Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருப்பு நிலா Episode-20

அத்தியாயம் 20

அகரனது வண்டியில் ஏறி அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மெல்லினா. மெல்லி எதையாவது இறுக பிடிச்சுக்கோ. போயிட்டு சீக்கிரம் வரணும். வேகமாக போகப் போறேன் என்று அகரன் வண்டியை எடுக்க, வேலையில் இருந்த பொண்ணு ஓடி வந்து மூச்சிறைத்துக் கொண்டு, சார் எந்த பொண்ணையும் என் வண்டியில் ஏற்ற மாட்டேன்னு சொன்னீங்க? எனக் கேட்டாள்.



Advertisement

யாருன்னு தெரியாதவங்களை சொன்னேன். போய் உன்னோட வேலைய பாரு.

என்னை உங்களுக்கு தெரியாதா? அந்த பொண்ணு கேட்க, உன்னை முழுதாக தெரியாது.

Advertisement

Advertisement

அப்ப பாஸோட தங்கச்சிய முழுசா தெரியுமா? என இரு பொருள் பட அவள் பேச, அகரன் முறைத்து விட்டு, வெட்டியா உன்னோட பேசி நேரத்தை போக்க முடியாது. எங்களுக்கு வேலை இருக்கு என்று “மெல்லி பிடிச்சிக்கோ” என்றான்.

அந்த பொண்ணை முறைத்துக் கொண்டே அகரன் தோளில் கையை போட்டுக் கொண்டாள். ஆனால் அவன் வேகத்தில் அவள் கையை எடுத்து அவனது இடுப்பை சுற்றி இரு கைகளை போட்டுக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

Advertisement

அகரன் பைக்கை நிறுத்த, அதுக்குள்ள வந்துட்டோமா? எனக் கேட்டாள்.

பெருமூச்செடுத்து விட்டு, இல்லை என பைக்கை விரட்டினான். மெல்லினாவின் மென்மையான அணைப்பில் அகரனுக்கு மூச்சே நின்றது போல் ஆனது.

இருவரும் வீட்டிற்கு வந்தனர். அகரன் அவனறைக்கு சென்று தேடிக் கொண்டிருக்க, மெல்லினாவும் உள்ளே வந்தாள். அவனறையை பார்த்தாள்.

அகரா, நீ கல்யாணம் பண்ணிக்கப் போறீயா? மெல்லினா கேட்க, திகைத்து அவளை பார்த்தான்.

 

தமிழ் மாமா சொன்னாரு. நீ பிரணிதாவை கல்யாணம் பண்ணிக்க போறீயா?

அவளையா? இல்லையே? என் அகரன் தேடிக் கொண்டே சொன்னான்.

மாமா, அப்படி தான் சொன்னார்.

என்னோட மாமா என்னிடம் பேசினார். முடியாதுன்னு சொல்லீட்டேன் என்றான்.

அப்படியா? நான் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கவா? மெல்லினா கேட்க, ம்ம்..என்று சொல்லி விட்டு அவளை போக விடாமல் தடுத்து நின்றான்.

போக சொல்லீட்டு இப்படி மறைச்சி நிக்குற?

இல்ல, “நீ அப்பா அறையை யூஸ் பண்ணிக்கோ” என்றான்.

“நான் இங்க தான் போவேன்” என்று அவனை தள்ளி விட்டு உள்ளே சென்றாள் மெல்லினா.

மெல்லி போகாத என்று அவனும் உள்ளே வந்தான். இருவரும் இடித்துக் கொண்டனர். விழாமல் ஒருவரை ஒருவர் பிடித்து பார்த்துக் கொண்டே நின்றனர்.

அகரா..மெல்லினா அழைத்தாள். அகரன் வேகமாக நகர்ந்து நின்றான். அகரா..இடிக்கப் போகுது என்று அவனை அவள் பக்கம் இழுத்தாள். அவள் இழுத்ததில் அகரன் அவளை நெருங்கி வந்தான். அவன் மார்பில் கை வைத்தாள் மெல்லினா. அவன் இதயத்துடிப்பு அதிகமாவதை உணர்ந்து அவனை பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் தன்னை கவனிக்கிறாள் என்று பார்த்த அகரன் வேகமாக அவளை விட்டு விலகி, “ஒரு நிமிசம் வெளிய போ” என்றான் தணிவான குரலில். அவள் பேசாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையை பிடித்து வெளியே அழைத்து வந்தான்.

அகரா என்று மெல்லினா அழைத்தாள். அவன் அவளை பார்க்க, அவனருகே வந்து அவன் மார்பில் கையை வைத்தாள். அவளது நெருக்கத்தில் இதயத்துடிப்பு அதிகமானது. அவள் அகரனை பார்த்து, அகரா அன்று விபுதனை பார்க்கும் போது இதே போல் துடித்தது என்று அவன் நெஞ்சில் வைத்து பார்த்தாள். அவளுக்கு ஏதும் தோன்றவில்லை.

அகரா, எனக்கு இப்ப மட்டும் துடிக்கலை என்று அவனிடம் கேட்க, அவள் கையை தட்டி விட்டு பதில் சொல்லாமல் உள்ளே சென்று அவள் அவனுடன் பைக்கில் வரும் போது தவறவிட்ட அவள் பிரேஸ்லெட்டை எடுத்து அவள் பார்த்து விடக்கூடாது என பத்திரமாக அவனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.

“நீ போ” என்றான் அகரன். அவள் சென்று வரவும், “வா கிளம்பலாம்” என்று அவளை அழைத்து பேக்டரிக்கு சென்றான்.

ஆதி அறைக்குள் இருவரும் சென்றவுடன் அகரன், மித்திரன் குரலை பிரித்து வந்திருந்த அந்த ஆடியோவை மெல்லினாவிடம் கொடுத்தான். அவளுக்கு இதுவரை தெரியாத அகரனின் காதல் தெரிய வரத் தொடங்கியது.

அவனிடம் வாங்கி விட்டு ஆதியை பார்த்தாள்.

கேட்டுப்பார். இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்திருவாங்க. அகரா, சீக்கிரம் வா என்று ஆதி சொல்ல, கேபினுக்கு ஓடிய அகரன் தன்னை சரி செய்து கொண்டு தயாராகி வந்தவர்களை கவனித்து அமர வைத்து விட்டு ஆதிரேயனை பார்க்க வந்தான்.

மெல்லினா, அந்த குரலை திரும்ப திரும்ப போட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

பாஸ், வாங்க. காத்திருக்காங்க என்றான் அகரன். அவனையும் ஆதியையும் மெல்லினா பார்க்க, மெல்லிம்மா வெளிய வராத. நாங்க வர நேரமாகும் என்றான் ஆதிரேயன்.

பாஸ் என்று அகரன் மெல்லினாவை பார்த்துக் கொண்டே ஏதோ சொல்ல, ம்ம்..ஓ.கே என்ற ஆதிரேயன், நீயும் எங்களோட வா என்று ஆதி அழைத்தான்.

அண்ணா, நான் எதுக்கு? மெல்லினா கேட்க, நீயும் பிசினஸ் பத்தி தெரிஞ்சுக்கோ என்றான் ஆதிரேயன்.

அகரா, அண்ணாகிட்ட என்ன சொன்ன? மெல்லினா கேட்க, பாஸ் நேரமாகுது. வெயிட் பண்றாங்க என்று அகரன் சொல்ல, மெல்லி வா என்று அவளையும் அழைத்து சென்றனர்.

சார், பாப்ஸூமா? திரிவேஷ் கேட்க, இல்ல சும்மா தான் என்றான் ஆதி.

திரீ, உன்னோட ஆளுங்க எல்லாரும் தயாரா இருக்கீங்கல்ல? நல்ல பண்ணுங்க. “ஆல் தி பெஸ்ட்” என்று ஆதி திரிவேஷூற்கு கையை கொடுத்தான்.

“தேங்க்யூ சார்” என்றான் அவன்.

மச்சான், “ஆல் தி பெஸ்ட்”டா என்று அகரன் திரிவேஷை அணைத்தான். அவனுக்கும் நன்றி கூற, பிசினஸ் தான ஆரம்பிக்க போறான். அதுக்கு என்ன இப்படி பண்ணுறீங்க? மெல்லினா கேட்டாள்.

மேம், என்ன சாதாரணமா சொல்லீட்டீங்க? என்றான் திரிவேஷூடம் சேர்த்து வொர்க் செய்பவன்.

இதுக்கு தான் அகரன் அழைத்தான். மெல்லி உள்ள வா. உனக்கே தெரியும் என்றான் ஆதிரேயன்.

மெல்லினா அகரனை பார்த்தாள். அகரனுடன் வண்டியில் செல்லும் முன் பார்த்த பொண்ணை பார்த்தாள்.

பாப்ஸ் என்னாச்சு? திரிவேஷ் கேட்க, அவன் கண்ணில் பட்டது மெல்லினா கையிலிருந்த அகரனின் பிரேஸ்லெட். அவன் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றான்.

சார், வாங்க என்று ஒருவன் அழைக்க, அனைவரும் மீட்டிங் ஹாலிற்கு சென்றனர். அங்கே எட்டு பேர் இருந்தனர். அதில் ஒரு வெளிநாட்டவரும் இருந்தார்.

ஆதி முதலில் வந்தவர்களை வரவேற்று திரிவேஷ் பற்றி பேசினான். அவர்கள் மெல்லினாவை பார்த்து கேட்டனர். அவள் விழித்துக் கொண்டிருந்தாள். அகரன் புன்னகையுடன் அவளை பார்த்தான். ஆதி அங்கிருந்தவர்களிடம் மெல்லினாவை அறிமுகப்படுத்தினான்.

அண்ணா, என்னை பற்றி நானே சொல்லிக்கிறேன் என்று மெல்லினா பேச, அனைவரும் புன்னகைத்தனர்.

“ஹே கெர்ல், ஆர் யூ இன்ட்ரஸ்ட் இன் மை கன்ட்டிரி விசிட்?”

நோ, ஐ லவ் மை கன்ட்ரி என்றாள் மெல்லினா.

சார், ஆரம்பிக்கலாமா? என திரிவேஷ் அவன் பயிர் செய்ததது முதல் அவன் செய்ததை வீடியோ எடுத்ததை காட்டி விளக்கினான். மெல்லினா ஆதியையும் அகரனையும் பார்த்து விட்டு திரிவேஷை கண்ணெடுக்காமல் பார்த்தாள்.

அவன் விளக்கி முடிக்கவும் ஆதியிடம் திரிவேஷ் விளக்கியதை மற்றொருவன் வந்து பேசினான். அவர்கள் வாங்கிய மிஷின் பற்றிய அனைத்தையும் அவர்கள் பார்த்தனர். அதுமட்டுமல்லாது திரிவேஷ் குரூப்பில் இருப்பவர்களை மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

விற்பனைக்காக எடுத்து கொள்வதாக அனைவரும் சொல்ல, எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

மிஸ்டர் ஆதி, உங்க அசிஸ்டென்ட்டை எனக்கு அசிட்டென்ட்டாக என்னுடன் ஃபாரினுக்கு அழைச்சிட்டு போரேன் என்று வெளிநாட்டவர் ஆதியையும் அகரனையும் பார்த்தார்.

வாட்? என்று எழுந்த மெல்லினா அகரனை பார்த்து, என்னடா வேடிக்கை பாக்குற? நீ அங்க போனா நான் யாரோட சண்டை போடுவேன்? எனக் கேட்டாள்.

“அய்யோ!” என்று தலையில் கை வைத்த ஆதி, மெல்லிம்மா நீ உட்காரு. அது அவனோட விசயம் என்று ஆதி அகரனை பார்த்து விட்டு, என்னோட அசிஸ்டென்ட் வந்தால் நீங்க அழைச்சிட்டு போங்க என்றான் ஆதி.

அண்ணா..என்று மெல்லினா ஆதியை சுரண்டினாள்.

ஷ்..மெல்லி அமைதியா இரு. இது அவனுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. அங்க போனா அவன் நிலை உயரும். அவன் வீட்டில் அவனை மதிப்பாங்க. மரியாதை கொடுப்பாங்க. அவன் தான் முடிவெடுக்கணும் என்று ஆதி அகரனை பார்த்துக் கொண்டே சொன்னான்.

“சாரி சார். ஐ அம் நாட் இன்ட்ரஸ்டடு” என்றான் அகரன் சுருக்கமாக.

அகரன், “ஐ அம் இம்பிரஸ்டு யுவர் வொர்க். யூ ஆர் பெர்ஃபக்ட் மை செக்கரட்டரி” மாதத்திற்கு ஐந்து லட்சம் கொடுக்கிறேன் என்றார் அவர்.

என்னது ஐந்து லட்சமா? என்று திரிவேஷ் வொர்க்கர் கேட்க, யா..ஃபவ் லாக் தாரேன்.

எனக்கு விருப்பமில்லை சார். இங்க என்னோட ஃபேமிலி, ப்ரெண்ட்ஸை விட்டு என்னால வர முடியாது என்று ஆதி அருகே சென்று நின்று கொண்டான் அகரன். மெல்லினா அவரை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

இட்ஸ் ஓ.கேப்பா. உனக்கு இன்ட்ரஸ்ட் இருந்தால் கான்டாக்ட் பண்ணு என்று அவர் சொல்ல, நீங்க எவ்வளவு கொடுத்தாலும் நான் வர மாட்டேன் சார் என்று அகரன் சொன்னான்.

ஓ.கே சார், உங்களுக்கான பதிலை இப்பொழுது என்னோட அசிஸ்டென்ட்டும் நண்பனுமான அகரன் சொல்லி விட்டான். நாம ஏற்கனவே இம்போர்ட், எக்ஸ்பர்ட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம். இப்ப இதையும் பண்ணலாமா? ஆதிரேயன் கேட்க, நம்ம டீல்ல எந்த மாறுதலும் இல்லை என்றார்.

ஓ.கே சார். சந்திக்கலாம் என்று அனைவரும் கிளம்பினர். திரிவேஷிற்கும் அவன் ஆட்களுக்கும் எல்லாரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆதி, அகரனிடம் சொல்லி விட்டு அவன் அம்மா, அப்பாவை பார்க்க சென்றான்.

அகரன் முகம் சரியில்லாது இருக்க, அகரா நீ கொஞ்ச நேரம் உன்னோட கேபினில் ஓய்வெடுத்துட்டு வா என்று ஆதி சொல்ல, மெல்லினா அமைதியாக அவனை பார்த்தாள்.

அகரன் அவனது கேபினுக்கு செல்ல, அண்ணா இரு..அவனிடம் ஒன்று மட்டும் கேட்டு வாரேன் என்றாள் மெல்லினா.

மெல்லி, இப்ப வேண்டாம். அவனுக்கு மூடு சரியில்லை என்று ஆதிரேயன் சொல்ல, அண்ணா, ப்ளீஸ் போனவுடன் வாரேன் என்று அவளும் அகரன் பின் சென்றான்.

அவனறை என்ன நடந்தாலும் தெரியும் அளவு தான் இருந்தது. உள்ளே சென்ற அகரன், வெளிநாட்டவன் பேச்சிலே உலன்றவனுக்கு மெல்லினாவின் சண்டை என்ற வார்த்தையும் சேர்ந்து ஓட ஆரம்பித்தது.

அவனது கோர்ட்டை கழற்றி தூக்கி எறிந்தான். உள்ளே வந்த மெல்லினா காலடியில் வந்து விழுந்தது அவளது பிரேஸ்லெட்.

அகரா, இது என்னுடையது தான? என்று மெல்லினா அதை எடுத்தாள்.

உன்னுடையது மட்டும் தான் இப்படி இருக்குமா? வேற பொண்ணுங்க இதை பயன்படுத்தக் கூடாதா? என கத்தினான்.

எதுக்குடா இவ்வளவு கோபம்? மெல்லினா கேட்க, அவளுடைய அருகாமை அவனை பயமுறுத்தியது. மேலும் கோபம் தான் வந்தது அகரனுக்கு.

நான் என்ன செய்தால் உனக்கென்ன? உன்னோட வேலைய பார்த்துட்டு போ. நான் இல்லைன்னா உனக்கு சண்டை போட யாரும் கிடைக்க மாட்டாங்களா? அகரன் கேட்க, ஆமாடா நான் யாருடன் சண்டை போடுவது? மெல்லினாவும் கேட்டாள்.

ஏன்? உன்னோட அருமை காதலன் விபுதன் இல்லை என கோபத்தில் அவள் ஒருதலைக்காதல் தோற்றதை மறந்து அகரன் பேசினான்.

மெல்லினா கண்ணீருடன், இல்லை அவன் என்றும் என்னோட காதலன் இல்லை. நான் தான் அவனை முட்டாள்தனமாக காதலித்து விட்டேன். ஆனால் அவனுக்கு உன்னோட அத்தை பொண்ணு பிரணிதாவை தான் பிடிக்கும் என்று பொறுமை இழந்து சொல்லி விட்டாள்.

மெல்லி, நீ என்ன சொன்ன? விபு பிரணியை காதலிக்கிறானா? அகரன் கேட்க, ஆதியும் உள்ளே வந்து கதவை அடித்து விட்டு இருவரையும் திட்டினான்.

கதவை திறந்து வச்சி என்ன பேசிட்டு இருக்கீங்க? ஆதிரேயனும் கோபமாக கேட்டான்.

அண்ணா.. என்று மெல்லினா அவனை அணைத்து அழுதாள்.

நான் தான் சொன்னேன்ல்ல. அவன் கோபமா இருக்கான். அப்புறம் பேச சொன்னேன்ல்ல? என்று ஆதி அகரனை பார்த்தான்.

அகரன் மெல்லினாவிடம் பேசியதை உணர்ந்து கண்ணீருடன், ஐ அம் சாரி மெல்லி” என்றான்.

போடா, ஒரு நேரம் நல்லா பேசுற? ஒரு நேரம் ரொம்ப கஷ்டப்படுத்துற?

சாரிம்மா என்றான்.

ஆதி அகரனை முறைத்து பார்க்க, பாஸ் நீங்களும் விட்டா அவனிடம் என்னை வித்துருவீங்க போல? அகரன் கேட்க, உன்னை விற்றால் எனக்கும் எல்லா விதத்திலும் நட்டமாகுமே? என்றான் ஆதி.

ஆதி மெல்லினாவை நகர்த்த அவள் கையிலிருந்ததை அகரன் பிடுங்கினான்.

ஏய், அது என்னுடையது என்றாள் மெல்லினா.

இல்லை, இது உன்னுடையதில்லை என்று அவனது ஃப்ளூ சட்டையில் போட்டு விட்டு, நிஜமாகவே விபு, பிரணிய காதலிக்கிறானா?

அவன் மட்டுமல்ல அவளும் அவனை தான் காதலிக்கிறாள். அன்று அதை தான் பார்த்தேன் என்று அகரனது சீட்டில் அமர்ந்தாள்.

அப்ப பூச்சி கடிக்கலை. மாமாவும் நீயும் சேர்ந்து எல்லாரையும் ஏமாத்தி இருக்கீங்க? ஆதி கேட்க, மாட்டிக்கிட்டோமே? என மெல்லினா விழித்தாள்.

மெல்லி, என்ன நடந்தாலும் உண்மையை நேரடியா சொல்லு. உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத என்றான் ஆதி.

யாராவது உன்னிடம் யாருக்கும் பிரச்சனைன்னு சொன்னா எங்க யாரிடமாவது சொல்லணும். தனியா எங்கேயும் போகக்கூடாது என்றான் அகரன்.

அதை நீ சொல்றீயாடா? ஆதி கேட்க, பாஸ்..அவசரத்தில் பயத்தில் சொல்ல மறந்துட்டேன் என்றான். மெல்லினா இருவரையும் பார்த்தாள்.

இவனிடம் ஏதோ கேட்கணும்ன்னு சொன்னேல்ல. கேட்டுட்டு வா. முதல்ல யாருன்னு பார்த்து ஸ்கூலுக்கு போய் கண்டுபிடிக்கணும் என்று ஆதி வெளியேறினான்.

மெல்லினா எழுந்து அகரன் சட்டையினுள் கையை விட்டு, இது என்னுடைய இல்லை. சரி, யாருடையது? அவள் கேட்க, அது எதுக்கு உனக்கு? அகரன் கேட்டான்.

சொல்லு? என்று அகரனை நெருங்கி அவள் வந்தாள். அவன் பின்னே சென்றான்.

உன்னோட ரெஸ்ட் ரூமுக்கு நான் எதுக்கு போகக்கூடாது? என கேட்டுக் கொண்டே அவனை நெருங்கினாள்.

என்ன கேக்குற? நீ ஒரு பொண்ணு? நீ எப்படி? என்னோட அறைக்கே நீ வரக் கூடாது.

வரக்கூடாதா? நான் எத்தனை முறை வந்திருக்கேன். அதில் என்ன இருக்கு?

இல்லை. இனி நீ வரக்கூடாது என்றான்.

அதான் ஏன்?

உன்னோட அம்மாகிட்ட போய் கேளு. சொல்லுவாங்க என்றான் அவன்.

சரி, அதை நான் கேட்டுக்கிறேன் என்று மீண்டும் அவன் மார்பில் கையை வைத்தான். அகரன் பதறி நகர்ந்தான். ஆதி அவனறையிலிருந்து பார்க்கிறான் என்று அகரனுக்கு தெரியும்.

“ஒழுங்கா நீ கிளம்பு” என்றான்.

கிளம்பணுமா? அப்ப நீ அதை என்னிடம் கொடு என்றாள்.

நான் தர மாட்டேன் என்றான். அகரன் போன் ஒலித்தது. திரிவேஷ் அகரனுக்கு வாழ்த்தை கூறினான்.

எனக்கு எதுக்குடா சொல்ற? அகரன் கேட்க, திரிவேஷ் மெல்லினா கையிலிருந்ததை கூற, வாட்? என்று “நீ வைடா” என்று போனை வைத்து விட்டு அகரன் மெல்லினாவை நெருங்கினான். அவள் மனம் அடித்துக் கொண்டது.

அகரா, என்ன பண்ற? மெல்லினா கேட்க, அவள் கையை விலக்கி பார்த்து, என்னது இது? என அவன் அவளை நெருங்க, “அகரா நெஞ்சு வலிக்குது” என நடிக்க கையை நெஞ்சில் வைத்தாள் மெல்லினா. அவள் இதயம் படபடவென துடித்தது.

நகராமல் மெல்லினா அகரனை பார்த்துக் கொண்டே நின்றாள். அவள் கையிலிருந்ததை பிடுங்கி எடுத்து அவன் கையில் போட்டுக் கொண்டான்.

அதை குடுடா, என்னோட ப்ரெண்டு எனக்காக கொடுத்தது.

லூசா நீ? இது பசங்க போடுவது? உனக்கு எவன் கொடுத்தான்? என அகரன் கேட்டவுடன், அவள் கண்ணீர் வந்தது.

“மெல்லி, இது என்னோடது. அழுது டிராமா பண்ணாத” என்றான் அகரன்.

அகரா, நீ என்ன சொன்ன? மெல்லினா அழுது கொண்டே கேட்டாள்.

நான் என்ன சொன்னேன்? தெரியலையே? அகரன் சொல்ல, நீயும் என்னை அவனை போல் நினைச்சுக்கிட்டு இருக்கேல்ல? மெல்லினா கேட்க, அவள் அழுவதை பார்த்து அகரன் அறைக் கேமிராவை ஆதி அவன் பக்கம் திருப்பினான்.

அவளை அமர வைத்து, யாரை போல்? நான் என்ன நினைச்சுட்டு இருக்கேன்? அகரன் கேட்டான்.

அந்த விபு போல் நீயும் என்னை கேவலமாக நினைச்சிட்டு இருக்கீயா? மெல்லினா கேட்க, அகரன் சிரித்தான்.

என்னது? நான் அப்படி உன்னை நினைத்திருந்தால் என் அறை பக்கம் கூட விட்டிருக்க மாட்டேன்.

அப்ப நீ என்னை தப்பா நினைக்கலையா?

இல்லை. உன்னோட டிரிங்க்ஸ் பழக்கம் தான் எனக்கு பிடிக்காது. மத்த படி நீ நல்ல பொண்ணு தான்.

“இல்லை, எல்லாரும் என்னை ஒருமாதிரி தான் பாக்குறாங்க” என்று மெல்லினா அழுதாள்.

என்ன பாக்குறாங்க? நீ க்யூட்டா இருக்கேல்ல. அதான் பாக்குறாங்க என்றான்.

இல்ல அகரா, அப்படியில்லை. அருவருப்பான பார்வை. நான் அவ்வளவு தவறானவளா? என அழுது கொண்டே அவனை அணைத்தாள். அகரனுக்கு அவள் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்றாலும் தொடர்ந்து இவளுடன் இதே போல் பேசினால் அவன் காதலை அவளுக்கு காட்டும் படி ஆகுமே? என்று கேமிராவை பார்த்தான்.

ஆதி புரிந்து கொண்டு அவனறைக்கு வந்து மெல்லினாவை அழைத்து சென்று, அவன் அவளிடம் பேசினான். அகரன் கண்ணை மூடி அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் அந்த பையனை கண்டுபிடிச்சிட்டோம். நீ இரு. நாங்க அவனை பார்த்துட்டு வாரோம் என்று ஆதி கிளம்ப, மெல்லினா அகரனை பார்த்துக் கொண்டே ஆதிரேயனுடன் சென்றாள்.

பள்ளிக்கு சென்று அவனை விசாரித்த போது போனில் பணம் அனுப்பி செய்ய சொன்னாங்க சார். செய்தோம் என்றான் அந்த பையன்.

அந்த நம்பரை வாங்கி போலீஸை அணுகினால் அவர்கள் சரியாக பதில் தரவில்லை. மீண்டும் பேக்டரிக்கே வந்தனர். ஆதி அறைக்கு வந்ததும் மெல்லினா தூங்கி விட்டாள்.

அகரன் அவன் வேலையை பார்த்து விட்டு, ஆதி வந்ததை அறிந்து கொண்டு அவனறைக்கு வந்தான். அகரன் மெல்லினாவை பார்க்க, அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். ஆதி அகரனிடம் எல்லாவற்றையும் கூறினான்.

பாஸ், முதல்ல எல்லா இடத்திலும் நாம ஓர் ஆளை செட் பண்ணணும். நான் முடியுமான்னு பார்க்கிறேன்.

“துரை மேலும் எனக்கு சந்தேகம் இருக்குடா அகரா” என்றான் ஆதி.

பாஸ், அவன் ஆட்களை மட்டும் நாம் நெருங்க முடியாது. மற்ற இடத்தில் நான் பேசுகிறேன். இன்னும் எத்தனை நாள் தான் இவள் வீட்டில் இருப்பாள்? அகரன் கேட்க, நான் அவளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்ன்னு நினைக்கிறேன் என்றான் ஆதி.

பாஸ், உங்க சிஸ்டரை பள்ளிக்கு அனுப்புங்க. நம்ம விபுவையும் இவளது வகுப்பில் போட்டு அவனை கவனித்து கொள்ள சொல்லலாம். அவன் கவனமா பார்த்துப்பான் அகரன் சொல்ல, நீ தெளிவா தான் பேசுறியா? ஆதி கேட்க, அகரன் அவனிடம் அதற்கு பதில் சொல்லாமல், நான் விபுவிடம் பேசுறேன் பாஸ் என்றான்.

நீயே பேசு. எனக்கு அவனிடம் பேச விருப்பமில்லை என்றான் ஆதி.

பாஸ், தவறு செய்வது இயல்பு தான். அவன் சின்ன பையன் தான். நீங்களே கோபப்படலாமா? அவனும் நீங்க பேசாமல் இருந்ததால் கவலையில் இருப்பான். பேசுங்க பாஸ். ருச்சியும் வருத்தப்படுவா என்றான்.

ஆதி யோசனையுடன் அகரனையும் மெல்லினாவையும் பார்த்தான்.

அகரனுக்கு கீழ் வேலை செய்யும் ஒரு பொண்ணு மூச்சிறைக்க ஓடி வந்து கதவை தட்டாமல் டப்பென திறந்தாள்.

அகரன் அவளிடம் சத்தம் போட, சார்..ஒரு நிமிடம் என்று மூச்சை இழுத்து விட்டு, பாஸ் நியூஸ் பாருங்க. கீழ ரிப்போர்ட்டர்ஸ் வந்திருக்காங்க என்றாள் அந்த பொண்ணு.

அகரனும் ஆதியும் நியூஸை பார்த்து திகைத்தனர்.

இது எப்படி வெளிய வந்தது? ஆதிரேயன் சத்தமிட்டான்.

பாஸ், அமைதியா யோசிங்க. நான் கீழ போய் பார்த்துட்டு வாரேன். நீங்க ருச்சிகிட்ட பேசுங்க என்றான். ஆதி ரசிகாவை அழைத்து பேசினான்.

ஆதியின் பள்ளியில் நடந்த வருண்- நிஷா பிரச்சனையில் ஆதியை பற்றி விபுதன் பேசாத விசயத்தை பேசியது போல் காட்டி இருந்தனர். இதில் ஆதிக்கு ரசிகா மீதான காதலும், அவளது உருவமும் மட்டும் வெளியே வந்திருந்தது. ஆனால் ரசிகாவின் புகைப்படத்தை காட்டவில்லை.

அகரன் ரிப்போர்ட்டர்ஸை அமைதியாக அமர வைத்து மேலே வந்தான்.

பாஸ், நீங்க பேசினீங்களா? அகரன் கேட்க, அவளும் டென்சனா இருக்காடா என்று ஆதி தமிழரசனுக்கு போன் செய்து தன் இறந்த மனைவி இலக்கியாவின் “டெட்த் ரிப்போர்ட்” கொண்டு வரச் சொன்னான்.

திரிவேஷூம் ஆதியை பார்க்க ஆபிஸிற்கு வந்தான். மெல்லினாவும் எழுந்து விட்டாள்.

அண்ணா, விபு தான் அப்படி பேசவே இல்லையே? அவன் வாயிலாக பேச வைக்கலாமே? மெல்லினா கேட்டாள்.

நோ, இதுல ருச்சியும் சம்பந்தப்பட்டுருக்கா? ஒன்று ருச்சியை பற்றி தெரிய வரும் இல்லை மேம் இறந்ததற்கு இவர் தான் காரணமென்று பாஸை போலீஸ் அரெஸ்ட் பண்ணுவாங்க என்றான் அகரன்.

ஆதிக்கு அழைப்பு வர, என்னடா ஆதி? இப்ப எப்படி இருக்க? நல்லா இருக்கா? உன்னோட எல்லாம் போகப் போகுது? என்னிடமிருந்து பறித்தேல்ல என்று ஒருவன் குரல் கேட்க, யாருடா நீ? ஆதி கேட்க, முதல் முறையாக ஜெயிலுக்கு போகப் போற. “ஆல் தி பெஸ்ட்”. ரசிகாவை பற்றி நீ கவலைப்படாத. நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஏய், ஆதி கத்த போன் துண்டிக்கப்பட்டது.

பாஸ், யாரு சக்தியா? அகரன் கேட்க, அந்த பைத்தியக்காரனெல்லாம் இல்லைடா. வேற யாரே ரொம்ப ராங்கா பேசுறான். அவனுக்கு ரசியை பற்றி தெரிஞ்சிருக்கு. அவன் தான் கிளப்பி விட்டுருக்கான் என்று ஆதி யோசனையுடன் மூவரையும் பார்த்தான்.

பின் ஆதி போனை எடுத்து சீதாவை அழைத்து, அம்மா வேலையாட்கள் எல்லாரும் நம்ம வீட்டுக்குள்ள தான் இருக்கணும். யாரும் வெளியே செல்லக் கூடாது. ரசியை பார்த்துக்கோங்க என்று துண்டித்து விட்டு, திரீ..சீக்கிரம் கிளம்பு.

பள்ளிக்கு போ. அங்கிருந்து தான் விசயம் வெளிய வந்திருக்கு. என்னன்னு பாரு. “நான் சொன்னேன்னு பள்ளியிலிருந்து யாரும் வெளிய போகக்கூடாதுன்னு பிரின்சிபில் மேம்மிடம் சொல்லு” என்று அவனை அவசரப்படுத்தி அவனை அனுப்பி விட்டு, மெல்லி என்ன நடந்தாலும் நீ கீழே வரக் கூடாது இல்லை உன்னையும் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்றான் ஆதி.

அண்ணா, “பயமா இருக்கு. நீ போகாத” என்று மெல்லினா ஆதியை அணைத்துக் கொண்டாள்.

அகரா, நீயும் வர வேண்டாம். மெல்லி பக்கத்துல இரு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவன் கண்கண்ணாடியை கழற்றி துடைத்து போட்டுக் கொண்டு, அவன் நாற்காலியின் கை பிடியில் போட்டு வைத்திருந்த அவன் கோர்ட்டை போட்டுக் கொண்டு கீழே வந்தான்.

பாஸ், “பார்த்து பேசுங்க” என்று அகரன் ஆதியை அனுப்பி வைத்தான்.

அகரா, அண்ணாவுக்கு ஒன்றுமாகாதுல்ல? மெல்லினா கேட்க, “தெரியலை மெல்லி” என்று அவள் கையை பிடித்துக் கொண்டான்.

ஆதி ரிப்போர்ட்ஸ் அருகே வரவும், விலகுங்க என்று சத்தம் கேட்டு அனைவரும் குரல் வந்த திசையை பார்த்தனர். அங்கே தமிழரசன் வக்கீலுடனும் போலீஸூடனும் வந்தார்.

சார், உங்க பொண்ணை ஆதி சார் கொன்றாரா? அதற்கு தான் போலீஸை அழைச்சிட்டு வந்துருக்கீங்களா? ரிப்போர்ட்டர் ஒருவன் கேட்க, ஆதி அவரையே பார்த்துக் கொண்டு நின்றான்.

காத்திருங்கப்பா. உங்க எல்லாருக்கும் எல்லா பதிலும் நான் தாரேன். “மாப்பிள்ள, என்னை மன்னிச்சிருங்க” என்று ஆதியை அணைத்து தமிழரசன் சொல்ல, ஆதி கண்கள் கலங்கியது.

தொலைக்காட்சியில் நேரடியாக்கப்பட்டிருந்த இவரது செயலை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். சவிதாவும் ரசிகாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆபிஸை சுற்றி பார்த்தவர், அகரா என்று சத்தமிட்டார். மாடியில் நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்த அகரனும் மெல்லினாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அகரா, “இங்க வா” என்று தமிழரசன் அழைத்தார். மெல்லி, “நீ வராத” என்று அகரன் அவள் கையை விட்டு கீழே ஓடி வந்தான். பிரபாகரனும் வேகமாக வந்து ஆதி அருகே நின்று கொண்டார்.

இவன் அகரன். என்னோட மாப்பிள்ள ஆதிரேயனோட செக்கரட்டரி. இன்று முதல் இவன் எனக்கு முழுதாக மகனாகி விட்டான். இவனை நான் தத்து எடுத்திருக்கேன். அப்புறம் என்று ஆதியை பார்த்த தமிழரசன், ஒரு பொண்ணும் என்று அம்மாடி ரசி, நீ பார்த்துக்கிட்டு தான இருக்க? நல்லா கேட்டுக்கோ. இனி நான் தான் உன்னுடைய சொந்த அப்பா என்றார்.

மாமா..ஆதி அழைக்க, “ஆமா மாப்பிள்ளை” என்று சொன்ன தமிழரசன், என்னோட சொந்த பொண்ணால என் மாப்பிள்ளையோட குடும்ப வாழ்க்கை, நிம்மதி, சந்தோசம் எல்லாம் போச்சு. அதை மீட்டுக் கொண்டு வந்த அகரனும், ரசிகாவும் தான் என்னோட குடும்பம். என்னோட பையன் அகரன். என்னோட பொண்ணு ரசிகா என்றார் அவர்.

ஆதி திகைத்து அவரை நோக்க, சார் யார் அந்த பொண்ணு? ஆதி சார் லவ் பண்ற பொண்ணா? ரிப்போர்ட்டர் கேட்டான்.

ஆமா, “என்னோட மாப்பிள்ளை காதலிக்கும் முதல் பொண்ணு ரசிகா தான்”.

அவங்கள பார்க்க முடியுமா? மற்றொருவன் கேட்க, அதை அவள் விரும்ப மாட்டாள். என் மாப்பிள்ள பேட்டியில அன்று பேசினாரே! அதே போல் தான் பொண்ணு. இருவரும் அன்று தான் சந்தித்தார்கள். அப்படிதான மாப்பிள்ளை? அவர் கேட்க, ஆதி மௌனமாக தலையை மட்டும் “ஆம்” என்று தலையசைத்தான்.

கோதுமை நிற கலரா? இல்லை கருப்பா? ஒருவன் உதாசீனமாக கேட்க, ஆதியும் அகரனும் அவனை முறைத்து நின்றனர்.

தம்பி, அது என்ன கருப்பா? இங்க வாங்களேன் என்று தமிழரசன் பேசியவனை அழைத்து அவன் தோளில் கை போட்டு, உங்களோட இந்த முடி வெள்ளையா இருந்தா உங்களை நம்ம ஊரு பொண்ணுகளுக்கு பிடிக்குமா? என்று கேட்டார்.

அய்யோ சார், இவனை அந்த முடியில் பார்த்தால் உமட்டிக் கொண்டு வரும் என்றாள் ஒரு பொண்ணு.

ம்ம்..பார்த்தீங்களா? நிறம் என்ன என்பது முக்கியமில்லை. அது உங்களுக்கு பொருந்துதா? என்று தான் பார்க்கணும். நிறம் குறைவாக இருந்தால் தான் என்ன? கலராக இருக்கும் யாரும் நல்ல பொண்ணு, பசங்களும் இல்லை. கருப்பான யாரும் கெட்ட பொண்ணு, பசங்களும் இல்லை. ஒரு நிமிடம் இது நமக்கானது தானா? என சிந்தித்து செயல்படணும்.

சார், நீங்க பட்டிமன்ற பேச்சாளராகலாம் என்றான் ஒருவன்.

தமிழரசன் புன்னகையுடன், பேச்சாளரானால் என் மனம் விரும்பும் டாக்டர்  தொழிலை கை விட நேரிடுமே? அப்புறம் எனக்கு சம்பளம்? எனக்கு இப்ப பசங்க இருக்காங்க என்று கேலியான கூறினார்.

சார், அந்த பொண்ணு நல்ல பொண்ணு உங்களால கண்டிப்பா சொல்ல முடியுமா? எப்படி சொல்றீங்க? ஒருவன் கேட்டான்.

கண்டிப்பா ரசி, நல்ல பொண்ணு தான். இந்த ரெண்டு பசங்களுக்குமே பெத்தவங்க இல்லை. அண்ணா, அண்ணி, அக்கா தான் வளர்த்திருக்காங்க. இருவர் நிலையும் ஒன்று தான்.

என்ன? ரசியால எதிர்த்து பேசி வெளிய வர முடியல. ஆனால் இவன் பேசி வெளிய வந்திருக்கான். ஆனால் இப்ப வரை இவங்க அண்ணனுக துணைக்கு இருந்ததே இல்லை. அதற்கு பதிலாக கஷ்டத்தை கொடுத்திருக்காங்க. இவனோட ப்ரெண்டு தான் அந்த பொண்ணும் என்று அகரனை பார்த்தார். அவன் கண்கள் கலங்கியது.

மாமா, அகரனோட அண்ணா..ஆதி கேட்க, ஆமா மாப்பிள்ள, நான் போனது அகரன் வீட்டுக்கு மட்டுமல்ல. நம்ம ரசியோட வீட்டுக்கும் தான் என்று அவனை பார்த்து, மாப்பிள்ள அன்று கிளம்பும் போது அவனோட அண்ணன் பேசியது நடிப்பு தான். நம்மை பற்றி தெரிந்து..என்று நிறுத்தி அகரனை பார்த்தார். அவன் தலைகவிழ்ந்து நின்றான்.

அட, அகரா உன்னோட அண்ணா மட்டுமல்ல இங்கிருக்கும் முக்கால் வாசி பேர் பணத்துக்காக எதுவும் செய்வர். அதான் பணத்திற்காக கல்யாணம் என்ற பேரில் நம்ம ரசியை அவள் அண்ணாக்களே ஒருவனுக்கு மணமுடித்து விற்றார்களே? அது போல் என்று தமிழரசன் சொல்ல, அப்பா..என்று அகரனும், மாமா..என்று ஆதியும் சத்தமிட்டனர். ரசிகா சவிதா தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் அமைதியா இருங்கப்பா” என்று தமிழரசன் சொல்ல, கேள்விகளை எழுப்பினர் ரிப்போர்ட்டர்.

அட, இருங்கப்பா. நான் எல்லாத்தையும் முடிச்சுக்கிறேன். நீங்க கேட்கும் கேள்வியில் என் வாழ்க்கை பயணமே தொலைந்து விடும் போலேயே? என்றார் தமிழரசன்.

அதெப்படி சார்? அண்ணாவே? ஒரு பொண்ணு கேட்க, அம்மாடி அண்ணா நினைக்கலைன்னாலும் வரும் அண்ணிகள் அண்ணா மனதை கலைத்து எதையும் செய்ய வைத்து விடுவார்கள் என்றார் அவர்.

ஆமா சார் என்று பொண்ணு சொல்ல, அம்மாடி பெத்த பிள்ளைகளையே அம்போன்னு விட்டுட்டு அவங்க குடும்பம் இருக்காங்க. நீங்க எல்லாரும் பார்த்த வீடியோவில் பேசிய பையன் எங்க ரசிகாவோட அண்ணன் பையன் தான் என்று அகரன், ரசிகா குடும்பத்தை இவர்கள் தான் என்று சொல்லாமல் போட்டு உடைத்தார். அகரனும் கஷ்டமான நிலையில் கண்ணீருடன் நின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!