Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கற்ப(னை)து சுகமானதே...

கற்ப(னை)து சுகமானதே 24

கற்பனை 24

வாசலில் நின்றுகொண்டிருந்த இருவரையும் ஒருநொடி நின்று பார்த்தவன் வீட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றான். “உன்கிட்டே வீட்டோட ஒரு கீ செட் உண்டே ஜான்வி.உள்ளே வந்திருக்கலாமே?”சாகேத்தின் கேள்வியில் தடுமாறியவள்,”இல்லே ,நா இன்னிக்கு இங்கே வர பிளான் முதல்லே இல்ல.சோ சாவியை எடுத்துட்டு வரல”என்று உளறினாள்.



Advertisement

நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன் ,”ரெண்டு பேரும்  உக்காருங்க.இப்ப வரேன்”என்றுவிட்டு தங்கள் அறைக்கு சென்று உடைமாற்றிக்கொண்டு, மூவருக்குமாக சொக்கோலேட் பானம் தயார் செய்து எடுத்துக்கொண்டு வந்தான்.

எப்போதுமே இது ஜான்வியின் பேவரிட். மூவரும் குடித்து முடிக்கும் வரை அங்கே நிசப்தம் தான். தொண்டை வறண்ட நிலையில் கையில் இருக்கும் பானம்  அமிர்தமாய் இறங்கியது. கையிலிருப்பது காலியானதும் ஜான்வியின் மனம் மீண்டும் சுருண்டது. இப்போதும் தான் செய்வது தவறென்று அவள் நினைக்கவில்லை. ஆனால்,வார்த்தைகளால் விளக்கம் சொல்லும் பொழுது ஏனோ எக்கச்சக்க தயக்கம் . இப்போதும் விநீதன் வெறும் பார்வையாளராக அமர்ந்திருந்தானே தவிர வேறு எதுவும் வாய் திறந்தான் இல்லை. சாகேத்தின் பார்வை வினீதனை முழுமையாய் அளவிட்டது.

Advertisement

Advertisement

ஒருவழியாக பெண்ணவள் ஆரம்பித்தாள்.”சாகேத், நா இவரை விரும்பறேன்.இப்போ இவர்கூடத்தான் இருக்கேன்.”—ஜான்வி.

” புரியல ஜான்வி. விரும்பறேன்ன்னு சொல்றே.அப்படின்னா ?”—சாகேத்

Advertisement

எச்சிலை கூட்டி விழுங்கியவள், “நா இனிமே இவரோட இருக்கலாம்னு நினைக்கிறேன் .சோ உங்கிட்டேந்து டிவோர்ஸ் வேணும்.ஏற்கனவே நம்ம கல்யாணம் முன்னாடி இவரோட மோர் தென் டூ எர்ஸ்  லிவ் இந்த ல இருந்தேன்.இப்போ,நம்ம லைப் எந்த பிடிப்பும் இல்லாம போகுது. நா சொல்ல வரது உனக்கு புரியும்னு நினைக்கிறேன் சாகேத்”.

அவளது கடந்த காலத்தை கேட்டவனுக்கு மனதில் ஏதோ ஒன்று இறுகியது. ” ம்ஹும்..அப்போ எதுக்கு இவரை விட்டு எங்ககிட்ட கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொன்னே?  கல்யாணத்துக்கு பேசும்பொழுது உன்னோட பாஸ்ட் பத்தி சொல்லணும்னு உனக்கு ஏன் தோணல? இது  ஆரம்பம் முதலே எனக்கு நீ செய்யுற நம்பிக்கை துரோகம்னு யோசிக்கலயா?

அண்ட், என்னை காதலிச்சதா சொன்னியே..அப்போ இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னாலே வாழ உன்னால எப்படி முடிஞ்சுது.எனக்கு நேர்மையா இருக்கணும்னு உனக்கு எப்போவுமே தோணலை .அம் ஐ ரைட்?”

சாகேத்தின் நேரடியான குற்றச்சாட்டில் அயர்ந்து போனாள் பெண்.இவற்றை விநீதன் தனது மனத்திலும் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கும் அவளது பதில் தேவையாக இருந்தது.

ஜான்வி தன்னை சுதாரித்துக்கொண்டவளாக,”நீ கூட யாரையோ காதலிக்கிற தானே சாகேத்.அவளோட காதலனுக்கு உண்மையா இருக்க நினைக்கிறவன் என்னை எதுக்கு கல்யாணம் செஞ்சுக்கிட்டே? அஃப்கோர்ஸ்    நீயும் என்கிட்டே உன்னோட காதல் பத்தியெல்லாம் ஏதும் சொல்லல தானே?  கல்யாணம் செஞ்சுக்கிட்ட சரி.அப்போ என்னோட நோர்மல் லைஃப் லீட் செஞ்சிருக்கணும். அப்போ நானும் வேறே எதுவும் யோசிச்சிருக்க மாட்டேன்.

உன்னோட வீட்டுல பிறந்த பெண்ணை அவளோட புருஷன் இப்படி தொடாம வருஷ கணக்கில் தூரமா நிக்க வச்சிருந்தா நீ என்ன செஞ்சிருப்ப சாகேத்?”

அவளுடைய கேள்வியில் இருந்த நிஜம் சுட்டது. உண்மைதான்.அவன் வீட்டுப்பெண்ணாக இருந்திருந்தால் இந்நேரம்  வேறு கல்யாணம் செய்து வைத்திருப்பான். ஆனாலும் அவனுக்கு நிறைய கேள்விகள் இருந்தது.

“ஓகே,ஒத்துக்கறேன்.என்னோட கையாலாகாத்தனத்தினால் வேறு வாழ்க்கை தேடினே. பட் , நம்ம கல்யாணம் முன்னயே  இவரோட இருந்தேன்னு ஏன் என்கிட்ட சொல்லல?  இது பெரிய விஷயம்னு உனக்கு தோணலயா ?அடலீஸ்ட் கல்யாணம் ஆன பிறகாவது சொல்லி இருக்கணும் தானே?”

அவளிடம் பதில் இல்லை. ஆனாலும் அவளால் இதற்க்கு மேல் முடியாது என்று தெரியுமே!   ‘ உன்னோட கேள்விக்கான என்னோட பதில்,என்னோட ப்ரெசென்ட் லைப் தானே உன்னோட பகிர்ந்துகொள்ள போறேன். என்னோட பாஸ்ட் பத்தி எதுக்கு சொல்லணும்னு நினைச்சேன். இப்போவும் தப்புன்னு நா நினைக்கல. எல்லாருக்கும் ஏதாவது பாஸ்ட்  இருந்திருக்கும். அதையெல்லாம் வருங்காலத்துல மறந்துட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்குறதுல தப்பில்லன்னு நா பீல் பண்றேன்.  இதை உனக்கும் சேர்த்து தான் சொல்றேன். உன்னோட காதலை மறந்திட்டு என்னோட வாழ்க்கையை ஸ்டார்ட் செஞ்சிருந்தா இப்போ இந்த நிலைமை வந்திருக்காது. இப்போ நம்ம ரெண்டு பேருக்குமே  எவ்ளோ பெரிய இழப்பு?” என்றுவிட்டு அமைதியாகி விட்டாள் .

உண்மை,அவள் சொல்வதில் இருப்பது அத்தனையும் நிஜம்தானே! அவளிடம் குற்றம் கன்டுபிடிக்கும் நான் மட்டும் என்ன ,நேர்மையாளனா ?என்று தன்னையே கேட்டுக்கொண்டவனுக்கு  இப்போது என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் தேங்கி நின்றான்.

” இப்போ என்ன வேணும்னு நேரடியா சொல்லு ஜான்வி. என்கிட்டேந்து என்ன எதிர்பாக்குற?”  அவன் கேள்வியை உள்வாங்கியவள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் ..” டிவோர்ஸ்”

இதற்குமேல் இந்த வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்பது சாகேத்துக்கும் தெரியும்.ஏற்கனவே,தனது நடவெடிக்கைகளில் சலித்து,இந்த பெண்ணுக்கு என்ன வழி சொல்வது என்று யோசித்தது தான். இருபுறமும் பெரிய தவறுகளை அனாயசமாக செய்து விட்டாயிற்று. இனி, இந்த உறவில் தொடர்ந்து என்ன ஆகப்போகிறது. ஏற்கனவே,இவள் தன்னுடைய எல்லாவற்றையும் இங்கிருந்து எடுத்து சென்று விட்டாள் . வெறும் காகிதம் இருவரின் மண முறிவை உலகுக்கு சொல்ல அவசியமாகி விட்டது’என்று பெருமூச்சை விட்டவன்,

” ம்ஹும்..நாம மியூச்சுவல் அண்டர் ஸ்டாண்டிங் ல பிரிஞ்சுடலாம். நாளைக்கே இதை பத்தி ப்ரோஸெட் பண்னுவோம். அண்ட் இதை பத்தியெல்லாம் ரெண்டு வீட்டுக்கும் எதுவும் சொல்லவேண்டாம். எல்லாம் முடியட்டும்.அப்புறமா பாத்துக்கலாம்”என்றுவிட்டான்.

வந்த விஷயம் இவ்வளவு எளிதாக முடியம் என்று  ஜான்வி விநீதன் இருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.  ஜான்வி அமர்ந்திருந்தவள் எழுந்து சாகேத்திடம் வந்தவள் அவனை சட்டென அணைத்துக்கொண்டாள். அவளது கண்ணீர் அவனது ஷர்டை நனைத்தது.

“நாம ரெண்டு பேரும் கல்யாண பந்தத்துக்குள்ள நுழையாம வெறும் நண்பர்களா இருந்திருக்கலாம் சாகேத்.இப்போ தேவையில்லாத மன சங்கடம் வந்திருக்காது. “என்று மனதில் இருப்பதை சொல்ல,

“அதனால என்ன ஜான்வி, டிவோர்ஸ் ஆனாலும் நாம  நல்ல நண்பர்களா தொடரலாம். வினிதனும் நம்மோட இணையட்டும். யு ஆர் ரைட்.என்னோட மனசுல இருக்குற பொண்ணுக்கு துரோகம் செய்ய முடியாம ,அந்த துரோகத்தை உனக்கு செஞ்சுட்டேன். மன்னிச்சுக்கோ ப்ளீஸ்” என்று சாகேத்தும் முடித்துவிட்டான்.

சாகேத்-ஜான்வி இருவருக்குமே விருப்பம் இல்லாத இந்த உறவிலிருந்து விடுதலை  என்பது  ஏதோ இமய மலை பாரத்தை இறக்கி வைப்பதைப்போல் உணர்ந்தார்கள். மிகவும் உணர்ச்சிவச பட்டிருந்தாள்  ஜான்வி. அவளை தன் கைவளைவில் கூட்டிக்கொண்டு கிளம்பினான் விநீதன். அவர்களை லிப்ட் வரை அனுப்பிவிட்டு வந்த சாகேத் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

பெண்ணுக்கு புருஷனாக இருக்கும் தகுதி எனக்கில்லை.அதை தானே இப்போது இவள் சொல்லிவிட்டு செல்கிறாள் என்று அவன் மனம் உடைந்தது.

அவர்கள் இருவர் முன்னும் தன்னை அடக்கிக்கொள்ள பெரும்பாடு பட்டவனால் அவர்கள் கிளம்பியவுடன் தாங்க முடியவில்லை. வீட்டில் அவன் பெற்றோர் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று வேறு மனதில் தயக்கம் வந்துவிட, தனது அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான். உறக்கம் வராமல் அவனை வைத்து உணர்வுகளும், சிந்தனைகளும் கிரிக்கெட் ஆட, தனது  மொபைல் போனில் இளையராஜா ஹிட்ஸ் வைத்து கேட்டுக்கொண்டே  தூங்கிப்போனான்.

அடுத்தநாள் மாலையில் விநீதன் அழைத்திருந்தான்.அவனது வக்கீலின் மனைவி குடும்பநல கோர்ட்டில் வழக்கறிஞர் என்றும்,அவர் மூலமே பேப்பர்களை  ப்ரோஸீட்  பண்ணலாம் என்று அவன் சொன்னதை கேட்ட சாகேத்துக்கு நெஞ்சு வரை கசந்தது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத போராட்டம் அவன் மனதில்.

கணவனான அவனிடமிருந்து விவாகரத்து வாங்கிக்கொடுக்க அடுத்து கணவனாக போகும் வினீதனின் அவசரம் பார்த்து சாகேத்துக்கு மனம் விட்டுப்போனது.

ஆனால் மனதின் கொதிப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க பாடுபட்டவன்  வெறும் ‘ம்ம் ‘ கொட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.  அதற்குமேல் எதுவும் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை என்று மனதில் நினைத்துக்கொண்டான் விநீதன். அவனுக்கு சாகேத்தின் நிலையை நினைத்து பாவமாக இருந்தது.

சாகேத் தனது தலையில் கைகளால் தாங்கிக்கொண்டு அமர்ந்து விட்டான். எதற்க்காக விவாகரத்து எண்டு வெளியில் உண்மைக்கு காரணத்தை சொல்லிவிட முடியுமா? ஆணாக இது எனக்கு எவ்வளவு பெரிய அடி என்று மனம் தவித்தது. கொஞ்சநேரம் கண்களை மூடி தன்னை சமாதானம் செய்துகொண்டவன் ,என்ன செய்ய வேண்டும் என்று விவரங்களை அனுப்ப சொல்லி ஜான்விக்கு வாட்சப்பில் தகவல் அனுப்பிவிட்டு மொபைலை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்.

அவனது மெசேஜ் பார்த்தவளுக்கு மனதில் பாரம் கூடிப் போனது. அவன் கேட்ட விவரங்களை அனுப்பியவள்  நேரே வினீதனை நாடிச் சென்றாள் .வினீதன் சொன்னபடிக்கு ஜான்வியுடன் சென்று  சாகேத் வக்கீலை சந்தித்தான். மியூச்சுவல்  என்பதால் சீக்கிரம் விவாகரத்து கிடைத்துவிடும் என்றார் அவர். விவாகரத்துக்கு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்துவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.

சாகேத் செல்லும் பாதைக்கு நேரெதிர் திசையில் ஜான்வி பிரயாணம் செய்ய வேண்டும். அவள் தனது காரில் ஏறிக் கிளம்பும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனும் ஒரு பெருமூச்சுடன் காரை உயிர்பித்தான்.

சாகேத்தின் திருமண உறவு ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. மனதின் பாரம் தாங்க முடியாமல் தனது நண்பன் ‘நரேந்திரனுக்கு ‘அழைத்துவிட்டான் ” டேய் மச்சான், உன்னால ரெண்டுநாள் லீவு எடுத்துட்டு இங்கே வர முடியுமாடா”என்று கேட்ட சாகேதின் குரல் எதுவோ சரியாக இல்லை என்பதை நரேனுக்கு உணர்த்த அடுத்த நாள் காலையில்  பெங்களூரு செல்வதாக மட்டும் வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். சாருவிடம் மட்டும் ‘என்னனு தெர்ல.சாகேத் வார சொல்லி நேத்து போன் பண்ணான் .நா வர ரெண்டு நாள் முன்னே பின்னே ஆச்சுதுன்னா சமாளிச்சுக்கோ” என்றவனை அர்த்த பார்வை பார்த்துக்கொண்டே சரி என்றாள் சாரு .

அவள் மனத்திலும் திடீரென என்ன ஆயிட்டு என்ற கேள்வியுடன்,இப்படியெல்லாம் திடீரென அழைக்கும் நபர் இல்லையே சாகேத் அண்ணா. என்ன ஆச்சு அவருக்கு என்று பயமும் சேர்ந்தது .

இவ்வளவு சீக்கிரம் நரேன் வரக்கூடும் என்று சாகேத் எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஹால் சோபாவில் படுத்தவாறே யோசனையில் மூழ்கி இருந்தான் இந்த திருமணம் முறிகிறது. அது தனக்கு சந்தோஷத்தை தரவில்லை,ஏன் என்ற சுய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிவிட்ட்டான் .

அவன் மனத்தில் இருக்கும் எண்ணங்களை கேட்பவர்கள் நிச்சயம் எரிச்சல் அடையக்கூடும். அந்த அளவுக்கு மனக்குழப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!