Skip to content
Post Views: 945
சிவா அர்ஜுனன் வீட்டிற்கு வந்து சென்று இரண்டு நாள் ஆகி இருந்தது… நிரவி கோவத்தில் இருந்ததால் அவனிடம் பேசவில்லை… அவன் பேச முயற்சி செய்தாலும் அதை தவிர்த்து பேசாமல் சென்று விட்டாள்… அவனுக்கு அது ஏம்மாற்றமாக இருந்தது… இருவரும் நேருக்கு நேர் நின்று பேசி நிறைய நாட்கள் ஆகி இருக்க இன்றும் பேச வாய்ப்பு அமைந்தும் அவள் பேசாமல் சென்றது அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது…
அன்று அனைவருக்கும் விடுமுறை எனவே இளைய தலைமுறை மட்டும் தோப்பு வீட்டிற்கு சென்றனர்… அனைவரும் விளையாடி கொண்டு இருக்ரித்திகா மட்டும் தனியாக அமர்ந்து இருந்தாள்… அதை சிவாவை தவிர்த்து யாரும் காணவில்லை… சசியும் ஒரு வேலையாய் தோப்பு வந்தவன் அங்கு தான் இருந்தான்… அவனும் கவனித்து தான் இருந்தான்… ரித்திகா வீட்டிலும் அமைதியாய் இருப்பதை… அர்ஜுனன் சுபா இருவரும் கவனித்து கேட்டும் எதுவுமில்லை என கூறி சமாளித்து இருந்தாள்…
Advertisement
சிவா யாரும் கவனிக்காதவாறு ரித்திகாவிடம் சென்றவன் “இன்னும் அத நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்கியா … அங்க ஒன்னுமே நடக்கல .. அவங்க அப்படி தான் அப்படினு நினைச்சிட்டு விட்ரனும் … அவங்க எல்லாம் உன் ப்ரெண்ட்ஸே இல்லை … அது மட்டுமில்லாம அந்த பொண்ணுங்க அந்த பொறுக்கி கூட சேர்ந்து பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவ … வீட்டுலையும் இப்படி தான் இருக்கியா நீ ” என கேட்டு கொண்டு இருக்கும் போதே சசி அங்கு வந்துவிட்டார் …
“சிவா ரித்திகாவுக்கு என்ன ஆச்சு … அவ ரெண்டு நாளா ஆளு சரியில்ல … அண்ணாவும் சுபாவும் கேட்டு கூட சொல்லல .. நீ எதோ ஆறுதல் சொல்லிட்டு இருக்க … என்ன நடந்தது … நீங்க பெரிய ஆளு ஆகிட்டா எங்க கிட்ட ஒன்னும் சொல்ல மாட்டிங்களா ” என கேட்டார் …
Advertisement
மாமா நீங்க அந்த பக்கம் வாங்க நான் சொல்றேன் .. ரித்து நீ அங்க போய் அவங்க கூட விளையாடு … என்று ரித்திகாவை அனுப்பி வைத்தவன் சசியை கட்டிலில் அமர வைத்து விட்டு இவனும் அவர் அருகில் அமர்ந்து “மாமா ரெண்டு நாள் முன்னாடி நீங்க எல்லாம் ஒரு விசேஷத்துக்கு போய் இருந்திங்க ல … அன்னிக்கு நீங்க போனது எனக்கு தெரியாது .. அதனால உங்களை பாக்க வீட்டுக்கு வரலாம்னு வந்துட்டு இருந்தேன் … கோவை ஒரு வேலையா போய் இருந்தேன் முடிச்சிட்டு வரலாம்னு வந்துட்டு இருந்தேன் … அப்போ கோவை ல இருந்து நம்ம ஊருக்கு வரப்ப ரெண்டு மூனு பிள்ளைங்க … ரெண்டு பசங்க நின்னுட்டு இருந்தாங்க … அவங்களுக்கு நடுவுல ரித்திகா சேலை முந்தானையை உடம்புல சுத்திகிட்டு அழுதுட்டு நின்னுட்டு இருந்தா … ஒரே அழுகை … நான் போனதும் மாமா னு என் பின்னாடி வந்து நின்னுட்டா ….”
Advertisement
“நான் என்னனு கேட்டதும் எல்லாமே சொல்லிட்டா … அங்க அய்யனார்புரத்துல அந்த கடைசி மச்சு வீடு இருக்குல்ல அந்த பொண்ணுக்கு ரித்திகாவோட பயோலொஜிக்கல் அப்பா அம்மா அர்ஜுனன் மாமா சுபா அத்தை இல்லைனு தெரிஞ்சு இருக்கு … அதை சொல்லி கிண்டல் பண்ணிட்டே இருக்கும் போல … அன்னிக்கு செலிப்ரே சன் னு சாரீ கட்டிட்டு போய் இருப்பா போல .. ரொம்ப நாளா ஒரு பையன் இவளுக்கு ப்ரொபோஸ் செய்ய ட்ரை பண்ணி இருப்பான் போல … ஆனா அந்த பொண்ணுக்கு அவனை பிடிச்சு இருக்கு போல அதுல காண்டான அந்த பொண்ணு ரித்திகாவை கெட்டவளா காட்டிக்க அவன்கிட்ட இங்க வெச்சு ப்ரொபோஸ் பண்ணாத… வெளிய ஒரு இடத்துல சப்ரைஸா பண்ணலாம்னு இன்னும் ரெண்டு மூனு பொண்ணையும் கூட்டிட்டு இவை கிட்ட வந்து நாம அவுட் பஸ்ல போகலாம்னு கூட்டிட்டு வந்து இருக்கு .. இவளும் நம்ம ஊரு தானே அப்படினு நம்பி அவ கூட பஸ் ல போய் இருக்கா …”
“ஆனா அந்த பொண்ணு நடு வழியில இறக்கி விட்டு ரொம்ப மோசமா பேசி இருக்கு …இவ அந்த பையனை பார்த்து அந்த பொண்ணு கிட்ட கேட்க அந்த பொண்ணு நீ என்ன யோக்கியமா நீயே அந்த வீட்டுல ஓசி ல தானு இருக்க … இவனுக்கு சரினு சொல்ல உனக்கு என்ன … பெரிய உ ல க அழ கி னு நினை ப் பா … நீ போட்டு இருக்குறது எல்லாம் சுத்த தங்கமா என்ன .. அப்டினு சொல்லி இவ போட்டு இருந்த நகையை தொட வந்து இருக்கு … அது மட்டும் இல்லாம அந்த பையன் தப்ப தொட வந்து இருக்கான் …”
“அப்போ தான் நான் வந்தேன் .. அந்த பசங்க எல்லாம் என்னை பார்த்ததும் ஓடிட்டாங்க …. மேடம் செம அழுகை … கஷ்டப்பட்டு சமாதானம் செஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் … வர வழில கூட அழுகை தான் … கொஞ்சம் கோவமா பேசி அழுகையை நிறுத்தி தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் … ஆனா இப்போ அது பிரச்சனை இல்லை …” என்று கூறி நிறுத்தினான் சிவா …
Advertisement
“யாரு டா அது .. நம்ம வீட்டு பொண்ணை இப்படி பண்ணது … இது பிரச்சனை இல்லை னா வேற என்ன பிரச்சனை … ஆளு யாருனு சொல்லு ரெண்டு ல ஒன்னு பாக்கலாம் …” என்று கோவமாக கூறினார் …
“மாமா அமைதியா இருங்க … இதுக்கு தான் உங்க கிட்ட முன்னாடியே சொல்லல … உங்க கிட்ட சொன்னா கோவமா எதோ பண்ணுவீங்க … கர்ணன் மாமா கிட்ட சொன்னா உடனே அர்ஜுனன் மாமா காதுக்கு போயிடும் .. நான் முகுந்தன் சித்தப்பா கிட்ட சொல்லி சித்தப்பாவை வெச்சு பேசிட்டேன் … இனிமே எந்த பிரச்சனையும் வராது … அதே மாதிரி அந்த பையனையும் மிரட்டியாச்சு … இப்போ பிரச்சனை அது இல்லை … ரித்திகாவை மாமா விவரம் தெரிஞ்ச பின்னாடி இங்க கூட்டிட்டு வந்தாங்க .. அதுனால அந்த பொண்ணுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மை … அருஜுனன் மாமா பாசமும் சுபி அத்தை பாசமும் தான் அவ அனாதை இல்லை இந்த வீட்டு பொண்ணு அப்படி மனசுல பதிஞ்சு இருக்கு … இப்போ திரும்பியும் அனாதை அது இது அந்த பொண்ணு பேசுனது மனசை ரொம்ப பாதிச்சு இருக்கு …ரெண்டு நாளா நான் பேசி பார்த்தேன் … ஆனா அது ல இருந்து வெளிய வர முடியல … அது தான் மனசு கொஞ்சம் மாறட்டும் னு தோப்புக்கு கூட்டிட்டு வந்தேன் .. தனியா கூட்டிட்டு போக முடியாது … நீங்க தோப்பு ல இருப்பிங்க தெரியும் அது தான் உங்க கிட்டயும் சொல்லிடலாம் னு வந்தேன் ” என்று கூறி முடித்தான் …
“சரி வீட்டுல நான் பாத்துக்குறேன் … நீ அன்னிக்கே சொல்லி இருந்தா ரித்திகாவை சமாதானம் செஞ்சு இருக்கலாம் … அர்ஜுனன் அண்ணாவும் சுபாவு ம் ரித்திகா வீட்டுல ஏன் இப்படி இருக்கா னு தெரியாம கவலையா இருந்தாங்க … என்று கூறிவிட்டு எப்போ லீவு முடியுது உனக்கு … வாணன் மாமா கல்யாண பேச்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல … நீ ஏன் டா இப்போ வேண்டாம்னு சொல்ற …” என்று கேட்டார் ….
“மாமா ஒரு ரெண்டு மூனு வருஷம் போகட்டும் … ப்ளீஸ் நீங்களாச்சும் அப்பா கிட்ட சொல்லுங்க … எனக்கு கல்யாணம் பண்ண தோணவே இல்லை ..” என்று கெஞ்சலாக கூறினான் ..
“இன்னும் மூணு வருஷம் … இன்னும் நிரவிக்கு பதினெட்டு வயசு ஆகல னு மூணு வருஷம் போகட்டும்னு சொல்றியா …” என்று கிண்டலாக கேட்டார் …
சிவா வோ “மாமா அப்படி எல்லாம் இல்லை .. நிரவியை நான் அப்படி …” என்று அவன் கூறி கொண்டு இருக்கும் போதே நிரவி எதோ கோவமாக பேசி கொண்டு இருப்பதையும் ரித்திகா அழுதவாறு தலை குனிந்து இருப்பதை தான் ….
வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓடினான் … சசியும் அதை பார்த்து வேகமாக செல்லும் போது நிரவி அங்கு இருந்து கோவமாக செல்ல ரித்திகா வும் அந்த இடத்தை விட்டு ஓட பார்த்தாள் … ஆனால் அதற்குள் சிவா அவளை பிடித்து நிறுத்தியவன் நிரவியை தடுக்காமல் அவளை தடுத்து கொண்டு இருந்த கார்த்திகாவை நோக்கி “என்ன ஆச்சு கார்த்தி … இங்க என்ன நடந்தது னு மறைக்காம சொல்லு …” என்று கண்டிப்பாக கூறினான் …
“அது … அண்ணா … அது வந்து ..” என்று அவள் தயங்க சசியும் “என்ன ஆச்சு கார்த்தி … குட்டிமா ஏன் கோவமா பேசுனா …” என்று கேட்டார் ..
“மாமா அண்ணா இவங்க கிட்ட பேசிட்டு இருந்ததை பார்த்து கோவமா வந்தவ ‘ஏன் எங்க வாழ்க்கை ல வந்த … முதல் ல அப்பா அம்மா என்கிட்ட பேசுறதை குறைச்சிகிட்டாங்க … அப்பறம் சிவா மாமா …. ஏன் அவங்க இத்தனை நாள் என்கிட்ட பேசல னு தெரியாம இருந்தேன் … ரெண்டு நாள் முன்னாடி தான் தெரிஞ்சது அதுக்கு காரணம் நீ அப்படி னு … ஏன் எனக்கு பிடிச்சவங்க எல்லாரையும் என்கிட்ட இருந்து பிரிக்குற … போ போய் உங்க அப்பா அம்மா இருக்குற இடத்துக்கே போ ‘ அப்படினு ரொம்ப கோவமா பேசிட்டா மாமா … எனக்கு ஒண்ணுமே புரியல … அவ நான் சொல்றதை கேட்குற நிலைமை ல இல்ல …” என்று வருத்தமாக கூறினாள் …
அவள் கூறியதும் சசி நிரவியிடம் செல்ல சிவா ரித்திகாவிடம் “அவ சொல்றானு தற்கொலை பண்ணிக்க போறியா நீ … கொஞ்சமாச்சும் உன் அப்பா அம்மாவை பத்தி நினைச்சு பார்த்தியா … சொல்லு என்னை பார்த்து பதில் சொல்லு ” என உலுக்கினான் ….
அவள் அமைதியாக நிற்க “சொல்லு என்ன நடந்து இருந்தாலும் நீ தற்கொலை பண்ணி இருக்கலாமா … தற்கொலை எதுக்கும் தீர்வு இல்ல … வீட்டுல தெரிஞ்சா துடிச்சு போயிட மாட்டாங்க … அவ தான் அறிவு இல்லாம பேசுறா னா நீயும் பேசனும் … எனக்கும் அவங்க அப்பா அம்மா தான் அப்படினு … அத விட்டுட்டு தற்கொலை பண்ண போறாளாம் ….” என்று அவளிடம் கூறிவிட்டு “கார்த்தி நிரவி எப்ப இருந்து மத்தவங்களை இப்படி எடுத்து எரிஞ்சு பேச ஆரம்பிச்சா … அவ இப்படி பேசுனா கண்டிக்க மாட்டியா நீ … நீயே சொல்லு இன்னிக்கு அவ பேசுனது சரி யா …” என்று கேட்டான் …
“அண்ணா அது இவங்க வந்தது ல இருந்தே கொஞ்சம் இன் செ க் யூரா பீல் பண்ணா … அத்தை யும் மாமாவும் இவங்க கஷ்டப்பட கூடாதுனு அவளை கொஞ்சம் சரியா பாத்துக்க ல அப்படினு நினைக்குறா அதோட நீங்களும் அவளோட சரியா பேசுறது இல்லை .. போக போக பேசுறதே இல்லை … உங்க மேல தப்பு இல்ல ண்ணா உங்களுக்கும் வேலை அவளுக்கும் படிப்பு … ரெண்டு நாள் முன்னாடி அவ உங்க ரெண்டு பேரையும் பார்த்து இருக்கா … நீங்க இவங்களை வண்டில கூட்டிட்டு வந்ததை பார்த்து இருக்கா ஆனா நீங்க இவங்களை பாக்காம தனியா வந்த மாதிரி சொன்னிங்களாம் … அதே மாதிரி இன்னிக்கு அவ கூட பேசாம இவங்க கூட பேசுனது அவளுக்கு கோவம் வந்துருச்சு … அது மட்டும் இல்லாம நீங்க இவங்களை லவ் பண்றதா நினைச்சு இருக்கா …. இதனால தான் நான் சொல்ல சொல்ல கேட்காம இவங்களை வந்து பேசிட்டா ….” என்று கூறினாள் …
சிவா கார்த்திகா சொன்னதை கேட்டு பெருமூச்சு விட்டவன் “எனக்கு என்ன சொல்றது தெரியல கார்த்தி … நான் தான் இன்னும் அவளை அஞ்சு வயசு பொண்ணா பாக்குறேன் போல அவ இன்னிக்கு அப்படி இல்லை டா நானும் வளர்ந்துட்டேன் எனக்கும் வயசு ஆகிடுச்சு அப்படினு புரிய வெச்சிட்டா …. நீ சொல்றதை பார்த்தா நிரவி என்னை லவ் பண்றா போல … சொல்லு கார்த்தி அவ என்னை லவ் பண்றாளா ” என்று கடினமாக கேட்க அங்கு சசியிடம் “ஐ லவ் சிவா மாமா சசிப்பா ” என்று அழுது கொண்டே கூறி கொண்டு இருந்தாள் நிரவிகா ….
error: Content is protected !!