Skip to content
Post Views: 2,158
கருப்பன் ஆட்டம் 32
மலர்விழி தனது தாய் தந்தையரின் அணைப்பில் இருந்து பிரிந்தவளுக்கு அப்பொழுதே கருப்பனின் நினைவும், அதோடு சேர்ந்து அதீத பயமும் தொற்றிக்கொள்ளவே அவள் பொறுமையாக தலையை திருப்பி கருப்பனை பார்த்தாள்.
Advertisement
கருப்பனோ கோபத்தின் உச்சத்தில் ஊரின் எல்லையில் கையில் அரிவாளோடு நிற்கும் எல்லை சாமி கருப்பை உரித்து வைத்தார் போல் அடக்கப்பட்ட கோபத்தோடு கண்களில் தீ பிளம்பு தேங்கி நின்று இருந்தான்.
அதனைப் பார்த்த மலர்விழி பொறுமையாக தனது தாய் தந்தையரிடமிருந்து விலகி மெல்ல எட்டுகளை எடுத்து வைத்து கருப்பனின் புறம் நடந்து வந்தாள்.
Advertisement
Advertisement
அவள் தனது அருகே வருவதை உணர்ந்த கருப்பன் விழியை உயர்த்தி அவளைக் கூர்ந்து பார்த்தான்.
அவனின் பார்வையின் வீச்சில் அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாமல் அப்படியே தடை பட்டு நின்று விட்டனர் மலர்விழியின் கால்கள்.
Advertisement
கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரும் அங்கு நடக்கும் நிகழ்வை வைத்து தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். அதனால் அந்த இடம் முழுவதும் ஒரே சலசலப்பாக இருந்தது.
கருப்பனின் அம்மா பொண்ணுத்தாயி மீனாவின் அருகில் வந்தவர், “அடியே என் குடியை கெடுத்த சிரிக்கி மவளே…..! ஊரு கூட்டி நிச்சயம் பண்ணி பத்திரிக்கை அடிச்சு மைக்கானாத்து கல்யாணத்தை வச்சிருக்கும் போது எவன் கூடிய அரிப்பெடுத்து போய் ஓடி போனியேடி….! இப்ப மட்டும் எதுக்குடி வந்த….?” என்று கேட்டார்.
அதற்கு மீனாவோ “அம்மா நான் வேணும்னு ஒன்னும் பண்ணலமா….! எனக்கு கல்யாணத்தை நிறுத்திட்டு போகணும்…, உங்களுக்கு கௌரவ கொறச்சல உண்டு பண்ணனும்னு நான் எப்பவுமே நினைச்சது இல்லம்மா….!” என்று கூறினால் மீனா.
“எப்பவுமே எங்களுக்கு கௌரவ கொறச்சல கொடுக்க கூடாதுன்னு நினைச்சவதா ஊர் கூடி இருக்கிற வேலையில சிங்காரிக்கு மூக்கறுத்த கதையா…! ஊருச் ஜனமே என் வீட்ல கூடி இருக்கிற நேரத்துல யார் எவன்னு தெரியாதவன் கூட ஓடிப் போனியாடி….?” என்று கேட்டு அவளின் கன்னத்தில் அறைந்தார் பொண்ணுத்தாயி.
அதனைப் பார்த்த ராகுலோ “அத்த அவ விரும்பி ஒன்னும் என் கூட ஓடி வரல…., ஒரு இக்கட்டான சூழ்நிலையில தான் இந்த ஊரை விட்டு போக வேண்டியதா போச்சு….., என்ன காரணம்னு முழுசா தெரியாம நீங்க என் பொண்டாட்டிய அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க….!”என்று கூறினான்.
“யாருக்கு யாருடா அத்தை…., என் புருஷனோட உசுர குடிச்ச இந்த சிறுக்கி மவளே அன்னைக்கே தலைமுழுக்கிட்டு உட்கார்ந்து இருக்கேன்….! அப்படியா இருக்கும்போது எங்க இருந்துடா வந்த நீ அத்தை நொத்தைன்னுட்டு….!” என்றார் பொண்ணுதாயி.
அப்பொழுது இரண்டடி முன்னே வந்த தேவி “மதனி அது என் பையன் தான் ராகுல்…!” என்று கூறினார்.
“அப்பிடி போடு அருவாள….!உன் புள்ள தானா இவன்….! அதேன் உன் புத்தி போகாம இருக்கியான்…!” என்றார் பொண்ணுத்தாயி.
“அத்த தேவையில்லாம எங்க அம்மாவை எதுவும் பேசாதீங்க….!” என்றான் ராகுல்.
“ஏம்ப்பு பேசக்கூடாது…? இல்ல ஏன் பேசக்கூடாதுங்குறேன்….? இங்க என் தாலி அறுத்து, என் குடியவும் குடும்ப கெளரவத்தையும் கெடுத்து குழி தோண்டி பொதச்சுட்டு தன்னோட நிம்மதியும் சந்தோசமும் மட்டுந்தேன் முக்கியம்ன்னு ஊர வுட்டு ஓடி போனதுங்கதேன் உன் ஆத்தாளும் பொண்டாட்டியும்.
இங்க பாத்தல்ல என் புருஷன் கூட பொறந்ததால வளர்த்த கொடுமைக்கும், என் வயித்துல பெத்த கொடுமைக்கும் மானம் மரியாதை இழந்து ஊர் பயலுக ஏச்சு பேச்ச கேட்க முடியாம என் புருஷன் உசுர மாச்சுட்டு போயிட்டாரு…., இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு முண்டச்சியா நிக்குறது நாந்தேன். பின்ன நான் ஏன் பேசக்கூடாது….?” என்றார் பொன்னுத்தாயி.
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, அங்கே வந்த அமுதாவும் அவர் பங்கிற்கு மீனாவையும் தேவியையும் தனது ஆத்திரம் போங்க திட்டினார்.
இவை அனைத்தையும் பார்த்தாலும் கேட்டாலும் கருப்பனின் பார்வை முழுவதும் மலர்விழியின் மீதே துளைத்து நின்றிருந்தது.
அவனின் பார்வை வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மலர்விழி தலை குனிந்து கொண்டு நின்று இருந்தாள்.
தேவியும் மீனாவும் தங்களின் நிலையை எடுத்து சொல்ல எத்தனையோ முயற்சித்தனர்.
ஆனால் இழப்பின் வலியினை அதிகம் உணர்ந்த பொண்ணுத்தாயி மற்றும் அமுதாவால் தான் அவர்கள் கூறுவதை கேட்பதற்கான பொறுமை துளியும் இல்லாமல் இருவரையும் மாறி மாறி வசை பாடிக்கொண்டே இருந்தனர்.
அங்கே ஊர் மக்கள் சலசலப்பு மற்றும் இவர்களின் பேச்சுவார்த்தைகள் மட்டுமே நீண்டு கொண்டே இருந்தது.
ஆனால் பேச வேண்டிய கருப்பனோ இப்பொழுதோ அப்பொழுதோ என வெடித்துச் சிதற காத்திருக்கும் கொதிநிலை தாங்கிய எரிமலையாய் தன்னுடைய உணர்வுகளை அடக்கிக் கொண்டு நின்றிருந்தான்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கருப்பன் “அம்மா…..!” என்று கர்ச்சித்தான்.
அவனின் அம்மா என்று அழைப்பிலேயே பொண்ணுத்தாயி தன் வாயை கப்சிப் என மூடிக்கொண்டார்.அருகில் இருந்த அமுதாவிற்குமே அதே நிலைதான்.
கருப்பன் இப்பொழுது மலர்விழியின் அருகில் வந்தவன் “நான் கேக்குறதுக்கு ஆமா இல்லன்னு மட்டும் தான் பதில் வரணும்….!” என்றான்.
கருப்பனின் அனல் கக்கும் பார்வையை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்த வாரே சரி என்பதை போல் தலையசைத்தால் மலர்விழி.
“இங்க நிக்குறாளே….., இவதான் உன் ஆத்தாளா……? என்று தேவியை கை காட்டி கேட்டான்.
ஆம்….! என்பதைப் போல் தலையசைத்தால் மலர்விழி.
“அப்போ இவ உன் அண்ணனோட பொண்டாட்டியா….?”என்று மீனாவை கை காட்டி கேட்டான்.
அதற்கும் ஆம்….! என்று தலையசைத்தாள்.
“அப்போ….! உனக்கு எல்லாம் தெரிஞ்சுகிட்டு தான் என் ஊருக்கு வந்து, என்ன விரும்புற மாதிரி நடிச்சு என் கையால தாலியும் வாங்கிகிட்டு என்கிட்ட ஒண்ணுமே தெரியாத மாதிரி சரசமாடிட்டு இருந்தியாடி….?” என்று கேட்டான் கருப்பன்.
“ஐயோ மாமா அப்படியெல்லாம் ஒன்னும்…..” என்று அவள் முழுதாக முடிக்கும் முன்பு அவளின் கன்னத்தில் அடியை இடியென இறக்கி இருந்தான் கருப்பன்.
அவன் அடித்த அடியில் சுருண்டு தரையில் விழுந்தால் மலர்விழி.
தன் பெற்ற மகள் அடி வாங்கியதை பார்க்கத் தாளாத மலரின் தந்தையும் தாயும் பதறி போய் மலர்விழியின் அருகில் வந்து அவளை கை கொடுத்து தூக்கி நிறுத்தினர்.
கருப்பன் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருக்க, “மாமா நான் சொல்றத கேளுங்க மாமா….., நான் வேணும்னு எதுவும் பண்ணல மாமா….., நெசமாலுமே உங்களை எனக்கு ரொம்ப…..!” என்று அவள் மேலும் கூறிக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் ஒரு அடி அவளின் கன்னத்தை பதம் பார்த்தது.
ஆனால் இந்த முறை அவள் கீழே விழுகாமல் சுதாரித்து நின்று கொண்டாள்.
தன் தங்கை மீண்டும் அடி வாங்கியதை பொறுக்க முடியாத உடன் பிறந்தவன் கருப்பனை நெருங்கி வந்து அவனின் பனியனை சேர்த்து பிடித்தவன்,
“ஏய்….! என்ன… ஊருக்குள்ள பெரிய சண்டியன்னா பொம்பள புள்ள மேல கை வைப்பியா…..? இதுதான் நீ ஆம்பளைங்கறதுக்கு அடையாளமா…? ஒரு பொம்பள பிள்ளைய அடிச்சுட்டா நீ ஆம்பள ஆயிடுவியா….?
இப்ப என் தங்கச்சி என்ன தப்பு பண்ணிட்டான்னு இப்பிடி அடிச்சிட்டு இருக்க….?” என்று கேட்டான் ராகுல்.
கருப்பன் இப்பொழுது ராகுலையும் அவன் பிடித்து இருக்கும் தனது பனியனையும் பார்த்தான்.
தன் நண்பனின் பார்வை வீச்சினை உணர்ந்த தர்மன் ‘ஐயையோ இவனுக்கு இருக்குற ஆத்திரத்துக்கு இந்த வெள்ளப் பன்னி வேற உள்ள வந்துகிட்டு அடி வாங்கியே சாகனும்னே வரானே…!” என்று நினைத்தவன்,
“இதோ பாருயா கொஞ்ச நேரம் தள்ளி போய் அமைதியா நில்லு….!” என்றான் தர்மன்.
“என்னையா நீ அவ என் தங்கச்சி புடிச்ச அடிச்சுட்டு இருக்கான். கூட பொறந்தவனா எனக்கு எப்பிடி ரத்தம் கொதிச்சிட்டு இருக்குதுன்னு உனக்கு தெரியுமா….?”என்றான் ராகுல்.
அதற்கு தர்மனோ…”உன் கூட பொறந்த பொறப்பு ஊரை விட்டு வந்து எத்தனை நாள் ஆச்சு….! கிட்டத்தட்ட மாச கணக்கு ஆகப்போகுது, இத்தனை நாளா உன்கூட பிறந்த பொறப்ப காணோம்னு தேடலயே நீயி….! இப்ப மட்டும் எங்க இருந்து புதுசா மொளச்சு வந்தியாம்….?”என்றான் தர்மன்.
“ஒரு ஊரு விடாம தேடிகிட்டு தான் இருந்தோம்…!” என்றான் ராகுல்.
“இங்க பாருப்பா உன் தங்கச்சி ஊர்ல இருந்து வரும்போது எப்படி வந்தாலோ அப்படி இப்போ கிடையாது…..! இப்போ அவ கருப்பனோட பொஞ்சாதி…,
கருப்பனுக்கு அடிக்கிறதுக்கும் திட்டறதுக்கும் கோவப்படுறதுக்கும் பாசத்தை கட்றதுக்குன்னு எல்லாத்துக்குமே மலர் மேல உரிமை இருக்கு….! அத மலர் வேணான்னு சொன்னா…. கருப்பன் உன் தங்கச்சி கிட்ட மூஞ்சி குடுத்து கூட பேச மாட்டியான். நீ பேசாம இரு….!”என்றான் தர்மன்.
மலர்விழியும் தன் அண்ணனிடம் “அண்ணே நீ கொஞ்சம் அமைதியா இருண்ணே….!”என்றாள்.
“எல்லாம் உன்னால வந்தது….! நீ எதுக்கு நம்ம வீட்ல இருந்து இந்த கருமத்துல வந்து தங்கி இருக்க….? உனக்கு என்ன தலை எழுத்தா…..?” என்று கேட்டான் ராகுல்.
அதனைக் கேட்ட கருப்பன் “உன் தங்கச்சிய யாரும் இங்கே இருக்க சொல்லி வற்புறுத்தல…., உன் தங்கச்சிய நீ இங்க விட்டுட்டு போனேன்னா…., எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு அவளை கொன்னு பொலி போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல…..!
உன் தங்கச்சி உசுரோட வேணும் அப்படின்னா ஒழுங்கு மரியாதையா கூட்டிகிட்டு இடத்தை காலி பண்ணிட்டு போயிரு….,
என் வீடும் வாசலும் தோட்டந்தொறவும் எனக்கு மட்டும் புடிச்ச போதும்….! இந்த கருமத்துல எல்லாம் உன் தங்கச்சி வாழனும்னு ஒரு அவசியம**ம் இல்ல…..!” என்றான் கருப்பன்.
அதனைக் கேட்ட ராகுல் மலர்விழியை பார்த்தவன் “மலரு இதுக்கப்புறமும் நீ இங்க இருக்கணுமா….? அப்படி உனக்கு என்ன அவசியம் வந்திருச்சு….! வா நம்ம வீட்டுக்கு போலாம்….!” என்று கூறி மலர்விழியின் கையை பிடித்து இழுத்தான்.
அதற்கு மலர்விழியோ தன் அண்ணனின் கையில் இருந்து தனது கையை உருவி கொண்டவள் “அண்ணே எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, அவரை நான் முழு மனச உசுருக்கு உசுரா விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்….!
வாழ்வோ…! சாவோ…! என் புருஷன் என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்ந்தாலும்…, இல்ல அவர் கையாலேயே என்னை வெட்டியே போட்டாலும் கூட…, இதே ஊருல நான் நிம்மதியா சாவேனே தவிர, எக்காரணம் கொண்டும் இந்த மண்ணை விட்டு எங்கேயும் போக மாட்டேன்….! என்று அழுத்தம் திருத்தமாக கூறியவள் கருப்பனின் விழிகளை நிமிர்வோடு பார்த்தவள்,
அப்புறம் என்ன சொன்ன…? இந்த கருமத்தலயா இருக்கன்னு கேட்டல்ல….! இது கருமமா…. இந்த கருமத்துல ரெண்டு நாள் வாழ்ந்து பாரு அப்பதான் உன்னையே நீ மனுசனா உணருவ…! அந்த சிட்டி லைஃப்ல 24 மணி நேரமும் வேலை வேலைன்னு வேலைய கட்டிட்டு அழுகுறல்ல….,
ஒரே ஒரு நாளாவது உன் பொண்டாட்டி கிட்ட உட்கார்ந்து உன்னுடைய ஊர உறவை பத்தி விசாரிச்சு இருப்பியா….? அண்ணி என்கிட்ட எவ்வளவு சொல்லி ஃபீல் பண்ணி இருக்காங்க தெரியுமா….? அவங்க ஊர அவங்க எவ்வளவு மிஸ் பண்ணி இருக்காங்கன்னு, அண்ணி பேசுற ஒவ்வொரு வார்த்தையிலிருந்து நான் ஃபீல் பண்ணேன்…!
அண்ணே எனக்கு இந்த கருமாந்திரம் பிடிச்ச மாதேஷ் கூட கல்யாணம் பண்ணிக்க, துளியும் விருப்பம் இல்ல.
ஆனா அவன் வச்ச ஒரு டீலிங் காக நீயும் அப்பாவும் அமைதியா இருந்தது என்னால ஏத்துக்க முடியல.
நான் அன்னைக்கே செத்துப் போய்டலாம்னு முடிவு எடுத்து தான்
தற்கொலை பண்ணிக்க போனேன்.
ஆனா என் ஃபிரண்டு மயில் தான் என்னை தடுத்து இங்க கூட்டிட்டு வந்தா…! அவ இங்க கூட்டிட்டு வரும்போது எனக்கு தெரியாது…, இந்த ஊரு தான் நம்ம அம்மாவும் அண்ணியும் பொறந்த ஊருன்னு…!
ஆனா இந்த ஊருக்கு வந்ததும் எப்போ நான் கருப்பு மாமாவ பாத்தேனோ அப்போ இருந்தே நான் என் மனசுக்குள்ள தீர்க்கமா ஒரு முடிவு எடுத்துட்டேன்.
என் வாழ்க்கை முழுசும், ஏன் என்னோட இந்த உடம்புல இந்த உசுரு இருக்கிற கடைசி நிமிஷம் வரைக்கும் நான் இந்த மண்ணுல தான் இருக்கனும்னு….! நான் அப்படித்தான் இருக்கவும் செய்வேன்.
வந்தது வந்துட்ட உனக்கு விருப்பம் இருந்தா தங்கச்சி வீட்ல ரெண்டு நாளைக்கு இருந்து விருந்து சாப்பிட்டு போ….! அதுக்காக உன் தங்கச்சி அப்படின்ற உரிமையோட என்னை இங்கிருந்து கூட்டிட்டு போகணும்னு மட்டும் நினைக்காத….,
இப்போ உனக்கு நான் தங்கச்சியும் இல்ல, அப்பாவுக்கு நான் பொண்ணும் இல்ல…., இப்போ என் கருப்பு மாமாவுக்கு நான் பொண்டாட்டி…..!”என்று கூறினால் மலர்விழி.
அதனை கேட்ட கருப்பனுக்கு ஆத்திரமாக வந்தாலும், ராகுல் மாதேஷுக்கு கடுப்பாக இருந்தாலும்,
தர்மன், மீனா, தேவி, நடேசன், அமுதா, மயில் என அனைவருக்கும் அத்தனை ஆனந்தம்.
பொண்ணுத்தாயிக்கோ தன் மருமகளின் இத்தகைய உறுதியான பேச்சு உள்ளூர மனம் குளிரவே செய்தது.
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
error: Content is protected !!