சில மணி நேரப் பயனத்தின் பின் அன்பு இல்லத்தை அடைந்தவள் மகிழ்ச்சியுடன் உள்நுழைய அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது.” ஆம் அன்பு இல்லத்தின் முன்பு இரண்டு ஜீப்கள் நிற்க அஜானுபவனான ஆட்கள் சிலர் ஆங்காங்கு திரிய பிள்ளைகள் ஒருபுறம் நடுங்கிக் கொண்டிருந்தனர்.
“மகிஷா உள்ளே நுழையும் போது வட்டியும் அவளை முறைத்தபடி திரும்பியவன் கதவில் இடித்துக் கொள்ள கோபத்தில் கதவிற்கு ஒரு எத்து விட்டவன் “ ஜீப்ப எடுங்கடா” என சத்தமிட்டபடி பாய்ந்து ஜீப்பில் ஏற ஜீப்பும் புயல் வேகத்தில் சென்றது.
ஊள்ளே வந்தவள் கதவடியில் ஏதோ மினுமினுப்பாய் தென்பட அதை கையில் எடுக்க அதுவோ “ தங்கக் கைச் செயின் அது யாரோடது கதவில் மோதிச் சென்றவனின் கையில் இருந்து விழுந்திருக்குமென்று புரிந்தது. அதை கையில் எடுத்தபடி உள்நுழைய தேவியம்மா முகங்கசங்க இருக்க அங்கு பணிபுரியம் கீதாவும், மாலாவும் அங்கு தான் இருந்தனர்.மகிஷாவைக் கண்ட தேவியம்மாவிற்கோ அழுகை தான் வந்தது. வயதிற்குக் கூட மரியாதை தராது அல்லா வட்டி பேசிச் சென்றான்.
Advertisement
“மாலாக்கா பிள்ளையல உள்ள கூட்டிப் போங்க “ அவரும் வெளியே பயத்தில் நின்ற பிள்ளைகளை உள்ளே அழைத்துச் சென்றார்.
தேவியம்மாவிடம் வந்தவள் அவர் கையை ஆதரவாகப் பற்றியபடி “ என்னாச்சுமா” என்றாள். அழுத்தத்தில் இருந்த அவரும் விடயத்தைச் சொல்லத் தொடங்கினார்.” ரெண்டு மாதத்திற்கு முதல் வழைமையா கிடைக்கிற டொனேஷன் கிடைக்கல,இங்கயும் சாப்பாடு மருந்துவச் செலவு எல்லாம் நெருக்கிச்சு என்ன பன்றனு தெரியல தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம கேட்டுப் பாத்தன். எல்லாரும் கைவிரிச்சிட்டாங்க சிலர் அரசாங்கத்திட கொடுக்க சொன்னாங்க, அரசாங்க காப்பகமா மாறினா உதவி கிடைக்கும்னு, இந்த இல்லம் என் புருசனோட உயிர்மூச்சுமா இந்த இல்லத எப்படி நான் விடுவன். டொனேஷன் கிடைச்சா பார்த்துக்கலாம்னு வட்டிக்கு காசு வாங்கினன்.ரெண்டு மாசமாகிட்டு வட்டிக் காசக் கூட கொடுக்க முடியல என்றார் கண்கலங்க. எப்படிக் ஆளுமையானவர் தேவியம்மா அவரை அந்நிகழ்வு பெரிதும் பாதித்திருந்தது.
அவருக்கோ திடீரொன வியர்த்துவடிய இடது மார்பை பற்றியபடி தேவியம்மா மூச்சுக்குத் தவிர்க்க “மாலாக்கா, கீதாக்கா யாராச்சும் சீக்கிரம் வாங்க” என சத்தமிட்டாள் மகிஷா அவர்களும் விரைந்து வந்தவர்கள் தேவியம்மாவின் நிலை உணர்ந்து ஆட்டோ ஒன்றை பிடித்து அருகில் எள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
Advertisement
தேவியம்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்ட்டுக் கொண்டிருந்தது. “ ஐசியூவில் இருந்து வெளியே வந்த மருத்துவர்.”மைல்ட் அடாக் தான்.கவனமாகப் பார்த்துக்கோங்க என்றவர் அடுத்த நோயாளியைக் காணச் சென்றார்.
Advertisement
“ மாலாக்கா அம்மாவப் பார்த்துக்கோங்க என்றவள். “ அன்பு அல்லத்திற்கு வந்து தேவியம்மாவின் மேசையில் தேடி வட்டியின் தொலைபேசி என்னை எடுத்தவள் “ ஹலோ சார் அன்பு இல்லத்துல இருந்து பேசுறன்” மறுபுறம் “என்ன” என காட்மாகப் பேசினான் வட்டி “ அகவுணட்; நம்ம சொன்னா ரெண்டு மாத வட்டிப் பணத்த போட்டுடுவன்”; என்றாள்.
“ வட்டி தார இருக்கட்டும் முதல் எப்போ கிடைக்கும்” எனக் கேட்க அடுத்த மாதம் தந்துர்றம் சார்” என்றாள்.” உறுதி எனக்கிட்டான் இருக்கு” என்றான்.” சார் அப்புறம் என அவள் இழுக்க “ வட்டியோ வட்டியும் வேனாம் முதலும் வேனா குட்டி என்ன சொல்ற” என்றான் கோணல் சிரிப்புடன். அவனின் கைச் செயின் பற்றி சொல்ல நினைத்தவள் அவனின் அசிங்கமான பேச்சால் அதைப் பேசாது. “ சார் மரியாதையாப் பேசுங்க இல்லனா போலீசுக்கு போக வேண்டி இருக்கும் வட்டிக்கு பணம் வேண்டினம் என்றால் போல இவளோ இழக்காரமா போயிட்டமா . இது அநாதப் பசங்க இருக்கிற இடம் அடிக்கடி வந்து பிரச்சினைப் படுத்தாதீங்க” எனக் காட்டமாய் அவளும் பேச “ இயல்பியேலே துணிச்சலான பெண்ணவள். அவளாக பிரச்சினைக்கு செல்ல மாட்டாள் அதே வேளை தன்னையோ தன்னை சார்ந்தவங்களுக்கோ பிரச்சினை என்றால் பார்த்துட்டும் இருக்க மாட்டாள்.
உங்க போஃனப் பாருங்க சார் பணம் வந்தட்டா? ‘ வட்டியும் அலைபேசியை திருப்பிப் பார்த்தவன் ‘ அதுக்கடையில அனுப்பிட்டா’ “ம்ம்” என்றான். போலீஸ் என்றதும் வட்டி கொஞ்சம் பம்மி விட்டான். எத்தனை நாளைக்குத் தான் குட்டக் குட்டக் குனிவது
Advertisement
மகிஷாவும் அன்று அன்பு இல்லத்தில் தான் தங்கினாள். அடுத்த நாள் காலையில் தேவியம்மாவை டீஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்தனர்.
தேவியம்மாவை அவரது அறையில் விட்டவள் “ அம்மா நான் சென்னைக்குக் கிளம்புறன் வட்டி இனி கால் பன்ன மாட்டான். இப்போதைக்கு ரெண்டு மாத வட்டியையும் கொடுத்தாச்சி வார மாதம் எல்லாம் செட்டில் பண்ணிடலாம், அவன்கிட்ட பேசிட்டன் இன்னும் பிரச்சினை பண்ணா போலிசுக்கும் போலாம் எதனையும் யோசிச்சு மனசக் குழப்பாதீங்க எங்களுக்கு உங்களவிட்டா யாரு இருக்கா? என்றவள் அன்று மதியமே சென்னைக்குக் கிளம்பினாள்.
“ குழந்தை இல்லாத தேவி நீலகண்டன் தம்பதியினர் குழந்தையொன்றை தத்தெடுத்தனர். தேவியின் கணவன் நீலகண்டன் அரசப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். சந்தோசாக சென்ற அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்ட்ட விபத்தில் நீலகண்டனும் அவர்களது குழந்தையும் இறக்க தேவிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை கணவன் குழந்தையை பறிகொடுத்த அவரின் நிலையை சொல்லவும் வேண்டுமா? எப்போதும் எதையோ சிந்தித்தவாறே அவர் இருக்க நாளுக்கு நாள் அவரின் நிலையும் மோசானது. யாருக்காக வாழ வேண்டும் எனும் எண்ணம் தான் .
இறப்புக் வந்தவர்கள் கூட எட்டாம் நாள் காரியத்தோடு சென்றிருக்க தனிமைஅவரை வாட்டியது.
நீலகண்டனும் தங்கள் பகுதியில் தாய் தந்தையை இழந்த பிள்ளைகள், கடைகளில் வேலை செய்யும் பிள்ளைகளைக் கானும் போது எல்லாம் மனம் இளகி விடும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டு; என எண்ணியவர் அதற்கான வேலையில் இறங்கினார். அரச அங்கிகாரத்துடன் தனது வீட்டையே அன்பு இல்லமாக பதிவு செய்திருந்தார். அது விடயாக சென்னை சென்று வரும் போது விபத்து ஏற்பட்டது.
வாயிலில் மணிச் சத்தம் கேட்க தன் சிந்தனை கலைந்த தேவி வெளியே செல்ல போஸ்ட்மேன் நின்றிருந்தார் அவரும் “நீலகண்டன்” எனக் கேட்க “ என் கஸ்பண்ட் தான் என்ற தேவிக்கோ அழுகை தான் வந்தது. போஸ்ட்மேனும் கடிதமொன்றைக் கொடுத்தார். அதைப் படித்த பின் தான் கணவனின் ஆசை புரிந்தது. அதை நிறைவேற்றும் பொருட்டு பாடுபட்டவர் ஒரு வருடத்திலே பத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகளை தனது கவனிப்பில் எடுத்தார்.உதவிக்கு மாலா, கீதா என இரு பெண்களையும் வைத்துக் கொண்டார். மாதம் மாதம் கிடைக்கும் நீல கண்டனின் சம்பளம் கொண்டு அன்பு இல்லத்தை நடத்தினார். அடுத்தடுத்த வருடம் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்க டொனேஷன் பெற்று நடத்தத் தொடங்கினார். தேவியம்மாவும் மிகவும் பாசத்துடன் பிள்ளைகளை வளர்த்து வந்தார். இவற்றை எண்ணியபடி சென்னை பஸ்ஸில் பயணப்பட்டாள் மகி.
சூரியன் மறையும் அவ் மாலை வேளையில் கடல் நீர் தகதகவென மின்னியது. கோவா கடற்கரையில் நிழற்குடையின் கீழ் படுத்திருந்தான் நம் நாயகன் ஜோகித். “ மச்சான்” என அவனருகில் வந்தமர்ந்தான் ஜோகித்தின் உற்ற நண்பன் அர்ஜின்.” கண்னை மறைத்தபடி இருந்த கைகளை விலக்கியவன் அர்ஜினை என்னவென பார்க்க “ பணம் வந்துடுச்சி” என்றான்.
அவனைத் தாண்டிச் சென்ற நீச்சலுடை அழகியோ ஜோகித்தை நோக்கி பறக்கும் முத்தத்தை கொடுத்துச் சென்றாள்.” மச்சான் ரூட்டுக்கிளயர்” என்றான் அர்ஜின். அவன் தோளில் கைகோட்டபடி “பேசாம வாடா, நாளைக்கு போறத்துக்க டிக்கெட்ஜ் ரெடியா?” “ ஆமான்டா நாளைக்கு இந்நேரம் சென்னைல இருப்போம்” என்றான் அர்ஜின்.
சென்னையில் குவாட்டஸிற்கு வந்த மகிஷாவோ இரண்டு இலட்சம் பணத்தை எப்படிப் புறட்டுவதென்று தெரியவில்லை “ கரனுக்க அழைப்பெடுத்தவள் கரன் வந்துட்டியா? மறுபுறம் கரனோ “ஆமா மகி ஓகேடா ஈவினிங் சிக்ஸ் தெர்டி போல ஆபிஸ் பக்கமிருக்கிற காஃபி ஷாப்பிற்கு வாடா “ என்றாள். அவனும் “ சரிடி “என அழைப்பை துண்டித்தாள்.
பயனக் களைப்புத் தீரக் குளித்த மகிஷா குவாட்டஸைப் பூட்டிக் கொண்டு வெளியேறினாள். வாகனங்களின் இரைச்சல் ஒருபக்கம் கூட்டைத் தேடிச் செல்லும் பறவைகள் போல் சென்னை வாசிகளும் வேலை விட்டு தங்களது வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
காஃபி ஷாப்பினுள் மகிஷா நுழைய கரனோ “ மகி” என கையாட்டி அழைக்க பக்கத்து மேசையில் இருந்த பெண்னோ கரனை முறைத்துப் பார்தாள். அவனோ அவளைக் கண்டு கொள்ளாது. மீண்டும் மகியை அழைத்தான். அவளும் அவன் இருந்த மேசையை நோக்கிச் சென்றாள். கரனும் இரண்டு காஃபியை ஆடர் கொடுத்தான் “ அப்புறம் இல்லத்துக்குப் போன எல்லாரும் எப்படியிருக்காங்க” எனக் கேட்க அவளோ பெருமூச்சுடன் நடந்தத்தைச் சொன்னாள்.
மறுநாள் அலுவலகத்திற்கு வந்தவளுக்கோ வேலையில் நேரம் இழுத்துக் கொள்ள அன்றைய நாள் வேகமாக நகர்ந்தது. தனது டீமில் இருந்த ஹர்ஷாவுடன் தனக்குத் தேவையான பொருட்கள் வாங்கச் சென்றாள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வங்கிக் கொண்டு குவாட்டஸிற்கு வந்தாள்.
நாட்களும் அதன் போக்கில் செல்ல தேவியம்மாவின் உடலிலும் முன்னேற்றம். மகிஷாவும் அவருடன் ஒவ்வொரு நாளும் பேசி தைரியமூட்டினாள்.
அன்று அலுவலகத்திற்கு வந்தவள் வேலையில் மூழ்கியிருக்கு; போது “ டேய் பிரபா நியூஸ் பாரத்தியா இவளோ பெரிய ராபரி நடந்திருக்கு” என செய்தியைக் காட்டிப் பேச “மகிஷாவும் என்னாச்சு” “ நியூஸ் பார்க்கலையா? யூவீ பேங்ல கொள்ளையடிச்சிருக்கானுங்க ஆனா சின்ன க்ளு கூட கிடைக்கல செம பிளான்” என்றான் தேவ். ஹர்ஷா அத் திருடனை புகழ்ந்து வேறு தள்ளினாள். எந்த சிசிடிவிலயும் சிக்காது எப்படி தப்பிருப்பானுங்க எனும் பேச்சுத் தான் எல்லார் வாயிலும்.
அன்று மதிய உணவின் போது கரனை சந்தித்த மகியின் முகத்தைப் பார்த்தே அவள் அக எண்ணத்தை அறிந்த கரன் “பார்த்துக்கலாம் மகி நானும் நம்ம கம்பனில கூட பேசியிருக்கன்” என்றான். தனது கையில் இருந்த கடிகாரத்தை வருட திடீரென கண்கள் மின்ன கரனைப் பார்த்தவள் “ கரன் வட்டிட கைச் செயின் இருக்கு வித்துடுவம்” என்றாள். கரனோ வட்டிட செயினா ? ஆமாம் என அன்று நடந்ததைச் சொன்னாள். “ அப்போ கட்டாய் வித்துடுவம்” என்றான். அதன்படி அலுவலகம் முடிந்ததும் இருவரும் செயினை எடுத்துக் கொண்டு நகைக் கடையொன்றில் வித்தனர். அதில் கிடைத்த பணமோ வட்டியின் கடனை அடைக்க போதுமானதாக இருந்தது.
உடனே வட்டியின் அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்பியவள். அவனுக்கு அழைப்பெடுத்து “ சார் பணம் உங்க அக்கவுண்டுக்கு அனுப்பிடன் உறுதியை தேவியம்மாட குடுங்க என்றாள். அவனும் “ சரி சரி” என்றவன் அழைப்பைத் துண்டித்தான். “கரன் நாளைக்கு இல்லத்துக்குப் போகனும் என்றவள் தனது குவாட்டஸிற்குள் சென்றாள்.