Skip to content
Post Views: 6,171
ஓவியா தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து விட்டு வெளியே வர ,வீட்டின் உரிமையாளர் வந்து நின்றார்.
“அதுக்குள்ள எல்லாம் எடுத்து வச்சுட்டியாம்மா? ஹெல்ப்புக்கு கூப்பிட்டு இருக்கலாமில்ல?” என்றதும்” கொஞ்சம் தானே ஆன்ட்டி!” என்று சிரித்தாள்.
“சரிம்மா. இங்க ஒரு கைனகாலஜிஸ்ட் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கேன் நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு எல்லாம் ரெடியா இரு. செக்கப் பார்த்துப்போம். புதுசா காட்டுற மாதிரியே இருக்கட்டும் சரியா. ஹஸ்பன்ட் பத்தி கேட்டா வெளிநாட்டுல இருக்கிறதா சொல்லு வேற எதுவும் பேச வேண்டாம்” என்றார்.
“ஓகே ஆன்ட்டி!” என்றவள் தன் நன்றியை தெரிவிக்க
Advertisement
“எத்தனை தடவை தான் சொல்லுவ. விடும்மா ஏதோ என்னால் முடிந்த உதவி!” என்று கூறி விட்டு,”என் தங்கச்சி பையன் வேற அவன் ஃப்ரெண்டுக்கு ரூம் கேட்டு இருந்தான். நான் அதை ரெடி பண்ணனும் நீ பத்திரமா இரு. ஏதாவது வேணும்னா என்னைக் கூப்பிடு” என்று விடைபெற அயர்வாய் வந்தமர்ந்தாள் ஓவியா.
மேசையில் வீற்றிருந்தது அவளின் குடும்ப புகைப்படம். பார்த்ததும் முணுக்கென்று வந்து விட்டது கண்ணீர்.
‘உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.’ என்று புகைப்படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
Advertisement
‘திரும்பி சென்று விடலாமா?’ என்று கூட எண்ணினாள் ஆனால் வைராக்கியம் தடுத்தது செல்ல வேண்டாமென்று.
Advertisement
‘நம்மால ஒருத்தருக்கும் கஷ்டம் வேண்டாம்.’என்று எண்ணியபடி சோர்வாக இருக்கவே அப்படியே படுத்து விட்டாள்.
**********
அழகினியன் தன் மகளோடு வந்து விட்டான் நண்பனின் பெரியம்மா வீட்டிற்கு.
Advertisement
வீட்டினருகே இருந்த விளையாட்டு பூங்காவை பார்த்ததுமே குழந்தை குதூகலமாகி விட்டாள்.
“டாதி …டாதி ஊஞ்சல் ஊஞ்சல்..” என கத்தி குதூகலிக்க
“டெடிக்குட்டி வீட்டை செட் பண்ணதும் பார்க் போவோமாம் சரியா?” என்றதும் தந்தையை கன்னம் கிள்ளி முத்தம் வைத்துக் கொஞ்சினாள் குழந்தை.
குழந்தையின் கொஞ்சலில் அவன் மனம் இதமாய் உணர்ந்தது.
“ஓகே ஓகே! இப்போ போய் வீட்டை பார்க்கலாம் ரைட் “என்றவன் காலிங் பெல்லை அழுத்த
“தம்பி யாருப்பா?” என்று அவன் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
“பெரியம்மா இவன் தான் என் ஃப்ரெண்ட் இனியன். இவனுக்குத் தான் வீடு கேட்டேன்.” என்று அவருக்குப் பின்னாலிருந்து குரல் கொடுத்தான் அழகனின் நண்பன் தருண்.
சட்டென திரும்பியவர்,” அடேய் !இப்படியா கத்துவ?” என்றபடி,”வாங்க தம்பி உள்ள வாங்க” என்றவாறே கதவைத் திறந்தார் கையிலிருந்த சாவியைக் கொண்டு.
“உள்ளே வாங்க!” என்றவர் மின்விசிறியை ஓட விட்டு உபசரித்தார்.
தன் வீட்டில் தங்கும் விதிமுறைகளை விளக்கியவர் ,பின்னர் டெடியை பார்த்துக் கொள்வதைப் பற்றியும் பேசினார்.
“இங்க பக்கமே தான் நர்சரி இருக்கு தம்பி. நீங்க காலையில் விட்டுட்டா நான் ஈவ்னிங் பிக்கப் பண்ணிக்குவேன். இல்ல ரெண்டு நேரமும் அழைச்சுட்டுப் போய் கூட்டிட்டு வர்றதா இருந்தாலும் சரிதான்” என்றார்.
“அது ஷிஃப்ட் பொறுத்து சேஞ்ச் ஆகும் ஆன்ட்டி.அதனால நீங்களே அழைச்சுட்டுப் போயிட்டு வாங்க.”என்றவன் டெடியின் உணவு விபரங்களை பட்டியலிட்டான்.
மூன்று வேளைக்குமே சத்தான ஆகாரங்களாக அவன் கூறியிருக்க, அவருக்கு வியப்பு தான் அவனது வளர்ப்பில்.
“நானே பண்ணி தந்திடுவேன் ஆன்ட்டி நீங்க அவ கரெக்டா சாப்பிடுறாளான்னு கவனிச்சாப் போதும்”என்றவன் தருணைப் பார்க்க
தருணோ,”பெரியம்மா ஓகே தானே எந்த ரூம் தர்றிங்க?” என்றதும் அவரும் சாவியைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதற்கு மேலும் பேச்சை வளர்க்கவில்லை. ஆர்வம் அறையை பார்ப்பதில் திரும்பியது தந்தைக்கும் மகளுக்கும்.
விஸ்தாரமான அறை தான் ஒரு ஓரமாக கிச்சன் மேடை மட்டும் இருந்தது. அருகில் சிங்க்
இருக்க,”எப்போதும் தண்ணி வரும் தம்பி, அந்த பிரச்னை இல்லை” என்று குரல் கொடுத்தார் தருணின் பெரியம்மா.
அழகனிடத்தில் ஒரு புன்சிரிப்பு மட்டுமே.
மூலையில் கழிவறை இருந்தது நல்ல வேளையாக. அதை கவனித்தவனுக்கு பெருத்த நிம்மதி.
“ஒரு ஆள் தங்க தானேன்னு பாத்ரூம் கொஞ்சம் கச்சிதமா வச்சுட்டாங்க தம்பி, அங்கேயே குளிச்சுக்கலாம்” என்று சமாதானமாய் சொல்ல
“இது எங்களுக்கு போதும் ஆன்ட்டி” என்றான் அழகன்.
“இந்த ரூம் ஓகே தருண். தேங்க்ஸ் மச்சான்” என்று நண்பனிடம் கூறியவன்,” நாளைக்கு திங்க்ஸ் எடுத்துட்டு வந்திடுவோம் ஆன்ட்டி “”என்றான்.
சொல்லியபடியே சமைக்க, உடுத்த, படுக்க தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வந்து குடியேறியவன், தருணின் பெரியம்மா உதவியுடனேயே டெடியை பள்ளியில் சேர்க்க ஏற்பாடும் செய்து விட்டான்.
தந்தைக்கும் மகளுக்கும் அவ்வறையே போதுமானதாக இருக்க அறைக்குள்ளேயே சிரிப்பும் விளையாட்டுமாய் அவர்கள் பொழுது கழிந்தது. வீட்டை கைபேசியில் பேசும் போது மட்டுமே நினைவில் கொண்டனர் இருவரும். மற்ற ஏனைய நேரங்களில் தந்தைக்கும் மகளுக்குமான சந்தோஷம் மட்டுமே.
சுமதி தான் தவித்துப் போனார். ‘இருவரும் என்ன செய்கின்றனரோ எப்படி சமாளிக்கின்றனரோ?’ என்று .
“அத்தை விஷேஷத்தை என்ஜாய் பண்ணுங்க. இங்கே நாங்க சமாளிச்சுப்போம்” என்று சமாதானம் செய்து விட்டான்.
***********
இங்கே
சித்ரா திருதிருவென்று விழித்துக் கொண்டு நிற்க, எதிரே அவினாஷ் முறைத்து நின்றான் அவளை.
“எத்தனை நாளா இது?” என்று கேட்க
“அது வந்து…” என்று இழுத்தவளை இன்னும் கோபத்துடன் அவன் பார்க்க
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது. என்னைப் பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட?” என்றதற்கு தலையை நாலா புறமும் ஆட்டி வைத்தாள்.
“ஸோ என்னைப் பிடிக்கலை அதனால தான் இந்த வேலை” என்றவன் தன் கையில் இருந்த மாத்திரை கவரை தூக்கி குப்பையில் எறிந்தான்.
“பிடிக்கலைன்னா என் கிட்ட நேரடியா சொல்லி இருக்கணும். நான் ஒண்ணும் பொண்ணுங்களை பார்த்ததும் பாஞ்சுடுற ஆளோ, இல்ல அவங்க உணர்வுகளை புரிஞ்சுக்காதவனோ கிடையாது. வித்யாவோட வளர்ப்பு நான் “என்று தன் நெஞ்சை ஆள்காட்டி விரலில் குத்திக் காட்டியவன்,” இனி வீட்டுக்கு வந்தால் தானே இதைப் போடுவ இனி வரமாட்டேன்” என்று கூறி விட்டு வெளியே செல்ல
“நான்…பயத்துல” என்றவளின் குரல் அவனைத் தடுத்து நிறுத்த சட்டென திரும்பியவன்,” உன் பயத்திற்காக என் ஹெல்த் ஸ்பாயில் பண்ணிக்க முடியாது. டெய்லி ஒரு தூக்க மாத்திரை சாப்பிட்டு நான் தூங்கினா இயல்பான தூக்கம் எனக்கு கிடைக்காது. இப்பவே என்ன மாதிரியான சைட் எபெக்ட் வந்திருக்கோ” என்று சொல்ல
சித்ரா எச்சில் கூட்டி விழுங்கினாள்.
அவினாஷ் வெளியே வந்தவன் வித்யாவிடம்,” இனி நைட் ஷிப்ட் “என்று சொல்லிக் கொண்டிருக்க அவரோ தாம் தூமென குதிக்கத் துவங்கி விட்டார்.
….தொடரும்.
error: Content is protected !!