Skip to content
Post Views: 1,043
மனசு 15
வீட்டிற்கு வந்ததிலிருந்து மகள் தேம்பி தேம்பி அழுவதை காண கோசலைக்கு பதக்பதக்கென இருந்தது.
கோசலை சாயாலி இருவரும் இன்பவேணியிடம் விசாரிக்க, அவளுக்கு யார் பேச்சும் கேட்கவில்லை. ஏற்கனவே காயப்பட்ட மனதில் உதய்கிருஷ்ணா ஊசியை அல்லவா ஏற்றி விட்டான்.
Advertisement
“எப்படி ஒரு குழந்தையை காயப்படுத்துவேன்? அதுவும் என்னோட கிருஷ் குழந்தையை…???” மனம் அடிபட்டு புண்ணாகியது. மேலும் அழுது அதனை பெரிதாக்கிக் கொண்டிருந்தாள்.
Advertisement
கோசலை விதார்த்திற்கு அழைக்க, அவன் அழைப்பை எடுக்கவேயில்லை.
Advertisement
பொறுமையிழந்த சாயாலி, அம்மா அக்காவ பாத்துக்கோங்க. நான் அங்க போயிட்டு வாரேன்.
Advertisement
டி பிரச்சன எதுவும் பண்ணீடாத!
ம்ம்! உதய்கிருஷ்ணா வீட்டினுள் நுழைந்தாள். உதய்கிருஷ்ணா ஜான்விக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் அங்கங்கு சோகமாக அமர்ந்திருந்தனர்.
பாட்டியிடம் வந்தவள், “ஏய் கிழவி என்னோட அக்காவ என்ன பண்ணீங்க?” சத்தமிட்டாள். அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்து மேலும் உதய்கிருஷ்ணா அவன் வேலையை தொடர்ந்தான்.
புள்ள என்னம்மா பண்ணுது?
எனக்கு வர்ற கோபத்துக்கு…என கழுத்தை நெறிப்பது போல கையை ஆட்டியவள், அழுறா அழுறா அழுதுட்டே இருக்கா. இந்த ஒரு வருசம் தான் அழாம நிம்மதியா வேலைய பாத்துட்டு இருந்தா…அதுக்கும் வச்சிட்டீங்களே ஆப்பு! கோபமாக சோபாவில் அமர்ந்தாள்.
பேசுறத கூட காதுல வாங்காம அழுறா…கடவுளே! இதுக்கு தான் இங்க தங்க வேண்டாம்னு கோசலை அம்மா சொன்னாங்க போல…
யம்மாடி, அப்படில்லாம் பேசாதம்மா..
அப்புறம் எப்படி பேசுறதாம்? என்ன செஞ்சீங்க? சொல்லு? பாட்டியிடம் வினவினாள்.
உதய்கிருஷ்ணா இன்பவேணிக்கு இடையே நடந்த வாக்குவாதத்தை கூறினார் பாட்டி.
“மாமா மேல ரொம்பவே மரியாதை இருந்துச்சு. ஆனா இப்ப இல்ல…” கோபமாக கூறி உதய்கிருஷ்ணாவை முறைத்து எழுந்தாள். அவன் அவளை பார்த்து எழுந்தான்.
கவனித்துக் கொண்டிருந்த விதார்த் வேகமாக மாடியிலிருந்து இறங்கி சாயாலி கை பிடித்து வெளியே இழுத்து சென்றான்.
கைய விடு. உன்னோட அண்ணாவ ஒண்ணு பேசிறக் கூடாதோ?
சொல்றத கேளு. ஏற்கனவே அவன் கோபமா இருக்கான். நீ பேசுற பேச்சுக்கு அடி வாங்கிட்டு தான் போவ…
அடிப்பாரோ? அடிச்சு தான் பாக்க சொல்லேன்…
சாயாலி வாயை கையால் விதார்த் அடைக்க, காரிலிருந்து இறங்கினாள் மேக்னா.
மேம் மேம்…
சாயாலி அவளை எட்டிப் பார்த்து விதார்த் கையை தட்டி விட்டு, “ஏய் இத விட சத்தமா உனக்கு கூப்பிட தெரியாதா?” அவளிடம் காய்ந்தாள்.
இல்ல மேம்..
“அக்கா இன்னிக்கு வொர்க்குக்கு வர மாட்டாங்க. நீ பாத்துக்கோ” அதிகாரமாக பேசினாள்.
“எதுக்கு மேம்? இன்னிக்கு மீட்டிங் இருக்கு. மேம் கண்டிப்பா வரணும்” பாவமாக பேசினாள்.
நான் சொல்லிட்டே இருக்கேன்..
“அடச்சீ…பேச்ச நிறுத்து” சாயாலியை விலக்கி, நான் இன்னுவ அழைச்சிட்டு வாரேன். நீ கிளம்பு…
அக்கா இன்னிக்கு வொர்க்குக்கு போக கூடாது. நான் விட மாட்டேன்..
அவளை தள்ளியவன், “நீ கிளம்பு. நான் அழைச்சிட்டு வாரேன்” என இன்பவேணி வீட்டிற்குள் சென்றான் விதார்த்.
“நீ எதுக்கு உள்ள வர்ற?” விதார்த்தை காய்ச்சிக் கொண்டே அவன் பின் ஓடி வந்தாள் சாயாலி.
“விது, என்னாச்சுடா?” கோசலை விதார்த்திடம் பதறி வந்தார்.
அழுது சோர்ந்து படுத்திருந்தாள் இன்பவேணி.
“இன்னு எழுந்திரு…” அழைத்தான் விதார்த்.
காதில் வாங்காமல் அவள் அசையாமல் இருந்தாள்.
“இன்னு…” சத்தமிட்ட விதார்த் இன்பவேணியை தூக்கி விட்டு தரதரவென அவன் வீட்டிற்கு இழுத்து வர, பின்னாலே இரு பெண்களும் ஓடி வந்தனர்.
உதய்கிருஷ்ணா உண்டு கொண்டிருக்க, “பாட்டி….” அழைத்தான் விதார்த்.
“டேய் என்ன பண்ற?” பாட்டி விதார்த்தை அதட்ட,
நீ என்ன செய்வன்னு தெரியாது பாட்டி…இந்த மாசத்துல முகூர்த்த நாள் பாக்குற. அண்ணாவுக்கும் இன்னுவுக்கும் மேரேஜ் என்றான் அதிரடியாக.
“விது…” உதய்கிருஷ்ணா சத்தமிட்டான்.
இதுவரைக்கும் நீ சொன்ன எல்லாமே நான் கேட்டிருக்கேன். இந்த விசயத்துல நான் சொல்றத நீ கேட்டாகணும். எனக்கு நீயும் பட்டுவும் ரொம்பவே முக்கியம்… ஆன்ட்டி..பாட்டியோட சேர்ந்து முடிவு பண்ணுங்க
விது, திருமணம் விருப்பமில்லாமல் செய்ய முடியாது…
ஆமா ஆன்ட்டி, அதான் சொல்றேன். உங்க பொண்ண எத்தன வருசம் இன்னும் இப்படி தனியாவே பாக்கப் போறீங்க? அதான் இன்னுவ அண்ணாவுக்கு மேரேஜ் பண்ணி குடுங்க…
“விது…” சீறினான் உதய்கிருஷ்ணா.
உனக்கு புடிச்சிருக்கோ இல்லையோ இன்னு சொன்னத தான் நானும் சொல்றேன். நீயும் அவளும் தனித்தனியாக உங்க வாழ்க்கைய வாழ்றதுக்கு…பாப்பாவுக்காக ஒண்ணா வாழ்ந்தா தான் என்ன?
உதய்கிருஷ்ணா கோபமாக பேச வர…
உனக்கு திருமணமே நடக்கல. அத நல்லா நினைவுல வச்சுக்கோ. நீ எதுக்காக கல்யாணம் ஆனவன்னு பொய்யா வாழ்ந்தன்னு எனக்கு தெரியாது. ஆனா அது தெரிஞ்சதுல இருந்து என்னால நிம்மதியா இருக்க முடியல…
பாட்டி, தாத்தா மட்டும் கௌரவம் வெங்காயம்னு ஏதாவது பேசுனாரு…அவருக்கு இந்த வீட்ல தாத்தா பதவியே பறி போயிரும்…
உதட்டை சுளித்த பாட்டி, நானே உன்னோட தாத்தனை விவாகரத்து பண்ற ஐடியால தான் இருக்கேன். அதனால எதுவானாலும் அந்தாளுட்ட நீயே பேசிக்கோ…எம் பேரனுக்கு ஜோசியரை பாத்து நாள் குறிச்சிட்டு வாரேன்..
“பாட்டி…” உதய்கிருஷ்ணா கத்த,
“போதும் உதய். உனக்கு பிடிக்காத பொண்ண நாங்க கல்யாணம் பண்ணி வைக்கலையே! அஞ்சு வருசமா தான் நீங்க ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கல..இனி பேசி சரிப்படுத்தப்பாரு…” சித்ரலேகா அறிவுரை வழங்க., எல்லாரும் அவனை நெருக்க…
“என்னமும் செஞ்சு தொலைங்க” என வெளியேறி விட்டான் உதய்கிருஷ்ணா.
கோசலைக்கு தான் மனம் அடித்துக் கொண்டது. பிடிக்காமல் திருமணம் எப்படி தன் மகளுக்கு செய்வது? என அவர் கண்கலங்க, அவள் கையை சாயாலி இறுக பிடித்துக் கொண்டாள்.
ஆன்ட்டி…நான் பிராபிஸ் பண்றேன். அண்ணாவால இன்னு ஆரம்பத்துல்ல கொஞ்சம் சிரமப்படுற மாதிரி தான் இருக்கும். அண்ணா அவள கை விட மாட்டான்…
கோசலை கண்கலங்க, “ஆனா உதய்கு பிடிக்கலையே விது….” மேலும் கலங்கினார்.
“வருத்தப்படாதம்மா…நாங்க எல்லாரும் இருக்கோம்…” பாட்டி சமாதானப்படுத்தி அவரையும் ராமநாதனையும் அழைத்து ஜோசியரை காண சென்றார்.
சற்றுநேரம் அங்கேயே இருந்து பின் இன்பவேணி ஆபிஸ் கிளம்பினாள்.
நிலவொளியில் அழகாக தெரிந்த அவ்வீட்டினுள் நுழைந்தான் உதய்கிருஷ்ணா.
“உதய், இங்க வந்து உக்காரு” பேரனை அழைத்தார்.
அவன் அவரருகே அமர்ந்து மௌனம் காத்தான்.
“எங்களால தான உங்க வாழ்க்கையே பாழா போச்சு. நாங்க சரி செய்யணும்னு நினைக்கிறோம்” பேரனுக்கு புரியவைக்க முயன்றார்.
கண்கொட்டாது அவனையே பார்த்துக் கொண்டிருந்த தந்தையை பார்த்தவன்,
இப்ப உங்க கௌரவம் குறஞ்சு போகல. மறந்துட்டேன்…அதான் உங்க மருமக பெரிய இடத்துல தனியே கம்பெனிய ரன் பண்றாளே அதனால தான ஒத்துக்கிட்டீங்க…
ராமநாதன் என்ன பேசுவார்? அமைதியாக இருந்தார்…
“அண்ணா, உனக்கு என்ன பிரச்சனை? அவளே வந்துட்டா. ஒரு பொண்ணு வெக்கத்த விட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றா. அவ யாரோ இல்ல அண்ணா…” விதார்த்தும் உதய்கிருஷ்ணா மனதை மாற்ற முயன்றான்.
நம்மள விட்டு போன அன்றே அவ நமக்கு யாரோ தான்…
சரி, அவ யாரா வேணும்னாலும் இருக்கட்டும். உன்னோட பொண்ணு அவள தான அம்மாவா நினைச்சிட்டு இருக்கா.. அதுக்கு என்ன சொல்ற? காட்டமாக கேட்டார் சித்ரலேகா.
“அதான் என்னமும் செய்யுங்கன்னு சொல்லீட்டேன்ல..” முகம் திருப்பினான்.
இன்பவேணிய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உன்னோட வாயால எல்லாருக்கும் தெளிவா சொல்லீடு…
கடுப்புடன் முகத்தை உர்ரென வைத்து, “நம்ம எதிர் வீட்ல இருக்கிற இன்பவேணிய நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” பல்லை கடித்து சொல்லி எழுந்தான்.
ரொம்ப நல்லதுய்யா..நாங்க நாள் பாத்தோம். நேரடியா திருமணமே வச்சுக்கலாம். ஜோசியர் என்ன சொன்னார் தெரியுமா? பாட்டி ஆர்வமுடன் பேரனை பார்த்தான்.
அவன் முறைக்க..
பத்து பொருத்தமும் ரெண்டு பேருக்கும் கச்சிதமா பொருந்தி இருக்காம். ரொம்ப வருசம் சந்தோசமா இருப்பீங்களாம்…ரெண்டு வாரத்துல ஒரு நாள் குறிச்சு குடுத்துருக்கார் என விவரம் கூறினார்.
விரக்தி புன்னகையுடன், “நடக்கட்டும்” என கையசைத்து அவனறைக்கு சென்று விட்டான்.
“சார், உதய் தம்பிட்ட பேசுங்க. அவன் ஏதோ தானோன்னு போறான். எனக்கு ஏதோ நெருடலா இருக்கு” சித்ரலேகா கூற,
அதெல்லாம் சரியாகிவான்கா. நீங்க வருத்தப்படாதீங்க என்றான் விதார்த்.
சித்ரா, இங்க உக்காரேன் என சித்ரலேகாவை அமர வைத்த பாட்டி, “உனக்கு எந்த மாதிரி பையனை பிடிக்கும்?” கேட்டார்.
எதுக்கு பாட்டி? அவள் பாட்டியை முறைத்து கேட்க,
நான் எதுக்கு கேக்கப் போறேன்? உனக்கு மாப்பிள்ள பாக்க தான்.
எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை பாட்டி. நான் இப்படியே உங்க எல்லாரோடவும் இந்த வீட்டு வேலைக்காரியாவே இருந்துப்பேன்.
“அக்கா…” கண்டிப்புடன் அழைத்தான் விதார்த்.
தனியா வாழ்றதெல்லாம் கொடுமைமா…என்றார் ராமநாதன்.
எனக்கு இந்த வீடு சொர்க்கம் மாதிரி இருக்கு.
நாங்க உன்ன அவ்வளவு பேசினோம். கோபம் இல்லையாம்மா? வருத்தமுடன் கேட்டார் ராமநாதன்.
“இதெல்லாம் சாதாரணம் தான் சார்” எழுந்து அவரறைக்கு சென்று விட்டாள் சித்ரலேகா. “புரியாத புதிராவே எல்லாரும் நடந்துக்கிறாங்க” என விதார்த் மனதினுள் எண்ணி சென்று விட்டான்.
அன்றைய பொழுது மங்கலகரமான வெற்றி விநாயகர் பாடலுடன் தொடங்க, அனைவருக்கும் விடுமுறை நாள் என்பதால் கோவிலுக்கு குடும்பமாக கிளம்பினார்கள். உதய்கிருஷ்ணாவிற்கு தெரியாமல் கோசலை குடும்பத்தை பாட்டி கோவிலுக்கு அழைத்திருந்தார்.
முதலில் கோவிலுக்குள் நுழைந்தது கோசலை குடும்பத்தினர். அவர்கள் காத்திருக்க, இவர்களும் வந்தனர்.
“ரொம்ப நேரம் ஆச்சாடா?” இன்பவேணி கன்னம் வருடி பாட்டி கேட்க, “இப்ப தான் வந்தோம் பாட்டி” என்று உதய்கிருஷ்ணாவை பார்த்தாள். அவன் முகம் கடுகடுக்க பாட்டியை முறைத்திருந்தான்.
“உதய்…” பாட்டி கண் காட்ட, அவன் கைபேசியுடன் நகர்ந்தான். ஜான்வி “அம்மா…” என இன்பவேணியிடம் தாவினாள்.
சித்ரலேகாவும் இன்பவேணியும் குழந்தையுடன் பேசிக் கொண்டிருக்க, விதார்த் சாயாலியிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
பாட்டி காதருகே வந்த உதய்கிருஷ்ணா, அவங்க வந்துட்டு இருக்காங்க…நம்மள சாமி கும்பிட சொன்னாங்க என்றான்.
“வாங்க…” பாட்டி அனைவரையும் அழைத்து சென்றார்.
வழிபாடு முடித்து பிராகரத்தை வலம் வந்து கொண்டிருந்தனர்.
“ஹாய் ராஜசேகர் சார்” உதய்கிருஷ்ணாவின் புன்னகையான அழைப்பில் அனைவரும் அவர்களுக்கு எதிரே வரும் குடும்பத்தை பார்த்தனர்.
சிறியவர்கள் யாருக்கும் அவரை தெரியவில்லை.
மகனோடு சேர்ந்து ராமநாதனும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“யாரு வேணி இவங்க? உனக்கு தெரியுமா?” சித்ரலேகா கிசுகிசுக்க,
தெரியாது அண்ணீ..
சொந்தக்காரவங்களோ? சாயாலி கேட்க, பெண்கள் விதார்த்தை நெருங்க அவனுக்கும் அவர்கள் யாரென்று தெரியவில்லை. பெரியவர்களுடன் உதய்கிருஷ்ணாவிற்கு மூத்தவனான பிரகாஷ் வந்திருந்தான்.
இவன் எங்க மகன் பிரகாஷ்..
“ம்ம்! எனக்கு நல்லா தெரியும்” உதய்கிருஷ்ணா கை குலுக்க, முகம் வாட அவனும் கை குலுக்கினான். அவன் விழிகள் முழுவதும் சித்ரலேகாவை அளந்து கொண்டிருந்தது.
“சித்ரா இங்க வா…” பாட்டி அழைக்க, விதார்த்திற்கு புரிந்து போனது. அவன் இன்பவேணியிடம் விசயத்தை கூற, அவள் முகம் பிரகாசம் கொண்டது.
கோசலை பிரகாஷ் தாயுடன் பேச, இரு குடும்பத்தினருக்கும் பிடித்து போனது. அடிக்கடி அவன் தாய் மட்டும் அவன் கையை அழுத்திக் கொண்டிருந்தார்.
உதய்கிருஷ்ணா அதனை கவனித்து, யோசனையுடன் பிரகாஷை பார்த்தான்.
பாட்டி கூறியதை கேட்டு சித்ரா அதிர்ந்து எல்லாரையும் பார்த்து பிரகாஷையும் அவன் குடும்பத்தையும் பார்த்தாள்.
“பொண்ணு அழகா இருக்கா. படிச்சிருக்கா. இது போதும் எங்களுக்கு” பிரகாஷின் தாய் சித்ராவிடம் பேச்சு கொடுக்க, அவர் கேட்பதற்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
விதார்த் பிரகாஷிடம் பேச்சு கொடுக்க, அவன் சரியாக பேசவேயில்ல. விதார்த்திற்கும் தவறாக பட்டது. இன்பவேணி சாயாலியை அழைத்து அவர்களையும் பாட்டி இன்முகமுடன் மகிழ்ச்சியாக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்.
எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு..
எங்களுக்கு பையன…பாட்டி ஆரம்பிக்கும் போது,
“பாட்டி இருங்க” என்ற உதய்கிருஷ்ணா, பொண்ணு பாக்க நீங்க வர்றீங்கன்னு அக்காட்ட நாங்க முன்னமே சொல்லல. அதனால வீட்ல போய் அக்காட்ட பேசிட்டு பதில் சொல்றோம்…
உதயை நெருங்கி, ஏன்டா இப்பவே உறுதி பண்ணிக்கலாம்..என்றார் பாட்டி.
அவசரப்படாதீங்க பாட்டி…
ஆமா பாட்டி, நாம வீட்டுக்கு போய்ட்டு என்னன்னு சொல்லலாம் என்றான் விதார்த்.
ராஜசேகர் உதய்கிருஷ்ணாவை பார்க்க,
உங்க எல்லாரையும் பாத்ததுல்ல ரொம்ப சந்தோசம் சார். இது கல்யாண விசயம். அவசரப்பட வேண்டாம்னு நினைக்கிறேன். அக்கா மனசுல என்ன இருக்குன்னு கேக்கணும்..தப்பா எடுத்துக்காதீங்க சார்..
“இதுல கேக்க என்ன தம்பி இருக்கு? ஏம்மா சித்ரா உனக்கு எம் பையன பிடிச்சிருக்குல?” பிரகாஷின் தாய் சித்ரலேகாவை அவசரப்படுத்தினார்.
பதில் கூறாமல் யார் பக்கமும் கவனம் செல்லாமல் உதய்கிருஷ்ணாவை தான் பார்த்தாள்.
“ஆன்ட்டி, நாங்க சீக்கிரமே ஆன்சர் பண்ணிடுறோம். அப்ப நாங்க போயிட்டு வாரோம்” என உதய்கிருஷ்ணா சித்ரலேகாவின் கை பற்றி முன் செல்ல, கோசலை அவன் பின் சென்றார்.
“தப்பா எடுத்துக்காதீங்க. எங்க உதய் சித்ராவ சொந்த அக்கா மாதிரி தான் பாக்குறான்..அதான்…” பாட்டி சிரித்து மழுப்பி, “நாங்க போயிட்டு வாரோம்” என மாப்பிள்ளையின் தாய் கை பற்ற,
“நல்ல பதிலா சொல்லுங்கம்மா” என்று அவர் முகம் கறுத்தாலும் காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தார்.
அனைவரும் விடை பெற்று செல்ல, வீட்டிற்கு சென்றனர்.
உதய்கிருஷ்ணா பின் சென்ற கோசலை, தயங்கினாலும் ஏப்பா உனக்கு அந்த பையன பிடிக்கலையா? கேட்டு விட்டார்.
“வீட்ல போய் பேசிக்கலாம் ஆன்ட்டி” நிறுத்திக் கொண்டான்.
வீட்டில் வைத்து பாட்டி உதய்கிருஷ்ணாவை திட்ட, பாட்டி பாட்டி…சித்ரலேகா தடுக்க தடுக்க அவரால் பொறுக்க முடியவில்லை.
நல்ல சம்பந்தம்…புலம்பிக் கொண்டிருந்தார். அங்கங்கு எல்லாரும் நின்று கொண்டிருந்தனர். நேரத்தை நேரத்தை பார்த்துக் கொண்டிருந்த உதய்கிருஷ்ணாவிற்கு அழைப்பு வந்தது.
சொல்லுடா பைரவா?
மச்சான், அவருக்கு ஒரு பொண்ணோட ஏற்கனவே பழக்கம் இருந்திருக்குடா. இப்ப ரீசன்ட்டா அந்த பொண்ணு ஆறு வயசு பையனோட அவங்க வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணுச்சாம். அந்த பொண்ணு ஏழ்மை குடும்பத்துல பிறந்த பொண்ணுன்னு பிரகாஷ் வீட்ல ஏத்துக்கல. ஆனா அவருக்கு அந்த குழந்தையை பாக்கவும் மனசு மாறிடுச்சி…எனக்கு தெரிஞ்சு பெரியவங்க மிரட்டி தான் பிரகாஷை கோவிலுக்கு வர வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..
“சரிடா, நான் பாத்துக்கிறேன்…” கைபேசியை வைத்தான் உதய்கிருஷ்ணா.
அண்ணா, என்னாச்சு?
அவருக்கு ஏற்கனவே குழந்தை இருக்காம்…என சொல்லி பாட்டியை பார்த்தான்.
இருக்காது உதய்…
பாட்டி, எதையும் தெளிவா தெரிஞ்சுட்டு பேசணும். அமைதியா இருங்க. அக்கா நீங்க உள்ள போங்க…
உதய், எனக்கு யாரையும் திருமணம் செய்றதுல்ல விருப்பமில்லை…
முடியாதுக்கா. எனக்காக எல்லாரும் பேசியத பொருத்துடீங்கல்ல. இதே மாதிரி வேற யாரும் எதுவும் உங்கள சொல்லிறக் கூடாது என இன்பவேணியை பார்த்தான்.
“நான் பேசுவேன்னு சொல்லாம சொல்லி காட்டுறான்” முகம் சிவக்க அவனை முறைத்தாள் இன்பவேணி.
“எதுக்குடா இப்ப வேணிய பாக்குற? அவ என்ன எதுவும் பேச மாட்டா” சித்ரலேகா சீற,
உச்சு கொட்டி, நான் பிரகாஷ் சாரை பாத்துட்டு வாரேன்.
நில்லு உதய், முதல்ல வேணிட்ட சாரி சொல்லு…சித்ரலேகா அதட்ட,
“நான் எதுக்கு சொல்லணும்?” புருவம் உயர்த்தினான்.
எதுக்கு தேவையில்லாம எல்லா விசயத்துலயும் அவள இழுக்குற?
அவ வர்றா? இழுக்குறேன்..
அவ இதுல என்ன பண்ணா? வேடிக்க தான பாத்தா? சித்ரலேகா கோபமாக கேட்க, “நல்லா கேளுங்கக்கா…” அவளை ஊக்கினான் விதார்த்.
“எக்ஸ்யூஸ்மி…” குரல் கேட்டு எல்லாரும் வந்திருந்த பிரகாஷை பார்த்தனர்.
உதய்கிருஷ்ணாவை முறைத்திருந்த சித்ரலேகா அமைதியாகி விட,
“வாங்க உக்காருங்க” கோசலை அமர சொல்ல, பாட்டியோ ஏமாற்றி விட்டார்களே! என கோபமாக இருந்தார்.
“எல்லாரும் என்ன மன்னிச்சிருங்க” என பைரவன் கூறிய அனைத்தையும் கூறியவன். “நான் அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்று சித்ரலேகாவை பார்த்து, சாரி என்றான்.
இட்ஸ் ஓ.கே சார். நோ பிராபிளம். நீங்க அந்த பொண்ணையும் உங்க மகனையும் நல்லா பாத்துக்கோங்க..என புன்னகை முகமுடன் கூறினாள். அவனுக்கோ பெருத்த நிம்மதி.
ரொம்ப தேங்க்ஸ்…என எழுந்தார்.
சார்…காபி சாப்பிட்டு போங்க…அழைத்தாள் சித்ரலேகா.
இருக்கட்டும்..
ஓ.கே சார். நெக்ஸ்ட் டைம் உங்க குடும்பத்தோட வந்து சாப்பிட்டு போங்க…என்றாள்..
லேசான புன்னகையுடன், ம்ம்! அவன் வெளியேற,
ஏன்டி, அவங்க குடும்பமே நம்மள ஏமாத்தி இருக்கானுக. காபி சாப்பிடுறியா, சாப்பாடு சாப்பிடுறியான்னு உபசரிக்கிற???? சினந்தார் பாட்டி.
சாயாலி இன்பவேணி காதில் ஏதோ சொல்ல, அவள் புன்னகைத்தாள்.
உனக்கென்னடி? நானே இப்படி ஏமாத்திட்டானுகளே! புலம்பிட்டு இருந்தா, இவளுக கூடி பேசி சிரிக்கிறாளுக…
சித்ராண்ணீ எப்படி அவர ஓட விடலாம்னு நினைச்சிட்டு இருந்துருப்பாங்க. ஆனா எந்த சிரமமும் கொடுக்காமே அவரே ஓடிட்டார்னு சொன்னேன்…அதான் அக்கா சிரிச்சாங்க..
சாயா…கோசலை அதட்ட,
அம்மா செம்மையா பசிக்குது வீட்டுக்கு போகலாமா? அப்புறம் அம்மா மட்டன் எடுத்துட்டு வாரேன்…பிரியாணி பண்ணுங்க…நினைச்சாலே டெம்ட் ஆகுது…ம்ம்ம்ம்ம்ம்! அவள் ராகம் இழுக்க…
“ஏடி, நான் எந்த கவலைல இருக்கேன்? உனக்கு மட்டன் பிரியாணி கேக்குதோ!” பாட்டி முந்தானையை இழுத்து இடுப்பில் சொருக,
“அம்மாடி…நான் கிளம்புறேன். இங்க இருந்தா சாப்பாடு கிடைக்காது வாங்கம்மா” சாயாலி கோசலையை இழுத்து செல்ல, குழந்தையை சித்ரலேகாவிடம் கொடுத்து…, “பாப்பாவுக்கு சாப்பிட குடுங்கண்ணீ. நேரமாகுது…” என்று விதார்த்தை பார்த்து நகர்ந்தாள் இன்பவேணி.
“நானும் வாரேன்” விதார்த்தும் அவர்கள் பின் சென்று விட்டான்.
“அவனை அவனை ரசித்து கிடந்த
விழிகள் வேறாரையும்
பார்க்காதே!
ஹே…அவனை அவனை பழகி
தொலைத்த இதயம்
வேறாரையும் ஏற்காதே!”
error: Content is protected !!