Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்Uncategorized

கருப்பனின் காரிகையவள் 1 💝

கருப்பன்  ஆட்டம் 1

மேற்கில் தோன்றிய அடர் இருளை போக்க கிழக்கே தோன்றிய கதிரவன் அக்ரோஷ முகமாக கிளம்பிய பொழுது, அந்த கிராமத்தின் “கீச், கீச்” கிளிகளின் சத்தமும், “குக்கூ,,, குக்கூ” குயில்களின் சத்தமும் ரீங்காரமிட்டு கொண்டிருக்க, கோழிகளின் கொக்கரிக்கும் சத்தமும் தெரு நாய்களின் குறைக்கும் சத்தமும் அந்த அதிகாலை பொழுதில் தேனிசையாய் அந்த இடம் எங்கும் பரவ கேட்க,

  • பனித்துளியால் நிறைந்து இருந்த நெல் மணிகள் சூர்ய ஒளியில் பொன்னாக மின்ன,

மண் வாசனைக்குள்ளே ஒரு ரகசிய அமைதி கலந்திருக்க.



Advertisement

“இன்னைக்கு ஏதோ நடக்கப் போகுதுன்னு” சூரிய உதயம் சொல்லாமலே சொன்னது.

Advertisement

Advertisement

மணி அதிகாலை ஐந்து என்று காட்டவே அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் எழுந்து தங்களின் வீட்டிற்கு வந்து பால் ஊத்தும் பால்காரப் பெண்மணி இடம் பாலை வாங்கி சென்று மண் அடுப்பில் வெயிலில் உலர்த்தி வைத்திருந்த சருகை பற்ற வைத்து அதன் மேல் பால் சட்டியை வைத்து பாலை காய வைத்து விட்டு வாசலை கூட்டி கோலமிட்டு கொண்டிருந்தனர்.

Advertisement

என்னதான் கதிரவன் தனது ஒளி கீற்றுகளை முதலில் அனுப்பி அந்த இடம் முழுவதும் ஒளியினை படர் செய்திருந்தாலும் அந்த சூரியக் கீற்றுகளே தோற்றுவிடும் அளவிற்கு அந்த ஊரின் மையத்தில் இருந்த ஒரு வீட்டின் முன்பு இருந்த வைக்கோல் புல்கள் அனைத்தும் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அங்கு வைக்கோல் எரிந்து கொண்டிருக்க, அதற்கு பின்னால் இருந்து அந்த வைக்கோலை பற்ற வைத்த அந்த மகராசன் வைக்கோல் போரின் தீச்சுவாலையில் பற்ற வைத்த சிகரெட்டை வாயில் வைத்து அதன் புகையை உள்ளிழுத்து வெளியே விட்டுகொண்டு வெளியில் வந்தான்.

கண்கள் முழுவதும் அத்தனை சிவப்பேறி போய் இருந்தது. அவனின் அந்த சிவந்த கண்களே கூறியது அவனின் கோபத்தின் அளவினை!

அந்த வைக்கோல் புல் இருக்கும் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்த ஒரு கிழவியோ திடீரென்று தனது வீட்டிற்குள் வைக்கோல் புல் பற்றி எறிவதை பார்த்து திடுகிட்டு திரும்ப,

அங்கே நின்றிருந்த அந்த ஆணை பார்த்தவர் “ஏலே எடுபட்ட பயலே விலங்கா தருத்திரம் புடுச்சவனே, போன வாரம் தானடா காசு குடுத்து இரண்டு வண்டிக்கு வக்கை வாங்கி கொண்டு வந்து போட்டு வச்சிருக்கேன், இப்படி பத்த வச்சு புட்டியேடா கொள்ளையில போறவனே, உன் கையில கட்ட முளைக்க, உன் கை கால் விளங்காமல் போக, அந்த வக்கை எரியுற மாதிரியே உன் கட்டையும் எரிஞ்சு போக, ஏன்டா இப்படி பண்ண?” என்று காலையில் அவனுக்கு நல்ல நல்ல வார்த்தைகளை பரிசாக அளித்தார் அந்த வீட்டில் உள்ள ஒரு வயதான பெண்மணி.

ஆனால் அவர் கூறு எதுவும் தனது கால் முடிக்கு சமம் என்று நினைத்த அந்த ஆணவனோ பட்டன் அவிழ்த்து விடபட்டிருந்த சட்டையின் காலரை பிடித்து முன்னே இழுத்து தனது தாடையை தேய்த்தவன் நிமிர்ந்து அந்த கிழவியை ஒரு பார்வை பார்க்க,

அவன் பார்வையில் தெரிந்த வீச்சோ ரௌத்திரமோ ஏதோ ஒன்று அந்த கிழவியின் வாய் அதற்கு மேல் திறக்காமல் ஒட்டி கொண்டது.

போகும் அவனை பார்த்து மனதிற்குள் மேலும் பற்பல நல்ல வாழ்த்து மடல் கொடுத்து அனுப்பினார் அந்த பெண்மணி.

ஊர் மத்தியில் வைக்கோல் புல் எறிந்து தீச்சுவாலையாக விண்ணை முட்டிக் கொண்டிருக்க அந்த தீச்சுவாலையின் ஒளி அந்த கிராமம் முழுவதும் படரவே,

ஆங்காங்கே இருந்த வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அனைத்து பெண்களும் அந்த வீட்டை சுற்றி நின்று வாயில் கை வைத்துபார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் மனதில் ஏனோ அது எரிவதை நினைத்து சிறிதும் கவலையோ, வருத்தமோ. தீயணைப்பு துறைக்கு அழைத்து சொல்ல வேண்டும் என்கிற எண்ணமோ இல்லை.

இத்தனை நாட்கள் அவர்களின் மனமும் இப்படி தானே எரிந்து கொண்டிருந்தது. அதனால உண்டான நிம்மதியாக கூட இருக்கலாம்.

“அந்த கவுன்சிலர் விளங்காதவனுக்கு இதெல்லாம் தேவைதான். எத்தனை பேர் வாயிலையும் வயித்துலையும் விழுந்திருக்க மாட்டியான்.

இத பண்ணி தரேன் அதை பண்ணி தரேன்னு சொல்லி ஓட்டையும் வாங்கிட்டு, இதுக்கு குடு அதுக்கு குடுன்னு கொஞ்சம் கொஞ்சமா காசு பூராம் உருவி கிட்டு உருப்படியா ஒன்னும் பண்ணாம, இப்படி சக்காளத்தி வீட்ல வந்து கும்மாலம் அடிச்சிட்டு இருக்கான்ல அவனுக்கு இதெல்லாம் தேவைதான்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அவர்களின் இந்த பேச்சுக்கு உரிமை பட்டவனை, என்னால் முடிந்த ஒரு சின்ன விஷயம் என்று, அவனை குத்துயிரும் கொலை உயிருமாய் அடி வெளுத்து விட்டவன் அவனின் உடலில் பற்பல காயங்களை உண்டாக்கி விட்டு,

இத்தனை நல்ல விஷயங்களை செய்து தருகிறேன் என்று பொய் வாக்குறுதி அளித்து கையெழுத்துப் போட்ட அவனின் வலது கரத்தின் கட்டை விரலை துண்டாக வெட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியில் வந்தவனுக்கு சற்றும் மட்டு படாத தனது ஆத்திரத்தை அடக்கும் பொருட்டு வீட்டின் வெளியில் இருந்த வைக்கோலை சகஜோதியாய் கொளுத்தி என இத்தனையும் செய்து முடித்துவிட்டு எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் ரீதியில் அந்த ஊரில் உள்ள டீ கடைக்கு சென்றவன்,

“ஏலேமுத்து ஒரு வர டீ” என்று கேட்டான் நம் கதையின் நாயகன்

கதிர் எனும் கருப்பன்.

“ஏலே கருப்பா பாலு வந்துருச்சு எதுக்கு வர டீ கேக்குறவன், செத்த இரு நான் பால் டீயே போட்டு தரேன்” என்று முத்து கூறவே,

“உன்னோட பால் டீயும் வர டீ கணக்கா தான் இருக்கும். அதுக்கு நான் வர டீயே குடிச்சிட்டு போறேன் நீ வர டீயவே போட்டு குடு” என்றான் கருப்பன்.

“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, இங்க நான் போடுற டீ வரடீ கணக்கா இருக்குதுன்னா நீ வீட்டுக்கு போகுறது,

அங்க உன் ஆத்தா ஒத்த பொட்டு தண்ணி கலக்காத கொழ கொழன்னு இருக்குற பாலுல டீ போட்டு வச்சிருப்பா போக வேண்டியது தானே!” என்று அந்த டீக்கடை முத்து கேட்க,

“நான் சொன்ன வேலையை மட்டும் செய் எனக்கு புத்துமதி ம** ஒன்னு நீ தூக்கிக்கிட்டு வர வேண்டாம் சரியா?” என்று அவன் கேட்ட தோணியில்,

“சரிப்பா கருப்பா ” என்று கூறிய முத்து அமைதியாக அவன் கேட்ட வர டீயை போட ஆரம்பித்தான்.

“ வர டீயை போட்டு வந்து அவனின் கையில் கொடுத்த முத்துவோ “ஏலே கருப்பா என்ன கவுன்சிலர் சின்ன வீட்டு வக்கை போர கொழுத்திட்டியாம்!”

என்று கேட்டான்.

அதற்கு முத்துவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் திரும்பி அவனின் கடையை பார்க்க,.

அவனின் பார்வையில் தெரிந்த அழுத்தம் முத்துவின் வயிற்றுக்குள் பயப்பந்து உருளச் செய்ய,

“ஐயா சாமி நான் உன்கிட்ட எதுவும் கேட்கல, நீ வக்கை போர கொளுத்துனது கணக்கா என் கடைய கொளுத்தி புடாதடா ஐயா!” என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு கடைக்குள் சென்று விட்டார் முத்து.

அந்த கிராமத்தையே தனி நபராக நின்று தனது பார்வை வீச்சினால் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் நம் நாயகன் கருப்பனின் கதாநாயகியை பற்றி பார்ப்போமா!!

பொழுது விடிந்தால் தனக்கு திருமணம். அதற்கு வேண்டிய அனைத்து ஆடை அணிகலங்களும் தன் முன்பு இருந்த கட்டிலில் பரப்பி வைக்கப்பட்டிருக்க அதில் நாட்டம் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து தன் மீது வைத்து பார்த்துக் கொள்ள நினைக்கும் புது பெண்ணாக அவள் இல்லாமல்,

விடிந்தால் தனக்கு கணவனாக வர போகும் ஆணவனின் அருகில் தான் நாணத்தோடு இருக்கும் கோலத்தை நினைத்து கனவு காணாமல் அந்த இருண்ட அறையில் வெறுமனே ஒரு சேரில் அமர்ந்து சுவற்றை வெரித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தால் நம் கதையின் நாயகி

மலர் எனும் மலர்விழி.

அந்த வீட்டின் மற்ற அறைகளில் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும் தாய் தந்தையரும் என அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க, அந்த அறையில் உள்ள சோஃபாவில் உறங்கிக் கொண்டிருந்தால் மலர்விழியின் கல்லூரி தோழி

தங்கமயில்.

வெகு நேரம் அந்த அறையின் இருண்டு சுவற்றை வெறித்துப் பார்த்த அந்த மங்கையின் விழிகளில் கண்ணீர் பெருக ஒரு முடிவு எடுத்தவளாக எழுந்து கட்டிலில் இருந்த அந்த ஆடை அணிகலன்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்தவள்,

தான் அமர்ந்திருந்த சேரை எடுத்து கட்டிலின் மீது போட்டு நாளை விடிந்தால் திருமணத்திற்கு தான் மணகோலத்தில் கட்ட இருந்த திருமண சேலையை ஃபேனில் சுருக்காக மாட்டியவள் பின் தன் கழுத்துக்கும் சுருக்கை மாட்டிக் கொண்டு தான் நின்றிருந்த சேரை காலால் தள்ளி விட்டு விட்டாள்.

அந்த சேர் கட்டிலில் இருந்து தரையில் சற்று சத்தத்தோடு விழுகவே, அந்த சத்தத்தில் சோஃபாவில் உறங்கிக் கொண்டிருந்த மயில் பட்டென கண் விழித்துப் பார்த்தவள்,

தனக்கு முன்னே ஃபேனில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த மலர்விழியை பார்த்து அதிர்ந்தவளாக பட்டென எழுந்து ஓடிச் சென்று அவளின் காலை பிடித்து தாங்கியவள்

“ஏய் மலரு என்னடி காரியம் பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டாள்

அதற்கு மலர்விழியோ “ஏய் மயிலு, நீ எதுக்கு என்னை பிடிச்ச, விடுடி என் கால” என்று அவளிடமிருந்து தனது காலை உருவப் போராட,

ஆனால் அவளின் காலை விடாது பிடித்துக் கொண்ட மயிலோ “இப்போ நீ மட்டும் இறங்கல அப்புறம் நான் கத்தி எல்லாரையும் கூப்டுடுவேண்டி” என்று மிரட்டினாள்.

“என்ன விடுடி” என்று மேலும் மயிலிடம் மல்லு கட்டினால் மலர்.

“ஏய் மலரு என்னனாலும் பேசிக்கலாம்டி முதல்ல நீ கீழ இறங்கு” என்று மயில் கூறவும்,

“ இல்ல மயிலு எனக்கு இதுதான் சரியான முடிவுன்னு தோணுது, எனக்கு வேற வழி தெரியல என்ன விட்டுட்டு நீ போ மயிலு” என்று மலர்விழி அப்பொழுதும் கூற,

“மலரு முதல நீ கீழ இறங்கு மத்தத அப்பறம் பேசிக்கலாம்” என்று திட்டவட்டமாக உறுதியாக மயில் கூறவும்,

“சரி” என்று விட்டு பொறுமையாக சேலையை தனது கழுத்தில் இருந்து அவிழ்த்துவிட்டு கட்டிலில் இறங்கினால் மலர்விழி.

அவள் கீழே இறங்கியதும் அவள் கன்னத்தில் பளார்!!! என்று ஒன்று விட்டால் மயில்.

அவள் அடித்த கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அழுத மலர்விழி மயிலை கட்டிக் கொண்டு அழுதாள்.

“என்னடி இது கிறுக்குத்தனமான வேலை லூசாடி நீ?” தன் தன்னை அணைத்து கொண்டு அழுது கொண்டிருக்கும் தோழியிடம் கேட்டால் மயில்.

அதற்கு மலர்விழியோ “இந்த கல்யாணத்தை நிறுத்துறதுக்கு எனக்கு வேற வழி தெரியல மயிலு” என்று கூறி மேலும் அவளை அணைத்துக் கொண்டு அழுதாள்.

எவன் வந்தாலும் எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் அவர்களை தனது கால் முடிக்கு சமமாக நினைக்கும் நம் கதையின் நாயகன்.

சிறிய விஷயத்தை கூட பெரிதளவில் நினைத்து குலுங்கி கொண்டிருக்கும் பயந்த சுபாவம் கொண்ட பெண் நம் கதையின் நாயகி.

இவர்கள் இருவருக்கும் தான் அந்த ஆண்டவன் முடிச்சு போட்டு வைத்திருக்கிறான். அந்த முடிச்சினை இவர்கள் தேடி கண்டுபிடிப்பார்களா?

இவர்களுக்கு இடையில் நடக்கும் மோதலும் காதலும் குறித்து இனிவரும் கதைகளில் காண்போம்…

கருப்பன் வேட்டை தொடரும்….

💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 🙏🏻😊

12 thoughts on “கருப்பனின் காரிகையவள் 1 💝

  • Deepa V

    Fentastic episode…

    Hero character and heroine indradusinh very very nice..

    Waiting for next episode 💖💖💖💖💖💖💖💖👏👏👏👏

    Reply
    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🥰💖

      Reply
  • Vini Krishnan

    Sisy ma new story super.. Hero character super 🔥🔥🔥🔥🔥.. Summa fire ah iruku
    . Malar apaavi polaiyea… Summa sollakudathu indha pair super ah irukum😍😍😍 🥰

    Reply
    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻

      Reply
  • Latha Sundaram

    கதையின் ஆரம்பம் மிகவும் அருமை… கருப்பனின் அறிமுகம் நன்றாக இருக்கிறது. மலர் பயந்த சுபாவம் போல எல்லாம் நன்றாக இருக்கிறது ஆனால் எழுத்து நடையை சற்று மாற்றி எழுது இன்னும் சிறப்பாக இருக்கும் அத்தோட எழுத்து பிழை கொஞ்சம் சரி பாரு கதையின் களம் அருமை

    Reply
    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻

      Reply
  • Shahi abi

    சூப்பர் மா. ஆரம்பமே அசத்தலா இருக்கே. 🤍🤍🤍

    Reply
    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻

      Reply
    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🙏🏻💖🥰

      Reply
  • Bharthi Nithiyanandham

    Semmma super ma enku village based story romb pidikum ma hero amazing

    Reply
    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🙏🏻💖🥰

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!