Skip to content
Post Views: 1,696
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் -20
Advertisement
என்னது! வெளியில் போடாவா.. தன்னை தான் சொன்னாளா என்று அவளை பார்க்க..
Advertisement
Advertisement
“உங்களை தான் சொன்னேன், நீங்க வெளியில போகலாம், உங்க அட்வைஸ் எனக்கு தேவயில்ல”..
“ஏய் பாப்பு சொன்னா கேளு, நம்மலுக்கெல்லாம் இந்த லவ்வு எல்லாம் வேண்டாம், என்ன பாத்தியா, நான் எப்படி இருக்கேன்”..
Advertisement
“நீங்களும் நானும் ஒன்னா”?.. என்றாள் கமலி…
“ஆமாம், நீயும் லவ் பண்ணி ஏதோ பிரச்சனை ஆகி இப்போ கல்யாணம் வேண்டாமுன்னு முடிவு எடுத்து இருக்க தானே, எதுக்கு இந்த லவ் எல்லாம் வேதனை தான்”..
“ஓ….. நீங்க லவ் பண்ணிங்களா”..
“ஆமாம்”.. என்றான் பெரியசாமி..
“யாரை” என்றாள் நக்கலாக..
“அது என் அத்தை பொண்ணு பார்கவி”..
“ஓ.. அவங்க உங்களை லவ் பண்ணாங்களா”..
“இல்லை” என்று தலையாட்ட.
“அப்போ நீங்க மட்டும் லவ் பண்ணி இருக்கீங்க அப்படி தானே, இது ஒன் சைடு லவ், அது கூட இருந்துருக்காது”.
“நீங்க எல்லாம் பேசுறீங்க, நீங்க அவங்களை லவ் எல்லாம் பண்ணல.. பார்த்தவுடனே அழகாய் இருக்க, இவ நம்ம அண்ணியா! நாமளே இவள கல்யாணம் பண்ணிங்கலாமுன்னு நெனச்சு தானே. அந்த பொண்ண கல்யாணம் பண்ண போனீங்க”.
எப்படி இவளுக்கு தெரிந்தது. நம்ம மனசுல நெனச்சு பண்ணது, இவ எப்படி கண்டு பிடிச்சா, அதை என்று அவள் முகம் பார்க்க.
“நீங்க என்னை பத்தி எல்லாம் பேச கூடாது”..
“ஓ… நீ மட்டும் உண்மையா லவ் பண்ணியிருக்கீயா, அதான் அவன் உன்ன கலட்டி விட்டுட்டு போயிட்டான் போல”.. என்று அவளை நக்கலாக பார்த்தான்..
“என் ஹீரோவா பத்தி பேசுனீங்க அவ்வளவு தான்”..
“ஓ.. பெரிய ஹீரோ!.. போடி இவளே.. இவ்வளவு அழகா இருக்க உன்ன விட்டுட்டு போயி இருக்கான், அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா”…
“ஆமா என் ஹீரோ அப்பாடக்கர் தான்.உங்களுக்கு என்ன வந்துச்சு, நான் எங்கேடோ கெட்டு போறேன் போங்க சார் போயி உங்க வேலையை பாருங்க, இன்னும் எவளாவது வெளியூருல இருந்து வெள்ளையா வருவ, அவள போயி விழுந்து, விழுந்து லவ் பண்ணுங்க, எங்கள மாதிரி உண்மையா லவ் பண்ணுற பொண்ணு எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாது” என்றவளின் கண்ணீல் இருந்து கண்ணீர் கொட்ட. அதை துடைத்து கொண்டே பேசினாள்..
அவளை பார்க்கவும் அவனுக்கு பாவமாக இருந்தது..
“பாப்பு அழாத” என்றான்.
.
“நான் என்ன உங்க வீட்டு பொண்ணா எதுக்கு என்னை பாப்புன்னு கூப்பிடுறீங்க, நீங்க என்னை பாப்பூன்னு கூப்பிட வேணாம்”..
“நீ சின்ன பொண்ணுடா, உன்னை 8,9 வருசமா பாத்துட்டு இருக்கேன், உன்னை பாப்பூன்னு கூப்பிட கூடாதா! நான்” என்றான்..
“கூப்பிடாதீங்க” என்றாள் மறுபடியும்..
“சரி கூப்பிடல உன் ஹீரோ எங்க இருக்கான்?. சொல்லு உன்ன பத்தி சொல்லி கூட்டிட்டு வர்ரேன்”..
“எதற்கு”என்றாள் கமலி..
“கூட்டிட்டு வந்து உங்க இரண்டு பேரையும் சேத்து வைக்க”..
“அது உங்களால முடியாது”..
“ஏன் அதெல்லாம் என்னால முடியும்” என்றான் பெரியசாமி..
“வேண்டாம் உங்க கருணைக்கு ரொம்ப நன்றி, என் வாழ்க்கை எப்படியோ போகட்டும் சார், நீங்க கிளம்புங்க” என்றாள் வேதனையான குரலில்..
அவளின் வேதனையான குரலில் மனம் உருகியவன், இவளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி.. அவள் அருகில் வந்தவன்..
“எத்தனை வருசமா லவ் பண்ணுற கமலி?.” என்றான்.
“7 வருசமா”.. என்று மனதை தொட்டு காண்பித்தவள்.”என் ஹீரோவை 7 வருசமா மனசுல சுமந்து கிட்டு இருக்கேன். இறக்கி வைக்க முடியுமா, முடியாது உயிர் போயிடும்” என்றவள் முகத்தை மூடி கதறி அழ.
“பாப்பு” என்றவன் அவள் அழுவதை தாங்க முடியாதவன்..”பாப்பு அழதாட மச்சான் எப்படியாவது கண்டு பிடிச்சு அவனை உன் கண்முன்னாடி நிக்க வைக்கிறேன்டா.. உன் அம்மா, அப்பா கிட்ட நான் பேசுறேன்”..
அவன் பேசுவதை கேட்டு நிமிர்தவள்..
“என் காதலை நீங்க புரிஞ்சுகிட்டீங்களா மச்சான்”..
“எனக்கு புரியுது பாப்பு, அந்த பையன் நம்ம ஊரா”?..
“ஆமாம்”.. என்றவளிடம்..
“அவனுக்கு கல்யாணம் ஆச்சா”..
“இல்லை” என்று தலையாட்ட..
“அப்புறம் என்ன, நான் போய் பேசி அவனை கூட்டிட்டு வர்ரேன், அது என் பொறுப்பு,. அந்த பையன் பேரென்ன?. எங்கே வேலை பாக்குறான் சொல்லு கமலி”.. என்றவனை..
அவள் அமைதியாக பார்க்க..
“பேசு கமலி அந்த பையன் ஸ்ரீவில்லிபுத்தூரா இல்லை சிவகாசியா?..” என்றான்..
அவளோ மௌனமாக இருக்க..
“இப்படி அமைதியாக இருந்த என்ன அர்த்தம் பாப்பு, அவனை பத்தி சொல்லு, அப்பதானே அவன் கிட்ட நான் போய் உன்ன பத்தி சொல்லி கூட்டிட்டு வர முடியும்”..
“வேண்டாம் மச்சான் நீங்க என்னை, என் காதல பத்தி புரிஞ்சுகிட்டீங்களே அதுவே போதும்” என்றவளை.
“லூஸ்சு மாதிரி பேசாத கமலி எத்தனை வருஷமா நீயும் அந்த பையனும் லவ் பண்ணீங்க, ஏன் இரண்டு பேரும் பிரிஞ்சீங்க சொல்லு கமலி என்ன பிரச்சனை?, உங்க இரண்டு பேருக்கும்”..
“போதும் மச்சான், என்னால முடியல. என் பிரச்சனையை நான் பாத்துக்கிறேன்.. நீங்க இவ்வளவு தூரம் எனக்காக பேசுனதுக்கு ரொம்ப நன்றி, நீங்க விருதுநகர் போங்க, உங்க வேலையை வேற கெடுத்து, உங்களை கூட்டிட்டு வந்து இருக்காங்க, வந்ததுக்கு நன்றி நீங்க கிளம்புங்க”..
“நான் போறேன், நீ ஒரு பதில சொல்லு, நீ உன் அம்மா, அப்பா பாக்குற பையனா கல்யாணம் பண்ணிக்கிறீயா இல்ல, நீ லவ் பண்ணுற பையன கல்யாணம் பண்ண போறீயா, சொல்லு நான் கிளம்புறேன்”..
அப்படியே ரொம்ப அக்கரை தான் என் மேல, எங்கட போன இவ்வளவு நாளா, வந்துட்டான் பெரிய இவன் மாதிரி என்று அவனுக்கு மனதில் ஆயிரம் அர்ச்சனை செய்தவள்..
“நான் யாரையும் கல்யாணம் பண்ணல, கல்யாணம் பண்ணவும் மாட்டேன்”..
“கமலி உன் அப்பா, அம்மா உன்ன கல்யாணம் பண்ணாம விட மாட்டாங்கமா, சொல்லு நான் பேசுறேன்”..
“ஸ்ஸ்… என்றவள்,, ஊருக்கு கிளம்பி போங்க மச்சான், எனக்கு என்னை பாத்துக்க தெரியும், உங்க அக்கரைக்கு கோடி நன்றி”…
“அப்போ நீ காலம் பூரா கல்யாணம் பண்ணாம, இப்படியே இருக்க போறீயா, உன்ன விட மாட்டாங்க கமலி”..
“அது என் பாடு” என்று எரிச்சல் குரலில் சொல்ல..
“உனக்காக அக்கரையா பேசுனா கோபப்படுற போடி” என்றவன். இனி இங்கே இருக்ககூடாது என்று அறையில் இருந்து வெளியே வர.
அவன் திறக்குமுன் ஒரு நர்ஸ் கதவை திறந்து கொண்டு வந்தவள்,, பெரியசாமியை பார்த்து “வாங்க சார் எப்போ வந்தீங்க” என்றவளிடம்..
“நானா” என்ற பெரியசாமி “அப்பவே வந்துட்டேன் சிஸ்டர்”..
“நீங்க ரொம்ப லக்கி சார்” என்ற நர்ஸ்சை பார்த்த பெரியசாமி..
“எதுக்கு லக்கி நான்” என்று அந்த பெண்ணிடம் கேட்க..
கமலி நர்ஸிடம் “ஒன்னும் சொல்லாதீங்க, அவர் கிட்ட” என்றாள்.
“ஏன் மேடம் சாருக்கு இன்னும் நீங்க சொல்லலீயா” என்றாள்..
“இல்ல சிஸ்டர் தயவு செஞ்சு எதுவும் சொல்லாதீங்க” என்றவள் கையெடுத்து கும்பிட,..
“ஓகே, ஓகே நான் ஒன்னும் சொல்லல்ல” என்ற நர்ஸ் கமலிக்கு ஏறிக்கொண்டு இருந்த டிரிப்சை ஆப் பண்ணி விட்டு, வெளியே போகும் முன், பெரியசாமி நர்சிடம் ” என்ன சொன்னீங்க சிஸ்டர் தெளிவா சொல்லுங்க” என்றான்..
“சாரி சார் உங்க லவ்வர் திட்டுறாங்க” என்று சிரித்து விட்டு செல்ல..
“என்னடி நடக்குது இங்க, அந்த நர்ஸ் ஏன் உன்னை என் லவ்வருன்னு சொல்லுறா,”..
“அத அவ கிட்ட போய்” என்று ஏதோ சொல்ல வந்தவள், “அது அந்த நர்ஸ் தெரியாம தப்ப புரிஞ்சு கிட்டாங்க போல நீங்க கிளம்புங்க”..
“உண்மைய சொல்லுடி, அவ ஏதோ பார்த்தேன்னு சொல்லுற, நீ சொல்லாதேன்னு சொல்லுற, நீ சொல்லுறீயா, இல்ல நான் அந்த நர்ஸ்கிட்ட போய் கேட்டு வரவா”..
” ஐயோ வேணாம் நானே சொல்லுறேன்,, அது இங்க ஹாஸ்பெட்டல் வந்தவுடனே என்ன ஆச்சுன்னு கேட்டாங்க, நான் சரியா சாப்பிடமா மயங்கி விழுந்துட்டேன்னு சொன்னேன். அப்போ இந்த நர்ஸ் லவ் மேட்டரன்னு கேட்டாங்க , ஆமாம்முன்னு சொன்னேன், என் லவ்வர் வருவான்னு சொன்னேன் , அதான் உங்கள என்ன லவ்வருன்னு தப்பா நெனச்சுட்டாங்க போல”,, என்று ஏதோ பேசி அவனை இங்கிருந்து கிளம்ப வைக்க முயற்சி பண்ண..
“இல்ல நீ ஏதோ என்கிட்ட இருந்து மறைக்குற, அந்த நர்ஸ் என்னை பார்த்து லக்கி சார்ன்னு சொல்லி இருக்க. நான் ஏன் லக்கி?. அப்பறம் நீங்க இன்னும் சார் கிட்ட சொல்லலீயான்னு கேட்டா, அதுக்கு என்ன் அர்த்தம் சொல்லு கமலி, நீ சொல்லுறீயா, இல்லை அந்த நர்ஸ்சை வரசொல்லவா” என்றான்..
கமலி அமைதியாகவே இருக்க..
“உன் லவ்வர் யார் எங்க இருக்கான் அவன் பேர் சொல்லு” என்றான்..
இவன் கிட்ட இனி மறைக்க முடியாது போலவே, கேட்டு, கேட்டு என்னை டார்ச்சர் பண்ணுறான்,, எத்தனை நாள் இதை இவன் கிட்ட இருந்து மறைக்க முடியுமா.. எல்லாத்தையும் சொல்லிட்டு போய்விடலாமா என்று முடிவு எடுத்தாள்..
“உங்களுக்கு என்ன தெரியனும்”?..
“அந்த நர்ஸ் ஏன் என்னை உன் லவ்வருன்னு சொன்னா? நீ என் கிட்டயிருந்து ஏதோ மறைக்குற சொல்லு” என்றவனிடம்..
மனதை திட படுத்திக்கொண்டவள்..
“அந்த நர்ஸ் எனக்கு தலையில் ஸ்கேன் பண்ணும் போது என் டாட்டூவை பார்த்த… அதனால தான் உங்களை என் லவ்வருன்னு நெனச்சு பேசுற”..என்றவள் பேசி விட்டு அவள் கண்களை மூடி அமர்ந்திருக்க..
“உன் டாட்டூவை பார்த்து என்னை ஏன்” என்று பேச வந்தவன் வார்த்தைகள் வராமல் ஒரு நிமிடம் அமைதியானவன்..
“யாரை நீ டாட்டூ போட்டு வச்சு இருக்க?.. காட்டு” என்றான்..
“நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியாச்சு கிளம்புங்க”…
“ஏய் இது என்ன பதில், உன் டாட்டூவை காட்டு”…
“முடியாது”…
“கமலி” என்றவன் பல்லை கடித்துக்கொண்டு “நீ உன் டாட்டூவை காம்பிக்கிறியா இல்ல நான் பார்க்கவா” என்றான் கோபமாக இன்னும் அவனுக்கு புரியவில்லை தன்னை தான் அவள் டாட்டூ போட்டு வைத்திருக்கிறாள் என்று..
“இப்போ என்ன? நான் யார டாட்டூ போட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியனும் அவ்வளவு தானே” என்றவள்..
“உங்களை தான், உங்க முகத்தை தான், நான் என் நெஞ்சுல பச்ச குத்தி வச்சு இருக்கேன் போதுமா” என்றாள்..
error: Content is protected !!