Skip to content
Post Views: 3,521
எபிலாக்
பாலு படித்து முடித்துவிட்டு சென்னையில் ஒரு மிக பெரிய மருத்துவமனையில் பணியில் சேர்ந்து ஒரு திங்கள் ஆகிறது. இப்பொழுது கதிருக்கு சென்னைக்கே மாற்றல் கிடைத்துவிட்டது. அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வீட்டில் ஒன்று கூடி இருந்தனர்.
Advertisement
அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விசாகாவிற்கு அன்று மாநில அளவிலான விவாசயிகளின் மேம்பாடு மீட்டிங் இருந்தது. அதில் விசாகா தான் சிறப்பு உரை ஆற்றுகிறாள். அதை முடித்து கொண்டு அவர்கள் புறப்பட்டு இப்பொழுது தான் வந்து கொண்டிருந்தனர்.
“மூக்கழகி.. இங்க வா..” என்றான் கதிர் தமிழினியை பார்த்து.
Advertisement
Advertisement
“இங்க பாருங்க சித்தப்பா.. என்ன அப்படி கூப்பிடாதீங்க. அப்புறம் எனக்கு கோவம் வரும்” என்றாள் தமிழினி மூக்கு விடைக்க.
“பார்றா.. அரை டிக்கெட்டை “
Advertisement
சேந்தன், மகிழினி, தமிழினி மூவரும் சேர்ந்து கதிரை முறைத்தனர்.
“ஹரே..பப்பா.. க்யோன் ஐஸா கர் ரஹே ஹூன்..அச்சா நெய் ஹெய்”
என்று வந்தான் வேல் இனியன்.
“டேய்.. என்னடா பிள்ளையை இப்படி வளர்த்து வச்சிருக்கீங்க.. எப்பயுமே ஹிந்தி சேனல் தான் ஓட்டுறான்” என்றான் வெற்றி கடுப்பாக.
வேல் இனியனுக்கு தமிழ் புரியும், ஆனால் பேசுவதற்கு ஹிந்தி தான் சுலபமாக வரும்.
“குரங்கு கைல பூமாலை கொடுத்தது மாதிரி, இவங்களை நம்பி நாம பிள்ளையை விட்டிருக்க கூடாது” என்றான் சுப்பு.
“யாரை குரங்குன்னு சொல்றீங்க கொழுந்தனாரே?” என்று சண்டைக்கு வந்தாள் கண்ணம்மை.
“பின்ன என்ன அண்ணி, இப்படி அவனுக்கு தமிழே தெரியாம பண்ணிருக்கீங்க?” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
“கவலை படாதீங்க கொழுந்தனாரே.. தப்பு தான், ஆனால் வர போற உங்க பிள்ளையை எப்படி வளர்க்கறேன்னு மட்டும் பாருங்க” என்றாள் பக்கத்தில் நிறைமாத வயிற்றுடன் அமர்ந்திருந்த தங்கையை பார்த்துக்கொண்டே.
“தெய்வமே.. “ என்று கை எடுத்து கும்பிட்டு விட்டான் சுப்பு. இவர்கள் பேசுவதை கேட்டு, முகம் வாடினான் சிறுவன். இங்கே வந்ததில் இருந்து அவனுக்கு தமிழ் பேச முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது.
“நான் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் சொல்லி தரேன், நீ கவலை படாத வேலா..வா..” என்று அன்னம் வேல் இனியனை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டார்.
“பாலு, நம்ம வீட்ல உன்னோடது தான் கடைசி கல்யாணம். நாலு பொண்ணை காட்டிட்டோம்.. ஒன்னும் பிடிக்கல சொல்ற.. நீ யாரையாச்சும் விரும்பினா சொல்லு பரவாயில்லை, அதே பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறோம்” என்றார் சாலா.
“அப்படி எல்லாம் இல்ல அம்மா.. நீங்க காட்டுற பொண்ணு மனசுக்கு பிடிக்கலை” என்றான் விட்டேற்றியாக.
“சரி எப்படி பொண்ணு வேணும் சொல்லு நண்டு.. அப்படி பாத்துருவோம்”
என்றான் வெற்றி.
“எனக்கு அத்தான் மாதிரி பொண்ணு வேணும், அப்படி பாருங்க”
“ஹா ஹா ஹா..” என்று சத்தமாக சிரித்துவிட்டான் கதிர்.
“உங்க அத்தான் மாதிரி பொண்ணு எல்லாம் கிடைக்காது.. செஞ்சா தான் உண்டு” என்றான்.
“எல்லாம் உங்களால தான் அன்னும்மா“ என்று கோபமாக அன்னத்திடம் கூறினான்.
எதற்காக அன்னத்திடம் கோபம் என்று யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
“அனு என்னடா செஞ்சா” என்று வந்தார் சுந்தரம். மனைவியை யார் என்ன சொன்னாலும் அவரால் தாங்க முடியாது.
“பின்ன நீங்க ஒரு பையனை மட்டும் அருமையா வளரத்து அவரை எங்க அக்காக்கு கட்டி கொடுத்துட்டீங்க. நீங்களும் அன்னும்மாவும், அத்தான் மாதிரியே ஒரு பொண்ணை பெத்திருந்தா நான் கல்யாணம் பண்ணியிருப்பேன் இல்ல” என்றான் சீரியசாக.
அனைவரும் ஆ என்று பார்த்தனர்.
“டேய், இப்பகூட, மாமா பெத்து கொடுப்பாரு நண்டு.. ஆனா இனிமே பொறந்து வளர்ந்து நீ கட்டிக்க முடியாது.. அதான் என்ன பண்றது ” என்றான் கதிர் தீவிரமாக.
சுந்தரமும், பாலுவும் கதிரை முறைக்கவும்,
“வேணா ஒன்னு செய்யலாம் மாமா, நீங்களும் அன்னும்மாவும் ஒரு பொண்ணை பெத்துக்கோங்க.. நான் எங்க வேல் இனியனுக்கு கட்டி வச்சிடறேன், எப்படி?” என்றான்.
“உன்னை இன்னிக்கு கொல்லாம விட மாட்டேன் பாரு” என்று சுந்தரம் கதிரை அடிக்க கையை ஓங்கினார்.
அவரிடம் சிக்காமல் கதிர் ஓடவும், சுந்தரம் அவனை துரத்தி கொண்டு ஓடினார்.
“விடாதீங்க அய்யா.. பிடிங்க” என்று அவர் பின்னே தமிழினியும் ஓடினாள்.
சுந்தரத்திற்கு மூச்சு வாங்கவும், கதிர் அவருக்காக தன் வேகத்தை குறைத்து கொண்டான்.
யாரும் எதிர் பார்க்கும் முன்பு, தமிழினி வேகமாக வந்து கதிரின் சட்டையை பிடித்து கீழே இழுத்து, அவன் மூக்கை கடித்து விட்டாள்.
“ஆ..” என்று கதிரின் அலறலில், “என் போலீஸ்காரர் மூக்கை நீ எப்படி கடிப்ப?” என்று தமிழினியோடு சண்டைக்கு கிளம்பிய கண்ணம்மை, “நான் தான் கடிப்பேன்” என்று மீண்டும் யாரும் எதிர் பார்க்கும் முன்பு கதிரின் மூக்கை அவள் ஒரு கடி கடித்து விட்டாள்.
மூக்கை பிடித்து கொண்டு, கண்கள் கலங்க அமர்ந்துவிட்டான் கதிர்.
அச்சோ.. என்று அனைவரும் பதறிவிட்டனர். பாலு வேகமாக சென்று முதலுதவி பெட்டி கொண்டு வந்து, காயத்தை சுத்தப்படுத்தி, மறந்திட்டு, ஒரு டி டி இன்ஜெக்ஷனும் போட்டான்.
மூக்கில் பிளாஸ்டருடன் அமர்ந்திருந்தான் கதிர். சரியாக அந்த நேரம் முத்து கருப்பனின் கார் உள்ளே நுழைந்தது.
“போச்சு போச்சு.. வா தமிழு ஓடிடலாம்”, என்று கண்ணம்மை தமிழனியை தூக்கி கொண்டு வீட்டினுள் ஓடி விட்டாள். அவள் பயப்படும் ஒரே ஆள் முத்து கருப்பன் மட்டுமே.
‘அன்னும்மா’ என்று கூவி கொண்டு ஓடி வந்தாள் அன்னபூர்ணா.
‘அத்தான்’ என்று சென்று பாலு முத்து கருப்பன் கை பிடித்து அவன் பக்கத்தில் நின்று கொண்டான்.
“அத்தான் எனக்கு உங்களை மாதிரியே ஒரு பொண்ணை பார்க்க சொன்னதுக்கு, எல்லாரும் கலாட்டா பண்றாங்க” என்று குற்ற பத்திரிகை வாசித்தான்.
விசாகா கதிரை பார்த்து,”அண்ணா, என்ன ஆச்சு?” என்று பதறி கேட்கவும், நல்லம்மை நடந்தவைகளை கூறினாள்.
“உனக்கு வேணும் டா..” என்றான் முத்து கருப்பன் சிரித்து கொண்டே.
“பாலு, போன மாசம் நம்ம கந்தபவனத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரியில் இருந்து விழிப்புணர்வு முகாம் ஒன்னு நடத்த வந்தாங்க. அப்ப, அங்க உமையாள்ன்னு ஒரு பொண்ணு வந்துச்சு. நம்ம ஊர் பக்கம் தான், பார்த்ததும் உனக்கு பொருத்தமா இருக்கும்னு தோணிச்சு. கேட்டு பார்ப்போமா?” என்றான்
“உங்களுக்கு தோணினா கண்டிப்பா சரியா தான் அத்தான் இருக்கும். நீங்க செலக்ட் பண்ணா எனக்கு ஓகே” என்று முடித்துவிட்டான்.
வழக்கம் போல அவர்களின் ஒட்டுதலில் அனைவர்க்கும் வியப்பே.
பின், பெரியவர்கள் சந்தித்து பேசி, பெண் மாப்பிளை விருப்பத்தை கேட்டு,
முருகம்மை ஆச்சி வீட்டின் கடை குட்டி நண்டு திருமணம் நிச்சயிக்கப் பட்டது.
அனைவரின் ஆசியுடன் இனிதே நடந்தது பாலமுருகன் உமையாள் திருமணம்.
வேலன் அருளாட்சியில் அழகோவியமாய் இவர்கள் வாழ்வு மென்மேலும் சிறக்கட்டும்.
—நிறைவு—
error: Content is protected !!