கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ ? – 2
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ ? – 2
அவன் வகுப்பு முடிந்து சென்றவுடன் அனுவும் ஆதினியும் கேண்டீன் சென்றார்கள் . கவினும் வந்து இணைந்து கொண்டான் .” ஆதி உன் வீடு அவ்ளோ அழகா இருக்குமாடி “என கேட்டாள் அனு. “அமெரிக்காவில் பெரிய இன்ஜினீயர் கட்டுன வீடு சூப்பரா தான் இருக்கும் ” என கூறினான் கவின். உன் வீடு எப்படி இருக்கும்னு காட்டேன் என கேட்டார்கள் இருவரும் அதற்குள் அவள் வகுப்பு நண்பர்கள் கூடி விட்டனர் . இவள் விளையாட்டாக ஹோம் டூர் செய்த வீடியோவை அவர்களுக்கு காட்டினாள் . அதில்
Advertisement
” ஹே அம்மு , எதுக்கு நான் கோலம் போட்றத வீடியோ எடுக்குற ” என ஒரு மென்மையான குரல் கேட்டது அது அவள் தாய் எழில்மொழி . அழகு ஓவியம் , மென்மையானவர் , கணவர் மீது தீரா காதல் கொண்டு அவருக்காக தன் உறவுகளை இழந்து கணவனும் மகளும் மட்டுமே தன் உலகம் என வாழ்பவர் .
ஆதினியின் வீடு , அது ஒரு குட்டி அரண்மனை என்று சொல்லலாம் . பழமையும் புதுமையும் கலந்து இருக்கும். வீட்டின் முகப்பில் இரண்டு புறமும் திண்ணை போன்ற அமைப்பு இருக்கும் பின்பு அழகான வரவேற்பறை , அதில் முற்றம் போன்ற அமைப்பு உருவாக்க கூரையில் ஆட்டோமேட்டிக் கண்ணாடி கதவு இருக்கும் . பனி பொழியும் காலத்தில் அக்கதவு மூடப்பட்டிருக்கும், அதை தாண்டி மற்றொரு வரவேற்பறை அது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும், அதில் அழகான வேலைப்பாடுகள் உடைய மர ஊஞ்சல் இருக்கும். எழில்மொழி தன் வீட்டை பிரிந்த வருத்தம் இருக்க கூடாது என அவருக்காக காட்டியது தான் அந்த வீடு . வரவேற்பறையில் அருகிலேயே சமையற் கூடம் இருக்கும் அது ஓபன் கிச்சன் அமைப்பில் இருக்கும் அனைத்து நவீன சாதனங்களும் இருக்கும் , அதே நேரம் அம்மிக்கல் உரல் போன்றவைகளும் இருக்கும். வரவேற்பறை இன்னொரு மூலையில் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் அங்கு ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு நாட்டின் சிறந்த வடிவமைப்பில் இருக்கும் . ஆதினியின் அறை ஒரு குட்டி வீடு போல இருக்கும் உள்புறம் சுவரில் சிற்பங்கள் செதுக்கியது போல ஒரு புறம் மற்றொரு புறம் சுவர் முழுதும் ஒரு ஓவியம் இருக்கும் அது ஆதினியின் தந்தை வரைந்தது அதில் ஒரு பெரிய மரத்த்தில் ஒரு சிறு பெண் ஊஞ்சல் ஆடுவது போல் இருக்கும் அதை தூரத்தில் ஒரு சிறுவன் பார்த்து கொண்டிருப்பான்.
இப்படி அவ்வீட்டை வர்ணித்தால் அதுவே ஒரு கட்டுரை ஆகி விடும். பார்ப்போரை நிச்சயம் வியந்து பார்க்க வைக்கும் அமைப்போடு இருக்கும் ஆதினியின் வீடு . ஆதினியின் தந்தை இளமாறன், ஒரு பெரிய கட்டிட பொறியாளர் . அமெரிக்காவில் முதலில் வேலைக்கு வந்தவர் பின்பு அங்கேயே தொழில் தொடங்கி க்ரீன் கார்டும் வாங்கி விட்டார் . ஆதினி அமெரிக்காவில் பிறந்ததால் அவள் பிறந்த முதலே அமெரிக்க பிரஜை தான்.
Advertisement
Advertisement
இன்று
ஆதினியின் நண்பர்கள் அவள் வீட்டை பார்த்து பிரமித்து விட்டார்கள்.சிலர் பொறாமைப்படவும் செய்தார்கள். அன்று ஹாட் டாப்பிக் ஆதினியின் ஹோம் டூர் பற்றி தான்.
அன்று இரவு ஹாஸ்டலில் ,
Advertisement
ஆதினிக்கு அவன் ஏன் அங்கு வந்தான் என்று குழப்பம். அனு, “ஆதி ,என்னடி ட்ரீமா பாரி சார் பத்தி தான , அவர் எவ்ளோ ஸ்மார்ட்டா இருக்கார் பாத்தியா. ஸ்மார்ட் மட்டும் இல்ல கிளாஸ் ஜாலியா கொண்டு போறார் இந்த மாறி ப்ரொபெஸர்ஸ் வர மாற்றாங்க ” என்று பேசி கொண்டே போனாள். ” அனு ப்ளீஸ் ஸ்டாப் இட், அடுத்தவங்க என்ன மன நிலைல இருக்காங்கனு யோசிக்காம பேசிக்கிட்டே இருப்பியா நீ படிக்க வந்தியா சைட் அடிக்க வந்தியா” என்று ஆதினி கத்தியவுடன் அனு திகைத்து நின்று விட்டாள். இதுவரை ஆதினி அனுவிடம் கோப பட்டதில்லை. அனு கண்கள் கலங்கி விட்டது.
ஆதினிக்கும் அனுவின் முகத்தை பார்த்தவுடன் தான் தன்னுடைய தவறு புரிந்தது.தன் மனக்குழப்பத்தில் அனுவை காயப்படுத்திவிட்டோம் என புரிந்தது.
” சாரி அனு , எதோ கோவத்துல பேசிட்டேன் ” என கூறினாள் ஆதினி.
அனு எதுவும் பேசாமல் படுத்து விட்டாள். ஆதினி பலமுறை அழைத்தும் அனு பேச வில்லை.அன்று இரவு இருவருக்குமே உறக்கம் இல்லை.
மறுநாள் கல்லூரியில் கவின் அவர்களை பார்த்து எதுவோ சரி இல்லை என்று மட்டும் புரிந்து கொண்டான்.
இருவரையும் பார்த்து “கேண்டீன் போலாமா” என கேட்டான் கவின். ஆதி தான் வரவில்லை என கூறிவிட்டாள், அனுவும் கவினும் கேண்டீன் சென்றார்கள் . ஆதி இல்லாமல் செல்வது இதுவே முதல் முறை எனினும் என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள கவின் கூட்டி சென்றான்.
“என்னாச்சு அனு,ஆதிக்கும் உனக்கும் என பிரச்சனை” என கேட்டான் கவின். அவன் கேட்டு முடித்தவுடன் அனுவின் அழ ஆரம்பித்து விட்டாள். கவின் “அனு, அழாதே ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப், என்ன ஆச்சுன்னு சொல்லு,ஏன் இப்படி அழற உனக்கும் ஆதிக்கும் என்ன பிரச்சனை ?”என்று கேட்டான் .அனு அழுது கொண்டே நேத்து நடந்ததை கூறினாள் “ஆதி இப்படி சொல்லுவானு நான் நினைக்கவே இல்ல ,என்னால அவ சொன்னத தாங்கிக்கவே முடியல ,நான் எப்பவும் போல ஜாலியா தான் பேசினேன் ஆனா ஆதி கோபப்பட்டுட்டா, அவ மனச நான் புரிஞ்சுக்கலைன்னு சொல்லிட்டா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கூறினாள்.
“அனு, நான் சொல்றத கொஞ்சம் கேளு ,ஆதி நம்ம பழைய ஆதி கிடையாது அவளுக்கு ஏதோ பிரச்சனை நம்ம கிட்ட சொல்லவும் முடியாம அவ ரொம்ப கஷ்டத்துல இருக்கா நாம அவளை கூட இருந்து பாத்துக்கணும் இந்த டைம்ல
“எனக்கும் புரியுது கவின் அதனாலதான் அவளை முடிஞ்ச அளவு ஹாப்பியா வைக்கணும்னு பார்க்கிறேன் அவகிட்ட பேசாம என்னால இருக்க முடியாது. நான் அம்மா அப்பாவை மிஸ் பண்ணாம இங்கே இருக்கிறதுக்கு காரணமே நீயும் ஆதியும் தான் அவ என்கிட்ட எதுக்கு கோபப்பட்டான்னே புரியல காரணமே இல்லாம கோவப்பட்டது எனக்கு கஷ்டமா இருக்கு இப்போ உன்கிட்ட சொல்ல எனக்கு ஃப்ரீயா இருக்கு .ஓகே டா நான் போய் பேசுறேன், பாவம் அவ காலையில சாப்பிடலா நம்ம போய் அவளை கூட்டிட்டு வரலாம் சாப்பிட” என கூறினாள் அனு
“ நீ சாப்பிட்டியா காலையில” என்று கேட்டான் .
“ இல்லடா ரெண்டு பேருமே சாப்பிடல பசிக்குது வேற “என கூறினாள் அனு
“அதான பார்த்தேன் உனக்கு பசிக்காம இருக்குமா” என பேசி க்கொண்டே ஆதியை அழைக்க சென்றார்கள்.
இங்கு
ஆதி உன்னை எச்ஓடி சார் கூப்பிட்டாராம் என்று கூறினாள் வகுப்பு தோழி ஒருத்தி
ஆதி எச்ஓடியின் அறைக்கு சென்றாள் “எக்ஸ்க்யூஸ் மீ சார் மே ஐ கம் இன்” என்று கேட்டபோது “எஸ் கம் இன்” என்று ஒரு குரல் கேட்டது நம் கதையின் நாயகன் தான் அமர்ந்திருந்தான் ஆதினி திகைத்தது ஒரு நிமிடம்தான்,”எதுக்கு சார் என்னை வர சொன்னீங்க” என்று கேட்டாள்.
“ஆனால் நான் உங்கள வர சொல்லலையே நான் உங்க உங்க கிளாஸ் கேர்ள் கேர்ள்ஸ் ரெப்ரஷன்டேடிவ் தான் வர சொன்னேன்” என கூறினான் பாரி
“ நான்தான் எங்க கிளாஸ் கேர்ள்ஸ் ரெப்ரசென்டேட்டிவ் சார்” என கூறினாள் ஆதி.
அது தெரிந்து தான கூப்பிட்டேன் என்று மனதில் நினைத்து கொண்டே “உங்க உங்க கிளாஸ்ல இருக்க ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் ஈவினிங் அசெம்பிள் பண்ணுங்க ஒரு அனௌன்ஸ்மென்ட் பண்ணனும் “என கூறினான் பாரி
“ஓகே சார்” என்று கிளம்ப எண்ணினாள் .”மிஸ் ஆதினி இன்னும் நான் முடிக்கல உங்க கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ் ஓட டீடைல்ஸ் எல்லாம் எனக்கு வேணும் “என கேட்டான் “அப்புறம் உங்க ஸ்டுடென்ட்ஸ் ஓட மார்க் லிஸ்ட் கொண்டுட்டு வாங்க”என்று பல வேலைகள் சொல்லிக் கொண்டே இருந்தான் .
“அப்புறம் ஆதினி ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல” என்று கேட்டான் “சார் நான் நேம் லிஸ்ட் எடுத்துட்டு வரேன்” என்று கிளம்ப பார்த்தாள் “இருங்க இங்கே பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துட்டு போங்க உங்க மெயில்ல இருந்து “ என்று கூறியவுடன் மறுக்க முடியாமல் அவள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது “ஹலோ, அம்மு “என்று கூறியவுடன் ஆதினி சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் அங்கு பாரியும் மொபைலை காதில் வைத்துக் கொண்டிருந்தான் மொபைலில் எதிர்புறம் அவன் நண்பன் அருண் கத்திக் கொண்டிருந்தான் நான் அருண் பேசுறேன் டா என்று .
“ஏன்டா அம்மு என்ன விட்டுட்டு போன என்ன நீ யோசித்து பாக்கலையா உன்னை நினைத்து நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்கு எனக்கு “என்று அவன் உயிர் உருக்கும் குரலில் பேசிய உடன் ஆதினிக்கு கண்கள் கலங்கிவிட்டது தன்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு சார் நான் ஒரு நிமிஷம் வெளியில போயிட்டு வரேன் என்று வெளியில் தூரத்தில் ஒரு மரத்தடியில் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதுவிட்டாள் அதை பாரியும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
“ஏன்டி நீயும் கஷ்டப்பட்டு என்னையும் என்னை கஷ்டப்படுத்துற உன் மனசுல என்ன இருக்குன்னு சொன்னா தானே எனக்கு தெரியும் உன்ன விட மாட்டேன் அம்மு” என்று மனதில் கூறிக் கொண்டான் .
ஆதினி அறையில் இருந்து வெளியே வந்து அழுவதையும் அறையினுளிருந்து பாரி வெளியேறுவதையும் பார்த்து கவின் தவறாக புரிந்து கொண்டான். தன் தோழியிடம் பாரி தவறாக நடந்து கொண்டான் என்று நினைத்து பாரியிடம் சென்றான்.
“ சார் என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க பெரிய பிஸ்னஸ் மேனா இருக்கலாம் பவர்ஃபுல்லான ஆளா இருக்கலாம் ஆனா என் பிரண்டுக்கு ஏதாவது பிரச்சனைனா நான் சும்மா இருக்க மாட்டேன் எதனால் அழுதான்னு தெரியல அதுக்கு நீங்க தான் காரணம் என்றால் உங்க முதல் எதிரி நானா தான் இருப்பேன்”என்று சிலிர்த்துகொண்டிருந்தான்
“இவனால என்ன பண்ண முடியும்னு யோசிக்காதீங்க என்ன வேணாலும் பண்ணுவேன் “என்ற அவனைப் பார்த்து புன்னகைத்த பாரி “அவங்க ஏன் அழறாங்கன்னு நீங்க அவங்க கிட்ட தானே போய் கேட்கணும் மிஸ்டர் கவின் என்று கூறினான் உண்மையிலே நீங்க உங்க ஃப்ரண்ட் அழக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா காரணத்தை கண்டுபிடிங்க “என்று கூறினான்.
“உங்களுக்கு முன்னாடியே ஆதி தெரியுமா சார்” கவினுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது “அப்ப அவ ஏன் இப்படி இருக்கான்னு உங்களுக்கு தெரியும் உண்மைய சொல்லுங்க” என்று கேட்டான்.
உங்க பிரெண்ட்ஷிப் நினைச்சா எனக்கு சந்தோஷமா இருக்கு கவின் ஆனா ஆதினி ஏன் கஷ்டமா இருக்கான்னு நீங்க அவகிட்ட தான் கேட்கணும் அவ கஷ்டப்படுவதை பார்த்து நானும் சந்தோஷமா இல்ல அது மட்டும் தான் சொல்ல முடியும் கண்டிப்பா அதுக்கான காரணம் மட்டும் தெரிஞ்சா நான் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் அது சரி பண்ணிடுவேன் என்று கூறி சென்று விட்டான்
கவினுக்கு ஒரே குழப்பமாக இருந்தது . ஆதிக்கும் பாரிக்கும் என்ன தொடர்பு என்று புரியாது விழித்துக் கொண்டிருந்தான் அப்போது வந்த அனுபவம் ஆணியே சாப்பிட கூட்டிட்டு வரேன்னு சொல்லி இங்க என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டாள். ஆமா சரி வா
போலாம் என்ற ஆதியிடம் சென்றார்கள் , வருவதை பார்த்த ஆதினி தன் முகத்தை முகத்தை மாற்றிக் கொண்டாள் ,அணு முறைத்துக் கொண்டே “வா சாப்பிட போலாம்” என்று கூப்பிட்டாள் .
அனு பேசிய உடன் ஆதினிக்கு சற்று ஆறுதலாக இருந்தது அவளை கட்டிக்கொண்டு அழுதாள் ஆதினி அவ்வாறு அழுகவும் அணு பதறி விட்டாள் மனதின் பாரம் தீரும் வரை அணுவைக் கட்டிக்கொண்டு அழுதாள். ஏன் ஆதி இப்படி அழற என்றாள் கவின் கண்ணை காட்டி அழட்டும் விடு என்று கூறி விட்டான் .
ஆதினின் முதுகை ஆறுதலாக தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஆதினிக்கு தன்னை நினைத்து கோபமாக வந்தது தன் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு கஷ்டம் தான் கொடுக்க வேண்டியுள்ளது என் லைஃப் மட்டும் ஏன் அவ்வளவு காம்ப்ளிகேட்டடா இருக்கு என்ற தன்னை நினைத்து கழிவிறக்கம் கொண்டாள்.
அவள் அழுது முடித்தவுடன் கவின் இருவரையும் பார்த்து “இந்த சீரியல் முடிஞ்சுச்சுன்னா, பிரேக் வரிங்களா போய் சாப்பிட்டு வரலாம் “என்று கேட்டான்
அனு ,”எங்களை பார்த்தால் சீரியல் மாதிரி தெரியுதா” என்று என்று கேட்டாள்
“ ஆமா கண்ணீரை நீங்க பக்கெட் பக்கெட்டா புழிஞ்சிட்டு இருக்கீங்க அடச்சே வாங்க ரெண்டு பேரும்” என்று அந்த சூழ்நிலையை இயல்பாக மாற்றி அவர்களை கேண்டீன் அழைத்து சென்றான்.
ஆனால் கவின் மனதில் ஆதிக்கு என்ன பிரச்சனை உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . பிளேஸ்மென்ட் வகுப்பு முடியும் நாள் வந்தது. அதுவரை ஆதினியை பாரி தொந்தரவு செய்யவில்லை அவளைப் பார்ப்பதே போதும் என்று இருந்தான் அந்த பிளேஸ்மெண்ட் வகுப்பின் இறுதி நாளன்று அவர்களிடம் “உங்க டிசைன் ப்ராஜெக்ட் பார்த்து உங்க கிளாஸ்ல பத்து பேர் செலக்ட் பண்ணி இருக்கோம் அவங்க எங்களோட கம்பெனிக்கு இன்டர்ன்ஷிப் வரலாம் மூணு பேச்சா பிரிஞ்சு வரணும் .உங்க கேரியருக்கு என்னால ஆனா ஹெல்ப் நான் கண்டிப்பா பண்ணுவேன் நீங்க உங்களை வந்து எந்த அளவு மெருகேத்தி மெருகேற்றிக் கொள்கிறீர்களோஅந்த அளவுக்கு உங்களுக்கான வாய்ப்புகளும் அதிகமா இருக்கும்” என்று கூறினான். அன்று அவனுடைய ப்ரொபசர்ஸ் அனைவரும் அங்கு அமர்ந்து ஒரு சின்ன சென்ட் ஆப் பார்ட்டி மாதிரி கான்ஃபரன்ஸ் ஹாலில் ரெடி பண்ணி இருந்தார்கள் அவனுடைய ப்ரொபசர் ஒருவர் பாரி” நீ நல்ல பாடுவியே இன்னிக்கு எங்களுக்காக ஒரு பாட்டு பாடு” என்று கேட்டார் அவன்” சார் நான் பாடி பல நாட்கள் ஆயிடுச்சு “ என்று கூறியவுடன். இங்க என்ன போட்டியா நடக்குது எனவும் பாட ஒத்துக்கொண்டான்
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்
நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஒட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்
உயிர் வாழுரேண்டி
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி..
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி
என்று உயிர் உருக்கும் குரலில் பாடினான் .அவன் ஒவ்வொரு வரி பாடும் பொழுதும் அவன் கண்கள் ஆதினியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது ஆதினியாலும் கண்களை விளக்கிக் கொள்ள முடியவில்லை ஒவ்வொரு வரியும் அவள் நெஞ்சில் ஊசியாய் குத்தியது. இப்படி ஒரு காதலை பெற தவம் செய்திருக்க வேண்டும்.ஆனால் அதை தன்னால் அனுபவிக்க முடியவில்லை என்று எண்ணி எண்ணி மறுகினாள் அவன் பாடி முடித்ததும் ஆதினி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று நண்பர்களிடம் கூறிவிட்டு வெளியே வந்து விட்டாள்.
