Skip to content
Post Views: 2,795
யாதுமாகி #9
ம்மா அண்ணா ஏன் இப்படி கண்டுக்காம போகுது குரல் உள்ளே போய்விட்டது வினிதாவிற்கு.
என்னைக்கு தான் உங்க அண்ணன்காரன் கண்டுக்கிட்டான்?கிண்டலாய் கேட்டார் ஜோதி.
ம்மா நீ வேற நிலைமை புரியாமல் மொக்க போடாதம்மா…. ஒருவேளை நைட்டு நாம பேசினதை அண்ணன் கேட்டுட்டாரோ?
Advertisement
ஏய்…அதெல்லாம் இருக்காது! அப்படி அவன் கேட்டிருந்தா இந்நேரத்துக்கு வானத்துக்கும் பூமிக்குமா எகிறி குதித்து இருப்பான்.
அவன் பொண்டாட்டிதாசன்டி. அவளை ஏதாவது சொல்லிட்டா இவனுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்.
ஜோதி என்ன தான் சமாதானம் சொன்னாலும் வினிதாவிற்கு உள்ளுக்குள் படபடப்பாகவே இருந்தது.
Advertisement
நீ என்னதான் சமாதானம் சொன்னாலும் அண்ணன் முகமே சரியில்லம்மா. மருந்துக்கும் சிரிப்பு இல்லையே,எனக்கு என்னவோ பயமா இருக்கு!
Advertisement
அடி இத ஒருத்தி! உங்க அண்ணன் அப்படியே சில்லறை காசை சிதறவிட்ட மாதிரி சிரிச்சிடுவான் பாரு! மகனை வறுத்து தீய்த்தார்.
“—————”
என்னடி தியா குட்டி மாமா பையனை சைட் அடிக்க வந்துட்டியா?தங்கை மகளை தலைக்கு மேல் தூக்கி கரகரவென்று சுற்றினான் விஷ்ணு.
Advertisement
மாமா,மாமா விடுங்க, பயமா இருக்கு! தியா குட்டி கண்களை மூடி பயந்தாலும் ரசித்து சிரித்தாள்.
மேடம் பெரிய படிப்பு எல்லாம் படிக்கிறீங்களே நல்லா படிக்கிறீங்களா? புசுபுசு என்று பேக்கரியில் பிரஷ் ஆக செய்த பன் போல் இருக்கும் குழந்தையின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளினான்.
அண்ணா என் பொண்ணும் ஒரு நாள் பெரிய படிப்பு படிப்பா! யுகேஜி படிக்கும் மகளுக்கு வக்காலத்து வாங்கினாள். வினிதா.
மாமா தம்பி பாப்பா பார்க்கணும்! இரட்டைப் போனி டெயில் ஆட,கண்களில் ஆர்வம் மின்ன, குழந்தைக்கு உரிய மொழியில் கொஞ்சி கொஞ்சி கேட்டாள் தியா.
அதோ உங்க மாமி தம்பியை தூக்கிட்டு வராங்க பாரு!
வாங்க அண்ணி, எப்போ வந்தீங்க? எல்லாரும் சௌக்கியம் தானே? இயல்பாய் குசலம் விசாரித்தால் நேத்ரா.
நாங்க நைட் வந்தோம் அண்ணி, நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். குழந்தையை கொடுங்க! ஆசையாய் அள்ளி அணைத்து முத்தமிட்டாள் அண்ணன் மகனை.
அம்மா தம்பியை என்கிட்ட குடுங்க ப்ளீஸ் பிஞ்சு கரம் நீட்டி துள்ளி குதித்தாள் தியா.
தியா உன்னால தம்பியை தூக்க முடியாது. நீ சோபால உக்காரு, நான் உன் மடியில் வைக்கிறேன்.
ஹையா ஜாலி,ஜாலி… அம்மா நாம பெங்களூர் போகும்போது தம்பியை தூக்கிட்டே போலாமா? அழகிய விழிகளில் ஆர்வம் தேக்கி கேட்டது செல்லக்குட்டி.
என் பையனை கடத்திட்டு போக பார்க்கிறீங்களா? விஷ்ணு கேலியாய் சிரித்தான்.
அவள் ஏன் கடத்திட்டு போகணும்? அடுத்து ஒரு குழந்தை ஆண் குழந்தையா பெத்துக்க போறாங்க! சம்மன் இல்லாமல் வந்து ஆஜர் ஆனார் ஜோதி.
இதுவரை இருந்த இயல்பு நிலை மாறி விஷ்ணுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
நேத்ராவின் நிலையும் அதேதான். அவளுக்கும் அங்கு இருக்கவே இருப்பு கொள்ளவில்லை.
ஏற்கனவே கணவன் மீது கடுப்பில் இருப்பவள் அந்த புண்ணியவானை பெற்ற தாயை கண்டதும் மேலும் கடுப்பானாள்.
இப்போதெல்லாம் மாமியாரை நேர்கொண்டு பார்ப்பதை தவிர்த்து வந்தாள் நேத்ரா. துஷ்டரை கண்டால் தூர விலகு என்பார்களே அப்படித்தான் நடந்து கொண்டாள்.
அதற்கு மேல் அங்கு நிற்க விரும்பாமல் டைனிங் டேபிளுக்கு சென்றான் விஷ்ணு.
மங்களம் கைவண்ணத்தில் உருவான காலை உணவு டைனிங் டேபிளில் அணிவகுத்து காத்திருந்தது.
அக்கரையாய் மகனுக்கு தட்டு வைத்து பரிமாறத் தொடங்கினார் ஜோதி.
வராத போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு ஹலோ ஹலோ கேட்குதா? என்று பேசிக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தான் விஷ்ணு.
மகனின் செய்கையில் கொதித்து போனார் ஜோதி.
தியா குட்டியோடு கொஞ்சி பேசி சிரித்து கொண்டிருந்தாள் நேத்ரா.
இன்னும் சின்ன குழந்தைன்னு நினைப்பு! புருஷன் வெளியில் போறானே அவனுக்கு டிபன் கொடுத்து அனுப்பனும்னு தெரியுதா? கோப சிவப்பில் சத்தமாய் கேட்டான் விஷ்ணு.
அவன் காட்டுத்தலில் தலை தூக்கி அலட்சியமாய் பார்த்தாள் நேத்ரா.
டைனிங் டேபிளுக்கு வருமாறு கண்களால் ஜாடை செய்து விட்டு உர் என்று பார்த்துக்கொண்டே போனான்.
எவ்வித உணர்வுகளையும் வெளி காட்டாமல் இயந்திரம் போல் பரிமாறத் தொடங்கினாள் நேத்ரா.
கடுமையான கோபத்துடன் இருவரையும் ஒருசேர முறைத்தார் ஜோதி.
வேணுவும் வந்து அமரவே மாமனாருக்கும் சேர்த்து பரிமாறத் தொடங்கினாள் நேத்ரா.
“——————-”
கோர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் விஷ்ணு.
நேத்ரா வைஃபை மோடம் எங்கே பாரு?என்னோட பிளாக் ஜெல் பென் காணோம்,எடுத்து பேக்ல வை! தலைவாரிக் கொண்டே அவளை ஏவிக் கொண்டிருந்தான்.
ஏன் கை ரெண்டும் நல்லா தானே இருக்கு? சத்தமாகவும் இல்லாமல் கிசுகிசுப்பாகவும் இல்லாமல் அவனுக்கு கேட்க வேண்டும் என்றே சத்தமாய் முணுமுணுத்தாள்.
ஏன் உனக்கு கை ரெண்டும் நல்லாத்தானே இருக்கு? சிரித்துக் கொண்டே திருப்பிக் கேட்டான்.
என் வேலையை நான் செய்துகிற மாதிரி அவங்க அவங்க வேலையை அவங்க தான் செய்துக்கணும்! வெடுக்கென்று கழுத்தை வெட்டினாள்.
ஹா ஹா ஹா ஹா ஹா என் வேலையை நானே செய்துக்க பொண்டாட்டீடீ டீ நீ எதுக்கு? நீட்டி முழக்கி கேட்டான்.
பொண்டாட்டினா வேலைக்காரியா? அவ்வளவு கோபம் அவளுக்கு.
ஆஃப்கோர்ஸ்! வேலைக்காரியும் தான்,சேம் டைம் வீட்டுக்காரியும்தான். என்னை ஆளும் எஜமானியும் நீ தான்.இதுவரை காட்டிய கடினத்தன்மை மறைந்து இலகுவாய் குரலை குழைத்து கண் சிமிட்டி சிரித்தான்.
அவன் குழைவில் ஒரு கணம் மின்னல் வெட்டியது போல் உணர்ந்தவள் வெடுக்கென முகத்தை மீண்டும் திருப்பிக் கொண்டாள்.
நேத்ரா நான் கிளம்பட்டுமா? குழைந்த குரல் இன்னும் குழைந்தது.
ம்ம்ம்ம்ம்ம் என்றாள்…வழி அனுப்பும் விதமாக.
லாயருக்கு கன்சல்டிங் பீஸ் எதுவும் இல்லையா? எப்போதாவது அத்திப்பூத்தார் போல் வந்து செல்லும் வெட்கம் அப்போது பார்த்து வந்து ஒட்டிக்கொண்டது.
420 க்கு என்ன பீஸ் வேண்டி கிடக்கு? பல்லை கடித்துக் கொண்டு வெளியேற முயன்றவளை இரும்பு கரம் நீட்டி இறுக்கி தன் மார்பில் மோதி நிறுத்தினான்.
வாய் கூடி போச்சு! அவளை இன்னும் இறுக்கி இதழ் மீது இதழை கச்சிதமாய் பதித்தான்.
மெய் கோபத்துடன் அவன் மார்பில் குத்தினாள். கொசுக்கடியை பெரிது படுத்தாதவன் கருமமே கண்ணாய் அவள் இதழுடன் யுத்தம் புரிந்தான்.
தொய்ந்து தடுமாறியவளை ஐயோ பாவம் என்று அவனே விடுவித்தான்.
விடுங்க என்னை…காலங்காத்தால பேசினது மறந்து போச்சா? சீறினாள்.
அது காலங்காத்தால… சரசமாய் சிரித்தவன் அவள் கழுத்தில் கை போட்டு மீண்டும் இழுத்து அணைத்துக்கொண்டான்.
எனக்கு விருப்பம் இல்லாம,என் பர்மிஷன் இல்லாம,நீங்க எப்படி எனக்கு கிஸ் பண்ணலாம்? மூக்கு விடைத்தது.
நீ ஒன்னு பண்ணு, பாட்டி ரூமில் பாம்பு பஞ்சாங்கம் இருக்கும் போய் எடுத்துட்டு வா! நாளு, கிழமை, நட்சத்திரம், திதி பார்த்து சுபயோக சுபதினத்தில் உன்கிட்ட பர்மிஷன் கேட்டு உம்மா கொடுக்கிறேன்.
எதே…. அவளுக்கு இன்னும் கோபம் ஏறியது.
நீ லவ் பண்ற காலத்துல கிஸ்ஸடித்து கிறங்க வைத்தியே நான் ஏதாவது கேட்டேனா? கிசுகிசுப்பாய் அவள் காதுக்குள் கேட்டு வைத்தான்.
அவன் வழக்கம்போல் பழையதை கிளற…கோபமும், வெட்கமும் போட்டி போட்டது அவளுக்கு.
நேத்துக்குட்டி ரொம்ப நாளாச்சு நீயா ஒரு உம்மா கொடுத்து அவள் ஜிமிக்கியை ஆட்டிவிட்டான்.
இந்த நேத்து முந்தாநேத்து கதை எல்லாம் வேண்டாம் நேத்ரான்னு சொல்லுங்க! சிலுப்பிக் கொண்டாள்.
முதன் முதலில் அவள் பெயரைக் கேட்டபோது இப்படித்தான் வெறுப்பேற்றினான்.
என்எல்சி ஆபிஸர் நகர் லைப்ரரியில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த விஷ்ணு “டர் என்ற நாசகரமான ஒலியில் தன் அருகில் நாற்காலி இடுபடும் சத்தம் கேட்டு தலை தூக்கி பார்த்தான்.”
அவன் கண்களில் கேலியை மிஞ்சிய பளிச் என்ற மின்னல் கீற்று.
எதுவும் பேசாது அவள் முகத்தையே பார்த்தான்.அவள் கையில் ஷேக்ஸ்பியரின் Much ado about nothing “ இருந்தது.
சுற்றும் முற்றும் பார்த்தவள் சார் ஒன் மினிட் நான் பேசிடறேன் ப்ளீஸ்! நீங்க இருப்பீங்கன்னு நான் ஃபாலோ பண்ணி வரல! நீங்கதான் நான் ரெகுலரா வர லைப்ரரிக்கு வந்து இருக்கீங்க.டவுட் இருந்தா ப்ளீஸ் லைப்ரரியன் மேடம் கிட்ட கேளுங்க!
கிசுகிசுப்பாய் அவன் காதருகில் குனிந்து செவி மடலை உரசி ரகசியம் சொன்னாள்.
நம்ப ட்ரை பண்றேன்! ஆமா உன் பேரு என்ன?
ஷ்…. அப்புறம் சொல்றேன், இப்போ படிங்க! சைகை காட்டினாள்.
சிரிப்புடன் புத்தகத்தில் மூழ்கினான்.
ஒரு மணி நேர வாசிப்பிற்கு பின் அவன் எழுந்து வெளியே போக முயல… ஜோல்னா பேக்கை மாட்டிக் கொண்டு அவன் பின்னாடியே ஓடி வந்தாள்.
லாயர் சார் என் பெயர் கேட்ட ஞாபகம்.
ம்ம்ம்ம்…. தலையசைத்துக் கொண்டே நடந்தான்.
என் பெயர் நேத்ரா. ஃபிரண்ட்ஸ் நேத்து பேபின்னு கூப்பிடுவாங்க. அம்மா நேத்துமானு சொல்லுவாங்க.
அவள் சுவாரஸ்யமாய் சொல்லிக் கொண்டே போக அவன் ஹாசியமாய் சிரித்தான்.
என்னது நேத்து வா?
என்ன சிரிப்பு?நான் என்ன ஜோக்கா சொல்லிட்டேன்?
இல்லையா பின்ன…என்ன பெயர் இது? நேத்து, முந்தாநாததுன்னு வெகுவாய் ரசித்து சிரித்தான் .
ஹலோ பல்லு சுளிக்கிக்க போகுது! என் பெயர் ஒன்னும் தேனி குஞ்சரம்மா இல்ல…. அழகான அர்த்தமுள்ள பேரு! தேடி கண்டுபிடித்து என் டாடி வைத்து இருக்கார்.நேத்ரா என்றால் கண்கள் என்று பொருள்! சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு கிளம்பி விட்டாள்.
அப்படியா? இன்னும் சிரித்துக் கொண்டே நடந்தான்.
உங்க பேர் என்ன?
‘ விஷ்ணு” சுருக்கமாய் சொல்லி தோளை குலுக்கினான்.
இது மட்டும் என்ன வாழுதாம்? பிசுனு விசுனுன்னு….அவள் வேண்டுமென்றே உரக்க சிரித்தாள்.
நேத்து நீ ரொம்ப பேசுற! ஆடம் டீஸிங் கேஸ் ஃபைல் பண்ணிட வேண்டியது தான்!
ஆடம் டீசிங்?
ம்ம்ம்ம்… கேர்ள்ஸ் பசங்களை டீசிங் பண்ணினால் அது ஆடம் டீஸிங்! அதுக்கும் கேஸ் பைல் பண்ணலாம்.
பண்ணுங்க பண்ணுங்க! நானும் இதுவரைக்கும் கோர்ட் கேஸ்ன்னு பார்த்ததே இல்லை. சளைக்காமல் கலாய்த்தான்.
பத்து பனிரெண்டு எழுத்துல பேர் இருந்தா சுருக்கி கூப்பிடலாம்! உன் பெயரே மூன்று எழுத்து.அதை போய் என் கண்டம் பண்ணனும்?
நேரான்னு கூப்பிடலாமா? இல்லை ரா ரானு கூப்பிடலாமா? அவளை ஓட்டி எடுத்தான்.
மென்சாரலாய் இதயம் வருடிய அந்நாளைய நிகழ்வு….அதை இப்போது நினைத்து சிரித்தான்.
error: Content is protected !!