Skip to content
Post Views: 3,079
Karpanai 21
தன்னால் தன் சுயத்தைவிட்டு கணவனுடன் ஒன்றாக கலக்க முடியுமா என்ற சந்தேகம் திருமகளை வெகுவாகத் தாக்கியது. முடிந்தவரை அவனிடமிருந்து தொலைவில் நின்றுகொண்டாள். கட்டிலில் அவளுடன் கூட முடியாத எரிச்சலை அவன் வீட்டில் அவளை பார்க்கும்பொழுதெல்லாம் வெளிப்படுத்தினான். அவனது வார்த்தைகள் அவளை அழ வைத்தது .பகல் நேரத்தில் தனது அறைக்குள்ளேயே முடங்கிக்கொள்பவள்,சிலநேரம் தோட்டத்தில் சரண் புகுந்தாள் .
Advertisement
அதிக மன அழுத்தம் காரணமாக தாமதமாக வந்த அவளது தோழி,இந்தமுறை அவளை மிகவும் படுத்தி எடுத்துவிட்டாள் . வயிற்றுவலி தாங்க முடியாமல் கட்டிலில் புரண்டவளுக்கு வாந்தியும் சேர்ந்து படுத்தியது. தலைசுற்றல் வேறு .எழவே முடியாமல், டைனிங் டேபிளின் மீது இருந்த பிரட்டை சாப்பிட்டுவிட்டு மீண்டும் தனது அறைக்கு சென்றுவிடுவாள்.
அவள் படும் பாட்டை பார்த்துக்கொண்டிருந்த நிவாஸுக்கு அவள் மீது ஏளனம் கலந்த கோவம்தான் வந்து தொலைத்தது. சரியான நாடக கம்பனி என்று மனதில் வறுத்தெடுத்தான். அவ்வப்பொழுது தோட்டத்திலிருந்து ஆப்பிள் மற்றும் அரேஞ்சு பழங்களை பறித்துவந்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிடுவான்.
Advertisement
Advertisement
அவனது இந்த பாராமுகம் உடல் உபாதையால் இன்னும் பலமடங்கு அதிகமாக தெரிந்தது
பெண்ணவளுக்கு . சில ஆண்கள் இப்படித்தான். அவர்களுக்கு ஏனோ பெண்களின் இந்த மாதாதாந்திர நாட்கள் தொடர்பான எந்த விஷயங்களும் பிடிக்காது. வெளியே தெரியாமல் அமைதியாய் கடக்க வேண்டிய தருணத்தில் ஏற்கனவே உடல் பிரச்சனையில் கஷ்டப் படும் பெண்களிடம் சண்டை பிடிப்பதும், அவர்களை அழவைப்பதுமாக பிரச்சனை செய்யும் ஆண்களும் உண்டு.
Advertisement
இதோ,நன்று படித்து நல்ல வேலையில் இருக்கும் நிவாஸின் நடத்தை மட்டும் எப்படி இருக்கிறது? திருவிடம் அனுசரணையாக நடந்து கொண்டாலே போதும். அவளே நிவாஸை நெருங்கி வந்துவிடுவாள்.அவள் மனம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.
தாம்பத்தியம் என்பது என்ன?வெறும் கட்டிலில் புரள்வதும்,தாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்பதற்கு சாட்சியாக பில்லை பெற்று பெயர் வைப்பதுமா? “நான் எப்போதும் உன்னுடனே இருப்பேன்.துன்பங்களில் உன்னை என்னுடன் அணைத்துக்கொள்வேன் .ஆறுதல் சொல்வேன்“என்பது தானே. அதுகூட இல்லையென்றால் அந்த திருமண ஒப்பந்தத்தில் அடிப்படை என்ன?
சரியான ஆகாரம் இன்மையால்,மூன்று நாட்கள் முடிந்தும் திருமகளால் சட்டென இயல்பு நிலைக்குத் திரும்பமுடியவில்லை. சோர்வு அதிகமாக இருந்தது.அந்த வரம் முழுவதும் பொறுத்துப் பார்த்த நிவாஸ்,அந்த வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே வெளியே தனியே சென்றவன் இரவு எட்டு மணிக்கு வந்தான். அவன் கண்கள் சிவப்பேறி இருந்தது. எங்கு சென்று வந்தான் என்று கேட்கும் துணிவு திருவுக்கு இல்லை.அமைதியாக அவனுக்கு தட்டை வைத்து உணவை பரிமாறினாள்.
எதுவும் அவளிடம் பேசாமல் அமைதியாக தனது அறைக்குள் சென்றவனுக்கு சென்னையில் நடந்தவைகள் கண்முன் படமாய் விரிந்தது. தான் அப்பாவாக தகுதி இல்லாதவன் என்று முடிந்த அந்த பேச்சு அவனுக்குள் இருந்த மிருகத்தை தட்டி எழுப்ப, உணவு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த திருவை வெறித்து பார்த்தான்.
முன்னைவிட இப்போது தெளிவாக இருந்தாள் .பொலிவு கூடி இருந்தது. கொஞ்சம் சதைப்பிடிப்புமாக இருந்தவளை பார்த்தவனுக்கு மனதுக்குள் கோவம் மண்டியது. பிளடி *** என்று அவளை தகாத வார்த்தைகளால் மனதுக்குள் திட்டிகொண்டவன் அவள் கைகழுவிவிட்டு வரும் நேரம் , அலேக்காக அவளை தூக்கி தனது அறைக்கு கொண்டு வந்து கட்டிலில் தொப்பென போட்டான்.
“நல்லா தின்னு தின்னு அரிசி மூட்ட மாதிரி ஆகிட்டடி. கொஞ்சமாவது விசுவாசம் வேணாம்? நீயே என்கிட்ட வந்து மாமா..என்னை எடுத்துக்கோங்க ன்னு சொல்வேன்னு பார்த்தேன். நீ**** என்று இன்னும் எவ்வளோ பேசியவனை பயத்துடன் பார்த்தது பெண்.
பெண்ணின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அந்த சப்தம் அவளுக்கு கேட்டதில் இன்னும் பயந்து போனாள் . அவனிடமிருந்து தப்பித்து செல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லை.ஆனால் ,நிதானத்தில் இருந்தாலே அவன் கட்டிலில் எப்படி நடந்துகொள்வான் என்பது அவளுக்கு தெரியும்.இப்போது அவன் நிதானமின்றி இருக்கும்பொழுது, காலையில் உயிருடன் எழுந்து கொள்வாளோ என்ற அச்சம் .
அவளது நிலைமை என்ன,உணர்வுகள் என்ன?என்றெல்லாம் யோசிக்காமல் அவள் அணிந்திருந்த ஆடையை கிழித்து தூர போட்டான் நிவாஸ். அவளால் தன்னை மறைத்துக்கொள்ள முடியவில்லை.போராடும் நிலையிலும் அவள் இல்லை. அவள் மீது அவன் படரும்பொழுது அவளது உடல் வலியைவிட மனம் ]அது கொண்ட வலி மிக அதிகம்.
அன்று நடந்தது மனங்கள் சங்கமித்த கூடல் அல்ல .ஒரு கற்பழிப்பு. வேலை முடிந்தவுடன் நிவாஸ் தூங்கிவிட தனது அறைக்குள் வந்தவள் கதறி அழுதால் . மரியாதையற்ற இந்த வாழ்க்கையை எதற்க்காக வாழ்கிறேன் என்று அழுதவளுக்கு அடுத்து என்ன என்று தெரியவில்லை. இப்போதும் ஏனோ அவனை விட்டு சென்று விடலாம் எனும் எண்ணம் அவளுக்குள் வரவில்லை.
அப்படியே வந்தாலும் அவளுக்கு துணை செய்பவர்கள் என்று யாருமே இல்லை. அவளது அனைத்து தாள்களும் நிவாசிடம்தான் இருக்கிறது.பாஸ் போர்ட் கூட அவளிடம் இல்லை. என்ன செய்ய முடியும்?
படித்த பெண்கள் என்கிறோம். விவரம் இல்லையே! அதன் விளைவுதான் இப்போது அவள் அனுபவிப்பது. கற்ற கல்விக்கு தகுந்தாற்போல் ஏதேனும் வேலையை தேடிக்கொண்டிருந்திருக்கலாம் .தனது தகுதியை வளர்த்துக்கொண்டிருந்திருக்கலாம் எதுவும் செய்யாமல் இப்போது இந்த நிலையில் நிற்கிறது பெண்.
வேலைக்கு சென்றிருந்தால் இப்போது அவனிடமிருந்து வெளியேறும் வழி கிடைத்திருக்கும்.அவளே தன்னை தடுத்துக்கொண்டாள். இப்போது இருக்கும் நிலையில் அவளுக்குத் தேவையான அடிப்படை தைரியம் கூட இல்லை.
இரவு முழுவதும் அவளால் தூங்க முடியவில்லை. தலையணையில் தலை வைத்தவளுக்கு கழுத்து,தோல்பட்டை,இடுப்பு என்று உடலின் அனைத்து பாகங்களும் வலி உயிர் போனது. அந்தரங்க பாகங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். இன்று நிவாஸ் நடந்து கொண்டது ராட்ஷசத் தனமாக இருந்தது. மெல்ல எழுந்து தனது ட்ராவில் இருந்த ஓயின்மெண்ட் எடுத்து காயம் இருந்த இடங்களில் தடவினாள் .
பெண்ணவள் கண்ணயர தொடங்கிய நேரம் மீண்டும் அவளது அறைக்கதவை திறந்துகொண்டு நிவாஸ் உள்ளே வந்தான் . உறக்கத்தில் அவளைத் தேடியவனுக்கு அவள் இல்லை என்பது ஆத்திரத்தை அதிகப் படுத்தியது.நேரே வந்தவன்,இம்முறை அவள் முகம் கூட பார்க்கவில்லை. எல்லாம் முடிந்து அவள் உயிரற்ற பரவி போல் ஆனாள் . அப்போதும் திருப்தி அடையாதவன்,இதற்கு மேலும் தூங்கவில்லை என்றால் கால் வேலைக்கு போகமுடியாது என்று உணர்ந்தவனாக தூங்க ஆரம்பித்தான்.
காலையில் எழுந்தவனுக்கு அருகில் இருக்கும் மனைவியின் நிலை கோவத்தை வரவழைத்தது. தனக்கு முன் எழுந்து காபி வார்க்காமல் இன்னும் தூங்குகிறாளே ‘என்று நினைத்தவன் தனக்கு மட்டும் காபி எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றுவிட்டான்.
பகல் ஒரு மணிக்கு மேல் மெல்ல அடியெடுத்து வைத்தவளுக்கு தரை தொட்டதுமே தலை சுற்ற ஆரம்பித்தது. சமாளிக்க முடியாமல் கட்டிலில் படுத்தவள் அப்படியே மயக்கம் கொண்டாள் . மாலை வீட்டுக்கு வந்தவனுக்கு மனைவி என்ன செய்கிறாள் என்று யோசித்தவன் அவள் அறையில் மயங்கி இருப்பதை பார்த்து கொஞ்சமாக பயம் வந்தது.
இவள் பாட்டுக்கு 911 க்கு போனே செய்துவிட்டால் என்ன பண்ண முடியும் என்று யோசித்தவன், அவளுக்காக உணவு எடுத்துக்கொண்டு வந்து,லேசாக அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான். மறுக்க முடியாமல் சாப்பிட்டவள்,அதே நிலையில் அவன் கொடுத்த மாத்திரையையும் விழுங்கி வைத்தாள் .
ஒருவாரம் அமைதியாக இருந்தவன் அவளிடம் நல்லபடியாகவே நடந்து கொண்டான். அவளை நயாகரா காண அழைத்து சென்றவன் அங்கேயே அவளிடம் மன்னிப்பு கேட்டான்.
” அம் வெரி சாரி திரு. கட்டில் விஷயத்தில் நா ரொம்ப மோசமா நடத்துகிறேன். வேறே பொண்ணா இருந்தா என்னை எப்போவோ விட்டு போய்கிட்டே இருப்பா. லக்கிலி நீ என்னோட மனைவியா இருக்கே. ப்ளீஸ் என்னை மன்னிச்சுக்கோ” என்று கண்கள் கலங்கி சொன்னவனை மன்னித்தது பெண். ஆனால் , இரண்டுமுறை நன்றாக அவளுடன் இருப்பவன், மூன்றாம் முறை மூர்கனாகி விடுவான்.
திரும்பவும் மன்னிப்பு கேட்கும் படலம். இன்னமும் மனைவி கர்ப்பம் தரிக்காமல் இருப்பது அவனுக்கு சொல்லொணா உணர்வை கொடுக்க, ‘தான் நிச்சயம் ஆண்மை குறைந்தவனா..மனைவியை என்னால் கர்ப்பம் தரிக்க வைக்க முடியாதா‘ என்ற யோசனை வர வெறுத்துப்போனான்.
இருவருமாக மருத்துவரை போய் சந்திக்க,” இரண்டு பேரும் நல்லா இருக்கீங்க. ட்ரை பண்ணுங்க, ஒர்க் ஆகும்“என்று அனுப்பி விட்டார் மருத்துவர். நாட்கள் இப்படியேதான் சென்றதே தவிர மாற்றங்கள் எதுவும் இல்லை.
இந்த நிலையில் மீண்டும் சியாடேல் அலுவலகத்தில் தனது நீண்ட கால நண்பன் நிரூபனை மீண்டும் சந்தித்தான் நிவாஸ். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். நிருபன் நிவாஸிடம். எதுவா இருந்தாலும் ஷேர் பண்ணிப்போம்.இப்போது உனக்கு திருமணம் முடிந்து விட்டது.இனிமே ஷாரிங் எல்லாம் மனைவி கூட மட்டும் தானே!எண்டு ஏதோ கூற,அன்று இருவரும் நிரூபனின் அறையில் தங்கினார்கள். இருவருக்குமான நீண்ட உறவு. இரவு முடியாமல் நீண்டது போல் அவர்களும் உறவும் கூட நீண்டது.
மனைவியிடம் கிடைக்காமல் இருக்கும் ஏதோ ஒன்று இன்று கிடைத்தது போல் உணர்ந்தான் நிவாஸ். அவனுக்குள் திருப்தி பரவுதை உணர்ந்தவனுக்கு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் பிரச்சனை தான் என்று தோன்ற அவனது சிகரெட்டை எடுத்துக்கொண்டான்.
அவனையே கவனித்துக்கொண்டிருந்த நிரூபன்,நிவாஸின் இதழ்களில் ஆழ்ந்த முத்தம் வைக்க இருவரும் மீண்டும் தங்கள் உலகுக்குள் நுழைந்து கொண்டார்கள். திருமகள் எப்படி மீள போகிறாள்..அவள் இன்னும் இழக்கப் போவது என்ன என்று தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருங்கள்.
error: Content is protected !!