Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருப்பு நிலா Episode-4

அத்தியாயம் 4

அகரா, நீயும் வா ஆதிரேயன் அகரனை அழைக்க, நீங்க போயிட்டு வாங்க பாஸ். ஏதாவது முக்கியமான விசயமா இருக்கும் என்று அவன் அமர, அவன் கையை பிடித்து இழுத்த ஆதிரேயன் அகரன் சொல்வதையும் கேட்காமல் அழைத்து சென்றான்.

சார் என்று சொல்ல வந்த ரசிகா அகரனை பார்த்து விட்டு ஆதியை பார்த்தாள். இப்ப பேசுங்க? என்று தனியே வந்தவுடன் ஆதி இருவரையும் முன் நிறுத்தினான்.

சார், என்ன நடந்துட்டு இருக்குன்னு தெரியாம இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க? கால் பண்ணா நீங்களும் எடுக்கல. உங்க அப்பாவும் எடுக்கல. தமிழரசன் அப்பா தனியா போயிருக்காங்க. நான் இவனை பார்த்து ரொம்ப நாள் ஆனதால் எமோஸ்னல் ஆகிட்டேன். அங்க மெல்லினாவுக்கு பிரச்சனை? “இத பாருங்க” என்று அவள் போனை ரசிகா ஆதியிடம் காட்டினாள்.



Advertisement

கண்ணை துடைத்துக் கொண்டு அகரனும் ஆதியிடம் வந்து அவனும் பார்த்தான். அதில் லீனா ரசிகாவுக்கு அனுப்பிய வீடியோ இருந்தது. பள்ளி விட்டு வெளியே வரும் போது ஆட்கள் சிலர் போதை மருந்தை மாணவ, மாணவியருக்கு விற்பதை மெல்லினாவும் அவள் நண்பர்களும் பார்த்தனர்.

ஏய், என்னடா பண்றீங்க? என்று மித்திரன் சத்தமிட, அவர்கள் இவர்களை பார்த்து, டேய்..இவனுக சத்தம் அதிகமா போடுறானுக? பிடிச்சு முடிச்சு விடுங்கடா என்று அவர்கள் விரட்டுவதை போல் இருந்தது.நேராக கிளப் ஒன்றினுள் மறைந்து கொண்டனர்.

தமிழரசன் தனியாக செல்லவில்லை. போலீஸூடன் சென்றார்.

Advertisement

இத முன்னாடியே சொல்ல மாட்டாயா? ஆதி சத்தமிட, “சார் முதல்ல வாங்க பார்க்கலாம்” என்று அவர்கள் அவ்விடத்திற்கு விரைந்தனர்.

Advertisement

இவர்கள் செல்லும் போது அங்கே போலீஸ் இருந்தனர். போலீஸ் ஒருவர் ஆதியை பார்த்து அவனிடம் வந்து, சார் உங்க தங்கை என்று அவர் பதறினார். ரிப்போர்ட்டர்ஸூம் அங்கே வந்தனர்.

அவன் வேகமாக உள்ளே செல்ல, தமிழரசனை கட்டிக் கொண்டு மெல்லினா அழுது கொண்டிருந்தாள்.

ஏய், சப்ப மூக்கி ஆதி அழைக்க, திரும்பிய மெல்லினா இதழ்களின் ஓரத்தில் இரத்தம் இருந்தது. அவன் கண்ணீருடன் தங்கையை பார்க்க, “அண்ணா” என்று அழுது கொண்டே ஆதியை அணைத்துக் கொண்டாள்.

Advertisement

உனக்கு ஒன்றுமில்லையே? அவன் கேட்க, இல்லண்ணா. ஆனால் ஆகாஷூம் லீனாவும் என்று மேலும் அழுதாள். அவளை விலக்கி அவன் தமிழரசனை பார்த்தான்.

ரசி என்று மெல்லினா ரசிகாவை அணைத்து அழுதாள்.

தமிழரசன் உள்ளே காட்டினார். உள்ளே லீனாவை காப்பாற்ற சென்ற ஆகாஷை கொன்றிருந்தார்கள். லீனாவின் கற்பும் பறி போயிருந்தது. லீனா அம்மா, அப்பா அவளை நகர்ந்த அவள் நகராமல் ஆகாஷின் சடலத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மித்திரனையும் விசாகாவையும் அவள் வீட்டினர் இழுத்து சென்று விட்டனர்.

மாமா, கொலை செய்தவனை பிடிச்சுட்டாங்களா? என்று ஆதி கேட்க, இல்லப்பா. நல்ல வேலை நம்ம பொண்ணு அவனுக கண்ணுல சிக்காம மறைஞ்சிருந்திருக்கா என்று அவர் கண்ணீருடன் சொன்னார்.

லீனாவிற்கு அண்ணன், தங்கை யாருமில்லை. அவளுக்கு எல்லாமே நண்பர்கள் தான். லீனாவும் ஆகாஷூம் காதலித்து வந்தனர். அவளை காப்பாற்ற தன் உயிரையும் கொடுத்துட்டான்.

ரசி, நீ அவளிடம் பேசேன் என்று மெல்லினா அழுது கொண்டே சொல்ல, வா..பார்க்கலாம் என்று அவர்கள் செல்ல, ஒரு ரிப்போர்ட்டர் உள்ளே வந்து லீனாவை புகைப்படம் எடுத்தான். ஆதி அவனை அடிக்க வந்தான்.

“வேணாம்டி” என்று மெல்லினா சத்தம் கேட்டு எல்லாரும் அவளை பார்த்தனர். லீனா கத்தியை கையில் வைத்திருக்க, அவள் அம்மா, அப்பா அவள் கையை பிடித்து தடுத்துக் கொண்டிருந்தனர்.

ஏய், வேண்டாம் என்று ரசிகா அவளிடம் செல்லும் போது, அவள் தன் அம்மா, அப்பாவை தள்ளி விட்டு, என்னை மன்னிச்சிருங்க. என்னால இனி கேவலமான வாழ்க்கை வாழ முடியாது என்று கத்தியை கழுத்தில் இறக்க, அவள் கையை பிடித்து ரசிகா இழுத்தாள். லீனா கையிலிருந்த கத்தி கீழே விழுந்தது.

உங்கள மாதிரி எல்லாத்தையும் தாங்கிட்டு என்னால வாழ முடியாது என்ற லீனா ரசிகாவை பார்த்து, உங்களை பற்றிய அனைத்தும் தெரியும். மெல்லி நீ இவங்கள பத்தி சொன்னது பாதி தான் என்ற லீனா அவர்கள் இருந்த அறையிலிருந்து கீழே குதித்து உயிரை விட்டாள். மெல்லினா கதறி அழுதாள். அவள் அம்மா மயங்கினார். அவர்களுக்கு தேவையான உதவியும் செய்தாள் ரசிகா.

ரசி, ஆகாஷ், லீனா..என ரசிகாவை அணைத்து கதறி அழுதாள் மெல்லினா. லீனா சொன்னதை கேட்டு தமிழரசனும் ஆதியும் ரசிகாவை பார்த்தனர். பின் அகரனை பார்க்க, அவன் இங்கே இல்லை.

“மாமா வாங்க” என்று அவனை தேடி அவரையும் அழைத்துக் கொண்டு சென்றான். அகரன் வெளியே தனியாக அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தான்.

சொல்லுடா..என்று அகரனை பிடித்து இழுத்து ஆதி கத்தினான். மாப்பிள்ள இவனை எதுக்கு அடிக்கிறீங்க?

“இவனுக்கும் அவளுக்கும் ஏதோ இருக்கு” என்று ஆதி கத்தினான். அவனை பார்த்த அகரன், பாஸ் காலைப்புன்னகை ருச்சு வால தானா? அவன் கேட்க, ஆதி கோபமாக அவனை பார்த்தான்.

ருச்சுவா? தமிழரசன் கேட்க, அவ வர்றா? நான் சொல்றேன் சார். ஆனால் இப்ப வேண்டாம் என்றான் அகரன்.

சார், மெல்லினா வர மாட்டேங்கிறா? அந்த பையனையும் பொண்ணையும் பார்த்துக் கொண்டே அந்த அறைக்குள்ளே நிற்கிறாள். இது சரியில்லை. நீங்க தான் கூட்டிட்டு வரணும் என்று அகரன் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்தாள் கண்ணீருடன் ரசிகா. அவளை பார்த்து விட்டு மெல்லினாவை ஆதி அழைத்து வந்தான். ரசிகா அகரனை அடித்துக் கொண்டிருந்தாள். தமிழரசன் உறைந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

நடந்ததை ரசிகா அகரனிடம் சொல்ல, முதலில் ரசிகா கணவன் மீது கோபப்பட்டவன் சட்டென “எனக்கு ஒரு வாய்ப்பு தா அம்மு” என்று சொல்லவும் தான் ரசிகா அவனை அடித்துக் கொண்டிருந்தாள்.

ஏய், என்ன பண்றீங்க? ஆதி சத்தமிட, மெல்லினாவும் அழுது கொண்டே இருவரையும் பார்த்தாள்.

தம்பி, வாங்க உங்க இடத்துல உங்களை விட்டுறோம் தமிழரசன் சொல்ல, இல்ல சார் என்று அகரன் சொல்ல, அவன் கொடுத்த வுல்லன் ஆடையை தூக்கி அவன் மீது போட்டு விட்டு, இனி என்னிடம் பேசாத என்று கோபமாக ரசிகா சொன்னாள்.

ஓ.கே நாம இனி பார்த்துக்க வேண்டாம். ஆனால் அவன் யாருன்னு எனக்கு தெரியணும். ஒரு புகைப்படம் கூடவா இல்லை அகரன் கத்தினான்.

இல்லை. எனக்கு யாருமே வேண்டாம். நான் இங்கே வந்தது பருவை தேடி தான். அவள் முகவரியை தொலைத்து தான் சார் வீட்ல இப்ப இருக்கேன்.

சார் வீட்ல இருக்கியா?

ஆமா, அவர் வீட்ல தான் அவரோட பசங்கல்ல பார்த்துக்க இருக்கேன் என்றாள்.

உனக்கு என்ன மரக்கழன்ருச்சா? நீ படிச்சிருக்க? அனுபவம் இருக்கு. வேற வேலையா இல்லை அகரன் சத்தமிட, தமிழரசனும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ரசிம்மா, நீங்க படிச்சிருக்கீங்களா? தமிழரசன் கேட்க, மேடம் காலேஜ் பிரபசர். மூன்று வருட அனுபவம் இருக்கு என்று அகரன் கோபமாக கூற, நீ இதெல்லாம் சொல்லவேயில்லை ஆதிரேயன் கேட்க, எனக்கு பாதுகாப்பான இடம் வேண்டும்ன்னு தான் சார் வீட்ல இருக்கேன். அது மட்டுமல்ல நான் வெளியே இருந்தால் பல பிரச்சனை வரும். ‘

அகரா, எனக்கு மூன்று வருட அனுபவத்தை விட, பதினெட்டு வருட அனுபவமுள்ள வேலைய தான் பார்க்கிறேன். ரொம்ப சந்தோசமா இருக்கேன். தயவு செய்து உன் அண்ணாவிடமோ இல்லை என் அண்ணாவிடமோ நான் இங்கே தான் இருக்கிறேன்னு சொல்லாத. சொன்னால் என்ன நடக்கும்ன்னு உனக்கே தெரியும் என்றாள் அவள்.

நான் இங்கே வந்து நான்கு வருடம் தான் ஆகுது. என்னிடமும் பருவதி, திரிவேஷூடமும் ஒரு வார்த்தை கூட கல்யாணத்தை பற்றி சொல்ல தோன்றவில்லையா? அவன் சத்தம் போட, வேண்டாம் அகரா எல்லார் முன்னும் நான் பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன். நீ பேச வச்சிறாத என்று கண்ணீருடன் காரில் ஏறினாள். மற்ற மூவரும் புரியாமல் இருவரையும் பார்த்தனர்.

“நேரமாகுது. வா உன்னை உன் இடத்தில் இறக்கி விட்டு போகிறோம்” என்றான் ஆதிரேயன்.

“தேவையில்லை பாஸ். நானே பார்த்துப்பேன்” என்று அவள் மீண்டும் அகரனிடம் கொடுத்த வுல்லனை தூக்கி அவள் முன்னே எறிந்து விட்டு கோபமாக சென்றான். அகரா..நில்லு என்று ஆதி அழைக்க, தமிழரசன் ரசிகாவை கண்ணை காட்டினார். அவள் அழுது கொண்டிருந்தாள். எல்லாரும் வீட்டிற்கு சென்றனர்.

வீட்டிற்கு வந்தவுடன் வேகமாக ரசிகா ஒரு பக்கமும் மெல்லினா ஒரு பக்கமும் அழுது கொண்டே அவர்கள் அறைக்கு சென்றனர்.

“ரசி பதில் சொல்லீட்டு போ” என்று ஆதிரேயன் அவளிடம் உரிமையாக கத்தினான். வீட்டினர் அனைவரும் அவனை பார்த்தனர்.

ஆதி, பாப்பாவுக்கு என்ன? பிரபாகரன் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார். தமிழரசன் நடந்ததை தன் நண்பனிடம் கூறினார்.

ஆதிக்கு அழைப்பு வர போனை எடுத்தான். போலீஸ் மெல்லினாவிடம் விசாரிக்கணும் என்று சொன்னார்கள். “வாரோம் சார்” என்று அவன் போனை வைத்து விட்டு, ரசிகா அறையை பார்த்துக் கொண்டே மெல்லினாவை அழைத்தான். அவள் கதவை திறக்க, அவளிடம் விசயத்தை சொன்னான் ஆதிரேயன்.

அப்பொழுது லிதுவும் நிதுவும், ரசி..ரசி..என ரசிகாவை அழைத்துக் கொண்டிருந்தனர். மெல்லினா ஓர் அடி எடுத்து வைக்க, நில்லும்மா. நீ ஆதியோட போயிட்டு வா. அந்த பொண்ணு கண்டிப்பாக வெளியே வருவாள் என்றார் தமிழரசன்.

ஆதி மெல்லினாவை அழைத்து செல்ல, போலீசார் மெல்லினாவை ஆதி முன் வைத்து விசாரித்தனர். அவள் கொன்றவனை மறைந்திருந்து பார்த்திருக்கிறாள். அவள் அதை சொல்ல, அவனை பற்றிய அடையாளத்தை மெல்லினா சொல்ல குறித்துக் கொண்டனர். அவள் தன் நண்பர்களை தேடினாள்.

ஆதி அதை புரிந்து கொண்டு, என் தங்கையின் மற்ற நண்பர்களை காணோம் என்று கேட்டான்.

அதை ஏன் சார் கேக்குறீங்க? மித்திரன் என்ற பையன் வீட்டில் அவனை வீட்டை விட்டே துரத்திட்டாங்களாம். அவன் எங்க இருக்கான்னே தெரியல. அந்த பொண்ணு வீட்ல அவளை பார்க்க விடாமல் வீட்டுக்குள்ளே அடைச்சு வச்சிட்டாங்க. பாவம் அந்த பசங்க..எங்க ஆள் ஒருவர் அந்த பொண்ணிடம் விசாரித்த போது நடந்ததே தெரியாது. நான் பக்கத்து அறையில் தான் இருந்தேன்னு சொல்றா? அந்த பொண்ணு பொய் சொல்வது போல் இருக்கு என்றார்.

என்ன சார் சொல்றீங்க? என்று ஆதியின் போனை வாங்கி, நம்பர் தெரியலையே? என்று கண்ணீருடன் மெல்லினா அமர்ந்தாள்.

நீ கவலைப்படாதம்மா. நாம அவளை பார்க்க போகலாமா? ஆதிரேயன் கேட்க, இல்லண்ணா அவளோட குடும்பம் தான் அவளை சொல்ல விடாமல் தடுக்குறாங்க. ஆனால் அண்ணா மித்திரனை மட்டும் கண்டுபிடியேன்? அவனுக்கு ஏதும் ஆகி விடாமல்.

இப்பொழுது நம்மை இவர்கள் அழைத்தது போல், போதை மருந்து கொடுத்து பொண்ணுங்கல்ல விற்கும் ஆட்கள் கண்டிப்பாக எங்களை தேடுவாங்க. அண்ணா சீக்கிரம் அவனை கண்டுபிடிக்கணும். இல்லை அவனையும் கொன்று விடுவர் என்று மெல்லினா அழுதாள். அவள் தோளில் கையை வைத்த ஆதிரேயன், எனக்கு தெரிந்தவனை வைத்து ரசிகசியமாக தேடச் சொல்கிறேன். மித்திரன் கண்டிப்பாக நல்லா இருப்பான் என்று இருவரும் அவர்களுக்கு கேட்காதவாறு பேசினர்.

சார், என்ன பேசுறீங்க? வேறெதுவும் விசயமா? போலீஸ் ஒருவர் கேட்க, இன்னும் எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு திசை திருப்பி மெல்லினாவை வீட்டிற்கு அழைத்து வந்தான் ஆதிரேயன்.

ரசிகா லிது நிதுவை சாப்பிட வைத்து விட்டு கவலையுடன் அறைக்கு செல்வதை வீட்டிற்கு வந்ததும் பார்த்துக் கொண்டே நின்றான் ஆதிரேயன்.

நாளைக்கு எல்லாரும் என்னோட பேக்டரிக்கு வாங்க. நாம பேசணும் என்று ஆதிரேயன் ரசிகா அறையை பார்த்துக் கொண்டே சொன்னான்.

ம்ம்..ஓ.கே தான். ஆனால் மாப்பிள்ள அந்த பையன் அகரனுக்கு நம்ம ரசியை பிடித்திருந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அப்படி கோபம் வருது என்று தமிழரசன் வினவ, அவரை முறைத்து விட்டு அறைக்கு சென்றான் ஆதிரேயன்.

எப்பொழுதும் போல் பாப்பாக்களுக்கு சாப்பாட்டை ரசிகா கொடுத்து கொண்டிருக்க, பிரபாகரனும் ஆதிரேயனும் சாப்பிட அமர்ந்தனர். சீதாம்மா சமையலறையிலே இருக்க ரசிகா அவரை எட்டி பார்த்தாள். அவர் கீழே அமர்ந்திருந்தார்.

அம்மா, என்னாயிற்று? பதறி அவரிடம் வந்தாள். அவள் பின் மற்றவர்கள் வந்தனர்.

“தலை சுற்றுவது போல் இருக்கும்மா” என்று சீதாம்மா சொல்ல, தண்ணீரை எடுத்து கொடுத்து விட்டு அவர் நிதானமாகவும் திடீர்ன்னு எதுக்கும்மா இப்படி இருக்கு? ரசிகா கேட்டாள்.

“இருங்க மாமாவை அழைக்கிறேன்” ஆதி சொல்ல, வேணாம்ப்பா என்று சீதாம்மா தயங்க, சார் கொஞ்சம் வெளிய இருங்க என்று ரசிகா சொல்ல, இருவரும் வெளியே சென்றனர்.

என்னாச்சும்மா?

“முதல்ல மாதிரி வேலை பார்க்க முடியல்லம்மா. வயசாகுதுல்ல” என்றார்.

அம்மா சுத்தம் செய்யும் வேலையை மத்தவங்க பார்த்துப்பாங்கல்ல. இல்லம்மா வீட்டுப் பொருட்களை தொடுவது பெரியய்யாவுக்கு பிடிக்காது. அதனால் நான் எப்போதும் அருகே இருக்கணும்ன்னு சொல்லி இருக்கார். தனியே எப்படி வேலை செய்பவர்களை நம்பி எல்லார் அறைக்குள்ளும் விட முடியும்?

சரிம்மா, சாரிடம் சொல்லலாமே?

சொன்னால் அவருக்கு சிரமாகுமே? அவரால் எனக்கு இப்படி ஆனதோன்னு நினைப்பார்.

நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நீங்க மத்தவங்கல்ல கவனிச்சுக்கோங்க. நான் சமையல் வேலை அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்றாள் ரசிகா

தனியாக எப்படிம்மா சமாளிப்ப? அவர் கேட்க, இதெல்லாம் சாதாரணம். நான் பார்த்துக்கிறேன்ம்மா. வீட்டிற்கு விருந்தாளி யாராவது வந்தால் எனக்கு உதவி செய்யுங்க என்றாள்.

ஆனால் அய்யா கேட்பாரேம்மா?

நான் சொல்றேன்ம்மா. அவர் தப்பா எடுத்துக்க மாட்டார்.

வேண்டாம்மா. நான் பார்த்துக்கிறேன்.

அம்மா, எனக்கு பழக்கம் இருக்கு. நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க ஓய்வெடுங்க. இன்று நான் பார்த்துக்கிறேன் என்று அவரை ஓர் பெண்மணியுடன் அனுப்பினாள்.

பின் பிரபாகரன் ஆதிரேயனிடம் வந்து, எப்படியும் பாப்பாக்களுக்கு உணவு நான் தானே தயார் செய்கிறேன். அப்படியே எல்லாருக்கும் நானே சேர்த்து செய்து விடவா? என்று பிரபாகரனை பார்த்தாள்.

சீதாவுக்கு ஒன்றுமில்லைல்லம்மா?

சார், அவங்க ரெஸ்ட் இல்லாம வொர்க் பண்றதால தான் மயக்கம் வந்திருக்கு. அதனால் நான் பார்த்துக்கவா? ரசிகா கேட்க, ஓ.கேம்மா. ஆனால் பசங்க..

சார், அதெல்லாம் நான் எல்லாவற்றையும் பார்த்துப்பேன் என்றாள். அவரும் ஒத்துக் கொண்டார்.

அவள் இருவருக்கும் பரிமாறினாள். ஆதிரேயன் சாப்பிட்டு எழும் போது, சார்..ஒன் மினிட் என்று சமையலறைக்குள் சென்று லெமன் ஜூஸ் எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

அவன் ஏதும் சொல்லாமல் வாங்கி குடித்து விட்டு அவள் கையிலே கண்ணாடி தம்பளரை கொடுத்து சென்றான்.அவள் பிரபாகரனுக்கும் எடுத்து வைக்க குடித்து விட்டு, பார்த்துக்கோம்மா என்று நகர்ந்தார்.

“மெல்லி, வா கிளம்பணும்” ஆதி அழைக்க, சார் இன்னும் சாப்பிடலையே? வந்துருவா. இருநாட்களுக்கு பின்னே அவள் பள்ளிக்கு செல்லட்டும் என்று அவன் மேலும் அழைக்க, அவளும் தயாராகி வெளியே வந்தாள்.

“எதற்கும் நீங்களும் கவனமா இருங்க” என்று ஆதி சொல்லி விட்டு தன் குழந்தைகளை பார்த்தான். ரசிகா அவன் பின் நின்று ஏதோ செய்ய, குழந்தைகள் கவனம் மாறியதை பார்த்து அவளை திரும்பி பார்த்தான். ரசிகா புன்னகைத்தாள்.

குழந்தைகள் ஓடி வந்து ஆதியை காலை கட்டிக் கொள்ள, அவன் அவர்களை பார்த்து மண்டியிட்டு அமர்ந்தான். லிதுவும் நிதுவும் அவன் மீது பாய்ந்து அணைத்துக் கொண்டு இருவரும் ஆதியின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டே ரசிகாவை பார்த்தனர். அவர்களிடம் கட்டை விரலை உயர்த்தி காட்டிய ரசிகா அவர்களுக்கு பறக்கும் முத்தத்தை பரிசளிக்க, ஆதியும் சரியாக திரும்பினான். அவள் அவனுக்கே முத்தம் கொடுப்பதை போல உணர்ந்து அப்படியே உறைந்து இருந்தான்.

மெல்லினாவும் பிரபாகரனும் அவன் தோளில் கை வைக்க, அவன் அவர்களை பார்த்துக் கொண்டே எழுந்தான். அவன் மனநிலை மொத்தமாக மாற ஆரம்பித்தது. ரசிகா அவனை காதலுடன் பார்க்கவில்லை என்று தெரிந்தாலும் அவள் செயலில், குணத்தில் அவன் மனம் அவள் பக்கமும் மொத்தமாக சரிய ஆரம்பித்தது. முழுதாக அவன் அதை காதல் என உணரவில்லை. ஆனால் அவனை சுற்றியுள்ள அனைவருக்கும் நன்றாக தெரிந்தது ஆதிரேயன் காதலில் விழுந்து விட்டான் என்று.

ஆதி, தமிழ் நேராக வந்துடுறேன்னு சொல்லீட்டான் என்றார் பிரபாகரன். சரிப்பா என்று அவன் ரசிகாவை பார்த்துக் கொண்டே வெளியே வந்து காரை எடுத்தான். அனைவரும் கிளம்பினார்கள்.

ஆதியின் பேக்டரியை அடைந்தனர். இவர்களுக்கு முன்னதாகவே தமிழரசன் வந்திருந்தார். எல்லாரும் அகரனை தேட, அவன் அவனோட கேபினில் தூங்கிக் கொண்டிருந்தான்.

டேய், என்ன பண்ற? ஆதி சத்தமிட, சட்டென எழுந்து அமர்ந்தான் அகரன்.

“சொல்லுங்க பாஸ்” என்று எழுந்து நின்றான். அவன் அறை பொருட்கள் எல்லாம் களைந்து இருந்தது.

அண்ணா, இங்க பூனை ஏதும் வந்திருக்குமோ? என்று மெல்லினா கேட்க, அகரன் அமைதியாக இருந்தான்.

ஆமா மெல்லிம்மா, அது கொஞ்சம் பெரிய சைஸ்ன்னு நினைக்கிறேன்? என்னடா சரி தான? என்று தமிழரசன் செல்லமாக அகரன் முதுகில் அடியை போட்டார்.

இரவு தூங்கலையா? ஆதி அகரனை முறைத்து கேட்டுக் கொண்டே அவனுடைய பொருட்களை பார்த்தான். அகரன் அறைக்கு ஒருமுறை கூட ஆதி செல்லவில்லை. அதனால் அவனுக்கு ஏதும் தெரியவில்லை.

ரசிகா, அகரன், திரிவேஷ், பருவதி சேர்ந்து புன்னகையுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்திருந்தான். மூவரும் விதவிதமாக நிற்க, ரசிகா மட்டும் சாதாரணமாக முகத்தில் சிறு புன்னகையுடன் நின்றிருந்தாள். ஆதி அதை எடுக்க வந்தான். அவன் எடுக்கும் முன் அகரன் அதை எடுத்து விட்டு, இது என்னோட பர்சனல் பொருட்கள். “என்னுடையதை யாரும் எடுத்தால் எனக்கு பிடிக்காது” என்று அகரன் ஆதியை முறைத்தான். அவன் கூறியது ரசிகாவையும் என்று தமிழரசனுக்கு நன்றாக புரிந்தது.

இதை எடுப்பதால் என்னடா? ஆதி கேட்க, நான் தான் சொல்றேன்ல்ல பாஸ். நீங்க உங்கள் அறைக்கு போங்க. நான் வாரேன் என்றான் அகரன்.

செல்ல இருந்த மெல்லினா கண்ணில் மற்றொரு புகைப்படம் கண்ணில் பட்டது. அண்ணா, இதை பாரேன் என்று கீழே கிடந்த புகைப்படத்தை எடுத்தாள். அதில் ரசிகாவும், அகரனும் மட்டும் இருந்தனர். அவர்கள் பின்னிருந்த கல்லூரி பெயரை பார்த்த ஆதி, அகரா நீங்க நான் படித்த காலேஜ்ல்ல தான் படிச்சீங்களா? கேட்டான்.

“பாஸ், உங்க அறைக்கு போங்க” என்று அவன் கையிலிருந்த புகைப்படத்தை பறித்து விட்டு அவர்களை அனுப்பி விட்டு கண்ணீருடன் அகரன் புகைப்படத்திலிருந்த ரசிகாவை பார்த்தான். ஆதிரேயன் யோசனையுடன் அவனறைக்குள் சென்றாள்.

மாப்பிள்ள, இவனோட விவரத்தை பார்க்காமலா நீங்க இவனை பர்சனல் செக்கரட்டரியா எடுத்தீங்க?

மாமா, இவன் விவரத்தை நான் பார்க்கலை. திறமையை மட்டும் பார்த்து உடனே எடுத்துட்டேன். இவனும் ரசிகாவும் நான் படித்த கல்லூரியிலா படிச்சிருக்காங்க? அவளுக்கும் என்னை தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறாளோ? ஆதி கேட்டுக் கொண்டிருக்க, “அவளுக்கு உங்களை தெரியாது பாஸ்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் அகரன்.

தெரியாதா? ஆனால் நான்..

ம்ம்..நீங்க படித்த அதே பள்ளியில் தான் படித்தோம். நீங்கள் படித்த அதே ரெசிடன்சி காலேஜ்ல்ல தான் படித்தோம் என்ற அகரன், பாஸ் எனக்கு உங்களை நன்றாக தெரியும். நீங்க எங்களோட சீனியர். நாங்கள் முதல் வருடம் வந்த போது தான் நீங்கள் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருந்தீர்கள்.

உங்களுக்கு நினைவிருக்கா? ஒரு பொண்ணை கேலி செய்து சுவற்றில் படம் வரைந்து உங்கள் தம்பி கிண்டல் செய்தான் என அவனை அனைவர் முன்னும் யோசிக்காமல் அடித்தீர்களே? அந்த பொண்ணு ரசிகா தான்.

அவன் எங்களுக்கு ஜூனியர் தான். ஆனால் பாருங்களேன் அவனுக்கு..என்று நிறுத்தி விட்டு, அவனை விடுவோம்.

அன்று நடந்த சம்பவத்தால் ரசிகா ஒரு வாரமாக கல்லூரிக்கு வரவேயில்லை. ஆனால் அவளுக்கு படிப்பை தவிர ஏதுமில்லை என்று கண்கலங்கிய அகரன், அவனாகவே அமர்ந்தான்.

எல்லாரும் அவனை பார்க்க, கண்டிப்பாக உங்களிடமும் ரசிகா ஏதாவது கதை சொல்லி இருப்பாளே? அவள் யாரிடமும் முழுதாக பிரச்சனையை சொல்ல மாட்டாள். நாமாக தான் கண்டு பிடிக்கணும்.

ஆமா, லீனா கூட ஏதோ சொல்ல வந்தாள் என்ற மெல்லினா, அப்ப ரசி எங்களிடம் பொய் சொன்னாலா? என்று கேட்டாள்.

எனக்கு அவ என்ன சொன்னான்னு தெரியாது. ஆனால் யாரையும் விட்டுக் கொடுத்து பேச மாட்டாள்.

பணத்துக்காக அவ அண்ணி அவளை விற்றதாக சொன்னாள்.

பரவாயில்லை. இதை கூட சொல்லி இருக்காலா?

அவங்க அம்மா, அப்பா இறந்த போது அவளுக்கு எட்டு வயது தான் இருக்கும். அவளோட பெரிய அண்ணாவுக்கு திருமணம் முடிவாகி இருந்தது. அவர் பெயர் இமயா..இமயவரம்பன். அடுத்தது சின்ன அண்ணா கிரி..கிரிதேவ். அடுத்தது அக்கா அருந்ததி. அவங்க கணவன் ஷியாம்.

மூத்த அண்ணா மகன் விபு..விபுதன் என புன்னகைத்த அகரன். விபுவென்றால் ரசிகாவிற்கு உயிர். அதை விட சின்ன அண்ணா மகன் ஆரவ், மகள் யோகிதா. எல்லாரும் ருச்சியோட வளர்ப்பு தான். அவளுக்கு அண்ணா, அக்காவை விட, எல்லாமே என்றால் இந்த மூணு பசங்க தான்.

அவளோட பெற்றோர் இறப்பால் அருந்ததி அக்கா இந்த பொண்ணு ராசியில்லைன்னு திருமணம் முடிவான பொண்ணை தவிர்த்து, திருமணத்தை நிறுத்த வீட்டில் பேசினார்கள்.

அம்மா, அப்பா பார்த்த அண்ணி தான் வேணும்ன்னு ருச்சி தான் அடம்பிடித்தாள். திருமணமும் நன்றாக நடந்தேறியது. பத்து நாள் கூட இல்லை. அவளோட அண்ணி அவங்க வேலைய காட்ட ஆரம்பிச்சாங்க. அருந்ததி அக்காவை வேலை ஏவினார்கள். அக்கா கொஞ்சமும் அசையவில்லை.

சின்னப்பொண்ணுன்னு கூட பார்க்காமல் ருச்சியை வேலை ஏவ ஆரம்பித்தார்கள். என் அண்ணாவும் இமயா அண்ணாவும் நல்ல நண்பர்கள். அதனால் அந்த வயதிலே எனக்கு அவளை தெரியும். சமையல் வேலை தவிர எல்லாமே செய்வாள். தண்ணீர் எடுத்து வருவது, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது என எல்லாமே செய்வாள்.

அவர்களுக்கு விபுதன் பிறக்கவும் அவனையும் அவள் கவனிக்க ஆரம்பித்தாள். அருந்ததி அக்காவும் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு சார்பாக நின்றால் நம்மையும் உள்ளே இழுத்து விடுவாள் என்று அவர்கள் விலகினார்கள். அவர்களுக்கும் நல்ல சம்பந்தம் வந்து ஷியாம் மாமாவை கல்யாணம் செய்து கொண்டார்கள். விபுவும் வளர ஆரம்பித்தான்.

ருச்சிக்கு பத்து வயதிருக்கும் என சொல்லிக் கொண்டே கண்ணீருடன்..அவளை வெந்நீர் போட்டு எடுத்து வரச் சொன்னாங்க. அவளும் மெதுவாக எடுத்து வந்தாள். வேண்டுமென்றே அவங்க அவள் காலை தட்டி விட்டாங்க. வெந்நீர் அவள் காலில் மொத்தமாக கொட்டியது. தொடையிலிருந்து காயம் அதிகமாக இருந்தது.

கிரி அண்ணா அவளை தூக்கிட்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினாங்க. அப்ப போன் இல்லையே? அப்பொழுது கூட அவளோட அண்ணி பதறவேயில்லை. அவளது அலறலில் பக்கத்து வீட்டிலிருந்த எல்லாருமே வந்தாங்க. அவங்களும் அரு அக்காவும் உதவி தான் ஒரு வாரத்தில் சரியானாள். நாங்களும் அப்பொழுது பக்கத்தில் வாடகை வீட்டில் தான் வசித்தோம். அவள் அலறல் இன்னும் என்னால் மறக்கவே முடியாது என்று வாயடைக்க பேச முடியாமல் அழுது கொண்டே அமர்ந்திருந்தான். அனைவர் கண்ணிலும் கண்ணீர் தேங்கி நின்றது.

பின் மனதை சமாதானப்படுத்தி, இமயன் அண்ணாவும் அவளுக்கு சார்பாக பேசி மனைவியிடம் சண்டை போட்டார். சண்டை பெரியதாக கோபித்துக் கொண்டு, அவங்க பெத்த விபுவை கூட விட்டு போயிட்டாங்க. பள்ளிக்கு விடுப்பு எடுத்து ருச்சி தான் அவனை பார்த்துக் கொண்டாள்.

அண்ணா, நாலு நாலாகிடுச்சி..விபுவுக்காவாது அண்ணியை கூட்டிட்டு வாங்க. அண்ணி என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் என்று அவளாகவே இமயன் அண்ணாவிடம் சொல்ல, அவளை அணைத்து மன்னிப்பு கேட்டு அழுது கொண்டே அழைத்து வந்தார். இனி தான் எல்லாமே ஆரம்பமானது. அவள் படிக்கக்கூடாதுன்னு பிரச்சனை ஆரம்பிக்க, “ஏன் இப்படி செய்றீங்கன்னு?” நேராகவே அவங்களிடம் கேட்டுட்டா.

அதற்கு அவங்க அவளது நிறத்தை காரணம் காட்டி, எங்க குடும்பத்துல நீ எதுக்கு புறந்த? உன்னை பார்த்தால் எங்க குடும்பம் மாதிரி இல்லைன்னு? அந்த சின்ன வயதிலே அவள் மனதை காயப்படுத்தினார்கள். அப்பொழுதே அவன் மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட ஆரம்பித்தது. அதிலிருந்து அவர்கள் யாரிடமும் பேசவே மாட்டாள். எங்களிடமும் பேசலை. ஒரு வருடம் சென்றது.

சின்ன அண்ணாவுக்கும் திருமணம் முடிந்து, அவங்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அவளுடைய ஒரே ஆறுதல் விபு தான். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் அவனை பார்க்க ஆரம்பித்து விடுவாள். மற்ற நேரம் வீட்டில் வேலையாள் போட்டிருந்தாங்க.

விபுவும் பள்ளிக்கு வர ஆரம்பித்தான். பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். காலை எழுந்து சமையல் வேலையை முடித்து விட்டு அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு பள்ளிக்கு வருவாள். அவள் படிப்பு ஆசிரியரின் பேச்சை கவனிப்பதை வைத்து தான் பரீட்சை எழுதுவாள். பள்ளி விட்டு வந்து துணி துவைத்து இரவு வேலை முடித்து, விபுவை படிக்க வைத்து அவனை தூங்க வைத்து இரவு பன்னிரண்டாகி விடும். அவளுக்கென நேரம் ஒதுக்கியதே கிடையாது. முதலில் தன் தங்கையை நினைத்து கவலைப்பட்ட அண்ணங்களும் அக்காவும் அவர்கள் குடும்பம், பிள்ளைகள் என கவனிப்பதில் அவளை பெரியதாக கண்டு கொள்ளவில்லை. பள்ளியில் கிடைக்கும் இடைவேளை நேரத்திலும் மதிய உணவின் போதும் தான் தூங்குவாள். அவளுக்கும் பழகி விட்டது. ஆனால் அவளது மனதில் இருந்த காயமும் வலிகளும் மறையவேயில்லை.

பின் ஆரவ், யோகிதா வெகு வருடத்திற்கு பின் தான் பிறந்தனர். அவர்களையும் விபுவை போலவே கவனித்துக் கொண்டாள். அவனும் அவளுக்கு உதவுவான்.

அவளுடைய அக்காவுக்கோ குழந்தை பேறு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. பின் கல்லூரிக்கு சேர்ந்தோம். இரண்டாம் வருடம் தான் உங்க தம்பி பிரச்சனையால ஒரு வாரம் கழித்து, படிப்பிற்காக வந்தாள். எல்லாரும் அவளை கேலி செய்தார்கள். ரொம்ப அழுதாள். அதனாலே அவள் எங்க போனாலும் நாங்க மூவருமே அவள் பின்னாடியே போவோம்.

திரிவேஷ்..அவன் தான் ருச்சியை அழாமல் பார்த்துப்பான். சிரிக்க வைப்பான். அவள் சிரித்தாலும் எங்களிடம் பேசினாலும் அவளுடைய தாழ்வு மனப்பான்மை அவளை விட்டு போகவேயில்லை. அவள் வீட்டில் அவளை ஒதுக்கியது போல் தான் நடந்து கொள்வார்கள்.

நான் உங்களிடம் வேலைக்கு சேர்ந்த போது, அவள் அக்கா மாமியார் பிரச்சனை தாங்க முடியாமல் வீட்டிற்கு வந்து அண்ணிகள் போலவே வேலை ஏவுவது என எல்லாமே செய்தனர்.

ஷியாம் மாமா அழைத்தும் அக்கா போக மாட்டேன்னு சொல்லீட்டாங்க. நாலு வருசமா பிறந்த வீட்ல உட்கார்ந்து ருச்சிக்கு பாரமா தான் இருக்காங்க. இவர்கள் செயலால் மாமா மனம் ருச்சி பக்கம் திரும்ப ஆரம்பித்தது.

அவர் வீட்டுக்கு வந்தால் அக்கா தானே செய்யணும். எல்லாவற்றையும் அவருக்கும் இவள் தான் செய்வாள். அப்புறம் அவர் மனம் மாறாமல் எப்படி இருக்கும்? செய்வதையும் செய்து விட்டு அவளை தான் தப்பா பேசுவாங்க.

மாமா நல்லவர் தான். அக்காவின் ஒதுக்கம் அவருக்காக எல்லாவற்றையும் செய்யும் ருச்சி பக்கம் திரும்பியது. நானே பார்த்து சத்தம் போட்டு தான் வந்தேன். யாரும் கண்டுக்க கூட இல்லை.

ருச்சிய அந்த வீட்ல வச்சிருந்த காரணமே பணம் தான். இவ்வளவு கஷ்டத்திலும் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றாள். நிறைய கம்பெனிக்கு அழைத்தனர். அவள் பயத்தில் கல்லூரி பிரபசராக சென்று வந்தாள். மாதம் தவறாமல் பணத்தை அவள் அண்ணியிடம் கொடுக்கணும். கொடுத்தாள். அவளுக்கென மாதம் இரண்டாயிரம் எடுத்துக் கொண்டு. பசங்க படிப்புக்கு முழுவதும் அவள் பணம் தான்.

ஆனால் விபுவும் பசங்களும் அவளை யாராவது ஏதாவது சொல்லி விட்டால் போச்சு. வீட்டை இரண்டாக்கி விடுவார்கள். அவர்கள் இல்லாத நேரம் தான் அனைத்தும் நடக்கும். விபு இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு புரியாமலா இருக்கும். ஆனால் ருச்சி கணவனை பற்றி அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் அவன் செத்தான். ஆரவ் எட்டாம் வகுப்பும், யோகி ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர்.

இதுவரை அந்த பசங்களை பிரிந்து அவள் இருந்ததேயில்லை. உங்க எல்லார் முன்னும் சாதாரணமாக தான இருக்காள். ஆனால் அப்படி இருக்க மாட்டாள்.

சரி, அப்ப அம்மு என்ன கதை? தமிழரசன் கேட்டார்.

எனக்கு அவளை சிறு வயதிலிருந்தே ரொம்பபடிக்கும். ஒரு கட்டத்தில் அது காதல் தான்னு தெரிந்தது. அவள் கஷ்டத்தில் இதை சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன். கல்லூரி சென்ற பின், அவளுக்கு செல்லமாக அம்மு என்ற பெயரில் தினமும் கடிதம் எழுதுவேன். என் காதலையும் சொல்லி இருந்தேன். ஆனால் அவளுடன் இருந்த இந்த அகரன் தான் எழுதினேன் என்று சொல்லவேயில்லை. அப்படியே விட்டுட்டேன்.

நேற்று கோபமாக இருந்தாலும் என்னோட பழைய வீடு. அதான் ருச்சியோட வீட்டருகே இருப்பவர்களிடம் அவளை பற்றி தெரியாதது போல் விசாரித்தேன். விரக்தி புன்னகையுடன், அவள் எவனுடனோ ஓடிப் போயிட்டான்னு சொல்லி வச்சிருக்காங்க. ஆனால் அவள் இனியாவது நல்லா இருக்கட்டும்ன்னு தான் சொன்னாங்க. இருந்தாலும் இது சரியா?

அவளை பணத்துக்காக என்ன செஞ்சுட்டாங்க? அவனுடனான திருமணம் அதிகாலை நான்கு மணிக்கு யாரும் அறியாமல் வெட்ட வெளியில் இருக்கும் முருகன் சன்னதில் அவர்கள் மட்டும் விவரமாக அழைத்து சென்று முடிச்சி வச்சிருக்காங்க. எதுவுமே யாருக்கும் தெரியாது.

இதுக்கும் மேல என்ன சொல்ல? அந்த குடும்பத்தை அடக்க சரியான ஆள் விபு தான்னு நினைச்சேன். அவனுக்கு தெரியாமலா நடந்திருக்க போகுது? அகரன் கேட்க,

ரசிம்மாவே ஏமாந்துருக்கா? பள்ளியில் படிக்கும் பையனை சொல்ற? தமிழரசன் கேட்டார். அவன் ருச்சி மாதிரி வெகுளி கிடையாது. செம்ம சார்ப். நீங்க சொன்னது போல் அவனையும் ஏமாற்ற வாய்ப்பிருக்கு. மொத்த குடும்பமும் கேடிகள் தான். இவள் தான் அப்பாவியாய் அவர்கள் வலையில் சிக்கி இருக்காள். உண்மை தெரிந்தால் அங்கே விபு இருப்பது சந்தேகம் தான்.

பாஸ், இன்று இன்வெஸ்டர் மீட்டிங் இருக்கு. நான் தயாராகி வாரேன் என்று அகரன் வெளியே சென்றான். ஆதியும் அவன் குடும்பமும் ரசிகாவை கிரேட்ஃபுல்லாக நினைத்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!