Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – 27.1

“எத்தனையோ இரவுகள் இப்படி ஒரு குடும்பம் நமக்கு அமையாதா? நானும் மத்த பொண்ணுங்க போல பசங்க, புருஷன்னு வாழ்க்கையை அனுபவிக்காமலே இறந்திடுவோமோனு நினைச்சிருக்கேன் நித்தி. உன்னோட இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்னு என்னோட பல நாள் கனவு. ஒரு பையன், ஒரு பொண்ணு, நான், நீ ஒரு குடும்பமா வாழறது போல கற்பனை பண்ணிருக்கேன். அதெல்லாம் தூங்கி எழும்போது மறைஞ்சு போகற கனவா தான் இருந்தது. ஆனா இப்போ தூங்கி எழுந்தாலும் மறையல! கற்பனை எல்லாம் நிஜமா கண்ணு முன்னாடி பார்க்கும் போது, என்னால நம்ப முடியல நித்தி!” கண்ணீர் வடிய கூறினாள்.

அவள் கன்னத்தில் முத்தம் வைத்து, “இப்போ நம்புறீங்களா நிவிம்மா?” என்ற வேதாவின் நெற்றியில் இதழ் பதித்தாள் நிவி.

“எனக்கும் தான் நிவி! வேதாவோட என் வாழ்க்கை முடிஞ்சிடும் நினைச்சேன். ஆனா இழந்த வாழ்க்கை எனக்கு இரட்டிப்பாக கிடைக்கும் எதிர்பார்க்கல. நித்தின், நீ ரெண்டு பேரும் வேதா போல எனக்கு கிடைச்ச பொக்கிஷங்கள். நீண்ட காலம் நான் செய்த தவத்துக்கான வரங்கள். கண்டிப்பா உங்களை என் வாழ்நாள் முழுக்க பத்திரமா பார்த்துப்பேன்.” என்று நித்தினின் கையைப் பற்றி கொண்டான்.

அவனை அணைத்துக் கொண்ட நித்தின், “கண்டிப்பா அம்மா, அப்பா இழந்த எங்களுக்கு நீங்க கடவுள் கொடுத்த விலை மதிப்பு இல்லாத பொக்கிஷங்கள் தான். பெத்த அம்மா, அப்பாவ விட நீங்க எங்க மேலே உயிரையே வச்சிருக்கீங்க. உங்களை கடைசி வரை இதே அன்போட பார்த்துப்போம் ப்பா.” கண்கள் கலங்க சொன்னான்.



Advertisement

“ஒரே சென்டியா இருக்கே! டாபிக்க மாத்துங்கப்பா.” என்று காதை குடைந்த வேதாவை செல்லமாக காதை திருக்கினாள் நிவி. நால்வரும் பேசியபடியே உறங்கிப் போனார்கள்.

வெகு நேரத்துக்கு பின் ஏதோ சத்தம் கேட்டு விழியைத் திறந்தான் நித்தின். மெத்தையில் நிவியும் நித்திலனையும் காணவில்லை. வேதா மட்டும் உறங்க, வெளியே வந்து பார்த்தான். நித்திலன், நிவியைத் தூக்கிச் செல்வதைக் கண்டு சிரித்து கொண்டே உள்ளே வந்து படுத்துக் கொண்டான்.

வெட்கத்துடன் நிவி அவனைப் பார்க்க, அவளைத் தூக்கிக் கொண்டு தன்னறைக்கு வந்து கதவை உதைக்க அது பசக்கென ஒட்டிக் கொண்டது. மெத்தையில் அவளை அமர வைத்து நெருங்கி அமர்ந்து கொண்டான்.

Advertisement

நித்திலனைப் பார்த்து கொண்டே இருந்தாள் நிவி. “என்ன நிவி அப்படி பார்க்கற?”

Advertisement

“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சினு ரொம்ப சந்தோசப்பட்டேன் நித்தி. நான் கொடுக்காத சந்தோஷத்தை, உன் மனைவி குடுப்பா. உன்னை சந்தோஷமா வச்சிப்பானு நினைச்சிப்பேன். ஏன் வேதாவை பார்க்கிறப்ப கூட நீ சந்தோசமா வாழ்ந்த அடையாளமா தான் பார்த்தான். ஆனா…” தொண்டை அடைக்க நிறுத்தியவள் கண்களில் நீர் வழிய,

“கல்யாணமாகி எந்த சுகத்தையும் அனுபவிக்காம, உன்னை நம்பி வந்த பொண்ணுக்கு ஒரு தந்தையா எல்லாத்தையும் செஞ்சத நினைக்கும் போது பெருமையாவும், வேதனையாவும் இருந்தது நித்தி. நீயும் என்னைப் போல இருந்திருக்க! என்னால தான் நீயும் கஷ்டப்பட்டிருக்க! வாழ வேண்டிய வயசை இழந்துட்டோமே நித்தி!” எனக் கண்ணீர் சிந்தியவளின் கண்ணீரைத் துடைத்தவன்,

“நாம பட்ட கஷ்டத்துக்கு சேர்த்து நாம வாழ போறோம் நிவி! பழைய வாழ்க்கைய நினைக்க வேணாம். வாழ்க்கையில நடக்கற எல்லாமே நல்லதுக்கு தான். ஒரு வேளை அந்த நேரத்தில் சேர்ந்து உங்க அப்பாவால நம்ம வாழ்க்கை கேள்வி குறியா ஆகிருந்தால்…! உயிர் போயிருந்தால்? நினைக்கவே முடியல நிவி. ஆனா இப்போ இந்த வாழ்க்கை பெஸ்ட்னு தோணுது.

Advertisement

இளமை காலத்தை இழந்து இருக்கலாம், ஆனால் வர போற முதுமை காலத்தில் தனிமையில கழிக்காம உன்னோடு சேர்ந்து கழிக்க போறேன் நினைக்கும் போது, எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ என் வாழ்க்கையில இல்லையோனு நினைச்சேன். ஆனா விதி உனக்கு தான் அவன்னு தாமதமா கொடுத்துருச்சி.

இனி அந்த விதியே வந்து கேட்டாலும் உன்னைக் கொடுக்க மாட்டேன் நிவி! இனி பிரிவுனு நம்ம வாழ்க்கையில ஒன்னு இருந்தால், அது நம்ம இறப்பா தான் இருக்கணும். அது வரைக்கும் காதலிச்சிட்டே வாழ்வோம் நிவி!” என அவள் முகமேந்தி முத்தமிட,

“லவ் யூ நித்தி!” என்றாள். சொன்ன இதழ்களுக்கு அவனது இதழ்கள் முத்தப் பரிசை அளித்தன. இரவு முழுதும் இதழ்களுக்கு வேலை என்றானது.

மறுநாள் பரசு நடுவில் அமர வள்ளியும் வேணுவும் அவர் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, நித்திலனும் நிவியும் நடுவில் நின்ற கொண்டனர். நித்திலனை அணைத்தவாறு நித்தினும், நிவியை கட்டிக் கொண்டது போல வேதாவும் நிற்க அழகிய புகைப்படமானது.

பின் நால்வரும் மட்டுமே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர் வித விதமான நிறைய புகைப்படம் எடுத்துக் கொள்ள, வள்ளி அக்குடும்பத்தை சுற்றி போட்டார்.

ஒத்தையாக வந்த நித்திலனைக் குடும்பம், குட்டியென பார்க்க அவனை பெறாத தாய், தந்தைக்கு மனசும் வயிறும் நிறைந்ததும் இல்லாமல் குளிர்ந்து போனது. தன் வாரிசை பேணிக் காத்து, வளர்த்து அதற்கு ஒரு குடும்பத்தை கொடுத்த நிவியைப் பார்க்க, அவள் பட்ட துன்பங்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைத்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீரோடு கண்டார் வேணு.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!