Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 13.2

சுபா வளைகாப்பு வேண்டாம் என்று கூறிக்கொண்டு இருந்தாள்… அவள் கூறுவதை கேட்க தான் அங்கு ஆளில்லை… அவளின் பாசமலர்களும் அவளின் மாமனும் அவளின் பேச்சை கேட்கவே இல்லை…



Advertisement

அவளின் ஏழாவது மாதம் கடைசியில் தான் வளைகாப்பை வைத்தனர்… வளைகாப்பும் சிறப்பாக நடைபெற்றது…

பாலாவும் கிரிஜாவுக்கு வந்து இருந்தனர்… ஆனால் சொந்தமாக அல்ல… விருந்தாளியாக…

அங்கு சசியை கண்டு பேச முற்பட்ட கிரிஜாவை கண்டுகொள்ளவே இல்லை… அவர் பேசினாலும் நிற்காமல் சென்று விட்டான்…

Advertisement

ஆனால் பாலாவுடன் அவன் பேச சென்ற போது அவர் எதுவும் கூறவில்லை.. ஆனால் அவனை ஒருமுறை அணைத்துவிட்டு சென்றுவிட்டார்… அதுவே அவனுக்கு உணர்த்தியது அவன் மேல் பாலா கோவப்படவில்லை என்பதை…

Advertisement

அவன் வீட்டிற்கு வர வேண்டும் என்பதற்கு தான் சுபா அர்ஜுனனை வற்புறுத்தி வீட்டிலேயே வைத்து இருந்தாள் வளைகாப்பை…

அவனும் வேறுவழி இல்லாமல் தான் வந்து இருந்தான்…. வளைகாப்பு நன்முறையில் நடைபெற்றது… முதல்முறை கணவனை பிரிந்து செல்வது போல் அழுதுகொண்டு தான் பிறந்த வீட்டிற்கு சென்றாள்..

ஆனால் அடுத்த ஒருவாரத்தில் அர்ஜுனனை பிரிந்து இருக்க முடியாமல் வந்து விட்டாள்….

Advertisement

இந்த ஒரு வார பிரிவே அவளால் தாங்க முடியவில்லை… ஆனால் அவளின் மாமனின் ரகசியம் தெரிந்தால்.. அதனால் ஏற்படும் பிரிவை எவ்வாறு தங்குவாள்?!?!?!….

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது… அவளுக்கு எட்டாவது மாத கடைசியில் ஒருநாள் அர்ஜுனன் அவளுக்கு அழைத்து வர நேரமாகும் நீ தூங்கு என சொல்லி இருந்தான்…

அன்று பார்த்து சுபா மதியம் நன்றாக தூங்கி எழுந்து இருந்தாள்…. அதனால் ஆரவை கர்ணனுடன் தூங்க அனுப்பிவிட்டு ஹாலில் நடை பயின்று கொண்டு இருந்தாள்….

அவள் தூங்க செல்லும் முன் மஹாபாரதம், ராமாயணம், பொன்னியின் செல்வன் கதைகளை கேட்பாள்… அன்று மஹாபாரதம் தான் பார்த்து கொண்டு இருந்தாள்…

அன்று அதில் அர்ஜுனன் சுபத்திராவை பிரிந்து தன் சகோதர்களுடனும் பாஞ்சாலியுடனும் வனவாசம் செல்வதை பத்தி கதையில் சொல்லிக்கொண்டு இருந்தனர்…

அதை பார்த்து சோகமடைந்து விட்டாள்… அதனால் மோட்டு பட்லு கார்ட்டூனை பார்க்க ஆரம்பித்தாள்…

ஆரவ் லிட்டில் சிங்கம் பார்ப்பான் தினமும்… இவளும் மோட்டு பட்லு கார்ட்டூனை பார்ப்பாள்…

வீட்டில் அம்மாவிற்கும் மகனிற்கு அடிக்கடி சண்டை வரும் கார்ட்டூன் பார்க்க… அர்ஜுனன் தான் சமாதானம் செய்வான்..

ஆரவை லிட்டில் சிங்கம் பார்க்க கூறிவிட்டு சுபாவை அறைக்கு அழைத்து கொண்டு வருவான்…

“தாருமம்மா நீ என்ன சின்ன புள்ளயா… தம்பி கூட கார்ட்டூன் பாக்க மல்லுக்கட்டிட்டு இருக்க… ஏன் இப்படி பண்ற… “என்று கேட்பான்…

ஆனால் அவளோ மோட்டு பட்லுவில் மோட்டு சொல்வது போல் “போடா பூசணிக்கா மண்டையா” என்று கூறிவிட்டு போனில் பார்க்க  சென்று விடுவாள்…

ஆனால் அவன் விடுவானா அவள் சொன்னதுக்கு தன் பாணியில் தண்டனை குடுத்துவிட்டு தான் பார்க்க விடுவான்…

தற்போது மோட்டு பட்லு கார்ட்டூனை ஒரு மணிநேரம் பார்த்தாள்… அதுவும் சலித்துவிடவே மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்..

அப்போது தான் அவளுக்கு அலுவலக அறை கண்ணில் பட்டது… அவள் அவளிடமே “அப்படி என்ன அந்த ரூம்ல இருக்கும் மாமா அந்த ரூம்குள்ள ஏன் விட மாட்டிங்குறாரு…

கேட்டா குப்பையா இருக்குதுனு சொல்றாரு… சரி நாம போய் இன்னிக்கு சுத்தம் பண்ணி மாமாக்கு சப்ரைஸ் தரலாம்” என்று கூறிவிட்டு அந்த அறைக்குக்குள் சென்றாள்..

அங்கு அவளுக்கு பெரிய சப்ரைஸ் அவள் மாமன் வைத்து இருப்பது தெரியாமல்!!!!…

அலுவல் அறை சுத்தமாக தான் இருந்தது…. சுத்தமா தானு இருக்கு.. அப்பறம் ஏன் உள்ளே விடவே இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே செல்லும் போது தான் வித்தியாசமாய் எதோ இருந்தது…

அங்கு சென்று பார்த்தால் சுவற்றை போலவே கதவு ஒன்று இருந்தது… “என்னடா இது புதையல் எதோ வெச்சு இருக்காரோ இந்த ரூம்குள்ள அது தான் விடலயோ” என்று சுவற்றை போல் இருக்கும் அந்த கதவை திறந்தாள்…

அந்த அறை அசுத்தமாக தான் இருந்தது… “என்ன இப்படி இருக்கு ரொம்ப நாள் யூஸ் பண்ணாத மாதிரி” என யோசித்து சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்..

அந்த அறையை வருடம் ஒருமுறை தான் சுத்தம் செய்வான்… அதுவும் அவன் செய்யமாட்டான்… அவன் அந்த அறைக்குள் நுழைந்து நான்கு வருடங்கள் ஆகிறது…. பட்டு பாட்டி ராஜம்மாவை வைத்து சுத்தம் செய்வார்…

ஒரு மணிநேரத்தில் அந்த அறையை முழுதாக சுத்தம் செய்யாமல் ஓரளவு செய்து முடித்து இருந்தாள்….

அதன் பிறகு மெல்ல மெல்ல அந்த அறையை பார்த்தாள்… பத்து இருபது வருடங்களுக்கு முன்னான கோப்புகள் இருந்தது… மில்லின் கணக்குக்கள்… வயலின் வரவு செலவுகள் எல்லாம் இருந்தது…

அதை பார்த்து கொண்டே ஒரு கப்போர்டின் முன் நின்றாள்… அதில் நான்கு ஐந்து டைரிகள் இருந்தது… என்ன டைரி இருக்கு மாமா டைரி எழுதுவாரா என தன்னக்குள் கேட்டு கொண்டே டைரிகளை எடுத்தாள்….

முதல் மூன்று டைரிகள் அவனின் பள்ளி கல்லூரி பற்றி இருந்தது… மூன்று டைரியும் ரசித்து படித்து கொண்டு இருந்தாள்… அவனின் சேட்டைகள் அனைத்தும் எழுதி இருந்தான்…

அடுத்த டைரியை கையில் எடுத்து முதல் பக்கத்தை திருப்பினாள்… அந்த டைரி எழுத ஆரம்பித்த தேதி போட்டு இருந்தான்… அதை கணக்கிட்டு பார்த்தாள் சுபா… அவன் பார்க்க  பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய டைரி அது…

“அதுதான் ஸ்கூல் காலேஜ் பத்தி அதுலயே எழுதி வெச்சி இருக்காருல.. அப்பறம் எதுக்கு அவர் ட்வெல்த் படிக்குற இயர் போட்டு திரும்பியும் டைரி எழுதி இருக்காரு” என்று அடுத்த பக்கத்தை திருப்பினாள்…

“என் தேவியே” என்று போட்டு அதுக்கு பக்கத்தில் இதயத்தை வரைந்து வைத்து இருந்தான்…

அதை பார்த்தவுடனே தெரிந்து விட்டது அவன் பள்ளிப்பருவத்தில் காதலித்து உள்ளான் என… அவன் வேறு ஒருவரை காதலித்து உள்ளான் என்பதையே அவளால் தாங்க முடியவில்லை…

சுபா அவனை சிறு வயது முதல் காதலித்து கொண்டிருக்கிறாள்… அவனும் அவ்வாறு தான் என நினைத்து கொண்டிருந்தாள் ஆனால் இந்த டைரி அது பொய் என நம்பவைத்து விட்டது…

கண்ணீர்வுடனே அடுத்த பக்கத்தை திருப்பினான்…. “அஜி லவ் தேவி” என போட்டு ஹார்டின் போட்டு இருந்தான்… அந்த டைரி படிக்காமல் ஐந்தாவது டைரி எடுத்தாள் அந்த பெண் என்ன ஆனாள் என தெரிந்து கொள்ள….

கடைசி பக்கத்தின் முன்னால் உள்ள பக்கத்தை திருப்பினாள்… அந்த பக்கத்தின் மேல் ஒரு தேதியை எழுதி இருந்தது… அந்த பக்கத்தில் எதோ எழுதி இருந்தான்…

உன்னை நான் வர சொல்லாமல் இருந்து இருந்தால்
இன்று வேறு ஒருவரின் இதயமாய் நீ துடித்து கொண்டு இருக்க மாட்டாய்…!!!

என எழுதி இருந்தது… அந்த பக்கத்தின் கீழே கணீர் துளிகள் விழுந்தது போல் இருந்தது அந்த காகிதம்…

அதை படித்தவுடன் தெரிந்து கொண்டாள்… அவனின் காதலி உயிரோடு இல்லை என…. அடுத்து என்ன எழுதி இருப்பான் என அடுத்த டைரி தேடினாள்… அந்த டைரி அந்த கப்போர்டில் கீழே இருந்தது…

அதை எடுத்து படித்தாள்…அதில் முன்னால் இருந்த தேதியை விட எட்டு மாதம் கழித்து இருந்தது… “உன்னை பத்தி எழுதுறது இது தான் கடைசி தேவியே… நீ தான் என்கூட இல்லாம போயிட்ட… ஆனா உன்னோட இதயத்தின் ஓசை எனக்கு எப்பயும் கேட்டுகிட்டே இருக்கும்…”

” எனக்கு நாளைக்கு கல்யாணம்… பொண்ணு யாரு தெரியுமா தேவியே உன்னோட டால்… ஆமா உன்னோட டால் தான்.. அது மட்டும் இல்லாம உன்னோட இதயம் உன் டால் மூலமா எப்பயும் துடிச்சிட்டே இருக்கும்…”

“உன்னை மறக்க முடியுமா தெரியல.. ஆனா இனிமே உன்னோட நியாபகம் வேண்டாம்… இது தான் கடைசி நான் இந்த அறைக்குள்ள வரது … “

“நீ சொல்லுவல உன் டால் யாரையோ லவ் பண்ணுறா அப்படினு அது வேற யாரும் இல்ல தேவியே…. நான் தான்..

“என்னால என்னோட முட்டாள்தனத்தால உன்னோட உயிர் போய் அவ உயிர் பிழைச்சி வந்து இருக்கா தேவியே.. எனக்காக வந்து இருக்கா.. இனிமே அந்த உயிரை என் உயிரா நினைச்சி காப்பதுவேன் தேவியே…”

உன்னிடம் இருந்து விடைபெறுகிறேன் தேவியே !!!!! “

என்று முடிந்து இருந்தது அந்த டைரி…. கீழே அவனின் கண்ணீர் துளிகள்…

தேவி… டால் எல்லாம் வேறு ஒருவரை சுபாவிற்கு நியாபகம் படுத்தியது… அவரா என தெரிந்து கொள்ள அந்த நான்காவது டைரியை திறந்தாள்…

நாமும் அர்ஜுனனின் தேவியை அடுத்த பதிவில் காண்போம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!