Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 35

 

? எந்தன் உயிர்
மூச்சு நீயாக
இருக்கவே
உனக்கான
வாழ்வும்
என்னுடனே
அமைந்துள்ளது ?

   ஸ்ருத்திக்காவை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் உடனே அவளை ஆப்ரேஷன் தேட்டர் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பெற்றாள்.

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆப்ரேஷன் நடக்கப் பட உதயும் நந்தினியும் அவர்கள் சொல்ல போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.



Advertisement

நந்தினி பயத்தில் பித்து பிடித்தவள் போல் மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள். அவளின் நிலையை கவனிக்கும் நிலையில் உதயும் இல்லை. அவன் வேண்டுதல் எல்லாம் சிகிச்சையில் இருந்த அவன் தங்கை என்று நினைக்கும் ஸ்ருத்திக்காவின் மீது இருந்தது.

சரவணனும் ஆதியும் வேகத்துடன் மருத்துவமனையை அடைந்திருந்தனர். ஆதி கூடவே சிந்துவும் வந்திருந்தாள்.

மருத்துவமனையில் இருந்த ரிசப்ஷனிடம் ஸ்ருத்திக்காவின் பெயர் சொல்லி கேட்க

Advertisement

” சார் அவுங்களுக்கு இப்போ ஆப்ரேஷன் போய்டு இருக்கு ” என்றாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.

Advertisement

அதை கேட்ட சரவணனுக்கு உயிரே போனது போல் இருந்தது. வேகமாக ஆப்ரேஷன் நடக்கும் இடத்திற்கு சென்றான்.

அங்கே உதயும் நந்தினியும் இருக்கிறதை கண்டவன் அவர்களிடம் வேகமாக வந்து ” உதய் என்னோட ஸ்ருதிக்கு என்னா ஆச்சி எதுக்கு அவள ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கீங்க ” என்று மூச்சிரைக்க கேட்க

அதற்குள் ஸ்ருதிக்கு ஆப்ரேஷன் முடிவடைய மருத்துவர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.

Advertisement

உதய் ஆதி சரவணன் என மூவரும் டாக்டரின் முன் போய் நின்று ” என்னோட ஸ்ருதிக்கு ஒன்னும் ஆகலல அவ நல்லா தானே இருக்கா டாக்டர் ” என்று பதற்றத்துடன் கேட்க..

” நீங்க பேஷண்ட்க்கு என்ன வேணும் ” என்று டாக்டர்களில் ஒருவர் கேட்க

” நான் அவள கல்யாணம் பண்ணிக்க போறவன் டாக்டர் ” என்றான் சரவணன்.

” அப்போ நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் என்கூட ரூம்க்கு வாங்க ” என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்று விட உதயும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டன் பின் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

சிந்து நந்துவின் அருகில் அமர்ந்துகொண்டு ஆறுதலாக இருந்தாள்.

காலை எட்டு மணியாக சோம்பல் முறித்த படி எழுந்த சுமி தனக்கு அருகே படுக்கையில் இடம் காலியாக இருக்கவே சூர்யாவை தேட அவனோ சோஃபாவில் கடினப் பட்டு உறங்கிக் கொண்டிருந்தான்.

அதனை கண்டு வாய் விட்டு சிரிக்க சூர்யா உறக்கம் கலைவதை அறிந்த அவனது மனையால் அமைதியாக சிரிக்க தொடங்கினாள். பின் அவள் அவளது துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டாள்.

குளித்து முடித்து வெளியே வந்தவள் அடர் பச்சை நிறத்தில் கொண்ட பட்டு புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு தலை முடியை உலார்த்த துண்டியை கழட்ட போக அப்போதும் உறங்கிக் கொண்டிருந்த கணவனின் அருகே சென்றவள் ” அச்சோ எவ்ளோ க்யூட்டா இருக்கீங்க சூர்யா . உங்கள அப்படியே ஆப்பிள் கடிச்சு சாப்பிடுற மாதிரி சாப்பிடனும் போல இருக்குங்க . நீங்க ரொம்ப நல்லவரு சூர்யா உங்கள மாதிரி ஒரு புருஷன் கிடைக்க நான் புன்னியம் பண்ணி இருக்கனும் . உங்கள மாதிரி ஒருத்தர நான் பார்த்ததே இல்ல. நந்தினி கூட கல்யாணம் வரைக்கும் வந்துட்டு உங்களுக்கு உண்மை தெரிஞ்சதுமே எனக்கு ஞாயம் கிடைக்கனும்னு நினைச்ச மனசு ரொம்ப பெருசு அது யாருக்குமே இருக்காது சூர்யா ” என்று உறங்கியவனிடம் பேச அவன் சினுங்கவும் அமைதியானவள் சூர்யா மீண்டும் உறங்கவும் சுமி தொடர்ந்தாள்.

” இது தான் விதி போல சூர்யா உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கனும்னு இருந்திருக்கு. அதான் நாலு வருஷத்துக்கு முன்னாடி உங்கள என் கண்ணுல காட்டியிருக்காரு. யார் மூலமோ என்னோட பெண்மை சூரையாட வேண்டிய நிலமை வந்தும் அது தானாகவே விலகி போய் நம்ம ரெண்டு பேருக்கும் தெரியாமல் நம்மல ஒன்னு சேத்துருக்கு . நாம இப்படி தான் சேரனும்னு விதி இருந்துருக்கு சூர்யா அதான் இப்போ நீங்க கட்டுன தாலி சுமந்து உங்களுக்கு மனைவியா இருக்கேன் ” என்றுவிட்டு அவன் நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுத்தாள்.

உடனே சூர்யா முழித்துக் கொள்ளவும் சுமி என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க ” இங்க என்ன பண்ணுற ” என்று தூக்க கலக்கத்தில் கேட்க‌

” அ..அத்..அது வ.. வந்து ” என்று சுமி இழுக்க

” நீ ஒழுங்கா பேசுவ தான . ஏன் கேக்குறேனா நாலு வருஷத்துக்கு முன்னாடி நீ பேசமாட்டுன்னே நான் பைத்திய காரணாட்டாம் நினைச்சிட்டு இருந்தேன் ” என்று அவன் வார்த்தைகளால் அவளை காயப் படுத்துக்கிறோம் என்று தெரியாமலே கேட்க..

இதனை கேட்ட சுமி என்னவென்று சொல்ல தெரியாமல் அமைதியாய் இருக்க ” நீ எதுக்கு அமைதியா இருக்க ஏதாவது பேசு ” என்று அவளது உள்மனது அவளை தூண்டி விட கண கச்சிதமாக வேலை பார்த்தது.

விருட்டென எழுந்தவள் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ” நான் உங்க கிட்ட சொன்னேனா எனக்கு பேச தெரியாதுன்னு ” என்று அவனை நெருங்கிய படி கேட்க

” இல்ல ” என்று தலை அசைக்க

அவனின் சட்டையை கொத்தாக பிடித்தவள் இந்தமுறை அவனை இன்னும் நெருக்கத்தில் கொண்டு வந்து ” சரி நீங்களாவது என்கிட்ட கேட்டிங்களா மிஸ்டர் இப்படி பேச தெரியுமா தெரியாதான்னு ” என்று நூல்லளவு இடைவேளையில் கேட்க சூர்யாவிற்கு தான் அவளின் இந்த நெருக்கம் அவனை என்னவோ செய்தது.

” இல்லை ” என்று தலையசைத்தவன் வேகமாக அவளை விட்டு பிரிந்து குளியலறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்.

சூர்யா ஓடியதை கண்டு நகைத்தவள் பின் பால்கனிக்கு சென்று கூந்தலை உலாற்ற தொடங்கினாள்..

குளியலறைக்குள் இருந்து வெளி வந்த சூர்யா ஹாயாகா முடியை கோதி விட்டபடி உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே என்று பாடிக்கொண்டே இருக்க

ஓ….. ஓ…….. ஓ…….. ஓ…… என்றபடி சுமி பால்கனியில் இருந்து உள்ளே வந்தாள்.

அவளை அங்கே எதிர்பாராதவன் ” இங்க என்ன பண்ற ” என்று படபடப்புடன் கேட்க

” இது என்ன கேள்வி இது நம்ம ரூம் நான் இங்க இருக்காம வேற எங்க இருக்கிறது ” என்று கேட்ட படியே கிட்ட வர

” ஹான் அது என்றவன் ” உடனே தன் கைகளால் அவன் வெற்று உடபினை மறைக்க முயன்றான்.

அப்போதே சுமித்ரா அவனது நிலையை கவனித்தாள். வெற்றுடமில் குளித்து முடித்த அடையாளத்திற்காக நீர் துளிகள் அவனது மார்பில் பட்டு தெறிக்க மழை நின்றவுடன் இழையினில் இருக்கும் கடைசி துளி மண்ணில் பட்டு தெறிப்பது போல் அவனின் கம்பிரமான உடலில் இருந்து பட்டு தெறித்தது. அவனையே இரசித்த படி ஒவ்வொரு படியாக முன்னேறி வர கீழே அவனால் சிந்திய நீர் துளிகள் ஒருங்கிணைந்து அவர்களையும் ஒருங்கிணைக்க முடிவெடுத்து இருக்க சரியாக சுமி அந்த துளிகள் மேலேயே காலினை வைத்து வலுக்கி விட ” அம்மா ” என்றவாறு கீழே விழ அவளின் அழிகிய வர்ணம் கொண்ட இடையை பிடித்து இறுக்கியவன் பேலன்ஸ் விட்டு அவள் மீதே விழுந்தான்.

விழுந்த வேகத்தில் அவளின் தேன் குவியலை இவன்  சுவைக்க நேர்ந்தது. சட்டென எழுந்தவன் ” சாரி ” என்று கூறி அவளை எழுப்பி விட அதற்குள் வெளியே இருந்து கங்கா கதவை தட்டினார்.

” சுமி ” என்று கதவை தட்ட ” இதோ அத்த வரேன் ” என்றவள் முன்னே செல்ல எத்தனிக்க அவளை போக விடாமல் தடுத்தவன் ” என்ன பண்றீங்க சூர்யா எதுக்கு இப்போ என்ன தடுத்து நிறுத்துறீங்க ” என்று கேட்டு அவனை பார்க்க அவனோ கட்டிலில் இருந்த பூவினை கீழே கொஞ்சம் அவன் மேலே கொஞ்சம் என போட்டுக் கொண்டு இருந்தான்.

இதனை கண்ட சுமி புரியாமல் என்ன செய்கிறான் என்று பார்வையை அவன் மீதே பதிக்க..

அவள் வகுட்டில் இருந்த குங்குமத்தை சிறிது கலைத்து மேலும் புடவையையும் விட்டவன் கொஞ்சம் அவன் மார்பிலும் அந்த குங்குமத்தை போட்டுக் கொண்டு ” இப்போ போ ” என்றான்.

” நாம தான் குளிச்சோடோமே சூர்யா அப்புறம் எதுக்கு இப்படி ” என்று கேட்க

” நான் நிறைய படம் பார்த்துருக்கேன். புடிக்காத கல்யாணம்னா இந்த மாதிரி தான் செய்வாங்க ” என்று சொல்லி முடிக்க  மீண்டும் கங்கா இருவர் பெயரை சொல்லி அழைக்க சுமி கதவை திறந்து ” என்ன அத்த ” என்று கேட்க

” உங்க ரெண்டு பேத்துக்கும் டி கொண்டு வந்தேன்” என்று விட்டு சிரித்த முகமாக கீழே சென்றார் அடுத்ததாக உதய் நந்தினிக்கு டி கொடுப்பதற்காக…

நந்தினி உதய்க்கு அறைக்கு வந்து கதவை தட்ட அது திறந்து கொண்டது . உள்ளே எட்டி பார்க்க சங்கூஜமாக இருக்க மீண்டும் ஒரு முறை நந்தினி உதயின் பெயர் சொல்லி அழைக்க எந்த ஒரு எதிர் வினையும் இல்லாமல் போகவே மெதுவாக எட்டி பார்த்தாள். உள்ளே யாரும் இருப்பது போல் அறிகுறியே இல்லை என தோன்ற வேகமாக மரகதத்திடம் வந்து சேர்ந்தார்..

” அக்கா நந்தினியும் உதயும் அவுங்க ரூம்ல அக்கா ” என்று சொல்ல

” இல்லன்னா என்ன சொல்றீங்க கங்கா இங்க எங்கேயாவது தான் இருப்பாங்க ” என்று மரகதம் சொல்ல

” இல்ல அக்கா அவுங்க ரெண்டு பேரும் நைட்லருந்தே வீட்ல இல்ல போல நாம பண்ணி வச்சது எல்லாம் அப்படியே இருக்கு ” என்று கூற

” என்ன சொல்றீங்க கங்கா அப்படி அவுங்க எங்க பொயிருப்பாங்க ” என்று பதற ( ஊர் சுத்த தான் போனாங்க ???)

டாக்டர் அறைக்குள் வந்த இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர் ” நாங்க எங்களோட பெஸ்ட் கொடுத்து ஆப்ரேஷன் பண்ணி இருக்கோம் . ஆனா அவுங்க தலையில பலமா அடிபட்டு இருக்கு அதுனால மூலைக்கு போற நரம்பு பாதிக்கப்பட்டு அதனோட செயல்பாட இழந்துருச்சி இப்போ . அதனால இப்போ அவுங்க கோமா ஸ்டேஜ்க்கு பொய்டாங்க ” என்று மருத்துவர் கூற இருவருக்கும் அவர்களை தலையின் மீது பிளக்க பட்ட பாறையை வைத்து போல் கனத்தது. சரவணனின் கண்ணில் இரூந்து அருவியாக வெளி வர

” சார் அவுங்களுக்கு எப்போ கோமாலற்ந்து ரீகெயின் ஆவாங்க ” என்று உதய் கேட்க

” அது எனக்கு தெரியல எப்போ வேணாலும் ப்ரெயின் ரீகெய்ன் ஆகலாம் இல்லன்னா ஆகாம கூட போக சான்ஸஸ் இருக்கு . காட் ஒன்லி நோஸ் தட் ” என்று விட்டு அவரது வேலையை தொடர்ந்தார்.

சரவணன் டாக்டரின் பதிலில் அதிர்ச்சியில் இருக்க அவனை கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்தான்.

அவர்கள் வெளி வந்ததை கண்ட ஆதி வேகமாக அவர்கள் அருகில் வந்து ” அந்த பொண்ணுக்கு இப்போ எந்த பிரச்சனையும் இல்லையே ” என்று பதற்றத்துடன் கேட்க

” இப்போ ஸ்ருதி கோமாக்கு பொய்டா . எப்போ கண்ணு முழிப்பானு அவுங்களுக்கே தெரியாதுன்னு சொல்லிட்டாங்க டா ” என்றான் உதய் வருத்தத்துடன்..

ட்ரெசிங் அனைத்தையும் முடித்த பின் ஸ்ருதிக்காவை செவியர்கள் இருவர் ஐசியூவிற்கு அழைத்துச் சென்றனர்.

ஸ்ருதியின் நிலையை கண்டவன் அந்த இடத்திலே மடிந்து சரிந்து அழுதான்.

அவனை உதயும் ஆதியும் கடினப் பட்டு சமாதானம் செய்து பக்கத்தில் இருந்த கதிரையில் அமரத்தினர்.

பக்கத்தில் இருந்த செவிலியர் ஒருவர் வந்து ” யாராவது ரெண்டு பேர் இருங்க போதும் இது ஐசியூ இவ்ளோ பேர்லாம் இருக்க அனுமதி இல்லை ” என்று விட்டு சென்றார்..

” நானும் சிந்துவும் இங்க  இருக்கோம் நீங்க மூணு பேரும் வீட்டுக்கு பொய்ட்டு வாங்க ” என்று சொல்ல ” இல்ல நான் போக மாட்டேன் எங்கேயும் போக மாட்டேன் ” என்று குழந்தை போல் சரவணன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண உதய் தான் அவனை சமாதான படுத்தி நந்தினியுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்..

நந்தினி காரிலும் அமைதியாகவே வர அவளது இந்த அமைதியை எப்படி கலைப்பது என்று புரியாமல் வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான்.

மரகதம் அவரது மொபைலை எடுத்து உதய்க்கு அழைக்க அதை உயிர்பித்தவன் ” சொல்லுங்க மா” என்க

” ரெண்டு எங்க டா போனிங்க வீட்ல இல்லாம ” என்று‌ அவரது பயம் கோபமாக வெளி வர

” இதோ நாங்க வீட்டு பக்கத்துல வந்துட்டோம் மா . வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்” என்று சொல்லி வைக்க இரண்டாவது முறையாக திரும்பி குளித்து உடை மாற்றி விட்டு வந்தனர்.

இவர்கள் இறங்கவும் உதயின் கார் வரவும் சரியாக இருந்தது.

மூவரும் உள்ளே வர நந்தினி மற்றும் உதயின் உடலில் காணப்பட்ட இரத்தத்தை கண்டு பதறியவர்கள் இருவரிடமும் வந்து ” என்ன ஆச்சி உங்க ரெண்டு பேருக்கும் ” என்று இருவரது தாடையை பிடித்து கேட்க

” எங்களுக்கு ஒன்னும் இல்ல மா கொஞ்சம் நாளுக்கு முன்னாடி நம்ம பெண்களுக்காக ஓப்பன் பண்ணதுல இருந்து தொலைஞ்சு போன்ன பொண்ண தான் தேடிட்டு இருந்தோம் அப்ப தான் நேத்து அந்த பொண்ணுக்கு ஆக்சிடனட் ஆயிடுச்சு ” என்று சொல்லி முடிக்க

” இது ஒன்னும் ஆக்சிடன்ட் இல்ல இது ஒரு அடம்பட் மேர்டர் ” என்று கத்தினாள் நந்தினி .

கங்காவிற்கே ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சி இவளா இது இப்படி கத்துகிறாள் என்று…

சிவசங்கரன் நந்தினி கத்துவதை பார்த்து அதிர்ச்சி அடையாமல் அவள் சொன்ன விதத்தை கேட்க அதிர்வுற்று அவள் முக பாவத்தை ஆராய தொடங்கினார்.

” இல்ல நந்து மா இது ஆக்சிடன்ட் தான் அந்த நேரத்துல பக்கத்தில இருந்துவுங்க எல்லாம் அந்த பொண்ணு தான் தெரியாம வந்துடுச்சின்னு சொன்னாங்க ” என்று சொல்ல

” இல்ல இது மெர்டர் தான் ஆக்சிடன்ட் இல்ல” என்று கத்தியவள் யார் கூற்றையும் கேட்காமல் அறைக்கு சென்றுவிட்டாள்..

” அது ஆக்சிடன்ட நந்தினி நேருல பாத்தாலா தம்பி ” என்று சிவசங்கரன் கவலையுடன் கேட்க

” ஆமா அப்பா ” என்க இதை கேட்டவர் இப்போதிருக்கும் நந்தினியின் நிலையை எண்ணி கலக்க முற்றவர் அப்படியே பக்கத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்து விட்டார்.

” அங்கில் என்ன ஆச்சி உங்களுக்கு ” என்று உதய் பதற்றத்துடன் கேட்க ” நந்தினிக்கு இது ஆக்சிடன்டாவே இருந்தாலும் அவளுக்கு இது மெர்டர் தான்னு சொல்லுவா தம்பி பைத்தியம் மாதிரி பிஹேவ் பண்ணுவா . அவள சின்ன வயசுலயே இதுல இருந்து காப்பாத்த ரொம்ப கஷ்டபட்டோம். இப்போ திரும்பவும் இப்படி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சிட்டா ” என்று கவலையுடன் கூற

” சின்ன வயசுல அப்படி என்ன நடந்துச்சு அப்பா . நீங்க என்னென்னமோ சொல்றீங்க ” என்று தன் மனையாளின் செயலை எண்ணி கேட்க

” அவளோட அப்பா அம்மா ஆக்சிடன்ட்ட கண்ணு முன்னாடி பார்த்ததுல இருந்து” என்றார் கவலையின் மொத்த உருவமாக..

தேடல் தொடரும்…

???????????????????

Stay tuned…✌️✌️✌️

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

கதை எப்படி போகுது பா. எனக்கு என்னவோ கதை ஆமை வேகத்துல போர மாதிரியே தோணுது. ஆமை வேகத்துல போனாலும் அது சரியா போகுதா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும்.

இந்த தேடல படிக்க வந்துவுங்க கடைசியா இதையும் படிச்சிட்டு மட்டும் போகாமா கமெண்ட்ஸ் பண்ணிட்டு போங்க.

இது என்னோட அன்பு கட்டளை..உங்களோட கமெண்டஸ் பேஸ் பண்ணி தான் அடுத்த எபி வரும். இல்லன்னா ரொம்ப லேட்டா தான் வரும் பா பாத்துக்கோங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!