Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மெய்யறிவாயோ மெல்லினமே 19

அத்தியாயம் 19

அதற்கு பின்னான நாட்கள் முழுவதும் வாசு அவனுக்குள்ளேயே முடங்கி கொண்டான்.அவனையும் அறியாமல் அன்றைய நிகழ்வுகள் பெரிதும் பாதித்து இருந்தன…



Advertisement

சொல்லபோனால் ஆரம்பத்தில்  இதயா உட்பட அனைவரிடமும் ஒதுங்கியே நின்றான். நாட்கள் செல்ல செல்ல இதயாவின் அன்பும், அவனது புத்தக வாசிப்பும் வாசுவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது.

காலங்கள் கடந்தது… கல்லூரியிலும் சரி, பள்ளியிலும் சரி ஒரு சிலரை தவிர பெரியதாக நண்பர்கள் இல்லை. அதே நேரம் படிப்பில் தனித்து நின்றான். அவனது திறமையை கண்டு தான் இதயா அவனை அரசுத் தேர்வெழுத வற்புறத்தினாள்.

Advertisement

Advertisement

அவளது பேச்சை மறுக்க முடியாமல் இருபத்தி ஒன்றாவது வயதில் அரசு தேர்வு எழுத ஆரம்பித்தான். முதல் முறை அந்த கேள்விகள் இவனுக்கு சவாலாக இருந்தது என்றாலும் பிடித்தது. அந்த பிடித்தம் தான் தொடர்ந்து அவனை அரசு தேர்வுகளில் கவனம் செலுத்த வைத்தது.

பெரிதினும் பெரிது கேள் என்பதை போல அவனது  இலக்கு ஐ. ஏ.எஸ் என்ற பெரிய இலக்கையில் மட்டுமே இருந்தது.

Advertisement

அதில். தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும் நேர்காணலில் தேர்ச்சிப் பெற முடியவில்லை.

அதற்கு முதற்காரணம் அவனது ஆழ் மனதின் பயங்கள் மட்டுமே… ஆம் அன்றைய கொடூர நாளின் நினைவுகள் அவனின் மனதில் புதைந்து தான் கிடைக்கிறது. பகலில் மண்ணுக்குள் மூடிய விதையாய்  இருக்கும் ஒன்று, கனவுகளில் மிகப்பெரிய ஆலமரம் போல் காட்சியளிக்கும். நிஜங்களில் மிச்சங்கள் கனவுகளில்  தாக்க உண்மையாகவே பயந்து தான் போனான் ஆடவன். அதன் விளைவு இவனது முன்னேற்றத்தை தடுத்து கொண்டே இருந்தது.

தனது ஆழ் மன பயங்களை இறுக்கமாக மாற்றி   கோபத்தை வெளிக் காட்டும் ஆண்கள்  ஒரு ரகம் என்றால் பயங்களை பயங்களாகவே  காட்டும் ஆண்கள் ஒரு ரகம். இதில் வாசு இரண்டாவது வகை தான். அதுகூட அவன் கையாலயே அந்த காமக் கொடூரனை கொள்ளும் வரை மட்டுமே நீடித்தது…

அப்பொழுது வாசுவிற்கு இருபத்தைந்து வயதிருக்கும்…

அந்த வார இறுதியில்  அரசு தேர்வெழுத கோவை செல்ல வேண்டும் என்ற முனைப்பில்  இருந்தான் வாசு தேவன். அந்த சமயத்தில் தான் மீனாட்சி, வாசுவை அழைத்தார்.

மெல்லிய லேம்ப் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தவனின் காதில் மீனாட்சி அழைக்கும் சத்தம் கேட்டது. தன் அறையிலிருந்து வெளியில் வந்தவன் “சொல்லுங்கத்தை…” என்றான்.

“வாசு… ஈரோடு பிரெஞ்ச்ல நியூ கேமரா ஃபிக்ஸ் பண்ணோம். அதை என் போன்ல கனெக்ட் பண்ண முடியல டா. கொஞ்சம் என்னனு பாரு…” என்று அலைபேசியை அவனிடம் நீட்டினார். அடுத்த சில நிமிடங்களில் அவர் கூறியதை செய்திருந்தான்.

“ஆடியோ, கேட்கும் தானே அத்தை…” அலைபேசியை பார்த்துக் கொண்டே மீனாட்சியிடம் வினாவினான்.

“ஆமாம் ப்பா… ஆடியோ கேட்கும்…” என்றவர் மீண்டும் “இதுல கேட்கல போலயே…” என்றார்.

“ஆமாம் அத்தை. எதுக்கும் என் போனுக்கு கனெக்ட் பண்ணி பார்க்குறேன்…” என்றவன் அவனது அலைபேசிக்கு கேமராவை கனெக்ட் செய்தான்… அதில் ஆடியோ, வீடியோ இரண்டும் தெளிவாக இருந்தது.

“ஒரு நிமிசம் அத்தை கொஞ்சம் செட்டிங்ஸ் மாத்தணும்…” என்றவன் அதனை மாற்ற, அடுத்த நிமிடம் ‘ஒன் வீக் கண்டிப்பா லீவ் எடுக்கணும். சோ இன்னைக்கு ஒன்பது மணியே ஆனாலும் இதை முடிச்சுட்டு தான் வரணும்…’ சலசல நீரோடை போல அவளது குரல் கேட்டது. ஒரு அறையின் கேமராவை மட்டும் உயிர்ப்பித்து இருந்தான். அந்த அறையிலிருந்த பெண்ணின் குரல் தான் என்று புரிந்தது அவனுக்கு.

அந்த பெண்ணைப் பார்த்தான். ஓயின் கலர் சுடிக்கு ஏற்ப பென்சில் ஃபிட் பேன்ட் அவளுக்கு அத்தனை பொருத்தமாக இருந்தது. இடை தாண்டிய அவளது சுருள் சுருளான கேசமும், குண்டு கன்னங்களும், துறுதுறு விழிகளும் நிமிடமேனும் என்னைப் பாரென்று கூறியது.

அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன் காணொளியை துண்டித்து விட்டு

“எல்லாமே செட் பண்ணிட்டேன் அத்தை…” என்று அலைபேசியை மீனாட்சியிடம் கொடுத்தான்.

அதற்கு பின் அந்த ஒயின் கலர் சுடிதாரை பற்றி நினைக்க அவனுக்கேது நேரம். அது கூட

இரவு உணர்விற்கு ஜானகி அழைக்கும் வரைக்கும் மட்டுமே நிலைத்தது…

“நைட் ஒன்பது மணி ஆயிடுச்சு தம்பி, சாப்பிட வா…” என்ற ஜானகியின் குரலில் ஏன்னென்றே தெரியாமல்  ‘இன்னைக்கு ஒன்பது மணியே ஆனாலும் முடிச்சுட்டு தான் கிளம்பனும்…’ என்ற பெண்ணின் வார்த்தைகள் காதில் கேட்டது. அலைபேசியை எடுத்து பாரென கூறிய மனதின் பேச்சைக் கேட்காது சாப்பிட அமர்ந்தான்..

சாப்பிட்டுவிட்டு படுக்கையில் விழுந்தவனுக்கு ஏனோ மனம் அலைபேசியை பார் பாரென்றே கூறிக் கொண்டிருந்தது.ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அலைபேசியை கையிலெடுத்தான்.

காலையில் அவனது அலைபேசிக்கு நிழற்படகருவி (கேமராவை) இணைத்தது அப்படியே தான் இருந்தது. காணொளியை உயிர்த்தான் அலுவலகம் இருட்டில் மூழ்கி இருக்க சிறு புன்னகையோடு அலைபேசியை அணைக்க போனவனின் கைகள் எதற்சியாக ஈ.பி ரூமின் காணொளியை ஓட விட்டது. அங்கு மயங்கிய நிலையில் ஓர் உருவம். நிமிடம் பிரம்மயோ என்று தான் நினைத்தான். கண்களை சிமிட்டி மீண்டும் பார்க்க,காலையில் பார்த்த அந்த பெண்ணின் முகம் கொஞ்சம் தெளிவாக தெரிந்தது. சட்டென பரபரப்பு தொற்றிக் கொண்டது அவனுக்கு…

அவசரமாக முந்தைய காணொளியை ஓடவிட்டான். வேலையை முடித்துவிட்டு ‘ஹான் முடிஞ்சது மேம். ஓகே மேம்… ஃபர்ஸ்ட் த்ரீ ஸ்விட்ச் ஆப் பண்ண போதுமா?…’ எதிர்ப்புறம் என்ன பதிலும், கேள்வியும்  வந்ததோ

‘இல்லை மேம் நானே  போயிப்பேன். அம்மாவும், அப்பாவும், பாட்டி வீட்டுக்கு போயிருக்காங்க…’ என்றவள் மின் இணைப்புகளை முழுவதுமாக துண்டித்து விட்டு திரும்ப, அவளுமே எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கி தூக்கியெறியப்பட்டாள்.

இதை காணொளியில் பார்த்துக் கொண்டிருந்த வாசுவிற்கு

காலையில் சிரித்த முகத்துடன் நின்றவளின் முகம் மின்னி மறைந்தன… அவள் மயங்கிய நேரத்தையும் தற்போதைய நேரத்தையும் பார்த்தான். கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களாகியிருந்தது.

அதற்கு பின் நிமிடம் கூட யோசிக்காமல் மீனாட்சியை அழைத்து ஈரோடு அலுவலகத்தின் மேனேஜேர் நம்பரை வாங்கியவன் அவரிடம் வாட்ச்மேன் நம்பர் வாங்கி அவருக்கு உடனே அழைத்தான்…

பார்க்கிங் ஏரியாவிலிருந்த வாட்ச்மேன் அழைப்பை ஏற்றார். அடுத்த சில நிமிடங்களில் கேண்டீனில்  இருந்த சிலரின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் அந்த ஒயின் கலர் சுடிதார் அணிந்த பெண்ணான நவினா.

மறக்காமல் அவளுக்கு துணையாக ஒருவரை இருக்க வைத்துவிட்டு தான் உறங்கவே சென்றான்.

இந்த செயல் அவனைப் பொறுத்தவரை சின்ன உதவி மட்டுமே. அதனால் தான் என்னவோ அந்த நாளை பற்றியோ?  அந்த ஒயின் கலர் சுடிதார் அணிந்த பெண்ணை பற்றியோ நினைவு வைத்திருக்கவில்லை. அதற்கு மற்றொரு காரணம் அந்த வார இறுதியில் வரும் அரசு தேர்வும், அவனது தந்தையின் எதிர்பாராத வரவும்…

ஆம் , அன்று ஜானகியிடம் திருடிய நகைகளை வைத்து வேறு மாநிலம் சென்றவன் அங்கும் கஞ்சா தொழில் ஈடுப்பட, சில நாட்களிலேயே போலீஸின் பிடியில் சிக்கி கொண்டான்.

மீண்டும் வெளிவர எட்டு வருடங்களை கடந்து இருந்தது. ஜெயிலில் இருந்து வந்தவன் மீண்டும் ஜானகியிடம் தஞ்சமடைந்தான். இதில் தான் ஜானகியின் காதல் மொத்தமும்  பைத்தியக்காரத்தனம் என்று உறுதியானது.

நாளை அரசு தேர்வெழுத வேண்டும் என்ற முனைப்பில் இளையவர்கள் இருவரும் இருக்க, அவர்களிடம் வந்தான் ஜானகியின் கணவன்.

அவனைக் கண்டதும் தன்னாலேயே வாசுவின் உடல் பயத்தில் நடுங்கியது. உடனே அருகில் நின்றவளிடம் “இதயா மா… போலாம்…” என்ற குரலில் இருந்த நடுங்கத்தை நன்றாகவே உணர்ந்தாள்.

“இத்தனை நாள் நல்லா தானே இருந்த? இப்ப எதுக்கு இப்படி பயந்து சாகற? எங்கேயும் போக வேண்டாம் ஒழுங்கா எங்கூடயே இரு…” என்றதும் அவளை பாவமாக பார்த்து வைத்தவன்

“பிளீஸ் போலாம்…” என அவளின் கையை பிடித்து இழுத்தான். அதற்குள் இருவரையும் நெருங்கி இருந்தான் அந்த மிருகம்.

“என்னை பார்த்ததும் கட்டிப் பிடிச்சு பெரிய வரவேற்பை கொடுப்பேன் நினைச்சேன்…” என ஆரம்பித்தவனின் பேச்சும், பார்வையும் இதயாவிற்கு அத்தனை கோபத்தை கொடுத்தது…

மேலும் வாசுவின் பயம் அவளின் கண் முன்னே மின்னி மறைந்தது… எப்படியாவது அவனது கோபத்தை போக்கி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு.

அந்த நேரம் இதயாவிடம்  “நீயும் அப்ப விட இப்ப ரொம்ப செக்** இருக்க,கண்டிப்பா ஒரு நாள் அனுபவிப்பேன்..” என மெல்லியக் குரலில் கூறியதும் வேறு எதுவும் யோசிக்காது காலில் இருந்த செருப்பை கழட்டி அவனை சரமாரியாக அடித்தாள். வாசுவின் பார்வை அத்தனை அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.

“இதயா மா…”அவளின் கைகளை கட்டிக் கொள்ள அவனை பக்கவாட்டில் திரும்பி பார்த்தவள் கண்களால் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு

“இப்பவும் அத்தையோட முகத்துக்காக மட்டும் தான் பேசாம போறேன் அடுத்த முறை இப்படி பேசன அறுக்க வேண்டிய இடத்தை அறுத்துடுவேன் ஜாக்கிரதை …” என்றவள்  “அத்தை கிட்ட இதை ஏன் டா சொல்லல…” என வாசுவிடம் பெண்சிங்கமாய் கர்ஜித்தாள்.

“வேற யாராவது கிட்ட சொன்னா உன் அம்மாவை கொன்றுவேன்  சொன்னாரு…” படப்படப்பாக கூறியவன் பார்வை முழுக்க எதிரில் இருந்தவன் மீது மட்டுமே இருந்தது. அவனது பார்வை கூறிய செய்தியில் அத்தனை பயந்து போனான் வாசு..

இத்தனை நாட்களாக அவனில் புதைந்திருந்த பயம் மீண்டும் துளிர்விட்டது… அதையும் மீறி ஏதோ தவறாக நடக்க போகிறது என்று அவனது மனம் கூறிக் கொண்டே இருந்தது..

அக்கணம் அவனது பயந்த முகத்தை பார்த்த இதயாவோ

“சண்டே எக்ஸாம் ஒழுங்கா படி.. இந்த தடவை எல்லாமே பாஸ் பண்ணிடனும் நீ, அதே மாதிரி எல்லாரும் உன் அப்பனை மாதிரி மேய மாட்டாங்க ..”என வாசுவிடம் பேசி சென்றவளிடம்

“உன்னை நான் சும்மா விட மாட்டேன்…” என நச்சு பாம்பை போல் சீறியதை இதயா காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றாலும் வாசுவிற்கு  பயமாக தான் இருந்தது…

அதன் விளைவு  படிக்கவும் மறந்து  அவளோடு மட்டுமே இருந்தான். அப்படியும் கோவை சென்று வரும் வழியில் எதிர்பாரத விதமாக வாசு திருப்பூரீல் இறங்கி விட, இதயா மட்டுமே தனியாக வரும் நிலை உருவானது. அந்த நேரம் பார்த்து

இதயாவை நெருங்கி இருந்தான் காமூகன்.

பட்டாம்பூச்சியாய் சுற்றி சுற்றி வளம் வந்தவளை  குத்துயிரும் கொலையுயிருமாய் இரத்த வெள்ளத்தில் பார்த்த நொடி முதலே அந்த காமூகனை தேடிப் பிடித்து கொலை செய்திருந்தான் வாசுதேவன்.

அப்பொழுது நடந்த விபத்தில் கோமா நிலைக்கு சென்றவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் நினைவு வந்தது.

அன்றிலிருந்து அனைத்திற்கும் பயந்து பின் வாங்கி கொண்டிருந்த வாசுவா என கேட்கும் அளவிற்கு மாறியிருந்தான். அந்த கொடூரனை கொன்றதோடு தன் பயத்தையும் சேர்த்தே கொன்று இருந்தானோ என்னவோ…

அவனது பயத்தை கொன்றுவிட்டான் சரி…ஆனால் அவனுக்கு நடந்த கொடூரங்களை?அதன் நினைவுகளை? மறக்க முடியாமல் இன்றுவரை தவித்து கொண்டிருக்கிறான். பகல் பொழுதில் அதிகம் நினைவில் வருவதில்லை என்றாலும் கனவில் அவனைத் துரத்தி கொண்டிருக்கிறது…

அவனுடைய கொடூர நினைவுகளையும், கனவுகளையும் மீறி மென் சாரலாய் அவன் மீது விழுந்தவள் தான் அவனது ராட்சசி. முதலில் அவள் மீது கோபம் கொண்டு தவிர்க்க நினைத்து, தடுக்க நினைத்து,  தற்பொழுது அவனையும் அறியாமல் அவளில் தோற்று நிற்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!