Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️ 45(இரண்டாம் பாகம்)

நாட்கள் அதன்போக்கில் நகர சுபாவின் உடல்நிலை கொஞ்சம் தேறி இருந்தது.. மாத்திரையின் உபயத்தால் வலி குறைந்து இருந்தது… அர்ஜுனன் ஒரு வாரம் அவரிடம் பேசவே இல்லை… முகம் கடினப்பட்டு தான் அவரை சமாதானம் செய்து இருந்தார் சுபா..

அர்ஜுனன் காதலிலும் வீட்டினருடையை கவனிப்பிலும் வலி குறைந்து இருந்தாலும் இன்னும் அவரை ஒரு வேலை கூட செய்யவிடுவது இல்லை மித்ராவும் பிரியாவும்…

நிரவி பதினொன்றாம் வகுப்பு சேர்ந்து இருக்க  ரித்திகா மூன்றாம் ஆண்டு கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து இருந்தனர்… ரித்திகா நிரவியிடம் பேச முயற்சி செய்யவில்லை.. எங்கு தான் பேசுவது அவளுக்கு கோவத்தை தருமோ என்று அமைதியாக இருந்துவிட்டாள்….



Advertisement

நிரவியோ குற்றவுணர்ச்சியில் அவளிடம் பேசாமல் இருந்துவிட்டாள்… சிவாவின் மேல் உள்ள காதல் இருக்கிறதா என்று கேட்டால் அவளுக்கு தெரியவில்லை… அவளின்  அய்யனாரப்பனின் வாக்கு அவளுக்கு குழப்பத்தை தந்து இருந்தது…  அவளுக்கு ஒன்று தெளிவாக புரிந்து இருந்தது அவளின் மாமன் அவளுக்கு இல்லை என… அதுவும் ரித்திகா மற்றும் சிவனேஸிற்கு சொன்ன வாக்கு அவளுக்கு குழப்பத்தை தான் தந்து இருந்தது..

அவளுக்கு இருந்த குழப்பத்தை தீர்க்க இருந்த ஒரே ஆள் ரியாஸ் தான்… அவனோ போலீஸ் ட்ரைனிங்கில் இருந்ததால் அவனிடம் பேச முடியவில்லை… அதோ இதோ என நாட்கள் ஓட ஊரில் முக்கிய தலைவர் ஒருவர் இறந்ததால் திருவிழா இல்லாமல் பூஜை மட்டுமே நடந்தது…

நிரவி பன்னிரெண்டாம் வகுப்பு சேர்ந்து இருக்க ரித்திகா நான்காம் ஆண்டு படித்து கொண்டு இருந்தாள்…  சுபாவிற்கு சிவனேஸ் ரித்திகாவில் இருந்து அந்த வீட்டு கடைக்குட்டி தஸ்விகா வரை அனைவரும் சமம் தான்… யார் தவறு செய்தாலும் திட்டு தான்… அதை யாரும் கேட்கமாட்டர்கள்… பிள்ளைகள் அனைவருக்கும் சுபா என்றால் உயிர் தான்… வீட்டில் அன்று பஞ்சாயத்து.. பஞ்சாயத்துக்கு காரணம் அந்த வீட்டின் கடைக்குட்டி தஸ்விகா…

Advertisement

“சுபிம்மா உன் ப்ரெண்டை என்னனு கேளு…அவ என்னை கிள்ளிட்டா…” என்று ஒரு இடத்தை காட்டியது…

Advertisement

தஸ்விகா அவ்வாறு கூறியதை கேட்ட மித்ரா “சுபா விடு அவளை.. பாரு அவ இவனு சொல்றா…” என்று கோவமாக கூறினாள்…

சுபாவோ “மித்து அமைதியா இரு என்று கூறிவிட்டு தஸ்வி குட்டி அம்மாவை அவ இவனு சொல்ல கூடாதுனு சொல்லி இருக்கேன்ல… ஏன் அப்படி சொல்ற… நீ என்ன குறும்பு செஞ்ச” என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே வாணன் குடும்பம் வந்து இருக்க தஸ்விகா அந்த நேரத்தை பயன்படுத்தி மித்ராவுக்கு பழிப்பு காட்டி ஓடிவிட்டது…

Advertisement

சிவா அன்று ஊருக்கு வந்து இருக்க  வாணன் ஒரு விஷயம் பேச வேண்டும் என அனைவரையும் அர்ஜுனன் வீட்டிற்கு அழைத்து இருந்தார்… வாணன் தான் பேச்சை ஆரம்பித்து இருந்தார்.. “அர்ஜுனா சிவாவுக்கு வயசு ஆகிட்டே போகுது ஆனா இவன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டிங்குறான்… என்னனு கேட்டு சொல்லு உன் மருமகன் கிட்ட” என்று கோவமாக கூறினார்…

அனைவரின் பார்வையும் சிவாவின் மேல் இருக்க அவனோ யாரை பற்றியோ பேசுகிறார்கள் என எங்கோ பார்த்து கொண்டு இருந்தான்… ஆகாஷ் தான் சிவா “ண்ணா உன் கல்யாணத்தை பத்தி தான் பேசுறாங்க.. நீ என்ன எங்கயோ பார்த்துட்டு உட்காந்து இருக்க எல்லாரும் உன்னை தான் பாக்குறாங்க…” என்று மெதுவாக கூறினான்..

அவனோ அப்போதும் அமைதியாக இருக்க அர்ஜுனன் தான் “சிவா இப்போ ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற… என்ன பிரச்சனை” என்று கேட்டார்…

அவனோ “மாமா நான் கல்யாணமே  வேண்டாம்னு சொல்லல  இப்போ

உடனே  வேண்டாம்னு தான் சொல்றேன்” என்று கூலாக  கூறினான்…

“இப்போ உடனேவா செட் ஆக போகுது… பொண்ணுக்கு  உன்னை பிடிக்கணும் … உனக்கு பொண்ணை  பிடிக்கணும்… ஜாதகம் செட் ஆகனும்.. எவளோ இருக்கு.. அடுத்த மாசமே கல்யாணம் பண்ற மாதிரி சொல்ற நீ..” என்று கேட்டார்…

“ஏன் என்னை பொண்ணு வேண்டாம்னு சொல்லிடுமா” என்று மீசையை முறுக்கி விட்டு ஓரக் கண்ணால் ரித்திகாவை பார்த்தவாறே கேட்டான்…  அதை நால்வர் பார்த்தனர்.. இருவருக்கு ஆச்சர்யம் என்றால் இருவருக்கு அதிர்ச்சி…

“உன்னை யாருடா வேண்டாம்னு சொல்ல போறா… சிங்கம் மாதிரி ஜம்முனு இருக்க..  உன் அப்பாவை நினைச்சு பாரு… இன்னும் எத்தனை நாள் வேண்டாம்னு சொல்ல போற..” என்று  கேட்டார்..

“சரி இன்னும் ஆறு மாசம்.. நானே எனக்கு பிடிச்ச பொண்ணை சொல்றேன்.. கல்யாணம் பண்ணி வைங்க.. அடுத்த லீவுக்கு வரப்ப கல்யாணம் முடிச்சிட்டு தான் நெக்ஸ்ட் பிளையிடுக்கு போவேன்.. நிஜமா அடுத்த லீவுக்கு  வரப்ப எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணுங்க…” என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்..

அதன்பின் அவனிடம் யாரும் கல்யாணத்தை பற்றி பேசவில்லை.. நாட்களும் அதன்போக்கில் நகர நிரவி மட்டுமே சோகமாக சுற்றி கொண்டு இருந்தாள்… சசி அவளை தனியாக ஒரு நாள் அழைத்து சென்று “குட்டிமா அன்னிக்கு நீ சிவா ரித்திகாவை பார்த்ததை நானும் பார்த்தேன்… அப்போ இருந்து பாக்குறேன் நீ சரியே இல்லை… நான் வேணும்னா சிவா கிட்ட பேசட்டா…” என்று கேட்டார்…

“வேண்டாம் வேண்டாம் சசிப்பா.. எனக்கு கஷ்டமா தான் இருக்கு.. ஆனா போன வருஷ திருவிழா அப்ப அய்யனாரப்பா சொன்னது குழப்பமா இருந்தது.. ஆனா அன்னிக்கு எனக்கு புரிஞ்சது… நீ நினைக்குறது உனக்கானது இல்ல அப்டினு சொன்னாரு… கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு… நான் சரியாடுவேன்.. இனிமே டிஸ்ட்ராக்ட் ஆகா மாட்டேன்… இந்த இயர் எனக்கு பப்ளிக் அதுல தான் கான்சென்ட்ரேட் பண்ணுவேன்… அவங்க லைப் அவங்க டெசிசன்.. நாம அதுல தலையிட  கூடாது சசிப்பா…”  என்று கூறி அறைக்கு சென்றுவிட்டாள்…. சசி செல்லும் அவளை தான் கவலையாக பார்த்து கொண்டு இருந்தார்…

நாட்கள் அதன்போக்கில் செல்ல வீட்டில் அனைவரும் கொஞ்சம் பரபரப்பாக இருந்தனர்.. அன்று நிரவிக்கு முதல் பொது தேர்வு… வீட்டில் அனைவரும் வாழ்த்தி இருந்தனர்.. ரித்திகாவும் வாழ்த்தி இருந்தாள்.. சிவா முன்னாடி நாள் அவளுக்கு அழைத்து நன்றாக எழுத்து என்று கூறி வைத்து இருந்தான்… ஆனால் ரியாஸ் தான்

அழைக்கவில்லை.. அது கொஞ்சம் கவலையாக இருந்தது…  ஆனால் அவள் கிளம்ப கால் மணி நேரம் இருக்கும் போது அழைத்து இருந்தான்.. அவனிடம் பேசிய பின்னர் தான் அவள் தெளிவாய் இருந்தாள்..

அவளும் நல்லபடியாக தேர்வு அனைத்தையும் முடிக்க சிவாவும்

தன்னுடைய விடுமுறைக்கு வந்து இருந்தான்…

கார்த்திகா ரித்திகா படித்த கல்லூரியில் முதலாம் ஆணடின் இரண்டாம் செமஸ்டர் படித்து கொண்டு இருக்க அன்று ஞாயிறு என கார்த்திகாவுக்கு விடுமுறை…. அவளை பார்க்க நிரவி வந்து இருந்தாள்…

இருவரும் சந்தித்து பேசியே மூன்று மாதங்கள் மேல் ஆகி இருந்தது….. எனவே அவளும் விடுமுறை விட்டதும் கார்த்திகாவுடன் இருக்க வந்துவிட்டாள்.. சிவா ஊருக்கு வந்தது நிரவிக்கு தெரியாது..

கார்த்திகாவும் தெரிந்து இருக்கும் என விட்டுவிட்டாள்கார்த்திகா தான் நிரவியிடம் ரித்திகா அக்கா கிட்ட பேசுறியா நிரவி என்று கேட்டாள்

அவள் இல்லை என தலையாட்டி விட்டுநான் எனக்குள்ள இருக்கறதை சசிப்பா கிட்டயும் ரியாஸ் கிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கேன்ஆனா ரெண்டு பேர் கிட்டயும் முழுசா சொன்னது இல்ல.. எனக்கு அவங்க கிட்ட பேச கில்ட்டா இருக்கு கார்த்தி க்கா…” என்று சசியின் மூலம் அறிந்த அனைத்தையும் கூறியவள்அவங்க பாவம் க்காஅந்த டைம் அவங்களுக்குனு இருந்தது அப்பா மட்டும் தான்.. அவங்களுக்கு வேற யாரும் தெரியாதுஅதுனாலதான் அப்பா கூடயே இருந்து இருக்காங்கநான் அந்த வயசுல புரிஞ்சிக்காம அப்பாவை என்கிட்ட இருந்து பிரிச்சிக்கிட்டாங்கனு கோவப்பட்டேன்…. பெரியவளா ஆன பின்னாடியும் சரியா புரிஞ்சிக்கல..” என்று கூறி கவலைப்பட்டாள்

கார்த்திகா அவளை அணைத்து கொண்டுசின்ன வயசுல தப்பா புரிஞ்சிகிட்ட நிரவிபட் இப்போ புரிஞ்சிகிட்ட..” என்று கூறி கொண்டு இருக்கும் போதேஇல்ல க்கா.. ரெண்டு மூனு வருஷம் முன்னாடி அவங்களை ரொம்ப திட்டிட்டேன்.. என்ன நடந்ததுனு தெரியாமஎன்று கூறியவள் ரித்திகாவை அவள் தோழி அவமானப்படுத்த முயன்றது ஒரு மாணவன் தவறாக பேசியது சிவா அவளை காப்பாற்றியது என அனைத்தும் கூறியவள்அன்னிக்கு சிவா மாமா அவங்களை காப்பாத்தி தான் இருக்காங்க.. நான் தான் அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க.. அப்படினு நினைச்சு அவங்களை கண்டபடி திட்டிட்டேன்…” என்று கூறினாள்

என்ன நிரவி இது.. சரி விடு இனிமே சட்டு சட்டுனு முடிவு எடுக்காம யோசிச்சு முடிவு எடு…” என்று கூறினாள்

அவளும் சரி என தலையாட்டினாள்.. பின்பு கார்த்திகாவே அண்ணாவை லவ் பண்றியா நிரவி என்று கேட்டாள்

அவள் அமைதியாக இருக்க சொல்லு நிரவி என்று கேட்டாள்எனக்கு தெரியல கார்த்தி க்காஇப்போ என் மனசுல லவ் இல்ல என்று கூறியவள் சாமி கோடுக வாக்கு.. அவளின் குழப்பம் ஆறு மாதம் முன் நடந்தது என அனைத்தையும் கூறினாள்

அதை கேட்ட கார்த்திகாவுக்கு என்ன சொல்ல என தெரியவில்லைஅதை இன்னொருவரும் கேட்டு கொண்டு இருந்தார்.. இருவரும் தோட்டத்தில் அமர்ந்து தான் பேசிக்கொண்டு இருந்தனர்…

கார்த்திகா அவளை தன் மடி தாங்கி நிரவிம்மா.. எனக்கு நிஜமா என்ன சொல்றது தெரியலஆனா அண்ணா லைப் அண்ணா தான் முடிவு எடுக்கனும்.. சும்மா பார்த்ததை வெச்சு நாம நினைக்க கூடாதுஎன்று கூறி கொண்டு இருக்கும் போதே வீட்டிற்குள் இருந்து சத்தம் பெரிதாக கேட்டது.. இருவரும் உள்ளே சென்று பார்க்கும் போது சிவா சத்தமாக அப்பா எனக்கு ரித்திகாவை தான் பிடிச்சு இருக்கு.. கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளை தான் கட்டுவேன் இல்லைனா வேண்டாம் என கொஞ்சம் கோவமாக கூறினான்

ஆனால் வாணனோ நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்அந்த பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வரக்கூடாது.. என் வீட்டுக்கு நிரவி தான் மருமக.. என்று கூறினார்

அப்போது நிரவியை அழைத்து செல்ல வந்த அர்ஜுனன் நீங்க இப்ப வரைக்கும் ரித்திகாவை என் பொண்ணா நினைக்கலயா அத்தான்என்று வருத்தமாக கேட்டு கொண்டே உள்ளே வந்தார்.. அப்போது அர்ஜுனனை யாரும் அங்கு எதிர்பார்க்கவே இல்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!