Skip to content
Post Views: 3,933
KKEN-10
வித்யாவிடம் பேசிவிட்டு வெற்றி தன் இடத்தில வந்து அமர்ந்து வண்டியை எடுத்தான்.
“அது சரி, எப்ப என்ன உங்க வீட்டுல அறிமுக படுத்த போற? நீ சொல்லி சொல்லி உங்க மலர் அக்காவை பாக்கணும் போல ஆசையா இருக்குடா”
“நம்ம விஷயம் எங்க வீட்டுல தெரிஞ்சுது அவ்வளவுதான். எங்க அப்பா அடிக்கற அடில பெல்ட்டு பிஞ்சுடும்”
Advertisement
“அப்போ அந்த இச்சு இச்சு எல்லாம்? ஏய் ஜாலியா மஜா பண்ணிட்டு விட்டுட்டு ஓடிடலன்னு நினைக்கிறியா?” விளையாட்டு போலவே கேட்டாள் .
“அப்பிடி எல்லாம் இல்ல மேடம். கொஞ்ச நாள் ஆகட்டும். நேரம் பார்த்து நானே சொல்லறேன்”
“இங்க பாருடா! இந்த மாதிரி காதல் அது இதுன்னு சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாம பரீட்சைக்கு ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணற வழிய பாரு”
Advertisement
அலட்சியமாக ஒரு லுக் விட்டான்.
Advertisement
“என்ன லுக்?
“எனக்கு சொல்லறதை மேடம் கொஞ்சம் கடைபிடிச்சா நல்லா இருக்கும்”
“டேய் ! சொல்ல மறந்துட்டேன் பாரு. எனக்கு நாளைக்கு இன்டென்ஷிப் இன்டெர்வியூ இருக்குடா”
Advertisement
“எத்தனை மாசம்?”
“த்ரீ மந்த்ஸ். நம்ம வர்க் நல்லா இருந்தா அவங்களே வேலைக்கு எடுத்துப்பாங்க. எக்ஸாம் முடிச்சுட்டு நாம் சேர்ந்துக்கணும்”
“ஓ “
“நான் காலேஜ் டாபர் தானே. இன்டெர் வியூ பெரிசா கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்”
“உங்களுக்கு என்ன மேடம்? நீங்க எது தொட்டாலும் டாப் தான்”
“ஏய்! அது என்ன எப்ப பார்த்தாலும் மேடம் மேடம்னு? வித்யா சொல்லு,, இல்ல விது சொல்லு. இல்ல அப்ப சொன்ன மாதிரி தியா சொல்லு. அதுவும் இல்லன்னா கண்ணே, மணியே ஏதாவது நிக் நேம் வை.
“நீங்க எனக்கு எப்பவுமே மேடம் தான் மேடம்”
“சரிடா கரி சட்டி”
“கரி சட்டியா ?”
“ஆமா நீ என்ன மேடம் சொன்னா நான் உன்ன கரி சட்டின்னுதாண்டா சொல்லுவேன்”
“பேரு நல்லாத்தான் இருக்கு. ஆனா நான் ஒன்னும் அவ்ளோ கருப்பு இல்லையே மேடம்”
“அதை நான் சொல்லணும். என்ன பாரு. பௌணர்மி நிலா மாதிரி இருக்கேன். உன்ன பாரு. கண்ணாடில பார்த்தா மூஞ்சியே தெரியாது”
அவள் சொன்னது உண்மைதான். அவள் நிலா தான் . ஆனால் அவன் ஒன்னும் கரிச்சட்டி இல்லை. மாசில்லாத அந்த குழந்தை பேசுவதையே கேட்டுக் கொண்டும், ரசித்துக் கொண்டும், வந்தான். அவன் ஒரு வார்த்தை சொன்னால் பதிலுக்கு பத்து வார்த்தைகளாவது பேசி விடுவாள் வித்யா. அவன் அமைதியாக இருக்கும் நேரம் இவள் நூறு வார்த்தை பேசுவாள் விடாமல் பேசிக் கொண்டே இருக்கும் அந்த அழகான உதட்டை கடித்து விடும் எண்ணம் அவனை பாடாய் படுத்தியது.
அவள் சொன்ன படியே முதலில் போனில் பேசியவர்கள் பிறகு நேரிலேயே வரச் சொன்னார்கள் . வேலையில் சேர்ந்து கொண்டாள் . அவளை கொண்டு வந்து விட்டவன் மலை போல இருந்த அந்த பத்து மாடி கட்டிடத்தின் உயரத்தை பார்த்து
“மலைத்தேன் இதுவென மலைத்தேன்” கண்ணதாசன் வரிகள் தான் நினைவுக்கு வந்தது .
“ஏன் மேடம் இவ்ளோ பெரிய கம்பெனியா? உங்களால சமாளிக்க முடியுமா?”
“கம்பனி எவ்ளோ பெரிசா இருந்தா என்ன? நான் உக்கார போகறது ஒரு சீட்டுல தானே?
இந்த கம்பெனில சேர எங்க காலேஜுலேயே எத்தனை போட்டி தெரியுமா. என்னோட சேர்த்து மொத்தம் பத்து பேரு சேர்ந்திருக்கோம். கம்பனி பெரிசு ஆக ஆக நாம இன்னும் நிறையா கத்துக்கலாம். ஒரு வேளை நம்ம வேலை நல்லா இருந்து இங்கையே சேர்ந்தா ஸ்டார்டிங் சாலரியே லகரத்துல வரும்”
அவள் சொன்னதில் அவன் பிரமித்து தான் போனான். இப்படியெல்லாம் விஷயங்கள் உண்டு என்பது தெரியவே தெரியாதே.
வண்டியை நிறுத்தியதும் இறங்கி கொண்டாள் .
இறங்கி நடக்க தொடங்கியவளிடம்,
“தியா ! ஆல் தி பெஸ்ட்”
முழு மனதுடன் மகிழ்ச்சியாக நன்றி கூறினாள் .
ஏ ஸ்கொயர் என்னும் பெயர் பலகையை ஒரு முறை பார்த்து விட்டு கிளம்பினான்.
“ பிள்ளையாரப்பா நீங்கதான் மேடத்துக்கு கூடவே இருக்கணும்”
மனதிற்குள் வேண்டிக் கொண்டான்.
நீங்கள் நினைத்தது சரியே. அது அதிபன் அருணாசலத்தின் தலைமை அலுவலகம்தான். ஆனால் வித்யா வேலை செய்ய போவது அவனுக்கு கீழ் அல்ல.
வேலையில் சேர்ந்த பெண்கள் அனைவருமே தங்களை நிரூபிக்க நிறைய வேலை செய்ய வேண்டி இருந்தது. உடல் உழைப்பு இல்லை என்றாலும் மூளைக்கு வேலை நிறையவே இருந்தது .
காலையில் புது பூ போல கிளம்பி வருபவள் மாலை அல்லது இரவில் சோர்ந்து தான் வருவாள். அவளை தினமும் திரும்ப அழைத்து வரும்போது பழச்சாறு வாங்கி தருவதை வழக்கமாகிக் கொண்டான் அவளின் கரிச்சட்டி . அவன் வாங்கி தருவதை குடித்ததும்தான் அவளுக்கு முகமே சற்று தெளிவடையும்.
குடித்து முடித்து அவள் கப்பில் சற்று மீதம் வைத்தே கொடுப்பாள். அது அவனுக்காக. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவனுக்கு அது அவள் எச்சில் அல்ல. அமுதம். அவன் அதை ரசித்து குடிப்பதை பார்க்கவே அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அன்னை போல அவன் தலை கலைத்து ரசிப்பாள். நாட்கள் ஓடியது.
உற்சாகமாக வரும் மகளிடம் இன்று இதை பற்றி பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் காயத்ரி காத்துக் கொண்டு இருக்கிறாள்.
“வாம்மா ! என்ன இப்ப எல்லாம் ரொம்ப உற்சாகமா இருக்க?”
“எஸ் மாம். புது கம்பனி. புது வேலை. புதுசு புதுசா கத்துக்கறோம்”
“காபி கலக்கவா ?”
“இல்ல ம்மா! இப்ப தான் பழச்சாறு குடிச்சேன் “
“வேலை புடிச்சிருக்கா ?”
வந்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்ட அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள் .
“ம்ம் புடிச்சிருக்கு மாம்”
“பரீட்சைக்கு அப்புறம் என்ன? மாப்பிள்ளை பாக்கலாமா ? இல்ல எங்களுக்கு ஏதாவது சர்பரைஸ் இருக்கா ?”
“வேலைக்கு போக போறேன் மாம். சர்ப்ரைஸ் …அதுவும் இருக்கு மாம். நான் எதையும் மறைக்க விரும்பல. ஏற்கனவே வெற்றி உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்னு தெரியும். நீங்களாவே கேக்கறதுக்குத் தான், நான் வெயிட்டிங்”
எழுந்து அமர்ந்து அன்னையின் கண்களையே உற்று நோக்கி பேசும் மகளையே ஆர்வத்துடன் பார்த்திருந்தாள் . மகளின் கண்களில் தெரியும் சந்தோஷம், மினுமினுப்பு, அனைத்தையும் விட மேலான நேர்மை எல்லாமே காயத்ரிக்கு தன்னையே இள வயதில் பார்ப்பது போல இருந்தது.
“எனக்கு அவனை ரொம்ப புடிச்சுருக்குன்னு சொல்ல மாட்டேன் மாம். அவன் அதுக்கும் மேல”
“எப்படி? உன்னோட உயிர்னு சொல்ல போறியா ?”
“நோ மாம். அவன் அதுக்கும் மேல. என்னோட நம்பிக்கை. தைரியம்”
அது வரை வெற்றி வேண்டாம் என்று இருந்த அன்னை மகளின் பதிலில் ஆடித் தான் போனார். ஆனால் அசரவில்லை.
“ஒரு வேளை நீ சொல்லற மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமா நம்பிக்கைக்கு உரியவனா இல்லாம போனா?
இன்னிக்கு நான் ஒரு படம் பார்த்தேன். டிவில. மலையாள படம். மீரா ஜாஸ்மின், ரியாஸ் கான் அவளுக்கு கணவன். செவ்வாய் தோஷம் இருக்கற பணக்கார வீட்டு பொண்ணு வீட் டு கார் ட்ரைவரை நம்பி ஓடி போய் , மூணு குழந்தைங்களுக்கு அம்மாவாகி , கஷ்டப்படற கதை. அவனோட இருக்கும்போது எனக்கு குடிசையும் அரண்மனைதான். சொல்லலாம். மழை வரும்போது ஓட்டைகள்ல தண்ணீர் கொட்டாம பாத்திரம் வைக்கும் போதுதான் தெரியும் கஷ்டம். ரேஷன்ல கோதுமை இருக்கா? சர்க்கரை வந்துச்சா? பாமாயில் எப்ப வரும்? காத்திருக்கணும். பஸ்ஸு எப்ப வரும்? வெயில்ல நிக்கணும். நீ எல்லாத்துக்கும் சுகமாவே இருந்து பழகிட்ட. ஒனக்கு இந்த கஷ்டம் எல்லாம் தெரிய கூடாதுன்னுதான் நாங்க கஷ்டப்பட்டோம். ஒனக்கு அது வேணாம்” மகளின் தலை கோதி அன்பாகவே அறிவுரைச் சொன்னார்.
“அம்மா! நீங்க சொன்ன கதைல அந்த கதாநாயகி படிச்சிருந்தாளா ? நான் படிச்சிருக்கேன். அந்த கார் ட்ரைவர் படிக்காதவன். பொம்பளைங்க மேல நல்ல எண்ணம் இருந்திருக்காது. பட் வெற்றி அப்டி இல்ல. அவங்க அப்பா அவனை படிக்க வேணாம். ஆட்டோ ஓட்டுன்னு புஸ்தகத்துக்கு பதிலா தொழிலை கைல கொடுத்தாரு. அப்படியும் கொஞ்ச வருசத்துக்கு அப்புறமா அவன் கரஸ்ல படிச்சுக்கிட்டு தான் இருக்கான். படிப்புல ஆர்வம் இருக்கு. உழைச்சு சம்பாதிச்சு பெரிய ஆளா வரணுன்னு வெறி இருக்கு. எண்ணம் இருக்கு. அக்கா, தங்கச்சி, தங்கச்சியோட குழந்தைன்னு அவனை சுத்தி நிறைய பெண்கள். அவனுக்கு என்னோட வால்யூவும் தெரியும். பொண்ணுங்களோட அருமையும் தெரியும்”
“உங்க கிட்ட நான் மனசு விட்டு சொல்லறேன் மாம். ஒரு நாள் ஆட்டோல போகும்போது டக்குனு எனக்கு பீரியட்ஸ் வந்துருச்சி. என்னோட முகத்தை பார்த்தே கண்டுபுடிசுட்டான். தேவையானது வாங்கி கொடுத்து பெட்ரோல் பங்குல நிறுத்தி அப்புறமா தான் கொண்டு போய் விட்டான். இந்த மாதிரி நேரத்தில டார்க் கலர்ஸ் போடுங்கன்னு வேற சொன்னான். அப்ப எல்லாம் எனக்கும் அவனுக்கும் அத்தனை பழக்கம் கூட இல்ல. அம்மா இல்லாத பையன். அக்காவோட வளர்ப்பு எப்படி இருக்குன்னு பார்த்திங்களா? அவன நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா எதுக்காக அவனோட போய் குடிசைல வாழனும்? நான் சம்பாதிச்சு ரெண்டு பேரும் ஏதாவது ஒரு பிளாட்ல வாழுவோம். அந்த படத்துல வந்த கதாநாயகி மாதிரி பணத்துக்காக குழந்தையை காப்பாத்த நான் யாரு கிட்டையும் போய் என்னோட உடம்ப விக்க மாட்டேன். இன்னொரு காயத்ரியா இருந்து இன்னொரு விஜயன் போல வெற்றியை உருவாக்குவேன். என்ன நம்புங்க அம்மா”
“எத்தனை அழகாக என்னை மூளை சலவை செய்து விட்டாள் ? அதனால் தானோ என்னவோ வெற்றியும் இவளிடமிருந்து மீள முடியாமல் தவிக்கிறான் போலும்”
கண் இமைக்காமல் நின்றிருந்த அன்னையின் கன்னத்தில் லேசாக தட்டி,
“மாம் அந்த படத்தை நீங்க இப்பதான் பாக்கறீங்க. நான் யூ டியூபில் ஏற்கனவே பார்த்துட்டேன். இப்டியே முழிச்சுகிட்டே நிக்காம போய் நீ பெத்த பொண்ணுக்கு உருளைக்கிழங்கு பொடி மாஸ் செஞ்சு வை. அவளுக்கு பசிக்குதாம்”
=====================
error: Content is protected !!