Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒளி சிந்தும் இரவு

ஒளி சிந்தும் இரவு இறுதிப் பதிவு

அத்தியாயம் 25

    ரங்கசாமி ஜானகி வீட்டில் சைவ விருந்தை உண்டு மாமனார் மாமியாரை மகிழ்வித்து, அடுத்தநாள் சேகர் வீட்டில் அசைவ விருந்தை முடித்து வீடு வந்திருந்தனர் தம்பதியர்.

   திருமணம் முடிந்து ஒருமாதம் வெளியே இருந்தவன், தற்போது நான்கு நாள்களாய் கணவனோடு இருந்ததில் முல்லை முகம் ஜொலிப்போடு இருந்தது.



Advertisement

   சத்யன் வம்பிழுக்கும் போதெல்லாம் சரிக்கு சரி பேசும் சுகந்தி தற்போது மிகத் தேவையென்றால் மட்டுமே சிறு முறைப்பை பதிலாய் கொடுத்து, மற்ற நேரங்களில் புன்னகையோடும் அக்கறையோடும் பேசுவாள்.

   சுகந்தி முல்லையின் மகிழ்வான வாழ்வை கண்டு மாதவனும் கல்பனாவும் மனம் நிறைந்து போயினர்.

   மகனிடம் “முல்லை சரியா சாப்பிட்டுச்சா அன்பு?” என மாதவன் விசாரிக்க, “அனுக்கா அவளுக்கு சைவம் செய்திருந்துச்சுப்பா, ரொம்ப விரும்பி சாப்பிட்டா” என்றான் அன்பரசு.

Advertisement

   ஒருவாரம் கழித்து, புது கம்பெனிக்கு சென்று வந்தான் சத்யன். சுகந்தி டீ கொடுக்க, வாங்கியவன் “அன்பு” என குரல் கொடுத்தான்.

Advertisement

    அன்பரசோடு முல்லையும் தனதறையிலிருந்து வர, “உனக்கு தெரிஞ்ச பசங்க யாராவது இருந்தா சொல்லுடா, கம்ப்யூட்டர் நாளேட்ஜ் இருக்கனும்” என்றான்.

    “விசாரிச்சு சொல்றேன் சத்யா”

    “என்ன மாதிரி ஒர்க் மாமா?” என்றாள் முல்லை.

Advertisement

    சத்யன் சொல்ல, “எனக்கு கைட் பண்ணுங்க மாமா. நானே பண்றேன்” என்றாள் முல்லை.

    அன்பரசு ஆச்சர்யமாக, “டைப்பிங் தெரியுமாம்மா?” என்றான் சத்யன்.

    “ஹையர் முடிச்சிருக்கேன் மாமா”

    “எங்கம்மா பண்ணின?” என மாதவன் கேட்க, தான் பயின்ற இன்ஸ்டியூட் பெயரை சொல்லி, “நான் இங்க பக்கமா போய்க்கிறேனு நம்ம இன்ஸ்டியூட்டைதான் மாமா சென்னேன். டைப் கத்துக்கலனாலும் பரவால்ல, அங்க போக வேணாம்னு அப்பாதான் அங்க அழைச்சிட்டு போனார்” என்றாள் சிரிப்போடு.

   ரங்கசாமிக்கும் தனக்கும் அப்போது வரும் சண்டைகளை நினைத்து மாதவனும் சிரிக்க, தானும் சிரித்த சத்யன் “ஆனாலும் கோடிங் தெரியனுமே” என்றான் யோசனையாக.

    “கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் படிச்சேன் மாமா” என்று தனக்கு தெரிந்தவைகளை விளக்கினாள் இயல்பாக.

    “வாவ்… சூப்பர்” என பாராட்டியவன், “என்ன அன்பு முல்லை என்னோட வரட்டுமா?” என்றான் தம்பியிடம்.

   சந்தோசமாய் தலையசைத்து சம்மதம் தெரிவித்தவன், “ஆனா ஒரு பத்து பதினைஞ்சு நாள் போகட்டும்” என்றான்.

   “ஹம் ஓகே ஓகே. புது ஆள் தேட நானும் அவ்வளோ நாள் ஆகும்னுதான் சொல்லியிருந்தேன், அதுக்கபுறமும் கூட ஒருவாரம் வீட்டுலயே நல்லா ட்ரைன் பண்ணிட்டு அதுக்கப்புறம் கூட்டிட்டு போறேன்” என்றான் சத்யன்.

  “அப்பாகிட்ட சொல்றேன்ங்க, ரொம்ப சந்தோசப்படுவார்” என்று தந்தைக்கு அழைத்து விசயத்தை சொல்ல, மகளின் அறிவுத்திறன் வெளிப்படுவதோடு, சத்யனுக்கு உதவியாக இருப்பதில் இரட்டை சந்தோசம் ரங்கசாமிக்கு.

   “ஏங்க, வேலைக்கு போய்ட்டா குழந்தை பெத்துக்குற எண்ணம் வராது” என ஜானகி சொன்னது முல்லைக்கு கேட்கவே, அறைக்குள் சென்றவள் “அப்பா அம்மாகிட்ட கொடுங்க” என்றாள்.

    அன்னையிடம் “ம்மா… வேலைக்கு போறதுக்கும் இதுக்கும் ஒரு சம்மதமும் இல்ல, இந்த விசயத்தை தள்ளி போடக்கூடாதுனு நீங்கதான் முன்னவே சொல்லியிருக்கிங்கதான? உங்க பேச்சை மீறவும் மாட்டேன், மறக்கவும் மாட்டேன்ம்மா” என்றாள் சிரிப்போடு.

  “எந்த விசயத்தை தள்ளி போடக்கூடாது? அத்தை எதுக்கு பயப்படுறாங்க?” என்றபடி அருகே வந்தான் அன்பரசு.

  திடுக்கிட்டு திரும்பியவள், “அதெல்லாம் அம்மா மகளுக்குள்ள ரகசியம்” என்றாள் சிரிப்போடு.

   முல்லை பேசியதை யோசித்து, அவளின் வெக்க சிரிப்பையும் பார்த்தவன், “அம்மா மகளுக்குள்ள ரகசியம்னாலும் என் தயவில்லாம நடக்காது குண்டுமல்லி” என்றான் ரகசிய குரலில்.

   “நீங்க தயவு பண்ண நான் வேணும்ல?” என இவளும் ரகசியம் பேச, “ஹேய்” என அதிசயித்தவன், “பார்டா… லைட் ஆப் பண்ணும்போதே கண்ணை மூடிக்கிறவளுக்கு இப்படிலாம் கூட பேச வருமா?” என்றான் கண்கள் மின்ன.

   “ஆமாம்ல? எனக்கு பேச வருதே” என்றாள் பெருமையாக.

   அணைத்தவன், “நாளைக்கு வெளில போறோம். பத்து நாள் கழிச்சுதான் திரும்பி வரப்போறோம்” என்றான்.

   “எங்க?” என இவள் வியக்க, “ப்ளான் ஏதும் பண்ணல, ஆனா எங்கையாவது போகனும். போறோம்” என்றான்.

   முல்லை யோசனையிலிருக்க, “அப்பாம்மாவை பார்த்துக்க சத்யன் இருக்கான். நைட்ல விஷால் பார்த்துப்பான்” என்றான்.

    “அதுயில்லைங்க. இங்க” என தயங்கினாள்.

    “இங்க யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க. பசங்க இப்படி வாழ்க்கை வாழனும்னுதான் அப்பா ஆசைப்பட்டார்”

    “இல்லைங்க, மாமா அக்காக்கும் இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு, அவங்க வீட்டுல இருக்கும்போது நாம மட்டும் எப்படி போக?”

    “சத்யன் இப்போ புது பிஸ்னஸ் டென்ஷன்ல இருக்கான். சரியான நேரம் அமையும் கண்டிப்பா அழைச்சிட்டு போய்டுவான். அவங்க சந்தோசத்தை அவங்க பார்த்துப்பாங்க”

    “நம்ம மகள் மட்டும் வீட்டுல இருக்காங்கனு கல்பனாம்மா நினைச்சுட்டா?” என்று மனதிலுள்ளதை கேட்டாள் முல்லை.

    “உனக்கு அத்தையைப் பத்தி சரியா புரியல. அதான் இப்படி யோசிக்கிற” என மனைவியை கட்டிலில் அமர்த்தி, “என் அம்மா இறந்ததும் இங்க வந்தவங்க, ஜனனிக்காகவும், அப்பாக்காகவும் இங்கையே இருந்துட்டாங்க.

    அண்ணன் பேத்தினெல்லாம் பாப்பாவை பார்த்ததேயில்ல. சொந்த பேத்தியாத்தான் பார்த்தாங்க. அவங்க குடும்பம் வேற, நம்ம குடும்பம் வேறனு ஒருநாளும் அத்தை நினைச்சதில்ல. அண்ணிம்மாவை போலத்தான் உன்னையும் நினைப்பாங்க. நீ இப்படி நினைக்குறது தெரிஞ்சாதான் வருத்தப்படுவாங்க” என்றான்.

   “சாரிங்க… கல்பனாம்மா என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க. அதனாலயோ என்னவோ அவங்க மனசு கஷ்டப்படும்படி ஏதும் ஆகிடக்கூடாதுனு பயமாயிருக்கு. இப்படி நினைச்சிட்டா என்ன பண்றதுன்ற டென்ஷன் இருந்துட்டேயிருக்கு” என்றாள்.

    முல்லை வீட்டில் ரங்கசாமி ஜானகி தவிர்த்து மற்ற அனைவரும் சுயநலவாதிகள் ஆதலால் இப்படி யோசிக்கிறாள் என்றுணர்ந்து, “போகப்போக நீயே புரிஞ்சிப்ப. சாரிலாம் வேணாம். அதுக்கு பதிலா என்னை கட்டிபிடிக்கலாம். இல்ல முத்தம் கொடுக்கலாம். இல்ல…” என தொடர்ந்தவனுக்கு சற்று நேரம் ஒப்புகொடுத்து, “எங்க போறோம்?” என்றாள் ஆர்வமாக.

   “இப்போதைக்கு ஃபாரின் எங்கேயும் போக முடியாது. ஊட்டி, கொடைக்கானல் மாதிரி எங்கையாவது போவோம். டைம் அமையும்போது பெருசா ப்ளான் பண்ணிக்கலாம்” என்றான்.

   அடுத்தநாள் மாதவனிடம் சொல்ல, “மருமகளை கூப்பிடு” என்ற குரலுக்கு வெளியே வந்த முல்லை முகம் தவிப்பை காட்ட, “ஒரு மாசம் கழிச்சு ஷுட்டிங் போனான்னா எப்போ வருவானு சொல்ல முடியாது. வந்தாலும் இவ்வளோ நாள்லாம் வீட்டுல இருக்கமாட்டான்ம்மா. சந்தோசமா போய் வாங்க” என்றார்.

    மகிழ்ந்தவள், மாதவன் சென்றபின்னே சுகந்தியிடம் “அக்கா நீங்களும் எங்கையாவது போகலாமில்ல?” என்றாள் ரகசியமாக.

    சிரித்த சுகந்தி, “உனக்குத்தான் அன்பு புதுசு. ஸ்கூல், காலேஜ் டேஸ்ல நாலஞ்சு முறை சத்யனோட டூர் போயிருக்கேன். என்னை யோசிக்காம போய் பேக் பண்ணு” என இன்முகத்தோடு துரத்தினாள் முல்லையை.

    கிடைத்த ஒருமாதமும் இலக்கின்றி பயணித்து இன்பமாய் நாட்களை கழித்தனர் புதுமணத் தம்பதி.

   *** *** *** *** ***

   ஏழு மாதம் முடிந்திருக்க, “போன வாரமே ஆகவேண்டிய பீரியட் ஆகல, டல்லா வேற இருக்க. டீ கூட வச்சு தரல. என்னடி விசயம்?” என ஆர்வத்தோடு வினவினான் சத்யன்.

   முகம் சிவந்தவள், “விசயம்தான் போலடா. எழுந்தா தலை சுத்துது” என்றாள் நாணத்தோடு.

   மனைவியை அணைத்து முத்தமிட்டு விலகி, “இரு டீ வச்சுட்டு வரேன்” என கிச்சன் சென்றான். சேகர் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரவே அனுவிற்கு உதவ நான்கு நாள் முன்தான் மகன் வீட்டிற்கு சென்றிருந்தார் கல்பனா.

   “டீ வேணாம் சத்யா” என சுகந்தி குரலின் சோர்வுணர்ந்து “சுகந்திம்மாக்கு காய்ச்சலா சத்யா? இவ்வளோ நேரம் ஆகியும் டீ வரல” என்றார் மாதவன்.

  “ஆமாம்ப்பா. டீயை குடிக்க வச்சுட்டு ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போறேன்”

   மகனின் பொலிவான முகம் கண்டு பெரிய மருமகளும் கர்ப்பமோ என மனம் ஆர்ப்பரிக்க, “முல்லைக்கு பார்த்த டாக்டர்கிட்டயா?” என்றார் ஆவலாக.

   “ஆமாம்ப்பா” என்றான் நிறைந்த புன்னகையோடு. மகனை அணைத்துக்கொண்டார் பெருமகிழ்வோடு.

   இருபது நாள்களுக்கு முன்தான் அன்பரசு வந்து சென்றான். அன்பரசு சென்று ஒரு வாரம் கழித்து காலையில் டீ குடிக்க வெளியே வந்த முல்லை மயங்கி விழப்போக, பதறித் தாங்கிய மாதவன் “என்னாச்சும்மா?” என விசாரிக்க, “தெரியல மாமா, ரொம்ப டையர்டா இருக்கு” என்றாள்.

    கிச்சனிலிருந்து வெளி வந்த கல்பனா, முல்லையின் முக வாட்டம் கண்டு, “சந்தோசமான விசயமாத்தான் இருக்கும் மாதவா. ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போலாம்” என்றார்.

   “அப்படியா கல்பனா?” என மகிழ்வோடு அழைத்துச்சென்றார் மருத்துவமணைக்கு. அங்கே கர்பம் உறுதிபடுத்தப்பட,  மாதவன் மகிழ்வை வெளிப்படுத்த வார்த்தை கிட்டவில்லை.

   மருமகளை நிறைவாய் பார்த்து “சம்மந்திக்கு போன் போட்டு சொல்லலாம்” என்றார்.

   கல்பனா “நேர்லயே போய் சொல்லலாம்” என்று சொல்ல,  கிளம்பினர் முல்லை வீட்டிற்கு.

   வரும் வழியிலேயே பலமுறை கணவனுக்கு அழைத்திருந்தாள் முல்லை. அதிகாலைவரை படப்பிடிப்பில் இருந்தான். சின்ன இடைவெளி கிடைத்தாலும் மனைவிக்கு அழைத்து பேசுபவன், நள்ளிரவு படப்பிடிப்பின் போது மட்டும் குறுஞ்செய்தி அனுப்புவான்.

   இன்று பார்த்து மாலை ஆரம்பித்த படபிடிப்பு அதிகாலை மூன்று மணி வரை தொடர, குறுஞ்செய்தி அனுப்பக்கூட நேரமில்லாமல் போனது அன்பரசுக்கு.

   தற்போது படுத்தால் காலை எட்டு மணிக்குத்தான் எழுவோம், ஒன்பது மணிக்கெல்லாம் மீண்டும் படபிடிப்பு என்பதால் பேச நேரமிருக்காது என, ‘இனிதான் தூங்கனும், மதியம் கால் பண்றேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியவன், மொபைலை சைலண்ட்டில் போட்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.

   அன்பரசு அழைப்பை ஏற்காததில் ஏமாந்த முல்லை முகம் வாட்டத்தை காண்பிக்க, “மிஸ்டு கால் பார்த்தான்னா உடனே பண்ணுவான்ம்மா” என தேற்றினார் கல்பனா.

   பிறகு அன்னை வீட்டிற்கு வந்து விசயம் சொல்ல, பிள்ளை வரம் வேண்டி இருபது வருடங்களுக்கு மேல் வேதனையில் இருந்தவர்களுக்கு மகளின் கர்ப்பம் காணக்கிடைக்காத பொக்கிஷத்தை கைப்பற்றிய உணர்வை கொடுத்தது. மகளை கொண்டாடித் தீர்த்தார் ஜானகி.

   சற்று நேரம் பேசியிருந்து, “வீட்டுக்கு போய் குலசாமிக்கு விளக்கேத்தி வணங்கிட்டு அனுப்பிவிடுறேன்ங்க. முல்லை இரண்டுநாள் இங்க இருக்கட்டும்” என்றார் ஜானகிக்காக.

   ஜானகி மகிழ்வோடு சம்மதிக்க, ரங்கசாமியும் மகளோடு கிளம்பினார். பின்னே தெய்வத்தை வணங்கி பழரசம் கொடுத்து சற்று நேரம் ஓய்வெடுக்க வைத்து மகளை அழைத்து வந்தார் தன் வீட்டிற்கு.

   மதியம்போல்தான் முல்லைக்கு அழைத்தான் அன்பரசு. முல்லை விசயத்தை சொல்ல, நெகிழ்ந்த அன்பரசு, இப்படி அழைப்பை ஏற்காமல் போனதில் முல்லை எத்தனை வருந்தியிருப்பாள் என்றுணர்ந்து வருந்தி மன்னிப்பு வேண்டியவன், வீடியோ காலில் அழைத்து, கணக்கில்லா முத்தங்களை வழங்கி, “சாரிடீ… இப்போதைக்கு வர முடியாது. பத்து நாள் ஆகிடும்” என்றான் வருத்தமாக.

   வழக்கம்போல் “பரவால்ல, ஃபீல் பண்ணாதிங்க” என தேற்றினாள் கணவனை.

   அலுவலகத்திலும் தள்ளிப்போட முடியாத வேலைகள் இருக்க, நான் பார்த்துக்கிறேன் என்று சத்யன் மறுத்தும், கடந்த ஒருவாரமாக வீட்டிலிருந்து வேலை செய்தாள் முல்லை.

   பத்து நாள்களாய் முல்லை கர்ப்ப விசயத்தில் லயித்திருந்த மாதவனுக்கு தற்போது சுகந்தியின் கர்ப்ப விசயம் பேரானந்தத்தை கொடுத்தது. சந்தோசமான விசயத்தை சுகந்தி முல்லையிடம்  சொல்ல, முல்லை கல்பனாவிடம் சொல்ல, சுகந்தியை காண மொத்த குடும்பமும் கிளம்பியது.

   பேரனோ பேத்தியையோ வரப்போகும் சந்தோசத்தை விட, மனம் ஒப்பாமல் திருமண பந்தத்தில் இணைந்த மகள் இன்று உண்டாகியிருக்கிறாள் என்பது மகளின் சந்தோசமான வாழ்வை உறுதி படுத்த… கல்பனாவின் சந்தோசம் எல்லை கடந்தது.

   வீட்டிற்கு வந்ததும் சத்யனை நன்றியோடு அணைத்துக்கொண்டான் சேகர். அத்தை வயித்துல குட்டிப்பாப்பா என சேகர் குழந்தைகள் மகிழ்ந்தனர். இரண்டு புது குட்டி பாப்பாக்கு நான் அக்கா ஆகப்போறேன் என்று ஜனனியும் மகிழ்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!