Skip to content
Post Views: 2,854

கருப்பன் அந்த நபரை அடித்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே பேருந்தில்
Advertisement
இருந்து கீழே இறங்கினால் மலர்விழி.
மயிலோ, மலர் வேடிக்கை பார்த்து கொண்டு வருவதை பார்த்தவள் “அங்க என்னடி பார்வை வா போலாம்” என்று அழைக்கவே,
Advertisement
Advertisement
“ஏய் என்னடி, அங்க ஒருத்தன் இன்னொருத்தனை போட்டு அந்த அடி அடிக்கிறான். சுத்தி இத்தனை பேர் இருந்தும் யாரும் போய் தடுக்காமல் நின்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க?” என்று கேட்டாள்.
அதற்கு மயிலோ “ஏய் மலரு அடிக்கிறது யார் தெரியுமா, நம்ம ஊரு ஹீரோ கருப்பன்.
Advertisement
அவரு ஒருத்தன அடிக்கிறாருன்னா தேவையில்லாமலோ, காரணம் இல்லாமலோ இருக்காது. அவன் ஏதாவது சல்லித்தனம் பண்ணி இருப்பியான். அதுக்காக தான் அவனை அடிச்சு திருத்த பாக்குறாரு,
அவர பத்தி தெரிஞ்ச யாரும் அவர தடுக்க போக மாட்டானுங்க, அவரு கையில சிக்குனா அவனுக்கு அவரோட தண்டனை கிடச்சே தீரும்” என்றால் மயில்.
அதற்கு மலரோ “என்னடி நீ அடிக்குறவனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசுற?” என்று கூற,
“சப்போர்ட் இல்லடி அவர பத்தி தெரிஞ்சதுனால பேசுறேன். நீ புதுசுல்ல போக போக தெரிஞ்சுக்கவ” என்றால் மயில்.
“என்ன இருந்தாலும் அது எப்படிடி இவன் அடிக்கலாம். அவன் தப்பு பண்ணவனாவே இருந்துட்டு போட்டும், அதுக்கு தான் போலீஸ் இருக்குல்ல முறையா போய் அவங்க கிட்ட சொன்னா அவங்க அதுக்கு தகுந்த தண்டனை குடுக்க போறாங்க, இவன் யார் அடிக்கிறதுக்கு?” என்று மலர்விழி மேலும் கருப்பனை குறை கூறும் வகையில் மயிலிடம் கேட்க,
“அடியே உனக்கே இங்க அத்தனை பிரச்சனை இருக்குது, நம்ம நம்ம பொழப்ப பார்ப்போம், அவர் அவர் வேலைய பாத்துக்குவாரு வா” என்று அழைத்துக் கொண்டு சென்றாள் மயில்.
“சரியான காட்டானா இருக்கான் அந்த காட்டானுக்கு நீ வக்காலத்து வாங்கிட்டு வரியா?” என்று கேட்க,
“ஏய் யாரை பார்த்து காட்டாங்குற, அவர் யார் தெரியுமா? இந்த சுத்து பட்டு கிராமத்திலேயே எத்தனையோ ஏக்கர் நிலம் இருக்குது.
ஆனா அது எல்லாத்துலயும் செயற்கை உரத்தால் ஆன விவசாயம் தான் நடக்குது. ஆனா இவரு மட்டும் தான் இயற்கை உரத்தால மட்டும்தான் நான் விவசாயம் பண்ணுவேன்னு தனக்கு தானே இயற்கையாக உரம் தயாரிச்சு தன்னுடைய நிலத்துல விவசாயம் பார்த்துட்டு இருக்குறாரு” என்று மயில் கருப்பனை பற்றி கூற,
“என்னத்த விவசாயம் பார்த்து என்ன புண்ணியம்” என்று மலர் மேலும் சடைந்து கொள்ள,
“அடியே நீ இந்த ஊருக்கு புதுசு கருப்பு அத்தான பத்தி தேவையில்லாம பேசி எங்கயாவது வாங்கி கட்டிக்காத பேசாம வா” என்று கூறவே,
“ஓ அந்த ஆளு உனக்கு அத்தானா! அது தான் சப்போர்ட் ஓவரா இருக்கோ” என்று மலர்விழி மயிலின் தோளில் இடித்து கேட்டாள்.
“அவரு எனக்கு அத்தானா இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி அவருடைய செயல் நேர்மையா இருக்கும். அவர் ஒரு விஷயத்தை இறங்கி செய்றாருன்னா அதுக்கு தகுந்த காரணம் உண்மையா இல்லைன்னா அவர் ஒரு விஷயத்துல இறங்கவே மாட்டாரு.
அவர்கிட்ட அடி வாங்குறானே அந்த ஆளு யாரு தெரியுமா? ஒன்னுக்கு ரெண்டு புள்ளைய பெத்துட்டு பொண்டாட்டி புள்ளைய சோத்துக்கு வழி இல்லாம போட்டுட்டு கூத்தியா கூட கூத்தடிச்சவன் அதுக்கு தான் சரியான தண்டனை கொடுத்துட்டு இருக்குது எங்க அத்தான்” என்று சிலிப்பி கொண்டு கூறினாள் மயில்.
“ஓ அப்படியா!” என்று கேட்டுக்கொண்டே அப்பொழுது தான் திரும்பி கருப்பனை மேலிருந்து கீழாக முழுவதுமாக பார்த்தால் மலர்.
முகம் முழுவதும் கடுமை நிறைந்திருக்க, சுருங்கிய புருவங்களோடு கண்களில் மிளிர்ந்த கோபத்தோடும், முறுக்கிய மீசையும் கன்னத்தில் அடர்ந்து விரிந்த தாடியும், திண்ணிய மார்பும், மெருக்கேறிய புஜங்களும் திடகாத்திரமான உடல் அமைப்பும் கொண்டு கைகள் முறுக்கேறி அவனின் சட்டை கலரை ஒரு கரம் பிடித்திருக்க, மற்றொரு கரமோ அவனின் முகத்திலும் வயிற்றிலும் கன்னத்திலும் என மாறி மாறி அடித்து அவன் செய்த செயலுக்கான தண்டனையை வழங்கிக் கொண்டிருந்தது.
மயில் முன்னே செல்ல அவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மலர்விழியோ அங்கு பேருந்து நிலையத்தில் அடித்துக் கொண்டிருக்கும் கருப்பனை திரும்பி திரும்பி பார்த்தவள் காரணம் இன்றி அவனை முறைத்து விட்டு, ‘சரியான காட்டான்’ என்று மனதிற்குள் நினைத்தவள் மயிலின் பின்னால் நடந்து சென்றாள்.
அந்த இடத்தில் இருந்து சென்ற பிறகு மயில் மலர்விழியிடம் “ஏ மலரு உனக்கு சொர்க்கம்ன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்டாள்.
அதற்கு மலர்விழியோ “எனக்கு எப்படி தெரியும்? அங்க போக இருந்த என்ன தான் இந்த ஊரு கூட்டிட்டு வந்துட்டியே!” என்று கேட்டாள்.
“ம்ம்..அதுவும் சரிதான். நீ இந்நேரம் சொர்கத்துக்கு போயிருப்ப நான்தான் உன்னை தடுத்து இங்க கூட்டிட்டு வந்துட்டேன், இல்ல! என்றவள்,
அவளின் தோளில் தட்டி “அடி போடி பொசகெட்டவளே சொர்க்கம் அப்பிடிங்குறது செத்ததுக்கு அப்புறம் இருக்கிறது மட்டும் இல்லடி, நம்ம வாழும் போது அனுபவிக்கிறது, வா காட்டுறேன்” என்று அவளின் வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த வயக்காட்டு பகுதியை சுட்டிக்காட்டி,
“இதுதாண்டி சொர்க்கம் வாழும்போதே கிடைக்கிற சொர்க்கம்” என்று கூறவே மலர்விழியோ மயில் காட்டிய இடத்தை அதிசயத்தோடு கருவிழிகளை விரித்து பார்த்தவள்,
“ஏய் மயிலு நீ சொன்ன மாதிரியே இது சொர்க்கம் தான்டி!!” என்று கூறினாள்.
“ம்ம் அப்பிடி சொல்லு இந்த சொர்க்கத்துக்கு முதலாளி யார் தெரியுமா?” என்று கேட்க,
“யாரு?” என்று மலர்விழி ஆர்வமாக கேட்டாள்.
“வேற யாரு நீ பஸ் ஸ்டாண்ட்ல பார்த்து ஒருத்தர பத்தி ரொம்ப பெருமையா புகழ்ந்தியே! அவரு தான். இது என் அத்தானோட தோட்டம் தான்” என்றால் மயில்.
“என்னடி அப்போதுல இருந்து அத்தான் அத்தாங்குற? எதை புடிச்சா அத்தான்?” என்று கிண்டலாக கேட்டால் மலர்விழி.
“ஏய் எருமை, அத்தான்னா, அத்துட்டு போறது இல்லடி என்னுடைய அய்த்த மவன் அவரு, அதனாலதான் நான் அத்தான்னு சொல்றேன்” என்று கூறினால் மயில்.
“ஓஹோ! இப்பதான் புரியுது அத்தை
மகனா இருக்கறதுனால தான் என்கிட்ட விட்டுக் கொடுக்காம பேசிட்டு வரியாக்கும்?” என்று கேட்க,
“அடி போடி கிறுக்கு சிறுக்கி அந்த மாதிரியான எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. அவர் இந்த ஊருலயே மதிப்பும் மரியாதையும் உள்ள மனுஷன் எனக்குமே அப்படித்தான்.
அதே சமயம் சும்மா வார்த்தைக்கு மட்டும் தான் அவர் அத்தான்னு சொல்றேன். ஆனா என் மனசுல வேற ஒருத்தன் நிறைஞ்சு இருக்கான்டி” என்று கூறினால் மயில்.
“அப்படியா! யாருடி அது சொல்லவே இல்ல!” என்று கேட்டால் மலர்.
“அது இப்ப ரொம்ப முக்கியம் வாடி, வீட்ட பக்கம் போவோம்” என்றவள் மயிலின் கையைப் பிடித்து அவளின் வீட்டை நோக்கி அழைத்துச் சென்றாள்.
போகும் வழியில் மலர் வயதை ஒத்த பெண்ணோ இடுப்பில் குடத்தை வைத்து கொண்டு மயிலை பார்த்து, “அடியே மயிலு யாரடி இது புதுசா இருக்கு?” என்று கேட்டாள்.
அதற்கு மயிலோ “ஆங்.. என் அய்த்தமவனுக்கு இந்த ஊர் காட்டு சிறுக்கிங்க எவளும் சரிப்பட்டு வர மாட்டாளுகன்னு வெளியூர்ல இருந்து பொண்ண இழுத்துட்டு வந்துருக்கேன்” என்றால் மயில்.
“ஓஹோ உன் அய்த்த மவனுக்கு இந்த வேலையெல்லாம் பாக்க ஆரம்பிச்சிட்டியா நீயி, அப்பிடின்னாலும் எங்களை எல்லாம் பாத்தா உன் அத்தானுக்கு ஏத்தவளா தெரியலையாக்கும்”” என்ற அந்த பெண் கேட்க,
அதற்கு வாயில் கை வைத்து சிரிப்பதை போல் செய்த மயிலோ, “யாரு நீயி என் அத்தானுக்கா, சரித்தான்! ஆசை இருக்கலாம் அதுக்காக பேராசை இருக்க கூடாதுடி, பேசாம போவியா வந்துட்டா பெருசா கேள்வி கேட்டுக்கிட்டு, இவ போயி கருப்பு அத்தானுக்கு ஜோடியாம் ” என்று மயில் கூறவும் அந்த பெண்ணோ மோவாயை தனது தோளில் இடித்துக் கொண்டு சென்று விட்டாள்.
மயில் மனத்திற்குள்ளோ ‘நானே என் ஆத்தா கிட்ட வெளக்கமாத்து கட்டையில அடி வாங்க உடம்ப தேத்திக்கிட்டு இருக்கேன், இவ ஒருத்தி என்று நினைத்து கொண்டிருக்க,
மலர்விழி மயிலை பார்த்து “மயிலு நீ என்னடி அவங்க கிட்ட இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்க?”
“எப்படி சொன்னேன்”
“நான் உன் ஃபிரெண்டுன்னு சொல்ல வேண்டியது தானே, எதுக்கு உன் அத்தானுக்கு பார்த்த பொண்ணுன்னு அது இதுன்னு சொல்லிட்டு இருக்க?” என்று கேட்க,
“சும்மா லந்துக்காக பேசுற பேச்சுடி, இதெல்லாம் பெருசா எடுத்துக்காத வா வா” என்று மயிலை அழைத்துக் கொண்டு சென்றாள் மலர்.
ஒருவழியாக மலரும் மயிலும் மயிலின் வீட்டிற்கு வந்தனர்.
மயில் வீட்டிற்குள் நுழைய அவளைப் பார்த்த அவளின் அம்மா அமுதாவோ “அடியே மயிலு, வந்துட்டியா வாடி கல்யாணம் நல்ல படியா முடிஞ்சதா? அப்பிடி பேகை வச்சுட்டு வாடி பக்கத்து தெருவுல போய் தண்ணி தூக்கிட்டு வருவோம். கருப்பன் கவுன்சிலர அடிச்சதால அந்த எழவெடுத்தவன் தண்ணி தொறந்து விட மாட்டேங்குறான்” என்று கூறவும்,
“என்னம்மா சொல்ற, அத்தான் கவுன்சிலர அடிச்சு புடிச்சா?”என்று மயில் கேட்க,
“ஆமாண்டி” என்றவர் காலை நடந்த நிகழ்வுகளை சுருக்கமாக கூறினார்.
“சரி மா நீ போயி தூக்கிட்டு வா, நான் இப்பதானே ஊர்ல இருந்து அலஞ்சு திரிஞ்சு வந்திருக்கேன். அதுக்குள்ள தண்ணிய தூக்கு வெண்ணைய தூக்குங்குற” என்று தனது கையில் உள்ள பேகை வீட்டின் ஒரு மூலையில் வைத்தவாரு கூறினால் மயில்.
“அடியே காலைல இருந்து பொழக்கத்துக்கே தண்ணி சுமந்து ஓஞ்சு போயிட்டேன்டி. ஒரு ரெண்டு நடை தூக்க வாடி” என்று கூறி கொண்டு வாசல் நோக்கி சென்றவர்,
அப்பொழுதுதான் மலர் உள்ளே வருவதை கவனித்து புருவ முடிச்சுடன் அவளை பார்க்க,
தன் அம்மாவின் பார்வையை உணர்ந்தவள் “அம்மா இது என் ஃபிரண்டுமா கல்யாணத்துக்கு போனேன்ல அது இவ கல்யாணத்துக்குதான்” என்று திக்கி திணறி கூறினால் மயில்.
“சரி, கல்யாணம் ஆன பிள்ளைய எதுக்குடி நீ இங்க கூட்டிட்டு வந்த?” என்று மயிலின் அம்மா அமுதா மலரை சரியாக கவனிக்காமல் கேட்க,
அங்கே வீட்டின் மூலையில் கிடந்த விளக்கமாத்தை எடுத்து தனக்கு பின்னால் மறைத்துக் கொண்டவள்,
“அம்மா நான் ஒன்னு சொல்லுவேன் நீ என்னை அடிக்க கூடாது”
“இப்ப எதுக்கு வெளக்கமாத்த மறைக்குற? பம்மி வேற பேசுற? என்னடி பண்ணி வச்ச, என்னன்னு சொல்லி தொலை? என்றவர் அப்பொழுது மலரை நன்றாக கவனித்தவர் அந்த புள்ளைய பார்த்தா கல்யாணம் ஆன மாதிரி தெரியலையே!” என்று மலரை பார்த்து விட்டு மயிலிடம் கேட்டார் அமுதா.
“இருத்தா அதைத்தான் சொல்ல வரேன் சொல்ல விட மாட்றியே!” என்றவள் அமைதியாக நிற்க,
“அடியே மயிலு ஏதாவது விவகாரமான வேலை எதுவும் பார்த்து வச்சுட்டியா? உன் பேச்சும் சரியில்ல உன் நடவடிக்கையும் சரியில்லையேடி?” என்ற கேட்டார் அமுதா.
“எம்மா நான் சொல்றேன், நீ கொஞ்சம் பொறுமையா கேளு” என்றவள் நேற்று நள்ளிரவில் நடந்த நிகழ்வையும் மணமகனை பற்றியும் அதனால் தான் அவளை இங்கு அழைத்து வந்ததையும் அந்த பொறுமையாக எடுத்துரைத்தாள்.
அதே நேரம் சென்னையில் ஒருவன் மலர்விழியின் வீட்டில் நின்று காட்டு கத்தல் கத்திக் கொண்டிருந்தான்.
அமுதா மலரை தன் வீட்டில் தங்க வைக்க சம்மதிப்பாரா?
மலர்விழி இருக்கும் இடத்தை அவளின் தாய் தந்தையர் அறிவார்களா?
அடுத்தடுத்து வரும் மலர்விழி கருப்பனின் மோதல் காதல் பற்றி பார்ப்போம்.
கருப்பன் வேட்டை தொடரும்….
💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝
கமெண்ட்ஸ் ப்ளீஸ் 😊
error: Content is protected !!
மிக அருமையான யதார்த்தமா உள்ளன மலர், மயில் உரையாடல்….
When mayil said aththaan , I think malar getting little bit jealous 😊😊..
Malar your getting angry about karuppan activities
Malar ne karuppan seyalai pasrththu kova padum nee,
Ithae kovaththai aen un marriage vishayathyhil un parents kitta kaattavillai..
Kaatti irukka vaendiyathu thaanae malar…
Kiraamaththu thozhiyidam mayil paesiya vitham super 👌👌👌👌..
Mayil mind voice super 👌👌…
Waiting for mayil Amma descision..
Thank you so much
Malar karuppan pair ah super ah irukum..malarku kandipa karuppan help thevai padum.. 😍😍😍… Avanga ooru really super sisy ma…
Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻