Skip to content
Post Views: 7,510
வாயிலில் வந்து நிற்பவர்களைப் பேச மறந்து பார்த்திருந்தார் சாரதா “உள்ள வரலாமா” என்ற தாமரையின் குரலில் உணர்வுக்கு வந்தவர் “வாங்க… உள்ள வாங்க” என்று வழிவிட்டார்.
Advertisement
துளசி வீட்டை விற்றதையும் தன்னுடைய பங்கில் ஒரு சிறு வீடு வாங்கி அங்குதான் சாந்த்தா தங்கியிருக்கிறார் என்பதையும் கூறியிருந்தாள் அதோடு விலாசமும் அதைவைத்து அக்காவை அழைத்துக்கொண்டு அடுத்த வாரமே வந்துவிட்டான் தமிழ்.
Advertisement
Advertisement
வீட்டில் பொருட்கள் ஒன்றும் காணவில்லை இருவரும் தரையிலே அமர்ந்துகொண்டனர், அவர்களுக்கு இடப்பக்கம் தானும் தரையில் அமர்ந்துகொண்டார் சாந்தா, யார் முதலில் தொடங்குவது என்ற தயக்கம் அங்கே மவுனமாக உலா வந்தது.
Advertisement
“காலம் கடந்து நான் பண்ணின தப்பு புரியுது எப்போ வேற கல்யாணம் முடிவு பண்ணிட்டேன்னு தெரிஞ்சு உசுர மாய்ச்சுக்க கிணத்துல குதிச்சாளோ அப்போவாது எனக்குப் புத்தி வந்திருக்கணும்” என்றவர் மெலிதாக விசும்பத் தாமரை தம்பியைத் திரும்பிப் பார்த்தாள்.
முகம் இறுக கைகளை அழுத்தமாகக் கோர்த்துக்கொண்டான் அவனுக்குமே தெரியாதே இது… அப்படியானால் அன்று வந்தபோது நெற்றியில் பார்த்த காயம்… தன்னைக்காக உயிரை மாய்த்துக்கொள்ள பார்த்தாளா…
“பழசை பேசி என்னவாகப்போகுது என் தம்பிக்குத் துளசியை கேட்டு வந்திருக்கோம்” என்றாள் தாமரை.
சாந்தா அதிர்ச்சியாகி அவளை நிமிர்ந்து பார்த்தார் “என் பொண்ணு உனக்குதான்னு சொந்த பந்தம் முன்னாடி தட்டு மாத்துனீங்க ஆனா குடுத்த வாக்கை மறந்துட்டு வேற எடத்துல பொண்ணை குடுத்துட்டீங்க”.
“அவதான் பொண்டாட்டின்னு மனசுல பதிஞ்சு போச்சே அவனுக்கு அவன் என்ன செய்வான், பிரச்சனை நடந்தப்போ நீங்க என்கிட்டயோ தம்பிகிட்டயோ பேசல கொஞ்சம் பொறுமையா உக்காந்து பேசியிருந்தா முடிஞ்சிருக்கும்” என்றவள்.
“மச்… இப்போ அதைப் பேச நாங்க வரல உங்க பக்கம் யார்கிட்டலாம் சொல்லணுமோ சொல்லிடுங்க கல்யாண நாள் குறிச்சதும் உங்களுக்குச் சொல்றோம் விருப்பம் இருந்தா வந்து கலந்துக்கோங்க உங்ககிட்ட சொல்லாமலே இந்தக் கல்யாணத்தை தமிழால நடத்திக்க முடியும் நாங்க உறவுக்கு மரியாதை குடுக்கறவங்கன்னு உங்களுக்குத் தெரியனும்ல அதான் நேர்ல வந்து சொல்றோம்”.
“தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடுங்க நாலு வர்ஷம் அவங்க ரெண்டு பேரும் அனுபவிச்ச வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்ல இனிமேலாவது சந்தோஷமா வாழட்டும் வாழ்த்தனாலும் சபிக்காதீங்க” என்றவள் எழுந்துகொள்ள அவளுக்கு முன்பே வாசலில் நின்றிருந்தான் தமிழ்ச்செல்வன்.
சாரதாவிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை, அவன் தாயிடமே அவன் பேசுவதில்லையே…
“என்னம்மா சொல்ற? ரெண்டாம் கல்யாணமா! அக்கா ஒத்துக்குச்சா நீ ஒத்துக்கிட்டியாமா” என்றாள் பார்கவி.
“நான் சம்மதம் சொல்ல என்ன இருக்கு” என்றார் சாந்தா.
“இருந்தாலும் இன்னொரு கல்யாணம்னு சொன்னா ஊர்ல என்ன சொல்லுவாங்க, நாங்களும் அங்க வந்து போகணுமே” என்க.
“ஏன் நீ கல்யாணம் செஞ்சப்போ படிக்க அனுப்புன எடத்துல மாப்பிளையை தேடிக்கிட்டான்னு இதே ஊர் பேசலையா அதுக்காக நீ மாப்பிளையை வேண்டாம்னு சொல்லிட்டியா? இல்லல்ல அதேமாதிரி கொஞ்ச நாள் பேசிட்டு மறந்துடுவாங்க”.
“யார் பேசினாத்தான் என்ன பெத்தவ என்னாலேயே அவளுக்கு நல்லது பண்ண முடியாம போச்சே, அதோட அவங்க யார் சம்மதத்தையும் கேக்கல தகவல் சொல்ல மட்டும்தான் வந்தாங்க நானும் எல்லார்க்கும் தகவல் சொல்லிட்டேன்” என்றுவிட்டார், துர்கா அவள் மட்டும் திருமணத்திற்கு வருவதாகக் கூறினாள் அதற்கும் சரியென்றுவிட்டார்.
“என்னாச்சு துளசி ஏன் ஒருமாதிரி இருக்க” என்று அவள் அருகில் அமர்ந்தான் தமிழ்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் விழிநீர் துடைத்தாள் “ஏய் துளசி எதுக்கு இப்போ அழற” என்றான் பதறி.
“ஒன்றுமில்லை” என்று சிரம் மட்டும் ஆடியது.
“என்னைக் கட்டிக்க பிடிக்கலையா” என்றவனை தவிப்போடு பார்த்தாள் அவள்.
“அப்புறம்” என்க.
“நான் ஏற்கனவே வேற ஒருத்தர் கூட…” என்றவளுக்கு வார்த்தைகள் வராமல் பெரிதாக அழுகை வெடிக்க அவளைத் தன் மார்போடு சேர்த்தனைதான் தமிழ்.
“அப்படியொரு நெனப்போடதான் உன்கூட வாழ்வேன்னு நினைக்குறியா துளசி என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா” என்க.
மறுப்பாகத் தலை அசைத்தவள் “நீங்க வேற கல்யாணம் செஞ்சுக்கலையே உங்களுக்கு வேற நல்ல பொண்ணு கிடப்பால்ல” என்றவள் முகத்தை நிமிர்த்தியவன் “உன்னைவிட நல்ல பொண்ணை நான் எங்கடி போய்த் தேடுவேன், வேற ஒருத்தன கட்டிக்க முடியாதுன்னு தானேடி உசுர விடப் பாத்த” என்றவனை விழிவிரித்து பார்த்தாள் ‘எப்படி தெரியும்’ என்று.
நெற்றி தழும்பில் மெல்ல விரலால் வருடியவன் “தெரியும்” என்றான்.
அவள் விழிநீர் துடைத்து “நம்ம நாட்ல ஆண்களுக்கு இருக்குற முடிவெடுக்குற சுதந்திரம் பெண்களுக்கு இல்லை முக்கியமா கல்யாண விஷயத்துல, இதுல எங்கேயும் உன்மேல தப்பில்லை துளசி, என் துளசி புனிதமானவ எனக்கு வேற யாரும் வேண்டாம் அவதான் வேணும்”.
“எப்போவும் சொல்றதுதான் இப்போவும் சொல்றேன் என்னோட வாழ்த்துப்பாரு துளசி இந்தத் தமிழ்ச்செல்வனை உனக்குப் பிடிக்கும்” என்றான்.
அவனையே பார்த்திருந்தவள் “கூட வாழாதபோதும் எனக்கு இந்தத் தமிழ் செல்வனை மட்டும்தான் பிடிக்கும்” என்றவள் குரல் உடைந்து கண்ணீர் குளம் கட்டியது, என்ன பதில் சொல்லுவான் தனக்குள் அவளைப் பொதிந்துகொண்டான்.
கல்யாணத்தை ஆடம்பரமாகச் செய்கிறார்களா அல்லது பதிவுத் திருமணம் மட்டுமேவா ஒன்றும் தெரியவில்லை சாந்தாவிற்கு துளசியிடம் கேட்டுக்கொண்டு ஒரு நாளை முடிவு செய்து அணைவருக்கும் சொல்லியாயிற்று.
“ஆமா முன்னாடி கட்டிக்கொடுத்த எடத்துல வாழ்ந்து கிழிச்சிட்டா உன் மவ அடுத்த ஒரு கல்யாணம் தான் கேடு அவளுக்கு, இந்த அசிங்கத்துக்கெல்லாம் நான் வரமாட்டேன்” என்றார் ஜெயந்தி.
“உங்கள வரச் சொல்ல நான் கூப்பிடல விவரம் சொல்ல மட்டும்தான் கூப்பிட்டேன், வயித்துல புள்ளயோட புருஷன் கூடச் சண்டை போட்டு உன் வீட்டில வந்து ஒக்காந்திருக்காளே உன் மக அவளை மொதல்ல பாரு அப்புறம் என் பொண்ணை பாக்கலாம்” என்று இந்த முறை திருப்பிக் கொடுத்தார் சாந்தா.
ப்ரியாவின் கணவனுக்குத் தங்கை என்றால் உயிர், அதற்காக அவர்கள் பெரிதாகப் பாசமழை பொழிந்து மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் ரகமில்லை நல்ல அன்பாகப் பழகும் குணம் உடையவர்கள் அவன் வீட்டினர்.
கல்லூரி படிப்பை முடித்திருந்தாள் அவன் தங்கை நல்ல மதிப்பெண்களோடு ஆகையால் அவள் வெகுநாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த டாலர் வைத்த செயின் ஒன்றை தங்கைக்குப் பரிசளித்தான் அவன்.
மாலை வீட்டிற்கு திரும்பிய அண்ணியிடம் அவள் அதைக் காட்டி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள “உன் அண்ணனுக்குத்தான் அறிவில்லை உனக்குமா இல்ல, முன்னாடி வாங்கிக்குடுத்தா சரி இப்போ பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டேன் நாளைக்கே பிள்ளையும் வந்துடும் இந்தப் பணமிருந்தா எங்க பிள்ளைக்குச் செய்யலாம்ல” என்றவள் செயினை பலம்கொண்டு இழுக்க அவன் தங்கையின் கழுத்தை பதம் பார்த்து அறுந்து விழுந்தது மாலை.
கழுத்து அறுபட்டு அவள் வலியில் அலற வீடே அல்லோலப்பட்டது தங்கையை மருத்துவமனையில் சேர்த்த கையேடு ப்ரியாவை அவளின் பிறந்த வீட்டின் வாசலில் விட்டவன் “இனிமே எங்க வீட்டு வாசலை நீ மிதிக்கக் கூடாது” என்று அவள் பைகளை ரோட்டில் வீசிச் சென்றிருந்தான்.
பதிவு திருமணத்தின் அன்று காலைத் துர்காவும் சாந்தாவும் துளசியின் விடுதிக்குச் சென்றனர், எளிமையாகத் தயாராகி நின்றிருந்தாள் பெண்ணவள் பதட்டமும் எதிர்பார்ப்பும் சம பங்காகத் தளும்பி நின்றது அவளிடம்.
அவர்களை அழைத்துச்செல்ல கார் வந்துவிட்டது, பதிவு திருமணத்தில் யாருமே இல்லை இந்தப் பக்கம் இருவர் அந்தப் பக்கம் தாமரையும் அவள் கணவனும் மிக மிக எளிமையாக மாலை மாற்றிக் கையெழுத்திட்டனர், சாந்தாவிற்கு மனதில் சிறு சஞ்சலம் தாலி காட்டவில்லையே என்று என்றால் யாரிடம் கேட்க என்று தெரியவில்லை.
துர்காவிடம் மட்டும் புலம்பினார் “என்னடி தாலி கட்டாம ஒரு கல்யாணம் அது எப்படி சரியா வரும் வெளில போகும்போது பாக்குறவங்க தப்பா பேசமாட்டாங்களா” என்று கேட்க “தெரிலயலம்மா அதைப் பத்தி யாருமே பேசலையே” என்றாள் அவளும்.
அனைத்தும் முடித்து வெளியில் வந்ததும் “சாயந்திரம் கார் வரும் ரெடியா இருங்க ஊருக்குப் போலாம்” என்றாள் தாமரை, முன்பே கூறியிருந்தார்கள் ரெஜிஸ்டர் செய்தபின் அன்றே செஞ்சிக்கு செல்ல வேண்டும் என்று “சரி” என்றவர்கள் அவர்களுக்கான காரில் அமர்ந்துகொள்ள.
“சாயந்திரம் பாக்கலாம்” என்றான் தமிழ் துளசியிடம் அவளுக்காகக் கார் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு “ஹ்ம்ம்” என்றாள் அவளும், உறவுகளைச் சந்திக்கத்தான் ஊருக்குப் போகிறார்கள் என்று இவர்கள் நினைத்திருந்தனர், மாலை வண்டி வந்தது இவர்களைச் செஞ்சியில் தமிழின் சித்தியின் வீட்டில் தங்கவைத்தனர்.
அதிகாலையே அனைவரையும் எழுப்பி விட்டுவிட்டார் அவனின் சித்தி, துளசிக்கு பட்டுபுடவையோடு தேவையான அனைத்தையும் தாமரை எடுத்துவந்தாள் அவளுக்கென்று அவன் வாங்கிவைத்திருந்த நகைகள் வந்திருந்திருந்தது பட்டுடுத்தி மிதமான அலகாரத்தில் தமிழ் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச்சென்றனர்.
அங்குச் செல்லும் வரையிலும் கூட அவர்கள் இதை எதிர்ப்பார்க்கவில்லை, அந்தப் பெரிய வீட்டின் முன்னில் பந்தலிட்டு மேடை அமைத்து உறவுகளுடன் மாப்பிள்ளையும் காத்திருந்தான் மணப்பெண்ணுக்காக, பாதங்கள் நகர மறுத்து நின்றுவிட்டது துளசிக்கு தாமரை அவளை அழைத்துச்சென்று கற்பகத்தின் முன்னில் நிறுத்தினாள்.
“ஆசிர்வாதம் வாங்கிக்கோ துளசி” என்க.
ஒருமுறை தமிழை திரும்பிப் பார்த்தாள் துளசி, அவன் அமைதியாகவே நின்றிருந்தான் கற்பகத்திடம் ஆசி பெற்றுக்கொண்டாள் உள்ளுக்குள் தடதடவென்று இதயம் அடித்துக்கொண்டது.
‘யாரேனும் தன்னை தவறாகப் பேசிவிட்டால் இவரே ஏதேனும் சொல்லிவிட்டால், அன்று ஒழுக்கம் இல்லையென்றுதானே அத்தனை பேசினார் இபோழுது மீண்டும் மகனை மயக்கிவிட்டதாகப் பேசிவிட்டால், இவளுக்கு ரெண்டாவது கல்யாணம் ஒரு கேடா என்று யாரேனும் கேட்டுவிட்டால்’ என்றான சிந்தனைகள் மனதை குடைய பதட்டம் கூடியது துளசிக்கு.
அழுத்தமாக அவள் கரத்தைக் கோர்த்துக்கொண்டான் தமிழ் “வா” என்று அவளை அழைத்துச்சென்று மணமேடையில் அமர்ந்து அவளையும் அருகில் அமர்த்தினான் மந்திரங்கள் ஓத நல்ல முறையிலே திருமணம் நடந்தது.
அவளுக்கென்று வாங்கி வைத்திருந்த தாலிக்கொடியை அவள் கழுத்தில் அணிவித்து தன் வாழ்வில் அவளை இணைத்துக்கொண்டான், சாந்திதாவிற்கு இப்பொழுதுதான் நிம்மதியானது.
இரண்டாம் திருமணம் சரியா தவறா அவருக்குத் தெரியவில்லை பெரிதாக என்ன கஷ்டம் கொஞ்சம் அனுசரித்து வெற்றியோடு வாழ்ந்திருக்கலாம் இவனை மனதில் நினைத்துக்கொண்டுதான் வெற்றியோடு வாழமாட்டேன் என்று பிடிவாதம் செய்து வந்துவிட்டாள் என்பது சாந்தாவின் எண்ணம்.
எப்படியோ இனி மாற்றவா முடியும் அதோடு இந்தத் திருமணத்திற்கு அவரிடம் யாரும் அனுமதியும் கேட்கவில்லையே, அன்றும் அதற்க்கு அடுத்தநாளும் அங்கேயே தங்கிக்கொண்டனர் உறவுகளுக்கு முன் எதையும் காட்டிக்கொள்ள விருப்பமில்லை ஆகையால் இயல்பாக அவனுடைய அரை அலங்கரிக்கப்பட்டது.
துளசியையும் தயார் படுத்தி தமிழின் அறைக்கு அனுப்பினாள் தாமரை, சாந்தாவும் துர்காவும் அன்று அங்கேயே தங்கிக்கொண்டனர் என்ன முயன்றும் துளசிக்கு பழைய நினைவுகள் எட்டிப்பார்த்தது.
அவளை அழைத்துச்சென்று கட்டிலில் அமர்த்தியவன் “நேரம் எடுத்துக்கோ துளசி, இந்த நாலு சுவத்துக்குள்ள நீயும் நானும் மட்டும்தான் இங்க யாருக்காவும் நீ நடிக்க வேண்டியதில்லை நீ நீயா இரு, என்னை முழுசா உன்னால எப்போ ஏத்துக்க முடியுதோ அப்போதான் நமக்குள்ள எல்லாம் கவலைப்படாத” என்றவன் பாலை அவளுக்கும் கொடுத்துத் தானும் குடித்தான்.
“ரொம்ப டையர்ட் தூங்கலாமா” என்றவன் “உன் கையைப் பிடிச்சுகிட்டுமா” என்றான் காதலோடு.
அவனை ஆசையாகப் பார்த்தாள் துளசி அவளின் சம்மதம் கிட்டியதும் அவள் கையோடு கைகோர்த்து தன் நெஞ்சில் சேர்த்துக்கொண்டவன் மெல்ல மெல்ல உறக்கத்திற்கு செல்ல, அவனையே பார்த்திருந்தவள் மனம் நிறைந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக விழிகள் மூடினாள்.
error: Content is protected !!