Skip to content
Post Views: 1,720
” என்னையா,?. என் முகத்தையா? நீ யேன்” என்றவன், வார்த்தைகள் வராமல் ஏதோ மூளையில் மின்னல் போல் வெட்ட..
“கமலி என்ன சொல்லுற, நீ ஏன் என் முகத்தை பச்ச குத்துன”.
Advertisement
“நான் விரும்புற உங்களைத்தானே பச்ச குத்த முடியும்” என்றவள், கண்மூடி அமைதியாகி விட.
Advertisement
“நானா” என்றவனுக்கு என்ன சொல்லுற இவ, அப்போ 7 வருசமா லவ் பண்ணது உண்மையா.. என்னை தான் இவ்வளவு நேரமும் சொன்னாளா, அவனுக்கு அவள் சொல்லியதை நம்ம முடியவில்லை.
Advertisement
அவள் அருகில் வந்தவன். “டாட்டூவை காட்டு”. என்றான்..
Advertisement
“காட்ட முடியாது”…
“நீயா காட்டுனா உனக்கு நல்லது, நான் எப்படி பார்ப்பேன்னு உனக்கு தெரியாது”.. என்றான்..
“என் டாட்டூவை பார்க்க கூட உங்களுக்கு அறுகதை இல்லை, என் அன்பை பிரிச்சுக்க தெரியாத ஒருத்தன் கிட்ட என் 7 வருஷ காதலை எப்படி என்னால காட்ட முடியும், முடியாது” என்றாள்..
“கமலி என்னை மிருகமா மாத்தாத, காட்டு” என்றான்..
“முடியாது,! முடியாது… யாரு நீ , யாருடா நீ, நான் ஏன் உன்கிட்ட காட்டனும். என் 7 வருஷ காதலை புரிஞ்சுக்காத ஜடம் நீ… உன்கிட்ட ஏன் என் மனசை காட்டனும்,, உனக்கு அத பாக்க தகுதி இருக்க”.. என்றவள் கதறி அழ..
“அப்போ நான் தான்”.. என்றவன் அவளிடம் வேகமாக வந்து அவள் முகத்தை தன்னை நோக்கி பார்க்க வைத்தவன்,, “சொல்லுடி நீ லவ் பண்ணுறது நானா” என்றான்…
மரமண்டை என்று மனதில் நினைத்தவள்….
“இல்லை அவர் நீங்க இல்லை, நான் லவ் பண்ண பையன் என் ஹீரோ அது நீங்க இல்லை, அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா, 18 வயசுல அவர் கிட்ட என் லவ்வை சொன்னேன் . எவ்வளவு அழகா இது லவ்வு இல்ல,, படிக்குற வயசு படியின்னு சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.. என்று அவன் அன்று சொல்லியதை அவள் இவனிடம் சொல்ல”..
இவனுக்கு இதை நம்ப கூட முடியல. தன்னை தான் இவள் காதலித்தாளா?.. அதை ஏன் என்னிடம் சொல்லவில்லையா,
இதில் டாட்டூவை வேற எந்த
நம்பிக்கையில் இவள் போட்டாள் என்றவன்..
அழுது கொண்டே இருந்தவளை பார்த்தவன்..
“கண்ணை தோடா” என்றான்..
அவளோ அவனை நிமிர்ந்து பார்க்காமல்.. “நீங்க போங்க,” இந்த இடத்த விட்டு போங்க”… என்றாள்…
“போக முடியாது”… என்றவன்.. அவள் அருகில் வந்து “டாட்டூவை காட்டு” என்றான் மீண்டும்…
“முடியாது” என்றவள்.. “வெளியில போங்க” என்றாள் கதவை காண்பித்து…
அவளை ஒரு கையாள் பிடித்து கொண்டவன். இன்னொரு கையாள் அவள் சுடிதார் டாப்பை பகுதியை கீழ் நோக்கி இரக்க..
அவளோ அவன் பார்ப்பது பிடிக்காமல், அவனிடம் இருந்து திமிறியவள், “விடு, விடு என்னை” என்று அவனை அடிக்க..
அவளை ஓரு கையால் பிடித்து அணைத்து வைத்து கொண்டு அவளின் சுடிதார் டாப்பை கழுத்துக் கீழ் இரக்கி பார்க்க.. பெரியசாமியை சிரித்த முகம் மாதிரி அழகாய் டாட்டூ போட பட்டு, பக்கத்தில் இதய சிம்பல் வடிவத்தில் சிவப்பு வண்ணம் தீட்டி மை ஹீரோ என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்க…
டாட்டூவை பார்த்தவனுக்கு ஜப்த நாடியும் இயக்க மறுக்க.. அவளை பிடித்திருந்த கையை மெல்ல விட.. அவனை அடித்து அழுதுகொண்டே தன் சுடிதாரை சரி பண்ண முயற்சி பண்ணியவளை, சரி பண்ண முடியாத வாறு அந்த டாட்டூவை பார்த்திருந்தவன்.. அவள் அழுவதை பார்க்க முடியாதவன்..
காற்று புகாத வாறு அவளை அணைத்திருந்தான் பெரியசாமி..
அவளோ அவனிடம் இருந்து விலக திமிறிக்கொண்டு இருக்க… அவளின் அணைப்பில் இருந்து கழுத்துக்கு கீழே இரக்கியவன், அவளின் டாட்டூவின் மீது முகத்தை வைத்து அழுத்தியவன், அவனின் கண்ணீரால் டாட்டூவுக்கு அபிஷேகம் செய்யு கொண்டு இருந்தான்… மறைமுகமாக என்னை மன்னித்து விடு என்று..தன் மார்பின் ஈரத்தை உணர்ந்தவள். அவளின் அழுகை மெல்ல குறைக்க..
பெரியசாமியின் கண்ணீர் கமலியின் நெஞ்சை குளிர் வித்தது.. டாட்டூ போட்ட இடத்தை பார்த்தவன் எப்படி வலித்திருக்கும் அவளுக்கு, இந்த அன்புக்கு என்ன செய்வேன் நான்..என்றவன். டாட்டூவை தொட்டு பார்த்தவன் அதில் இதழ் பதிக்க. அவனின் செயல் பிடித்தும் பிடிக்காதது போல் அவனை தன்னிடம் இருந்து விலக முயற்சி பண்ண,.
அவள் அமைதியாக இருந்திருந்தாள் ஒரு முத்ததோடு விட்டு இருப்பான், அவள் அவன் செய்கைக்கு எதிர் வினை காட்ட, முத்தம் நீண்டு கொண்டே சென்றது, முதலில் டாட்டூவுக்கு முத்தமிட்டவன் பின்பு, அவள் முகமெங்கு முத்தம் மழை பொழிய. முதலில் முரண்டு பிடித்தவள், பின்பு அமைதியாக இருக்க, “கமலி, கமலி” என்றவன் அவன் உணர்ச்சி தாங்க முடியாமல் கமலியின் இதழோடு, இதழ் சேர்த்திருந்தான்.. நீண்டநேரம் முத்தம்,, அவளின் காதலை விட, இவன் முத்தம் ஆழமானது என்று அவளுக்கு உணர்த்தி கொண்டு இருந்தான்…
அவனின் இந்த செயலை நம்ம முடியாதவள், கண்ணீரோடு அவனை பிடித்திருக்க.. இருவரின் உப்பு தண்ணீர் கூட இனித்தது, இருவருக்கும்..
கமலி அவனிடம் இருந்து விலக முயல.. விட மாட்டேன் என்பது போல் அவளின் இதழை தன் இதழோடு பிடித்து மூழ்கி வைத்திருந்தவனின் தோளில் கமலி ஒரு அடி போட,,.
அவளை கண் திறந்த பார்த்தவன். மீண்டும் இதழை வேகமாக கொய்ய, போட என்று மூச்சு வாங்கியவளை மெல்ல விடுவித்தான் பெரியசாமி..
அவளின் பாரம் முழுவதும் அவன் மேலே இருக்க,, ஒரு கையால் அவளை அணைத்திருந்தவன், மறு கையால் அவளின் தலையை வருடி விட, “பாப்பு, மை கேர்ள்” என்றான் ஆசையாக,,.
அந்த வார்த்தையில், அவனை தலை நிமிர்ந்து பார்க்க, அவளின் நெத்தில் முத்தமிட்டு, “கல்யாணம் பண்ணிக்கலாமா” என்றான்..
அவளோ என்ன சொல்வது என்பது போல் அமைதியாக இருக்க.. “சாரிடா கமலி’ என்றவன்.. “உன் அன்புக்கு என்ன செய்வேன் நான், இத்தன நாள் உன் அன்பு, காதல், நேசம் தெரியாம இருந்துட்டேனே கமலி, ஏண்டி என் கிட்ட சொல்லல்ல” என்று புலம்பியபடியே இருந்தவன்..
அவள் முகத்தை கையில் ஏந்தி “ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் உன்னை, இனி நீ அழவே கூடாது,, என்னோடு பொக்கிஷம் நீ டா கண்ணம்மா,” என்றவனின் கண்ணீல் கண்ணீரை கண்டவள்..
“மச்சான்” என்று அவனை அணைத்திருந்தவளின்.. முதுகை வருடி விட்டு, தட்டி கொடுத்தவன்.
அவள் முகத்தை தன்னை பார்க்க வைத்தவன். “அவ்வளவு பிடிக்குமா! என்னை உனக்கு!?”…
அவள் கண்கள் சொன்னா செய்தியில்.. அவள் முகம் முழுக்க முத்தமிட்டவன், ஒரு பூ வை போல அவளை மெல்ல அணைத்து தன்னுள் வைத்திருந்தான்..
“இவ்வளவு அன்புக்கு என்ன செய்வேன் நான்” என்றவன். அவளின் நெற்றி முட்டி மூக்கோடு மூக்கு உரசி, கண்ணோடு கண் கலந்து பேச..
அவனின் கண்ணீல், அவன் தன் மீது வைத்துள்ள காதலை கண்டவள். அவன் சட்டை பிடித்து இழுத்து அணைத்து கொண்டு சிரித்தவள்.. சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் பின்பு .. “என் மீது கோபமா மச்சான்”..
“இல்லடா என் கிட்ட வந்து மறுபடியும் உன் காதலை சொல்லி இருக்கலாமே நான்” என்றவன் “எவ்வளவு முட்டாள் மாதிரி இருந்து இருக்கேன்,, எனக்காக ஒரு பெண் 7 வருஷமா என்னை சுமந்துகிட்டு இருக்க, அவ அன்ப தெரியாம இருந்துட்டேனே. என்றவன் நேற்று திவ்யா சொன்னது ஞாபகம் வர சிரித்து கொண்டான்..
என்ன சிரிப்பு என்பது போல் பார்த்தாள் கமலி..
“என் அண்ணி திவ்யா சொன்னாங்க,, எங்களை விட ஒரு அழகான பொண்ணு, உங்களை தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கும்முன்னு.. அதே மாதிரி நீ எனக்காக 7 வருஷமா காத்திருந்திருக்க.. உன் அன்புக்கு நான் எப்படி தகுதியாகுவேன், தெரியலையே” என்றவனின் குரல் உடைய..
“மச்சான் விடுங்க. என்னை இப்போது புரிஞ்சு கிட்டீங்களே அதுவே போதும்”.. என்று இருவரும் அணைத்தவறே பேசிக்கொண்டு இருக்க..
சாராதாவும், இளங்கோவும் கதவை திறந்து வர..
இருவரும் நெருக்கமாக நிற்பதை பார்த்து கமலியின் பெற்றோர் குழம்பி போய் நின்றனர்.
கமலி பெரிசாமியிடம் இருந்து விலகி நிற்க பார்க்க..
அவளின் தோளில் கை போட்டு தன்னுடன் இழுத்து கொண்டவன்..
சாரதாவையும், இளங்கோவையும் பார்த்து “எனக்கு உங்க பொண்ணு கமலியை கல்யாணம் பண்ணி தருவீங்களா”?.., என்றவன்.”எனக்கு இனி எல்லாமே அவ தான், அவள விடுறதா இல்ல” என்றான்..
கமலியின் தாய், தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை, இருவரின் முகத்தை பார்த்தனர், இருவரும் அழுதது போல் தெரிய,,. கமலி பெரியசாமியின் சட்டையை பிடித்து நிற்பதை பார்த்த கமலியின் பொற்றோர். சின்ன மாப்பிள்ளையை இவளுக்கு பிடிக்குமோ, என்று நினைத்தவர்கள்..
“உங்களுக்கு இல்லாத பொண்ணா தம்பி, கண்டிப்பா கட்டி கொடுக்குறோம்”…என்ற கமலின் பெற்றோர் ஒருவர் முகத்தை, ஒருவர் பார்த்து சம்மதமா என்று அவர்களுகுள் கேட்டு தலையாட்டி கொள்ள.
டாக்டர் கமலியின் அறைக்கு வந்தவர், கமலில் பார்த்து விட்டு. “வீட்டிற்க்கு அழைத்து செல்லலாம்” என்று கூற..
பெரியசாமி டாக்டரிடம் கமலியை பிளைட்டில் ஊருக்கு அழைத்து சொல்லலாமா என்று கேட்க.
“உம் அழைத்து செல்லலாம், ஆனா கவனமா அழைத்து செல்ல வேண்டும்” என்று சொல்லி விட்டு சென்றார்…
மதுரைக்கு செல்லும் அடுத்த பிளைட்டில் அனைவரையும் அழைத்து கொண்டு வந்தான்..
மதுரையின் அவன் கார் இவர்களுக்காக காத்து இருக்க.. டிரைவரை அனுப்பி வைத்தவன்.. அவனே கமலியை அழைத்துக்கொண்டு வந்து அவர்களின் வீட்டில் விட..
சாரதா “வாங்க தம்பி உள்ளே” என்று வீட்டிற்கு அழைக்க..
அவனோ கமலியை மெதுவாக காரில் இருந்து இரக்கி விட்டவன். வீட்டிற்குள் வராமல் நிற்க..
இளங்கோ “வீட்டிற்கு உள்ளே வாங்க மாப்பிள்ளை ” என்று அழைக்க.
“இருக்கட்டும் மாமா, அத்தை” என்றவன்.. “கமலிக்கு தலை கட்டு பிரித்தவுடனே சொல்லுங்க, நான் என் குடும்பத்தோடு பொண்ணு பாக்க வர்ரோம்”.. என்றான்..
“தம்பி பொண்ணு கேட்டு வரவேண்டாம் பூ, வைக்க வாங்க”.. என்று கமலியின் பொற்றோர் சொல்லி விட்டு உள்ளே சென்று விட.
கமலியை பார்த்து நின்ற பெரியசாமி தன் கையை அவளிடம் நீட்ட..
நீட்டி அவனின் கையோடு தன் கையை வைத்தாள் கமலி..
அவளின் கையை பிடித்து அழுத்தியவன் , “உடம்பை பார்த்துக்கோ” என்றான்..
கமலி “சரி” தலையாட்ட..
மெல்ல அவள் கன்னத்தை தட்டியவன்.. “நாம நம்ம கல்யாணம் ஆனவுடன் நிறைய காதலிப்போம் வர்ரேன்” என்று தலையாட்டியவன்..
காரை விருதுநகர் வீட்டை நோக்கி விட்டவன்..
முகமலர்ச்சியோடு வீடு வந்தவனை அனைவரும் அதிசயமாக பார்க்க.
அதை விட அவன் சொன்ன செய்தியில் ஆ.. வென்று பார்த்து நிற்க..
என்ன என்பது போல் பார்த்தவர்களிடம் “கமலியை எனக்கு பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ண பேசுங்க” என்று சொல்ல..
என்னடா இது என்பது போல் மொத்தம் குடும்பமும் பெரியசாமியை பார்க்க..
இவனுக்கு வேற வேலை இல்லை அழகான பொண்ண பார்த்த போதும், என்று யோகா எழுந்து கிச்சன் சொல்ல…
“அம்மா…” என்றான்..
“முடியாது, முடியாது உனக்கு இப்போ கல்யாணம் பண்ணுற ஐடியாவில் நாங்க இல்ல” என்றவர் சிரித்து கொண்டே செல்ல…
தன் தலைமேல் கை வைத்து நின்றிருந்தான் பெரியசாமி….
.
error: Content is protected !!