Skip to content
Post Views: 2,621

கருப்பன் ஆட்டம் 9
Advertisement
தோழிகள் இருவரும் கருப்பனின் வீட்டு வாசலில் வந்து அந்த வீட்டின் கதவை திறந்தவர்கள் வீட்டின் உள்ளே கண்ட காட்சியில் “ச்ச்சீ” என்று கூறிகொண்டே தங்களது கைகள் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டனர்.
Advertisement
வீட்டினுள் நேற்று இரவு கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்த இருவரும் தூக்க அயற்சியில் அந்த கட்டிலேயே படுத்து உறங்கி போயினர்.
Advertisement
அந்த கயிற்று கட்டிலில், திடகாத்திரமான உடல் அமைப்பை கொண்ட இரு நண்பர்களும் படுக்க, இடம் பட்றா குறையாக இருக்க,
Advertisement
இருவரும் கை கால்களை ஒருவர் மேல் ஒருவர் போட்டு கட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தனர்.
மூடிய கண்களோடு மலர் மயிலிடம் “என்னடி இது உன் ஐத்தான் இப்படி படுத்திருக்கான்!” என்று கேட்க,
“ஏய் நீ வேற வாய மூடுடி, அத்தான் இருக்காதுன்னு நினைச்சு தான் நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்.இப்ப மட்டும் நம்ம இங்க வந்தது அத்தானுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான் நான் செத்தேன். அவரு எந்திரிச்சு நம்மளை பார்க்குறதுக்குள்ள வெரசா ஓடிடலாம் வாடி!” என்று மயில் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே,
தன் வீட்டு வாசலில் அரவம் கேட்டு கண் விழித்த கருப்பன் தன்னை கட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் நண்பனின் கையை காலையும் எடுத்து விட்டு எழுந்தவன் வீட்டு வாசலுக்கு வந்திருந்தான்.
அவன் எழுந்ததை கண்ட மயில் “ஏய் மலரு என் பின்னாலயே வாடி அத்தான் எந்திருச்சு வருது ஓடிடலாம்” என்று கூறிவிட்டு ஒரே எட்டாக வரப்பில் விழுந்து ஓடிவிட்டாள்.
அவளின் பின்னால் ஓட சென்ற மலரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. ஏனென்றால் அவளின் கையை தான் இரும்பை போன்ற வலிய கரம் ஒன்று இறுகப்பற்றி இருந்ததே!.
திரும்பி தனது கையையும் அதனை இறுகப்பற்றி இருக்கும் கருப்பனின் கையையும் மாறி மாறி பார்த்த மலர் நிமிர்ந்து கருப்பனின் முகத்தை பார்த்தவள்,
“ஏய் கையை விடு வலிக்குது” என்றவள் ‘காட்டான் எப்பிடி புடுச்சுருக்கான் பாரு பிடிச்சே கைய ஒடுச்சுருவான் போல’ என்று முணுமுணுக்க,
அவள் முணுமுணுத்தது கருப்பனின் காதில் நன்றாக விழுந்து விட, அவளிடம் நேற்றிலிருந்து கேட்க நினைத்த கேள்வியை கேட்டான்.
“ஏய் யார் நீ? எந்த ஊரு? இங்க யாரு வீட்டுக்கு வந்துருக்க? இங்க எதுக்கு வந்த?” என்று அழுத்தமான குரலில் கேட்டான்.
அதற்கு அவளோ, “நான் எங்க இருந்து எதுக்கு வந்தா உனக்கு என்ன? என் கைய விடு முதல்ல” என்று அவள் அவனிடம் இருந்து கையை விளக்க போராடி கொண்டிருக்க,
“இப்ப நீ வந்து நிக்குறது என்னோட வயக்காட்டுக்குள்ள இருக்குற என்னோட வீட்டுல. அப்போ நான் தே₉ன் கேட்பேன்” என்றவனின் பிடி சற்றும் தளராமல் இறுக்கி கொண்டு யாரேனும் தன்னை இந்த கோலத்தில் பார்த்தால் தனக்கும் அவளுக்கும் தேவை இல்லாத அவபெயர் என்று நினைத்து அவளை வீட்டினுள் இழுத்து சென்றான்.
வீட்டினுள் வந்தவன் அவளை சுவற்றில் சாய்த்து “யாரை பாத்து காட்டாங்குற? எத வச்சு என்ன காட்டாங்குற? நான் காட்டன்னு நீ பாத்தியாடி?” என்று அவன் கேள்வி கேட்க,
“இதுக்கு பேரு என்னடா! கை வலிக்குதுடா கைய விடுடா காட்டான்” என்று அப்பொழுதும் வலி பொறுக்க முடியாமல் அவள் கூற, ஆனால் அவனின் பிடி சற்றும் தளராமல் மேலும் இறுகியது.
தான் பேசியும் அவன் கையை விடாமல் மேலும் இறுக்கி பிடிப்பதை உணர்ந்த மலர்விழிக்கு கோபம் மேலும் அதிகரித்துக் கொண்டே போக,
“எருமை மாடு மாதிரி உடம்பு வளத்து வச்சிருக்கியே! என் பிஞ்சு கைய போய் இப்படி பிடிக்கிற? ரொம்ப வலிக்குதுடா காட்டான்” என்று வார்த்தைக்கு வார்த்தை டா போட்டும் காட்டான் என்று கூறுவது கருப்பனின் ஆத்திரத்தை கிளப்பும் விதமாக இருக்க,
“ஏய் நீ யாருடி? எந்த ஊருக்காரி உன்ன முன்ன பின்ன நான் இந்த ஊர்ல பார்த்ததே இல்லையே!” என்று கருப்பன் கேட்க,
“ஆமா, அது இப்போ ரொம்ப முக்கியம் கைய விடுடா காட்டான்” என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் மேலும் திமிராக பேசுவது கருப்பனின் கோபத்தை திரி தூண்டும் விதமாக இருக்கவே,
கோபத்தில் கண்களை இறுக முடி திறந்தவன் “என்ன வெறி ஏத்தாத பதில் சொல்லு” என்றான்.
“நீ கேட்டால் நான் பதில் சொல்லனுமா? அதெல்லாம் சொல்ல முடியாது” என்று மலரும் முறுக்கிக் கொண்டு நிற்க,
“ஏய் என்றவன் தனது மற்றொரு கை கொண்டு அவளின் கழுத்தை பிடித்தான்.
அந்த நேரம் மலரை விட்டு சென்ற மயில் வெகு நேரம் ஆகியும் அவள் வராமல் இருக்கவும் மீண்டும் அந்த வீட்டின் அருகே வந்தவள்,
வீட்டு வாசலில் மயில் இல்லாமல் போகவே பொறுமையாக தலையை நீட்டி வீட்டினுள் பார்க்க, அங்கு கண்ட காட்சியில் பயத்தில் விழி விரித்தவள்,
‘ஆத்தி! கருப்பு அத்தானா இப்படி பண்றாரு? இவரு இவ்வளவு ஆத்தர படுற அளவுக்கு இவ என்ன பண்ணி தொலைச்சான்னு தெரியலையே! என்று உள்ளுக்குள் வெடவெடக்க வீட்டிற்குள் பொறுமையாக வந்தவள்
“அத்.. அத்.. அத்தான், அவள விட்டுருங்க அத்தான்” என்றாள்.
வீட்டிற்குள் மயில் வருவதை புருவ முடிச்சுடன் பார்த்த கருப்பனின் பார்வை இப்பொழுது மலரிடம் இருக்க,
“யார் இவ..!” என்று உறுமும் குரலில் கேள்வியை மயிலிடம் கேட்டான்.
“அத்தான் இவ என் ஃபிரண்டு தான். நேத்துதான் நம்ம ஊருக்கு வந்தா”
“உனக்கும் இவளுக்கும் இங்க என்ன வேலை?”
“அது.. அது..அத்தான் இவ மெட்ராஸ்காரி, அவளுக்கு இந்த மாதிரி கிராமத்து பக்கமெல்லாம் வந்து பழக்கம் இல்ல. அதனால இந்த தோப்பெல்லாம் சு..சுத்தி பாக்கணும்னு ஆசைப்பட்டா! அ..அதனாலதான் இ.. இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று பயத்தில் மயிலிடமிருந்து திக்கித் திணறி பதில் வந்தது.
“உன் ஃபிரண்டுக்கு வாய் ரொம்ப நீளுது, மரியாதையா பேச சொல்லு, இதுக்கு அப்பறமும் இதேபோல வாயி நீண்டுச்சு இழுத்து வச்சு அறுத்து புடுவேன்” என்று விழிகளில் சற்று பயம் புலப்படாத மலரின் விழியை அழுத்தமாக பார்த்து கூறியவன் மலரின் கழுத்தில் இருந்து கையை எடுத்துக்கொள்ள,
“நான் அப்படித்தான் பேசுவேன். நீ என்ன பண்ணிடுவ!” என்று சிறிது நேரம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் அவள் மேலும் பேசுவது கருப்பனின் கோபத்தை மேலும் தூண்டும் விதமாக இருக்க,
“ஏய்! என் முன்னாடி ஆளானப்பட்ட ஆம்பளைங்களே பேச பயப்படுவானுங்க, நீ ஒரு பொட்டைச் சிறுக்கி ஏன் முன்னாடியே, என்ன மரியாதை இல்லாம பேசுற, காட்டாங்குற, வாடா போடாங்குற உனக்கு இருக்குடி ஒரு நாள்” என்றான் கருப்பன்.
“ஒரு நாள் இருக்குன்னா.. உன்னால என்ன பண்ணிட முடியும்? அப்பறம் என்ன சொன்ன.. ஆங்.. பொட்ட சிறுக்கி நீ என் முன்னாடி பேசுற? ஏன் பொம்பளையா இருந்தா பேச கூடாதா? உன்ன மாதிரி ஆணாதிக்கம் புடுச்சவன பேசலன்னா தான் தப்பு, காட்டுத்தனமா இப்படி பொட்ட புள்ளனு கூட பாக்க முடியாமல் கழுத்துல கைவச்சு நெறிக்குற
நீ எல்லாம் ஒரு ஆம்பள..ச்சை..!” என்று மலர் வாய் துனுக்குற்று பேச,
“அடியே! வாய மூடுடி” என்ற மயில் சத்தம் முழுதாக முடியும் முன்பே மலரின் பார்வையை நேற்கொண்டு பார்த்த கருப்பன்
“ஆம்பளைய மதிப்பு மரியாதை கொடுத்து பேசாம, இத்தனை திமிரா பேசுற உன் திமிரையும், கொழுப்பையும் அடக்கி நான் ஆம்பள தான்னு உனக்கு ஒரு நாள் நிரூபிச்சு காட்டு வேண்டி” என்று கூறினான் கருப்பன்.
“அதான, நான் கூட மயிலு உன்ன பத்தி சொன்னத வச்சு உன்ன கொஞ்சம் உசத்தி தான் எடை போட்டுட்டேன். ஆனா நீயும் எல்லா ஆம்பளைங்களையும் மாதிரி குரூற புத்தியோட இருக்குற தரம் கெட்டவன் தான்னு நிருபிச்சிட்டல்ல,
ஒரு பொட்ட புள்ள தன் பக்கம் நியாயத்தை எடுத்து பேசிட கூடாதே, உடனே நீங்க ஆம்பளைங்கன்னு நிரூபிக்க இந்த மாதிரியான கேவலமான பேச்சும் இந்த மாதிரியான செயலும் தான பண்ணுவீங்க” என்று அப்பொழுதும் வாய் அடங்காமல் மலர் பேசியது கருப்பனை இரண்டு மடங்கு வெறியேற்ற,
“ஏய் நான் ஒன்னும் ஊர் காட்டுல பொம்பளங்க பின்னாடி பொறுக்கிட்டு திரியிற பயலுக மாதிரி சல்லித்தனமான வேலை செய்றவன் கிடையாது. என்ன வாடா போடா கட்டான்னு சொன்ன இதே வாயால என்ன மரியாதையா மாமா அத்தான்னு கூப்பிட வச்சு காட்டுறேன்டி” என்றான்.
“ஆசைதான் இவன போய் நான் மாமா அத்தான்னு வேற கூப்பிடுவனாம். சரி தான் போடா” என்று மலரும் கோபமாக கேட்க,
“மயிலு!!” என்று அடக்க பட்ட கோபதோடு கருப்பன் அழைக்க,
“அத்..அத்தான், இவ வாய்
கொ.. கொஞ்சம் துட்..துடுக்கா பே..பேசிட்டா, நீ..நீங்க எதுவும் தப்பா எட்..எடுத்துக்காதீங்க அத்தான். இனிமே இவள நான் இந்த பக்கம் கூட வரவிட மாட்டேன் அத்தான்” என்ற மயிலுக்கு அங்கு நடந்த போட்டா போட்டி பேச்சுக்களை பார்த்து வார்த்தை வராமல் வாய் தந்தி அடித்தது.
“நீ என்னடி என்ன இங்க வர விட மாட்டேன்னு சொல்றது? நான் தினமும் வருவேன். இங்க வந்து தான் என் காலை பொழுதே விடியும்”என்றாள்.
“வாடி நீ நாளைக்கு வந்து தான் பாரேன். அப்ப தெரியும் இந்த கருப்பன் யாருன்னு” என்றான்.
“என்னத்த பெருசா பண்ணி புடுவ?” என்று திமிரான பார்வையோடு அவள் கேட்க,
“நீ மட்டும் இன்னொரு முறை இந்த வீட்டு பக்கம் வந்த, அதுக்கப்புறம் இந்த வீட்டை விட்டு நீ போக முடியாத அளவுக்கு இந்த வீட்ல சாணியை மொழுகி எனக்கு தொண்டூழியம் பண்ண வச்சிருவேன் ஞாபகம் வச்சுக்கோ”
“ஆமா ஆமா இவனுக்கு தொண்டூழியம் பண்றதுக்கு தான் எங்க அப்பனும் ஆத்தாளும் என்னை பெத்து போட்டு இருக்காங்க பாரு!” என்று பேச்சுக்கு பேச்சு பேசிக்கொண்டே இருக்க,
“அடியே மலரு, வாய மூடிட்டு வாடி” என்று மலரின் கையை பிடித்து இழுத்து சென்றாள் மயில்.
போகும் அவளிடம் “ஏய் நில்லடி” என்று கருப்பன் மலரை அழைக்க,
“இங்க பாரு இந்த மாதிரி வாடி போடின்னு கூப்பிடுற வேலை வச்சுகிட்ட நாக்க ஒட்ட நறுக்கி புடுவேன்” என்றால் மலர்.
நீ மட்டும் என்னைய அத்தன சொல்லுவ அப்பம்போது மட்டும் உனக்கு இனிச்சுது, நான் உன்னைய வாடி போடின்னு சொன்னா உனக்கு கடுக்குதா!” என்று கருப்பனும் பேச்சை வளர்க்க,
‘அய்யய்யோ இந்த மலரு வாயை மூடிட்டு இருக்கவே மாட்டா போலயே, என்னைக்கும் இல்லா திருநாளா இந்த அத்தான் வேற, ஒரு முதல் முதல்ல ஒரு பொட்டச்சிகிட்ட பேசுறது மட்டும் இல்லாம,
ஏட்டிக்கு போட்டியா வேற பேசிக்கிட்டே இருக்கே! இது எங்க போய் முடியப் போகுதோ தெரியலையே!” என்று விட்டத்தை பார்த்து குழம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு பயத்தில் வயிறும் கலக்க ஆரம்பித்தது.
இங்கு ஒரு வாய்க்கால் தகராறு நடந்து கொண்டிருக்க, ஆனால் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் விதமாக கட்டிலில் நன்றாக குப்புற அடித்து உறங்கிக் கொண்டிருந்தான் தர்மன்.
இவர்களை பார்த்துவிட்டு அவன் புறம் பார்வையை செலுத்திய மயிலுக்கு புசுபுசுவென கோபம் கிளம்பியது தர்மனின் மீது.
அய்யனார் காலை எழுந்தவுடன் தன் அன்னையிடம் வேலைக்கு செல்ல வேண்டிய உணவினை வாங்கிக்கொண்டு ஊரின் எல்லையில் வந்து நின்றிருந்தான்.
அப்பொழுது அங்கே காத்திருந்த மாதேஷ் ஊர்காரர்கள் யாரேனும் வந்தால் மயிலின் வீட்டு முகவரியை கேட்டு விசாரித்து அங்கு செல்ல வேண்டும் என்று காத்திருந்தவனின் கண்ணில் பட்டான் அய்யனார்.
அவனிடம் சென்று அந்த துண்டு சீட்டை காட்டி விவரம் கேட்க, அதற்கு அவனையும் அவன் கையில் உள்ள துண்டு சீடையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் அய்யனார்.
அய்யனார் மலர் தன்னுடைய வீட்டில் தான் இருக்கிறாள் என்பதை கூறிவிடுவானா?
மாதேஷ் மலரை தன்னுடன் அழைத்து செல்வானா?
கருப்பனுக்கும் மலருக்கும் இடையில் கிளம்பிய கடும் மோதல் காதலாக மலருமா?
என்பதை இனி வரும் கதைகளில் காண்போம்.
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝
இன்னைக்கு எபிசொட் கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புறேன் ப்ளீஸ் செல்லங்களா மறக்காம கமெண்ட் பண்ணிடுங்கப்பா. 🙏🏻😊💖
error: Content is protected !!
Sisy ma malarkita solli vaikanga romba over ah pesara.. Idhulam nalladhuku Ella… Enga karuppan pathi thappa pesana adi vizhum.. Ivalo vai pesara malar madhesh kita pesa vendiyadhu thana… Malar unna kapatha poradhu enga karuppan than.. Kandipa ne mama athan solluva waiting 😍😍🥰🥰
கண்டிப்பா 😊