Skip to content
Post Views: 598

சிவா நடந்த அனைத்தையும் கூறுவதற்கு முன் ரித்திகாவை அழைத்து வந்து அர்ஜுனன் பக்கம் அமர வைத்துவிட்டு தானும் ஒரு பக்கம் அமர்ந்து நடந்த அனைத்தையும் கூற அர்ஜுனன் மனம் பதற தான் செய்தது… நிரவியின் மனவருத்தம் அதனால் அவளுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அவளுக்கு ரித்திகாவின் மேல் ஏற்பட்ட தேவை இல்லாத கோவம் அனைத்திற்கும் முக்கிய காரணம் தான் தான் என எண்ணி அவர் மனம் மிகவும் வருந்தியது… அவரின் மன வருத்தம் அவரின் கண்ணில் அப்படியே தெரிந்தது… அதை உணர்ந்த சிவா தன் மாமன் அருகில் அமர்ந்து “மாமா பீல் பண்ணாதீங்க… எங்க எல்லாருக்கும் நீங்க தான் ஹீரோ நீங்க இப்படி உடைஞ்சி இருக்கறதை பார்த்தா எல்லாரும் ரொம்ப பீல் பண்ணுவாங்க… முக்கியமா அத்தை ரிது நிரவி எல்லாரும் பீல் பண்ணுவாங்க… ” என்று கூறி அமைதி படுத்தினான்….
ரித்திகாவும் கேட்டு கலங்கியவள் தன் தந்தை கலங்குவதை பார்த்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டு “ப்பா நீங்க எப்பயும் எங்களுக்கு பெஸ்ட் அப்பா தான்… நீங்க பீல் பண்ணாதீங்க…” என்று கூறி அவரை அணைத்து கொண்டாள்…
Advertisement
இருந்தும் அர்ஜுனன் மனம் மாறவில்லை…, அவரின் மனம் தன் இரு மகள்களை நினைத்து தான் மிகவும் வருந்தியது…அப்போது கொஞ்சம் அழுது வீங்கிய முகத்துடன் நிரவி வர வருத்தத்துடன் தன் மகளை பார்த்தார்… நிரவியும் தன் தந்தையை ஏக்கமாய் பார்த்தாள்… அர்ஜுனன் அவளை பார்த்து வா என கை அசைத்தார்…
அதை பார்த்து சிவா அங்கு இருந்து எழுந்து வேறு சோபாவில் அமர்ந்தான்… அவள் அழுது கொண்டே அவரை அணைத்து இருந்தாள்… “குட்டிமா அழுக கூடாது… நீ மனசு அறிஞ்சு தப்பு பண்ணலையே.. நானும் அம்மாவும் உனக்கு புரிய வெச்சு இருக்கனும்.. நாங்க பண்ணல… எங்க தப்பு தான்டா… நாங்க பண்ண தப்புனால நீயும் கஷ்டப்பட்டு ரித்திகாவும் கஷ்டப்பட்டுட்டா… எல்லாம் எங்க தப்பு தான்” என்று வருந்தி கூறினார்…
இரு மகள்களும் ஒரே போல் “அப்பா எப்பயும் நீங்க தப்பு பண்ண மாட்டீங்க… எப்பவும் நீங்க தான் பெஸ்ட்…” என்று கூறினர்….
Advertisement
அர்ஜுனன் தான் மகள்களை பாசமாக அணைத்து கொண்டார்… வெளியில் நடக்கும் பேச்சு வார்த்தை கேட்டாலும் தந்தை மகள்களை தொந்தரவு செய்யாமல் சமையல் அறை சுவற்றில் சாய்ந்து கண்ணீர் வடித்து கொண்டு இருந்தார்.. அவரை மித்ராவும் பிரியவும் சமாதானம் செய்து கொண்டு இருந்தனர்…
Advertisement
பின் சுபாவே சமாதானமாகி வெளியில் அழுது கொண்டு இருந்தவர்களை நோக்கி சென்று பொறாமை கொஞ்சும் குரலில் போதும் போதும் அழுதது.. “என் மாமாவை விடுங்கடி ரெண்டு பேரும்…” என்று கூறினார்…
அவர் சமாதானம் செய்ய தான் அப்படி கூறுகிறார் என தெரிந்தும் “எங்க அப்பா” என கூறி அவரை இறுக்கி அணைத்து கொண்டனர்… அர்ஜுனனும் தன் மகள்களை இறுக்கி அணைத்தவர் சுபாவை பார்த்து கண் அடித்தார்.. சுபா சிரித்து கொண்டே உள்ளே ஓடிவிட்டார்..
ரித்திகா நிரவி இருவரும் அர்ஜுனனுடன் பேசி விட்டு தங்கள் அறைக்கு சென்று விட அர்ஜுனன் தன் அறைக்கு சென்றார்… அங்கு அர்ஜுனன் வெறுமனே படுத்து கொண்டு இருந்தார்… முகம் மட்டும் வேதனையின் சாயலில் இருந்தது… சுபா அப்போது தான் அறைக்கு வந்தார்… அர்ஜுனனின் முகம் பார்த்து வருந்தியவர் அவர் நெஞ்சில் சாய்ந்து படுத்து கொண்டார்… அர்ஜுனனுன் அவரை அணைத்து கொண்டார்…
Advertisement
சுபா அமைதியாக இருக்க அர்ஜுனன் தான் “அம்மு நாம தப்பு பண்ணிட்டோமோ… ரித்திகாவையும் ஒழுங்கா பாக்கல.. நிரவியையும் ஒழுங்கா பாக்கல… முக்கியமா என் தப்பு.. நான் ரெண்டு பேர் கிட்டயும் சரிசமா நடந்து இருக்கனும்.. நிரவி குட்டிக்கு புரிய வெச்சு இருக்கனும்… எல்லாம் என் தப்பு தான்…” என்று கவலையாக கூறினார்…
சுபாவோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க “என்ன அம்மு.. எதுவும் பேச மாட்டிங்குற…” என்று கேட்க அவர் கண்ணில் நீர் வடிய அவர் மார்பில் இன்னும் புதைந்து கொண்டார்…
தன் தாய் தந்தை அழுவது ஆரவிற்கு தெரிந்ததோ என்னவோ அந்த நேரத்தில் அழைத்து இருந்தார்… அவன் அழைப்பதை பார்த்த அர்ஜுனன் “அம்மு முகத்தை துடை.. தம்பி போன் பண்ணி இருக்கான்…” என்று கூறி மூச்சை இழுத்து விட்டவர் அவன் அழைப்பை ஏற்றார்…
“அப்பா” என்று சந்தோசமாக அழைத்தான்… அவன் இப்போது ஜெர்மனியில் படித்து கொண்டு உள்ளான்… அவனாக அழைத்து பேசினால் தான் உண்டு… ஆறு மாதத்திற்கு ஒரு அர்ஜுனன் சென்று தன் லிட்டில் சிங்கத்தை பார்த்து விட்டு வந்து விடுவார்…
“லிட்டில் சிங்கம்” என்று அர்ஜுனன் பாசமாக அழைக்க “அப்பா” என்று சிணுங்கலாய் அழைத்தான்…
“என்ன லிட்டில் சிங்கம்” என்று குறும்பாக அழைக்க “அப்பா நான் சின்ன பையன் இல்லை” என்று செல்லமாக கூறினான்….
சுபா அதற்குள் தன்னை திடப்படுத்தி வந்தவர் “போதும் என் பையனை கிண்டல் பண்ணது” என்று கூறி “தம்பி” என்று பாசமாக அழைத்தார்…
“அம்மா” என்று கூறி செல்லம் கொஞ்சியவன் “அம்மா வீடியோ கால் வரட்டா” என்று கேட்டு அவர் சரி என்று கூறுவதற்குள் வீடியோ கால் செய்து விட்டான்… இருவரையும் மனதார சிரிக்க வைத்த பின் தான் அழைப்பை துண்டித்தான்… இருவரும் அதன் பின் அதை பற்றி பேசவில்லை.. தங்கள் மகள்களை இனிமேல் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் முடிவு எடுத்து கொண்டனர்..
அனைத்தும் சரியாகி விட்டதா என்று கேட்டால் இல்லை ஆனால் அதில் இருந்து மீண்டு வர முடிவு எடுத்து விட்டனர் நிரவியும் ரித்திகாவும்… அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் இருவரும் பேசிக்கொள்வது இல்லை….
நிரவி பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு தன்னை தயார் செய்ய ஆரம்பித்து இருந்தாள்… ரித்திகா எப்போதும் போல் கல்லூரிக்கு சென்று வந்து கொண்டு இருந்தாள்… நாட்கள் அதன்போக்கில் செல்ல நிரவியும் தன் பொது தேர்வை வெற்றிகரமாக முடித்து இருந்தாள்…
அய்யனார் கோவில் திருவிழா வந்து இருக்க ஆரவை தவிர்த்து அனைவரும் திருவிழவிற்கு வந்து இருந்தனர்… திருவிழா நாள் நல்லபடியாக விடிய காலை படையல் முடிந்து மக்கள் ரா பூசைக்கு எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.. அய்யனார் தனக்கு என்ன வாக்கு தருவார் என்று பயந்து கொண்டு இருந்தனர்..
அனைவரும் எதிர்பார்த்த ரா பூசையும் வந்து இருந்தது… நீண்ட நேர காத்திருப்புக்கு பின் அய்யனார் அர்ஜுனன் உடலில் இறங்கி இருக்க மக்கள் தங்கள் வாக்கை கேட்க ஆரம்பித்து இருந்தனர்… எப்போதும் போல் அர்ஜுனன் குடும்பம் கடைசியில் வர வாணன் வர்ணன் குடும்பத்துக்கு நல்லபடியாக கூறியவர் சசியை பார்த்து “உன் பாசம் என்னை கலங்க வைக்குது எப்பவும் குடும்பத்தோட நல்லா இருப்ப….” என்று ஆசீர்வாதம் கூறி அனுப்பி வைத்தார்..
“எப்போதும் அண்ணன் சொல்படி நட.. எப்பவும் உனக்கு வெற்றி தான்” என கருணாவிற்கு கூறினார்…
முகுந்தன் குடும்பத்துக்கு “வீட்டுல பெரியவங்களுக்கு உடல்நலத்துல கொஞ்சம் கஷ்டம்.. கவனமா பாத்துக்க… உனக்கு துணையா நான் இருப்பேன் எப்பவும்…” என்று கூறி அனுப்பினார்…
சிவனேஸ் தனியாக அவர் முன் வர அவனை பார்த்து சிரித்தவர் “உன் வாழ்க்கை துணையை கண்டுபிடிச்சிட்ட போல.. அவளை கைப்பிடிக்க கொஞ்சம் கஷ்டம் வரும்.. கெட்டியா பிடிச்சுக்கோ… உனக்கு துணையா எப்பவும் இருப்பேன்..” என்று கூறினார்… அவன் விழிக்க “நீ நினைக்குறவ தான் உன் துணை.. எப்பவும் அவளுக்கு துணையா இரு…” என்று வாழ்த்தினார்…
ரித்திகா வர நீ ஏன் கவலைப்படனும் தாயி… உன் நல்ல மனசுக்கு எப்பவும் சந்தோசமா இரு… உன்னக்கானவன் வருவான் சந்தோசமா வெச்சுப்பான்..” என்று கூறி அனுப்பினார்…
நிரவி வர “தாயி உனக்கு என்ன குழப்பம்… மனசை நிதானமா வெச்சுக்கோ… நீ நினைக்குறது உனக்கானது இல்லை… உனக்கான அன்பு கிட்ட சீக்கிரம் போய் சேருவ… உனக்காக எப்பவும் நான் இருப்பேன்.. ஜாக்கிரதை தாயி” என்று கூறி வழக்கம் போல் அவளுக்கு கயிறு கட்டிவிட்டார்…
கடைசியில் சுபா வர “அதுக்குள்ள ஆசை வந்துருச்சா உனக்கு. இங்க இருந்து போக… என்ன பயம் உனக்கு… உன்னை விட்டு அவன் இருந்துருவானா இல்லை உன் குடும்பம் தான் இருக்குமா… நீ தான் இந்த குடும்பத்துக்கு முக்கியம் நீ இல்லைனா இவனும் இல்ல இந்த குடும்பமும் இல்ல… நீ மறைக்குறது வெளியில் வர ஒரு நிமிஷம் ஆகாது… உன்னை பாத்துக்கோ.. நீ நல்லா இருந்தா தான் இவன் நல்லா இருப்பான்…” என்று அழுத்தி கூறியவர் அர்ஜுனன் உடம்பில் இருந்து இறங்கி இருந்தார்…
error: Content is protected !!