Skip to content
Post Views: 2,799
அத்தியாயம் 32
கந்த பவனம் நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் அதன் சரியான நோக்கம் பலருக்கும் புரியவில்லை. நாளடைவில் அதன் செயல்பாடுகள் புரிதலை கொடுத்து.
Advertisement
சாலாவும் அன்னமும் பெரும்பாலும் இங்கே வந்துவிடுவார்கள். வாரம் ஒரு முறை திருப்புகழ் வகுப்பு எடுப்பார் சாலா. அங்கு அதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். அதே போல, நல்ல நல்ல தமிழ் கதைகளை வாரமொரு முறை கூறுவார் அன்னம். நல்ல தமிழை உச்சரித்தாலே, அது உடல் நலத்திற்கு நல்லது என்பர்.
அதே போல யோகா வகுப்புகள், ஓவிய வகுப்புகள் என்று வாரம் ஒரு முறை என நிறைய வகுப்புகள் நடந்தது. ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கி கொடுத்தனர் கந்தபவனத்தில்.
Advertisement
Advertisement
நோயாளிகளுக்கு மட்டும் அல்லாமல், உடன் துணை இருப்பவர்களுக்கும் வகுப்புகள் இருந்தது.
நோயாளிகளுக்கு மட்டும் போதாதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “புற்று நோய் மிகவும் கொடுமையான நோய். நம் பிரியமானவர்கள் அதனால் துன்பப்படுவதை பார்ப்பதைவிட கஷ்டமான விஷயம் வேறு இல்லை. நம்மால் அவர்களது வலியையும் வேதனையும் வாங்கி கொள்ள முடியாது. நம் ஆறுதல் மொழி பெரும்பாலும் பதிலுக்கு நோயாளிகளின் கோபத்தை தான் பெற்று கொடுக்கும். சில நேரங்களில் நோயாளிகளின் உடல்நிலை பின்னடையும். அப்பொழுது உடன் இருப்பவர்களின் நம்பிக்கை குறையும். எத்தனை செலவு செய்தாலும், எத்தனை பார்த்துக்கொண்டாலும் என்ன இது என்று மனசுணக்கத்தை கொடுக்கும். நோயாளிகளை பார்த்து கொள்பவர்களின் மனநலனும் பெரிதும் பாதிக்க படுகிறது. அவர்கள் தங்கள் கவனத்தை இப்படி திசை திருப்பினால், அவர்களுக்கு அது ஒரு புத்துணர்வையும் நம்பிக்கையும் கொடுக்கும். அந்த உற்சாகம் நோயாளிகளுக்கு ஒரு புது உத்வேகத்தை கொடுக்கும். இதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்” என்று விளக்கமளித்தான் முத்து கருப்பன்.
Advertisement
அதே போல, இதன் வைத்திய செலவுகள் மிக அதிகம். என் மனைவிக்கு, என் தங்கைக்கு, என் மகனுக்கு, என் அப்பாவுக்கு.. இப்படி நிறைய பேர், நான் நல்ல வைத்தியம் கொடுக்க ஆசை படுறேன், ஆனால் நான் வேலைக்கு செல்லாமல், காசு எப்படி வரும்? நான் வேலைக்கு சென்று விட்டால் என் அன்புக்கினியவரை யார் பார்த்துக்கொள்வது “ என்று தவிக்கும் பல கணவன்மார்களுக்கும் தகப்பன்களுக்கும், மகன்களுக்கும் மனைவிகளுக்கும் கந்தபவனம் ஒரு விமோச்சனத்தை கொடுத்தது. “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..” என்று. இவர்களின் பாதுகாப்பில் நோயாளிகளை ஒப்படைத்துவிட்டு, அவர்களால் வேலைகளுக்கு செல்ல முடிந்தது. வைத்திய செலவுகளை பார்த்துக்கொள்ள முடிந்தது.
சிலர், கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பர். இதற்கு மேலே வைத்தியம் கிடையாது இன்ற நிலையில், என்ன செய்வது என்று தடுமாறுபர்களை அரவணைத்து கொண்டது கந்த பவனம்.
மருத்துவர் குறித்த கெடுவையும் தாண்டி தங்கள் வாழ்நாளை நீடிக்க உதவுகிறது கந்த பவனம் என்று சில நோயாளிகள் மனமார கூறுனார்கள்.
சத்தான உணவு , இயற்கை சூழல், நல்ல பொழுதுபோக்குகள், இறை வழிபாடு, ஆரோக்கியமான சிந்தனைகள், அன்பான செவிலியர்கள், என்று பல நல்ல விஷயங்கள் இருந்தது கந்த பவனத்தில்.
இதன் நன்மைகளை அறிந்து பலர் உதவ முன் வந்தனர். இதே போன்ற கிளைகளை பல ஊர்களில் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொன்டனர் மக்கள்.
விசாகா அன்று காலை சாலாவிற்கு அழைத்தாள், ”அம்மா, நீங்க இன்னிக்கு கந்த பவனம் வருவீங்களா?” என்று.
“மதியத்துக்கு மேலே வருவேன்டா.. ஏதாச்சும் வேணுமா?”
“அம்மா, நீங்களும் அப்பாவும் அங்க பார்த்ததுட்டு வீட்டுக்கு வந்துடுங்க” என்றாள்.
“சரிம்மா.. வரோம்” என்றார்.
“அப்பத்தாவையும் கூட்டிட்டு வாரீங்களா?”
“சரி டா.. அவங்களும் வரணும்னு தான் சொல்லிட்டு இருந்தாங்க, மூணு பேரும் வந்திடறோம்”
மகள் எதோ பேச விரும்புகிறாள், என்று புரிந்து கொண்டார். நல்ல விஷயமா இருக்கனும்.. முருகா சரணம் என்று எப்பொழுதும் போல முருகனிடம் வேண்டிக்கொண்டார்.
விசாகா அன்னத்திற்கு அழைத்து, அவரையும் சுந்தரத்தையும் வருமாறு அழைத்தாள்.
விசாகாவின் பேச்சுக்கு அன்னத்திடம் எப்பொழுதும் சம்மதம் மட்டுமே.
பின் வேகமாக குளித்து, முத்து கருப்பனுக்கு பிடித்த க்ரீம் பன்களை செய்து முடித்தாள். முத்து கருப்பன் நைட் டூட்டி முடித்து அன்று நேரம் சென்று தான் எழுந்தான். க்ரீம் பன்களின் வாசனை ஆளை தூக்கியது..
“என்ன முருகம்மா.. என்ன ஸ்பெஷல்” என்றுதான் எழுந்து வந்தான்.
“நீங்க போய் குளிச்சிட்டு வாங்க சீக்கிரம்” என்று அவனை அனுப்பினாள்.
அவன் வரவும், பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனை இருவரும் வணங்கினர். மனைவியின் செயல்களை ரசனையாக பார்த்து கொண்டிருந்தான்.
பின் விசா அவள் செய்த கிரீம் பன்னை எடுத்து, கொஞ்சமாக பிய்த்து ஆசையாக கணவனுக்கு ஊட்டினாள். மிதமான சூட்டில் அமிர்தமாக இருந்தது.
“ரொம்ப நல்லா இருக்கு முருகம்மா.. இந்தா” என்று மீதம் இருந்ததை விசாகாவிற்கு ஊட்டி விட்டான்.
“மிஸ்டர் க்ரீம் பன்..”
“ஆஹான் .. என்ன விஷயம்? சொல்லு முத்தம்மா..”
“என் வயத்துல குட்டி க்ரீம் பன் இருக்கு அத்தான்..”
“பெரிய பீஸா தானே சாப்பிட்ட.. அப்புறம் என்ன குட்டி பன்?”
“ஹா ஹா ஹா..” என்று வாய் விட்டு சிரித்தாள் விசாகா. நம்ம ரெண்டு பேருமே ரொம்ப மெச்சூர்டான ஆளுங்க. இந்த மாதிரி பேசுறது எல்லாம் செட் ஆகவே இல்ல அத்தான்”
“சரியா சொன்ன முருகம்மா.. நமக்கு இது எல்லாம் செட் ஆகாது”
“நம்ம எதிர்பார்த்த பொக்கிஷம்…அந்த முருகன் நமக்கு வரம் கொடுத்துட்டார் அத்தான்” என்றாள் விசாகா கணவனின் தோள் சாய்ந்து.
மனைவியின் செயல்களை பார்த்ததுமே யூகித்து இருந்தான். கடந்த சில மாதங்களாகவே குழந்தை செல்வத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தனர் இருவரும்.
“எனக்கு தெரியும் தங்கம்மா.. ரொம்ப சந்தோசமா இருக்கும்மா..“ என்று மனைவியை ஆரத்தழுவிக்கொண்டான்.
மாலை வீடு வந்த பெரியவர்களிடம் விசயத்தை பகிர்ந்துகொண்டனர், அனைவருக்கும் மகிழ்ச்சி. பின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
விஷயம் தெரிந்தது முதல், செந்தில், ராஜா, வள்ளி, தெய்வா.. என்று மாறி மாறி வந்துவிடுவார்கள் விசாகாவை பார்த்து கொள்வதற்கு.
“டேய் அண்ணா.. அப்பத்தாவை வந்து ஒரு பாயசத்தை வைக்க சொல்லனும்.. இல்லனா விசா பாவம்” என்றான் கதிர் வெற்றியிடம் அலைபேசியில்.
அப்படி கூறினாலும், அண்ணன்களும் அடிக்கடி படை எடுத்தனர் தங்கை வீட்டிற்கு. பேருக்கு தான் தனிக்குடித்தனம். ஆனால் எப்பொழுதும் யாரவது ஒருவர் உடன் இருந்து பார்த்துக்கொண்டனர் விசாகாவை.
அன்பு நிறைந்த வீட்டில் அமுதமாய், ஐந்து தாய் மாமாவின் செல்ல மருமகளாய், வந்து பிறந்தாள் பெண்ணரசி “அன்னபூர்ணா
error: Content is protected !!