாத பார்வையுடனும் அழுத்தத்துடனும், “இப்போ உங்களுக்கு இருக்கும் அதே கோபம் தான் எனக்கும் இருக்குது.. அதாவது செய்யாத குற்றத்தை செய்ததா சொல்றப்ப வர தார்மீக கோபம்”

 

“உங்க வார்த்தை ஜாலத்தை என்னிடம் காட்டாதீங்க.. ஒரு சின்ன எவிடன்ஸ் கிடைச்………………..”

 

“முதல்ல அதை கண்டு பிடிங்க.. அப்பறம் என்னை மிரட்டுங்க”

 

வெற்றிவேல் முறைத்துவிட்டு எழுந்து கதவைத் திறக்க, புகழ்வேந்தன், “என் வைப் எங்கே?”

 

“வருவாங்க” என்று கூறி கதவை அடைத்துவிட்டு வெளியேறியவன் அடுத்து சென்றது மித்ராணி இருந்த அறையினுள். 

 

 

மித்ராணி எதிரே அமர்ந்த வெற்றிவேல், “மனோஜை எந்த ஆயுதத்தை வைத்து கொன்னீங்க?”

 

சிறு அலட்சியத்துடன் அமர்ந்திருந்த மித்ராணி நிமிர்ந்து அமர்ந்தபடி, “வாட்? கம் அகேன்”

 

வெற்றிவேல் அழுத்தமான குரலில் நிதானமாக அதே கேள்வியை கேட்டான்.

 

மித்ராணி கோபத்துடன், “என்ன உளறல் இது? நான் ஏன் மனோஜை கொல்லப் போறேன்?”

 

“புகழ்வேந்தனை பழி வாங்க”

 

“குட் ஜோக்.. நான் ஏன் வேந்தனை பழி வாங்கப் போறேன்?”

 

“பட் திஸ் இஸ் நாட் அ ஜோக் டைம்” என்று சற்று குரலை உயர்த்தி கூறிய வெற்றிவேல், “நீங்க நேத்து என்னிடம் சொன்னது பொய்.. நீங்க புகழ்வேந்தனை காதலிக்கவே இல்லை.. மனோஜைத் தான் காதலிச்சு இருக்கிறீங்க.. உங்களுக்கும் மனோஜுக்கும் தான் கல்யாணம் முடிவாகி இருந்தது.. பட் கடைசி நேரத்தில் புகழ்வேந்தன் என்னவோ செய்து உங்களை கல்யாணம் செய்திருக்கிறார்.. ஸோ அவரை பழி வாங்க, மனோஜ் கொலையில் அவரை மாட்டி விட அவர் இடத்தில் டெட் பாடியை போடச் சொல்லி இருக்கிறீங்க”

 

“இன்ட்ரெஸ்ட்ங் ஸ்டோரி”

 

“கதை இல்லை.. நான் சொன்னதுக்கு ஆதாரம் என்னிடம் இருக்கிறது”

 

“உங்க கதையில் ஒரு லாஜிக் இடிக்குதே! நீங்க சொல்ற கதையில் நான் மனோஜை காதலிக்கிறேன்.. அப்பறம் எப்படி நானே மனோஜை கொலை செய்வேன்?”

 

“ஏதோ ஒரு விஷயத்திற்காக மனோஜ் உங்களை புகழ்வேந்தனை கல்யாணம் செய்யச் சொல்லி போர்ஸ் பண்ணி இருக்கார்.. ஸோ காதல் இருந்த இடத்தில் வெறுப்பும் கோபமும் வந்திருக்கிறது.. மனோஜ் புகழ்வேந்தன் ரெண்டு பேர் மேலயும் உங்களுக்கு கோபம்.. ஸோ மனோஜை கொன்று பழியை புகழ்வேந்தன் மேல் போட்டுட்டீங்க..”

 

கை தட்டியபடி, “வாவ்.. செம சார்.. நீங்க பேசாம கதை எழுதலாம்”

 

அவளை கடுமையாக முறைத்த வெற்றிவேல், “ஆதாரம் இல்லாமல் நான் எதுவும் பேச மாட்டேன்”

 

“அப்படியா!! மனோஜ் வேந்தனை கல்யாணம் பண்ணச் சொல்லி என்னை போர்ஸ் பண்ணதுக்கும் மனோஜ் கொலைக்கும் ஆதாரம் வச்சிருக்கீங்களா? நடக்காத விஷயத்திற்கு எப்படி ஆதாரம் வச்சிருப்பீங்க?”  

 

“உங்க கல்யாணத்தன்னைக்கு முதலில் கிருபாகரன் டென்ஷனா மனேஜர் ரூமில் இருந்து வெளியே வந்து மணமகன் மனோஜ் ரூம் போய் இருக்கார்.. கொஞ்ச நேரத்தில் மனோஜும், அழுதபடி மிசஸ் கிருபாகரனும் மணப்பெண் ரூம் அதாவது உங்க ரூமுக்கு வந்து இருக்காங்க.. ரூமில் இருந்தவங்களை வெளியே போக சொல்லிட்டு உங்களுடனும் உங்க அம்மாவுடனும் ஏதோ பேசி இருக்காங்க.. அப்பறம் நீங்க புகழ்வேந்தன் அண்ட் மனோஜ் கூட தனியா பேசி இருக்கிறீங்க.. அப்பறம் புகழ்வேந்தன் உங்க அம்மா கூட தனியா பேசி இருக்கார்.. அப்பறம் புகழ்வேந்தனுடன் உங்க கல்யாணம் நடந்து இருக்குது.. கொஞ்ச நேரத்தில் கிருபாகரன் குடும்பத்துடன் உங்க அம்மா கிளம்பிட்டாங்க.. அடுத்து கொஞ்ச நேரத்தில் நீங்க தனியா கிளம்பிட்டீங்க.. நீங்க முக்கியமான பிஸ்னெஸ் டீல் சைன் பண்ண கிளம்பினதா புகழ்வேந்தன் சொல்லி இருக்கார்.. பட் அன்னைக்கு எந்த பிஸ்னெஸ் டீலிங்கும் நடக்கலை.. தென் உங்க கல்யாண வீடியோ பார்த்தேன்.. புகழ்வேந்தன் மகிழ்ச்சியுடன் தாலி கட்ட நீங்க அவரை முறைச்சிட்டு தான் இருந்தீங்க.. உங்க கல்யாணத்தில் நீங்க சிரிக்கவே இல்லை..”

 

“நீங்க சொன்ன எல்லாமே சரி தான்.. மேனேஜர் ரூமில் வேந்தன் தான் மனோஜ் அப்பாவுடன் பேசியது.. என்னை வேந்தனுக்கு கல்யாணம் செய்து வைக்கலை என்றால் அவர் செய்த பல தில்லாலங்கடி வேலைகள் ஆதாரத்துடன் வெளி வரும் னு சொன்னார்…………………..”

 

“ப்ளக் மெயில் செய்து இருக்கார்.. அது சட்டபடி குற்றம்……………..”

 

“மிஸ்டர் கிருபாகரனை கம்பளைன்ட் கொடுக்க சொல்லுங்க”

 

“சரி அதை விடுங்க.. மேல சொல்லுங்க”

 

“ஸோ வேறு வழி இல்லாம எங்க கல்யாணம் நடக்க சம்மதிச்சவர் அத்தை கிட்டயும் மனோஜ் கிட்டயும் விஷயத்தை சொன்னார்.. அவங்க ரெண்டு பேரும் என்னிடம் வந்து பேசினாங்க.. மனோஜ் என்னுடன் தனியா பேசணும் சொன்னான்.. நான் என் கூட வேந்தனும் இருப்பார் னு சொல்லி வேந்தனை கூப்பிட்டு விட்டேன்.. என் மனசை மாத்த மனோஜ் ட்ரை பண்ணான் பட் முடியலை.. அப்பறம் வேந்தன் என் அம்மா கிட்ட தனியா பேசி அவங்க அண்ணன் செய்த மோசடிகளை எடுத்துக் கூறினார்.. அப்பறம் எனக்காக அரை மனசுடன் கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க.. கல்யாணம் முடிந்ததும் கொஞ்ச நேரத்தில் அம்மா கிளம்பிட்டாங்க..

நீங்க சொன்னது போல் என் கல்யாணத்தில் நான் சிரிக்கவே இல்லை தான் அண்ட் தாலி கட்டும் போது கூட வேந்தனை முறைச்சிட்டு தான் இருந்தேன்.. அதுக்கு காரணம் வேந்தன் தான்.. கடைசி நிமிஷம் வரை என்னை டென்ஷனிலேயே இருக்க வச்சிட்டார்.. அதான் அவர் மேல் எனக்கு கோபம்”

 

“மண்டபத்தை விட்டு வெளியே போற அளவுக்கா கோபம்?” என்று நக்கலாக வினவ,

 

அவள் அசராமல், “ஆமா” என்றாள்.

 

“நீங்க ரொம்ப கோபமானவர் போல!” என்று மீண்டும் நக்கலாக கூறியவன், “ஏன் சொல்றேனா! போராடி காதல் கல்யாணம் செஞ்சவங்களுக்குள் இருக்கும் சந்தோசம் இல்லாம உங்க கணவரை வாட்டி எடுத்து இருக்கிறீங்க.. வேலைக்காரங்க முன்னாடி மரியாதை இல்லாம பேசி இருக்………..”

 

“எங்க பெர்சனல் விஷயத்தை பப்ளிக்கா பேசுறதில்…………”

 

“என்னிடம் தானே பேசிட்டு இருக்கிறீங்க”

 

“நான் பேசுறதை ரெக்கார்ட் பண்ணிட்டு தானே இருக்கிறீங்க! வெளியே இருக்கிறவங்களும் கேட்டுட்டு தானே இருக்கிறாங்க.. சண்டைகளும் சீண்டல்களும் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் கணவன் மனைவிக்குள் சகஜம் தான்.. வாட்டி எடுத்தேன்னு சொல்றது சும்மா நீங்க போட்டு வாங்க ட்ரை பண்ண.. நான் அப்படி எதுவும் செய்யலை.. மரியாதை இல்லாம பேசினேன் னு சொன்னீங்களே! ஒருமையில் பேசி இருப்பேனே தவிர வேந்தன் மதிப்பு குறைவது போல் யார் முன்னாடியும் நான் பேசியது இல்லை.. இப்போ இருக்கிற ஜெனரேஷனில் வைப் ஹஸ்பண்டை ஒருமையில் பேசுறது சகஜம் தான்.. வேந்தனும் என் அத்தையுமே அதை ஒன்னும் சொல்லலை.. அதில் உங்களுக்கு என்ன சார் பிரச்சனை?” என்றாள் கோபக் குரலில்.

 

முன்பு நிவேதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தங்கையுடன் மித்ராணியை பார்த்த பொழுதில் இவனுடன் மித்ராணி சண்டை போட்ட சம்பவம் நினைவிற்கு வர வெற்றிவேல் மனதினுள், ‘ஜக்கம்மா மாறவே இல்லை’ என்று நினைத்துக் கொண்டான்.  

 

வெற்றிவேல், “நேத்து நீங்க கேட்ட கேள்விக்கு இப்போ பதில் சொல்றேன்.. மனோஜ் உங்க கிட்ட தான் கடைசியா பேசி இருக்கார்.. நீங்க மனோஜை 6.12க்கு காள் பண்ணி இருக்கிறீங்க.. நாப்பது செகண்ட் பேசி இருக்கிறீங்க.. அப்பறம் மனோஜ் உங்களுக்கு ‘பேச சொல்லி’ மெசேஜ் பண்ணி இருக்கார்.. திரும்ப மனோஜை காள் பண்ண நீங்க ஒரு நிமிஷம் பேசி இருக்கிறீங்க.. உங்களுடன் பேசி முடித்ததும் மனோஜ் 6.45க்கு ஆபீஸ்ஸில் இருந்து கிளம்பி இருக்கார்.. இடையில் யாருடனும் அவர் பேசலை.. அவர் ரூமுக்கும் யாரும் போகலை, காரில் கிளம்பும் வரை அவர் யாருடனும் பேசலை.. சிசிடிவி புட்டேஜ் பார்த்துட்டுத் தான் சொல்றேன்..

அண்ட் 6.30க்கு கார்மென்ட்டில் இருந்து கிளம்பிய நீங்க எட்டு மணிக்கு தான் வீட்டுக்கு போயிருக்கீங்க.. ஹெவி டிராபிக் இருந்தாலும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் உங்க வீட்டிற்கு போய்டலாம்.. ஆனா உங்களுக்கு ஒன்னரை மணி நேரம் ஆகி இருக்கிறது.. அன்னைக்கு டிராபிக்கும் அதிகமா இல்லை.. ஸோ நீங்க தான் மனோஜை எங்கேயோ வர சொல்லி அவரைக் கொன்னு பழியை புகழ்வேந்தன் மேல் போட்டு இருக்கிறீங்க”

 

“மனோஜ் ஆபீஸ்ஸில் இருந்து கிளம்பிய பிறகு ரோட்டில் வழியில் யாருடனும் பேசி இருக்கலாமே? நான் அவனை எங்கேயும் வரச் சொல்லலை.. என் கல்யாணத்தன்னைக்கு தான் அவனை கடைசியா பார்த்தேன்.. மனோஜுடன் பேசிட்டு நான் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் என் கார் டயர் பஞ்சர் ஆகிடுச்சு.. அதை சரி செய்து வீட்டுக்கு போக லேட் ஆகிடுச்சு”

 

“நம்புறது போல் இல்லையே! அப்படியே பஞ்சர் ஆகி இருந்தால் ஆட்டோவில் போய் இருக்கலாமே?”

 

“ஆட்டோவில் தான் போனேன்.. மெகானிக் வர லேட் ஆகிடுச்சு.. கார் சாவியை மெகானிக் கிட்ட கொடுத்துட்டு ஆட்டோவில் வீட்டுக்கு போனேன்.. கார் டயரை மாத்திட்டு மெகானிக் காரை வீட்டில் கொண்டு வந்து விட்டார்.. பில் என்னிடம் இருக்குது.. பஞ்சர் ஆன ஸ்டெப்னி என் காரில் தான் இருக்குது”

 

“நீங்களே டயரை பஞ்சர் ஆக்கவும் பால்ஸ் பில் ரெடி பண்ணவும் எவ்ளோ நேரம் ஆகும்!”

 

“மெகானிக் கிட்ட கேளுங்க”

 

“மெகானிக்கை நீங்க இப்படி சொல்ல சொல்லி இருக்கலாமே!”

 

“நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்” என்று முறைப்புடன் கூறியவள், “நீங்க சொல்றபடி வேந்தனை நான் காதலிக்கலை னா கல்யாணம் முடிந்ததும் நான் என் அம்மா வீட்டுக்கு தானே போயிருப்பேன்?”

 

“ஏன் னா உங்க அம்மா மேல் நீங்க ஏதோ கோபத்தில் இருந்து இருக்கிறீங்க.. கல்யாணம் ஆனதில் இருந்து உங்க அம்மா கிட்ட போனில் கூட பேசலை நீங்க.. நேத்து தான் பேசி இருக்கிறீங்க..”

 

“ஆமா.. என் அம்மா மேல் கோபத்தில் தான் இருந்தேன்.. அவங்க எங்க காதலை ஏத்துக்கலை.. கண் மூடித்தனமா அண்ணன் மேல் பாசம் வச்சு ப்ளைண்டா அவருக்கு தான் சப்போர்ட் பண்ணாங்க.. அவங்க முழு மனசுடன் எங்க காதலை ஏத்துக்கிட்டதும் அவங்களிடம் பேசினேன்..”

 

“அப்படியே உங்க காதல் கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்! எங்கே முதலில் சந்திச்சிக்கிட்டீங்க? எப்போதில் இருந்து இந்த தெய்வீக காதல்?” என்று நக்கலுடன் வினவினான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!